”ட்ட்ட்ட்ட்டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய் உன்ன சும்மா விடமாட்டேண்டாஆஆ....”
“என் கிட்டயா சவால் விடற? நான் எமனுக்கே எமன்டி”
“நீ எப்படி அவனோட வாழ்ந்துடறன்னு நான் பாத்துடறேன்”
“என் புருஷனை என்கிட்ட இருந்து பிரிச்ச உன்கிட்ட இருந்து உன் புருஷனைப் பிரிச்சி அவனோட வாழ்ந்து காட்டலை.... என் பேரு மோனீ இல்லடி”
”முடிஞ்சா அதையும் செஞ்சு பாருடி”
இவை எல்லாம் சில சாம்பிள் வசனங்கள். இவையெல்லாம்தான் இன்றைய பெண்மணிகளின் ஃபேவரிட் மெகாத்தொடர்களின் கதைகளும் வசனங்களும்.
நம் பெண்களின் இன்றைய ரசனை மாறிப்போனதா அல்லது மாற்றத்துக்கு உட்படுத்தப்பட்டார்களா அவர்கள் என்பது விவாதத்திற்கு உரிய விஷயம். ஆனாலும் வருத்தம் தரும் நிஜம்.
நன்றி: சிலிகன்ஷெல்ஃப்
காபிப்பொடி வாங்கப் போன இடத்தில் காப்பிக்கொட்டை அரைபடும் நேர அவகாசத்தில் பக்கத்துக் காயலான் கடையில் சொளையமிட்டதில் அகப்பட்டது ஒரு எண்பதுகளின் இந்துமதி குறுநாவல்களின் தொகுப்பு. அஞ்சு ரூபாய் என்ற பெருவிலை கொடுத்து வாங்கவேண்டியதாயிற்று. (உபதகவல்: Men are from Mars; Women are from Venus'க்கு பத்து ரூபாய் விலை)
நல்ல நாடகத்தனம் கலந்த கதைகள் மூன்று. மாலைமலர், குங்குமச் சிமிழ், மக்கள் தொடர்பு இதழ்களில் வெளியான தொடர்களின் தொகுப்பு. நிஜத்துக்கு அருகில் சம்பவங்கள், சற்றே விலகி நிற்கும் வசனங்கள். இதுதான் புத்தகம்.
பொதுவாக பெண் எழுத்தாளர்கள் எழுதும் புத்தகங்களைப் படிக்கும் பொறுமை எனக்கு இருந்ததில்லை. இருந்தாலும் தலைப்பின் சுவாரசியமும், பழைய பேப்பர் கடையில் கிடைத்த பொக்கிஷம் போன்ற புத்தகம் என்ற நினைப்பும் இந்தப் புத்தகத்தை வாசிக்க வைத்தன.
எண்பதுகளின் பெண்களின் ப்ரச்னைகள் பற்றிதான் இருக்கும் என்று திடமான நம்பிக்கையுடன் பக்கங்களைப் புரட்டினேன். காலம் கடந்தும் இந்த மெகாசீரியல் சம்பவங்களும் வசனங்களும்தான் மாறியிருக்கின்றன. நிஜத்தில் அன்றும் இன்றும் நிறைய பெண்களின் நிலைமை அப்படியேதான் இருக்கிறது. கதையில் சம்பவத்தில் நாடகத்தனம் இருந்தாலும் கதைகளின் கருவின் பின்னணியில் நிலவும் நிஜம் இன்னமும் தொடர்கிறது. இந்த மூன்று குறுநாவல் கதாநாயகிகளின் நடமாடும் உருவங்களையும் இன்றும் நெருக்கத்தில் பார்த்துக் கொண்டிருப்பவன் நான் என்ற முறையில் இதனைச் சொல்கிறேன்.
பெண்கள் இன்று ஸ்கூட்டியில் சுற்றுகிறார்கள், ப்யூட்டி பார்லர் போகிறார்கள், லெக்கின்ஸ் போட்டுக் கொண்டு உலாத்துகிறார்கள் என்று சுதந்தரத்தின் வரையறையாக நாம் நிர்ணயித்து வைத்திருந்த விஷயங்களைப் பட்டியலிட்டு, “ பெண்கள் சுதந்தரம் அடைந்து விட்டார்கள். அடிமைத்தளை உடைந்தது”, என்றெல்லாம் சொல்ல வேண்டும் போலத்தான் இருக்கிறது.
ஆனாலும் நிஜத்தில் சற்றே பார்க்கையில் அவர்களின் அந்த சுதந்தர உலாத்தல்களில் கண்ணுக்குத் தெரியாத ஒரு கயிறு அவர்களை ஆட்டிப்படைப்பதை காணலாம். அந்தக் கயிறின் மறுமுனை அவள் அப்பாவிடமோ அல்லது கணவனிடமோ இருக்கலாம்.
மாயக்கயிறோடு உலாவரும் ஸ்கூட்டிப் பெண்கள் ஒருபுறம் இருக்க இன்னமும் வாய் திறந்து பேச அனுமதி அமையாத பெண்களும் இன்னமும் இருக்கிறார்கள்.
“என் வைஃப் ஜீன்ஸ் போட்டா எங்க அப்பாவுக்குப் பிடிக்காது”, என்று சொல்லும் ஆண் மகன்கள் இன்னமும் இருக்கும் உலகம் இது.
“பொண்டாட்டிய வேலைக்கு அனுப்பறவன் ஆம்பளை இல்லை”, என்று சொல்பவர்கள் யாரேனும் ஒருத்தராவது உங்கள் வட்டத்தில் இன்னமும் இருப்பார்களே?
