A.J.Cronin A.K.Ramanujan Amartya Sen Andrea Maria Schenkel Anton Chekhov Arthur Hailey Bill Bryson Deborah Eisenberg Elizabeth Kostova Gay Neck Geoff Dyer George Orwell Harper Lee Henning Mankell Ian McEwan Jared Diamond Jilly Cooper Jonathan Livingstone Seagull Joseph Heller Kenneth Anderson Kiran Desai Maugham Michael McCarthy O.Henry Orhan Pamuk P.G.Wodehouse PB.ஸ்ரீனிவாஸ் R.K.Narayan Richard Bach Ronald Wilks Stephen King Swami Tejomayananda Upamanyu Chatterjee William Sydney porter dhan gopal mukerji mark tully okakura kakuzo saggi steven weinberg vikram seth ஃபெயின்மன் அ. முத்துலிங்கம் அ.கா.பெருமாள் அகிலன் அசோகமித்திரன் அனார் அறிஞர் அண்ணா அறுசுவை அரசு நடராஜன் அழகியசிங்கர் ஆ. சிதம்பரகுற்றாலம் ஆதவன் ஆர்.கே.நாராயண் ஆர்.ஷண்முகசுந்தரம் ஆஸ்கார் ஒயில்டு இடாலோ கால்வினோ இந்திரா பார்த்தசாரதி இந்துமதி இரா. நாறும்பூநாதன் இரா.நடராசன் இரா.முருகன் இரா.முருகவேள் இலக்கிய வீதி இனியவன் இலவச கொத்தனார் உமா சம்பத் என்.சொக்கன் என்.ராமதுரை எம் கோபாலகிருஷ்ணன் எம். வி. வெங்கட்ராம் எர்னெஸ்ட் ஹெமிங்வே எஸ். ராமகிருஷ்ணன் எஸ்.சந்திரமௌலி ஏ.கே.ராமானுஜன் ஏ.கோபண்ணா ஒல்கா பெரோவ்ஸ்கயா க.நா.சு கண்மணி குணசேகரன கரிச்சான் குஞ்சு கலாப்ரியா காப்கா காலபைரவன் கி. ராஜநாராயணன் குமரி எஸ்.நீலகண்டன் குல்தீப் நய்யார் கே நெக் கோபிநாத் கோபுலு சந்திரசேகர சர்மா சமஸ் சல்மான் ரஷ்டி சா. கந்தசாமி சா.பாலுசாமி சாருநிவேதிதா சாலீம் அலி சி.சரவணகார்த்திகேயன் சி.சு.செல்லப்பா சிபி.கே.சாலமன் சு. வேணுகோபால் சுகுமாரன் சுஜாதா சுந்தர ராமசாமி சுனில் ஜோகி சுப்புடு சுவாமி விவேகானந்தர் செல்லம்மா பாரதி செள.ராஜன் சே. இரகுராமன் சோம.வள்ளியப்பன் ஜனனி ரமேஷ் ஜான் பான்வில் ஜி.நாகராஜன் ஜிம் கார்பெட் ஜெயகாந்தன் ஜெயமோகன் ஜே. ஹெச். வில்லியம்ஸ் ஜோதிநரசிம்மன் டாக்டர். சு.முத்து செல்லக்குமார் டாக்டர். பி.எம்.ஹெக்டே டாக்டர்.எல்.மகாதேவன் தமிழ் மகன் தரம்பால் தி. ஜானகிராமன் தி.ஜானகிராமன் தியடோர் பாஸ்கர் து.கணேசன் ந.பிச்சமூர்த்தி நகுலன் நடிகர் சிவகுமார் நமீதா தேவிதயாள் நா.முத்துக்குமார் நாகம்மாள் நாகூர் ரூமி நாஞ்சில் நாடன் ப. சிங்காரம் பல்லவி அய்யர் பழ.அதியமான் பழ.கருப்பையா பவன் வர்மா பவா செல்லதுரை பஷீர் பா.ராகவன் பாம்பே ஜெயஸ்ரீ பாரதியார் பாலகுமாரன் பாலச்சந்திரன் சுள்ளிக்காடு பாலு மகேந்திரா பாவண்ணன் பி.எச்.டேனியல் பி.எம்.சுந்தரம் பி.ஏ.கிருஷ்ணன் பி.வி.ராமஸ்வாமி பிரமிள் பெஞ்சமின் ப்ளாக் பெருமாள் முருகன் பொ.கருணாகரமூர்த்தி மகாகவி பாரதியார் மதன் மனுஷ்யபுத்திரன் மருதன் மலர்மன்னன் மா.கிருஷ்ணன் மார்க்வெஸ் மாஸ்தி மில்லி போலக் முகில் முஹமது யூனுஸ் யதுகிரி அம்மாள் யுவன் சந்திரசேகர் ரகோத்தமன் ரமணி சந்திரன் ரா.கி.ரங்கராஜன் ராஜாஜி லலிதாராம் லா.ச.ரா லிவிங்ஸ்மைல் வித்யா லூசியன் ஸ்ட்ரைக் லெமூர் வ.ரா வண்ணதாசன் வா.மு கோமு வாலி விட்டல் ராவ் வின்சென்ட் ஷீன் விளதீமிர் பகமோலவ் வீயெஸ்வி வுடி ஆலன் வெரியர் எல்வின் வேதவல்லி வைக்கம் முகமது பஷீர் வைணவச் சுடராழி ஆ. எதிராஜன் வைரமுத்து ஷோபா சக்தி ஹென்னிங் மான்கெல்
Showing posts with label கவிதைகள். Show all posts
Showing posts with label கவிதைகள். Show all posts

