A.J.Cronin A.K.Ramanujan Amartya Sen Andrea Maria Schenkel Anton Chekhov Arthur Hailey Bill Bryson Deborah Eisenberg dhan gopal mukerji Elizabeth Kostova Gay Neck Geoff Dyer George Orwell Harper Lee Henning Mankell Ian McEwan Jared Diamond Jilly Cooper Jonathan Livingstone Seagull Joseph Heller Kenneth Anderson Kiran Desai mark tully Maugham Michael McCarthy O.Henry okakura kakuzo Orhan Pamuk P.G.Wodehouse PB.ஸ்ரீனிவாஸ் R.K.Narayan Richard Bach Ronald Wilks saggi Stephen King steven weinberg Swami Tejomayananda Upamanyu Chatterjee vikram seth William Sydney porter அ. முத்துலிங்கம் அ.கா.பெருமாள் அகிலன் அசோகமித்திரன் அழகியசிங்கர் அறிஞர் அண்ணா அறுசுவை அரசு நடராஜன் அனார் ஆ. சிதம்பரகுற்றாலம் ஆதவன் ஆர்.கே.நாராயண் ஆர்.ஷண்முகசுந்தரம் ஆஸ்கார் ஒயில்டு இடாலோ கால்வினோ இந்திரா பார்த்தசாரதி இந்துமதி இரா. நாறும்பூநாதன் இரா.நடராசன் இரா.முருகவேள் இரா.முருகன் இலக்கிய வீதி இனியவன் இலவச கொத்தனார் உமா சம்பத் எம் கோபாலகிருஷ்ணன் எம். வி. வெங்கட்ராம் எர்னெஸ்ட் ஹெமிங்வே என்.சொக்கன் என்.ராமதுரை எஸ். ராமகிருஷ்ணன் எஸ்.சந்திரமௌலி ஏ.கே.ராமானுஜன் ஏ.கோபண்ணா ஒல்கா பெரோவ்ஸ்கயா ஃபெயின்மன் க.நா.சு கண்மணி குணசேகரன கரிச்சான் குஞ்சு கலாப்ரியா காப்கா காலபைரவன் கி. ராஜநாராயணன் குமரி எஸ்.நீலகண்டன் குல்தீப் நய்யார் கே நெக் கோபிநாத் கோபுலு சந்திரசேகர சர்மா சமஸ் சல்மான் ரஷ்டி சா. கந்தசாமி சா.பாலுசாமி சாருநிவேதிதா சாலீம் அலி சி.சரவணகார்த்திகேயன் சி.சு.செல்லப்பா சிபி.கே.சாலமன் சு. வேணுகோபால் சுகுமாரன் சுந்தர ராமசாமி சுப்புடு சுவாமி விவேகானந்தர் சுனில் ஜோகி சுஜாதா செல்லம்மா பாரதி செள.ராஜன் சே. இரகுராமன் சோம.வள்ளியப்பன் டாக்டர். சு.முத்து செல்லக்குமார் டாக்டர். பி.எம்.ஹெக்டே டாக்டர்.எல்.மகாதேவன் தமிழ் மகன் தரம்பால் தி. ஜானகிராமன் தி.ஜானகிராமன் தியடோர் பாஸ்கர் து.கணேசன் ந.பிச்சமூர்த்தி நகுலன் நடிகர் சிவகுமார் நமீதா தேவிதயாள் நா.முத்துக்குமார் நாகம்மாள் நாகூர் ரூமி நாஞ்சில் நாடன் ப. சிங்காரம் பல்லவி அய்யர் பவன் வர்மா பவா செல்லதுரை பழ.அதியமான் பழ.கருப்பையா பஷீர் பா.ராகவன் பாம்பே ஜெயஸ்ரீ பாரதியார் பாலகுமாரன் பாலச்சந்திரன் சுள்ளிக்காடு பாலு மகேந்திரா பாவண்ணன் பி.எச்.டேனியல் பி.எம்.சுந்தரம் பி.ஏ.கிருஷ்ணன் பி.வி.ராமஸ்வாமி பிரமிள் பெஞ்சமின் ப்ளாக் பெருமாள் முருகன் பொ.கருணாகரமூர்த்தி மகாகவி பாரதியார் மதன் மருதன் மலர்மன்னன் மனுஷ்யபுத்திரன் மா.கிருஷ்ணன் மார்க்வெஸ் மாஸ்தி மில்லி போலக் முகில் முஹமது யூனுஸ் யதுகிரி அம்மாள் யுவன் சந்திரசேகர் ரகோத்தமன் ரமணி சந்திரன் ரா.கி.ரங்கராஜன் ராஜாஜி லலிதாராம் லா.ச.ரா லிவிங்ஸ்மைல் வித்யா லூசியன் ஸ்ட்ரைக் லெமூர் வ.ரா வண்ணதாசன் வா.மு கோமு வாலி விட்டல் ராவ் விளதீமிர் பகமோலவ் வின்சென்ட் ஷீன் வீயெஸ்வி வுடி ஆலன் வெரியர் எல்வின் வேதவல்லி வைக்கம் முகமது பஷீர் வைணவச் சுடராழி ஆ. எதிராஜன் வைரமுத்து ஜனனி ரமேஷ் ஜான் பான்வில் ஜி.நாகராஜன் ஜிம் கார்பெட் ஜெயகாந்தன் ஜெயமோகன் ஜே. ஹெச். வில்லியம்ஸ் ஜோதிநரசிம்மன் ஷோபா சக்தி ஹென்னிங் மான்கெல்

10 Jul 2020

ஆப்பிரிக்கக் காடுகளில் ஓர் அற்புத உலா - நீர்யானை முடியுடன் இருந்தபோது முதலிய ஆப்பிரிக்கக் கதைகள், பாவண்ணன்

க.நாகராசன்
 

சுமார் 13000 ஆண்டுகளுக்கு முன்னர், நவீன மனிதனின் மூதாதையர்கள் ஆப்பிரிக்க கண்டத்தில் தோன்றி அனைத்து கண்டங்களிலும் பரவினர் என்பது மானுடவியலாளர்களின் கணிப்பு. ஏன் முதல் மனிதன் ஆப்பிரிக்க கண்டத்தில் தோன்ற வேண்டும், வேறு கண்டத்தில் தோன்றி இருக்கக் கூடாதா, என்கிற கேள்விக்கு பல பதில்கள் தரப்படுகின்றன. ஆப்பிரிக்க கண்டம் முழுவதும் தழைத்துள்ள காடுகள் பல்லுயிரிகளின் தோற்றத்திற்கு ஆதரவாக உள்ளன என்பது அவற்றில் ஒரு பதில், மனிதக் குரங்குகளின் பல வகைப்பாடுகள் காடுகளெங்கும் காணக் கிடைக்கின்றன என்பது ஒரு சான்று  ஆகும்.



6 Jun 2020

சங்க சித்திரங்கள் - ஜெயமோகன்

எழுதியவர்: டி.கே.காளீஸ்வரன்.

சங்கச் சித்திரங்கள்

“மாஸ்கோ”. 

2007 ல் கொங்கு பொறியியல் கல்லூரியில் நான் படிக்கும்போது எங்கள் “Applied Physics” சார் பெரும்பாலும் சுட்டப்பட்டது இப்பெயரில்தான். பள்ளிக்காலம் துவங்கி, இளநிலை மற்றும் முதுநிலை கல்லூரிப் படிப்பு என ஏறத்தாழ 15 வருடங்களில் எத்தனையோ ஆசிரியர்களை நாம் கடந்து வந்திருப்போம். அப்படியே அவர்களுக்கு வழங்கப்பட்ட பட்டப் பெயர்களையும். என்றாலும் பெயரின் சிறப்பாலோ ஆசிரியரின் தன்மையாலோ நம்மால் மீண்டும் மீண்டும் சிலர் மட்டுமே நினைவு கூறப்படுவார்கள். எனக்கு அத்தகைய ஒருவர் தான் “பாலசுப்பிரமணி” சார். 

மொத்தமாக ஒரு செமஸ்டர் மட்டுமே அவர் எங்களுக்கு வகுப்பெடுத்திருந்த போதும், அவர் நினைவிலிருக்க காரணம், அவர் வகுப்பெடுக்கும் முறை. பெரும்பாலான விசயங்கள், எவ்வளவு சிக்கலாய் இருந்தாலும், அதை மிக எளிய உதாரணங்களோடு, நம் வாழ்க்கையுடன் சம்பந்தப்படுத்தி விளக்குவதில் கைதேர்ந்தவர். குறிப்பாக சொல்வதானால், நடிகர் விஜயகாந்தை வைத்து Semi / Super conductor களை விளக்கியது. “இப்ப நம்ம, விஜயகாந்த் சாரை பார்த்தீங்கன்னா, பெரும்பாலும் போலீசாதான் நடிப்பாரு, இடையில ஒண்ணு ரண்டு படத்துல மட்டும் மத்த வேஷங்கள்ல நடிப்பாரு. Semi/Super conductor களும் அப்படித்தான்யா, எப்பயுமே நார்மலான conductorஆ behave பண்ணிட்டு, ஒரு குறிப்பிட்ட வெப்பநிலையில் மட்டுமே super conductorஆ இருக்கும்.”. சிக்கலான விசயங்கள் என எண்ணிக்கொண்டிருப்பவைகள் கூட, சரியான விதத்தில் சொல்லப்படும்போது நமக்கு அணுக்கமாகிவிடுகின்றன என எனக்குப் புரியவைத்தது அச்சம்பவம். 

தமிழ்ப் பாடத்தின் மனப்பாடப் பகுதிகளைத் தாண்டி, சங்க இலக்கியத்துக்கும் எனக்கு யாதொரு தொடர்பும் இருந்ததில்லை. அந்த தொட்டகுறையும் பனிரெண்டாம் வகுப்புடனேயே விட்டகுறையாகிப் போனது. இடையிடையே ஆர்வத்துடன் வாசிக்க எடுத்த முயற்சிகள், அருஞ்சொற்பொருள், விளக்கவுரை திரண்ட கருத்து ரீதியிலான வாசிப்புகளால் மிரட்சியூட்ட, முடிந்துபோயின. அவை கடலை கைக்குட்டையில் அள்ளும் முயற்சிகளாகப் போனது. சங்க இலக்கியங்களின் விரிவையும், அது காட்டும் மாபெரும் தருணங்களையும், வாழ்க்கைச் சித்திரங்களையும், மொழியழகினையும் பிறர் சொல்லிக் கேட்குந்தோறும், மீண்டும் முயற்சிப்பதும் ஓரிரு நாட்களிலேயே அம்முயற்சியில் தேங்கி நிற்பதும் வழமையாகிவிட்டது. 

இந்நிலையில்தான், கடலின் விரிவை, அதன் ஆழத்தை, தெளிவை நடுக்கடலில் ஒரு படகில் நின்றும் பார்க்கும் அனுபவம் எனக்கு ஏற்பட்டது. ஒரு சங்கப் பாடல், அதன் பேருணர்ச்சிகளுடன் நம்மைப் பொருந்திப்போகச் செய்யும் வாழ்வியல் அனுபவங்கள், கூடவே அப்பாடலுக்கிணையான நவீனக் கவிதை வடிவம் என அருமையாக நம்மை அத்தளத்துடன் பிணைத்துக்கொள்ளும் மாயத்தை ஆசான் திரு.ஜெயமோகன் அவர்கள் எழுதிய “சங்கச் சித்திரங்கள்” நூல் செய்திருக்கிறது.