”பையன் பொண்ணோட ஃபோன் நம்பர் கேட்டான். என்ன இது அதிகப்ரசங்கித்தனம். இந்த எடம் நமக்கு சரிப்பட்டு வராது”, “பொண்ணோட ஒபீனியன் எதுக்குங்க. நாங்க சொல்றதைக் கேக்கறாப்லதான் நாங்க எங்க பொண்ண வளர்த்துருக்கோம்”, என்றெல்லாம் பேசும் பெற்றோர்களும் இன்னமும் இங்கே உலவுகிறார்கள்.
இன்றைக்கே இந்த நிலைமை என்றால் எண்பதுகளின் காலக்கட்டத்துப் பெண்கள் நிலைமை? இந்துமதியின் இந்த மூன்று கதைகளுமே மூன்று பெண்களின் கல்யாணப் பிரச்னையைச் சுற்றியே வட்டமிடுகின்றன.
மாப்பிள்ளை யார் என்னவென்று சரிவர விசாரிக்காமல் பெண்ணை ஓரிடத்தில் கட்டிக் கொடுத்துவிடுவதால் புரட்டிப் போடப்படும் ஒருத்தியின் வாழ்க்கைதான் முதல் கதையான அசோகவனம். தீர்வு எதையும் முன் வைக்காமல், பெற்றோர் செய்த தவறின் காரணமாக அவள் விழுந்துவிடும் அதலபாதாளம் வரை கதை பயணித்து நிறைகிறது.
சொல்லவேண்டிய உண்மைகளை சரிவர பிள்ளை வீட்டாரிடம் சொல்லாமல் பெண்ணை ஓரிடத்தில் கட்டிக் கொடுத்துவிட்டு அங்கு அவள் எதிர்கொள்ளும் பிரச்னைகள்தான் கனகாம்பரப் பூக்கள். சினிமாத்தனமான சுப முடிவு.
கடைசிப் பக்கங்கள் மிஸ்சான படித்து முடிக்காமல் விட்டு “ஙே” என விழி பிதுங்கியதால் மூன்றாவது கதை பற்றி வேண்டாமே.
எண்பதுகளின் பிரபல வாரப் பத்திரிக்கை எழுத்தாளராக வலம் வந்தவர் இந்துமதி. இப்போதைய மெகா சீரியல் ரசிகைகள் கூட்டம் போல அப்போது பெண் எழுத்தாளர்களின் எழுத்துகளுக்கு என பெண் வாசகிகளின் தனிப் பெருங்கூட்டம் இருந்தது. லஷ்மி, சிவசங்கரி, வாஸந்தி, அனுராதா ரமணன் என்று நிறைய பெண் எழுத்தாளர்கள் வாரப் பத்திரிக்கைகளை அலங்கரித்த காலகட்டத்தில் வந்த புத்தகம். குடும்ப வாழ்க்கையிலும் உழன்றுகொண்டு ஷிஃப்ட் முறையில் உழைத்து எழுதப்பட்ட கதைகளாக இருக்கக்கூடும் என்று படிக்கையில் புலப்படுகிறது.
இந்தப் புத்தகத்தைப் பொருத்தவரை, நீங்கள் பிரமாதமான இலக்கிய எழுத்துகளை வாசித்திருந்தீர்களேயானால் இந்துமதியின் எழுத்துகள் உங்களுக்கு நிச்சயம் ஆயாசம் தரும். அப்படிப்பட்டவர்களுக்கு ஒரு காலகட்டத்தில் நம் பெண் வாசகிகளின் ரசனை, வாசிப்புத் திறன் எப்படி இருந்தது என்று தெரிந்து கொள்ள இந்தப் புத்தகம் உதவக்கூடும் :)
புத்தகத்தின் முக்கியமான ஹைலைட் இந்தப் புத்தகத்தை ஏதோவொரு லெண்டிங் லைப்ரரியில் வாடகைக்கு எடுத்த ஒருவர் அங்கங்கே தந்திருக்கும் கமெண்ட்டுகள்தான்:
அசோகவனம் - இந்துமதி
குறுநாவல்கள்
பூஞ்சோலைப் பதிப்பகம்
முதற்பதிப்பு: நவம்பர் 1995
விலை ரூ.13/-
(இந்தப் புத்தகம் இப்போது எங்கே கிடைக்கும் என்ற தகவல்கள் நம்மிடம் இல்லை)

முதல் கதை: புதினம் இனிமையாக உள்ளது. முன்னுரையில் புதினத்தில் சுருக்கத்தை ஆசிரியர் தந்துவிடுவதால் புதினம் சுவைக்க சுவைக்க சுவை இல்லாமல் போய் விடுகிறது என்பதை கூறிக் கொள்கிறேன், அன்பன், இதயா.
இரண்டாவது: பூஞ்சோலை வெளியிடும் நாவல்கள் எதையுமே முழுமையாகப் படிக்க முடியாது போல உள்ளது, இதயா.
மூன்றாவது: தேவையா இது?நல்ல மனிதர்!
அசோகவனம் - இந்துமதி
குறுநாவல்கள்
பூஞ்சோலைப் பதிப்பகம்
முதற்பதிப்பு: நவம்பர் 1995
விலை ரூ.13/-
(இந்தப் புத்தகம் இப்போது எங்கே கிடைக்கும் என்ற தகவல்கள் நம்மிடம் இல்லை)
நல்ல கதை விமர்சனப் பார்வை !
ReplyDeleteதங்கள் வருகைக்கும் இடுகைக்கும் மிக்க நன்றி!
ReplyDeleteதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி
ReplyDeleteதங்கள் வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி கிரி ராமசுப்ரமணியன்.
Delete