A.J.Cronin A.K.Ramanujan Amartya Sen Andrea Maria Schenkel Anton Chekhov Arthur Hailey Bill Bryson Deborah Eisenberg Elizabeth Kostova Gay Neck Geoff Dyer George Orwell Harper Lee Henning Mankell Ian McEwan Jared Diamond Jilly Cooper Jonathan Livingstone Seagull Joseph Heller Kenneth Anderson Kiran Desai Maugham Michael McCarthy O.Henry Orhan Pamuk P.G.Wodehouse PB.ஸ்ரீனிவாஸ் R.K.Narayan Richard Bach Ronald Wilks Stephen King Swami Tejomayananda Upamanyu Chatterjee William Sydney porter dhan gopal mukerji mark tully okakura kakuzo saggi steven weinberg vikram seth ஃபெயின்மன் அ. முத்துலிங்கம் அ.கா.பெருமாள் அகிலன் அசோகமித்திரன் அனார் அறிஞர் அண்ணா அறுசுவை அரசு நடராஜன் அழகியசிங்கர் ஆ. சிதம்பரகுற்றாலம் ஆதவன் ஆர்.கே.நாராயண் ஆர்.ஷண்முகசுந்தரம் ஆஸ்கார் ஒயில்டு இடாலோ கால்வினோ இந்திரா பார்த்தசாரதி இந்துமதி இரா. நாறும்பூநாதன் இரா.நடராசன் இரா.முருகன் இரா.முருகவேள் இலக்கிய வீதி இனியவன் இலவச கொத்தனார் உமா சம்பத் என்.சொக்கன் என்.ராமதுரை எம் கோபாலகிருஷ்ணன் எம். வி. வெங்கட்ராம் எர்னெஸ்ட் ஹெமிங்வே எஸ். ராமகிருஷ்ணன் எஸ்.சந்திரமௌலி ஏ.கே.ராமானுஜன் ஏ.கோபண்ணா ஒல்கா பெரோவ்ஸ்கயா க.நா.சு கண்மணி குணசேகரன கரிச்சான் குஞ்சு கலாப்ரியா காப்கா காலபைரவன் கி. ராஜநாராயணன் குமரி எஸ்.நீலகண்டன் குல்தீப் நய்யார் கே நெக் கோபிநாத் கோபுலு சந்திரசேகர சர்மா சமஸ் சல்மான் ரஷ்டி சா. கந்தசாமி சா.பாலுசாமி சாருநிவேதிதா சாலீம் அலி சி.சரவணகார்த்திகேயன் சி.சு.செல்லப்பா சிபி.கே.சாலமன் சு. வேணுகோபால் சுகுமாரன் சுஜாதா சுந்தர ராமசாமி சுனில் ஜோகி சுப்புடு சுவாமி விவேகானந்தர் செல்லம்மா பாரதி செள.ராஜன் சே. இரகுராமன் சோம.வள்ளியப்பன் ஜனனி ரமேஷ் ஜான் பான்வில் ஜி.நாகராஜன் ஜிம் கார்பெட் ஜெயகாந்தன் ஜெயமோகன் ஜே. ஹெச். வில்லியம்ஸ் ஜோதிநரசிம்மன் டாக்டர். சு.முத்து செல்லக்குமார் டாக்டர். பி.எம்.ஹெக்டே டாக்டர்.எல்.மகாதேவன் தமிழ் மகன் தரம்பால் தி. ஜானகிராமன் தி.ஜானகிராமன் தியடோர் பாஸ்கர் து.கணேசன் ந.பிச்சமூர்த்தி நகுலன் நடிகர் சிவகுமார் நமீதா தேவிதயாள் நா.முத்துக்குமார் நாகம்மாள் நாகூர் ரூமி நாஞ்சில் நாடன் ப. சிங்காரம் பல்லவி அய்யர் பழ.அதியமான் பழ.கருப்பையா பவன் வர்மா பவா செல்லதுரை பஷீர் பா.ராகவன் பாம்பே ஜெயஸ்ரீ பாரதியார் பாலகுமாரன் பாலச்சந்திரன் சுள்ளிக்காடு பாலு மகேந்திரா பாவண்ணன் பி.எச்.டேனியல் பி.எம்.சுந்தரம் பி.ஏ.கிருஷ்ணன் பி.வி.ராமஸ்வாமி பிரமிள் பெஞ்சமின் ப்ளாக் பெருமாள் முருகன் பொ.கருணாகரமூர்த்தி மகாகவி பாரதியார் மதன் மனுஷ்யபுத்திரன் மருதன் மலர்மன்னன் மா.கிருஷ்ணன் மார்க்வெஸ் மாஸ்தி மில்லி போலக் முகில் முஹமது யூனுஸ் யதுகிரி அம்மாள் யுவன் சந்திரசேகர் ரகோத்தமன் ரமணி சந்திரன் ரா.கி.ரங்கராஜன் ராஜாஜி லலிதாராம் லா.ச.ரா லிவிங்ஸ்மைல் வித்யா லூசியன் ஸ்ட்ரைக் லெமூர் வ.ரா வண்ணதாசன் வா.மு கோமு வாலி விட்டல் ராவ் வின்சென்ட் ஷீன் விளதீமிர் பகமோலவ் வீயெஸ்வி வுடி ஆலன் வெரியர் எல்வின் வேதவல்லி வைக்கம் முகமது பஷீர் வைணவச் சுடராழி ஆ. எதிராஜன் வைரமுத்து ஷோபா சக்தி ஹென்னிங் மான்கெல்
Showing posts with label பெற்றோர் - குழந்தைகள் வாரம். Show all posts
Showing posts with label பெற்றோர் - குழந்தைகள் வாரம். Show all posts