19 Jan 2020

பஷீருக்கு ஆயிரம் வேலைகள் தெரியும் - இளங்கோ கிருஷ்ணன்





பொதுவாக ஆம்னிபஸ் தளம் புத்தகங்களை வாசிக்க நம்மவர்களை ஊக்குவிக்கும் ஒரு தளமே. இங்கே இருக்கும்  சுமார் ஐநூறு புத்தக மதிப்புரைகளில்  தேடோ தேடென்று தேடினாலும் ஒன்றோ அல்லது இரண்டோ மட்டுமே எதிர்மறை விமர்சனங்கள் தேறும். வாசிப்பு  தேய்ந்து வருகிறது என்கிற குற்றச்சாட்டுகள் பரவலாகி வரும் இவ்வேளையில், புத்தகம் வாசிக்க விழையும் அன்பர்களை மேலும்  பதறடித்து ஓட வைக்கும் வேலையை நாம் பார்க்க வேண்டாம் என்பதே ஆம்னிபஸ் தோழர்களின் ஒத்த கருத்துக்கள் சிலவற்றுள் பிரதான கருத்து.

நிற்க, இதையெல்லாம் இப்படி நான் முன்னோட்டமாகச் சொல்ல ஏதும் காரணம் உளது எனின் உளது. இல்லை எனின் இல்லை.

நேற்று சென்னை புத்தக விழாவிற்கு சென்று ஒரு பதினைந்து புத்தகங்களை அள்ளி வந்தேன். அள்ளி வந்தவைகளில் வாசிக்க நான் முதலில் கையில் எடுத்தது இந்தப் புத்தகமே. நண்பர்கள் தந்த பத்து புத்தகங்களின் பரிந்துரைப் பட்டியலை வாட்ஸாப்பில் வைத்துக் கொண்டு அங்கே கடைகடையாக ஏறி இறங்கிக் கொண்டிருந்தேன். பரிந்துரைகளுள் இந்தப் புத்தகமும் இருந்தது.  "யாவரும்" பதிப்பகத்தில் இந்தப் புத்தகத்தை மட்டும் ஏனோ தலைகீழாய் வைத்திருந்தனர்.  புத்தகம் தேடித் கொண்டிருந்த என் கண்ணுக்கு இரண்டரை அடி தூரத்திலேயே புத்தகம் இருந்தும் தென்படவில்லை. "யாவரும்" பதிப்பகத்தில் எல்லா புத்தகங்களையும் வாசிக்கவும் செய்யும் ஒரு அண்ணன், "அந்தா உங்க கண்ணெதிர்லயே இருக்கேத்தா", எடுத்துத் தந்தே விட்டார்.

கவிஞர் இளங்கோ கிருஷ்ணனின் மூன்றாவது கவிதைத் தொகுப்பு இது.

"கவிதை என்றால் என்னவென்று இப்போது வரை எனக்குப் புரியவே இல்லை. எது நல்ல கவிதை?' என்பன போன்ற திரேதா யுகத்து அனும வாலை அகற்றும் வலிமையும் என் சிற்றறிவுக்கு இல்லை", 

என்று கவிதை நூலின் முன்னுரையிலேயே கையை உயர்த்தி விடுகிறார் கவிஞர். அதாவது கல்யாணத்திற்கு முந்தின நாள் வடவிந்தியர்கள் மாப்பிள்ளையை, தப்பிச்சு போயிடுடா மாப்பு, என்று குதிரை ஏற்றி விடுவர், அப்படி.

சரி, அது ஒருபுறம் இருக்கட்டும். எது நல்ல கவிதை என்று என்னைக் கேட்டால் நான் என்ன சொல்வேன்? It depends என்பதுதான் என் பதில். வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் நல்ல கவிதைகளை  அளவிட நான் வெவ்வேறு அளவுகோல்களை வைத்து இருந்திருக்கிறேன்.


"ஆடிக்குப் பின்
ஒரு ஆவணி;
என்
தாடிக்குப் பின்
ஒரு தாவணி"

விடலைப் பருவத்தில் கவிதை என்பதற்கு இது போதும் என்று நினைத்ததுண்டு.

கொஞ்சம் விவரம் தெரிந்த விடலை ஆன பொழுதினில்:

இமைப்பொழுது அறிமுகத்தில்
இதயத்தை ஈதல்
விரகமெனும் நரகத்தில்
அனுதினமும் நோதல்

இரவெல்லாம் தூங்கிடாமல்
இணையின் பெயர் ஓதல்
பற்றி எறியும் நினைவுத்தீயில்
பற்றுடனே தீதல்

பூவுக்குத் தவமிருந்து
சருகாகிப் போதல்
தவங்கள் செய்து செய்து
தவணை முறையில் சாதல்

இவ்வுலகில் இவற்றுக்கெல்லாம்
இன்னொரு பெயர் காதல்.
(.சரவணன் - விகடன் பவளவிழா கவிதைப் போட்டி)

இது போன்ற கவிதைகள் போதுமாய் இருந்தன.

பின்னர் வாசித்தவைகள் நா.முத்துக்குமாரின் சில கவிதைத் தொகுப்புகள் மட்டும் எனலாம்.

இணையம் வந்து வாசிக்கத்  துவங்கியதும் இங்கே புழங்கும் பலர் போல் நமக்கும் கவிதை ஒவ்வாமை ஏற்பட்டது என்னவோ உண்மைதான்.

"உன்னைப் பத்தியே பேசிட்டு இருந்தா? கவிதை நூல் பத்தி சொல்லு", எனும் உங்கள் உட்குரல் கேட்கிறது. இன்னும் இரண்டே உதாரணங்கள் மட்டுமே. முடித்து விடுகிறேன்.

என்னதான் ஆசான் என்றாலும் அவருக்கு மிகவும் உவப்பான தேவதேவன் கவிதைகளும் எனக்குப் பிடிபடவில்லை.
ஆனால் இது அப்படியில்லை-

ஈரமற்ற இரும்பு
----------------------------

நீளமான முகம்
முகம் முழுக்கக் கண்கள்
கண்முழுக்கத் தூக்கம்.

