(ஆசிரியர் குறிப்பு: ஜியனெட் வின்டர்ஸன், பி.1959, மான்செஸ்டர், இங்கிலாந்து. எழுத்தாளர், பத்திரிகையாளர், கல்லூரியாசிரியர், சிறு தொழில்முனைவர். முதல் நாவல் மற்றும் பி.பி.சி. தொடர் ’Oranges Are Not The Only Fruit’ தனது 25 வயதில் எழுதினார். Officer of the Order of the British Empire உட்பட பல சம்மானங்களயும் விருதுகளையும் பெற்றுள்ளார். மேலும் பார்க்க: விக்கிபீடியா )
முன்னாள் பி.பி.சி. தொலைக்காட்சி நடத்துனர் ஆலன் யெந்தோபின் (Alan Yentob) ஆவணப்படங்கள் என்னை மிகவும் கவர்ந்த சமீபகால கலாச்சார நிகழ்வுகளுள் ஒன்று. அவற்றின் மூலமாக பல சமகாலக் கலை-இலக்கிய ஆளுமைகளின் அறிமுகம் கிடைத்தது; கிடைத்துக் கொண்டிருக்கிறது. அவற்றில் ஒரு படத்தில் ஜியனெட் வின்டர்சன் 2011ல் எழுதிய சுய-சரிதை ‘Why Be Happy When You Could Be Normal?’ என்ற புத்தகத்தை ஒட்டி, ஆசிரியை பிறந்து வளர்ந்த இங்கிலாந்தின் தொழிற்கூடமான மான்சென்ஸ்டரின் வட்டாரங்களும், அதற்கு நேர்மாறாக அவர் படித்து வெற்றி பெற்ற ஆக்ஸ்ஃபோர்டு பல்கலையும், அவரது நெருங்கிய நண்பர்களின் நேர்காணலும் தொலைகாட்சியில் சித்தரிக்கப்பட்டன.
