16 Jun 2016

சஞ்சாரம் - எஸ். ராமகிருஷ்ணன்



சமீபத்தில் எஸ்.ரா.வின் "சஞ்சாரம்" நாவல் வாசித்தேன். நாவலுக்குள் செல்லும் முன் எனக்கும் இசைக்குமான பரிச்சயத்தைச் சொல்லிவிடுகிறேன்.

நான் வளர்ந்த திருவாரூருக்கும் இசைக்கும் நெருங்கியத் தொடர்பிருக்கிறது.  கர்னாடக சங்கீதத்தின் முன்னோடிகளாகக் கருதப்படும் தியாகராஜ சுவாமிகள், முத்துசாமி தீட்சதர், சியாமா சாஸ்திரி எனும் மும்மூர்த்திகள் பிறந்த ஊர் திருவாரூர்.

தஞ்சாவூரை அடுத்த திருவையாற்றில் வருடாவருடம் நடைபெறும் புகழ்பெற்ற தியாகராஜ ஆராதனை விழா இசை நிகழ்ச்சியைப் போல திருவாரூரில் மும்மூர்த்திகளின் நினைவாக வருடாவருடம் மும்மூர்த்திகள் ஆராதனை விழா நடைபெறும்.  சுமார் ஓரு வாரம் நிகழும் அந்த விழாவுக்குச் சிறுவயதில் தினமும் என்னுடைய பாட்டனாருடன் சென்றிருக்கிறேன்.

அதுபோல் திருவாரூரில் உள்ள தியாகராஜ சுவாமி திருக்கோயிலில் வருடாவருடம்  தெப்பத்திருவிழா நடக்கும். அப்போது பின்னிரவு வரை கலைஞர்களின்  இசைநிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெறும். இப்படிதான் ஜேசுதாஸ், பாம்பே சகோதரிகள், நித்யஶ்ரீ, கன்னியாக்குமரி, குன்னக்குடி, விக்கி வினாயக்ராம்  போன்ற பல புகழ் பெற்ற இசைக்கலைஞர்களின் இசையை நேரடியாக கேட்டும் பார்த்தும் அனுபவித்திருக்கிறேன்.

தஞ்சை மண்ணில் வளர்ந்த எனக்கு இப்படி பல இசை அனுபவங்கள் இருந்தாலும் நாதஸ்வரம்  அன்னியமில்லாத, மனத்துக்கு நெருக்கமான ஒன்று.

சரி, சஞ்சாரம் நாவலின் கதைக்கு வருவோம். நாவலின் கதைக்களம் கரிசல் மண். கதை அங்குள்ள இரு நாதஸ்வரக் கலைஞர்களைப் பற்றியது.


9 Jun 2016

ரோலக்ஸ் வாட்ச் - சரவணன் சந்திரன்


"ஸ்கூல்  அட்மிஷன் ஒன்னு,  EBல யாராவது தெரியுமா? TNPLல? திருவான்மியூர் RTOல? SBIல? ஆள் தெரிஞ்சா ஒரு சின்ன வேலையாவனும். கொஞ்சம் செலவு பண்லாம், தெரிஞ்சா சொல்லுங்க"  - இப்படி சதா யாருக்காவது வலை வீசி,  கெஞ்சி,  குழைந்து, சரி கட்டி  எதாவது ஒரு புரோக்கரை தேடி, எதாவது ஒரு காரியத்தை சாதித்துக்  கொண்டே இருக்கும் பிரஜைகள் நாம். இவ்வகை புரோக்கர்களிலிருந்து சற்றே உயர் ரக, பொருளாதார மேல் தட்டு வர்க்கத்தின், அரசியல் வியாபார கணக்குகளின்,  மறைமுக  வலைப் பின்னலின் ஒரு கண்ணி, இளம் அரசியல் புரோக்கர்  ஒருவனின்  கதா காலாட்சேபம் " ரோலக்ஸ் வாட்ச்.