கெய்கோ ஹிகாஷினோவின் இந்தப் புதிய நாவலை சப்னா புக் ஹவுஸில் பார்த்ததுமே வாங்கிவிட்டேன். இவர் இதற்கு முன் எழுதியுள்ள முன்னிரண்டு நாவல்களைப் போலவே இதுவும் அருமையாக இருக்கும் என்பதில் எனக்கு அவ்வளவு நம்பிக்கை. ஆனால் துரதிருஷ்டவசமாக, பணிச்சுமை மற்றும் பிறச்சுமைகள் காரணமாக இந்தப் புத்தகத்தைக் கையில் எடுக்க ஒரு மாதத்துக்கும் மேல் ஆகிவிட்டது. அண்மையில் நீண்ட ஒரு ரயில் பயணம் செய்ய நேர்ந்தது, இந்த நல்ல வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு, இதை ஓரே மூச்சில் படித்து முடித்து விட்டேன்.