15 Mar 2015

அறிவிப்பு: இலக்கிய விமரிசகர்களுக்கு காலச்சுவடு அளிக்கும் இலவச நூல்கள்

காலச்சுவடு வெளியிடும் புத்தகங்களை அறிமுகம்/ மதிப்பீடு/ விமரிசனம் செய்ய விரும்பும் எழுத்தாளர்களுக்கு புதிய வெளியீடுகளை அன்பளிப்பாய் வழங்க முன்வந்துள்ளது காலச்சுவடு நிறுவனம்.

இது குறித்து காலச்சுவடின் அஞ்சல்-

நண்பர்களுக்கு,

காலச்சுவடு வெளியீடுகளின் வாசகப் பரப்பை அதிகரிக்கும் பொருட்டும், கருத்துப்  பரிமாற்றங்களை மேம்படுத்தும் நோக்கத்தோடும்  சில புதிய திட்டங்களை அறிவிக்க உள்ளோம். அவற்றில் முதலாவதாக, இணையத்தில் காலச்சுவடு வெளியீடுகளை  அறிமுகம் /விமர்சனம்  எழுதும் நண்பர்களுக்கு எமது புதிய வெளியீடுகளை அன்பளிப்பாக வழங்க உள்ளோம்.

தமது வலைப்பூக்களில், வேறு தளங்களில் எமது புத்தகங்கள் குறித்து எழுதியிருப்பவர்கள், அவற்றின் சுட்டியுடன் எமது மற்ற வெளியீடுகளில் தமக்கு ஆர்வமுள்ள நூல்களைக் குறிப்பிட்டு  மின்னஞ்சலில்  தெரிவிக்கவும். புதிதாத எழுத விரும்புபவர்களும் தொடர்பு கொள்ளலாம்.

நீங்கள் விரும்பும் நூல்களின் கையிருப்பு  போன்றனவற்றை கருத்தில்கொண்டு முடிந்தவரை அவற்றை அனுப்பிவைப்போம்.

உங்கள்  ஆர்வத்தையும் ஒத்துழைப்பையும் வேண்டுகிறோம்.

இந்த செய்தியை தங்கள் பதிவர்கள், நண்பர்களோடு பகிர்ந்துகொள்ளவும்

நன்றி

Regards,
காலச்சுவடு | kalachuvadu@kalachuvadu.com

2 comments:

  1. அன்புடையீர் வணக்கம்! தகவலுக்கு நன்றி. நான் எனது காலச்சுவடின் நூல் ஒன்றின் விமர்சனம் பற்றிய விவரத்தினை அவர்களுக்கு அனுப்பி வைத்துள்ளேன்.
    த.ம.1

    விவரம்: பதிவின் தலைப்பு: கரிச்சான் குஞ்சு - ”பசித்த மானிடம்”
    http://tthamizhelango.blogspot.com/2012/03/blog-post_08.html
    வெளியிட்ட தேதி: Thursday, 8 March 2012

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துகள் நண்பரே!

      Delete