A.J.Cronin A.K.Ramanujan Amartya Sen Andrea Maria Schenkel Anton Chekhov Arthur Hailey Bill Bryson Deborah Eisenberg Elizabeth Kostova Gay Neck Geoff Dyer George Orwell Harper Lee Henning Mankell Ian McEwan Jared Diamond Jilly Cooper Jonathan Livingstone Seagull Joseph Heller Kenneth Anderson Kiran Desai Maugham Michael McCarthy O.Henry Orhan Pamuk P.G.Wodehouse PB.ஸ்ரீனிவாஸ் R.K.Narayan Richard Bach Ronald Wilks Stephen King Swami Tejomayananda Upamanyu Chatterjee William Sydney porter dhan gopal mukerji mark tully okakura kakuzo saggi steven weinberg vikram seth ஃபெயின்மன் அ. முத்துலிங்கம் அ.கா.பெருமாள் அகிலன் அசோகமித்திரன் அனார் அறிஞர் அண்ணா அறுசுவை அரசு நடராஜன் அழகியசிங்கர் ஆ. சிதம்பரகுற்றாலம் ஆதவன் ஆர்.கே.நாராயண் ஆர்.ஷண்முகசுந்தரம் ஆஸ்கார் ஒயில்டு இடாலோ கால்வினோ இந்திரா பார்த்தசாரதி இந்துமதி இரா. நாறும்பூநாதன் இரா.நடராசன் இரா.முருகன் இரா.முருகவேள் இலக்கிய வீதி இனியவன் இலவச கொத்தனார் உமா சம்பத் என்.சொக்கன் என்.ராமதுரை எம் கோபாலகிருஷ்ணன் எம். வி. வெங்கட்ராம் எர்னெஸ்ட் ஹெமிங்வே எஸ். ராமகிருஷ்ணன் எஸ்.சந்திரமௌலி ஏ.கே.ராமானுஜன் ஏ.கோபண்ணா ஒல்கா பெரோவ்ஸ்கயா க.நா.சு கண்மணி குணசேகரன கரிச்சான் குஞ்சு கலாப்ரியா காப்கா காலபைரவன் கி. ராஜநாராயணன் குமரி எஸ்.நீலகண்டன் குல்தீப் நய்யார் கே நெக் கோபிநாத் கோபுலு சந்திரசேகர சர்மா சமஸ் சல்மான் ரஷ்டி சா. கந்தசாமி சா.பாலுசாமி சாருநிவேதிதா சாலீம் அலி சி.சரவணகார்த்திகேயன் சி.சு.செல்லப்பா சிபி.கே.சாலமன் சு. வேணுகோபால் சுகுமாரன் சுஜாதா சுந்தர ராமசாமி சுனில் ஜோகி சுப்புடு சுவாமி விவேகானந்தர் செல்லம்மா பாரதி செள.ராஜன் சே. இரகுராமன் சோம.வள்ளியப்பன் ஜனனி ரமேஷ் ஜான் பான்வில் ஜி.நாகராஜன் ஜிம் கார்பெட் ஜெயகாந்தன் ஜெயமோகன் ஜே. ஹெச். வில்லியம்ஸ் ஜோதிநரசிம்மன் டாக்டர். சு.முத்து செல்லக்குமார் டாக்டர். பி.எம்.ஹெக்டே டாக்டர்.எல்.மகாதேவன் தமிழ் மகன் தரம்பால் தி. ஜானகிராமன் தி.ஜானகிராமன் தியடோர் பாஸ்கர் து.கணேசன் ந.பிச்சமூர்த்தி நகுலன் நடிகர் சிவகுமார் நமீதா தேவிதயாள் நா.முத்துக்குமார் நாகம்மாள் நாகூர் ரூமி நாஞ்சில் நாடன் ப. சிங்காரம் பல்லவி அய்யர் பழ.அதியமான் பழ.கருப்பையா பவன் வர்மா பவா செல்லதுரை பஷீர் பா.ராகவன் பாம்பே ஜெயஸ்ரீ பாரதியார் பாலகுமாரன் பாலச்சந்திரன் சுள்ளிக்காடு பாலு மகேந்திரா பாவண்ணன் பி.எச்.டேனியல் பி.எம்.சுந்தரம் பி.ஏ.கிருஷ்ணன் பி.வி.ராமஸ்வாமி பிரமிள் பெஞ்சமின் ப்ளாக் பெருமாள் முருகன் பொ.கருணாகரமூர்த்தி மகாகவி பாரதியார் மதன் மனுஷ்யபுத்திரன் மருதன் மலர்மன்னன் மா.கிருஷ்ணன் மார்க்வெஸ் மாஸ்தி மில்லி போலக் முகில் முஹமது யூனுஸ் யதுகிரி அம்மாள் யுவன் சந்திரசேகர் ரகோத்தமன் ரமணி சந்திரன் ரா.கி.ரங்கராஜன் ராஜாஜி லலிதாராம் லா.ச.ரா லிவிங்ஸ்மைல் வித்யா லூசியன் ஸ்ட்ரைக் லெமூர் வ.ரா வண்ணதாசன் வா.மு கோமு வாலி விட்டல் ராவ் வின்சென்ட் ஷீன் விளதீமிர் பகமோலவ் வீயெஸ்வி வுடி ஆலன் வெரியர் எல்வின் வேதவல்லி வைக்கம் முகமது பஷீர் வைணவச் சுடராழி ஆ. எதிராஜன் வைரமுத்து ஷோபா சக்தி ஹென்னிங் மான்கெல்

17 Nov 2012

காகித மலர்கள்-ஆதவன்


பெயர் : காகித மலர்கள்
ஆசிரியர்: ஆதவன்
Photo Courtesy/பதிப்பகம்/ To buy:உயிர்மை

முதலில் சில சம்பவங்கள் :

1.தீபாவளிக்கு ரெண்டு நாள் முன்னாடி ஆபீஸில் கணினி மேல் பலூன் கட்டி இருந்தாங்க, எனக்கு ஏனோ அது பிடிக்கவில்லை, என்னுடைய மற்ற குழு நபர்கள் அதை ரொம்ப ரசிச்சாங்க. கொஞ்ச நேரம் கழித்து ஒரு பெண், பலூன் + நாங்கள் வேலை செய்வதை படம் பிடிக்க வந்தாங்க. யாராவது என்னை கேட்காம புகைப்படம் எடுத்தா எனக்கு கோவம் வந்துரும் - இப்ப இல்லை சில வருடங்கள் முன்பு வரை. அப்படியே பல்லை கடிச்சுகிட்டு உக்காந்து இருந்தேன். சில வருடங்கள் முன்புன்னா, ஒண்ணு, என்னை கேட்காம ஏன் புகைப்படம் எடுத்தீங்கன்னு கோபப்பட்டு இருப்பேன், இல்லைன்னா டக்குன்னு வெளியே எழுந்து போயிருப்பேன். அங்கேயே உட்கார்ந்து இருந்ததால், நானும் எல்லோரையும் போலத்தான் அப்படின்னு ஒரு பிம்பம் எனக்கே உருவாகியாச்சு.

2.என்னோட ரொம்ப நெருங்கிய நண்பர், நான் இந்த வேலையில் சேர்ந்தவுடன், நீயே இந்த வேலைக்கு வந்துட்டியா!, உன்னோட கல்யாணகுணங்களுக்கு இந்த வேலை ஒத்துப் போகாதே, அப்படின்னு ரொம்ப நேரம் லெக்சர் குடுத்துக்கிட்டு இருந்தாரு. நானும் இப்போ உஜாலாவுக்கு மாறிட்டேன் அப்படின்னு சொல்லி பேச்சைத் துண்டித்தேன். இப்போ என்னோட நெருங்கிய நண்பரிடம், எனக்கு ரெண்டு விதமான பிம்பம்.

