18 Aug 2012

இரண்டாவது காதல் கதை -சுஜாதா



         புத்தகம் பெயர்             :        இரண்டாவது காதல் கதை
         ஆசிரியர்                        :        சுஜாதா
         வெளிவந்த இதழ்       :       ஆனந்த விகடன்.
      

                   "......அவன் போன திசையைச் சற்று நேரம் பார்த்தாள். எல்லாவற்றையும்  உதறிபோட்டுவிட்டு,  'அந்தாளை  கூப்பிடுய்யா' என்று விளித்து , அவனுடன்  லிஃப்ட்டில் முத்தமிட்டுக் கொண்டே இறங்கி அவன் ஸ்கூட்டர் பின்னால் ஏறிக்கொண்டு  கூந்தல் அலைய, ஆடைகள் கலைய... எங்கோ இலக்கில்லாமல் செல்லும் சினிமாத்தனமான விருப்பம் அவள் உள்ளத்தில் ஒரே ஒரு தடவை மின்னலடித்தது உடனே மறைந்துவிட்டது..." 
                                                                                                                     (நாவலில் ஒரு பகுதி)

       


      சுஜாதாவின் "இரண்டாவது காதல் கதை,   ஏழு-எட்டு வருஷம் முன்னாடி காலேஜ்  லீவுக்கு விழுப்புரத்தில் இருக்கிற சித்தி வீட்டுக்கு போயிருந்தபோது படிச்சது நம்பள மாதிரியே சித்தியும் சுஜாதாவோட விசிறி, 2000-01 ஆண்டுகளில் ஆனந்த  விகடன்  வார இதழ்ல தொடர்கதையா வெளிவந்து இருந்த  "இரண்டாவது காதல் கதை"யை, ஒவ்வொரு  இதழிலிருந்தும் தனியா பிரிச்சு ஒரு புத்தகமா பைண்டு பண்ணி வச்சு இருந்ததைப்  படிக்கக் குடுத்தாங்க. அப்படி படிச்சது தான் இந்தப் புத்தகம். இப்போ  படிக்கும்போதும் அதே அளவுக்கு ஃபிரெஷ்ஷா இருக்கு.

      நிவேதிதா (நிதி) அப்படிங்கற மேல்தட்டு / பணக்காரப் பெண்ணின் ஆறு மாதகால  வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்கள், அவற்றைத் தொடர்ந்து அவள் எடுக்கும் முடிவுகள் அவள் குடும்ப வாழ்க்கையை எப்படி புரட்டிப் போடுகின்றன என்பதே கதை.  நிதியின் தந்தையான ஜெயந்த் தன்னுடைய கொள்கை/கருத்துகளைத் தனது மனைவி மற்றும்  மக்கள் மீது திணிப்பவர். இந்த நாவல் படிக்கும்போது கிட்டத்தட்ட ஒரு சினிமா  பார்க்கிற உணர்வு வந்திடும். எப்படினா , நல்லா போயிட்டு இருக்கிற நிதியோட  வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்களும் / ஏமாற்றங்களும் , சட்டென ஏற்படும்   தோல்வியும் அப்போது நிதி எடுக்கும் முடிவுகளும், பின்பு அவள் நல்ல நிலையை  அடைவதும் - சினிமா கதைதான்.
         


நாவலில் பிடித்த ரெண்டு மூணு இடங்கள்னா :  நிதி   Alzheimer பாதிக்கப்பட்டிருக்கும் பாட்டியுடன் பேசும் இடம். நிதியின் கணவன், "இது  என்னோட   குழந்தையான்னு சந்தேகமா இருக்குன்னு" கேட்க, பேசிக்கொண்டு இருக்கும்போதே சட்டென நிதி  கார் சிக்னலில்  நிற்கும்போது தலைமறைவாகும் இடம். நாவலின் இறுதியில் நிதியோட பழைய காதலனைச் சந்திக்கும் இடம், தனது தந்தையை டைரக்டர் பதவியிலிருந்து நீக்கிவிட்டு தான் அந்த இடத்தில் அமர்வது போன்ற இடங்கள்.

  சுஜாதாவோட இயல்பான  மொழி நடையும், நகைச்சுவை உணர்வும், மேல்தட்டு வர்க்கத்தின் பேச்சும் மொழியும், அவர்கள் வாழ்வின் அபத்தங்களும் சரளமாக வெளிப்படுகின்றன. லாஜிக் பார்க்காமல் படித்தால் நன்றாக இருக்கும். சுஜாதாவின்   இறுதி காலங்களில் வெளிவந்த சிறப்பான நாவல்



          For Hard copy click here,
          For Soft  copy click here

 

1 comment:

  1. பகிர்வுக்கு நன்றி ஐயா... (இணைப்பு கொடுத்ததற்கும்)

    ReplyDelete