A.J.Cronin A.K.Ramanujan Amartya Sen Andrea Maria Schenkel Anton Chekhov Arthur Hailey Bill Bryson Deborah Eisenberg Elizabeth Kostova Gay Neck Geoff Dyer George Orwell Harper Lee Henning Mankell Ian McEwan Jared Diamond Jilly Cooper Jonathan Livingstone Seagull Joseph Heller Kenneth Anderson Kiran Desai Maugham Michael McCarthy O.Henry Orhan Pamuk P.G.Wodehouse PB.ஸ்ரீனிவாஸ் R.K.Narayan Richard Bach Ronald Wilks Stephen King Swami Tejomayananda Upamanyu Chatterjee William Sydney porter dhan gopal mukerji mark tully okakura kakuzo saggi steven weinberg vikram seth ஃபெயின்மன் அ. முத்துலிங்கம் அ.கா.பெருமாள் அகிலன் அசோகமித்திரன் அனார் அறிஞர் அண்ணா அறுசுவை அரசு நடராஜன் அழகியசிங்கர் ஆ. சிதம்பரகுற்றாலம் ஆதவன் ஆர்.கே.நாராயண் ஆர்.ஷண்முகசுந்தரம் ஆஸ்கார் ஒயில்டு இடாலோ கால்வினோ இந்திரா பார்த்தசாரதி இந்துமதி இரா. நாறும்பூநாதன் இரா.நடராசன் இரா.முருகன் இரா.முருகவேள் இலக்கிய வீதி இனியவன் இலவச கொத்தனார் உமா சம்பத் என்.சொக்கன் என்.ராமதுரை எம் கோபாலகிருஷ்ணன் எம். வி. வெங்கட்ராம் எர்னெஸ்ட் ஹெமிங்வே எஸ். ராமகிருஷ்ணன் எஸ்.சந்திரமௌலி ஏ.கே.ராமானுஜன் ஏ.கோபண்ணா ஒல்கா பெரோவ்ஸ்கயா க.நா.சு கண்மணி குணசேகரன கரிச்சான் குஞ்சு கலாப்ரியா காப்கா காலபைரவன் கி. ராஜநாராயணன் குமரி எஸ்.நீலகண்டன் குல்தீப் நய்யார் கே நெக் கோபிநாத் கோபுலு சந்திரசேகர சர்மா சமஸ் சல்மான் ரஷ்டி சா. கந்தசாமி சா.பாலுசாமி சாருநிவேதிதா சாலீம் அலி சி.சரவணகார்த்திகேயன் சி.சு.செல்லப்பா சிபி.கே.சாலமன் சு. வேணுகோபால் சுகுமாரன் சுஜாதா சுந்தர ராமசாமி சுனில் ஜோகி சுப்புடு சுவாமி விவேகானந்தர் செல்லம்மா பாரதி செள.ராஜன் சே. இரகுராமன் சோம.வள்ளியப்பன் ஜனனி ரமேஷ் ஜான் பான்வில் ஜி.நாகராஜன் ஜிம் கார்பெட் ஜெயகாந்தன் ஜெயமோகன் ஜே. ஹெச். வில்லியம்ஸ் ஜோதிநரசிம்மன் டாக்டர். சு.முத்து செல்லக்குமார் டாக்டர். பி.எம்.ஹெக்டே டாக்டர்.எல்.மகாதேவன் தமிழ் மகன் தரம்பால் தி. ஜானகிராமன் தி.ஜானகிராமன் தியடோர் பாஸ்கர் து.கணேசன் ந.பிச்சமூர்த்தி நகுலன் நடிகர் சிவகுமார் நமீதா தேவிதயாள் நா.முத்துக்குமார் நாகம்மாள் நாகூர் ரூமி நாஞ்சில் நாடன் ப. சிங்காரம் பல்லவி அய்யர் பழ.அதியமான் பழ.கருப்பையா பவன் வர்மா பவா செல்லதுரை பஷீர் பா.ராகவன் பாம்பே ஜெயஸ்ரீ பாரதியார் பாலகுமாரன் பாலச்சந்திரன் சுள்ளிக்காடு பாலு மகேந்திரா பாவண்ணன் பி.எச்.டேனியல் பி.எம்.சுந்தரம் பி.ஏ.கிருஷ்ணன் பி.வி.ராமஸ்வாமி பிரமிள் பெஞ்சமின் ப்ளாக் பெருமாள் முருகன் பொ.கருணாகரமூர்த்தி மகாகவி பாரதியார் மதன் மனுஷ்யபுத்திரன் மருதன் மலர்மன்னன் மா.கிருஷ்ணன் மார்க்வெஸ் மாஸ்தி மில்லி போலக் முகில் முஹமது யூனுஸ் யதுகிரி அம்மாள் யுவன் சந்திரசேகர் ரகோத்தமன் ரமணி சந்திரன் ரா.கி.ரங்கராஜன் ராஜாஜி லலிதாராம் லா.ச.ரா லிவிங்ஸ்மைல் வித்யா லூசியன் ஸ்ட்ரைக் லெமூர் வ.ரா வண்ணதாசன் வா.மு கோமு வாலி விட்டல் ராவ் வின்சென்ட் ஷீன் விளதீமிர் பகமோலவ் வீயெஸ்வி வுடி ஆலன் வெரியர் எல்வின் வேதவல்லி வைக்கம் முகமது பஷீர் வைணவச் சுடராழி ஆ. எதிராஜன் வைரமுத்து ஷோபா சக்தி ஹென்னிங் மான்கெல்
Showing posts with label தி.ஜானகிராமன். Show all posts
Showing posts with label தி.ஜானகிராமன். Show all posts