ஒளிக்க ஒளிக்க
ஓயாமல்
எட்டிப் பார்த்து இளிக்கிறது
இன்னமும் பிரித்துக் கட்டப்படாத மஞ்சள் கயிறு

ஈரமற்று,
எல்லோரையும் போல் அவளையும்
நகர எல்லையைத் தாண்டி
தரதரவென இழுத்துச் செல்கிறது
மின்சாரக்கம்பியில்
மாட்டிக் கொண்டிருக்கும் ரயில்.
(மாமல்லன்)

இதுபோன்ற நிஜ தரிசனக் கவிதைகள் எப்போதும் என் விருப்பப் பட்டியலில் உள்ளன.

மிகச் சமீபத்தில் மிகமிக ரசித்து வாசித்தது பிரான்சிஸ் கிருபாவின் "ஞாயிற்றுக்கிழமைகளில் டீச்சராகும் சிறுமி".

ஆக; கவிதை என்பது என்ன, நல்ல கவிதைக்கான அளவீடுகள் என்னென்ன என்பது ஆளுக்கு ஆள் என்றில்லாமல் - ஒரே ஆளுக்கு வெவ்வேறு காலகட்டத்தில் வெவ்வேறாகவும் இருந்து தீர்க்கிறது.

சரி, இந்தக் கவிதைத் தொகுப்பிற்கு வருவோம்:

இந்தக் கவிதைத் தொகுப்பை வாசிப்பதற்காக உங்களது அலுவலகத்துக்கு ஒரு நாள் விடுப்பு எடுத்தால், ஆதார் கார்டுக்கு புகைப்படம் எடுப்பதை ஒரு நாள் தள்ளி வைத்தால்;  இந்தக் கவிதைகளின் வாசகனாக நான் மகிழ்வேன்

புத்தகத்தைப் பற்றி இப்படி ஒரு பின்னட்டைக் குறிப்பைத் தருகிறார் கவிஞர் வெய்யில்.

நான் இந்தப் புத்தகத்தைக் கையில் எடுத்தது சனிக்கிழமையான வாரயிறுதி விடுமுறை நாள் ஆகிவிட்ட படியாலும்; மேலும் நான் ஆதார் கார்டு வாங்கி வைத்தும் கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகள் ஆகிவிட்டதாலும் வாசகர் வெய்யில் நம்மை மன்னிப்பார் என்றே தோன்றுகிறது.

ஆனால்,

எதைக் கேட்டாலும் உருளைக்கிழங்குகளையே தரும் கடவுளை பற்றி ஒருமுறை சொன்னேன் நினைவுள்ளதா நேற்று ஒரு சமையல் கலைஞரை சந்தித்தேன் (அவரேதான் உருளைக்கிழங்கு பொடிமாஸ் கவிதையின் நாயகனேதான்) நான் மிகுந்த பசியோடு இரண்டு இட்லிகள் கேட்டேன் அவர் உருளைக்கிழங்கு குருமாவை ஊற்றினார் இட்லி வேண்டும் என்றேன் மேலும் கொஞ்சம் குருமா ஊற்றினார் கடும்பசியில் அதைக் குடித்துவிட்டு ஐயா இட்லி வேண்டும் என்றேன் மேலும் கொஞ்சம் குருமா ஊற்றினார் குருமா போதும் இட்லி வேண்டும் என்றேன் மேலும் கொஞ்சம் குருமா ஊற்றினார் உனக்கு அறிவில்லையா முட்டாளே என்றேன் மேலும் கொஞ்சம் குருமா ஊற்றினார் பளார் என்று அறைவிட்டேன் மேலும் கொஞ்சம் குருமா ஊற்றினார் கோபத்தில் காறி உமிழ்ந்தேன் மேலும் கொஞ்சம் குருமா ஊற்றினார் சோர்ந்து போய் கெஞ்சத் தொடங்கினேன் மேலும் கொஞ்சம் குருமா ஊற்றினார் ஏதோ புரிவது போல் இருந்தது ஆனந்தம் பெருக்கெடுக்க நன்றி நன்றி என்று வணங்கினேன் மேலும் கொஞ்சம் குருமா ஊற்றினார்