3. ஆபீஸில் மேலாளர் + மற்றவர்கள், நீ ஏன் அதிகம் ஆங்கில படம் பார்க்கிறாய்ன்னு கேள்வி, நீ ஏன் தீபாவளிக்கு பட்டாசு வெடிப்பது இல்லைன்னு கேள்வி, இவன் பட்டாசு வெடிக்காத, ஆங்கில படம் பார்ப்பவன் அப்படின்னு ஒரு பிம்பம்.

4. இன்னொரு நண்பர், எப்ப கல்யாணம், எப்ப கல்யாணம்னு ஒரே கேள்வி. எவ்ளோ தூரம் என்னோட கருத்தை எடுத்துச் சொல்லியும், கடைசியில் விவாதத்தை முடிவுக்கு கொண்டுவரும் பொருட்டு, சரி பார்ப்போம், அப்படின்னு சொல்லி விவாதத்தை முடிச்சேன். இப்போ இந்த நண்பரிடம் ஒரு பிம்பம், இதே மாதிரி வீட்டில் என்னை பற்றி ஒரு பிம்பம், ட்விட்டர் மற்றும் ஆம்னிஸ்பஸில் வேற ஒரு பிம்பம்.








16 Nov 2012

பனிமனிதன் - ஜெயமோகன்




குழந்தைகள் தினத்தை முன்னிட்டு இந்த வாரம் ஆம்னிபஸ் தளம் குழந்தைகள் இலக்கியத்தைக் கொண்டாடுகிறது.  சிறார் இலக்கியத்தை பற்றிய எனது அடிப்படை புரிதல்களைப் பகிர்ந்துக்கொண்டு முன்செல்வதே சரியாக இருக்கும் என்று எண்ணுகிறேன்.  ஓரளவு கோர்வையாக வாசிக்கத் தெரிந்த நாள் முதல் தினமலர் இதழின் சிறுவர் இணைப்பாக வெள்ளிதோறும் வரும் சிறுவர் மலரை வாசித்தது நினைவில் நிற்கிறது. இதழின் கடைசி பக்கத்தில் வரும் பலமுக மன்னன் ஜோ, பேய்ப் பள்ளி, சோனிப் பையன், எக்ஸ்- ரே கண், சிண்டன் போன்ற படக்கதை பாத்திரங்களின் உருவங்களைத் தெளிவாகவே நினைவுக்கூர முடிகிறது. பின்னர் கோகுலம், சந்தாமாமா, டின்கில் என்று சென்ற வாசிப்பு பதின்ம பருவத்தில் ஹாரி பாட்டருக்குத் தாவியது. ஏறத்தாழ அதே சமயத்தில் தமிழில் கல்கியும், தேவனும் எனக்கு அறிமுகமானார்கள்.

Image 1

15 Nov 2012

இரா.நடராசன் எழுதிய 'ஆயிஷா' - காணாமல் போகும் குழந்தைகள்

குழந்தைகள் தினத்தை முன்னிட்டு ஆம்னிபஸ் குழந்தைகள் வாரம் கொண்டாடுகிறது.
 
'குழந்தைத்தன்மையுடன் இருப்பது குழந்தைகளின் உரிமை. அந்த உரிமையை மதிக்க வேண்டியது நமது கடமை'
 
*
 
சிறுகதை, குறுநாவல் எனும் எந்த வகைமைக்குள்ளும் அடங்காத ஒரு வடிவில் நிகழ்வுகளின் தொகுப்பாக ஆயிஷா உள்ளது. ஒரு படைப்பு எனப் பகுக்கும்போது 'ஆயிஷா'வின் பலம் சொல்லப்பட்ட கருத்தில் மட்டுமே உள்ளது. புனைவு சொல்லும் கருத்துகள் இலக்கிய ஆக்கங்களுக்குத் தேவையில்லை. ஒரு கருத்தோ, செய்தியோ எந்த வகையிலும் இலக்கியம் ஆவதில்லை கற்பனை கலவாது, வாசகனை செய்தி வாசிப்பிலிருந்து விலக்கி புனைவு உலகத்துள் இழுத்து வராதவை கதைகள் கூட ஆகாது. செய்தி ஊடகங்கள் போல, நிகழ்வுகளின் தொகுப்பாக அமையும் எந்த பிரதியும் புனைவுக்கு உறுதுணையாக மட்டுமே இருக்க முடியும். புனைவாக முடியாது.
 
மேற்சொன்ன அனைத்தும் இலக்கிய விமர்சகர்களால் காலங்காலமாகச் சொல்லப்பட்டவை. விமர்சனம் என்பது பகுத்துத் தொகுக்கும் துறை என்பதினால் மேற்சொன்ன அனைத்தும் சட்டங்களாக இருக்கின்றன. ஆனால், பல சமயங்களில் இந்த விதிகளை மீறி ஆக்கங்கள் வெளிப்படும்போது விமர்சகன் தனது பார்வையை  மாற்றிக்கொள்ள நேர்கிறது. படைப்பு என்பது எந்தவித எல்லைகளைக்குள்ளும் அடைபட்டதல்ல எனும் அடிப்படை அளவுகோளின்படி தனது முடிவுகளை மாற்றிக்கொள்ள விமர்சகர் தயாராகிறார்.
 
இரா.நடராசன் எழுதியுள்ள ஆயிஷா எனும் கதை  'ஒரு விஞ்ஞான நூலுக்கு அதன் ஆசிரியை எழுதிய முன்னுரை' எனும் தலைப்பில் இருந்தாலும் அடிப்படையில் ஒரு சிறுமியின் கதை. நிகழ்வுகளின் தொகுப்பு கதையாகாது என இயல்புவாதிகளுக்கு எதிராக எழும்பும் கூச்சல்களை மீறி ஆயிஷா போன்ற படைப்புகளை நாம் கதைகளாக கருத வேண்டியுள்ளது. அவ்வப்போது இப்படி வெளியாகும் படைப்புகள் அவை முன்வைக்கும் கருத்துகளுக்காகவே கரைகளை உடைத்து படைப்பெனும் தகுதியைப் பெற்றுவிடுகின்றன.
 




 




 

14 Nov 2012

ஆழ்வார்கள். ஓர் எளிய அறிமுகம் - சுஜாதா

ஆழ்வார்கள் ஓர் எளிய அறிமுகம்
ஆசிரியர் : சுஜாதா
பக்கங்கள் : 158
விலை : ரூ.80
கிழக்கு பதிப்பகம்.

***



தமிழ்ப் பற்று உள்ளவரா? ஆழ்வார்கள் தமிழை எப்படி கையாண்டுள்ளார்கள் என்று படிக்க வேண்டுமா?

அல்லது

பக்தியில் ஈடுபாடு உண்டா? ஆழ்வார்கள் இறைவனை, திருமாலை எப்படியெல்லாம் வர்ணித்து, அவனை புகழ்ந்து பாடி, போற்றி துதித்தார்கள் என்று தெரிந்து கொள்ள வேண்டுமா?

அல்லது

சங்க காலத்தில் சைவ மற்றும் இதர சமயங்கள் எப்படி இருந்தன? வைணவ ஆழ்வார்கள் யாரெல்லாம் மற்ற சமயத்தாரோடு எப்படியெல்லாம் வாதாடி வென்றார்கள் என்ற விவரங்கள் வேண்டுமா?