சமகாலக் கவிதைகளை எப்படி வாசிப்போமோ, சங்க காலக் கவிதைகளையும் அப்படியே வாசிக்க வேண்டும் என இந்நூலில் ஓரிடத்தில் சொல்லப்படுகிறது. சங்கப்பாடலின் நவீன வடிவமும், அப்பாடலின் தளத்தில் நம்மை இருத்தும் சமகால சம்பவங்களும் சங்க காலக் கவிதைகளை நாம் நெருங்க உதவுகின்றன. காதல், வீரம், பிரிவு, மரணம் உள்ளிட்ட உச்ச உணர்ச்சிகள் யாவுமே காலம் கடந்தவை. நம் அழுகைக்கும், பெருமைக்கும், ஆற்றாமைக்குமான சொற்களை பலநூறு வருடங்களுக்கு முன்னரே நாமறியா கவிஞன் சூல் கொண்டிருக்கிறான் என்பது எவ்வளவுக்கெவ்வளவு உண்மையோ, அச்சொற்கள் இப்பூமியின் மற்றொரு மூலையிலிருக்கும் இன்னொருவனின் வாழ்வுக்கும் பொருந்தக்கூடியவை என்பதும் அதே அளவு உண்மை. ஒரு கவிதையை நம் மனதுக்கு மிக நெருக்கமாக ஆக்குவது, நம்முடைய வாழ்பனுவத்திலிருந்து அது முளைத்தெழுகையில்தான். 

அப்படி 40 சங்கக் கவிதைகள் முளைத்தெழுந்த ஒரு முளைப்பாரி தட்டைப் போன்றது இந்நூல். இதையே வேராகக் கொண்டு ஒவ்வொரு வாசகனும் தனக்கான விரிவை அடையவியலும். இந்நூலின் ஒவ்வொரு அத்தியாயத்துக்கும் நாம் தனித்தனி கட்டுரைகளை எழுதமுடியும் எனும் அளவுக்கு அவை சிறப்பானவை. இருப்பினும், சோற்றுப்பதக் கணக்கில் சில அனுபவக் குறிப்புகள் மட்டும் இங்கே.

என் கல்லூரி நாட்களில், 45 நிமிடங்கள் மட்டுமே நீடிக்கும் ஒரு வகுப்பில் எப்படியும் 20 லிருந்து 30 செய்திகள் துண்டுச்சீட்டுகளினூடே இருபாலர்களுக்கிடையே கடத்தப்படும். அதிகபட்சம் இரண்டு நிமிடங்களுக்குள் மறுமொழி கிடைத்துவிடும் சாத்தியக்கூறுகள் இருந்தபோதும் அவ்விரண்டு நிமிடங்கள் கழிவது ஒரு யுகம் போலத் தோன்றும். இந்த வரலாறு கொண்ட என்னால், வேலை நிறுத்தத்தால் சென்று சேராத காதல் கடிதங்கள் எழுப்பும் உணர்வையும் (“கொதிக்கும் மத்தகம்” கட்டுரை), அதனூடே  நற்றிணையின் 182ஆவது பாடலையும் அணுக்கமாய் உணரமுடிந்தது. 

“அப்புறம்” என்ற ஒற்றைச் சொல்லாலேயே பல காதல்களும், அதன் புண்ணியத்தில் செல்போன் கம்பெனிகளும் வாழ்ந்துவந்த ஒரு காலகட்டம் நம் கண்முன்னே கடந்துபோயிருக்கிறது. பேச வேண்டும் பேசுவதற்கு எதுவும் இல்லாதபோதும் பேசிக்கொண்டே இருக்கவேண்டும் என கொளுந்து விட்டெரிந்த காதலை, “சரி சரி”, “வை”, “பாக்கலாம்” என ஒற்றை வார்த்தைகளில் சுருங்குவதில் திருமணம் பெரும்பாலும் வெற்றியடைகிறது. நெருப்பாய்த் தகித்த காதல், பெரும் சாம்பல் பூத்து, அவர்களால் மறக்கப்பட்டு, அடியாழத்தில் தன் இறுதி அனலை பொத்திப் பாதுகாக்க நேர்ந்திட்ட அவலத்தை ஒளவையாரின் குறுந்தொகைப் பாடல் காட்டுகிறது (மணலாறு). 

இத்தொகுப்பின் முக்கியமான கட்டுரைகளில் ஒன்றான “பெற்ற நெருப்பு”, நமக்கு நாமே கற்பித்துக் கொண்ட வீரமரணம், முன் வைத்த காலை பின் வைக்காத பெருமிதம், பெருந்தியாகம் அனைத்துக்கும் இருக்கக்கூடிய மறுபக்கத்தைக் காட்டுகிறது. பலவேறு பாடல்களினூடே அறியப்பெற்று அதன் நீட்சியென உரைகளாகவும் வரிகளாகவும் நம்முள் வேரூன்றிவிட்ட சீறிவரும் வேலுக்கு மார்புகாட்டிய வீரனின் குருதியை தன்னுடைய பாலாகவே காணும் அன்னையின் அபூர்வக்குரல் ஒளவையாரின் புறநானூற்று கவிதையாய் ஒலிக்கிறது. 

இவ்வருடம் மார்ச் மாதம் காஞ்சிக்கோவிலில் நடந்த புதிய வாசகர் சந்திப்பில் ஆசான் திரு.ஜெயமோகன் ஒரு சம்பவத்தைச் சொன்னார். காதலித்து மணம் புரிந்துகொண்ட இருவர் ஒற்றைச் சொல்லால் பிரிய நேர்ந்திடும் விசித்திரத்தின் கதை அது. அக்கதையை “உதிரச்சுவை” எனும் கட்டுரையாக இந்நூலில் படிக்க நேர்ந்தது. என்னதான் பிரிவு என்பது இருகூர் வாள்முனையாக இருப்பினும், அதிகக் காயம் அடையும் தலைவியின் துயரைப் பேசும் எயினந்தையாரின் (நற்றிணைப்) பாடலுக்கான கட்டுரை அது. 

உலோச்சனார் எழுதிய புறநானூற்றுப் பாடலுக்கான “போராட்டமும் கொண்டாட்டமும்” கட்டுரையின் மூலமாக, அப்பாடலில் காட்டப்படும் இளைஞனின் நீட்சியாக சமகாலத்தில் நிகழ்ந்த “துப்புக்கூலி” முறையை, களவை, இது எல்லாமுமே ஒருவகை விளையாட்டாக மாறிவிடும் மானுட இயல்பை அறியமுடிகிறது.

காலத்துக்கும் நிலைத்து நிற்கும் குன்றா அறிவுக்கு, எப்பிறப்பிலும் கடக்கவியலாத சாபம் ஒன்றுண்டு. சாதாரண உப்பு புளி சமாச்சாரத்துக்காக, அரை மழையில் கரைந்து போகும் அதிகாரத்தின் கதவை அண்ட நேரிடுவது அது. ”பாடல் எடு பரிசில் இதோ” என்பதில் துவங்கி “ரைட்டர்னா? என்ன எழுதுவீங்க?” என்பதுவரை தொடரும் கதை அது. “நாமார்க்கும் குடியல்லோம்” என்றும் “எத்திசைச் செல்லினும் அத்திசைச் சோறே” என்றும் பிறரிடம் கூறுதல் போலவெ விட தன்னிடமும் கூற நேரிடும் அவலத்தின் தற்கால வடிவம் “மூடிய வாசல்களுக்கு முன்”.

மேற்சொன்ன கட்டுரைகள் எல்லாம் முதல்வாசிப்பிலேயே என்னைப் பெரிதும் கவர்ந்த கட்டுரைகளுல் சில. தொகுப்பின் 40 கட்டுரைகளும் மிகவும் முக்கியமானவை. போலவே அது சார்ந்த சங்கப் பாடல்களும். ”கவிதையின் மர்மமுடிச்சு நம்மனதில் மலர்விரிவது போல எப்போது என்று சொல்ல முடியாத ஒரு தருணத்தில் அவிழ்வதே உண்மையில் கவிதை அனுபவம் என்பது” என இந்நூலில் கூறப்பட்டுள்ள விசயத்துக்கு சாட்சியாக மிளிரும் சம்பவங்களின் தொகுப்பு இப்புத்தகம். 

சங்கப்பாடல்கள் மீது காதல் கொண்டவர்கள், தன் அன்றாட வாழ்வின் தளத்தில் நின்று அப்பாடலின் விரிவை அனுபவிக்கும் ஆவல் கொண்டவர்கள் தவறவிடக்கூடாத புத்தகம் “சங்கச் சித்திரங்கள்”



சங்க சித்திரங்கள் வாங்க

17 May 2020

கரப்பு - இயான் மக்ஈவன்


இந்தப் பதிவை பிப்ரவரி மாதம் எழுதியபோது இருந்த சூழ்நிலை வேறு, இப்போது இருக்கும் சூழ்நிலை வேறு. அப்போது பிரெக்ஸிட் பிரச்சினை முடிவுக்கு வந்திருந்தது. அந்தச் சூழ்நிலையில் பொருத்தமாக இருக்கும் என்று தேடிப் பிடித்து இந்த நாவல் பற்றி எழுதினேன், நண்பர்களிடமும் பகிர்ந்து கொண்டேன். அப்புறம் ஏதேதோ காரணங்களால் இதை எழுதியதையே மறந்து விட்டேன். நம்மைப் பற்றி ஏதேதோ நினைத்துக் கொள்கிறோம், அதற்கு மற்றவர்களின் சம்மதத்தையும் சம்பாதித்து விடுகிறோம். அப்புறம் ஒரு நீண்டகால நோக்கில் மட்டுமல்ல, சில மாத அவகாசத்திலேயே அதற்கெல்லாம் அர்த்தமில்லை என்பது புலப்பட்டு விடுகிறது. இருந்தாலும் பரவாயில்லை, எழுதியதை ஏன் வீணாக்க வேண்டும்?

மக்ஈவன் முன்நோக்கி அனுமானித்தது போலவே கொரோனா புண்ணியத்தில் நம் மாபெரும் தொழில், சமூக, நிதி அமைப்புகளின் என்ஜின்கள் ஸ்தம்பித்து நின்று ஒரு தயக்கத்துடன், தீர்மானிக்க முடியாத இருள் கவியும் சூழலில் நகர ஆரம்பித்திருக்கின்றன, எப்போது மீண்டும் ஸ்தம்பித்து நிற்கும், அதற்கான அவகாசம்கூட இருக்குமா என்று தெரியவில்லை.  இந்த பெரும் மாற்றத்தின் விளைவுகள் குறித்து மக்ஈவன் வெளிப்படுத்திய அச்சங்கள் நியாயமானவை, அவை பதிவின் பிற்பகுதியில் இணைக்கப்பட்டிருக்கின்றன.

இனி மீட்கப்பட்ட பதிவு:


26 Mar 2020

பாலை நிலப் பயணம்- செல்வேந்திரன்


 செல்வேந்திரன் எழுதிய பாலை நிலப்பயணம் நூல் ரெண்டு வாரங்களுக்கும் குறைவான பயணத்தைப் பற்றிய குறிப்புகள் கொண்டது. ராஜஸ்தான், குஜராத் வழியே பெரும்பாலும் பாலை நிலத்தில் நண்பர்களுடன் கழித்த நாட்களைப் பற்றியவை. இந்திய நிலத்தில் சிறு பயணம்கூட எப்படியோ நம்முள்ளே செல்லும் நெடும்பயணமாக மாறும் வாய்ப்பை உள்ளடக்கியது. அதுவும், வெறும் ஐநூறு கிமீ பயணத்தில் வேறொரு நிலப்பரப்பும், உணவுப் பாரம்பரியமும், மொழியும் சகஜமாகப் புழங்கும் இடத்தில் சட்டென ஒரு விலகலும் நெருக்கமும் நம்முள் உருவாகிவிடும். அத்தன்மையை சிறிதும் விட்டுவிடாமல் எழுதப்பட்ட சிறு குறிப்புகளின் தொகையே இந்த நூல்.