9 Jun 2013

ஆன்மிக ஸ்வீட் ஸ்டால் - பிரபு சங்கர்


ஆம்னிபஸ் வரலாறில் மிக முக்கியமான வாரம் இது; குறிப்பாக எனக்கு. கர்மசிரத்தையாக கடிவாளம் கட்டினாற்போல் புத்தகங்களைப் பரிந்துரை செய்து கொண்டிருந்த நாங்கள், இந்த வாரத்தில் குழந்தைகளுக்குக் கதை சொல்லும் விதம், அந்த அனுபவங்கள், அதற்கு உதவிய புத்தகங்கள் குறித்துப் பேசிக் கொண்டிருக்கிறோம்.

"டிவி பாத்துக்கிட்டே குழந்தைகள் தூங்கி விழுகிற நாட்டில் இப்படியும் ஒரு அம்மா" என்று தியானா எழுதிய பதிவைப் பற்றி குறிப்பிட்டார் நண்பர். எங்கள் வீட்டுச் சுட்டி சிலநேரங்களில் இப்படித்தான் இருக்கிறான் என்பதால், “பளார், பளார்” ஓசைகள் அவர் சொன்னதைப் படித்ததும் பின்னணியில் எனக்குக் கேட்டது.

லேனா தமிழ்வாணனிடம் அவர் எழுதிய “ஒரு பக்கக் கட்டுரைகள்” குறித்து ஒருவர் கேட்டாராம், ஒரு பக்கக் கட்டுரைகள் எழுதி அறிவுரையா சொல்லித் தள்ளறீங்களே, யாராவது ஒருத்தராவது இதனால கொஞ்சமாவது மாறியிருக்காங்களா?”, 

லேனா கூலாக  “கண்டிப்பா, நான் நிறைய மாறியிருக்கேனே”, என்றாராம்.