இப்படிப்பட்ட ஒரு வார்த்தைக் கூட்டத்தை, ஒரு இருபத்தியாறு என்ட்டர்கள் அடித்துக் கவிதை எனும் தோரணையில் கொடுத்திருந்ததை, எந்த வகையினது இது என்று புரிந்து கொள்ள இயலாதவனாக நான் என்னை உருவாக்கி வைத்திருப்பதைக் கவிஞர் வெய்யில் எப்படி மன்னிப்பார் என்றுதான் எனக்குப் புரியவில்லை. 


21 Jan 2015

மொட்டு விரியும் சத்தம்- பி. லங்கேஷ், தமிழாக்கம் கா. நல்லதம்பி

நண்பர் ஒருவர், விழிகள் பதிப்பகம் பதிப்பித்துள்ள, "மொட்டு விரியும் நேரம்", என்ற புத்தகத்தை, "இது ரொம்ப நல்ல மொழிபெயர்ப்பு" என்ற பரிந்துரையோடு கொடுத்தார். கன்னட மொழியில் பி. லங்கேஷ் எழுதிய "நீலு காவ்ய" மூன்று தொகுப்புகளாக வந்திருக்கின்றன. இவற்றில் சில தேர்ந்தெடுத்த கவிதைகளை கா. நல்லதம்பி மொழிபெயர்த்து பதிப்பித்திருக்கிறார்கள். குறுகிய வடிவம் கொண்ட இந்தக் கவிதைகள், நல்லதம்பியின் அழகிய கருப்பு வெள்ளை புகைப்படங்களின் பின்னணியில் அச்சிட்டு வெளியிடப்பட்டிருக்கிறது. இதன் பதிப்பாளர் தி. தி. நடராசனின் பதிப்புரையும் புத்தகத்தை அலங்கரிக்கிறது ("ஆங்கிலத்திலிருந்து மூன்று நூல்களைத் தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டோம். மூன்று நூல்களில் இரண்டு நூலுக்குத் தமிழ்நாட்டரசின் சிறந்த நூலுக்கான விருது கிடைத்தது"). 


18 Feb 2013

பசித்த பொழுது – மனுஷ்யபுத்திரன்




கவிதை என்றால் அதற்கென சொல்லப்பட்டிருக்கும் அனைத்து இலக்கணங்களையும் தாங்கி நிற்கவேண்டும் எனும் கூற்றுகளுக்கு மத்தியில் அப்படியான ஒரு பிம்பத்தை உடைத்து சாதாரண வார்த்தைகளின் கோர்வைகளால் நம்மை மயக்கும் கவிதைகள் மனுஷ்யபுத்திரனுடையவை. தொகுப்பில் பெரும்பாலும் உரைநடைக் கவிதைகள் தாம். கொடுக்கப்படும் அன்பு, மறுக்கப்படும் பாசம், பிரிவாற்றாமை, தனிமை, துயர், பிரிவு, சந்தேகம், துக்கம் என மனதிற்கு வலியேற்படுத்தும் அனைத்தையும் கவிதையாக்கி இருக்கிறார்.

தனது சுற்றத்தைத் தீவிரமாக கவனிக்கிறார். ஒவ்வொரு கவிதையும் நாம் கடந்து செல்லும் அல்லது மறந்து செல்லும் ஒரு நுணுக்கமான விஷயத்தை விவரிக்கிறது. கல்யாண்ஜிக்கு பறவைகள் போல மனுஷ்யபுத்திரனுக்குப் பூனைகள். வாசிக்கும்போதே அவை நம்மை அருகார்ந்து காலைச்சுற்றி மடிமேல் ஏறிப்படுத்துக் கொள்கின்றன. காதலையும் பிரிவையும் ஒருசேரப் படிக்கும்போது ஏற்படும் உணர்வுகளை எழுத ஏலாது.

