5 Sept 2016

The Gathering - by Anne Enright


 முப்பதொன்பது வயதான வெரோனிகா ஹெகார்ட்டி தன்னைவிட ஒரு வயதே மூத்தவனான சகோதரன் லியம் ஹெகார்ட்டியின் தற்கொலைச் செய்தியைத் தெரிவிக்க தன் பிறந்த வீட்டிற்குச் செல்கிறார். பொறுமையே வடிவான அப்பாவியாகக் கருதப்பட்ட தன் தாயிடம் அவர்தான் இந்த துயரச்செய்தியைப் போட்டுடைக்க வேண்டும். ஆனால் அவரது தாய் மீது அவருக்கு ஆத்திரம்தான் வருகிறது, சற்றும் இரக்கம் வர மறுக்கிறது. பன்னிரண்டு பிள்ளைகள், இடையில் நான்கு குறைப் பிரசவங்கள்: ஒரு ஆதர்ச ஐரிஷ் கத்தோலிக்க மனைவி, சமையலறையிலும் பிரசவக் கூடத்திலுமே ஆயுளைக்கழித்தவர், எதிர்பேச்சு பேசாதவர், பிள்ளைகளின் பரிதாபத்தை சம்பாதித்தவர், நினைவு கலங்கியவர் போல வெறித்திருப்பவர், பார்வைக்கு இனியவர், மெலியவர். இருந்தும் ஏன் ஆத்திரம் வருகிறது? எதையோ எதிர்க்க மறுத்தவர் என்பதாலா, எதையுமே வெளிப்படுத்தாதவர் என்பதாலா? வெரோனிகாவின் பெயரைக் கூட நினைவில் வைத்திருக்காமல் மழுப்பியழைப்பதாலா? “மறதியே உருவானவள்” என்பதாலா?