23 Mar 2014

The Graveyard Book, Neil Gaiman

பதிவர் : பாலாஜி

The Graveyard Book
Neil Gaiman
A Novel
நாவல் நன்றி :http://iloveread.in/
இணையத்தில் வாங்க : The Graveyard Book

சிறு வயதில் அம்புலிமாமாவில் வரும் கதைகளை மிகவும் விரும்பிப் படித்ததுண்டு, அதில் வரும் பேய்க் கதைகள் சிறு வயதில் மிகவும் ஆர்வத்தை தூண்டியதுண்டு. அந்த மாதிரி கதைகள் அதற்கு அப்புறம் படிக்க முடியாமல் போய், மிகத் தீவிரமான கதைகள் படிக்க நேர்ந்தது. சில வருடங்கள் முன்பு ஸ்டார்டஸ்ட் என்ற ஃபான்டஸி படம் பார்க்க நேர்ந்தது. அந்த படம் பற்றி மேலும் அறியும் ஆவல் ஏற்பட்டது. அதே பெயர் கொண்ட ஒரு நாவலில் இருந்து படமாக்கப்பட்ட கதை அது. அதை எழுதியவர் நெய்ல் கைமான்.

நேரம் கிடைக்கும்போது இவரைப் பற்றி படிக்க வேண்டும் என்று என் மனதில் நினைத்து வைத்துக் கொண்டேன். சில மாதங்கள் முன்னால் இந்த நாவலை படிக்கக் கிடைத்தது. கைக்கு கிடைக்கும்வரை இந்த நாவலைப் பற்றி சிறிதுகூட அறிந்ததில்லை. முதல் சில பக்கங்களைப் புரட்டியபோது  இது குழந்தைகளுக்கான நாவல் என்று அறிய வந்தபோது சிறிது ஏமாற்றம் இருந்தது என்னவோ உண்மை. ஆனால் முதல் பக்கத்தில் துவங்கி இந்த நாவல் என்னை உள்ளிழுத்துக் கொண்டது.
 

20 Mar 2014

ஏழு தலைமுறைகள் - அலெக்ஸ் ஹேலி

பதிவர் : பிரசன்னா  (@prasannag6)

கருப்பென்றால் தாழ்ச்சி, அசிங்கம், கருப்பர்களுக்கு எதுவும் தெரியாது, காட்டுமிராண்டிகள் போன்ற கருதுகோள்கள் நம்மிடையே வெகு பிரபலம். இத்தகைய கருத்துக்கள் எப்படி உருவாகின, யார் உருவாக்கியது, ஏன் அவை வெள்ளையர்களுக்கு மிக முக்கியமாக இருந்தன? கருப்பர்களை வெறும் உடைமையாக, செருப்பு பழசாகிடுச்சு, தூக்கி போட்டுட்டு வேற வாங்கணும் என்பது மாதிரி மட்டும் எப்படி அவர்களால் கருத முடிந்தது?  அவர்களின் உழைப்பை முழுக்க சுரண்டி தன்னை வளர்த்துக்கொண்ட வெள்ளையர்கள் எத்தனை பேர்? அவர்களின் உழைப்பில் அமெரிக்காவே வளர்ந்தது!

இப்படி முற்றிலும் அநியாயமான, மனசாட்சிக்கு விரோதமான ஒன்றை நடத்த ஒரு பெரும் தர்க்கம் வெள்ளையர்களுக்கு தேவைப்பட்டது. எப்படி மத/சாதிக்கலவரங்களில் கொலை, கற்பழிப்பு போன்றவற்றை 'ஆமா, அவனுங்கள இப்படி செஞ்சாத்தான் அடங்குவாங்க' என்று சொல்லி நம்மையே திருப்திபடுத்திக்கொள்கிறோமோ, அது மாதிரி.. அந்த நியாயம்தான் முதல் பத்தியில் சொல்லப்பட்ட கருதுகோள்கள். 'அவர்களுக்கு ஒன்னும் தெரியாது, மிருகங்கள். நாம்தான் வாழ்க்கை தந்தாக வேண்டும்' என்பது மாதிரி. ஆனால் அவர்களின் வாழ்வு எத்தகையது? எப்படிப்பட்ட மண்ணில் இருந்து அவர்களை பிடுங்கி வேறு இடத்தில் நட்டார்கள்?

12 Mar 2014

Jed Rubenfeld – Interpretation of a Murder



ஜெட் ரூபன்ஃபெல்ட் எழுதிய இந்த நாவலின் அடிப்படைக் கருத்து சுவையானது. உளப்பகுப்பாய்வுத்துறையில் புதிய திறப்புகளையளித்து அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் பிரபலமடைந்து வரும் சிக்மண்ட் ப்ராய்ட் தன் சகாக்கள் கார்ல் யூங் மற்றும் பலருடன் ந்யூ யார்க் வருகிறார். அவர் அமெரிக்க மண்ணில் கால் வைக்கும் நாளில், பணக்கார அபார்ட்மென்ட் ஒன்றின் பெண்ட்ஹவுஸில் ஒரு இளம் நடிகை கட்டி வைத்து அடித்துக் கொல்லப்படுகிறார். இந்தக் கொலை குறித்து விசாரிக்கும்படி ந்யூ யார்க் நகர மேயர் கொரோனரிடம் கேட்டுக் கொள்கிறார். அடுத்த நாள், நோரா ஆக்டன் என்ற இன்னொரு பெண்ணும் அதே போல் கட்டி வைத்து கடுமையாக தாக்கப்படுகிறாள். கொலைகாரன் அவள் கழுத்தை நெரித்துக் கொலை செய்ய முயற்சிக்கும்போது அவள் பெருங்குரலெடுத்து அலறுகிறாள். இதனால் பதட்டமடைந்து அவளை அப்படியே விட்டுவிட்டுத் தப்பியோடி விடுகிறான் கொலைகாரன்.