இதெல்லாம் தெரிந்து கொள்வதற்கு, ஆழ்வார்கள் பற்றி, அவர்களின் பாடல்களை படிக்க வேண்டும். ‘ நாலாயிர திவ்வியப் பிரபந்தம்’ என்று அழைக்கப்படும் மொத்தம் நாலாயிரம் பாடல்கள்.

13 Nov 2012

அவர்கள் சின்னஞ்சிறு மனிதர்கள் - லதா ரஜினி

ஏனெனத் தெரியாமல் மூச்சிரைக்க ஓடிக்கொண்டிருக்கிறேன்.. யாராவது என்னைத் துரத்தி வந்து காரணம் சொல்லிவிட்டுப்போங்களேன்! - ரைட்டர் நாயோன்

லோகேஷுக்கு இரண்டு மகன்கள். ஒருநாள் மாலை அரக்கப்பரக்க அலுவலகத்திலிருந்து புறப்பட்டார்.

“என்னா சார்?”

“வைஃப் வீட்ல இல்லை சார். பசங்களை டியூஷன்ல கொண்டு விடணும்”

“எதுக்கு சார் டியூஷன் எல்லாம். வீட்லயே படிக்க சொல்லுங்க”

“அட நீங்க வேற, சிலபஸ் ரொம்ப ஜாஸ்தியா இருக்கு சார். நம்மால சமாளிக்க முடியாது”

“என்ன படிக்கறாங்க?”

“பெரியவன் யூகேஜி, சின்னவன் எல்கேஜி” 

அடப்பாவிகளா என்று வாயில் வரும் இந்த சம்பாஷனையை நான் முன்னமே ஸஸரிரி.காம்’ல் பதிவு செய்திருந்தேன்.



லோகேஷின் பிள்ளைகள் படிக்கும் பள்ளியின் முதல்வர் ரொம்பவும் கெடுபிடி பார்ட்டி. அவரைப் பற்றி கேள்விப்பட்டவைகளைப் பார்த்தால் அந்த மனிதர் நிச்சயம் ஒரு சைக்கோ மனிதராகத்தான் இருக்கக்கூடும். ஒரு பள்ளி முதல்வரை நோக்கி இத்தனை கடுமையான வார்த்தைகளை உபயோகிப்பது சரியா என்று கேட்கிறீர்களா? ஒரேயொரு உதாரணத்தைப் பாருங்கள்

எல்.கே.ஜி. ஆகட்டும் பன்னிரண்டாம் வகுப்பு ஆகட்டும், எந்த வகுப்புப் பிள்ளையானாலும் ஒரேயொரு நாள் விடுமுறை எடுக்க வேண்டும் என்றாலும் ஒரு மாமாங்கம் முன்னமே பக்காவாக பெற்றோர் சகிதம் பள்ளிக்கு வந்து முதல்வர் அறைமுன் தேவுடு காத்திருந்து கடிதம் தந்து அவர் ஒப்பம் பெற்றிட வேண்டும். திடீர் லீவ் அடிக்க நேரிட்டால், மீண்டும் பள்ளிக்கு வரும்போது முதல்வர் அறைமுன் அதே தேவுடு காத்து நின்று முதல்வரிடம் பெற்றோர் கிட்டத்தட்ட மண்டியிட்டு அழுது மன்னிப்புக் கேட்டு அவரிடம் “நோ அப்ஜக்‌ஷன் சர்டிஃபிகேட்” பெற்றால்தான் உங்கள் பிள்ளை மீண்டும் வகுப்பிற்குப் போக முடியும்.

”டிசிப்ளின்தான் எனக்கு முக்கியம்”, என்று இதற்குப் பின்னணியில் காரணம் சொல்லப்பட்டாலும், பிள்ளைகளையும் பெற்றவர்களையும் இப்படிப் படுத்தும் மனிதரை என்ன சொல்ல?

சென்னையின் இன்னொரு பிரபல பள்ளி உண்டு. சமீபத்தில் ஒலிம்பிக் பாக்ஸிங் போட்டியில் இந்தியாவிற்கு பதக்கம் வென்று வந்த ”மேரி கோம்” அவர்களை சென்னைக்கு அழைத்து கௌரவப்படுத்தியது. அடடே! நல்ல விஷயம்தானே? ஆனால் அந்த பெருமைமிகு விழாவில் கலந்துகொள்ள பத்தாம் மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களை அனுமதிக்கவில்லை. 

காரணம்? அந்த இரண்டு வகுப்பினரும் பொதுத் தேர்வு எழுதுபவர்களாம். நாசமாய்ப் போகுமடா உங்கள் பள்ளிகள் என்று சாபம் தரத்தான் தோன்றுகிறது. தன் பள்ளியின் பெயரை ரிசல்ட் பட்டியலில் ஓங்குதாங்காக மேலே நிறுத்திக்காட்ட ஆட்டுமந்தையாக அந்த மாணவ மாணவியரைப் பயன்படுத்தும் இதுபோன்றவர்களுக்கு என்ன தண்டனை தர, சொல்லுங்கள்?

இன்றைய கல்விமுறையின் கொடூரங்களைப் பற்றி நான் ஒன்றும் புதிதாய்ப் பட்டியலிடும் அவசியம் இல்லை. நம்மில் ஒவ்வொருவரிடமும் இதுபற்றி ஒரு முப்பது நிமிடங்கள் பேசினால் முன்னூறு குறைபாடுகளையும் தங்கள் சொந்த மனக்குமுறல்களினின்று ஒன்றரை டஜன் உதாரணக் கொடுமைகளையும் கொட்டிவிடுமளவுக்கு விஷயங்களை ஒவ்வொருவரும் சுமந்தே திரிகிறோம். 

இருந்தும் “பிரசவ வைராக்யம், ஸ்மஸான வைராக்யம்”, என்பார்களே அதுபோல அவையெல்லாம் வெறும் பேச்சினோடே புலம்பித் தீர்க்க மட்டுமே. 2014’ஆம் வருடத்தில் தன் பிள்ளையைப் பள்ளியில் சேர்க்க 2011’ஆம் ஆண்டே  பிரபல பள்ளியில் அட்வான்ஸ் தந்துவிட்டு வருவதுவும், கடைசி நேரத்தில் ரெகமெண்டேஷன், எக்ஸ்ட்ரா ஃபீஸ் என்று கட்டித் தீர்க்கத் தயாராக இருப்பதுவும் அதே புலம்பல் பார்ட்டிகளான நாமாகத்தான் இருப்போம்.

"Winning is Everything" என்னும் முரட்டுக் கலாசாரத்தைத்தான் நம் பள்ளிகள் கடைபிடிக்கின்றன. பெற்றோரான நாமும் அதனையே விரும்புகிறோம். நம் பெயரை நம் பிள்ளைகள் நம் சொந்த பந்தங்களிடையே காப்பாற்ற வேண்டும் என்று நாம் அவர்களை வீட்டினில் சாட்டை கொண்டு விரட்டுகிறோம். கல்வித்துறையில் தம் பள்ளியின் பெயரை நிலைநிறுத்த அதே சாட்டையைக் கொண்டு நம் பிள்ளைகளை இன்னொரு பக்கம் நின்றுபள்ளிகள் விரட்டுகின்றன. இந்த இரண்டு சாட்டைச் சொடுக்கல்களுக்கு இடையே நம் பிள்ளைகள் தவிப்பது பற்றிய லட்சியம் நம் இருவருக்குமே இல்லை.