11 May 2014

மோகமுள் - உயிர்த்திரளின் ஆதார விதி


பயன்பாட்டில் உள்ளவை அனைத்தும் அப்பழுக்கில்லாமல் தொடர்ந்து இருப்பதில்லை. நம் பூஜை அறைகளில் தினமும் ஏற்றி வைக்கப்படும் குத்துவிளக்கு எவ்வளவு பிரகாசமாக எரிந்தாலும், அதில் எண்ணை வடிந்து பச்சை பூத்துவிடுகிறது. வழக்கமாக நாள் கணக்கு வைத்துக்கொண்டு நாம் அவற்றை புளி போட்டுத் தேய்த்து விளக்குவதுபோல் இலக்கியப் படைப்புகளையும் புதுப்பித்துக் கொள்ள முடிந்தால் நன்றாக இருக்கும். தொடர் வாசிப்பில் இருக்கும்போதுகூட  உயர்ந்த இலக்கிய ஆக்கங்கள் தேய்வழக்குகளாகக் குன்றி விடுகின்றன. நண்பர்களுடனான விவாதங்கள் மட்டுமே புதிய வாசிப்புக்கான தேவையை உருவாக்குகின்றன.

அத்தகைய ஒரு விவாதத்தில் என்னுடன் முரண்பட்ட நண்பர்கள் சிலர், தி ஜானகிராமனின் மோகமுள்ளைப் பற்றி  மீண்டும் சிந்திக்கத்  தூண்டினார்கள்.  அவர்களின் முக்கியமான விமர்சனம் தி.ஜா காமம் பற்றிய விசாரணைகளை அடுத்த தளத்திற்கு கொண்டு செல்லவில்லை என்பதும், உன்னதமாக்கல் நிகழவில்லை என்பதும், யமுனா இதற்குத்தானா என்ற கேள்வியை அடைய நாவல் அனாவசியமாக நீள்கிறது என்பதுமாக இருந்தது.

அவர்களுக்கு நன்றி சொல்லி விவாதத்தின் தொடர்ச்சியாக என்னுள் எழும் எண்ணங்களை இங்கு பதிவு செய்கிறேன், வாசகர்கள் இந்தப் பார்வையைத் தொடர் விவாதங்களின்மூலம் முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்ற விருப்பம் உண்டு. விவாதங்களே நவீன தமிழ் இலக்கியத்தின் சிறந்த ஆக்கங்களில் ஒன்றான தி ஜானகிராமனின் மோகமுள் நாவலுக்கு துலக்கம் தருவதாக இருக்கும்.




