எம். வி. வெங்கட்ராம் எழுதிய 'இருட்டு' நாவலின் முதல் பத்தி தமிழிலக்கிய வரலாற்றின் மிக முக்கியமான பத்திகளில் ஒன்று. நாவல்களின் சிறந்த துவக்கப் பத்திகள் என்று யாராவது தொகை நூல் வெளியிட்டால் அதில் இதற்கு நிச்சயம் ஒரு இடமுண்டு.
"குளிர் தாங்க முடியாதபடி இருந்தது. அடர்த்தியான பனியை அள்ளி வந்த காற்று, காரைக் கீழே தள்ள முயன்று முடியாததாலோ என்னவோ, எங்கள் மீது முழு வேகத்துடன் பாய்ந்தது. என் கை கால்கள், ஏன், உடம்பு முழுவதுமே விறைத்துக் கொண்டிருந்தது. நரம்புகள் தெரிக்க விரும்புகிறவை போல் புடைத்துக் கொண்டன; எலும்புகள்கூட மரத்தன. அந்தக் குளிர், நெருப்பு போல் சுட்டது."
"சென்னையிலிருந்து கும்பகோணத்துக்கு திரும்பிக் கொண்டு இருந்தது அந்த டாக்ஸி," என்ற அடுத்த பத்தியின் முதல் வாக்கியத்திலேயே ஏமாற்றமாகி விடுகிறது. இந்தப் பயணம் லெனின்கிராடிலிருந்து மாஸ்கோவுக்கு இருக்கக் கூடாதா! - 'என்ன பனி அது, இரண்டு அடியில் நிற்கிற ஆள்கூடக் கண்ணுக்குத் தெரியாதபடி! ஆகாசத்துக்கும் பூமிக்கும் சேர்த்து திரையிட்டதுபோல் கொட்டியது. விண்மீன்களும் களையிழந்து நடுங்கிக் கொண்டிருந்தன..."
அசாதாரணங்களை எழுதுவதில் மற்றவர்களிடம் காண்பதற்கில்லாத ஒரு வேகம் எம்விவியின் எழுத்தில் இருக்கிறது. இது நள்ளிரவின் மயானக் காட்சி : "சிறிது நேரத்துக்கு முந்தி சிதையில் அடுக்கப்பட்ட பிரேதம், விராட்டிகளால் மண்டுகிற புகை நடுவில், ஒளி கக்கியபடி எரிந்தது; அங்கு அடர்ந்திருந்த இருட்டு, திடீரென்று கண்ணைத் திறந்து ஒளி காட்டிக் கண்ணை மூடிக் கொள்வதுபோல் அது தோன்றியது". சாதாரண எழுத்தா இது!
1958ல் எழுதப்பட்ட இந்தக் கதையில் கூத்தரசுவும் வெண்ணிலாவும் இறைமறுப்பாளர்கள். புலன்களுக்கு அப்பாற்பட்ட அறிவு கிடையாது என்றும் புலனின்பத்தைச் சுகிப்பதே வாழ்க்கையைக் கொண்டாடுவதாகும் என்றும் நம்புகிறார்கள். மெய்ப்பொருள் கண்டோர் கழகம் என்ற ஒரு சமூக இயக்கத்தைத் துவக்கி தங்கள் கொள்கைகளைப் பரப்புகிறார்கள்.
இதில் வெண்ணிலாவிடம் ஒரு அமானுடத்தன்மை இருக்கிறது - உள்ளபடியே இருக்கும் ஒருவரை வெறுப்பது போல் கடவுளை மிகத் தீவிரமாக வெறுக்கிறாள் அவள். பகுத்தறிவாளர்கள் மீதுள்ள தன் கோபத்தை எம்விவி வெண்ணிலாவைக் கொண்டு தீர்த்துக் கொண்டதாகத் தோன்றுகிறது. புதுமணமான தம்பதியர் இருவரும் பகலில் இறைமறுப்பு, இரவில் மிதமிஞ்சிய சம்போகம் என்று பொழுதைக் கழிக்கின்றனர். இதனால் கூத்தரசுவுக்கு நரம்புத் தளர்ச்சி ஏற்படுகிறது, ஓர் இரவில், தன்னருகே உறங்கிக் கொண்டிருக்கும் வெண்ணிலா அங்கங்கள் துண்டு துண்டாக சிதருண்டிருக்கும் காட்சியை இருட்டில் காண்கிறான் கூத்தரசு.
மருத்துவர் அம்பலவாணர் அவளுக்கு பேய் பிடித்திருக்கிறது என்பதை மருத்துவ மற்றும் உளவியல் காரணங்களைச் சொல்லி விளக்குகிறார். அது மட்டுமல்ல, அந்தப் பேய் கூத்தரசுவையும் பிடிக்கப் போகிறது என்றும் எச்சரிக்கிறார். ராம நாமத்தை ஜெபித்து தன்னைக் காப்பாற்றிக் கொள்ளும்படி அவனுக்கு அறிவுரை வழங்கப்படுகிறது. அவனது தியானத்துக்கு உதவியாக ராமர் பட்டாபிஷேக திருவுருவப் படத்தையும் தருகிறார். கூத்தரசுவும் அம்பலவாணர் சொன்னவாறே செய்து தன்னைக் காப்பாற்றிக் கொள்கிறான், ஆனால் வெண்ணிலாவின் நிலைமை முற்றிப் போய் விட்டதால் அவளைக் காப்பாற்ற வழியில்லாமல் போய் விடுகிறது.
