நாகரிகங்களின் வளர்ச்சிக்கும் வீழ்ச்சிக்கும் காரணங்கள் என்ன என்ற கேள்வி தொடர்ந்து எழுப்பப்பட்டு வரும் ஒன்று. ஜாரட் டயமண்டை விமரிசிப்பவர்கள் அவரை environmental determinist என்று குற்றம் சாட்டுகிறார்கள். அவரது Collapse என்ற புத்தகத்தைப் படித்தவர்கள் இதில் துளியும் நியாயமில்லை என்று சொல்வார்கள். சூழியல் - நம் புறச்சூழல் நமக்கு எத்தகைய வளர்ச்சி சாத்தியப்படுகிறது என்பதை தீர்மானிக்கிறது என்று அவர் சொல்கிறார் என்பது உண்மைதான். புறச்சூழல் சீரழிவு மண்ணை வாழ்வதற்கில்லாததாக ஆக்கிவிடுகிறது, அதனால் அழிந்த சமூகங்கள் ஏராளம் என்று சொல்பவர் அவர் மட்டுமல்ல. ஆனால், ஏறத்தாழ அனைத்து சமூகங்களும் அழியக் காரணம் சூழியல் பிரச்சினைகளை அவர்களால் எதிர்கொள்ள முடியாததுதான் என்று அவர் சொல்வது பிற துறையினரால் ஏற்றுக் கொள்ளக் கூடியதல்ல. வணிகம், தனி மனித விருப்பு வெறுப்பு, அரசியல் வியூகங்கள் என்று ஏராளமான காரணங்களைப் பலரும் முன்வைக்கிறார்கள். ஆனால் டயமண்ட் சூழியல் காரணிகளையே பிரதானப்படுத்துகிறார்.
கம்யூனிஸ்டுகளுக்கு காரல் மார்க்ஸ் மாதிரி எனக்கு ஜாரட் டயமண்ட். மார்க்ஸுக்கு ஒரு தாஸ் காபிடல் என்றால் டயமண்டுக்கு கொலாப்ஸ். அதை நான் விடாமல் புகழ்ந்ததை கேட்டு என் சகோதரர் ஒருவர் புத்தகத்தையே வாங்கிக் கொடுத்துவிட்டார். இது என் கைக்கு வந்து நான்கைந்து ஆண்டுகள் ஆனபின்னும் இன்றும் படித்துக் கொண்டிருக்கிறேன். துப்பறியும் கதைகள் போல் சுவாரசியமானவை இதில் உள்ள கதைகள். இதில் உள்ள விஷயங்களைத் தொடர்ந்து எழுத வேண்டும் என்ற ஆசையும் உண்டு. அந்த வகையில் எழுதப்பட்டதுதான் யாமாகிய திகோப்பியா. விரிவான பதிவு. ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல், டயமண்ட் எத்தனை புதிய விஷயங்களைச் சொல்கிறார் என்பதற்கு இந்தப் பதிவு ஒரு சான்று.