9 Feb 2020

அருந்தவத்தால் அற்பம் பெற்ற கணங்கள்- கண்டராதித்தனின் 'திருச்சாழல்’



வாரச்சந்தை’ எனும் கவிதை மூலமே நான் கண்டராதித்தனின் உலகுக்குள் முதலில் நுழைந்தேன். அதை என் அதிர்ஷ்டம் என்றே சொல்ல வேண்டும். ரசிக்கத்தக்க கவிதையோடு உள்ளே நுழைவது தொடக்கத்திலேயே கவிஞனின் அக உலகத்தை நமக்குத் திறந்து வைத்துவிடுகிறது. விக்ரமாதித்தன் கதையில் வரும் ஓவியன் சிறு நகத்திலிருந்து பெண்ணைத் தத்ரூபமாக வரைவது போலத்தான் கவி உலகும். சிறு படிமத்தை நாம் அறிந்த காட்சியில் பொருந்திக் காட்டியதும் நமக்கான வாசல் திறந்துவிடுகிறது.




4 Feb 2020

எஸ்தர் - வண்ணநிலவன்


புதுமைப்பித்தனுக்குப் பிறகு சிறுகதையில் கணிசமான அளவு பங்களிப்புச் செய்திருப்பவர் வண்ணநிலவன் என்பதைத் தமிழ் இலக்கிய உலகம் நன்கு அறியும்: விக்ரமாதித்தியன் - திண்ணை நவம்பர் 28, 1999.



நாம் சோகமயமான பாடல்களை கேட்பது, சோகமயமாக திரைப்படங்களைத் தேடிப் பார்ப்பது, சோகம் ததும்பும் கதைகளை வாசிப்பது. இவற்றின் பின்னே உள்ள உளவியல்தான் என்ன?


கூகுள் ஆண்டவரைக் கேட்டால் அவர் பலவகை விசித்திர ஆய்வு முடிவுகளை எடுத்து நம் முன் தந்தாலும் - நான் இப்படி நினைக்கிறேன். வாழ்க்கையில் நாம் எப்போதும் ஒரு துயரின் பிடியில் அகப்பட்டுக் கொண்டு தவிப்பதாகவே மனம் நினைக்கிறது. துயரம் என்பது எனக்கானது மட்டுமல்ல; மற்றவர்களுக்கும் இது உள்ளது என்று நம் மனதை நம்ப வைக்க இத்தகைய சோகச் சித்திரங்களில் நாம் ஆழ்கிறோம் என்று நான் நினைக்கிறேன்.


தனது "பின்நகர்ந்த கால"த்தில் எஸ்தர் சிறுகதை உருவான கதையைக் குறிப்பிடுகிறார் வண்ணநிலவன். ஒருமுறை நெல்லை சென்றுவிட்டுத் திரும்புகையில் வழியில் ராமநாதபுரம் மாவட்ட மக்கள் பலர் வண்டி வண்டியாக பஞ்சம் பிழைக்க ஊர்விட்டு வெளியேறுவதைக் காண்கிறார் வண்ணநிலவன். அந்த நிகழ்வு அவர் மனதை அடுத்த சில நாட்களுக்கு நீங்காத சோகமாய் நின்றாட்ட, அதன் வேகத்தில் அவர் எழுதியதுதான் எஸ்தர்.

எழுத்து எல்லோருக்கும் வாய்த்துவிடுவதில்லை என்று க்ளிஷேவாகத்தான் இதைச் சொல்ல வேண்டியிருக்கிறது. எல்லாமுமே எழுத்துதான் எனினும், நமக்கு இப்படியெல்லாம் வாய்க்குமா என்று ஏங்கும் எழுத்து சிலருடையது.

லா.ச.ரா.'வின் அபிதா ஒரு அழகு என்றால், 'கனகாம்பர'த்தில் சாரதாவின் சாதுர்யம் சொல்லும் கு.ப.ரா. வேறோரழகு.  சாலம்மாளாகவே நம்மைக் கொண்டு சென்று நிறுத்திவிடும் அழகிய பெரியவனின் 'வனம்மாள்' ஒரு வகை என்றால், கி.ரா'வின் கோமதி (அது ஆண் கோமதிதான் என்றாலும்), இன்றைய தமிழ் நடையில் சொல்ல வேண்டும் என்றால், வேறே லெவல்.

வண்ணநிலவனின் எஸ்தர் இவற்றுள் அப்படி ஒரு தனிச்சுவை.

மழை பொய்த்து, வயல் ஒழிந்து, கால்நடைகள் அழிந்து, ஊர் மொத்தமும் காலியான போதினில்; தாங்களும் ஊரைவிட்டுச் செல்வோம் என முடிவெடுக்கும் ஒரு குடும்பத்தின் கதைதான் -  நிறைந்த சோகம் நிறைந்த கதைதான் எஸ்தர். எனினும் - பசியை, பஞ்சத்தைப் பெரும் தரித்திர விவரணைகள் வழியே பிழியப் பிழியச் சொல்லாமல்; கதையின் வழி நம் அருகினில் ஒருவர் அமர்ந்து நிதானமாய்க் கதைப்பதாய் நமக்கு அதன் வீரியத்தை விளங்கச் செய்வதுவும் ஒரு பெரும் எழுத்துக் கலைதான் இல்லையா?

சுமார் மூன்றாயிரம் வார்த்தைகள் கொண்ட எஸ்தர் சிறுகதையில் மிஞ்சிப் போனால் ஒரு ஐம்பது வார்த்தைகள்தான் மனிதர்கள் கொள்ளும் சம்பாஷணைகள். மற்றவை மொத்தமும் கதை வழியும், கதை மாந்தர் வழியும் வண்ணநிலவன் நம்மிடம் நடத்தும் சம்பாஷனைதான். இப்படி ஒரு நடையில் வெளிவந்த கதையை இதன்முன் வாசித்த நினைவில்லை.

இருந்த ஒரேயொரு வத்திப்பெட்டியின் மிச்சக் குச்சிகளில் ஒன்றை பீடி பற்ற வைக்க உபயோகித்துவிட்டு தலைதாழ்ந்து தட்டில் வைக்கப்பட்ட யாருக்கும் போதாத உணவையும் மறுக்கும் டேவிட்டைப் பார்த்து இதைச் சொல்கிறாள் எஸ்தர் சித்தி:

ஏய் சாப்பிடுடே. ஒங் கோவமெல்லாம் எனக்குத் தெரியும்

இருளுக்கு எத்தனையோ விவரணைகளை வாசித்திருக்கிறோம். இருள் தரும் மருட்சியைப் பலவாறு பலர் எழுத வாசித்திருக்கிறோம். மழை பொய்த்து, பஞ்சம் சூழ்ந்து, மக்கள் எல்லாம் ஊரைவிட்டு வெளியேற; படிப்படியாக அந்த ஊரில் இரவின் இருட்தன்மை பெருகுவதை; அவர்களுக்கான அந்த கிராம வாழ்க்கையின் இறுதி எல்லையைத் அவர்கள் அடைந்துவிட்டனர் என்பதை அந்த இருள் விவரணையின் வழியாகவே சொல்கிறார் வண்ணநிலவன். 

வெளிச்சமே இல்லாத ஊரிலும் மனிதர்கள் இருக்கிறார்கள் என்ற சிறு விஷயம் கூட அந்த இருட்டை மனதினை விட்டு விரட்டப் போதும் இல்லையா?

எஸ்தர் சித்தி இப்படிச் சொல்கிறாள்.

இந்த மாதிரி மையிருட்டு இருக்கவே கூடாது, இது ஏன் இம்புட்டு இருட்டாப் போகுதுன்னே தெரியல இது கெடுதிக்குத்தான்

கதையின் நிறைவுக்கு முந்தைய இரவில் எஸ்தர் சித்தி சொல்வதுவும்; டேவிட் எதிர்க்கேள்வியாகக் கேட்பதுவும் இவை:
 நீங்க ரெண்டு பேரும் ஒங்க வீடுகளுக்குப் போயி இரிங்க. புள்ளயளயுங் கூட்டிக்கிட்டுப் போங்க நீங்க ரெண்டு பேரும் எங்கூட வாங்க, மதுரையில போய் கொத்த வேல பாப்போம், மழை பெய்யந்தன்னியும் எங்ஙனயாவது காலத்தே ஓட்ட வேண்டியது தானே? ஈசாக்கும் வரட்டும் பாட்டி இருக்காளா?”

அவ்வளவுதான் கதையில் வரும் மொத்த வசனங்களும்.

பஞ்சம், பட்டினி பேசும் எஸ்தர் சிறுகதை சில மேலான்மைப் பாடங்களை நமக்கு எடுக்கிறது என்றால் நீங்கள் நம்பித்தான் ஆக வேண்டும். சென்ற வார மத்தியில் ஒருநாள் அலுவலகப் பணி சார்ந்த  ஒரு அகச்சிக்கலில் தவித்துக் கொண்டிருந்த எனக்கு எஸ்தர் வாசித்த பின் ஒரு தீர்வு கிடைத்தது நிஜமோ நிஜம். அதன் தொடர்ச்சியாகத்தான் இந்த மதிப்புரையை இங்கே எழுதிக் கொண்டிருக்கிறேன்.

ரொம்பவும் பேச ஒன்றுமில்லை. எஸ்தர் வாசியுங்கள். 

வண்ணநிலவனின் கடல்புரத்தில் என் மனதுக்கு அத்தனை நெருக்கமான புதினம் இல்லைதான். ஏனோ, இதைக் கொண்டாடும் மற்றோரைப் போல என் மனம் கடல்புரத்தில் புதினத்தைக் கொண்டாடவில்லை. ஆனால், எஸ்தர்..... வாசிப்பினில் நல்-அனுபவம். முந்நூற்றறுபது டிகிரியில் நிறைய பாடம் எடுக்கிறது. நன்றி வண்ணநிலவன் சார்.

எஸ்தர் - அமேசானில் வாங்க / வாசிக்க:  இணைப்பு

எஸ்தர் (வண்ணநிலவனின் முதல் சிறுகதைத் தொகுப்பு) வாங்க: நற்றிணை

27 Jan 2020

ஒரு சிற்பியின் சுயசரிதை - எஸ். தனபால்

எஸ். தனபால் எழுதிய, “ஒரு சிற்பியின் சுயசரிதை,” 126 பக்கங்கள் மற்றும் 16 வழுவழு தாள்களின் இருபுறம் (பெரியார், திரு. வி. க., பாரதிதாசன், எஸ். ராதாகிருஷ்ணன், என்று தனபால் வடித்த சிற்பங்கள் மற்றும் சில ஓவியங்களும் அவர் தன் நண்பர்களோடும் கிருஷ்ணர், மீனவர், புத்தர் வேடத்திலும்) என 32 புகைப்படங்கள் கொண்ட புத்தகம். காலச்சுவடு பதிப்பகம் இது மாதிரியான நூல்களை வெளியிடுவதில் தன்னை முதன்மை பதிப்பகமாய் நிறுவிக் கொண்டிருக்கிறது (மேற்கத்திய ஓவியங்கள் குறித்த பி.ஏ. கிருஷ்ணனின் இரு நூல்களும் இவ்வகையில் உயர் முன்மாதிரிகள்). சந்தாதாரர்களுக்கு மாதம் ஒரு புத்தகம் அனுப்பும் சிறுவாணி வாசகர் மையம் இந்தப் புத்தகத்தை வெளியிடத் தேர்ந்தெடுத்ததில் ஒரு முக்கியமான இடத்தில் தன்னையும் இணைத்துக் கொண்டிருக்கிறது. சிறுவாணி வாசகர் மையம் அளிக்கும் விற்பனை உத்திரவாதம், காலச்சுவடு பதிப்பகத்தின் தரமான அச்சு மதிப்பீடுகள் என்ற இரண்டும் சேர்ந்து பாதுகாத்து வைத்திருக்கத்தக்க ஒரு புத்தகம் நம் கைகளில் வந்திருக்கிறது. 