இதை இங்கே நான் குறிப்பிடும் காரணம், எங்கள் வீட்டுச் சுட்டி இப்போதுதான் நாங்கள் சொல்வதைக் கேட்டுப் புரிந்து கொள்ளும் கட்டத்திற்கு வந்திருக்கிறான். ஆகவே, இனி கதை சொல்லிகளாக நானும் என் மனைவியும் மாறும் அவசியத்தை நிறையவே உணர்த்துகிறது இந்த வாரத்து ”பெற்றோர் - குழந்தைகள்” பதிவுகள். ஆக, இந்த சிறப்பு வாரம் யாருக்கு உதவியதோ இல்லையோ, எனக்கு நிறையவே உதவியிருக்கிறது. அதற்காக, இந்த சிறப்பு வாரக் கொண்டாட்டத்தின் ஒருங்கிணைப்பாளர் எங்கள் ஆம்னிபஸ் சங்கத்து சிங்கம் அண்ணன் நடராஜனுக்கு நன்றிக்கு உரியவன் ஆகிறேன்.

இந்த வாரத்துப் பதிவுகள் வாயிலாக குழந்தைகளுக்குக் கதை சொல்லும் முறை சார்ந்த சூட்சுமங்களை நான் நிறையவே கற்றுக் கொண்டேன் எனலாம். கூடவே, புத்தகப் பரிந்துரைகளும் கிடைத்தன. நம் குழந்தைகளை எப்படிப் புத்தகப் பித்தர்களாக உருவாக்குவது என்பது குறித்துப் பேசிய என்.சொக்கனின் பதிவு இந்த வாரத்தின் இன்னொரு ஹைலைட்.

என் பிள்ளைப் பருவத்தில் எனக்கு தாத்தா, பாட்டி கதை சொல்லியதில்லை. அம்மா, அப்பா கதை சொல்லிய நினைவில்லை. பாட்டி வீட்டிலும் சரி, எங்கள் வீட்டிலும் சரி எப்போதும் வீடெங்கும் புத்தகங்கள் நிறைந்து கிடக்கும். எல்லா வயதினருக்கும் புத்தகங்கள் உண்டு. வாண்டுமாமாவும் இருப்பார், ராஜேந்திரகுமாரும் இருப்பார். பூந்தளிரும் இருக்கும், புஷ்பா தங்கதுரை நாவலும் இருக்கும். 

மூணாப்பு படிக்கும்போதே ராணிகாமிக்ஸ், கோகுலம், பூந்தளிர், அம்புலிமாமா, பாலமித்ரா என்று எல்லா புத்தகங்களும் நமக்குக் கிடைத்துவிடும். எனவே நினைவு தெரிந்து கதை கேட்டு வளர்ந்ததை விட கதை படித்தே வளர்ந்தோம் எனலாம் (என்னே பெருமை என்னே பெருமை. ஓகே ஓகே).

மூன்று வயது அகில் இப்போது எது யானை எது பூனை என்று கண்டறியும் புத்தகங்களைத்தான் கிழித்துக் கொண்டிருக்கிறான்.  மேலே நான் சொன்னவைகளுள் கோகுலம் தவிர்த்து மீதமிருக்கும் புத்தகங்கள் இப்பவும் வருகின்றனவா எனத் தெரியவில்லை. எனவே, எனிவே... அந்தப் புத்தகங்களைத் தேட இன்னும் குறைந்தது நான்கு வருடங்களேனும் இருக்கிறது என்பதால் இப்போதைக்கு நாம் படித்து அவனுக்குச் சொல்லத்தக்க புத்தகம் ஏதும் தேடுவோம் என்று தேடியதில் ‘கிழக்கில்’ அகப்பட்டது ‘ஆன்மிக ஸ்வீட் ஸ்டால்’ எனும் இந்தப் புத்தகம். 

இரண்டு பக்கத்துக்கு ஒரு கதை என்று நூற்று நாற்பத்து சொச்ச பக்கங்களில் சுமார் எழுபது கதைகள். குமுதம் பக்தி ஸ்பெஷல் இதழில் ரெகுலராக எழுதும் பிரபு சங்கர் கைவண்ணத்தில் தொகுக்கப்பட்டவை இக்கதைகள். ஒவ்வொரு கதை முடிவிலும் ஒரு நீதி. உம்: “இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடத்தில் தேடாதே, ஏற்றுக் கொண்ட கடமையை செவ்வனே செய்”. 