என்றால் எனும் கவிதையில் உன்னிடம் வீழும்போது அது எப்போதும் மீட்சியற்றதாக இருக்கவேண்டும் எனும் அதிதீவிர அன்பும், அமைதிக்குத் திரும்புதல் எனும் கவிதையில் இருவருக்குமிடையேயான ஈகோவினால் இருவரும் பிரிய நேரிட அதனால் ஏற்படும் மௌனத்தையும் எழுதியிருக்கிறார். உறவுகளையும் உறவுகளுக்கிடையேயான நெருக்கம், காதல், பிரிவு, ஈகோ போன்றவற்றையும் அழுத்தமாகப் பதிந்திருக்கிறார்.

ஒரு கடைசி சந்திப்பை உணராமல் உணர்த்தும் ஒரு கடைசிக்கோப்பை தேநீர், எள்ளல் மிகு வாசகர் சந்திப்பு’, மழையில் சோகத்தை கரைக்கும் ஒரு திரும்பும்போது மட்டும் இன்னும் பல கவிதைகளை மனதிற்கு மிக நெருக்கமாக உணரலாம். தொகுப்பிலிருந்து எனக்குப் பிடித்த கவிதைகள் சில.

புனித ஒப்பந்தம்
மரத்திலிருந்த பறவை
தரையிலிருந்த வேடனிடம்
ஒப்பந்தம் செய்துகொண்டது
நான் உன் கைகளுக்கு வரும்போது
நீ அழுத்தமாகப் பிடிக்கக்கூடாது என்றது
வேடன் புன்னைகையுடன்
தலையசைத்தான்
நான் பாடும்போது
நீ மௌனமாக இருக்கவேண்டும் என்றது
வேடன்
மௌனமே சிறந்த மொழி என்றான்
உனது உணவுப் பழக்கங்களை
எனக்குக் கற்றுத் தரக்கூடாது என்றது
வேடன்
அது ஆரோக்கியமானதல்ல என்றான்
என்னை அடைக்கும் கூண்டிற்கு
என்னிடமும் ஒரு மாற்றுச் சாவி இருக்க வேண்டும் என்றது
வேடன்
அதுதானே சமத்துவமும்கூட என்றான்
என்னைத் தேடி வரும் நண்பர்களை
இணக்கமாக நடத்தவேண்டும் என்றது
வேடன்
அது நம் பண்பாடு என்றான்
என் பூர்வீக நினைவுகளை
அவமதிக்கக் கூடாது என்றது
வேடன்
தனித்தன்மைகள் முக்கியமானவை என்றான்
நீ தன்னம்பிக்கை இழக்கும்போது
என் சிறகுகளை வெட்டக் கூடாது என்றது
வேடன்
தானும் பறத்தலின் இன்பத்தை  அறிவேன் என்றான்
எனக்கு ஆகாயம் நினைவுக்கு வந்துவிடும்போது
என்னைப் போக விடவேண்டும் என்றது
வேடன்
உன் பாதைகள் உன்னுடையதே என்றான்
இறுதியாக
என்னைத் தொடும்போது
நீ வேடன் என்பதை மறந்துவிடவேண்டும் என்றது
வேடன்
தான் ஒரு வேடனேயல்ல என்று சத்தியம் செய்தான்
பறவை அப்போது 
என்றென்றைக்குமாக மறந்துபோனது
தான் ஒரு பறவை என்பதை.
இந்தக் கவிதையை வாசித்து முடிக்கையில் துரோகத்தின் சூழ்ச்சியறியா ஒரு பறவையாகிப் போனேன்.