17.1.1993 முதல் 31.8.1993 வரை எட்டு மாதங்கள் ஒவ்வொரு வாரமும் ஆனந்த விகடன் பத்திரிக்கையில் வெளியான தொடர் கட்டுரைகளை தொகுத்து ஒரு நூலாக வெளியிடும் முயற்சிகள் மேற்கொண்ட இதன் பதிப்பாசிரியர் நண்பர் கிருஷ்ண பிரபு நம் நன்றிக்குரியவர். அவரிடம் இது குறித்து பேசியபோது, நுண்கலைகள் குறித்து சில புத்தகங்கள் தொடர்ந்து  வெளியிடத் திட்டமிட்டிருப்பதாகவும், அந்த வரிசையின் முதல் நூல்தான் இது என்றும் சொன்னார். இந்தப் புத்தகத்துக்கு கிடைத்திருக்கும் வரவேற்பு அவரது முயற்சி வெற்றி பெறும் வாய்ப்பை அதிகரித்திருக்கும் என்று நம்புகிறேன். எஸ். தனபால் குறித்துமே, வெவ்வேறு கலைஞர்கள் எழுதிய கட்டுரை தொகுப்பு ஒன்றை விரைவில் பதிப்பிக்க இருக்கிறார், அவர். அதற்கு இதைவிட நல்ல வரவேற்பு இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

20 Jan 2020

கண்டடைதலின் பேருவகை- அரூ அறிவியல் புனைவுகள்



ஒருவன் ஒருத்தியை விரும்பினான். அவளை இழந்தான். பிறகு அவளை உருவாக்கினான்- உலகின் மிகச்சிறிய அறிவியல் புனைவு.

 என் மூன்றரை வயது மகனுக்கு அண்மையில் நியுசிலாந்து எரிமலை நிகழ்வை செய்தியில் காட்டி எரிமலையையும் நெருப்பு பிழம்பையும் விளக்கிக் கொண்டிருந்தேன். கேட்டுக்கொண்டான். இப்போது விடுமுறைக்கு எங்கு செல்லவேண்டும் எனக் கேட்கையில் “வல்கனோவிற்கு” என்றான். அங்கே நெருப்பு சுடுமே என்ன செய்வாய் என்றேன். சில நொடிகள் யோசித்தான். பிறகு ‘ஏ.சி ஷூ போட்டு இறங்குவேன்.. அப்ப கால் சுடாது’ என்றான். அறிவியல்புனைவு பற்றிய கட்டுரையை எழுதத் தொடங்கும்போது அவனுடனான இந்த உரையாடல்தான் எனக்கு நினைவுக்கு வந்தது. இது ஒரு அறிவியல் புனைவா என்றால் இல்லைதான் ஆனால் அவனளவில் அறியமுடியாததை தன்னறிவைக் கொண்டு அறிய முற்படும் குழந்தைத்தனமான கற்பனை. அறிவியல் புனைவின் அடிநாதமான உணர்வு இதுதான் எனத் தோன்றியது.  

அறிவியல் புனைவு எனும் சொற் சேர்க்கையே சற்று விநோதமானதுதான். ஏனெனில் அறிவியலை நாம் எப்போதும் தர்க்கப்பூர்வமானது, புறவயமானது, நிரூபணத்திற்கு உட்பட்டது, கறாரானது என்றே வரையறை செய்துவருகிறோம். நேரெதிராக புனைவை உணர்வுப்பூர்வமானது, அகவயமானது, நெகிழ்வானது, கற்பனைக்கு முக்கிய இடம் அளிப்பது, உள்ளுணர்வு சார்ந்தது என்றே வரையறை செய்வது வழக்கம். அறிவியலில் புனைவிற்கு இடமில்லை, புனைவில் அறிவியலுக்கான இடம் இரண்டாம்பட்சம் என்பதே பொதுக்கருத்து. ஆனால் மகத்தான கண்டுபிடிப்புகள் அனைத்துமே உள்ளுணர்வின் எழுச்சியில் நிகழ்ந்தவை. புனைவுத் தருணத்தில் நிகழ்பவை. நமக்கு நன்கு தெரிந்த, ஆர்சிமிடிஸ் குளியல் தொட்டியிலிருந்து யுரேகா என கூவியபடி எழுவதாகட்டும், தலைமீது ஆப்பிள் விழுந்து புவியீர்ப்பு விசையை நியூட்டன் கண்டடைவதாகட்டும், விஞ்ஞானி கேக்யுள் கனவில் வால் பற்றும் பாம்பைக் கண்டு பென்சீனின் வடிவத்தை கண்டடவைதாகட்டும், டாவின்சியின் குறிப்பேடுகளில் உள்ள படங்கள் ஆகட்டும், இவையாவும் மகத்தான புனைவுத் தருணங்கள்தான். புனைவும் கூட சில தர்க்க ஒழுங்குகள் சட்டகங்கள் சார்ந்தே இயங்க முடியும். மாய யதார்த்தம், மிகு புனைவு என்றாலும் அவற்றுக்கென சில தர்க்க சட்டகங்கள் உள்ளன. புறவயத்தன்மை மற்றும் அகவயத்தன்மை ஆகிய இரண்டும் முயங்கும் வெளியே அறிவியல் புனைவின் களம் என கொள்ளலாம்.

அறிவியல் புனைவின் தோற்றமும் வளர்ச்சியும் அறிவியலுடன் இணை வைக்கத்தக்கது. ஐரோப்பிய மத்திய காலகட்ட வரலாறு முடிவுக்கு வந்து மறுமலர்ச்சி காலகட்டத்தில் அறிவியல் கண்டுபிடிப்புகள் நிகழத் தொடங்கின. நம் புலனறிவை பெருக்கும் கண்டுபிடிப்புகள் நிகழ நிகழ மானுட அறிவு பெரும் பாய்ச்சலை நிகழ்த்தியது. நுண்நோக்கியும் தூரநோக்கியும் விழியின் எல்லையை கடக்கச் செய்தது. நுண்ணுயிர்களும் தொலைதூர கோள்களும் நம் அறிதல் வட்டத்திற்கு வந்து சேர்ந்து நம்மை திகைக்கச் செய்தன. இவை மானுட வரலாற்றையே மாற்றின. பின்னர் புத்தொளி காலகட்டத்தில் அறிவியல் மனிதர்களின் பல சிக்கல்களுக்கு நம்பிக்கையான விடைகளை அளிக்கத் தொடங்கியது. பெரும் மக்கள் தொகையை அழித்தொழித்த அம்மை நோய்க்கு தடுப்பூசி கண்டுபிடிக்கப்படுகிறது. கிருமிகொல்லி மிக முக்கியமான கண்டுபிடிப்பு. அறிவியலால் எல்லாவற்றையும் வெற்றிகொள்ள முடியும் எனும் நன்னம்பிக்கை எங்கும் நிலவியது. அறிவியல் வளர்ச்சி மதத்தின் இருப்பை வெகுவாக கேள்விக்குள்ளாக்கியது. மதம் எனும் கட்டுமானம் கதைகளாலும் நெறிகளாலும் கட்டப்பட்டது. பைபிள் கதைகளோ, ஜாதகக் கதைகளோ, புராண கதைகளோ பல அடுக்குகள் கொண்டவை. பெரும்பாலும் அவை சாகசத்தன்மை கொண்ட அற்புத கதைகள். சிங்கமும், புலியும், கரடியும், நரியும் மானுட வடிவங்களை ஏற்று, அவர்களின் குரலிலேயே அவர்களின் வாழ்வைப்பற்றிய நீதியை கதைகளாக எடுத்துரைத்தன. இன்னல்களில் வாடுவோருக்கு தேவதைகள் உதவின. விசுவாசம் உள்ளவர்கள் எப்படியும் இறுதியில் மீட்கப்பட்டார்கள். மனிதனின் தலையாய சிக்கல்கள் அனைத்திற்கும் அறிவியளிடம் தீர்வு இருக்கும் என நம்பினார்கள். அறிவியல் மதத்தின் இடத்தை கேள்விக்குள்ளாக்கி, கடவுளின் பரப்பை மானுட உள்ளங்களில் இருந்து வெகுவாக சுருக்கியது. அறிவியல் மதத்திற்கு மாற்றாக மானுட உள்ளத்தில் நிலைகொள்ளத் தொடங்கியது.. அறிவியல் நம்பிக்கை மீட்புக்கான சாதனமாக கருதப்பட்டது. மனிதகுலத்தின் அத்தனை நூற்றாண்டு கேள்வியான மரணமின்மையை அல்லது மரணத்திற்கு பின்பான வாழ்வை மதம் உறுதி செய்தது போலவே அறிவியலும் பூடகமாக ஆசை காட்டியது. யோசித்துப்பார்த்தால் மனிதகுலத்தின் அத்தனை அறிவியல் முன்னெடுப்புகளும் மரணமின்மையை அடைவதற்கான முயற்சிகள்தான் எனத் தோன்றுகிறது. அறிவியல் மதத்தின் இடத்தை எடுத்துகொண்டபோது கடவுளர்களும் தேவதைகளும் கதைகளில் இருந்து மறையத் தொடங்கினர். அந்த பீடத்தில் அறிவியலும், தொழில்நுட்பமும் அமர்ந்து ஆசி வழங்கின. அறிவியல் புனைவுகள் அப்படித்தான் உருவாயின. அறிவியல், கடவுளின் சர்வ வல்லமையை பிரகடனம் செய்வதை நோக்கமாக கொண்டன. அறிவியலை எளிதாக புரியவைப்பதையே தொடக்கக்கால அறிவியல் கதைகள் இலக்காகக் கொண்டிருந்தன. அறிவியல் கதைகள் பலவகையிலும் முந்தையகால தேவதை கதைகளின் நீட்சியே.