இப்படியே பேசிக் கொண்டே போனால்? இவற்றுக்கெல்லாம் என்னதான் விமோசனம்? இதைப் பற்றியெல்லாம் கவலைப்பட்டு ஒரு மாற்று சிந்தனையை மாற்று வடிவக் கல்விமுறையைக் கொண்டு வர என்ன செய்ய வேண்டும்?

அவற்றைப் பற்றியெல்லாம்தான் பேசுகிறது “லதா ரஜினி” 1997’ஆம் வருடம் ஆனந்த விகடனில் தொடராக எழுதிய “அவர்கள் சின்னஞ்சிறு மனிதர்கள்”. தலைப்பே புத்தகம் பற்றிப் பேசிவிடுகிறது. சமூகத்தில் நாம் அவர்களுக்குத் தரமறுக்கும் அந்தஸ்தைப் பற்றி சொல்லிவிடுகிறது.



ஆம்னிபஸ்சில் குழந்தைகள் தினத்தை ஒட்டி “சிறுவர் இலக்கிய வாரம்” கொண்டாட முடிவெடுத்த போது நான் முதலில் தேர்ந்தெடுத்த நூல் இதுவே. காரணம் இது குழந்தைகள் வாசிக்க வேண்டிய நூல் அன்று. குழந்தைகளைக் குழந்தைகளாக வாழவிடாமல் செய்ய பெற்றோர்கள் என்னவெல்லாம் செய்து கொண்டிருக்கிறார்கள் என்பதைப் பேசும் புத்தகம் இது. அந்தக் குழந்தைகள் இவ்வுலகில் குழந்தைகளாகவே உலவ நாம் என்ன செய்ய வேண்டும் என்பதையும் பேசுகிறது புத்தகம்.

இன்றைய கார்ப்பரேட் கம்பெனிகள் தம் ஊழியர்களை வேலைப்பளு தந்த முறுக்கல்களினின்று ரிலாக்ஸேஷன் செய்து கொள்ள மால்கள், சாப்பாடு, தீம் பார்க், தண்ணி பார்ட்டி என்று விதவிதமாக ஏற்பாடுகள் செய்கின்றன. இவர்களில் எத்தனை கார்ப்பரேட் கம்பெனிகள் அந்த ரிலாக்ஸேஷன்கள் எல்லாம் அந்த ஊழியர்கள் தத்தமது குழந்தைகளுடன் செலவிடும் உன்னத நேரத்தில்தான் இருக்கிறது என்பதை அறிந்து வைத்திருக்கின்றன? Work-Life balance என்பதெல்லாம் எழுத்து வடிவில்தான் இருக்கின்றன இன்றைய காலகட்டத்தில். 

இவற்றை அந்தப் பெற்றவர்களும் காலத்தின் போக்கில் மறந்து தொலைத்து “நாம் முன்னமே குறிப்பிட்ட”, எதிர்த்திசையில் ஓடிக்கொண்டே இருப்பதுதான் அந்தக் குழந்தைகளுக்குப் பிரச்னையாகிறது. Being with the kid எத்தனை அவசியம் என்று குழந்தையுடன் நான்கு நாட்கள் இருந்து பார்த்தால்தானே தெரியும் என்கிறார் லதா.

”என் பையன் போன வருஷம்....ம்ம்ம்ம் ரெண்டாவது படிச்சான். வெய்ட் வெய்ட்... இல்லை இந்த வருஷம் ஹீ ஈஸ் டூயிங் செகண்ட்” என்று சொல்லும் தந்தைமார்கள் எல்லாம் கற்பனைக் கதாபாத்திரங்கள் அல்லர். இதுபோன்ற பெற்றவர்கள் உருவாக்கும் பிள்ளைகளுடனான இடைவெளி ஒருபக்கம். இந்த இடைவெளியைத் தவிர்த்தல் மிக எளிது. தினமும் ஒரு அரைமணிநேரம் உங்கள் குழந்தைகளுடன் என்றால் குழந்தைகளுடன் உங்கள் நேரத்தைச் செலவிட்டால் போதும்.

மற்றொரு பக்கம் குழந்தைகளைக் கையாளும் முறையின் வாயிலாக பெற்றவர்கள் கொண்டு வரும் இடைவெளி. கனிவாகத் திருத்த வேண்டிய குழந்தைகளைக் கடுமையாகத் திருத்த முற்பட்டு வளைக்கச் சென்றது உடைந்த கதையாய் குழந்தைகளுக்கும் பெற்றவர்களுக்கும் இடையே நேரும் இடைவெளி.  இந்த இடைவெளியைக் குறைத்தல் கனிவான அணுகுமுறை மட்டுமே.


கல்விமுறை என்பது பள்ளிகளும் கல்லூரிகளும் உருவாக்கி வைத்தவை என்ற நம் மனதில் தேங்கிவிட்ட மனப்பான்மைதான் எல்லாத் தவறுகளுக்கும் அடிப்படை என்கிறார் லதா. தம் தாத்தாக்கள் வாழ்ந்த வாழ்க்கையின் வழியாகவும், தம் ஊர்ப்பெரியம்மாக்கள் வாழ்க்கையின் வாயிலாகவும் கற்றதனை விடவும் பெரிய கல்வியை நம் முன்னோர்கள் கற்றுவிடவில்லை. அந்த மாதிரியான வாழ்க்கை வாயிலான கல்வியை இந்தத் தலைமுறை ஒட்டுமொத்தமாக இழந்ததன் காரணம் என்னவென்று யோசித்தால் ஒன்றுதான் தோன்றுகிறது. தாம் பணத்தைச் சம்பாதிக்க ஒருபக்கம் கண்மண் தெரியாமல் ஓட்டமாக ஓடிக்கொண்டு தன் அடுத்த தலைமுறையை இன்னொருபுறம், “படி படி படி..... படிச்சாச்சா.... ம்ம்ம்ம் படிச்சதை வாந்தியெடு வாந்தியெடு வாந்தியெடு” என்று விரட்டும் பெற்றோர்தானே?


தார் ரோடு போடுவது போல் போட்டுவிட்டு அவை சிதிலமடையும்போது ரிப்பேர் வேலைகளைப் பார்த்துக் கொண்டு இருத்தல்தான் இன்றைய கல்விமுறையாக இருக்கிறது. பண்பு, பண்பாடு, ஒழுக்கக் கல்வி ஆகியவையே கல்வியின் அடிப்படையாக இருக்க முடியும். இவற்றைச் செய்ய தார் ரோடு எதற்கு? மக்கள் நடந்து சென்ற ஒற்றையடிப் பாதை போதுமே? அவை ஜனங்கள் வாழ்ந்து காட்டிய பாதைகளாக இருந்து நம்மை இலக்கிற்கு அழைத்துச் செல்கின்றன என்பது என்ன ஒரு அழகான வாதம்?



இந்தப் பிரச்னை குறித்துப் பேசுவது எழுதுவதும் போதனைகள் சொல்வதுவும் எத்தனை எளிமையான விஷயம் இல்லையா? அதைத்தானே லதா ரஜினி செய்திருக்கிறார் என்றால் அதுதான் இல்லை.


நம் குழந்தைகளின் தேவைகளுக்கு ஏற்றவாறு கல்வி வளைந்து கொடுத்து குழந்தையைத் தலைநிமிர்ந்து நிற்கச் செய்வது ஒரு சமுதாயத்தின் கடமை என்பதை வலியுறுத்துகிறார் லதா. அதுசரி, என்ன செய்தார்?