பயமற்ற வாழ்வு
கொசுக்கள்
எல்லா இடங்களுக்குள்ளும்
எப்படியோ நுழைந்துவிடுகின்றன
எறும்புகள்
எந்தப் பாதுகாப்பிலிருந்தும்
எதையாவது கொண்டுவந்துவிடுகின்றன
மின்மினிகளுக்கு
இந்த இருளைக் கடப்பதில்
எந்தக் குழப்பமும் இல்லை
சில்வண்டுகள் கலைத்துவிடுகின்றன
ஊரடங்கு உத்தரவுகளின்
பயங்கர மௌனங்களை
எவ்வளவுக்கெவ்வளவு
சிறியதாக இருக்கிறோமோ
அவ்வளவுக்கவ்வளவு
பயமில்லாமல் இருக்கலாம்
இந்தக் கவிதை பேசுவது வெறும் உருவத்தின் அளவைப் பற்றி மட்டுமல்ல, நாம் சார்ந்திருக்கும் பிரச்சினைகளை..

கடைசியாக
அழியும் டைனோசர்களில்
கடைசி டைனோசர்
நானாகத்தான் இருக்கவேண்டும்
பிறகு
இந்த உலகை 
முழுமையாக ஆளட்டும்
சின்னஞ்சிறு பூச்சிகள்!

இப்படியாக, ஒரு சில வாரங்களாகவே நான் மனுஷ்யபுத்திரனாக மாறியிருக்கிறேன். ஆழ்ந்த நிம்மதி, உறக்கம், அமைதி. புத்தகத்தை முடித்த பிறகும் மீண்டும் மீண்டுமாய் அதில் என்னைக் கரைத்துக் கொண்டிருக்கிறேன். மனதிலிருக்கும் காயங்களுக்கும் தழும்புகளுக்கும் மயிலிறகாய் இருக்கின்றன இக்கவிதைகள். கவிதை என்றால் காத தூரம் ஓடுபவர்களுக்குக் கூட இந்த புத்தகத்தை பரிந்துரைப்பேன். வாசிக்க அவ்வளவு எளிதாகவும் மனதில் ஒரு பெரும் புயலையும் அதற்குப் பிறகான அமைதியையும் ஏற்படுத்தவல்லது இந்தப் புத்தகம்.

கவிதை தொகுப்பு | மனுஷ்யபுத்திரன் | பக்கங்கள் 432 | விலை ரூ.350
இணையத்தில் வாங்க: கிழக்கு

11 Dec 2012

பாரதியார் கவிதைகள்

சிறப்பு பதிவர் : கணேஷ் வெங்கட்ராமன்

போன வருடம் ஒரு கட்டுரையில் “பாரதி மாயை” என்ற சொற்றொடரை முதல் முறையாகப் படித்தேன். அப்போது பாரதியின் ”மாயையைப் பழித்தல்” என்ற கவிதையின் கீழ்க்கண்ட வரி என் நெஞ்சில் ஓடிற்று :-
“உண்மை யறிந்தவர் உன்னைக் கணிப்பாரோ?”
எனக்கும் பாரதிக்குமிடையிலான உறவு எப்போது தொடங்கியது? கையடக்க ”பாரதியார் கவிதைகள்” புத்தகம் அன்பளிப்பாக கிடைத்தபோதுதான் என்று நினைக்கிறேன். ஏழாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். அப்புத்தகம் கிடைத்தவுடன் நான் புத்தகத்தைப் பிரித்து படித்த முதல் பாடல் என்ன என்று எனக்கு இன்னும் நன்றாக ஞாபகமிருக்கிறது.
“யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்
இனிதாவது எங்கும் காணோம்”
எங்கள் வீட்டின் பின்புறம் துணி துவைக்கும் கல் ஒன்று இருந்தது. என் அன்னையார் என்றும் அக்கல்லை துணி துவைக்கப் பயன்படுத்தியது கிடையாது. ஈரமே ஆகாமல், உட்கார ஏதுவாக இருக்கும். வீட்டின் பின்புறம் யாரும் இல்லாதபோது துணி துவைக்கும் கல் ஆசனத்தில் கால்மேல் கால் போட்டுக் கொண்டு ஒரு வித கர்வத்துடன் பாரதியின் கவிதைகளை சத்தம் போட்டு படிப்பது வழக்கமாகி விட்டது.


Related Posts Plugin for WordPress, Blogger...