அறிவியல் வளர்ச்சி அறிவியல் மதத்தையும் அதற்குகந்த அறிவியல் கதைகளையும் உருவாக்கியது போலவே அறிவியல் மறுப்பையும் உருவாக்கியது. இயற்கை –மனித அறிவு எனும் எதிரீடை உருவாக்கியது. மனிதன் இயற்கையின் ஒரு பகுதி என்பது மறைந்து மனிதனுக்கும் இயற்கைக்கும் இடையிலான போராட்டமாக மானுட வரலாறு உருவகப்படுத்தப்பட்டது. இந்த இயற்கை- மனிதன் போட்டியில் இயற்கையே இறுதியில் வெல்லும். பகுத்தறிவு என்பது சாத்தானின் கனி என்று நம்பப்பட்டது. இந்நம்பிக்கை எதிர் அறிவியல் புனைவை உருவாக்கியது. உலகின் முதல் அறிவயல் புனைவு என பரவலாக அறியப்படும் மேரி ஷெல்லியின் ஃபிராங்கைன்ஸ்டீன் ஒரு எதிர் அறிவியல் புனைவு என்பது சுவாரசியமான முரண். ஒரு செயற்கை மனிதனை உருவாக்கி அவனுக்கு உயிரளித்து அவன் பேரழிவை உருவாக்குவதையே ஃப்ராங்கின்ஸ்டீன் சொல்கிறது. அன்று தொடங்கி இன்று வந்திருக்கும் எந்திரன் வரை பல அறிவியல் புனைவு திரைப்படங்களின், கதைகளின் பொதுச்ச்சரடு இதுதான். மனிதன் உருவாக்கும் தொழில்நுட்பம் அவனுக்கு எதிராகவே திரும்புவது இறுதியில் இயற்கை வென்று சமநிலையை நிலைநிறுத்துவது. நெறி பிறழும் அசுரனை வதம் செய்ய அவதாரம் செய்யும் பரம்பொருள் மீண்டும் அறத்தை நிலைநாட்டுவது எனும் புராணக் கதையின் அதே வடிவம்தான். அறிவியல் புனைவுக்கும் எதிர் அறிவியல் புனைவுக்கும் இடையிலான வேறுபாடு என்பது அறிவியல் புனைவு அறிவியலின் மீது நன்னம்பிக்கை கொண்டது, அறிவியலால் தீர்க்க முடியாத சிக்கல் ஏதுமில்லை என கருதுவது, எதிர் அறிவியல் புனைவு இதற்கு நேர்மாறான திசையை தேர்கிறது. பதினேழாம் பதினெட்டாம் நூற்றாண்டு மிகுபுனைவு இலக்கியங்களில் விந்தையான இடங்களுக்கு பயணிப்பது ஒரு பொதுவான கருப்பொருள். ஜூல்ஸ் வேர்ன்ஸ் பூமியின் மையத்திற்கு பயணிப்பதை எழுதி இருப்பார். காலனியாதிக்க காலகட்டத்தில் ஐரோப்பா முழுவதும் பயணப் பித்து பீடித்தது. அறியா நிலங்களை, மனிதர்களை, புதிய கதைகளை தேடி அவர்கள் பயணித்தபடி இருந்தார்கள்.

அறிவியல் புனைவுகளுக்கு என சில இயல்புகளை அளிக்க முடியும். பொதுவாக புனைவிற்கு என விதிமுறை வகுக்கப்படுவதுண்டு. புனைவு ஒரு கருதுகோள் அல்லது கோட்பாடு அல்லது யோசனை சார்ந்து எழுதப்படக்கூடாது. ஆனால் அறிவியல் புனைவு எப்போதுமே ஒரு அற்புதமான யோசனையை முதலில் உருவாக்கிக்கொண்டு அதற்கேற்ப கதைகளை உருவாக்கிக்கொள்கிறது. முதன்மையாக அது ‘இப்படி நடந்தால் என்ன ஆகும்?’ எனும் கேள்வியை எழுப்புகிறது. எல்லாகாலத்து, எல்லா வகையான அறிவியல் புனைவுகளுக்குமான பொதுத்தன்மை என ஒன்றைக் குறிப்பிடலாம் என்றால் அது நம்மை வியப்புக்குள்ளாக்குவதை நோக்கமாக கொண்டிருக்கிறது. எனினும் ஒரு மேம்பட்ட அறிவியல் புனைவுக்கு பிளந்த வாயைக் கடந்து உள்ளத்தில் ஊடுருவும் ஆற்றல் இருக்க வேண்டும். வெறும் வியப்புடன் நிற்காமல் மானுட வாழ்வின் ஆதார கேள்விகளை நோக்கி அறிவியல் புனைவு பயணிக்கும்போது மகத்தான ஆக்கங்களை உருவாக்க முடியும். அறிவியல் புனைவு அறிவியல் ஆய்வுக்கட்டுரை அல்ல. நம்பகமான உலகத்தை உருவாக்கப் போதுமான அறிவியல் தகவல்களை எளிய மொழியில் கடத்தினால் போதும். அறிவியல் புனைவு வெற்றிபெற அதன் கதை மாந்தர்களோடு உணர்வுரீதியாக வாசகருக்கு பிணைப்பு ஏற்படவேண்டும். விமர்சகர்கள் அறிவியல் புனைவுக்கு இரண்டு இயல்புகளை வகுக்கிறார்கள். Cognitive estrangement- பரிச்சயமற்ற வினோத அந்நியத்தன்மையை அளிப்பது மற்றும் nouvvum என்று சொல்லக்கூடிய பிறிதொன்றில்லாத புதுமை. 

அறிவியல் புனைவில் கட்டற்ற புனைவுச் சுதந்திரம் உண்டுதான் ஆனால் வெறும் மிகு புனைவிலிருந்து அறிவியல் புனைவை பிரித்துகாட்டுவது ‘என்ன நிகழ்ந்தது என்பதையும் சொல்லி அது எப்படி நிகழ்ந்தது என்பதையும் அறிவியல்பூர்வமாக கோடிட்டு காண்பிக்க வேண்டும். அறிவியல் சாத்தியத்தை எடுத்துக்கொண்டு கற்பனையை பறக்க விடலாம். மனிதனின் மரபணு தொடர்ந்து பரிணாமம் அடைந்தபடி இருக்கிறது. நாம் பிழைகள் என வகுக்கும் மியுடேஷன் வழியாக அவை நிகழ்கிறது. இந்த ஒற்றைவரி அறிவியல் செய்தியைக்கொண்டு பல்வேறு சாத்தியங்களை எக்ஸ்.மென் படக்கதைகள் உருவாக்கிக் காட்டுவதை ஒரு உதாரணமாக கொள்ளலாம்.
அறிவியல் புனைவு மைய இலக்கியத்துடன் தொடர்பற்ற தனித்த வகைமாதிரியாக தனித்த வாசக பரப்பை கொண்டதாகவே திகழ்ந்து வந்தது. தொடக்ககாலத்தில் அறிவியல் புனைவுக்கென தனித்த இதழ்கள் வெளிவந்தன. ஹெச்.ஜி. வெல்ஸ்’ கால இயந்திரத்தை’ 1895 ஆம் ஆண்டு எழுதுகிறார். இன்று அறிவியல் நூல்களில் அதுவொரு செவ்வியல் முன்மாதிரியாக கருதப்படுகிறது. அதாவது ஐன்ஸ்டீனின் சார்பியல் கோட்பாடு உலகிற்கு தெரிவதற்கு முன்பே. ஒரு முன்மாதிரி கால இயந்திரத்தை உருவாக்கிக் காட்டுகிறார். அறிவியல் புனைவு வரலாற்றில் இது ஒரு பெரும் திறப்பு. அதுவரையில் புனைவில் காலத்தை கடக்க வேண்டும் என்றால் கனவின் வழி அதை நிகழ்த்தி காட்டுவதையே வாடிக்கையாக கொண்டிருந்தார்கள். கனவு அகவயமானது. இதற்கு மாற்றாக புறவயமாக வரலாறை நோக்கும், வேறு காலத்தில் பயணிக்கும் இயந்திரத்தை வெல்ஸ் உருவாக்கிக் காட்டியுள்ளார். சார்பியல் கோட்பாடும் குவாண்டம் இயற்பியலும் அறிவியல் புனைவின் பொற்காலத்தை தோற்றுவித்தன. இரண்டாம் உலகப்போர், குறிப்பாக அணுகுண்டு நிகழ்த்திய சேதம் அறிவியல் மீதிருந்த கண்மூடித்தனமான பற்றை கேள்விக்குள்ளாக்கியது. ஹிட்லர், முசோலினி, ஸ்டாலினின் எழுச்சிகள் முற்றாதிகாரம் குறித்த அச்சங்களை படைப்பாளிகளில் விதைத்தது. ஆல்டஸ் ஹக்ஸ்லி, ஜியார்ஜ் ஆர்வேல் போன்ற தீவிர இலக்கியவாதிகள் கட்டமைப்பு உடைதல் (dystopian) படைப்புகளை உருவாக்கத் தொடங்கினார்கள். மிகைல் புல்ககோவ் எழுதிய ‘heart of  a dog’ ஒரு சுவாரசியமான கற்பனை. மனிதனின் பிட்யுடரி சுரபியை நாய்க்கு பொருத்தும்போது ஏற்படும் அக மாற்றங்களை பேசுகிறது. எந்த தூய அறிவியல் புனைவைக் காட்டிலும் ஆர்வெல்லின் 1984 அபாரமான முன்னறிவிப்புகளை செய்திருக்கிறது என இன்று வாசிக்கும் ஒருவர் சிறிய துணுக்குறலுடன் அறிய முடியும். இரண்டாம் உலகப்போருக்கு பின்பான அறிவியல் புனைவுகள் நவீனத்துவ காலகட்டத்தை அடைகிறது என சொல்லலாம். அறிவியலின் அழிக்கும் ஆற்றல் பல்வேறு வகைமாதிரி கதைகளை உருவாக்கியது. பிலிப் கே. டிக், ரே பிராட்பரி போன்றவர்கள் இலக்கியவாதிகளின் வரிசையிலேயே இன்று நினைவுகூரப்படுகிறார்கள். அதிமானுட சாகச கதைகள் பின்னுக்கு சென்று சாமானியர்கள் எதிர்கொள்ளும் வாழ்வியல் சிக்கல்கள் அறிவியல் புனைவுகளில் பேசு பொருளாகின.

அறிவியல் புனைவுகளில் சில பொதுவான பேசு பொருட்களை காண முடியும். விந்தையான, அறிய முடியாதவற்றை நோக்கியே அறிவியல் புனைவு செயல்படும். காலம் அறிவியல் புனைவின் சாசுவதமான பேசுபொருட்களில் ஒன்று. காலத்தை வலைபப்து, அதை வெல்வது, அதில்  பயணிப்பது என அறிவியல் புனைவு காலத்துடன் ஊடாடியபடி இருக்கிறது. பூமிக்கு மேலே, பூமிக்கு வெளியே என்பது ஒரு முக்கிய கற்பனை. சொர்க்க நரகங்களை மதம் கற்பனை செய்தது என்றால் அறிவியல் புனைவு வேற்று கிரகங்களை நாகரீகத்தில் மனிதர்களை விடவும் கீழான வேற்றுகிரக வாசிகளை உருவாக்கி அவர்களை நாகரீகமற்ற முரடர்களாக சித்தரித்து காலனியாதிக்க கதையாடலின் நீட்சியை தொடக்க காலங்களில் உருவாக்கினார்கள். விநோதமானவை எல்லாம் ஆபத்தானவை ஆகவே அழித்தொழிக்கப்பட வேண்டியவை எனும் சிந்தனையோட்டம் புவியில் பேரழிவை ஏற்படுத்தியுள்ளது. சூழல் சமநிலையை வெகுவாக குலைத்தது. பிற்கால வேற்றுகிரக வாசிகளின் கதைகள் மனிதர்களை பலவீனர்களாக பாவிகளாக சித்தரித்தது. வாளெடுத்து நீதிகோர வரும் கிறிஸ்துவின் பிம்பம் கதைகளில் ஊடுருவியது. மீட்பரிடம் மன்னிப்பை கோரி உலகை நாயகர்கள் மீட்டார்கள். எம்.ஐ.பி, ஈ.டி போன்ற திரைப்படங்களில் வேற்றுகிரகவாசிகளின் சித்தரிப்பு சிக்கலான தளங்களை நோக்கி பயணித்தது. அறிவியல் புனைவின் இந்த கிரகங்களுக்கு இடையேயான மோதல் என்பது காலனிய காலங்களில் நிகழ்ந்த நாகரீகங்களுக்கு இடையேயான, பண்பாடுகளுக்கு இடையேயான மோதல்களின் நீட்சியாய் உருக்கொள்கிறது.

