17 Jan 2013

ரைட் ஆர் நைக் - மூன்று புத்தகங்கள்

சிறப்புப் பதிவர்: வானதி நடனம்

கடந்த வாரங்களில் தான் படித்த மூன்று புத்தகங்கள் பற்றி சிறுகுறிப்பு வரைந்துள்ளார் நம் ட்விட்டர் நண்பர் வானதி.


1. ரஜினியின் பஞ்ச் தந்திரம்
தலைவனுக்காக (அதாவது என் தலைவனுக்காக) தலைவனின் படம் போட்ட புத்தகம். ரஜினியின் குறிப்பிட்ட சில பஞ்ச் வசனங்கள் அலுவலகம் மற்றும் வீடு (personal & Management) இரண்டு இடங்களிலும் எப்படிப் பொருந்திப் போகின்றன என்பதைப் பேசுகிறது இப்புத்தகம். மக்களைக் கவர்வதுபோல் தலைப்பு வைத்தால் மட்டும் போதாது.. இன்னும் நிறைய உழைத்திருக்கலாம் எழுதும் முன். டைம்லைன் ஃபிக்ஸ் பண்ணியாச்சே என்று வேறு வழியில்லாமல் போகிறபோக்கில் எழுத்தப்பட்டிருக்குமோ என்ற உணர்வு முதல் சில பக்கங்களிலேயே வந்துவிடுகிறது. பக்கங்களில் பாதி ரஜினியின் படங்கள்; கலர் ப்ரிண்டிங் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் ;) . அனைவருக்கும் தெரிந்த அவரின் பஞ்ச் வசனங்கள் தான் படிப்பவரைக் கவர்கின்றன, அட்டைப்படத்தில் சொல்லியிருப்பதைப் போல் “மேனேஜ்மெண்ட் யுக்திகள்” அல்ல.


லேண்ட்மார்க்கில் இப்புத்தகம் “மோஸ்ட் செல்லிங்” பிரிவில் இருந்ததற்கு(இருப்பதற்கு?) ஒரே காரணம் வழக்கம் போல் ”ரஜினி” என்ற பெயரில் இருக்கும் வசீகரமே. இதே புத்தகம் ஆங்கிலத்திலும் வந்திருக்கிறது. 

2. Nike - The Vision Behind The Victory - Tracy Carbasho

Nike நிறுவனத்தின் வெற்றிக்கதை. 1960களில் Blue Ribbon Sports என்ற பெயரில் கம்பெனி துவங்கப்பட்டது முதல் நைக்கின் தற்போதைய தயாரிப்புகள், விளம்பரத் தூதுவர்கள், நைக் நிறுவனம் வாங்கிய அவார்ட்ஸ், இடம் பெற்ற லிஸ்ட்ஸ் என சின்னச் சின்ன தகவல்களால் நிறைந்திருக்கிறது இந்த 150 பக்க புத்தகம்.


காரில் இஞ்சின் மவுண்ட் செய்யும் போது இஞ்சின் அடிபடாமல் இருக்க உதவும் மெட்டீரியலை ஸ்போர்ட்ஸ் ஷீ ஒன்றில் பயன்படுத்திய நைக் மக்களின் நுட்பம், தாங்கள் தயாரிக்கும் ஷீ முதல் அவற்றை பேக் செய்யும் அட்டைப்பெட்டிகள் வரை அனைத்து பொருட்களிலும் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு வராத வகையில் சுழற்சி முறையில் மூலப்பொருட்களைப் பயன்படுத்துவது, டைகர் வுட்ஸ், செரீனா வில்லியம்ஸ் போன்ற தங்களின் விளம்பரத் தூதுவர்களுக்கு சொந்த வாழ்க்கையில் பிரச்னை வந்த போது அதை அரசியலாக்காமல், அவர்களின் காண்ட்ராக்ட்டை கேன்சல் செய்யாமல் அவர்களுக்கு பக்கபலமாக நின்றது இவற்றைப் பற்றியெல்லாம் விரிவாக எழுதியிருக்கிறார் ஆசிரியர். 

