கருப்புக் குதிரை
சுஜாதா
….எனக்கு சிறுகதைகளை படிக்க சுவாரசியமாக எழுத வேண்டியது முக்கியம். பல
வேலைகளுக்கிடையே வாசகர்கள் தங்கள் நேரத்தை உனக்காக ஒதுக்கியிருக்கிறார்கள்.
அவர்களுக்கு உன் அத்தனை திறமைகளையும் பயன்படுத்தி நல்ல தெளிவான கதையைச்
சொல்லாமல் என்ன என்னவோ சோக விவரங்களும் புரியாத தத்துவமும் பேசுவதில்
எனக்கு விரும்பமில்லை. இந்தக் கதைகளை நீங்கள் இலக்கியத்தில்
சேர்க்கிறீர்களோ இல்லையோ, வாசகர்களுக்கு சில மணி நேரங்கள் உலகை கணித்து
கதையை முடித்தும் சற்றே மேம்பட்ட மனிதர்களாவீர்கள் என் நம்புகிறேன்.
சுஜாதா (முன்னுரையிலுருந்து)
சென்ற வாரம் “தூண்டில்
கதைகள்”(ஐ) தொடர்ந்து இந்த வாரம் “மீண்டும் தூண்டில் கதைகள்” என்ற
தலைப்பில் ஆனந்த விகடன் பத்தரிகையில் எழுதப்பட்ட சிறுகதை தொகுப்பு.
தூண்டில் கதைகளில் சொல்லப்பட்ட மாதிரியே, கதையின் முடிவில் ஒரு சொடக்கு
அல்லது ஒரு திருப்பம், அதுதான் இந்த கதைகளின் அடிநாதம். தூண்டில் கதைகளை
விட இந்த கதைகள் இன்னும் கொஞ்சம் சிறப்பாக இருந்தாக எனக்கு தோன்றுகிறது.
காரணம் சிறுகதைகளின் பக்க அளவும், வெகு வேகமாக முடிவை நோக்கி செல்லும்
கதையின் முடிவாகவும் இருக்கலாம். எதுவாக இருப்பினும், முன் சொன்ன பதிவின்
சில வரிகளை இங்கும் நினைவு கூர விரும்புகிறேன்.
இலக்கியமா
இல்லையா என்று ஆசிரியரே கவலைப்படாதபோது, என்னை போன்ற வாசகன் மனதில்
தோன்றும் நிம்மதி வார்த்தைகளால் விவரிக்க முடியாதது. இந்த தொகுப்பிலும்
மொத்தம் பன்னிரண்டு சிறுகதைகள், சென்ற பதிவை போலவே சிறுகதைகளின் முடிவை
பற்றி இங்கு பேசப்போவது இல்லை, சிறுகதையை பற்றி சிறு அறிமுகம் மட்டுமே,
முடிந்தால் அந்த கதை பற்றி என்னுடைய எண்ணம். அவ்வளவே.