பெயர் : இரும்பு குதிரைகள்
ஆசிரியர் : பாலகுமாரன்
உள்ளடக்கம் : நாவல்
பதிப்பகம்/ To buy/Photo Courtesy : விசா பப்ளிகேஷன்ஸ்
பொறுப்பு துறப்பு : மிகத் தீவிர பாலகுமாரன் ரசிகர்கள் இந்தக் கட்டுரையின் முதல் இரண்டு பத்திகளை தவிர்க்கவும் :-)
இது நான் வாசிக்கும் முதல் பாலகுமாரன் நாவல். நான் எப்போதும் புத்தகம் வாடகை எடுக்கும் நூலகத்தில் பாலகுமாரன் நாவல் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டு இருக்கும். ஏனோ அந்த புத்தகம் எல்லாம் எடுத்து படிக்கவேண்டும் என்று ஒரு எண்ணம் வந்ததே இல்லை. சின்ன வயசில் குமுதம், கல்கி, ஆ.வி படிச்சா வீட்டுல திட்டுவாங்க. ஆனா அதையும் தாண்டி பரீட்சை முடிஞ்சு, பரீட்சைக்கு காலைன்னு ,கதை புஸ்தகம் படிச்சே வளர்ந்த பலகீனமான உடம்பு இதுJ.
எதாவது நல்ல கதை மேற்குறிப்பட்ட புஸ்தகத்தில் வந்தால், அதை பத்தி சின்ன உரையாடல் ஓடும், ’இந்த கதை படிச்சியா ? இல்லைனா படிச்சுரு?’ ஆனா ஒரு தடவை கூட பாலகுமாரன் கதை படிச்சியான்னு என்னை யாரும் கேட்டது இல்லை, ஒரு சில சமயம் சில நாவல் நல்லா இருந்தா அம்மா கூடபடிக்கச் சொல்லுவாங்க. (ஏற்கனவே படிக்க ஆரம்பிச்சு இருப்பேன்), ஆனா பாலகுமாரன் பேச்சு எடுத்தா புடிக்காது. அவரு ரெண்டு கல்யாணம் பண்ணி இருந்தது தான் காரணமா இருக்கலாம்.