சிறப்பு பதிவர் - அஜய்
மேற்கில் 'Slacker Novel' என்ற ஒரு ழானர் உண்டு. எந்த வேலையையும் செய்ய விருப்பமில்லாத, வெறுமனே பொழுதைக் கழிக்க விரும்புகிற முக்கிய பாத்திரம் பற்றிய நாவல்கள் இவை. வேலை செய்வது என்பது இவர்களுக்கு வேப்பங்காய் மாதிரி. இத்தகைய தங்கள் இயல்பால் பாத்திரங்கள் எதிர்கொள்ளும் நிகழ்வுகள் இந்த வகை நாவல்களில் இருண்மையான நகைச்சுவையுடன் சொல்லப்பட்டிருக்கும். Lucky Jim (Kingsley Amis), A Confederacy of Dunces (John Kennedy Toole) போன்ற நாவல்கள் உடனே நினைவுக்கு வருகின்றன. ஒரு விதத்தில் 'Catch-22' நாவலில் நாம் பார்த்த யோசாரியன்கூட ஒரு slackerதான்.
உபமன்யு சட்டர்ஜியின் 'இங்கிலீஷ், ஆகஸ்ட்' நாவலையும் இந்த வகைமையில் நாம் சேர்க்க முடியும். ஆனால் அது மட்டுமே இந்த நாவல் இல்லை. தான் இத்தனை நாள் வரை அனுபவித்த சொகுசு வாழ்க்கையைத் தவிர வேறொரு உலகமும் இருப்பதை ஒரு இளைஞன் உணரும் நாவலாகவும் இதை வாசிக்கலாம் (coming of age novel). இந்திய அரசு நிர்வாக அமைப்பைப் பகடி செய்யும் நாவலாகவும் இது விரிகிறது. இதை எழுதிய உபமன்யுவே இந்திய ஆட்சிப்பணி அதிகாரியாக இருப்பது ஒரு சிறப்பம்சம்.