அறிவியல் புனைவு காலத்தில் மிகவும் செல்வாக்கு செலுத்தக்கூடிய அடுத்த பேசு பொருள் இயந்திரங்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவு. டெட் சியாங்கின் ‘lifecycle of software objets’ அவ்வகையில் அபாரமான பாய்ச்சல். கணினி விளையாட்டிற்குள் உருவாகிவரும் பாத்திரங்களை கொண்டு உயிர் என்றால் என்ன எனும் கேள்வியை நோக்கி சென்றிருப்பார். மேற்கத்திய அறிவியல் புனைவு ஆசிரியர்கள் ஒருவகை என்றால் கீழைத்திய புனைவாசிரியர்கள் இந்திய மனதிற்கு நெருக்கமானவர்கள். டெட் சியாங், கென் லியு, சிக்சின் லியு, சார்லஸ் யு போன்றவர்கள் அவ்வகையில் நாம் வாசிக்க வேண்டியவர்கள். அறிவியலையும் கீழைத்திய ஆன்மீகத்தையும் ஒருங்கிணைக்கும் புள்ளிகளை கதைகளாக்கியவர்கள். செயற்கை நுண்ணறிவு சார்ந்த கதைகளில் மானுட மேலாதிக்கம் மற்றும் விடுதலை பேசுபொருள் ஆகிறது. Cli-fi என்று சொல்லக்கூடிய சூழலியல் மாற்றங்கள், குறிப்பாக பருவநிலை மாற்றங்கள் கொண்டுவரும் சிக்கல்களை பேசும் புனைவுகள் இன்று வளர்ந்து வருகின்றன. வெறும் அச்சுறுத்தலை கடந்து வேறு தளங்களுக்கு இக்கதைகள் பயணிக்க வேண்டும். ராபின்சனின் நியுயார்க் 2140 நீரில் பாதி மூழ்கிய வாழ்வில் மனிதர்கள் வாழ பழகுவதை கற்பனை செய்வதாக விமர்சக கட்டுரை குறிப்பிடுகிறது. அழிவிற்கு பின்னர் எஞ்சியிருப்பவர்களின் வாழ்க்கை பற்றிய கற்பனை ‘பேரழிவுக்கு பின்’ வகை அறிவியல் புனைவுகளை உருவாக்குகிறது. இதன் தொல்படிமம் நோவாவின் கப்பல்தான். மிகச் சிறிய குழுவிலிருந்து உலகை உருவாக்க முனைகிறார்கள். அங்கு நிலவும் அதிகார போட்டிகள், வளங்களை பங்கிடுதலில் உள்ள அநீதியான முறைமைகள் என இவைப் பேசப்படுகின்றன. இது அணு ஆயுத  அழிவு போன்ற மனிதன் உண்டாக்கிய அழிவிற்கு பின்னரும் இருக்கலாம் அல்லது இயற்கையின் ஆற்றல் பெருகி அழித்ததாகவும் இருக்கலாம். மரபணு மாற்றம், உயிரிதொழில்நுட்பம், கிருமிகள் மற்றொரு பேசுபொருள். பரிணாமவியல் சார்ந்த அடிப்படைகளைக்கொண்டு படைப்புகளை உருவாக்க முடியும். வருங்கால மனிதன் பற்றிய கற்பனைகளை தொடர்ந்து எழுதி வருகிறார்கள். அவனுடைய மூளை செயல்திறன், கூட்டு நனவிலி, டெலிபதி, பிரக்ஞையின் வெளி சார்ந்து கதைகள் எழுதப்படுகின்றன. சமூகவியல் நோக்கில் பால் அடையாளங்கள் அறிவியல் புனைவு அளவிற்கு வேறு எதிலும் கேள்விக்குள்ளாக்கப்படவில்லை. பல்வேறு சாத்தியங்கள் முயன்று பார்க்கப்பட்டுள்ளன.  

தமிழில் என்னவிதமான அறிவியல் புனைவுகள் உருவாகியுள்ளன? கால சுப்பிரமணியம் மொழியாக்கம் செய்து தொகுத்திருக்கும் ‘காலமே வெளி’ ரே பிராட்பரி, ஆல்பர்ட் பெஸ்ட் போன்ற எழுத்தாளர்களை தமிழுக்கு அறிமுகம் செய்யும் மிகமுக்கிய தொகுப்பு. ந. பிச்சமூர்த்தி கூட ஒரு இயந்திர மனிதன் பற்றிய கதையை எழுதி இருக்கிறார். சுஜாதா ஒரு தொடக்கத்தை அளித்தார். அறிவியல் புனைவு அளிக்கும் வியப்பு அம்சத்தை அவருடைய என் இனிய இயந்திரா, மீண்டும் ஜீனோ போன்றவை நிச்சயமாக அளித்தன. ஆர்னிகா நாசர் போன்றோர் அறிவியல் புனைவுகளை எழுதி வருகிறார்கள்.  ஜெயமோகனின் விசும்பு தொகுதி தமிழில் குறிப்பிடத்தக்க அறிவியல் புனைவு தொகைநூல்.. ‘விசும்பை’ சூழலியல் அறி புனைவாக வகைப்படுத்தலாம். ‘உற்றுநோக்கும் பறவை’ உளவியல் மற்றும் பிரக்ஞை தளத்தில் எழுதப்பட்ட மிகச்சிறந்த கதைகளில் ஒன்று. டெட் சியாங் கீழை ஆன்மீக மரபை அறிவியலுடன் இணைத்து உருவாக்க முயன்ற வெளியின் முதல் வடிவம் ஜெயமோகனின் விசும்பு தொகுதியின் வழியாகவே தமிழில் சாத்தியமாகியது. ‘நாக்கு’ ‘ஐந்தாம் மருந்து’ போன்ற கதைகள் பரிணாமவியலை அடிப்படையாகக் கொண்டவை.

சுதாகர் கஸ்தூரி அறிவியல் புனைவு நாவல்களை எழுதியுள்ளார்.சந்தோஷ் நாராயண் அஞ்ஞான சிறுகதைகள் எனும் தொகுப்பை கொண்டு வந்துள்ளார். இவைத் தவிர்த்து சுனில் கிருஷ்ணனின் ‘திமிங்கிலம்’ ஜீவ கரிகாலனின் ‘கிளவுட் வார்’ பற்றிய கதை, சித்திரனின் ‘விசும்பின் மொழி’ சித்துராஜ் பொன்ராஜின் ‘மீன்முள் கட்டுமானம்’ அனோஜனின் ‘சிவப்பு மழை’ போன்ற கதைகளை குறிப்பிடத்தக்க முயற்சிகள் என அடையாளப்படுத்தலாம். இந்த பின்புலத்தில் தான் அரூவின் அறிவியல் புனைவு போட்டியையும் அதில் தேர்வான கதைகளின் முக்கியத்துவத்தையும் கவனிக்க வேண்டும்.       

2   
பரிசுக்குரிய கதைகள் மூன்றுமே மிகச்சிறப்பான கதைகள். ஆழமும் செறிவும் பலதள வாசிப்பும் அளிப்பவை. அவைத் தவிர்த்து ‘நிறமாலைமானி’  ‘அவன்’ ‘மூக்குத்துறவு’ ‘மின்னெச்சம்’ஆகிய கதைகளும் மிக நல்ல கதைகள் தான். எல்லா கதைகளும் முழுமையானவையா என்றால், இல்லை என்றே சொல்வேன். முன்னரே கூறியதுபோல் ஆச்சரியத்திற்கு அப்பால் அறிவியல் புனைவு ஆழமான கேள்விகளையும் எழுப்ப வேண்டும் என்பது ஒரு எதிர்பார்ப்பு. மற்றொன்று ஒரு கதை தனக்கான விளக்கத்தை அதனுள்ளேயே கொண்டிருக்க வேண்டும். கதையை விளங்கிக்கொள்ள வெளித்தரவுகளை நாடக்கூடாது. மூன்றாவதாக, வாசகரின் மீதான அவநம்பிக்கையால் கோட்பாடை தேவைக்கு அதிகமாக விளக்க வேண்டியதில்லை. கோட்பாடு எந்த அளவிற்கு தேவையோ அந்த அளவிற்கு பேசப்பட்டால் போதும். அதன் விளைவுகளையும், அது சார்ந்த கேள்விகளையும் தான் அறிவியல் புனைவு எழுப்புகிறது.

‘ பல்கலனும் யாம் அணிவோம்’, ‘யாமத்தும் யாமே உளேன்’ ‘ம்’ ‘மின்னெச்சம்’ ஆகிய கதைகளில் ஒரு பொதுச்சரடை கண்டுகொள்ள முடிகிறது. இவையாவும் மானுட இருப்பை உடலை கடந்த ஒன்றாக ஆக்க முடியும் எனும் கருத்தை முன்வைக்கின்றன. உடலை கடப்பதும், மரணமற்ற பெருவாழ்வும் மனிதர்களுக்கு எப்போதுமிருக்கும் ஆர்வம்தான். எனினும் இக்காலக்கட்டத்தில் இந்த கேள்வியின் பெருக்கம் ஆய்வுக்கு உட்படுத்தவேண்டிய ஒன்று. நவீன வாழ்வின் அர்த்தமின்மையின் உபவிளைவுதான் இந்த உடலை துறக்கும் விழைவா என்றொரு கேள்வி எழுகிறது. மற்றுமொரு பொதுச்ச்சரடு இந்த கதைகள் யாவும் மானுட பிரக்ஞை, நனவிலி குறித்த தேடலை கொண்டுள்ளன. நரம்பியல், மூளை சார்ந்த சிந்தனைகளை முன்வைக்கின்றன. ஒருவகையில் யுங், ஆலிவர் சாக்ஸ் மற்றும் வி.எஸ்.ராமச்சந்திரனின் தாக்கத்தை தமிழ் அறிவியல் புனைவுலகில் திண்ணமாக உணர முடிகிறது என்றே தோன்றுகிறது.  

இப்போட்டியில் முதல் பரிசு பெற்ற ரா. கிரிதரனின் ‘பல்கலனும் யாம் அணிவோம்’ தமிழில்  எழுதப்பட்டுள்ள மிகச்சிறந்த அறிவியல் புனைவுகளில் ஒன்று என தயங்காமல் சொல்வேன். அசலான இந்திய சிந்தனைகளை அறிவியலுடன் இணைத்து இக்கதையை உருவாக்கியிருக்கிறார். மனிதனின் ஒரு பகுதி இயந்திரமாக மாறுவது அறிவியல் புனைவில் தொடர்ந்து பேசப்படும் ஒன்றுதான். இத்தகைய உயிரிகளை ‘சைபார்க்’ என்றழைப்பார்கள். சைபார்க் ஒரு அதிமானுடன். மனிதனின் புலன் மற்றும் செயல் எல்லையை அவனுடன் இயைந்து பொருந்தும் இயந்திரத்தின் துணைக்கொண்டு கடப்பவன். சைபார்க் பற்றிய கதைக்கு திருப்பாவையிலிருந்து ‘பலகலனும் யாம் அணிவோம்’ என தலைப்பிட்டிருக்கிறார். பிரக்ஞை மற்றும் நனவிலி சார்ந்த விவாதத்தின்போது நம்மாழ்வாரின் கதை சொல்லப்படுகிறது. கதைகளமே கடற்கோளில் இந்தியாவை விட்டு தனித்துண்டாக உருவாகி இருக்கும் புதிய மதுரையில் தான் நிகழ்கிறது. கதைசொல்லியான சைபோர்கின் பெயர் ஜனனி. அவள் அன்னையாகிறாள். தான்  நேசிக்கும் தம்பி விநாசை தனது பிரக்ஞையின் ஒரு பகுதியாகவே ஆக்கிக்கொள்கிறாள். புதிய மதுரையில் இயந்திரம்- மனிதன் கூட்டு செயல்பாடு ஆய்வு நிறுவனத்திற்கு தளையசிங்கத்தின் பெயரிடப்பட்டுள்ளது. ஒரு பக்கம் மனித மனதை, பிரக்ஞையை அதன் நனவிலியை ஆல்பாக்கள் நகலெடுக்க முடியாமல் திணறுகிறது. மனிதனாக இருப்பது என்றால் என்ன எனும் ஆதார கேள்வியை, மனிதனின் தனித்துவத்தை வரையறை செய்ய முயல்கிறது. மற்றொரு தளத்தில் இது எப்படி தொழில்நுட்ப மேலாதிக்கத்தை கொணரும் பணிவான சர்வாதிகாரத்திற்கு இட்டுச்செல்லும் என விரிகிறது. இது வெறும் கருத்துகளாக, கோட்பாடுகளாக சுருங்காமல் காப்பது ஜனனிக்கும் வளர்ச்சி குன்றிய அவளுடைய தம்பி வினாசுக்கும் இடையிலான உணர்வுரீதியான பிணைப்புதான். இந்தக் கதையே டெட் சியாங்கின் கதையுலகிற்கு மிக நெருக்கமாக இந்திய மெய்யியலையும் அறிவியலையும் இணைக்கும் வகையில் உருவாகியுள்ளது. பல தளங்களையும் அடுக்குகளையும் கொண்டிருக்கிறது.