நாம் நம் வயதுக்கு இந்தப் புத்தகத்தைப் படித்தால், “வாட் எ சில்லி புக் மேன்” என்றுகூட தோன்றலாம். எனினும் நிதானமாகப் படித்தால் இதிலுள்ள கதைகள் பெரும்பாலும் குழந்தைகளுக்கு அழகான நீதி சொல்லும் கதைகள். 

நாம் காலப்போக்கில் மறந்து போன நீதிக் கதைகள் இதில் நிறைய. சில கதைகள் பெரிய குழந்தைகளுக்குப் பொருந்தும். இடையிடையே குட்டிச் சுட்டிகளுக்கும் சொல்லவல்ல கதைகள் உண்டு. சாய்ஸ் ஈஸ் யுவர்ஸ்.

இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான வீடுகளில் பொருள் தேடும் ஓட்டத்தில் பெற்றோர் இருவரும் இரு திசைகளில் ஓடிக்கொண்டிருக்க நம் குழந்தைகளுக்கு நீதிக்கதைகளைச் சொல்ல இங்கே யாரும் இல்லை. அதனால் தொலைக்காட்சி குழந்தைகளுக்கு இங்கே முக்கிய கம்பானியன் ஆகிப்போகிறது.

கீழே நான் கொடுத்திருக்கும் இரண்டு திரைப்படம் சார்ந்த கதைகளுக்கும் அடிப்படை நாம் எல்லோரும் பெரும்பாலும் அறிந்த நீதிக்கதைகளே.  

முதல் கதை:

நண்பரின் வீட்டிற்குப் போயிருந்தேன். ஏதோவொரு நகைச்சுவை தொலைக்காட்சியில் வடிவேலு தோன்றினார்.

வடிவேலு டீக்கடை ஒன்றில் செய்தித்தாள் வாசித்துக் கொண்டிருப்பார். அவரிடம் அடுத்தவர் “உனக்கு ஜார்ஜ் புஷ் தெரியுமா, பில் கேட்ஸ் தெரியுமா, பின்லேடன் தெரியுமா என்று உலகப் பிரபலங்கள் குறித்து கேட்பார். இவர் தெரியாது, தெரியாது, தெரியாது என்று சொல்ல; எதையும் தெரியாத முட்டாளா இருக்கியே என்று அடுத்தவர் வடிவேலுவைக் கிண்டலடிப்பார்.

“உனக்கு முனுசாமியைத் தெரியுமா?”

“தெரியாது. யார் அந்த முனுசாமி?”

வடிவேலு வாயைத் திறக்குமுன் நண்பரின் ஐந்து வயது அக்கா மகன், “அவன்தாண்டா உன் பொண்டாட்டியை வெச்சுட்டு இருக்கான்”, என்றான்.

வீடே விழுந்து விழுந்து சிரித்தது, நானும்தான்.

கதை இரண்டு:

”ரன்” திரைப்படத்தில் சிறுநகரம் ஒன்றில் தன் அப்பாவை எல்லா விதத்திலும் அவமானம் செய்துவிட்டு, பிழைப்பு தேடி சென்னைக்கு வருகிறார் விவேக். இந்தப் பெருநகரம் அவரை எல்லா விதத்திலும் வஞ்சிக்கிறது; அவரை கோவணத்தோடு சாலையோரத்திற்குத் தள்ளுகிறது. அவர் சந்திக்கும் ஒவ்வொரு ஏமாற்றமும் சிரிப்புத் தோரணம் கட்டப்பட்டு, நகைச்சுவையாகக் காட்டப்படுகிறது. கவனிக்கத்தக்க பன்ச் டயலாகுகள் அங்கங்கே (உம்.: காக்காக் கறி துன்னா காக்கா மாதிரி கொரல் வராம உன்னீகிர்ஸ்னன் போலவா வரும்?). 

