12 Apr 2015

ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்.- ஜெயகாந்தன்


"உங்களுக்கு நான் ஏதோ பழமைவாதம் பேசுவது போலத் தோன்றும்.. நீங்கள் சொல்லுங்கள், அதோ அந்த விளக்கு அழகாயில்லை?.. வெளிச்சத்துக்கு அது போதாது? சரி. உங்களுக்கு ஒரு வேளை அது அழகாக இல்லாமலும் இருக்கலாம். நீங்கள் செய்கிற வேலைக்கு அந்த வெளிச்சம் போதாமலும் இருக்கலாம். ஆனால் எனக்கு அது போதும். எனக்கு அதுதான் வேண்டும். என் வீட்டில் எனக்கு இந்த வெளிச்சமும் இந்த அமைதியும் நிலவட்டும்"- - - ஹென்றி, ஒரு மனிதன் ஒரு வீடு  ஒரு உலகம்.

ஜெயகாந்தனின் "ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்" நாவலைப் படிக்கத் தொடங்குமுன் முற்போக்கு எண்ணங்களில் வலுவாக ஊன்றிய படைப்பு எனும் எண்ணம் மட்டுமே எனக்கு இருந்தது. குறிப்பாக, சமூக முன்னேற்றத்துக்கு முட்டுக்கட்டைகளாக அமையும் எண்ணங்களை, தனித்தன்மை வாய்ந்த கதாபாத்திரங்களைக் கொண்டு தகர்க்கும் கதைப்போக்கு கொண்டிருக்கும் என நினைத்தேன்.