2 Oct 2013

மணக்கும் எழுத்து- நளபாகம்

- ந.ரா.சேதுராமன்  (@chandsethu)

அமரர் தி.ஜானகிராமனின் "சிலிர்ப்பு" கதையை சில வாரத்திற்கு முன்பு படிக்க நேர்ந்தது. அப்போதுதான் கையில் இந்த புத்தகம் இருந்தது நினைவிற்கு வந்து "அம்மா வந்தாள்" படித்த சுமார் ஐந்தாண்டுகளுக்குப் பிறகு திஜாவை கையிலெடுத்தேன். சில அலுவல்கள் காரணமாக தொடர்ந்து படிக்க முடியாமலிருந்து, நேற்றுதான் ஒரே மூச்சாக படித்தும் முடித்தேன்.

அப்புறம் பேசிக்கொண்டிருக்கும்போது, திஜாவின் படைப்புகளில் அதிகம் பேசப்படாத நாவல் இது என்று புத்தகத்தை எனக்களித்த நண்பர் மகேஷ் ஜெயராமன் தெரிவித்தார். அது தவிர, இணையத்தில் படித்த சில மேம்போக்கான விமர்சனங்களும், பொதுவாகவே திஜா மீது இருக்கும் கருத்துக்களும்தான் நான் இதைப் பற்றி எழுதக் காரணம்.  இங்கு "ஜானகிராமனப் படிச்சா நடு வயசு பெண்கள் மீது நமக்கு ஒரு ஈர்ப்பு வந்துடும் சார்" என்று  திஜாவின் எழுத்துகளைப் படித்த முதிர்ந்த தமிழாசிரியர் ஒருவர் சொன்னது நினைவுக்கு வருகிறது.  ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவர் எழுத்தைப் படிக்க ஒரு காரணம் இருக்கும். இப்படிப்பட்ட காரணங்களால்கூட சிலர் திஜாவை படிப்பார்களா என்று வியப்பாகவும், வருத்தமாகவும் இருந்தது.

உறவு, பாலியல்  கிளுகிளுப்புகள் மட்டுமே நிறைந்த  எழுத்தாக திஜாவைப் பார்ப்பது எவ்வளவு தவறான கண்ணோட்டம் என்பது நளபாகத்தை உன்னிப்பாக படித்தவர்களுக்குத் தெரியும், ஏன் அம்மா வந்தாளை புரிந்து படித்தவர்களுக்குக் கூட‌. எளிமையான நடையும், தேங்கி நிற்காமல் போகும் கதையம்சமும்,  ஆழ்பொருளை காற்றைப் போல லேசாக சொல்லிச்செல்லும் பாங்கும் எத்தனை வியப்புக்குரியவை! 



31 Jul 2013

மீறலின் புனிதப் பிரதி - சுகுமாரன்

மீறலின் புனிதப் பிரதி


நல்ல இலக்கியம் என்பது உண்மையை ஒரு படைப்பாளன் தேடும் தவம். உண்மையை அவனவன் கண்ட விதத்தில் வெளிப்படுத்தும்போது மனிதக் குரல்களையும் முகங்களையும்போல சாயல்களும் தனித்தன்மையும் வளமாகக் கொழிக்கின்றன. உண்மையைக் காணத் திராணியில்லாதவர்கள் வேறு எவற்றுக்கெல்லாமோ ஆசைப்பட்டுத் தங்களையே நகல்களாக்கிக் கொண்டு விடுகிறார்கள்.

தி.ஜானகிராமன்

பார்த்துப் பார்த்துத் தீராதவையான கடல், கானகம் போன்றவற்றின் பட்டியல்போல வாசித்துமாளாத சில தமிழ்ப் படைப்புகளின் வரிசை என் மனதுக்குள் இருக்கிறது. அதில் ஒன்று தி. ஜானகிராமனின் ‘அம்மா வந்தாள்’.

மீசை அரும்பத் தொடங்கிய பருவத்தில் முதன்முதலாக வாசித்த இந்த நாவலை மீசைவெளுத்திருக்கும் வயதுவரை பல்வேறு சூழ்நிலைகளில் வாசிக்க நேர்ந்திருக்கிறது. அந்தந்த வயதின் அறிவுக்கும் உணர் வுக்கும் ஏற்ப நாவலை அணுகும் விதங்களிலும் மாற்றங்கள் தொடர்ந்திருக்கின்றன. பதினெட்டு, பத்தொன்பது வயது வாசிப்பின்போது நாவல் விருப்பத்துக்குரியதாக இருந்ததன் காரணம் அதன் இலக்கியக் குணம் மட்டுமல்ல. ‘முன்னங்கையின் சதைத் திரட்சியும் மென்மையும் - தண்ணென்று நெருக்கிக் கட்டிய ஜவந்தி மாலைபோல - மார்பிலும் முதுகிலும் அழுந்திய’ அரூபப் பெண் ஸ்பரிசம் தந்த ரகசியக் கிறக்கமே அதைத் திரும்பத் திரும்ப வாசிக்கத் தூண்டியது. கிறக்கம் கலைந்த பின்னாள் வாசிப்புகளில் நாவல் வெவ்வேறு பொருள்களில் விளங்கியது. அதற்குள் இயங்கும் சிந்தனைத்தளம் தொடர் வாசிப்புக்கு ஈடு கொடுத்தது. நுண் தகவல்களும் காலத்தை மனவியக்கமாக மாற்றியிருக்கும் நேர்த்தியும் பாத்திர உருவாக்கத்தில் செலுத்தியிருக்கும் உளவியல் பின்னல்களும் அதை ஒவ்வொரு வாசிப்பிலும் புதுப்பித்தன. கடல்போல ஆழ்ந்தும் கானகம்போல அடர்ந்த வழிகளைக் காண்பித்தும் மனதில் நிரந்தர இருப்பை உருவாக்கிக்கொண்டிருந்தது; இருக்கிறது. முந்தைய வாசிப்பில் கவனிக்க மறந்தவையும் பிடிபடாமல் பதுங்கியவையுமான நுட்பங்களை மறுவாசிப்பில் வெளிப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

பின்வரும் உதாரணத்தைச் சொல்லலாம்.

23 Oct 2012

அடுத்த வீடு ஐம்பது மைல் - தி.ஜானகிராமன்

முழுசாய் நான் படித்த ஒரு பயணக் கட்டுரை என்று இதற்குமுன் ஏதுமில்லை. எனக்குத் தெரிந்த பயணக் கட்டுரைகள் எல்லாம் குமுதம் வார இதழில் வந்தவைகள்தாம். அவற்றிலும் ஏதேனும் ஒரு சுவாரசிய தலைப்பு, ஊர், புகைப்படம் பார்த்தால் மட்டும் அந்த அத்தியாயத்தை மட்டும் படித்து வைத்தவன்.

திஜா வாரம் என்று ஆம்னிபஸ்சில் இரண்டு வாரங்களுக்கு முன் ஒரு சீரியல்... மன்னிக்கவும்.... சீரீஸ் ஓட்டியபோது அதற்காக வாங்கிய புத்தகம். ஆன்லைனில் ஆர்டர் செய்து சற்றே தாமதமாய்ப் புத்தகம் கிடைக்கப் பெற்று, சற்றே தாமதமாய்ப் படிக்க நேர்ந்ததால் சற்றே தாமதமாய் இந்தப் புத்தக அறிமுகம்.

”அடுத்த வீடு ஐம்பது மைல்” என்ற தலைப்பிலேயே தான் எந்த நாட்டிற்குப் போய் வந்தேன் என்ற க்ளூ’வைத் தந்துவிடுகிறார் திஜா. உங்களால் யூகிக்க முடிகிறதா? உலகின் எந்த ஒரு பிரம்மாண்ட நாட்டில் ஜனத்தொகை அத்தனைக் குறைவாய் இருக்கிறது (அல்லது திஜா எழுதிய காலகட்டத்தி இருந்தது) ?

13 Oct 2012

தி.ஜா.’வின் மோகமுள் ரங்கண்ணா

சிறப்புப் பதிவர்: பாஸ்கர் லக்ஷ்மன்.



என் எந்த ஒரு பழக்கத்திற்கும், நல்லதோ இல்லை கெட்டதோ, அதற்கான விதை இடப்பட்டது என் கல்லூரி நாட்களில்தான். என் தமிழாசிரியர் ஒரு வகுப்பில் ஜானகிராமனின் நாவல்கள் தன்னுள்  பெரிய அளவு பாதிப்பு  ஏற்படுத்தியதில்லை. ஆனால் அவருடைய சிறுகதைகள் பலதும் இலக்கியத் தரமானவை என்றார். அன்றுதான் முதல் முறையாக  தி.ஜா என்ற எழுத்தாளரின் பெயர் பரிச்சயமானது. பிறகு நூலகத்தில் மோகமுள் பார்த்ததும், அதை எடுத்துப் படித்தேன். மோகம் முப்பது நாட்கள். மோகமுள்ளின் மீதுள்ள மோகம் முப்பது ஆண்டுகளாகியும் இன்னும் தீர்ந்த பாடில்லை.

மோகமுள்ளில் பாபு, யமுனா, ராஜம், பாபுவின் தந்தை, ரங்கண்ணா, சாம்பன் என பலர்  வலம் வந்தாலும் ரங்கண்ணா பாத்திரப் படைப்புதான் எனக்கு மிகவும் நெருக்கமாக இருக்கிறது. மோகமுள்ளை Cantor கணத்தைப் (set) போல் மூன்றாகப் பிரித்தால் மத்திய பகுதியில் தோன்றி மறைவதுதான் ரங்கண்ணா பாத்திரம்.

மோகமுள்ளில் ரங்கண்ணாவின் அறிமுகமே சிறப்பான குறியீட்டுத் தன்மை கொண்டது. கர்நாடக இசையின் ஞானப் பிழம்பான ஆளுமையாக. நாம் அவரை முதன்முறையாக அறிகிறோம், அப்போது அவரின் பின்னிருந்து பாபு அவரைப் பார்க்கிறான். ரங்கண்ணாவின் சங்கீத ஞானத்தை எதிர் காலத்தில் அவன் தன் தோளில் தாங்கிச் செல்ல ஏற்பதற்கான அறிகுறியாக இது இருக்கிறது - நம் பார்வையில் ரங்கண்ணாவை அடுத்திருப்பவனாக பாபு புலப்படுகிறான்.



6 Oct 2012

மோகமுள் - தி.ஜானகிராமன்

சிறப்புப் பதிவர்: சுசிலா ராமசுப்ரமணியன்

.....என்னைவிட எட்டு வயது அதிகமான ஒரு பெண். நன்றாகப் படித்தவள். நல்ல வடித்தெடுத்த அழகு. அடிக்கடி அவளோடு பேசிப் பழகும் வாய்ப்புக் கிடைத்தது. ஆழ்ந்த அமைதியும், புத்திக் கூர்மையும், எதையும் கண்டு வியந்துவிடாத அழுத்தமும் நிறைந்த அவளை மரியாதையாகப் போற்றத் தொடங்கினேன். கடைசியில் அது மோகமாக மாறி, அவள் அதைத் தெரிந்துகொண்டு, என்னைப் பார்த்துச் சிரித்துவிட்டுப் போய், ஒரு வருஷம் கழித்து யாரோ ஒரு மின்சார என்ஜினீயரைக் கலியாணம் பண்ணிக் கொண்ட செய்தியைக் கேட்டது.... - .....இந்த எல்லாமாகச் சேர்ந்து, கொதித்து “மோகமுள்” என்ற நாவலாக ஆகிவிட்டது. 
மோகமுள் பிறந்த கதை பற்றி தி.ஜா (நன்றி: சொல்வனம்)


மோகமுள் - இந்த வித்யாசமான தலைப்பே கதையைச் சொல்லிவிடுகிறது. கதையின் நாயகன் பாபு. சற்றே மரபு மீறிய காதலாய் தன்னைவிட மூத்தவளான யமுனாவின் மீது அவன் கொள்ளும் மோகம்; அந்த மோகம் இசையுலகின் உயர்ந்த இடத்தை அவன் அடையும் லட்சியத்திற்கும் அவனுக்கும் இடையில் நின்று நிரடும் நிரடல், இவர்களைச் சுற்றி பலப்பல கதாபாத்திரங்கள் என்று சுமார் 700 பக்கப் புதினம். முன்னூறு அல்லது ஐநூறு வார்த்தைகளில் இந்தப் புத்தகத்திற்கு அறிமுகமோ அல்லது விமர்சனமோ எழுதித் தள்ளுதல் என்பது எந்த வகையிலும் நியாயம் ஆகாது. 

