வேலையை ராஜினாமா செய்பவர்கள், தங்கள் நிறுவனத்தை பிடிக்காமல் விடுவதில்லை. தங்கள் மேலாளருடனான பிரச்னைகளினாலேயே வேலையை விடுகிறார்கள் என்று பொதுவாக சொல்வார்கள். ஒரு அருமையான மேலாளர் அமைந்தவர்கள் என்ன செய்வார்கள்? வேறு எந்த பிரச்னை வந்தாலும் பொறுத்துக் கொண்டு அவருடன் வேலை செய்வதையே பெருமையாகக் கருதி வருவார்கள். அட, இப்படி யாராவது இருப்பார்களா என்று கேட்டால், அதற்கு பதில்: P.M. நாயர். அப்துல் கலாம் போன்ற மேலாளர் அமைந்ததால், அவரது பணிக்காலமான ஐந்து ஆண்டுகளும் கலாமுடன் விரும்பி மகிழ்ச்சியுடன் பணியாற்றியவர்.
P.M. நாயர், IAS. இந்தியாவில் பல மாநிலங்களில் பல்வேறு பதவிகளை வகித்தவர். அப்துல் கலாம் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டபோது, அவரே விரும்பி நாயரை தன்னுடைய தனிச் செயலராக பணிபுரிய விருப்பமா என்று கேட்டாராம். முதலில் தயங்கிய நாயர், பின் நண்பர்கள் கூறியதால், சரி என்று சொல்லி கலாமின் குழுவில் சேர்ந்தாராம். 2002-07 வரையிலான அந்தக் காலகட்டம் தன் வாழ்க்கையில் மறக்க முடியாத ஒன்று என்று உணர்ச்சி வசப்பட்டு எழுதியிருக்கிறார்.