ஒரு மாற்றுக் கல்விமுறையைக் கொண்டுவர தன்னால் இயன்றவகையில் ஆஷ்ரம் என்ற பள்ளியைக் கடந்த பதினைந்து வருடங்களுக்கும் மேலாக நடத்தி வருகிறார். அந்தப் பள்ளியில் குழந்தைகள் “சின்னஞ்சிறு மனிதர்களாக” மதிக்கப்படுகிறார்கள். படித்ததை வாந்தியெடுக்கும் கலாசாரம் இல்லை. லீவ் அடிக்கப் போராடத் தேவையில்லை. பரிட்சைப் பிசாசு தரும் பயங்கள் இல்லை. குழந்தைகள் தங்கள் பருவத்தில் என்ன செய்ய வேண்டுமோ அவற்றை மட்டுமே செய்கிறார்கள்.

கடைசியாக ஒன்று, ஆஷ்ரம் பள்ளியைப் பற்றி, இரண்டாம் வகுப்பில் படிக்கும் குழந்தைக்கு எம்.எஸ்.சி. ஸ்டாடிஸ்டிக்ஸ் சிலபஸ் தரப்படுவதில்லை.

ஆஷ்ரம் பள்ளியின் வருகை நிச்சயம் தொடர்ச்சியாக அதுபோன்ற சில பள்ளிகளை நம்மிடையே உருவாக்கி இருக்கின்றது. இருந்தும் இன்னமும் நம் அடிதடிக் கலாசாரக் கல்விமுறையின் கைதான் இன்றும் ஓங்கியிருக்கிறது. இவை ஒட்டுமொத்தமாக மாற பெற்றோரின் பக்கமிருந்தும் ஒத்துழைப்பு நிச்சயம் தேவைப்படும்.

இந்தப் புத்தகத்தை ஒருமுறை வாசித்தால் ஒருவேளை அந்த ஒத்துழைப்பை நல்கும் மனப்பக்குவம் பெற்றோர்களுக்கு வருமோ என்னவோ?


அவர்கள் சின்னஞ்சிறு மனிதர்கள் -லதா ரஜினி
பூம்புகார் பதிப்பகம், 63,. பிரகாசம் சாலை, சென்னை - 108
கன்னிமாரா நூலகத்தில் இந்தப் புத்தகம் கிடைக்கிறது - இங்கே
இணையம் மூலம் இந்தப் புத்தகம் கிடைக்குமா என்ற தகவல் நம்மிடம் இல்லை.


ஆசை என்னும் வேதம் - பாலகுமாரன்

சிறப்புப் பதிவர்: R கோபி
.
நீலம் புயலால் தமிழகமெங்கும் மழை. போதாத குறைக்கு எனக்கு ஜுரம் வேறு. வீட்டை விட்டு வெளியே எங்கும் செல்ல இயலாத சூழல். வாசிப்பு மட்டுமே இதுபோன்ற நேரங்களில் நல்ல துணை.

‘ஆசை என்னும் வேதம்’ நாவலை இதற்கு முன்பே ஒருமுறை படித்திருக்கிறேன். இம்முறை திரும்ப வாசித்தபோது புரியாத சில விஷயங்கள் புரிந்தன. நாவலின் கட்டமைப்பு பற்றிய புரிதல் இன்னும் கொஞ்சம் அதிகமாகி இருக்கிறது. 

நாவலில் மேலோட்டமாகத் தெரியும் விதவை மறுமணம், காதல் என்பனவற்றையெல்லாம் தாண்டிக் கசப்பான முதல் திருமணம், அது தந்த ரணங்கள், மனதிற்குப் பிடித்த இன்னொருவருடன் (கோபி) சேர்ந்து இருப்பது என்று முடிவானதும் நாயகி (வசுமதி) தன்னைச் சுற்றி அமைத்துக்கொள்ளும் அரண் ஆகியவை முக்கியமாகப் படுகின்றன.

ஒரு முறை சூடு கண்ட முறை மறுமுறை சர்வ ஜாக்கிரதையாக இருக்கும். 'Leaving no stone unturned' என்பார்கள் ஆங்கிலத்தில். கோபியுடன் சேர்ந்து வாழ்வது என்று முடிவானதும் வசுமதி எடுக்கும் முடிவுகள் மிக முக்கியமானவை.

நாவலில் பாசாங்குகள் இல்லை. பசி, தூக்கம் போன்று உடலுறவு என்பதும் ஒரு முக்கியமான தேவை என்பதைச் சுற்றி வளைக்காமல் நேரடியாகவே நாவல் சொல்கிறது. வசுமதியின் மேல் கோபிக்கு ஈர்ப்பு ஏற்பட அவள் அழகாக இருப்பதும் ஒரு முக்கியமான காரணம் என்று அவன் ஒப்புக்கொள்கிறான்.

நாத்தானார் சீதாமணியின் பாத்திரப் படைப்பு பிரமாதம். நாவலைப் படிக்கும்போது ‘இப்படியும் இருப்பார்களா?’ என்று பல சமயம் நம்மை நாமே கேட்டுக் கொள்கிறோம். 
பொதுவாக திரு. பாலகுமாரன் அவர்களின் நாவல்களில் கதாபாத்திரங்கள் பேசிக்கொண்டே இருப்பார்கள். இந்த நாவலில் அது கொஞ்சம் குறைவாகப் பட்டது. இந்த நாவல் எனக்குப் பிடித்துப் போக இதுவும் ஒரு காரணம். 

வசுமதிக்குக் கோபியின் மேல் காதல் ஏற்பட மேலும் வலுவான காரணங்களைச் சொல்லி இருக்கலாம் என்று தோன்றுகிறது.

வாசகர் ஒருவர் ஆசிரியருக்கு எழுதிய கடிதமொன்றில் ‘ஆசை என்னும் வேதம் என்ற தலைப்புக்கு என்ன அர்த்தம்?’ என்று கேட்டிருந்தார். திரு. பாலகுமாரன் என்ன பதில் சொன்னார் என்று தெரியவில்லை. எனக்கென்னவோ அதற்கான விடையை நாவலிலேயே தேடவேண்டும் என்று தோன்றுகிறது.  
ஆசை என்னும் வேதம் - பாலகுமாரன்
விசா பதிப்பகம்
விலை ரூ. 100
ஆன்லைன் மூலம் புத்தகம் பெற: உடுமலை / 600024.காம்

12 Nov 2012

கடைசி குயிலின் கானம்

கோவையில் இருந்த நாட்கள் பறவைகளின் கூச்சலோடுதான் புலரும். வீட்டுக்கு வெளியே இருந்த ஒன்றிரண்டு வேப்ப மரங்கள், தென்னை மரங்கள் மற்றும் அவரைக் கொடியோ எதுவோ, அதில் குருவிகளும் இன்னபிற பறவைகளும் இருந்திருக்கலாம். நகரத்திலேயே பிறந்து வளர்ந்த எனக்கு காக்காய், குருவி, கோழி, வாத்து, மயில், கழுகு, புறா, கிளி என்று ஒரு பத்து பதினைந்து பறவைகள் பரிச்சயமாக இருந்திருந்தால் அதிகம். ஆனால் நானறியாத அந்தப் பறவைகள் எனக்கு எவ்வளவு முக்கியமாக இருந்திருக்கின்றன என்பதைச் சென்னையின் மேன்ஷன் ஒன்றின் ஃபேனின்கீழ் படுத்திருந்த நாட்களில்தான் உணர்ந்தேன் - ஹோம் சிக்னஸ் காதில் விழாத அந்தப் பறவைகளின்  கலவரக் குரல்களாக உருவம் பெற்றது. கோவையின் பறவை குரல்களுக்கு அறையின் இருளில் அழுதுமிருக்கிறேன்.

