"The General in His Labyrinth" என்ற இந்த நாவலைப் பிழைதிருத்தும்போது, பிறக்குமுன்னே போர்க்களம் சென்ற ஒரு ராணுவ வீரனையும் தன் கணவனுடன் ஐரோப்பா சென்ற விதவை ஒருத்தியையும் கண்டுபிடித்து அப்புறப்படுத்தியதாகக் குறிப்பிடுகிறார் மார்க்வெஸ்,. மேலும், "iஇத்தகைய அபத்தங்கள் இந்தக் கொடூர நாவலில் தெரியாத்தனமாகவாயினும் சில துளி நகைச்சுவையைக் கலந்திருந்தால் நன்றாகக்கூட இருந்திருக்கும்," என்ற கருத்தையும் பதிவு செய்கிறார். எதை நகைச்சுவை என்று கருதுகிறார் மார்க்வெஸ் என்பது ஒரு புறமிருக்க, இந்த நாவல் ஒரு கொடூரத்தை விவரிக்கிறது என்று அவர் சொல்வதை நாம் நினைவில் கொள்ள வேண்டும் - தென் அமெரிக்க வரலாற்று அறிவில்லாத நம் மேம்போக்கான வாசிப்பில் அப்படி எந்தக் கொடூரமும் தென்படுவதில்லை.
யாரோ ஒரு ஜெனரல், அவர் என்னதான் தென்னமெரிக்காவுக்கு விடுதலை வாங்கித் தந்தவராக இருந்தாலும், இந்த நாவலில், நாற்பத்து ஏழு வயதிலேயே எண்பது வயது கிழவன் போலாகி விடுகிறார்; வயோதிகத்துக்குரிய உடல் உபாதைகள், பிடிவாதங்கள், மனக் குழப்பங்கள். அரசாங்கங்களுக்கு வேண்டாதவராகிவிட்ட அவர், ஐரோப்பாவில் தஞ்சம் புகத் தயாராகிறார்; இதோ போகிறேன், இப்போதே போகிறேன் என்று சொல்லிக் கொண்டே காலந்தாழ்த்தி,தயங்கித் தயங்கி துறைமுகம் நோக்கிப் பயணிக்கிறார்; இந்தப் பயணத்தில் அவர் பார்க்கும் இடங்கள், முகங்கள், அவை எழுப்பும் பழைய நினைவுகள். ஏதோ ஒரு பெரிய நோயால் இறந்து கொண்டிருக்கும் அவர், கண்ணைக் கட்டிக் காட்டில் விட்ட மாதிரியான ஒரு மனநிலையில், முன்னும் பின்னும் அலைகழிக்கப்படுவதே கதையோட்டம். எல்லாம் முடிந்துவிட்ட நிலையில் மீண்டும் போர் முனைக்குத் திரும்பும் வழியில் நோய் முற்றி இறந்தும் போகிறார்.