சுசித்ராவின் ‘யாமத்தும் யானே உளேன்’ ஒரு திருக்குறள் வரி. கதைக்கு கச்சிதமாக பொருந்திவருகிறது. ஒருவகையில் இதை பேரழிவுக்கு பின்பான அறிபுனைவு என வகைப்படுத்தலாம். அழிந்து கொண்டிருக்கும் பூமியை விண்கலத்திலிருந்து பார்க்கிறார்கள். இக்கதையும் பல தளங்களை கொண்ட செறிவான கதை தான். இயந்திர மனிதன், செயற்கை நுண்ணறிவு கொண்டு மனிதனாக இருப்பதன் சாத்தியத்தை, எல்லைகளை, இயல்புகளை பற்றி விசாரணை செய்கிறது. கௌதமனுக்கும் அன்னைக்கும் இடையிலான உணர்வுரீதியான பிணைப்பு கதையை வலுப்படுத்துகிறது. பதின்மத்தின் பெற்றோர் பிள்ளை உறவுச்சிக்களையும் ஒரு சரடாக கொண்டிருக்கிறது. கதைக்குள் கர்ணனின் கதை சொல்லப்படுகிறது. கதைகளால் ஆன பிரபஞ்சம் உருவகிக்கப்படுகிறது. மேற்கத்திய தொன்மத்தில் ‘ஜீனியஸ்’ என்பது ஒரு சுவாரசியமான தொன்மம். படைபூக்கத்தை அளிப்பது ஜீனியஸ் எனும் இறக்கைகொண்ட புலனுக்கு அகப்படாத உயிர் என்றே நம்பப்படுகிறது. மனிதன் ஜீனியசின் கருவியாக கலையை வெளிப்படுத்துகிறான். உருவமற்ற கௌதமன் கதைகளை நமக்கு கொண்டு சேர்க்கிறான்.

நகுல்வசனின் ‘கடவுளும் கேண்டியும்’ நரம்பியல்- பிரக்ஞை சார்ந்து செயற்கை நுண்ணறிவு தளத்தில் நிகழும் கதை. இந்தக் கதையின் படைப்பூக்கம் என்பது புதுமைப்பித்தனின் ‘கடவுளும் கந்தசாமியும்’ கதையை அடித்தளமாகக் கொண்டு தற்காலத்தில் அதை மீள் நிகழ்த்தி ஒருவித காலாதீதத் தன்மையை அளிப்பது. அறிவியல் புனைவுகளில் இந்தக் கதையில் உள்ள ‘ஸ்மார்ட் மங்கியை’ போல அதிசெயல்திறன் கணினிகள் உலவுவது வழக்கம். எல்லாவற்றையும் கணினியால் வகுத்துவிட முடியாது, அப்படி முடிந்தால் மனிதனின் தனித்தன்மைக்கும் இருப்பிற்கும் என்ன பொருள் எனும் தரப்பிற்கும் வகுத்துவிட முடியும் என நம்பும் தரப்பிற்குமான உரையாடலும் கூட. கடவுள் படைத்தான் என்பதற்கும் கடவுளை படைத்தான் என்பதற்கும் இடையிலான முரணும் கூட கதையின் பேசுபொருள் ஆகிறது.

ரூபியா ரிஷியின் ‘மின்னெச்சம்’ சுவாரசியமான கற்பனை. உடலை துறந்து மரணத்திற்கு பின் தேவையான நினைவுகளை மட்டும் கொண்ட அழிவற்ற வாழ்வு வாழ்வதை கற்பனை செய்கிறது.. செயற்கை நுண்ணறிவு இதற்கு உதவுகிறது. சாகாவான் எனும் செயல்திட்டத்திற்காக தன்னையே பலிகொடுக்கிறான் பார்த்திபன். அவன் எதை விழைந்தானோ அது தலைகீழாகிறது. சாகாவரத்தை மறுக்கிறான். பலகுரல் தன்மை கொண்ட இக்கதையின் மொழி மிகவும் கவித்துவமானது. செறிவான வாசிப்பனுபவத்தை அளித்தது.

கிரிதரன் கவிராஜாவின் ‘ம்’ அறிவியல் புலத்தில் நிகழும், நெடிய தன்னுரையாடல் கொண்ட ஆன்மீக கதை என சொல்லலாம். இந்திய மரபில் உள்ள லய யோகம் பிரபஞ்சத்தின் மூல ஒலியாக ஓம்காரத்தை முன்வைக்கிறது. அதிலிருந்தே பிரபஞ்சம் உருவாகிறது எனும் நம்பிக்கை. இக்கதையில் அறிவியல் அம்சம் குறைவாகவும் ஆன்மீக அம்சம் கூடுதலாகவும் உள்ளது. பேரூரு கொள்ளல் அணுவளவு குறைதல் போன்ற சித்தர் மரபில் உள்ள அட்டமா சித்திகளை ஒத்த அனுபவங்களை கதைசொல்லி அடைகிறான். உடலற்ற இருப்பு நிலையை அடைகிறான்.

தன்ராஜ் மணியின் ‘அவன்’ ஒரு நரம்பியல்- பிரக்ஞை தளம் சார்ந்த கதை. மிர்ரர் நியுரான் சார்ந்த கருத்தை அவரால் எளிதாக புரியும்படி விளக்க முடிகிறது. நம் தகவல்கள் சேகரிக்கப் படுகின்றன. சமூக ஊடகங்களில் நமக்குரிய தேடல்கள் சார்ந்த விளம்பரங்களை காண முடிகிறது. மனிதனை முழுமையாக கண்காணிக்கும்போது அவனுடைய நடத்தையை வரையறை செய்துவிட முடியும் எனும் நம்பிக்கையை இக்கதை பேசுகிறது. அண்மையில் பொருளாதாரத்தில் நோபல் கிடைத்தது ‘நடத்தையியல் பொருளியலுக்கு’தான். மனித நடத்தையை குறிப்பிட்டவகையில் தூண்டி அவனை விரும்பும் வகையில் வழிநடத்தமுடியும் என்கிறது. இந்த சிந்தனைகளைத்தான் தன்ராஜ் மணி 2080 ஆம் ஆண்டு குற்ற புலனாய்வுக்கு பயன்படும் ஆய்வு பின்புல கதைக்கு பயன்படுத்திக்கொண்டிருக்கிறார். கதை இறுதியில் இலெனின் இலன் உளெனின் உளன் எனும் இடத்திற்கு செல்வது சுவாரசியமான வாசிப்பை அளிக்கிறது.

விஷ்ணுகுமாரின் ‘நிறமாலைமானி’ முற்றிலும் வேறுவகையான அறிவியல் புனைவு என சொல்லலாம். புதிய கருவிகளோ, புதிய கோட்பாடுகளோ அற்ற, வருங்காலம் சார்ந்ததாக இல்லாமல் அறிவியல் புனைவு எழுதுவது சாத்தியமா எனும் கேள்விக்கு விஷ்ணுகுமாரின் கதை விடையளித்திருக்கிறது. நிறமாலைமானி என நாமறிந்த கருவியைக்கொண்டு நிகழ்காலத்தில் கதையை எழுதி இருக்கிறார். மாலீக்யுளர் ஸ்பெக்ட்ரோஸ்கோபி பற்றிய அடிப்படை அறிந்தவர்களுக்கு கதை மேலதிகமாக திறக்கக்கூடும். (இது குறித்து அவரிடம் நேரடியாக விளக்கம் கேட்டு அறிந்துகொண்டேன்). பிரியத்தின் பித்து தான் நிறமாலைமானி. விஷ்ணுகுமாரின் கதை ஒருவகையில் அபத்தத்தை முன்வைக்கும் காஃப்காத்தனமான கதை என சொல்லலாம்.

கமலகண்ணனின் ‘கோதார்த்தின் குறிப்பேடு’ உளவியல் கதை. கோதார்த் பத்தொன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்த உளவியல் ஆய்வாளர். உயிருடன் இருக்கும்போதே தான் உயிர்வாழ்கிறேன் என்பதை மறுக்கும் உளவியல் சிக்கலுக்கு கோதார்த்த் மனமயக்கு என்று பெயர். ராம்சேயின் கதையை நம்மால் இந்த விளக்கத்தை மனதில் கொண்டால் புரிந்துகொள்ள முடியும். ஒரு அசல் ஆளுமை அவருடைய கண்டடைதலை அறிந்த கனத்தை புனைவாக்க முயன்றுள்ளார் கமலக்கண்ணன். கோதார்த் யார் என கதைக்கு வெளியே தேடி அறிந்துகொண்டால் இக்கதை சரியாக வாசகருடன் தொடர்புறும்.

பாலமுருகனின் மூக்குத் துறப்பு இந்த தொகுதியில் வந்துள்ள மிகச்சிறந்த டிஸ்டோபிய கதை. பருவநிலை/ சூழலியல் புனைவு என்றும் சொல்லலாம். காற்றுமாசுபடுகிறது. சுவாசிக்கும் பிராணவாயு குறைகிறது எனும் ஒற்றைவரியைக்கொண்டு கதையை பின்னி செல்கிறார். இந்திய யோக மரபில் மூச்சிற்கும் ஆயுளுக்கும் நேரடி தொடர்பு உள்ளதாக அறிவுறுத்தப்படுகிறது.. அந்தக் கூற்றையே நவீன முறையில் பாலமுருகன் இக்கதையில் கையாள்கிறார்.  சாகாக்கலை என பலதளங்களை தொட்டுச் செல்கிறார். டிஸ்டோபிய கதைகள் அரசியல் உள்ளடக்கத்தை கொண்டிருப்பவை. அரசின்மைவாதத்தை பேசுபவை. இந்த இயல்புகள் பாலமுருகனின் கதைகளுக்கும் பொருந்தி வருகிறது.

