நேர் நேர் தேமா
ஆசிரியர்: கோபிநாத்
சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ்
பக்கங்கள்: 192
விலை: ரூ.100
***
சென்ற மாதம் சென்னை தி.நகர் புக் லேண்ட்ஸ் புத்தக நிலையத்திற்கு சென்றபோது கண்ட காட்சி. சமீபத்தில் வெளியான இன்னொரு தமிழில் தலைசிறந்த கவிஞருடைய பிரபல புத்தகத்தை விட / வேறெந்த புத்தகத்தையும் விட, ‘நேர் நேர் தேமா’ என்கிற இந்த புத்தகத்திற்கே ஏராளமான போஸ்டர். சுவரெங்கும் கோபிநாத். அப்படி என்னதான் இருக்கு இதில்னு பார்த்துடலாம்னு வாங்கிய புத்தகமே இது. ’சிகரம் தொட்ட மனிதர்கள்’ - விஜய் டிவியில் வந்து கொண்டிருந்த இந்தத் தொடருக்காக திரைப்படம், தொழில், கலை, அரசியல் என்று பல துறைகளிலிருந்தும் முக்கியமானவர்களை பேட்டி கண்டிருந்தார் கோபிநாத். (அந்தத் தொடரில் நான் பார்த்த ஒரே ஒரு பகுதி - நம்ம சுஜாதாவுடையது). அந்தத் தொடரே எழுத்துவடிவமாக (சுருக்கமாக) இந்தப் புத்தகத்தில் வந்துள்ளது. மொத்தம் 21 பேர், அவர்களது பேட்டி, அந்த பேட்டியில் கிடைத்த நல்ல அனுபவங்களைப் பற்றி சுருக்கமாக எழுதியுள்ளார். சாதனையாளர்களைப் பற்றியும், அவர்களது வெற்றி ரகசியத்தைப் பற்றியும் அறிவதும் நல்லதுதானே? புத்தகத்திலிருந்து சில பகுதிகளைப் பார்க்கலாம்.