நைக் என்றவுடன் நினைவுக்கு வருவது “Just Do it", மற்றும் மைக்கேல் ஜோர்டன். இதில் மைக்கேல் ஜோர்டன் மற்றும் அவரின் பெயரில் வந்த ஏர் ஜோர்டன் ஷூக்களுக்காக தனி சாப்டரே ஒதுக்கப்பட்டுள்ளது. 

பாசிட்டிவ் விஷயங்களை விரிவாக அலசிய ஆசிரியர், நைக்கின் நெகட்டிவ் பக்கங்களாக ஆரம்பத்தில் இருந்த “குழந்தைத் தொழிலாளர்கள் பிரச்னை” பற்றி சில வரிகள் மட்டுமே எழுதியிருக்கிறார். விளம்பரத் தூதுவர்கள் முதல், நைக் வெளியிட்ட சில அறிக்கைகள் வரை அவர்கள் பேசியதை/எழுதியதை அப்படியே பாடப்புத்தக ஞாபகத்தில் இதிலும் ரெஃபரன்ஸுக்காகக் கொடுத்திருப்பது தான் கொஞ்சம் போரடிக்கும் விஷயம். நைக் என்ற கம்பெனியைப் பற்றி சுவாரஸ்ய தகவல்கள் தெரிந்துகொள்ள படிக்கலாம். By The Way, Nike என்ற வார்த்தைக்கு அர்த்தம் Greek Goddess Of Victory. 

3. Great Leaders Grow - Ken Blanchard & Mark Miller

மற்றுமொரு லீடர்ஷிப் புத்தகம். இந்தமுறை பெரிய லெவெலில் இல்லாமல், எல்.கே.ஜி லெவலில். கல்லூரி முடித்து அடுத்து என்ன என்ற குழப்பத்திலிருக்கும் ஒருவர், வேலைக்குச் சேர்வதும், அங்கு அவர் கற்றுக்கொள்ளும் லீடர்ஷிப் அ,ஆ,இ,ஈ பாடமே இப்புத்தகம். வெறும் கருத்துகளாக கொட்டிக்குவிக்காமல், சொல்லவந்ததை ஒரு கதை போல் சொல்லியிருக்கிறார்கள் ஆசிரியர்கள் இருவரும். டிஷ்யூ பேப்பர் நோட்ஸ், எளிமையான கருத்துகள், முசுடு மேனேஜர், தலைக்கு மேல் வெள்ளம் போன ப்ராஜெக்ட்டுகள், வேலை போய்விடுமோ என்ற பயத்தில் பதில் சொல்ல மறுக்கும் சீனியர்கள் என நடைமுறை உதாரணங்கள். ஓரிரு நாட்களில் படித்து முடித்துவிடலாம். என்ன, சொல்லப்பட்ட  கருத்துகளை நடைமுறைப்படுத்துவதற்கு தான் சில பல வருடங்களாகும்.


Must read என்றெல்லாம் சொல்லி பயமுறுத்த மாட்டேன். படித்தால் you will GROW. படிக்கும் போது தெரியும் இந்த GROW வுக்கான அர்த்தம்.

Happy Reading. 


_________________


ரஜினியின் பஞ்ச் தந்திரம் - பி.சி.பாலசுப்ரமணியன், ராஜா கிருஷ்ணமூர்த்தி
கிழக்கு பதிப்பகம்
பக்கங்கள்: 140 விலை: 80
ஆன்லைனில் வாங்க : டிஸ்கவரிபுக்பேலஸ் - http://discoverybookpalace.com

“Nike – The Vision behind the Victory”
Jaico Publishing House
Pages: 204, Price: Rs. 195.00
To buy Online: flipkart.com

“Great Leaders Grow” – by Ken Blanchard & Mark Miller
Collins Business
Pages: 144, Price: 120.00
To Buy Online: flipkart.com

No comments:

Post a Comment