கடைசியில் தன்னிடம் மிஞ்சும் கோவணத்துடன் சாலையோர சாமியார் அவதாரம் எடுக்கிறார் விவேக். "அப்பா பேச்சைக் கேளு; அம்மாதான் எல்லாம்" என்று அருளுரை வழங்கிக் கொண்டு பக்தகோடிகள் மீது விபூதி வீசுகிறார் என அவரது கதை நிறைகிறது.

இந்த இரண்டு காமெடிக் காட்சிகளிலுமே நம் குழந்தைகள் நீதியை விட்டுவிட்டு பன்ச் டயலாகுகளை மட்டும் நினைவில் வைத்திருப்பதுதான் இன்றைய உச்சபட்சக் கொடூரம்.

சரி, அது ஒரு பக்கம் கிடக்கட்டும். அந்த இரண்டு காமெடி சீக்வென்ஸ்களுக்கும் உரிய ஒரிஜினல் நீதிக்கதையை உங்களால் கண்டறிய முடிந்ததா? 

ஆன்மிக ஸ்வீட் ஸ்டால் | பிரபு சங்கர் | கிழக்கு | 144 பக்கங்கள் | விலை ரூ.60/- 

8 Jun 2013

பெற்றதால் கற்றது - கதை சொல்லும் கலை - அனுஜா

குழந்தை வளர்ப்பு ஒரு வாழ்க்கைக்கலை. கற்றது கைம்மண்ணளவு. [“பிள்ளைவளர்ப்பு இவ்வளவு கஷ்டமாயிருக்கும்னு ஏன் எனக்கு முன்னாலேயே சொல்லவில்லை” என்று என்னைப் பெற்றவளிடம் கேட்டு, “நான் பெற்ற துன்பம் பெறுக இவ்வையகம்” என்று அவர் வாழ்க்கைச் சக்கரம் பற்றி எனக்கு பல்பு கொடுத்த கதை இங்கே வேண்டாம்…!] நான் எழுதப்போவதைப் பற்றி என் இரு குழந்தைகளோடு விரிவாகக் கலந்துரையாடி, குழந்தைகளின் அனுமதி/மறுபார்வை பெற்றே அனுப்பப் பட்டிருக்கிறது!  எதற்கும் இருக்கட்டும் என்று அனுபவத்திலிருந்து முன்னெச்சரிக்கைக் குறிப்புகள்:

1.    பெற்றவரின் கல்வி எப்போதுமே முடிவதில்லை! ஒவ்வொரு நாளும் புதிய விஷயங்களை, என் மகனோ/மகளோ எனக்குச் சொல்லித் தரப்போகிறார். உண்மையான ஊக்கத்துடன், ஒரு மாணவருக்கான பயபக்தியுடன் மகன்/மகளிடமிருந்து அவர்களைப் பற்றியும் என்னைப் பற்றியுமே கற்றுக் கொள்கிறேன். அப்போது தான், என் மகன்/மகளை தனித்துவம் நிறைந்த இன்னொரு மனிதராக மதிக்கிறேன் என்று பொருள்! என் மகன்/மகள், என் நிறைவேறாத கனவுகளை நிறைவேற்றிக் கொள்ள, கடவுள் கொடுத்த இன்னொரு வாய்ப்பு இல்லை!

2.    என் மகன்/மகள் தனித்துவமானவர் என்றால், என் மகன்/மகளுக்குத் தனித்துவம் தரும் சூழலில் எனது பங்கு என்ன என்பதை, நல்ல இரும்புக்கடையில் எடைபோட்டு உணர்வது அவசியம். நட்புவட்டத்தில் / இணையவெளியில், பலர் பல மாதிரிச் சொல்கிறார்கள்: 'ஏன் உங்கள் மகன்/மகளுக்கு ஹிந்து/தமிழ்ப் பண்பை/பழைமையைப் போதிக்கிறீர்கள்? ஆங்கிலம் மட்டுமே சொல்லிக்கொடுங்கள்! நாத்திகம் மட்டுமே சொல்லிக் கொடுங்கள்!' என்றெல்லாம் சொல்கிறார்கள். எனக்கு முழுமையான நம்பிக்கை உள்ளதில் தான் குழந்தைகளோடு கலந்துரையாடுகிறேன். ஏனென்றால், குழந்தைகள் என் செயல்கள், என் உடல்மொழி என்று பலவற்றிலிருந்தும் வாழ்க்கைப் பாடம் கற்கிறார்கள்.


