அகிலனின் கதைகளைப் படிப்பது மிகவும் கொடுமையான அனுபவம் என்று அண்மையில் ஒரு நண்பர் சொன்னார். 'நீங்கள் அகிலனின் மொழிபெயர்ப்புகளை வாசிக்க வேண்டும், அவை மிக அருமையானவை,' என்று அவருக்கு பதிலளித்தார் மற்றொரு நண்பர். அகிலன், மாப்பஸான் கதைகள் மற்றும் ஆஸ்கார் ஒயில்டை மொழிபெயர்த்திருக்கிறார் என்பது எனக்கு ஒரு நம்ப முடியாத செய்தியாக இருந்தது. விக்டோரிய காலத்து ஒழுக்க விழுமியங்களுக்கு எதிரான கலகக்காரனாக இருந்த ஒயில்டு, அவரது தற்பாலின விழைவால் எழுந்த பிரச்சினைகளுக்காக மிகக் கடுமையாக தண்டிக்கப்பட்டார். மத்தாப்பாகத் தெறிக்கும் ஒயில்டின் மொழி மற்றொரு காரணம் - அவரது எழுத்தில் மேற்கோள்களாக கையாளத்தக்கவற்றைத் தேர்ந்தெடுத்துப் பதிப்பித்த முன்னூறு பக்கங்களுக்கும் மேற்பட்ட புத்தகத்தை வாசித்திருக்கிறேன், ஒயில்டின் எழுத்தில் ஒவ்வொரு பத்தியிலும் ஒரு மேற்கோளைக் காணலாம். "சினிக் என்பவன் யார்? எல்லாவற்றின் விலையையும் அறிந்தவன், எதன் மதிப்பையும் அறியாதவன்" என்ற ஒரு மேற்கோளே காலத்துக்கும் போதும். அகிலனின் இழுத்துப் போர்த்திய, கனமான நடையை, "நாமெல்லாரும் சாக்கடையில்தான் கிடக்கிறோம், ஆனால் நம்மில் சிலர்தான் நட்சத்திரங்களைப் பார்க்கிறோம்" என்று சொன்னவரோடு இணைத்தே பார்க்க முடியவில்லை.
ஆஸ்கார் ஒயில்டின் சலோமி என்ற நாடகத்தை அகிலன் தாகம் என்ற குறுநாவலாக மொழிபெயர்த்திருக்கிறார், அதைவிட, தழுவி எழுதியிருக்கிறார் என்று சொல்லலாம். ஒரு நாடகத்தை குறுநாவலாக மொழிபெயர்க்க முடியாது என்பது மட்டுமல்ல, அகிலன் நிறைய சுதந்திரம் எடுத்துக்கொண்டுதான் இந்த வேலையைச் செய்திருக்கிறார். அகிலனுக்கும் ஒயில்டுக்கும் என்ன ஒற்றுமை, இந்தக் கதையை ஏன் அவர் மொழிபெயர்க்க எடுத்துக்கொண்டார் என்பது ஆச்சரியமாக இருக்கிறது. அகிலனின் 'கற்பான' தழுவல் ஒயில்டின் வரம்பு மீறிய தழுவலைச் சுத்திகரிப்பதாக இருக்கிறது.