தினமும் நான் அலுவலகத்திற்குப் பயணிக்கும் பல்லாவரம் - துரைப்பாக்கம் நெடுஞ்சாலையானது நிச்சயம் மிகச் சமீபத்தில் உருவான ஒன்றாக இருக்கக்கூடும். நான் இப்படிச் சொல்வதன் காரணம் அந்தச் சாலையின் இருமருங்கிலும் வழிநெடூக நம்முடன் பயணிக்கும் சதுப்புநிலங்களை மனதில் வைத்துத்தான்.
இந்த சதுப்பு நிலக் காடுகளில் அழகழகான பறவை வகைகள் சிலவற்றை நாம் காணலாம். இவை உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து இங்கே வருபவைகளாம்.