பிறந்த
எல்லோருக்குமே ஒரு வரலாறு இருக்கும், ஆனா எல்லோருக்கும் அதைப் பதிவு
செய்யும் எண்ணம் வருவதில்லை, அல்லது பதிவு செய்வதற்கான நேரம் இருப்பதில்லை ,
வரலாற்றுப் பதிவு செய்வதெல்லாம் ஒரு வேலையான்னு கேக்கலாம் (என்னை மாதிரி
ஆளுங்க).
அதை
விடுங்க, நமக்கு 60-80 வருடங்கள் முன்பு வாழ்ந்த மக்களை பற்றி நமக்கு
என்ன தெரியும்? அவங்க எப்படி வாழ்ந்தாங்க, என்ன சாப்பிட்டாங்க, எப்படி
பொழுது போக்கினாங்கன்னு ஏதாவது தெரியுமா? கி. ராஜநாராயணன் அதையெல்லாம்
சொல்ற மாதிரி ஒரு புத்தகம் எழுதியிருக்கார் - "கோபல்ல கிராமம்". இந்தியா
சுதந்திரம் அடைவதற்கு 30- 40 வருடங்கள் முன்பிருந்து , இந்தியா சுதந்திரம்
அடையும் நாள் வரை "கோபல்ல கிராமத்தில்" நடைப்பெற்ற நிகழ்ச்சிகளின் தொகுப்பே
"கோபல்லபுரத்து மக்கள்". இந்தப் புத்தகத்தை எந்த அத்தியாயத்தில் இருந்து
வேணா படிக்கலாம், எங்கேயாவது ஒண்ணு ரெண்டு அத்தியாயத்தில் வரும் கதைகள்
அடுத்ததில் தொடர்ந்து வரும், மற்றபடி இது கோபல்ல கிராமத்தின் வாழ்க்கை
வரலாற்றின் வேவ்வேற காட்சிகளின் தொகுப்பு.
படம் - நன்றி: http://sasitharan.blogspot.in
