யானைகளைப் பற்றி நிறைய விஷயம் இருக்கும் என்று நினைத்துக்கொண்டு வை. ஷண்முகசுந்தரம் மொழிபெயர்த்த ஜே. ஹெச். வில்லியம்ஸ் எழுதிய "யானைக்கூட்டம்" என்ற புத்தகத்தைப் படித்தேன். நிறைய விஷயங்கள் இருந்தன, ஆனால் எதுவும் மகிழ்ச்சியளிப்பவையாக இல்லை. பர்மாவின் காடுகளில் யானைகள் போர்க்காலத்திலும் அமைதிக் காலத்திலும் மரம் வெட்டவும் பாலங்கள் கட்டவும் பயன்படுத்தப்பட்டதை ஆவணப்படுத்தும் குறிப்புகள். சில சமயம் கொடூரமாக இருக்கின்றன..
முதல் உலகப்போரில் ஒட்டகப் படையில் பணியாற்றிய வில்லியம்ஸ் போருக்குப் பின் வேறு வேலை தேடுகிறார். பர்மாவில் யானைகள் பராமரிப்பு வேலை இருக்கிறது என்று கேள்விப்பட்டதும் அவருக்கு அதில் ஆர்வம் வருகிறது - "வனத்திலே வசிப்பது... வேட்டையாடுவது... குதிரைக் குட்டிகளின் மேல் சவாரி செய்வது, தனிமையைத் தாங்கிக் கொள்வது," இதுதான் வேலை என்ற நினைப்பில், பர்மா எங்கே இருக்கிறது என்று உலகப் படத்தைப் பார்த்து உறுதிப்படுத்திக் கொண்டு வேலைக்கு விண்ணப்பிக்கிறார்.