புதிதாய் வந்த ஊரில், புதிதாய்ச் சேர்ந்த பணியில், புதிய பொறுப்புகளும் கடமைகளும் அழுத்தம் கொடுத்த துயர தினங்களின் விடியலுக்கு நான் இழந்திருந்த பறவைகளின் ஓசைகள்தான் முகம் கொடுத்தன. இதோ, இப்போது வேறு இடத்தில் இருக்கும் என்னைச் சுற்றி மரங்கள் - எப்போதும் எங்கோ ஓரிடத்தில் ஏதோ ஒரு பறவை சத்தமிட்டுக்கொண்டே இருக்கிறது. மூடிய அறைகளுக்குள், முகம் பார்த்துப் பழகிய மனிதர்களுடன், கணினியின் திரையும் தொலைகாட்சிப் பெட்டியுமே உலகின் சன்னல்களாக மாறிவிட்ட இந்தக் குறுகிய உலகிலிருந்து என்னை மீட்டுச் செல்லும் குரல்கள். இவை வெளியிலும் இல்லை, உள்ளிலும் இல்லை - இரண்டுக்கும் பொதுவான ஒரு தளத்தில் இருக்கின்றன.

பழகிய விஷயங்களில் தொலைந்த எனக்கு வாழ்க்கையின் அழகையும் இனிமையையும் ஓயாத புத்துயிர்ப்பையும் கொண்டு வந்து கொடுக்கும் கூவல்கள் இவை. இந்தக் குரல்கள் என் எண்ணங்களின் மயக்கத்தைக் கலைத்து, பரந்து விரிந்த, சலனங்கள் நிறைந்த உலகில்தான் என் இருப்பு என்பதை நினைவூட்டுகின்றன. நான் மதிக்காத, லட்சியம் செய்யாத, காது கொடுத்தும் கேட்காத பின்னணிக் குரல்கள்தான். ஆனால் கூவியடங்கும் இந்தக் குரல்கள் ஒலிகளும் வண்ணங்களும் தொலைதூரங்களும் எதிர்பாராத ஆழங்களும் நிறைந்த ஓர் உலகில் என்னை இருத்தி வைக்கின்றன. இப்போது நான் இதன் அருமையைப் பாராட்டாதவனாக இருக்கலாம், ஆனால் இந்த இடத்தைவிட்டுச் செல்லும்போது, எப்போதும் என் பின்னணியில் ஒலித்துக் கொண்டிருக்கும் இந்தக் குரல்களின் இழப்புக்கு நிச்சயம் வருந்துவேன்.

கானுயிர் பதிவுகள் செய்யலாம் என்று ஆம்னிபஸ் நண்பர்கள் முடிவு செய்ததும் நான் தேர்ந்தெடுத்த முதல் புத்தகம், Michael McCarthyன் "Say Goodbye to the Cuckoo". ஏற்கனவே நான் பலமுறை வாசித்து ரசித்திருந்த இந்தப் புத்தகத்தில் மக்கார்த்தி, ஆப்பிரிக்காவிலிருந்து இங்கிலாந்துக்கு வரும் பன்னிரெண்டு பறவைகளின் சாரத்தை, essence, கண்டடைய முயற்சிக்கிறார். அற்புதமான வர்ணனைகளும் தரிசனங்களுமான இந்தப் புத்தகம் ஒவ்வொரு பறவையையும் அதனதன் சூழலில், நிலத்துடனும் மனிதர்களுடனுமான பண்பாட்டுப் பின்புலத்தில் அடையாளப்படுத்தி, பறவைகளின் இழப்பு மனிதனுக்குத் தன் அக அனுபவத்தின் நிரந்தர இழப்பாக இருக்கும் என்பதைச் சுட்டுகிறது. வாசிக்கும்போது அதை எளிதில் உள்வாங்கிக் கொள்ள முடிந்தாலும், தமிழில் எழுதும்போதுதான் ஆங்கிலத்துக்கும் இங்கிலாந்துக்கும் வெளியே அதைப் பேசுவது எவ்வளவு கடினம் என்பது புரிந்தது. சில பத்திகளை மட்டும் மேற்கோள் காட்ட இருக்கிறேன்.



11 Nov 2012

ஜொனாதன் லிவிங்ஸ்டோன் எனும் கடற்புள்ளு

சிறப்பு பதிவர் : ரா. கிரிதரன்.


நண்பர் பாஸ்கர் ரொம்ப நாட்களாக ஆம்னிபஸ் தளத்தில் நடக்கும் புத்தக விமர்சன முயற்சிகள் பற்றி குறிப்பிட்டு வந்துள்ளார். தினம் ஒரு புத்தகத்தைப் பற்றி எழுதுவது என்பது சாதாரண காரியமல்ல. அதுவும் ஆம்னிபஸ் தளத்தில் எழுதப்படும் பலவகையான புத்தகங்களைப் பார்க்கையில் சமயத்தில் பொறாமைகூட வந்துவிடுகிறது. தினம் சமையலா என முணுமுணுப்பதைக் காட்டிலும் தினம் சாப்பிட வேண்டுமா என கேள்வி கேட்பவர் குறைவு என்பதை நமது ஹோட்டல்களில் கூடும் கூட்டத்தை வைத்தே சொல்லிவிடமுடியும். அது போலத்தான் இந்த தளத்தை நடத்தும் அன்பர்கள் யாரும் சாப்பிட முணுமுணுப்பதில்லை, சமைப்பதில் ரோட்டா போட்டு ஒவ்வொருவர் ஒரு நாள் எனப் பிரித்துக்கொண்டிருப்பதால் பெரும் பாரமாகத் தெரிவதில்லை என்றார். மிக மகிழ்ச்சியான விஷயம்.

இங்கிலாந்துப் பகுதியில் கூடும் பறவைகள் பற்றி முன்னர் வலைப்பதிவில் எழுதியிருந்தேன். How to be a bad birdwatcher எனும் புத்தகத்தைப் படித்தபின் பறவைகளைக் கவனிப்பதில் (எலெக்ட்ரிக் கம்பியைப் பார்ப்பது போல ஏனோ பறவைகளைப் பார்ப்பது என எழுதமுடிவதில்லை) இருக்கும் ஏற்பாடுகள் கொஞ்சம் புரியத் தொடங்கியது. நான் வசிக்கும் ரிக்மேன்ஸ்வொர்த் எனும் கிராமத்தில் தடுக்கி விழுந்தால் Funeral directors எனும் கடைசி பயண ஏற்பாடுகளைச் செய்யும் கடையில்தான் விழ வேண்டும். இப்படிப்பட்ட இடத்தில் பொதுவாக அரசு சவுகரியங்கள் அளவுக்கதிகமாக இருக்கும். வயதானவர்களுக்கென ஷாப்பிங் வண்டிகள், வீட்டையும் தோட்டத்தையும் சுத்தப்படுத்த கவுன்சில் எனப்படும் ஊராட்சி ஒன்றிய ஊழியர்கள் என ராஜ வாழ்க்கை வாழ்பவர்கள். தோட்டத்துக் கழிவுகள், பிளாஸ்டிக் கழிவுகள், அட்டைப்பெட்டிகள் என மண்ணில் மக்கி அழியக்கூடிய பொருட்களையும் இதர கழிவுகளையும் சரியாகப் பிரித்து வைக்க தனித்தனி குப்பைத் தொட்டிகள் உள்ளன. ஒழுங்காக தரம் பிரித்து குப்பை கொட்டவே வாரயிறுதியைச் செலவு செய்கிறார்கள். இப்படியாக இங்கு வசிக்கும் பலருக்கும் பொதுவாகவே இயற்கை பற்றிய அக்கறை அதிகமாக உள்ளது. தனது வீட்டுத் தோட்டத்தில் செர்ரிப் பழங்களைத் தின்ன வரும் பறவைகள் குறைவது போலத் தெரிந்தால் அவசர போலிஸைக் கூப்பிட்டுவிடுவார் என் பக்கத்து வீட்டுப் பாட்டி. RSPB எனும் பறவைகள் பாதுகாப்பு அமைப்பு போலிஸ் வந்ததும் அவரது பதற்றம் குறையும்.

