26 Sept 2014

Short Cuts - Raymond Carver

                                                           சிறப்புப் பதிவர்: ஷாந்தி

Image courtesy http://images.word-power.co.uk/

Short Cuts ரேமண்ட் கார்வரின் தேர்ந்தெடுக்கப்பட்ட 9 சிறுகதைகளின் தொகுப்பு. அமெரிக்க இலக்கியத்தில் கார்வரின் சிறுகதைகள் சமகால சிறுகதைகளுள் சிறந்த படைப்புகளாய் திகழ்கின்றன. அனேகமாய் இவர் கதைகளை படித்தவுடன் கார்வருக்கு நாம் வாசகர்களாகி விடுகிறோம். எத்தகைய தருணங்களையும் இவர் விவரிப்பு சுவாரஸ்யமாய் காட்டிவிடுகிறது. இவரின் விவரிப்புகளில் கதையின் கனம் அத்தனை கச்சிதமாய் வெளிப்பட்டு படித்து முடித்த பின்னும் அந்த சம்பவங்கள், கதாபாத்திரங்கள் நம்முள் அதிர்வலைகளை  உண்டாக்குகின்றன.

10 Sept 2014

கோவேறு கழுதைகள் - இமையத்தின் சுமையேற்றும் எழுத்து

சிறப்பு பதிவர் -த.கண்ணன்

அய்ன் ராண்ட எழுதிய ‘Atlas Shrugged’, பல இளைஞர்களின் ஆதர்ச நூலாக இருந்தது; இருப்பது. முதலாளிகளும், அறிவு ஜீவிகளுமே உலகத்தையும் அதன் சுமையையும் சுமப்பது போன்ற ஒரு சித்திரத்தை அளித்த நாவல் அது. அதற்கு முற்றிலும் எதிரான ஒரு சித்திரத்தை வரைகிறது இமையத்தின் ‘கோவேறு கழுதைகள்’. சமூகத்தின் அடிநிலை மக்களின் முதுகில் ஒய்யாரமாய் அமர்ந்தே இந்தச் சமூகம் தன் சுகமான பயணத்தை மேற்கொள்கிறது. பலசமயங்களில் சுமையென்று கருதாமலே அவர்கள் இயல்பாகச் சுமக்கவும் செய்கிறார்கள்..

கோவேறு கழுதைகள்
இமயத்தின் முதல் நாவல் ‘கோவேறு கழுதைகள்’  (1994) இந்த நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்பு Beasts of Bruden  என்ற தலைப்பில் வெளியாயிருக்கிறது.

கோவேறு கழுதைகள் தலித் இலக்கியம் என்ற வகைமைகளுக்குள்ளெல்லாம் அடைபடாமல், என் பார்வையில், ஒரு மகத்தான இலக்கிய நூலாக மிளிர்கிறது

1 Sept 2014

The Sense of an Ending- Julian Barnes


நாற்பதுகளின் ரெண்டாம் பகுதியில் இருக்கும் ஒரு பெண்மணி பதினாறு வயது தன்னையே சந்திப்பதும் உரையாடுவதுமாக அலி ஸ்மித்தின் ஒரு சிறுகதை உண்டு. அலி ஸ்மித்தின் கதைகளில் என்ன வேண்டுமானாலும் நிகழும். 30 வருடங்களில் நம் ஆளுமையில் ஏற்படும் மாற்றம், நாம் இப்போது என்னவாக ஆகியிருக்கிறோமோ அதனை நாம் சிறுவயதில் எவ்வளவு வெறுத்திருப்போம் என்பதை, நினைவிலிருந்து தப்பிச் சென்றிருக்க கூடிய விஷயங்கள், சின்ன விசயங்களில் கூட மாறியிருப்பதை ஸ்மித்தின் கதை பேசுகிறது. ஜூலியன் பார்ன்ஸின் The Sense of an Ending இதை இன்னும் ஒரு புதினத்துக்கே உரிய விரிவான பார்வையிலிருந்து அணுகுகிறது.