24 Apr 2013

Veronika Decides to Die - Paulo Coelho

சிறப்பு பதிவர் : Shanthi

தற்கொலை - "க்ளாஸ் டெஸ்ட்" முதல் "காதல் தோல்வி" வரை ஏதோ ஒரு காரணத்திற்காக வாழ்கையில் எப்போதாவது ஒருமுறையேனும் தற்கொலையை பற்றி தீவிரமாய் யோசித்திருப்போம் நாம் அனைவருமே. அப்படி ஒரு இளம்பெண் சலிப்பின் காரணமாக தற்கொலைக்குத் துணிந்து, பின் காப்பாற்றப்பட்டு மனநல மருத்துவமையில் சேர்க்கப்படுகிறாள். அங்கு அவள் சந்திக்கும் மனிதர்கள் மற்றும் அனுபவங்கள் பற்றிய நாவல்- "Veronika decides to Die". நாவலாசிரியர் Paulo Coelho. கிட்டத்தட்ட 200 பக்கங்கள், மிக எளிய ஆங்கில மொழிபெயர்ப்பு .

இந்தக் கதையின் நாயகி வெரோனிகா தற்கொலை முயற்சியிலிருந்து காப்பாற்றப்பட்டாலும் இன்னும் சில நாட்களே தான் உயிர் வாழப்போவதாய் அறிகிறாள். எப்படியும் தான் சாக நினைத்து எடுத்த  முடிவு நிறைவேறப்போகிறதே என தன் இறுதி நாட்களை எதிர்கொள்கிறாள். ஆரம்பத்தில் வெறுப்பாக உணர்ந்தாலும் சிறிது சிறிதாய் தான் சேர்க்கப்பட்டிருக்கும் மனநல மருத்துவமனையும் அங்குள்ளவர்களும் அவளை ஈர்கிறார்கள், அந்த வித்தியாச சுதந்திரம் அவளுக்குப் பிடித்துப் போகிறது. தன் தயக்கங்களை சிறிது சிறிதாய் துறந்து, தன் உண்மையான சுதந்திரத்தை அறிகிறாள். மனநலம், மன நோய்கள் - அது குறித்த பரவலான தயக்கங்கள், புரிதல்கள் இந்நாவலில் அதிகம் பேசப்படுகின்றன.

இந்த சமூகம் நம்மை "நார்மல்" என்று ஒத்துக்கொள்ளும் பொருட்டு  நாம் கடைபிடிக்கும், பின்பற்றும், சகித்துக் கொள்ளும் பல விஷயங்களை ஆராய வைக்கிறது இந்தக் கதை. பெரிய அளவில் எந்த மாறுதலும்  வேண்டாமல், நம் வழியில் வருபவற்றை மட்டுமே, எல்லோரும் செய்வது போலவே செய்து கொண்டிருந்தால் சலிப்பும் விரக்தியும் மட்டுமே மிஞ்சும். எந்த நேரமும் எதுவும் நடக்கலாம் என இருக்கும் நம் வாழ்வு ஒரு "fragile existence" - இதில்  வாழ்வு, சாவு பற்றிய முடிவை நாமே எடுப்பதை விட்டு, பிடித்தபடி தயக்கமின்றி வாழத் தூண்டுகிறது இந்தக் கதை.திகட்டத் திகட்ட தத்துவங்களும் அறிவுரைகளும் நமக்கு தினம் தினம் கிடைத்துக்கொண்டேதான் இருக்கின்றன. ஆனாலும் நமக்குள் மிகச்சிறு மாறுதலேனும் நிகழ ஒரு inspiration தேவையாய் இருக்கிறது .Paulo Coelho நாவல்கள் அவ்வகை பாதிப்பை கண்டிப்பாக ஏற்படுத்துகின்றன. அதிசுவாரஸ்யமான மாயக் கதையுலகம், விறுவிறுப்பான திருப்பங்கள் என்று ஏதும் இல்லையென்றாலும் மிகமிக சாதாரணமான கதையோட்டம், தெளிவான உரையாடல்கள், இவை ஆங்காங்கே வரும் முக்கிய வாழ்க்கை தத்துவங்களை நம்மனதில் பதியசெய்து நம்மில்  மாறுதல்களைத் தூண்டுகிறது .