7 Jun 2013

கதை வளர்த்தல் - ஷாந்தி





 கதை கேட்பது, படிப்பது ஒரு ஆசுவாசமான சுகம். கதை கேட்கும்போதும் படிக்கும்போதும் விரியும் கற்பனை, ஆர்வம், கவனம் மற்ற விசயங்களில் எத்தனை முயன்றாலும் வருவதில்லை. சிறுவயதில் அம்புலிமாமா, கோகுலம் என படிக்கும் புத்தகம் முழுக்க கதைகள் இருந்தாலும் தொடர் கதைகளும், படக்கதைகளும் முதலில் படித்துவிட்டு மற்ற கதைகளைப் படிப்பேன். சுவாரஸ்ய திருப்பங்களோடு "தொடரும்" என முடியும் கதைகள் தொடர அடுத்த இதழுக்காக காத்திருப்பதும், அடுத்த இதழ் வந்ததும் உடனே படித்துவிட்டு மறுபடி காத்திருப்பதுமே வழக்கமாய் இருந்தது. நண்பர்களுடன் சேர்ந்து ஒவ்வொரு இதழிலிருந்தும் தொடர்கதை, படக்கதை, கைவினைப்பொருள் குறிப்பு என ஆளுக்கு ஒன்றாய் பிரித்து, கத்தரித்து, தொகுத்து, சேமித்து வைத்தது உண்டு. அத்தகைய தொகுப்புகளை மொத்தமாய் படிக்க அத்தனை ஆனந்தமாய் இருக்கும். விடுகதைகள், பழமொழிகள், புதிர்கள் என புத்தக கண்காட்சிகளில் ஏதேனும் புத்தகம் ஒன்றை வாங்கும் வழக்கமும் இருந்தது.

கதை கேட்டு, கதை படித்து, பின் அதையெல்லாம் மறந்து பாடத்திட்டதில் கதைகதையாய் எழுதி முடித்து பெற்றோர் பதவி வரும்வரை கதை சொல்லும் அவசியம் இருக்கவில்லை. பின் மகனுக்கு உணவு ஊட்ட கதை அவசியமானபின் கிட்டத்தட்ட மூன்று வேளை மூன்று கதைகள் சொல்லவேண்டி வந்தது. அதுவும் சுவாரஸ்யமான கதைகள் மட்டுமே சொல்ல வேண்டும் எனப் பல நிபந்தனைகள்.

6 Jun 2013

தலைமுறைகளை இணைக்கும் குழந்தைக் கதைகள் - ஸ்ரீதர் நாராயணன்





நான் சிறுவனாக இருக்கும்போது வாசித்த புத்தகங்களில் இப்போதும் அகலாமல் மனதில் நிற்கும் புத்தகம் எது எனக் கேட்டால் 'தாத்தா' என்பேன்.

தாத்தா மட்டுமல்ல. பாட்டிகள், கொள்ளுப்பாட்டிகள், அத்தைகள், மாமாக்கள் என்று பெரிய பட்டாளமே கதை சொல்வதன் மூலமாக குழந்தைகளை கட்டிப் போட்டு வைக்கும் வித்தையில் தேர்ச்சி பெற்றிருந்தார்கள். நீதிக்கதைகள் ஸ்டாக் தீர்ந்து போகும்போது 'கல்யாணம் பாட்டு பாடிகிட்டே போறானா... பின்னாடியே அந்த சின்னப் பயலும் டயர் விட்டுக்கிட்டே போறான்' என்று சினிமா கதைகளை எல்லாம் சேர்த்து கதை விடுவார் பெரிய பாட்டி. விளக்கொளி இல்லாத பல வெக்கை மாலைப் பொழுதுகளை அவர்கள் தங்கள் குரல்களால் நிறைத்திருந்தார்கள்.

