![]() |
| புதுவையில் 1917 இல் முந்திய படம் எடுத்த அதே நாள் எடுத்த மற்றோரு படம். மனைவி செல்லம்மாளும், இளைய புதல்வி சகுந்தலாவும் உட்கார்ந்திருக்கிறார்கள்.மூத்த புதல்வி தங்கம்மாள், நண்பர்கள் ராமு, டி.விஜயராகவன். பாரதி நிற்கிறார்கள். (நன்றி tamilvu.org ) |
ஊருக்குப் பெருமை என் வாழ்வு. வையகத்தார் கொண்டாட வாழவேண்டும் என்ற
என் கனவு ஓரளவு பலித்ததென்னவோ உண்மைதான். இன்று என் கணவரின் புகழ்
விண்முட்டிச் செல்கிறது. இன்று மகாகவியின் மனைவியாகப் போற்றப்படும் நான்
அன்று பைத்தியக்காரன் மனைவியென்று பலராலும் ஏசப்பட்டேன்.விநோதங்கள் என்
வாழ்க்கையில் அதிகம்.
உலகத்தோடொட்டி வாழ வகை அறியாத கணவருடன் அமர வாழ்வு வாழ்ந்தேன் என்றால் உங்களுக்குச் சிரிப்பாகத்தான் இருக்கும். யாருக்கு மனைவியாக வாழ்ந்தாலும் வாய்க்கலாம். ஆனால் கவிஞன் மனைவியாயிருப்பது கஷ்டம்.
கவிஞர்கள் போக்கே ஒரு தனி. உண்பதிலும் உறங்குவதிலும் கூட சாதாரண மனிதரைப்போல் அவர்கள் இருப்பதில்லை. கற்பனைச் சிறகு விரித்துக் கவிதை வானில் வட்டமிடும் பறவை, பூலோகத்திலே இருண்ட வீட்டிலே மனைவிக்கும் மற்றவருக்கும் சம்பாத்தியம் செய்துபோட்டு, சாதாரண வாழ்க்கை வாழ முடியுமா?

.jpg)