தற்கொலையில் கதை ஆரம்பித்து பின் மனநல மருத்துவமனையில் பெரும்பகுதி நடந்தாலும் முடிவு இந்த இரு தப்பித்தல்களையும் தாண்டி நிஜ வாழ்க்கையை எதிர்கொள்வதாகவே முடிகிறது. அதற்கான திருப்பங்களும், தர்க்கங்களும் நம்பும்படியாகவே உள்ளன. வெகு சில கதாபாத்திரங்கள் மட்டுமே கதை நெடுக வருகின்றன. கதைக் கோர்வையும் எளிமை.

Be crazy! But learn how to be crazy without being the center of attention. Be brave enough to live different.

ஒழுங்குமுறைகள், கட்டுப்பாடுகள், ருடீன் போன்றவை காரணமாக ஏகப்பட்ட தயக்கங்கள் நமக்குள்ளே. அடுத்தவரை தொந்தரவு செய்துவிடுவோமோ, இது மற்றவருக்கு பிடிக்காமல் போய்விடுமோ, என்றே பல சமங்களில் யோசிக்கிறோம். அப்படி ஒரு முறை கதையின் நாயகி தயங்கி நிற்கும்போது ,மனநல மருத்துவமனையில் இருக்கும் வயதான பெண்மணி ஒருவர் அவளுக்குக் கூறுவது :

Stop thinking all the time that you're in the way, that you're botheringthe person next to you. If people don't like it, they can complain. And if they don't have the courage to complain, that's their problem.

இந்த பதிவும்கூட இப்படி,  மற்றவர்களுக்குப் பிடிக்காதோ, பாதிக்குமோ என்ற தயக்கத்தை எல்லாம் விட்டு மெல்ல வெளியே வந்து எழுதியதே :)


 Veronika Decided to Die, Paulo Coelho, Harper Collins Publishers India Ltd., Rs.254
புத்தகத்தை ஆன்லைனில் வாங்க : Flipkart,  Amazon

11 comments:

  1. எப்படி ஷாந்தி ...இப்படியெல்லாம் கலக்குறீங்க! ஆழமான சிந்தனை, அழகான வரிகள் எளிய விளக்கம் அதுவும் புரியும்படி..... இன்னும் படி யுங்கள், எழுதுங்கள் இணைந்திருக்கிறோம்....தொடரும்:)

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி ப்ரேம்குமார்:))

      Delete
  2. எப்படி ஷாந்தி ...இப்படியெல்லாம் கலக்குறீங்க! ஆழமான சிந்தனை, அழகான வரிகள் எளிய விளக்கம் அதுவும் புரியும்படி..... இன்னும் படி யுங்கள், எழுதுங்கள் இணைந்திருக்கிறோம்....தொடரும்:)

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றிங்க:)))

      Delete
  3. அருமை ஷாந்தி அவர்களே..மிக நேர்த்தியான அறிமுகம்..ஹேட்ஸ் ஆஃப்..

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துகளுக்கும்,ஊக்கத்திற்கும் மிக்க நன்றி:)))

      Delete
  4. ரொம்ப அழகான விமர்சனம். நச்சுன்னு எழுதியிருக்கீங்க :-)

    amas32

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி அம்மா:)))

      Delete
  5. முதன்முதலில் Paulo Coelhoவை படிச்சது 'அல்கெமிஸ்ட்'ல தான்.அதுல ஒரு வசனம் எப்பவுமே மறக்கமுடியாது 'When you truly want something the whole universe conspires you to help to achieve it'. அதுக்கப்புறம் இந்த 'Be crazy...' தான் பெஸ்ட்டு. and thanks for the nice intro...!! :):)

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி:)) எனக்கும் Alchemist ஆல்டைம் ஃபேவரிட் :))

      Delete
  6. romba supara irukku unga intro intha booka pathi...thanks, hope u will share others books too....

    ReplyDelete