தாத்தாவிடம் கதை கேட்பதற்கு அதிக பிரயாசைப்பட வேண்டும். எல்லா வேலைகளுக்கும் கால அட்டவணை போட்டு (ஒம்பதே முக்கால் ஆச்சா? சாப்பிட தட்டு வைக்க சொல்லு அம்மாவை) செயல்படும் அவருக்கு, மாலை ஆனவுடன் வாசலில் அழிக்கம்பி போட்ட பெரிய திண்ணையில் ஈஸிசேருடன் செட்டில் ஆகிவிடவேண்டும். வாசலோடு போவோர், வருவோர் பற்றிய பேச்சில் தொடங்கி, அப்படியே தன்னுடைய பணிக்காலம், (52ல தென்காசி போஸ்டிங். அப்ப உங்க சித்தி இவ வயித்துல அஞ்சுமாசம்....), அரசியல் நிலவரம், தாயாதிகள் தகராறு என்று ஒரு சுற்றுச் சுற்றி 'இதத்தான் சொல்லி வச்சான்' என்று ஆரம்பித்தால் ஏதாவது கதை சொல்லப் போகிறார் என்று பொருள்.

5 Jun 2013

குழந்தைகளுக்கான பகடிக் கதைகளும் புராணக் கதைகளும் - ஹரன் பிரசன்னா

குழந்தைகளுக்கான தமிழ்ப் புத்தகங்கள் - ராமகிருஷ்ண மடம்

எல்லா பெற்றோர்களுமே ஒரு கட்டத்தில் குழந்தைகளுக்குக் கதை சொல்லத் திணறியிருப்போம். அதுவரை புத்தக வாசிப்பு இல்லாதவர்கள்கூட, குழந்தைகளுக்கான கதைகளைச் சொல்வதற்கு ஏற்ற வகையில் புத்தகங்கள் உள்ளனவா என்று தேடிப் பார்க்கத் தொடங்கியிருப்போம். 

இன்றுவரை என்னிடம் தொடர்ந்து தனிமடலில் பலர் கேட்டுக்கொண்டே இருக்கிறார்கள், குழந்தைகளுக்கான கதை சொல்வதற்கு ஏற்ற புத்தகங்களைப் பரிந்துரைக்குமாறு. ஆங்கிலத்தில் இப்பிரிவில் ஏகப்பட்ட புத்தகங்கள் மலைபோல் குவிந்திருக்கின்றன. ஆனால் தமிழில்தான் இப்பிரிவில் நாம் நினைக்கும் வண்ணம், நமக்குத் தேவையான நோக்கில் நிறைய புத்தகங்கள் இல்லை. அங்கொன்றும் இங்கொன்றுமாக சில புத்தகங்கள் உள்ளன. இவை எல்லாமே குழந்தைகளுக்கான புத்தகங்களாகவும் இல்லாமல், பெரியவர்களுக்கான புத்தகங்களுமாகவும் இல்லாமல் ரெண்டுங்கெட்டானாக அமைந்துவிட்டன என்பது என் எண்ணம். இக்குறையை ஓரளவு போக்கியிருப்பது, ராமகிருஷ்ண மடம் வெளியிட்டிருக்கும் சில புத்தகங்கள் மட்டுமே. 