இப்படித்தான் வாழவேண்டும் எனத் தங்களுக்குள் திட்டமிட்ட சட்டகத்துள் வாழும் மனிதர்களுக்கிடையே ஜொனாதன் லிவிங்ஸ்டோன் போன்ற ’கடற்புள்ளு’ (seagull - நன்றி : நாடோடித்தடம், கவிஞர் ராஜ சுந்தரராஜன்) வாழ்ந்தால் எப்படி இருக்கும்? வெளியான முப்பது வருடங்களுக்குப் பின்னும் விற்பனையில் உலக அளவில் சக்கப்போடு போடுவதில் பைபிளுக்குப் பிறகு இந்த புத்தகம்தான் எனச் சொல்லலாம். அந்தளவுக்கு படிக்கும் ஒவ்வொருவரையும் ஒவ்வொரு விதத்தில் இந்த புத்தகம் பாதித்திருக்கிறது.

10 Nov 2012

Jeeves in the offing -P.G.Wodehouse

Name        : Jeeves in the offing
Author       : P.G.Wodehouse
Publishers  : Penguin Books
To Buy      : Amazon

நாவல் எழுதறது பத்தி பி.ஜி.வுட்ஹவுஸ் இப்படி சொல்றாரு “ஒண்ணு, வாழ்க்கை பத்தி துளிக்கூட கவலைப்படாம, என்னை மாதிரி எழுதறது, ரெண்டு, வாழ்க்கையின் அடிநாத பிரச்னைகளை துல்லியமா எழுதறது”. நகைச்சுவை இலக்கியம் எழுதறது ரொம்ப கஷ்டம், நகைச்சுவை இலக்கிய புத்தகத்தை பற்றி எழுதறது அதை விட கஷ்டம். 

எதை நோக்கி ஓடிக்கொண்டு இருக்கிறோம்ன்னு தெரியாம வேகமா ஓடிக்கிட்டு இருக்கு இந்த நகர வாழ்க்கை. "இப்படித்தான் வாழணும், நீ மட்டும் ஏன் வித்தியாசமா இருக்க"ன்னு கேள்வி கேட்கும் மக்கள். ஒரு விதமான நெறிமுறைகளுக்கு உட்பட்டு நீயும் அதே மாதிரிதான் சிந்திக்கணும், செயல்படணும் எதிர்பார்க்கிற மக்கள். இவங்ககூட தினமும் வாழறது கஷ்டம்தான். “குழந்தை ஏன் அழறது? வூட்வர்ட்ஸ் கரிப் வாட்டர் குடுன்னு” விளம்பரத்தில் சொல்ற மாதிரி, மனசு சங்கடமா இருக்கிற நேரங்களில் வுடுஹவுஸ் எழுதிய நாவல்கள் நல்ல மருந்து. அவரோட நாவல்களைப் படிக்கும்போதே நாமும் இதே மாதிரி வாழ்ந்தால் எப்படி இருக்கும்னு யோசிச்சிக்கிட்டேதான் படிக்கிறேன். அது ஒரு ஜாலியான உலகம்.



9 Nov 2012

குமாயுன் புலிகள்- ஜிம் கார்பெட்



நிசப்தமான நள்ளிரவின் இருளில், கானக மரக்கிளையொன்றில் நீங்கள் அமர்ந்திருக்கிறீர்கள். காலைமுதல் காட்டில் நடந்து களைத்துப்போன உடல், கண்கள் சொருகி உறக்கத்தில் தன்னையிழக்கக் காத்திருக்கும்பொழுது மென்பாதமொன்று அடியெடுத்து நடந்து வரும் சலனங்களும் உறுமலும் கேட்கின்றன - நீங்கள் அமர்ந்திருக்கும்  மரக்கிளையை  எம்பிக்குதித்தால்  அது தொட்டுவிட முடியும். அருகாமையில் நெருங்கி வந்துவிட்ட பத்தடி நீள ஆட்கொல்லி புலி ஒன்றிடமிருந்து அந்த உறுமல் எழுந்தால் எப்படி இருக்கும்? நாம் வியர்த்தெழும் கனவில் மட்டுமே நமக்கு அது சாத்தியமாகக்கூடும். அத்தகைய அனுபவங்கள் உண்மையில் வாய்க்கப்பெற்று அதை தரமான மொழியில் வெளியுலகத்திற்கு தெரியப்படுத்தும் வாய்ப்பு கிட்டுவது வெகு சிலருக்கு மட்டுமே சாத்தியம். அவ்வகையில் ஜிம் கார்பெட்டின் குமாயுன் புலிகள் ஒரு அற்புதமான வாசிப்பனுபவத்தை நமக்களிக்கிறது.


ஆம்னிபஸ் இந்த வாரத்தை கானுயிர் வாரமாக கொண்டாடுகிறது. பறவைகள், குதிரைகள், வரிசையில் இன்று நம் தேசிய விலங்காக இருப்பினும், அழிவின் விளிம்பில் நிற்கும் புலியின் வாழ்க்கையைச்சொல்லும் நூல் அறிமுகம்தான் இன்றைய பதிவு. 

8 Nov 2012

Animals in War - Jilly Cooper


Remember them all. They had no choice.

- Animals in War, Jilly Cooper.

கானுயிர் வாரத்தை முன்னிட்டு ஆம்னிபஸ் நண்பர்கள் விலங்குகள் தொடர்பான புத்தகங்களை இந்த வாரம் அறிமுகப்படுத்தி வருகின்றனர். துணி உலர்த்தும் கொடியில் தொங்கும் பேண்ட், சட்டையைப் பார்ப்பதோடு முகமறியா பக்கத்து அறைவாசியின் தொடர்பு முடிந்துவிடும் இக்காலகட்டத்தில் மின்சாரக் கம்பிகளில் தொங்கும் குருவிகளைப் பற்றியும், தெருவோர நாய்களைப் பற்றியும் நமக்கென்ன அக்கறை இருக்கப்போகிறது. நமது அக்கறைகளும் கவலைகளும் திசையறியாமல் சிதறிப்போகும் காலகட்டத்தில் விலங்குகள் பற்றி நாம் தெரிந்து என்ன ஆகப்போகிறது?




