"Narayan, with his glories and limitations, is the Gandhi of modern Indian literature" - வி.எஸ்.நைபால்
படைப்பை அளவிடும் முறையும், அளவிடும் மனிதர்களும் மாறிக்கொண்டே இருக்கிறார்கள். சுமார் எழுபத்தைந்தாண்டுகளுக்கு முன் வெளிவந்த இந்த நாவல் எல்லாத வித மனிதர்களையும், எல்லா வித விமர்சனங்களையும் எதிர்கொண்டாயிற்று. முதலில் புறக்கணிப்பு; பின்னர் ஏற்றுக்கொள்ளப்பட்டுவிட்டாலும், நாராயண் இதற்காக பல காலம் காத்திருந்தார் என்கிறார் நைபால். இன்றைக்கு இலக்கியம் என்பது காத்திரமாக இருக்க வேண்டும் என்கிறார்கள். ’அறைவது போல் இருக்க வேண்டும்’ என்கிறார்கள். மகிழ்ச்சி, சிரிப்பு போன்ற விஷயங்களை விட, சோகம், இயலாமை, காமம் போன்றவையே முன் வைக்கப்படுகின்றன. மனிதனுடைய அடிப்படை தேடலான மகிழ்ச்சி பின்னால் போய்விட்டது. இலக்கியம் என்பது optimism அற்றதாக இருக்க வேண்டும் என்று சொன்னாலும் சொல்வார்கள். ஆனால், ‘சுவாமியும் நண்பர்களும்’ இன்னமும் இருந்து கொண்டுதான் இருக்கிறார்கள்.
.இந்த நாவல் முதன் முதலில் 1935ல் வெளியிடப்பட்டது. அதற்குமுன், ஏகப்பட்ட பதிப்பகங்கள் இந்நாவலை பதிப்பிக்க முடியாது என்று திருப்பி அனுப்பியிருக்கிறார்கள். ஒரு பதிப்பாளரிடம், ‘உங்களுக்கு பதிப்பிக்க விருப்பமில்லையென்றால், இந்த எழுத்துபிரதியை என்னுடைய நண்பர் கிட்டு புரானாவுக்கு அனுப்பிவிடவும்’ என்று எழுதுகிறார். பதிப்பாளரும் அப்படியே செய்கிறார். தன் நண்பர் கிட்டு புரானாவிடம், எழுத்துபிரதியை “கல்லில் கட்டி,
தேம்ஸில் எறிந்துவிடு” என்று நாராயண் எழுதுகிறார். ஆனால், புரானா, அதை கிரஹாம் கிரீனிடம் கொண்டு சேர்க்கிறார்.
கிரஹாம் கிரீன், அதைப் படித்துவிட்டு ஆ.கே.நாராயணுக்கு எழுதிய கடிதம்…
