ஆதவனின் 'புழுதியில் வீணை' நாடகம் 292 பக்கங்கள் கொண்ட ஒரு புத்தக வடிவில் இப்போது என் கையில் இருக்கிறது. இதில் முதல் 92 பக்கங்கள் முன்னுரை - இதை வாசித்த எவரும் "ஒரு பிரபல விவாதத்தை நினைவூட்டிக் கொண்டு தொடங்குவோம்" என்ற இதன் துவக்கத்தை மறக்க முடியாது.
இந்த வாக்கியத்தில் துவங்கும் கட்டுரை, அடுத்த பத்தியில் விஷயத்தை இவ்வாறு அறிமுகப்படுத்துகிறது:
இந்த வாக்கியத்தில் துவங்கும் கட்டுரை, அடுத்த பத்தியில் விஷயத்தை இவ்வாறு அறிமுகப்படுத்துகிறது:
"பாரதியார் தேச பக்தராக வாழ்க்கையைத் துவக்கி, கவியாக மலர்ந்து, இறுதியில் பக்குவமான வேதாந்தியாகப் பழுத்ததாக," ராஜாஜி தெரிவித்த கருத்து; இக்கருத்தை வ.ரா. எதிர்த்து, "பாரதியாரை வேதாந்தச் சிமிழில் போட்டு அடைக்க வேண்டாம்," என்று எழுதியது. இரண்டு கருத்துக்களுமே பாரதி பற்றின இரு பரிச்சயமான அணுகுமுறைகளைப் பிரதிநிதிப்படுத்துபவை."
"ஒருவன் ஒரே சமயத்தில் தேச பக்தனாகவும் கவியாகவும் வேதாந்தியாகவும் இருக்க முடியாதா?"" என்று இந்த விவாதத்தைத் தொடர்ந்து கேட்கிறார் ஆதவன். பாரதியைக் குறித்து எழுப்பப்படக்கூடிய மிகவும் முக்கியமான கேள்வி இது.
"இந்தக் கேள்வியைத்தான் வ.ரா. உண்மையில் கேட்டிருக்க வேண்டும். மாறாக, 'வேதாந்தி' என்ற சொல்லை வைத்துக் கொண்டு அவர் சிலம்பமாடியதன் மூலம் பிரச்சினை திசை திரும்பி விட்டதென்றே சொல்ல வேண்டும்" என்று ஆதவன் வருந்துவது அண்மையில் நடந்த ஒரு பிரபல விவாதத்தை நினைவூட்டுகிறது. மகாகவி என்ற வார்த்தையை வைத்துக் கொண்டு அந்த சிலம்பாட்டம் நடந்தது - அப்போது எரிச்சலாகவும் ஆத்திரப்படுத்துவதாகவும் இருந்தாலும், இப்போது நினைத்துப் பார்த்தால் அந்த விவாதத்தில்தான் பாரதியின் கூர்முனைகள் இணையத்தில் வெளிப்பட்டன.