யுத்தங்களில் பயன்படுத்தப்பட்டு வந்த விலங்குகள் பற்றிய புத்தகத்தை இன்று பார்க்கலாம். Animals in War எனும் புத்தகத்தை எழுதிய ஜில்லி கூப்பர் ஒரு நாவலாசிரியர். போர் சம்பந்தமான புத்தகளைப் வெளியிடும்பதிப்பாளரின் மனைவி. இந்த புத்தகம் மிகவும் வரவேற்பை பெற்றதும் Animals in War என்று ஒரு தன்னார்வக் குழு ஒன்றை அமைத்து நடத்திவருகிறார். பொதுவாக வீட்டு நாய்களில் மேல் இருக்கும் மேலோட்டமான அக்கறை மட்டுமே தனக்கு ஆரம்பத்தில் இருந்ததாகத் தெரிவிக்கிறார். ஆனால், இரண்டாம் உலகப் போரில் விலங்குகளின் பங்கு பற்றிப் படித்தபின் தனது கண்ணோட்டத்தில் ஒரு மாறுதல் உருவானதாக முன்னுரையில் எழுதியுள்ளார். யுத்தங்களில் பங்கு பெற்ற அனைத்து மிருகங்களையும் நாம் நன்றியோடு நினைத்துப் பார்க்கவேண்டும் - ஏனென்றால் மனிதனின் அடிமையாக இருந்த அவற்றுக்கு அதைத் தவிர வேறு வழி இல்லை. யுத்தங்களில் பங்கு பெற்றாகவேண்டிய துர்ப்பாக்கிய நிலையில் அவை இருந்தன. ஆனால் யுத்தங்களே நடக்காமல் தடுத்திருக்கக்கூடிய வாய்ப்பு நமக்கு இருந்திருக்குமே! அந்த ஒரு காரணத்துக்காகவேணும் நாம் விலங்குகளை நன்றியோடு எண்ணிப் பார்க்க வேண்டும்.


7 Nov 2012

I am Vidya by Living Smile Vidya

I am Vidya
ஆசிரியர்: லிவிங் ஸ்மைல் வித்யா
பக்கங்கள்: 143
விலை: ரூ.100
Oxygen Books

***



ஆண்கள் ஆண்களாகவும், பெண்கள் பெண்களாகவும், நாய்கள் நாய்களாகவும் இருக்க முடிகிறபோது, நாங்கள் மட்டும் என்ன பாவம் செய்தோம்? ஏன் நாங்களாகவே இருக்க முடியவில்லை? - புத்தகம் முழுக்க வித்யாவின் பல சுளீர் கேள்விகள். எதற்கும் நம்மிடம் பதில் இருக்குமா என்று தெரியவில்லை.
வித்யா. திருநங்கை. முன்பு சரவணன். சிறு வயது முதலே தான் ஆண் இல்லை, பெண் என்று தீர்மானித்து, பலரின் அறிவுரைக்குப் பிறகும் பால் மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டவர். இதற்காக அவர் பட்ட கஷ்டங்கள் கொஞ்ச நஞ்சமல்ல என்பதை இந்தப் புத்தகத்தை படித்தால் தெரிந்து கொள்ளலாம்.

பால் மாற்று அறுவை சிகிச்சை இந்தியாவில் இன்னும் சட்டப்பூர்வமாக்கப்படவில்லை. பின்னர் இவர் செய்து கொண்டது? அனுமதி பெறாத மருத்துவமனை போன்ற ஒரு இடத்தில். அந்த மருத்துவமனை, சிகிச்சை, சிகிச்சைக்குப் பிறகான இரண்டு மாத கால கட்டங்களில் அவர் பட்ட அவஸ்தை ஆகியவற்றை விவரிக்கும் அத்தியாயம் (இதுவே முதல் அத்தியாமும் கூட) மிகக் கொடூரமானது. படிக்கும்போதே மனம்  பதறுகிறது. இவை அனைத்தும் இவருக்கு முன்னரே தெரிந்திருந்தாலும், ஆண் உடலில் ஒரு பெண்ணாக இருக்கமுடியாது என்று தீர்மானத்துடன் இருந்ததால், இந்த சிகிச்சைக்கு ஒத்துக் கொண்டுள்ளார்.

சமுதாயத்தில் ஒன்றுபட்டு வாழமுடியாத திருநங்கைகள் ஒரு அமைப்பாக சேர்ந்து வாழ்வதை விளக்கியிருக்கிறார். அவர்களுக்குள் பல பதவிகள், அறிவிக்கப்படாத விதிகள் உள்ளன என்று தெரிந்து கொள்கிறோம். இவர்களின் வருங்காலத்திற்கு பணம் எப்படி சேர்க்கிறார்கள்? படிப்பதற்கே கஷ்டமாக இருப்பதை சொல்கிறார் வித்யா. கடைகளில் (அல்லது புகைவண்டிகளில்) கையேந்துவது அல்லது பாலியல் தொழிலில் ஈடுபடுவது.

வித்யாவை பொறுத்தவரை பாலியல் தொழிலில் ஈடுபடுவதை அறவே விரும்பாததால், தன் சிகிச்சைக்கான பணத்திற்காக கடைகளில் /
புகைவண்டிகளில் கையேந்துவதையும், சின்னச்சின்ன பொருட்களை விற்பது போன்ற முயற்சிகளையும் செய்திருக்கிறார். இந்த சமயங்களில் அவருக்குக் கிடைத்த அனுபவங்கள் நம்மை அதிர்ச்சிக்கு உள்ளாக்கும்.

திருநங்கைகளை உறவினர்களே கைவிட்டு விடும்படியான சூழலில், நன்றாக படித்துள்ள இவர் (மொழியியலில் முதுகலை பட்டம் பெற்றவர்; மற்றும் முனைவர் பட்டத்திற்கு படிக்கும்படியான ஒரு வாய்ப்பு கிடைத்தது) ஒரு சொந்த வேலையில் அமர்ந்து ஜெயித்துக் காட்ட வேண்டுமென்ற முனைப்போடு இருந்தவர். பல்கலைக்கழக நண்பர்கள் சிலரின் உதவியோடு அதை நிறைவேற்றியும் காட்டியுள்ளார். 

திருநங்கைகளின் நல்வாழ்வுக்காக தற்போது பாடுபட்டுக் கொண்டிருக்கும் வித்யா பல நல்ல யோசனைகளை முன்வைக்கிறார். அவற்றில் சில:
* பள்ளியிலேயே குழந்தைகளுக்கு இவர்களைப் பற்றிய அறிமுகம் கொடுக்கப்பட வேண்டும்.
* வேலைகளில் இடஒதுக்கீடு கொடுக்கலாம்.
* திரைப்பட தணிக்கைத் துறையினர் இன்னும் கண்டிப்பாக இருந்து திருநங்கைகளைப் பற்றிய காட்சிகளை கவனத்துடன் கையாள வேண்டும்.

ஆணாக பிறக்கும் ஒருவர், எப்படி பெண்ணாக நினைத்து அப்படியே மாற முயற்சிக்கிறார். இந்த பாதையில் அவருக்கு கிடைக்கும் அவமானங்கள், வசைகள், அவர் முழுவதும் பெண்ணாக மாறியபின் முடிந்து விடுகிறதா, என்றால் இல்லை; பிறகும் அவை வேறு வகைகளில் தொடர்கிறது. இவை அனைத்தும் வெளியிலிருந்து  நம்மால் புரிந்து கொள்ளவே முடியாது என்பது வித்யாவின் புத்தகத்தை படித்தால்தான் புரியும்.

நான் (என் போன்ற மக்களுக்காக) சொர்க்கத்தை கேட்கவில்லை. எங்களை நரகத்திலிருந்து விடுவியுங்கள் என வேண்டுகோள் வைக்கும் வித்யாவின் கதையை படித்தால், திருநங்கைகள் பற்றிய பார்வை கண்டிப்பாக மாறும். அவர் விரும்பும் மாற்றமும் இதுவே.

***



Related Posts Plugin for WordPress, Blogger...