Name : The Mist
Author : Stephen King
Publishers : Penguin Books/Signet Books
To Buy :Amazon
Photo Courtesy :Wikipedia
நாலு-அஞ்சு
வாரமா ரொம்ப சீரியஸான புத்தகங்களைப் பத்தியே எழுதிட்டோமோன்னு யோச்சிகிட்டே
இருந்தேன். இப்ப வரைக்கும் ஹாரர் நாவல் பத்தி ஆம்னிபஸ்ல யாரும் எழுதலை -
எல்லா வகை(Genre) நாவல்கள் பத்தியும் ஒரு சின்ன முன்னுரையாவது ஆம்னிபஸ்
இருக்கவேண்டும்.
அந்த
வகையில், இன்றைக்கு ஸ்டீபன் கிங் எழுதிய “தி மிஸ்ட்”(The Mist-
பனிமூட்டம்). ஸ்டீபன் கிங் பத்தி நான் தெரிஞ்சுகிட்டது சுஜாதாவின் “கணையாழி
கடைசி பக்கங்கள்” புத்தகத்தில்தான். அதில் கிங் எழுதிய ரெண்டு மூணு
நாவல்களை சுஜாதா பாராட்டி எழுதி இருந்தாரு. அதைத் தொடர்ந்து கிங்கின்
ரெண்டு நாவல்கள் ரெண்டு வருடங்கள் முன்னாடி படிச்சேன். ஆனா அது ஏனோ மனசில்
நிற்கவே இல்லை. அதில் ஒரு நாவலில் தனது கொடுமையான கணவனிடமிருந்து தப்பிச்
செல்லும் ஒரு பெண், அவளை எப்படியாவது மீண்டும் கண்டுபிடித்து அடிமைப்படுத்த
வேண்டும் என்றும் அலையும் கணவன், இதில் அங்கங்கே கொஞ்சம்
சூப்பர்-நாச்சுரல் (Super-natural) மற்றும் ஹாரரை கலந்து தூவி இருப்பார்.
இன்னொரு நாவலில் ஒரு விபத்தில் பாராப்லஜிக்( Paraplegic) ஆன ஒருவர் திடீரென
ஓவியம் வரைகிறார். வருங்காலத்தில் என்ன நடக்கபோகிறது என்பதை பற்றியும்
கனவுகள் வருகிறது, அவை உண்மையாகவே நடக்கிறது.