இந்தக் கதையின் பாத்திரப்படைப்பும் நிகழ்வுகளும் எம்விவிக்கு இறை மறுப்பின்பாலிருந்த விலகலைப் பேசும் கருவிகளாகவே இருக்கின்றன. இறை மறுப்பாளர்கள் பைத்தியக்காரத்தனமான தீவிர வெறி பிடித்தவர்கள் என்பது மட்டுமில்லாமல், ஏதோ ஒரு அமானுட சக்திக்கு பலியானவர்களும்கூட என்பதுதான் கதையில் தொடர்ந்து வெளிப்படும் சித்திரம். ஏறத்தாழ இதைச் சொல்லவே கதை எழுதப்பட்டது போன்ற தோற்றம் கிடைப்பதால் நமக்கு மிகவும் தட்டையான வாசிப்பு அனுபவத்தை மட்டுமே இருட்டு அளிக்கிறது.
இவ்வாறு சொன்னாலும், படிக்க முடியாத கதையல்ல. 110 பக்கம் படிப்பது ஒன்றும் கடினமான காரியமல்ல, இருந்தாலும் ஒரே மூச்சில் அட்டை முதல் அட்டை வரை படித்துவிட்டுதான் கீழே வைத்தேன். அன்றிரவு தூங்கும்போது சற்றே அச்சமாகக்கூட இருந்தது. இந்த நாவலைப் பொருத்தவரை, இப்படியெல்லாம் எழுதக்கூடாது என்று வேண்டுமானால் சொல்லலாம், இதையெல்லாம் படிக்க முடியாது என்று சொல்வதற்கில்லை.

"இலக்கிய ஆக்கம் என்பது மிகச்சிக்கலான உளவியல் நிகழ்வு. அதன் சாராம்சமான விஷயம் எழுத்தாளனின் ஆழ்மன எழுச்சிதான். படைப்பு அதன் மொழிவெளிப்பாடு மட்டுமே. ஆனால் அதன் வெளிப்பாட்டில் எவ்வளவோ புறவிஷயங்கள் கலந்துவிடுகின்றன. எழுத்தாளனின் அகங்காரம், அவனுடைய அடிமன ஆசைகள், சமகால பண்பாட்டுக்கூறுகள், அரசியல்கள்… அவற்றை எவராலும் முழுமையாகப் பிரித்து ஆராய்ந்துவிட முடியாது," என்று தன் வலைதளத்தில் அண்மையில் ஜெயமோகன் எழுதியிருப்பது நினைவுக்கு வருகிறது.
எம் வி வெங்கட்ராமின் நாவலில் ஜெயமோகன் மேற்சொன்ன எல்லாமும் இருக்கின்றன, ஆனால் புனைவுக்கு கற்பனை கலந்த மெய்ம்மை தேவைப்படுகிறது - அந்தக் கற்பனை உண்மைக்கு வேறொரு இயல்பு தருவதாக இருக்க வேண்டும், தியானம் செய்கிற யோகியர்கள் பூமிக்கு கால் அடி அரை அடி என்று கொஞ்சமே கொஞ்சம் உயர்கிற மாதிரி. எந்த யோகியும் இதுவரை தியான மண்டபத்தின் கூரையை முட்டிக்கொண்டு நின்றதாக நான் கேள்விப்பட்டதில்லை. காரணம், அந்த மாதிரியான லிட்டரலான உண்மைகள் ஒரு மந்திரவாதியின் வேலையாக இருக்கின்றன. தியானத்தில் மனச்சுமைகளை இறக்கி வைத்தவன் முழுக்கவும் லேசாகி கொஞ்சமே கொஞ்சம் பூமியை விட்டு மேலெழும்புவதில் ஒரு கவித்துவமான அர்த்தம் இருக்கிறது. அதற்காக பாரசீக மந்திரவாதி போல் வானத்தில் பறக்க வேண்டுமா என்ன!
எழுத்தாளனின் ஆழ்மன எழுச்சிதான் ஒரு இலக்கிய ஆக்கத்தின் சாராம்சம் என்று சொல்வது உண்மைதான் என்றாலும், அது படைப்பாக மொழிவெளிப்பாடு காணும்போது எவ்வளவுக்கு அவனது அவசரங்கள் அவசியங்கள் அவஸ்தைகளைக் கட்டறுத்துக் கொண்டு எழுத்தாளனைவிட்டு ஒண்ணரையங்குலமாவது உயர்ந்து எழும்புகிறது என்பதில்தான் ஒரு புனைவாக அது வெற்றி பெறுகிறது.
வெறுமே ப்ரொஜக்சனாக இருப்பதில் கலை இல்லை - பயிற்சியும் தேர்ச்சியும் தென்பட்டால்தான் கலை. படைப்புக்குள் ஆசிரியர் இருப்பதைத் தவிர்க்க முடியாது, ஆனால் பாத்திரங்கள் அத்தனையும் அவன் ஆட்டுவிக்கும் பொம்மைகளாக, ஆசிரியன் மறைத்து வைத்திருக்கும் ஏதோ ஒரு குறிக்கோளை நோக்கிச் செலுத்தப்படும் எந்திரங்களாக, படைப்பெல்லாம் ஆசிரியனே இருந்தால்தான் பிரச்சினை. அதுதான் இங்கும் பிரச்சினை.
இருட்டு, எம். வி. வெங்கட்ராம் (1958)
வானதி பதிப்பகம், தொடர்பு எண் : 04424342810
விலை ரூ. 1.25
புகைப்பட உதவி : ஆபிதீன் பக்கங்கள்
No comments:
Post a Comment