4 Jun 2013

கதையும் கணிதமும் - தியானா

பூந்தளிர்

ஒரு செல்வ‌ந்த‌ர் ஊரிலுள்ள‌ அனைத்து ம‌க்க‌ளிட‌மும் ப‌ண‌ம் ப‌றிப்பார். ஹீரோ செல்வ‌ந்தரை மதியால் வென்று ம‌க்க‌ளைக் காப்பாற்றுவார். இது இந்த‌ப் ப‌ட‌த்தின் க‌தை, அந்த‌ப் ப‌ட‌த்தின் க‌தை என்று ந‌ம்மால் ப‌ல‌ ப‌டங்க‌ளின் பெய‌ர்க‌ளைச் சொல்ல‌ முடியும். இதுவே தான் One Grain of Rice - யின் க‌தையும். ஆனால் எவ்வாறு ம‌க்க‌ள் காப்பாற்ற‌ப்ப‌டுகின்ற‌ன‌ர் என்ப‌தில் தான் சுவார‌ஸ்ய‌மும் க‌ணித‌மும் பொதிந்திருக்கிற‌து.

இது ஒரு இந்திய‌ கிராமிய‌க் க‌தை. வெகு கால‌த்திற்கு முன் ராஜா ஒருவ‌ர் இந்தியாவை ஆண்டு வ‌ந்தார். அவ‌ர் அர‌சாட்சியிலுள்ள‌ மக்க‌ள் அனைவ‌ரும் வ‌ச‌தி மிகுந்த‌ விவ‌சாயிக‌ள். ம‌க்கள் தாங்க‌ள் விளைவித்த‌ அரிசியை த‌ங்க‌ள் தேவைக்கு எடுத்த‌து போக, மீத‌ம் உள்ள‌தை ராஜாவிட‌ம் கொடுத்து விட‌ வேண்டும். தான் அரிசியை சேமித்து வைத்து, ப‌ஞ்ச‌ம் வ‌ரும் கால‌த்தில் கொடுப்ப‌தாக ராஜா வாக்குறுதி அளித்து, சேமிப்புக் கிட‌ங்குக‌ளை நிறைத்து வைக்கிறார். சில வ‌ருடங்கள் க‌ழித்து, ப‌ஞ்ச‌ம் வ‌ருகிற‌து. ராஜா தான் கொடுத்த‌ வாக்குறுதியைக் காப்பாற்ற‌வில்லை. ம‌க்க‌ள் அனைவ‌ரும் ப‌ஞ்ச‌த்திலும் ப‌ட்டினியிலும் வாடுகின்றன‌ர்.

3 Jun 2013

படித்துக் களித்தல் - என்.சொக்கன்

Image Courtesy: http://childrenbooksandfamily.blogspot.in/

விருட்டென்று எழுந்து நின்றேன்.

நான் நகர்ந்த வேகத்தைப் பார்த்துப் பக்கத்தில் அமர்ந்திருந்தவர் திகைத்துப்போயிருக்கவேண்டும், ‘ஏனாயித்து குரு?’ என்றார் பதற்றமாக.

‘ஒண்ணுமில்லை’ என்றபடி கண்டக்டரை நோக்கி நகர்ந்தேன், ‘நான் இறங்கணும்!’

‘அதெல்லாம் நீங்க நினைச்ச இடத்துல நிறுத்தமுடியாது’ என்றார் அவர், ‘அடுத்த ஸ்டாப்ல இறங்கிக்கோங்க’ என்று சொல்லிவிட்டு டிக்கெட் விசாரிக்கச் சென்றுவிட்டார்.

நான் பொறுமையாகக் காத்திருந்து அடுத்த நிறுத்தத்தில் இறங்கிக்கொண்டேன். பஸ் வந்த திசையிலேயே பின்னோக்கி நடக்க ஆரம்பித்தேன்.

உண்மையில், நான் இறங்கவேண்டிய இடம் இன்னும் நான்கைந்து கிலோமீட்டர்கள் தள்ளியிருக்கிறது. பஸ்ஸின் ஜன்னலோர சீட்டில் ஜாலியாகக் காற்று வாங்கியபடி வந்துகொண்டிருந்தவன், ஒரு போர்டைப் பார்த்தவுடன் சட்டென்று மனம் மாறி, இங்கேயே இறங்கிவிட்டேன்.

அந்த போர்ட், ‘Book Fair'.


Related Posts Plugin for WordPress, Blogger...