26 Jan 2019

அதனினும் இனிது அறிவினர் சேர்தல் – இசை


2008 முதல் 2013 வரை கவிஞர் இசை எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு (பெரும்பாலும் கவிதை நூல்கள் குறித்து). நிறைய இருக்கும் என்று பார்த்தால் இந்த ஆறு ஆண்டுகளில் எண்ணி பதினைந்து கட்டுரைகள்தான் எழுதியிருக்கிறார். அவையும் நெடுங்கட்டுரைகள் அல்ல, எல்லாம் சேர்ந்து நூறு பக்கங்கள்கூட வரவில்லை.

மதுரையிலிருந்து கோவைக்கு... வழி: கரூர், சேலம்,’ என்ற தலைப்பிட்ட முன்னுரையில்,  கோணங்கி துவங்கி சுகுமாரன் வரை, முப்பத்து ஏழு பேரை தன் படைப்பூக்கத்துக்கு உடன் அழைத்துக் கொள்கிறார். துவக்கத்திலும் முடிவிலும் வரும் இளங்கோவையும் இசையின் தொழுகைக்குரிய அவ்வையையும் சேர்த்தால் முப்பத்து ஒன்பது. 39+1, வோல்வோ பஸ் போலிருக்கிறது!



22 Jan 2019

Yasunari Kawabata: The Sound of the Mountain

 
யசுனாரி கவாபட்டாவின் நாவல், ‘தி சவுண்ட் ஆப் தி மௌண்டன்’, குடும்பம், முதுமை மற்றும் மரணம் பற்றிய சிக்கலான கதையைச் சொல்கிறது. துல்லியமான, மினிமலிச பாணி நடை கொண்ட கவாபட்டாவின் எழுத்து, ஓகாடா ஷிங்கோவின் குடும்பத்தில் நிலவும் சிடுக்குகள் மிகுந்த  உறவுகளின் ஆழங்களுக்குள் அழைத்துச் செல்கிறது. ஓகாடா ஷிங்கோவும் அவரது மனைவி யாசுகோவும் தங்கள் மகன் ஷியுச்சி மற்றும் மருமகள் கிகுகோவுடன் காமகுராவில் வசிக்கிறார்கள். முதல் பார்வையில் வசதியாகவும், நெருக்கமாகவும் இருப்பது போல் தோன்றுகிற இந்தக் குடும்பத்திலும் அவர்களுக்கே உரிய ரகசியங்கள் இருக்கின்றன. போரில் மரணமடைந்த ராணுவ வீரன் ஒருவனின் மனைவியுடன் அவரது மகன் ஷியுச்சோ கள்ள உறவு வைத்திருக்கிறான். அவரது மகள் ஃபுசாகோவின் இல்லற வாழ்வும் முறியும் நிலைக்கு வந்து விட்டது. தன்னைச் சுற்றி நடப்பதை ஷிங்கோ எப்படி எதிர்கொள்கிறார் என்பதையும் எதையும் மாற்ற முடியாத அவரது இயலாமையையும் இந்த நாவல் விவரிக்கிறது.