’இந்நூலைத் தொடுபவன் என்னைத் தொடுகிறான்’ என்றார் ஓர் எழுத்தாளர் . இச்சிறு நூலைப் பற்றி அதைச் சொல்லத் துணிவேன் - முன்னுரையில் ஜெயமோகன்நனவிடைதோய்தல் என்ற வார்த்தையை சில மாதங்களுக்கு முன்புதான் கேள்வியுற்றேன். Nostolgia என்பார்கள் ஆங்கிலத்தில். பழைய நினைவுகளை அல்லது அனுபவங்களை அசைபோடுதல். சினிமாவில் கொசுவத்தி சுழற்றுவார்கள். தூர்தர்ஷனில் மலரும் நினைவுகள் என்று சொல்லுவார்கள். பொதுஜன உதாரணம் என்றால் சுஜாதாவின் ”ஸ்ரீரங்கத்துத் தேவதைகள்” ஒரு நல்ல உதாரணமாகச் சொல்லலாம்.
நனவிடைதோய்தல் எழுதுதல் தனிக்கலை. அது எல்லோருக்கும் நன்றாக வாய்த்துவிடுவதில்லை. இது எல்லோருக்கும் சாத்தியம்தான். எழுத்து சாத்தியப்படுபவனுக்கு மட்டும் தனிரூட்டிலா வாழ்க்கை நடக்கிறது? தத்தமது தோழமை வட்டத்தில் விழிவிரியப் பகிருவதுடன் நிறைந்து போகின்றது இங்கே பலரது நனவிடைதோய்தல்கள். எழுத வாய்த்தவன் வார்த்தைகளில் அதைக் கொஞ்சம் தன் சரக்கையும் சேர்த்துவிட்டுத் தோய்த்துவிட முடிகிறது.
