இந்தப் பதிவை பிப்ரவரி மாதம் எழுதியபோது இருந்த சூழ்நிலை வேறு, இப்போது இருக்கும் சூழ்நிலை வேறு. அப்போது பிரெக்ஸிட் பிரச்சினை முடிவுக்கு வந்திருந்தது. அந்தச் சூழ்நிலையில் பொருத்தமாக இருக்கும் என்று தேடிப் பிடித்து இந்த நாவல் பற்றி எழுதினேன், நண்பர்களிடமும் பகிர்ந்து கொண்டேன். அப்புறம் ஏதேதோ காரணங்களால் இதை எழுதியதையே மறந்து விட்டேன். நம்மைப் பற்றி ஏதேதோ நினைத்துக் கொள்கிறோம், அதற்கு மற்றவர்களின் சம்மதத்தையும் சம்பாதித்து விடுகிறோம். அப்புறம் ஒரு நீண்டகால நோக்கில் மட்டுமல்ல, சில மாத அவகாசத்திலேயே அதற்கெல்லாம் அர்த்தமில்லை என்பது புலப்பட்டு விடுகிறது. இருந்தாலும் பரவாயில்லை, எழுதியதை ஏன் வீணாக்க வேண்டும்?
மக்ஈவன் முன்நோக்கி அனுமானித்தது போலவே கொரோனா புண்ணியத்தில் நம் மாபெரும் தொழில், சமூக, நிதி அமைப்புகளின் என்ஜின்கள் ஸ்தம்பித்து நின்று ஒரு தயக்கத்துடன், தீர்மானிக்க முடியாத இருள் கவியும் சூழலில் நகர ஆரம்பித்திருக்கின்றன, எப்போது மீண்டும் ஸ்தம்பித்து நிற்கும், அதற்கான அவகாசம்கூட இருக்குமா என்று தெரியவில்லை. இந்த பெரும் மாற்றத்தின் விளைவுகள் குறித்து மக்ஈவன் வெளிப்படுத்திய அச்சங்கள் நியாயமானவை, அவை பதிவின் பிற்பகுதியில் இணைக்கப்பட்டிருக்கின்றன.
இனி மீட்கப்பட்ட பதிவு: