சிறப்பு பதிவர் : அஜய்
போர் குறித்து பலருக்கும் இருக்கும் எண்ணம் என்ன? போர்க்காலம் தேசப்பற்று எழுச்சியடையும் காலம், அது வெறியாகவும் மாறும் காலம். போர்க்களத்தில் தங்கள் வாழ்வை பலி கொடுக்கும் இளைஞர்களைப் பார்த்து மற்றவர்கள் பெருமைப்படுகிறார்கள், அவர்களுக்காக பரிதாபப்படுகிறார்கள். போர்க்களம், தேசப்பற்று, அதில் களப்பலி காணும் இளைஞர்கள் குறித்த பெருமையும் துயரமும் - புத்தகங்களும் இதர ஊடகங்களும் இவ்வுணர்வையே பிரச்சாரம் செய்து வந்திருக்கின்றன.
ஆனால் இது குறித்து மாற்றுப் பார்வை கொண்ட எழுத்தாளர்கள் பலரும் உண்டு, அவர்கள் போரின் மறு முகத்தைத் தங்கள் படைப்புகளில் விவரித்திருக்கின்றனர். முதலாம் உலகப் போரிலும் இரண்டாம் உலகப் போரிலும் பங்கெடுத்த போர் வீரர்கள் இவர்கள், தங்கள் அனுபவ சேகரத்தை புத்தகங்களாகப் பண்படுத்திக் கொடுத்திருப்பவர்கள் இவர்கள். எரிக் மரியா ரிமார்க் (Erich Maria Remarque), ஜேம்ஸ் ஜோன்ஸ் (James Jones) போன்றவர்கள் தீவிரமான, நிதர்சன படைப்புகளைத் தந்தனர். கர்ட் வோன்னகட் (Kurt Vonnegut) போன்ற சிலர் நிஜ வாழ்வின் கொடூரத்தை அறிவியல் புனைவுகளாகக் கலந்தடித்துக் கொடுத்தனர்.
அப்புறம் ஜோசப் ஹெல்லர் இருக்கிறார். இரண்டாம் உலகப் போரில் குண்டுவீசிய விமானப்படை வீரர்களில் ஒருவர்தான் ஜோசப் ஹெல்லர். போரின் குரூரங்களை இருண்ட அங்கதமாகப் பார்க்கும் ஒரு ராட்சத பித்து நிலையை போதப் பார்வையாக்கும் அவரது காட்ச் 22 என்ற நாவல் இருக்கிறது - பிணவறையின் அச்சத்தையும் அழுகையையும் சிரிப்பையும் சமநிகழ்வாய் விவரிக்கும் நாவல்.