மொஸாட் - இஸ்ரேலிய உளவுத் துறை
என்.சொக்கன்
மதி நிலையம்
பக்கங்கள்: 187
விலை: ரூ.100
எங்கள் ப்ராஜெக்டில் வாராந்திரக் கூட்டம். அப்போதே வாடிக்கையாளரிடமிருந்து வந்திருந்த ஒரு மின்னஞ்சல். இங்கே சொல்ல முடியாத அளவிற்கு திட்டி எழுதியிருந்தார்கள். (சரி சரி. இதெல்லாம் சகஜம்தானே!! விடுங்க!!). அதைப் பற்றி ஒரு அரை மணி நேரம் விவாதித்துவிட்டு வெளியே வந்தோம். ஒரு ஐந்து நிமிடத்தில் ஒரு பழைய நண்பரிடமிருந்து தொலைப்பேசி அழைப்பு. அவரும் முன்னர் இதே குழுவில் இருந்தவர்தான். ‘என்னப்பா, க்ளையண்ட் பிடிச்சி விளாசிட்டானாமே? என்ன பிரச்னை?’. நாங்க வாங்கிய திட்டு எல்லாமே அவருக்குத் தெரிந்திருந்தது. எங்க குழுவில் இருக்கிற யாரோ ஒருவர் அனைத்து விவரங்களையும் உடனடியாக இவரை அழைத்துச் சொல்லியிருக்கிறார்னு தெரிஞ்சுது. அந்த ’உளவாளி’ யார்னு பின்னர் ‘பொறி’ வைத்து பிடித்ததெல்லாம் தனிக்கதை.
ராஜீவ் கொலை வழக்கு புத்தகத்தில் திரு.ரகோத்தமன் இந்திய உளவுத்துறை பற்றி எழுதியிருப்பார். அந்தக் கொலையை அவர்கள் முன்கூட்டியே அறிந்து, தடுத்திருக்க வேண்டும். எதிரியின் தரப்பில் ஒருவர் (உளவாளி) கொடுத்த தப்பான தகவல்களை வாங்கி, அதை சரிபார்க்கவும் செய்யாமல் அப்படியே நம் நாட்டிற்கு கூறுபவர்கள் என்று அப்போதைய நம் நாட்டு உளவுத்துறையைப் பற்றி பல இடங்களில் கருத்து தெரிவித்திருப்பார்.