நாஞ்சில்நாடன் கதைகள்
United Writers
Photo Courtesy/To Buy: NHM
மனித உணர்ச்சிகளும், அவன் எண்ணங்களும் செயல்பாடுகளும்
வெவ்வேறு மாதிரியிருக்கும். அவன் ஒவ்வொரு சந்தர்ப்பத்தையும், பொதுவாக
வாழ்க்கையையும் ஒவ்வொரு மாதிரி எதிர்கொள்கிறான். பல்வேறு சந்தர்ப்பங்களை
பலரும் எதிர்கொண்டிருப்பார்கள். அதை பல எழுத்தாளர்களும் பல்வேறு
கோணங்களில் எழுதியிருக்கிறார்கள். நாஞ்சில் நாடனும் தான் சந்தித்த
மனிதர்கள், தன் வாழ்க்கையில் தன்னை பாதித்த சம்பவங்களை கொண்டுதான் இந்த
சிறுகதை தொகுப்பை எழுதி இருப்பார். தன் கதைகளுக்கு நாஞ்சில் நாட்டை
தன்னுடைய களமாக தெரிவு செய்து இருக்கிறார். ஆர்.கே நாராயண் மால்குடி என்று
ஒரு கற்பனை உலகை உருவாக்கி அதில் கதைமாந்தரை உலவ விட்டார், அந்த ஊர் நிஜம்
மாதிரி இருந்தது. நாஞ்சில் நாடு கற்பனையல்ல, அந்த நிலமும் மக்களும்,
இரத்தமும் சதையுமாக விவரிக்கப்படுகிறார்கள். இந்த கதைகளை நாஞ்சில்
நாட்டையும் அதன் மக்களையும் விட்டுப் பிரித்துப் பார்க்க முடியாது.