5 Oct 2012

பாஷாங்கராகம் - தி. ஜானகிராமன்

வடக்கு வாசல் யதார்த்தா கி. பென்னேஸ்வரன், "ஜூகல்பந்தி" என்ற ஒரு சிறுகதை தொகுப்பு பதிப்பித்திருக்கிறார். 2006ஆம் ஆண்டு பதிப்பு . எல்லாம் சங்கீதக் கதைகள் : ஸ்வாமிநாத ஆத்ரேயனில் துவங்கி எஸ்/ ராமகிருஷ்ணன் வரை 28 சிறுகதைகள்.  ஜெயமோகன், பிரபஞ்சன், கல்கி, வாஸந்தி, மௌனி,  செ. யோகநாதன், நீல. பத்மநாபன்,  கு. அழகிரிசாமி, சம்யுக்தா என்று நீளும் இந்தப் பட்டியலில் யுவன் சந்திரசேகர், சாரு நிவேதிதா, பா. ராகவன் முதலான இலக்கிய ஆளுமைகளும் உண்டு. நாஞ்சில் நாடன், அ. முத்துலிங்கம், ஆ மாதவன் முதலான முதுபெரும் இலக்கிய பேராளுமைகளும் உண்டு.

அத்தனையையும் எழுத ஆசை, ஆனா தி.ஜா வாரப் பதிவாக இது இருப்பதால் ஒரே ஒரு கதைதான் - "பாஷாங்கராகம்".



4 Oct 2012

அக்பர் சாஸ்திரி - தி. ஜானகிராமன்

சிறப்பு  பதிவர் : மாதவ சோமன்.

தி.ஜா. வாரத்தில் நேற்று பைராகி கோயமுத்தூர் பவபூதி பற்றி எழுதியதில் இப்படி ஒரு கேள்வி கேட்டிருந்தார்:
"ஒரு படைப்பைப் பற்றி எழுதி என்னவாகப்போகிறது? ஏனோ வேஷம் கட்டின நடிகர்களாட்டம் சில மனிதர்கள் வருவதும் பேசுவதும், மூக்கைச் சிந்துவதும், கோவப்பட்டு கத்துவதும் - ஏதோ சினிமா போல நடிப்புதானே? நமக்கும் பொழுது போக ஐந்தாறு பக்கங்களில் அவர்களை எல்லாம் உலவவிட்டு கதைபண்ணிவிட்டுப் செல்பவர்தானே எழுத்தாளர்?"

ஆனால் பார்த்தீர்களேயானால், சில கதைகளை வாசிக்கையில் அதில் உலா வரும் கதாபாத்திரங்களின் குணாதிசயங்கள் நாம் நேரில் சந்திக்கும் சிலரின் குணாதிசயங்களை ஒத்தே இருக்கின்றது என்பது தெரியும். பெரும்பாலான நேரங்களில் அந்தக் கதைகள் நம் மனதோடு ஒட்டிவிட அதுவே காரணமாகவும் அமைந்து விடுகிறது. தி.ஜானகிராமனின் அக்பர் சாஸ்திரி'யின் நாயகரான கோவிந்த சாஸ்திரி அப்படிப்பட்டவர் எனக்கு.


2 Oct 2012

துணை - தி.ஜானகிராமன்

- சிறப்புப் பதிவர்: சிவா கிருஷ்ணமூர்த்தி


"துணை" என்ற திரு. தி.ஜானகிராமன் அவர்களின் சிறுகதை, 1950ல் மணிக்கொடி இதழில் வந்தது. ஐந்தினைப் பதிப்பகம் வெளியீட்டான தி.ஜானகிராமன் படைப்புகள் சிறுகதைகள் தொகுதி-1ல் உள்ளது. நுட்பமான நகைச்சுவைக்கு ஒரு நல்ல உதாரணமாக இந்தக் கதையை தைரியமாகச் சொல்லலாம்.
 வீட்டிற்குள் வரும் கதைசொல்லி அப்பாவுடன் ஒரு தாத்தா ஊஞ்சலில் உட்கார்ந்திருப்பதைப் பார்க்கிறார்.