அஜீக்கின் தியானி- கிபி 2500 வருங்காலத்தில் உலகம் முழுக்க டிஜிட்டல் மயமானதும் கையால் எழுதுவதே இல்லாத, தாள்களோ மையோ அல்லாத சூழலை கற்பனை செய்கிறது. இந்தசூசல் வெகு தொலைவில் இல்லை என்றே தோன்றுகிறது. டிஜிட்டல் யுகத்தில் எழுதும் பயிற்சி என்பது தியானத்தில் சேர்ந்ததாக கருதப்படுவது சுவாரசியமான கற்பனை.
பலகதைகளிலும் மரபு ஒரு தளத்தில் கதையை ஊடறுப்பது சுவாரசியமான பொதுத்தன்மை. மேற்கத்திய கிழக்கத்திய அறிவியல் புனைவுகள் வேறுமாதிரியானவை. இந்திய/ தமிழ் அறிவியல் புனைவு கிழக்கத்திய அறிவியல் புனைவின் திசையையே சரியாக தேர்கிறது என்பதற்கு இத்தொகுதி ஒரு சான்று. இத்தொகுதியின் முக்கியத்துவத்தை இப்போது நாம் உணராமல் இருக்கக்கூடும். என்னைப்பொறுத்தவரை தமிழ் நவீன இலக்கிய வரலாறில் ஒரு மைல்கல் தொகுப்பாகவே இத்தொகுதி நினைவுக்கூரப்படும் என நம்புகிறேன். பரிசுபெற்ற, தேர்வான,, எழுதிய அனைத்து சக எழுத்தாள நண்பர்களுக்கும் நன்றிகளும் வாழ்த்துக்களும். அரு தொடர்ந்து முனைப்புடன் செயல்பட்டு தமிழில் இவ்வகை எழுத்துக்களுக்கு தளம் அமைத்து கொடுக்க வேண்டும்
சுனில் கிருஷ்ணன்
26-12-19



.    


19 Jan 2020

பஷீருக்கு ஆயிரம் வேலைகள் தெரியும் - இளங்கோ கிருஷ்ணன்





பொதுவாக ஆம்னிபஸ் தளம் புத்தகங்களை வாசிக்க நம்மவர்களை ஊக்குவிக்கும் ஒரு தளமே. இங்கே இருக்கும்  சுமார் ஐநூறு புத்தக மதிப்புரைகளில்  தேடோ தேடென்று தேடினாலும் ஒன்றோ அல்லது இரண்டோ மட்டுமே எதிர்மறை விமர்சனங்கள் தேறும். வாசிப்பு  தேய்ந்து வருகிறது என்கிற குற்றச்சாட்டுகள் பரவலாகி வரும் இவ்வேளையில், புத்தகம் வாசிக்க விழையும் அன்பர்களை மேலும்  பதறடித்து ஓட வைக்கும் வேலையை நாம் பார்க்க வேண்டாம் என்பதே ஆம்னிபஸ் தோழர்களின் ஒத்த கருத்துக்கள் சிலவற்றுள் பிரதான கருத்து.

நிற்க, இதையெல்லாம் இப்படி நான் முன்னோட்டமாகச் சொல்ல ஏதும் காரணம் உளது எனின் உளது. இல்லை எனின் இல்லை.

நேற்று சென்னை புத்தக விழாவிற்கு சென்று ஒரு பதினைந்து புத்தகங்களை அள்ளி வந்தேன். அள்ளி வந்தவைகளில் வாசிக்க நான் முதலில் கையில் எடுத்தது இந்தப் புத்தகமே. நண்பர்கள் தந்த பத்து புத்தகங்களின் பரிந்துரைப் பட்டியலை வாட்ஸாப்பில் வைத்துக் கொண்டு அங்கே கடைகடையாக ஏறி இறங்கிக் கொண்டிருந்தேன். பரிந்துரைகளுள் இந்தப் புத்தகமும் இருந்தது.  "யாவரும்" பதிப்பகத்தில் இந்தப் புத்தகத்தை மட்டும் ஏனோ தலைகீழாய் வைத்திருந்தனர்.  புத்தகம் தேடித் கொண்டிருந்த என் கண்ணுக்கு இரண்டரை அடி தூரத்திலேயே புத்தகம் இருந்தும் தென்படவில்லை. "யாவரும்" பதிப்பகத்தில் எல்லா புத்தகங்களையும் வாசிக்கவும் செய்யும் ஒரு அண்ணன், "அந்தா உங்க கண்ணெதிர்லயே இருக்கேத்தா", எடுத்துத் தந்தே விட்டார்.

கவிஞர் இளங்கோ கிருஷ்ணனின் மூன்றாவது கவிதைத் தொகுப்பு இது.

"கவிதை என்றால் என்னவென்று இப்போது வரை எனக்குப் புரியவே இல்லை. எது நல்ல கவிதை?' என்பன போன்ற திரேதா யுகத்து அனும வாலை அகற்றும் வலிமையும் என் சிற்றறிவுக்கு இல்லை", 

என்று கவிதை நூலின் முன்னுரையிலேயே கையை உயர்த்தி விடுகிறார் கவிஞர். அதாவது கல்யாணத்திற்கு முந்தின நாள் வடவிந்தியர்கள் மாப்பிள்ளையை, தப்பிச்சு போயிடுடா மாப்பு, என்று குதிரை ஏற்றி விடுவர், அப்படி.

சரி, அது ஒருபுறம் இருக்கட்டும். எது நல்ல கவிதை என்று என்னைக் கேட்டால் நான் என்ன சொல்வேன்? It depends என்பதுதான் என் பதில். வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் நல்ல கவிதைகளை  அளவிட நான் வெவ்வேறு அளவுகோல்களை வைத்து இருந்திருக்கிறேன்.


"ஆடிக்குப் பின்
ஒரு ஆவணி;
என்
தாடிக்குப் பின்
ஒரு தாவணி"

விடலைப் பருவத்தில் கவிதை என்பதற்கு இது போதும் என்று நினைத்ததுண்டு.

கொஞ்சம் விவரம் தெரிந்த விடலை ஆன பொழுதினில்:

இமைப்பொழுது அறிமுகத்தில்
இதயத்தை ஈதல்
விரகமெனும் நரகத்தில்
அனுதினமும் நோதல்

இரவெல்லாம் தூங்கிடாமல்
இணையின் பெயர் ஓதல்
பற்றி எறியும் நினைவுத்தீயில்
பற்றுடனே தீதல்

பூவுக்குத் தவமிருந்து
சருகாகிப் போதல்
தவங்கள் செய்து செய்து
தவணை முறையில் சாதல்

இவ்வுலகில் இவற்றுக்கெல்லாம்
இன்னொரு பெயர் காதல்.
(.சரவணன் - விகடன் பவளவிழா கவிதைப் போட்டி)

இது போன்ற கவிதைகள் போதுமாய் இருந்தன.

பின்னர் வாசித்தவைகள் நா.முத்துக்குமாரின் சில கவிதைத் தொகுப்புகள் மட்டும் எனலாம்.

இணையம் வந்து வாசிக்கத்  துவங்கியதும் இங்கே புழங்கும் பலர் போல் நமக்கும் கவிதை ஒவ்வாமை ஏற்பட்டது என்னவோ உண்மைதான்.

"உன்னைப் பத்தியே பேசிட்டு இருந்தா? கவிதை நூல் பத்தி சொல்லு", எனும் உங்கள் உட்குரல் கேட்கிறது. இன்னும் இரண்டே உதாரணங்கள் மட்டுமே. முடித்து விடுகிறேன்.

என்னதான் ஆசான் என்றாலும் அவருக்கு மிகவும் உவப்பான தேவதேவன் கவிதைகளும் எனக்குப் பிடிபடவில்லை.
ஆனால் இது அப்படியில்லை-

ஈரமற்ற இரும்பு
----------------------------

நீளமான முகம்
முகம் முழுக்கக் கண்கள்
கண்முழுக்கத் தூக்கம்.

ஒளிக்க ஒளிக்க
ஓயாமல்
எட்டிப் பார்த்து இளிக்கிறது
இன்னமும் பிரித்துக் கட்டப்படாத மஞ்சள் கயிறு

ஈரமற்று,
எல்லோரையும் போல் அவளையும்
நகர எல்லையைத் தாண்டி
தரதரவென இழுத்துச் செல்கிறது
மின்சாரக்கம்பியில்
மாட்டிக் கொண்டிருக்கும் ரயில்.
(மாமல்லன்)

இதுபோன்ற நிஜ தரிசனக் கவிதைகள் எப்போதும் என் விருப்பப் பட்டியலில் உள்ளன.

மிகச் சமீபத்தில் மிகமிக ரசித்து வாசித்தது பிரான்சிஸ் கிருபாவின் "ஞாயிற்றுக்கிழமைகளில் டீச்சராகும் சிறுமி".

ஆக; கவிதை என்பது என்ன, நல்ல கவிதைக்கான அளவீடுகள் என்னென்ன என்பது ஆளுக்கு ஆள் என்றில்லாமல் - ஒரே ஆளுக்கு வெவ்வேறு காலகட்டத்தில் வெவ்வேறாகவும் இருந்து தீர்க்கிறது.

சரி, இந்தக் கவிதைத் தொகுப்பிற்கு வருவோம்:

இந்தக் கவிதைத் தொகுப்பை வாசிப்பதற்காக உங்களது அலுவலகத்துக்கு ஒரு நாள் விடுப்பு எடுத்தால், ஆதார் கார்டுக்கு புகைப்படம் எடுப்பதை ஒரு நாள் தள்ளி வைத்தால்;  இந்தக் கவிதைகளின் வாசகனாக நான் மகிழ்வேன்

புத்தகத்தைப் பற்றி இப்படி ஒரு பின்னட்டைக் குறிப்பைத் தருகிறார் கவிஞர் வெய்யில்.

நான் இந்தப் புத்தகத்தைக் கையில் எடுத்தது சனிக்கிழமையான வாரயிறுதி விடுமுறை நாள் ஆகிவிட்ட படியாலும்; மேலும் நான் ஆதார் கார்டு வாங்கி வைத்தும் கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகள் ஆகிவிட்டதாலும் வாசகர் வெய்யில் நம்மை மன்னிப்பார் என்றே தோன்றுகிறது.

ஆனால்,

எதைக் கேட்டாலும் உருளைக்கிழங்குகளையே தரும் கடவுளை பற்றி ஒருமுறை சொன்னேன் நினைவுள்ளதா நேற்று ஒரு சமையல் கலைஞரை சந்தித்தேன் (அவரேதான் உருளைக்கிழங்கு பொடிமாஸ் கவிதையின் நாயகனேதான்) நான் மிகுந்த பசியோடு இரண்டு இட்லிகள் கேட்டேன் அவர் உருளைக்கிழங்கு குருமாவை ஊற்றினார் இட்லி வேண்டும் என்றேன் மேலும் கொஞ்சம் குருமா ஊற்றினார் கடும்பசியில் அதைக் குடித்துவிட்டு ஐயா இட்லி வேண்டும் என்றேன் மேலும் கொஞ்சம் குருமா ஊற்றினார் குருமா போதும் இட்லி வேண்டும் என்றேன் மேலும் கொஞ்சம் குருமா ஊற்றினார் உனக்கு அறிவில்லையா முட்டாளே என்றேன் மேலும் கொஞ்சம் குருமா ஊற்றினார் பளார் என்று அறைவிட்டேன் மேலும் கொஞ்சம் குருமா ஊற்றினார் கோபத்தில் காறி உமிழ்ந்தேன் மேலும் கொஞ்சம் குருமா ஊற்றினார் சோர்ந்து போய் கெஞ்சத் தொடங்கினேன் மேலும் கொஞ்சம் குருமா ஊற்றினார் ஏதோ புரிவது போல் இருந்தது ஆனந்தம் பெருக்கெடுக்க நன்றி நன்றி என்று வணங்கினேன் மேலும் கொஞ்சம் குருமா ஊற்றினார்

இப்படிப்பட்ட ஒரு வார்த்தைக் கூட்டத்தை, ஒரு இருபத்தியாறு என்ட்டர்கள் அடித்துக் கவிதை எனும் தோரணையில் கொடுத்திருந்ததை, எந்த வகையினது இது என்று புரிந்து கொள்ள இயலாதவனாக நான் என்னை உருவாக்கி வைத்திருப்பதைக் கவிஞர் வெய்யில் எப்படி மன்னிப்பார் என்றுதான் எனக்குப் புரியவில்லை. 


Related Posts Plugin for WordPress, Blogger...