 தாத்தாவின் பெயர் சின்னக்குழந்தை, வயது எழுபத்தொன்பது.

 அவரை மஸ்டர் டே என்ற வருடத்தில் ஒரு நாள் பென்ஷன் ஆபிஸில் முகத்தைக் காட்டுவதற்காக பத்திரமாய் அழைத்துச் செல்லும் வேலை கதைசொல்லிக்கு வருகிறது சின்னக்குழந்தையை மட்டுமல்ல அவரது தகப்பனார் லேடிகிழவரையும் (லேடி கிழவரின் வயது தொண்ணுற்று எட்டு!).

 அப்பா நன்றாக இருக்கிறாரா என்ற கேள்விக்கு சின்னக்குழந்தை பதிலளிப்பதாகத் தொடங்கும் கதை, லேடி கிழவர் ஆஸ்துமாவினால் படும் சிரமத்தையும் (ஒரு ஐம்பது அல்லது அறுபது வயதுக்காரருக்கு பொருந்தும்) அதையொட்டிய 'அந்தக்கால` விவரணைகளையும் பேசி ஒரு மெல்லிய புன்னகையோடு விரிகிறது.




1 Oct 2012

உயிர்த்தேன் - தி.ஜானகிராமன்

சிறப்புப் பதிவர்:  சந்தியா 

 உள்ளூர் நூலகத்தில் சில சமயம் நல்ல புத்தகங்கள் கிடைக்கும்;அவற்றை ரமணி  சந்திரன், அனுராதா ரமணனோடு அம்மா பெரிய மனது பண்ணி வீட்டுக்கு எடுத்து வருவார். அப்படித்தான் தி.ஜானகிராமனின் 'உயிர்த்தேன்' வீட்டுக்குள் வந்தது.

 தி.ஜாவை முதன்முதலில் செம்பருத்தியில் ஆரம்பித்தது, அப்போது அந்த எழுத்து போர் அடித்தது. மெதுவான விவரணை, அந்தக்கால உலகம் இரண்டும் சேர்ந்து பாதியிலேயே விட்டு விட்டேன். பின்னர் ஒரு முறை ஆனந்த விகடனில் வந்த ஸ்டெல்லா புரூஸின் உறவுக்காரப் பெண் (பெயர் மறந்துவிட்டது) எழுதிய நாவலில் தி.ஜாவின் ‘அன்பே ஆரமுதே’வை சிலாகித்திருப்பார். அதனால் அதையும் வாசித்தேன். அதுவுமே மேற்குறிப்பிட்ட காரணங்களால் அவ்வளவு ரசிக்கமுடியவில்லை. ஒரு நீண்ட இடைவேளைக்குப்பிறகு தி.ஜாவின் ‘முத்துகள் பத்து’ படித்து, பத்துமே பிடித்தது. அதனாலேயே ஆர்வத்துடன் உயிர்த்தேனை எடுத்தேன், முடிக்கும்வரையும் அந்த ஈர்ப்பு கலையவில்லை.



7 Sept 2012

மலர் மஞ்சம் - தி. ஜானகிராமன்

"ஒருவர் மட்டும் குடியிருந்தால் துன்பம் என்றுமில்லை
ஒன்றிருக்க ஒன்று வந்தால் என்றும் அமைதியில்லை"
கண்ணதாசனின்  பாடல் வரிகளும், ஒரு பெண் ஒரே சமயத்தில் இரு ஆண்களை விரும்பும் கதையின் புதுமை குறுகுறுப்புமே எப்போதோ படித்திருந்த தி. ஜானகிராமனின் "மலர்மஞ்சம்" நாவலின் அடியோட்டமாக மனதில் பதிந்திருந்தது. கூடவே,  இனிப்பை உண்டபின்னும் நாவில் தங்கிவிட்ட தித்திப்பின் சுவையை எப்போதும் தரும் தி. ஜாவின் எழுத்தும். மேலதிக விஷயங்களும் பரிமாணங்களும் மறந்துவிட்ட நிலையில், இப்போது மீண்டும் ஒரு முறை படிக்கக் கிடைத்தபோது வேறொரு புதிய நாவலையே படிக்கும் எண்ணம்.





Related Posts Plugin for WordPress, Blogger...