A.J.Cronin A.K.Ramanujan Amartya Sen Andrea Maria Schenkel Anton Chekhov Arthur Hailey Bill Bryson Deborah Eisenberg dhan gopal mukerji Elizabeth Kostova Gay Neck Geoff Dyer George Orwell Harper Lee Henning Mankell Ian McEwan Jared Diamond Jilly Cooper Jonathan Livingstone Seagull Joseph Heller Kenneth Anderson Kiran Desai mark tully Maugham Michael McCarthy O.Henry okakura kakuzo Orhan Pamuk P.G.Wodehouse PB.ஸ்ரீனிவாஸ் R.K.Narayan Richard Bach Ronald Wilks saggi Stephen King steven weinberg Swami Tejomayananda Upamanyu Chatterjee vikram seth William Sydney porter அ. முத்துலிங்கம் அ.கா.பெருமாள் அகிலன் அசோகமித்திரன் அழகியசிங்கர் அறிஞர் அண்ணா அறுசுவை அரசு நடராஜன் அனார் ஆ. சிதம்பரகுற்றாலம் ஆதவன் ஆர்.கே.நாராயண் ஆர்.ஷண்முகசுந்தரம் ஆஸ்கார் ஒயில்டு இடாலோ கால்வினோ இந்திரா பார்த்தசாரதி இந்துமதி இரா. நாறும்பூநாதன் இரா.நடராசன் இரா.முருகவேள் இரா.முருகன் இலக்கிய வீதி இனியவன் இலவச கொத்தனார் உமா சம்பத் எம் கோபாலகிருஷ்ணன் எம். வி. வெங்கட்ராம் எர்னெஸ்ட் ஹெமிங்வே என்.சொக்கன் என்.ராமதுரை எஸ். ராமகிருஷ்ணன் எஸ்.சந்திரமௌலி ஏ.கே.ராமானுஜன் ஏ.கோபண்ணா ஒல்கா பெரோவ்ஸ்கயா ஃபெயின்மன் க.நா.சு கண்மணி குணசேகரன கரிச்சான் குஞ்சு கலாப்ரியா காப்கா காலபைரவன் கி. ராஜநாராயணன் குமரி எஸ்.நீலகண்டன் குல்தீப் நய்யார் கே நெக் கோபிநாத் கோபுலு சந்திரசேகர சர்மா சமஸ் சல்மான் ரஷ்டி சா. கந்தசாமி சா.பாலுசாமி சாருநிவேதிதா சாலீம் அலி சி.சரவணகார்த்திகேயன் சி.சு.செல்லப்பா சிபி.கே.சாலமன் சு. வேணுகோபால் சுகுமாரன் சுந்தர ராமசாமி சுப்புடு சுவாமி விவேகானந்தர் சுனில் ஜோகி சுஜாதா செல்லம்மா பாரதி செள.ராஜன் சே. இரகுராமன் சோம.வள்ளியப்பன் டாக்டர். சு.முத்து செல்லக்குமார் டாக்டர். பி.எம்.ஹெக்டே டாக்டர்.எல்.மகாதேவன் தமிழ் மகன் தரம்பால் தி. ஜானகிராமன் தி.ஜானகிராமன் தியடோர் பாஸ்கர் து.கணேசன் ந.பிச்சமூர்த்தி நகுலன் நடிகர் சிவகுமார் நமீதா தேவிதயாள் நா.முத்துக்குமார் நாகம்மாள் நாகூர் ரூமி நாஞ்சில் நாடன் ப. சிங்காரம் பல்லவி அய்யர் பவன் வர்மா பவா செல்லதுரை பழ.அதியமான் பழ.கருப்பையா பஷீர் பா.ராகவன் பாம்பே ஜெயஸ்ரீ பாரதியார் பாலகுமாரன் பாலச்சந்திரன் சுள்ளிக்காடு பாலு மகேந்திரா பாவண்ணன் பி.எச்.டேனியல் பி.எம்.சுந்தரம் பி.ஏ.கிருஷ்ணன் பி.வி.ராமஸ்வாமி பிரமிள் பெஞ்சமின் ப்ளாக் பெருமாள் முருகன் பொ.கருணாகரமூர்த்தி மகாகவி பாரதியார் மதன் மருதன் மலர்மன்னன் மனுஷ்யபுத்திரன் மா.கிருஷ்ணன் மார்க்வெஸ் மாஸ்தி மில்லி போலக் முகில் முஹமது யூனுஸ் யதுகிரி அம்மாள் யுவன் சந்திரசேகர் ரகோத்தமன் ரமணி சந்திரன் ரா.கி.ரங்கராஜன் ராஜாஜி லலிதாராம் லா.ச.ரா லிவிங்ஸ்மைல் வித்யா லூசியன் ஸ்ட்ரைக் லெமூர் வ.ரா வண்ணதாசன் வா.மு கோமு வாலி விட்டல் ராவ் விளதீமிர் பகமோலவ் வின்சென்ட் ஷீன் வீயெஸ்வி வுடி ஆலன் வெரியர் எல்வின் வேதவல்லி வைக்கம் முகமது பஷீர் வைணவச் சுடராழி ஆ. எதிராஜன் வைரமுத்து ஜனனி ரமேஷ் ஜான் பான்வில் ஜி.நாகராஜன் ஜிம் கார்பெட் ஜெயகாந்தன் ஜெயமோகன் ஜே. ஹெச். வில்லியம்ஸ் ஜோதிநரசிம்மன் ஷோபா சக்தி ஹென்னிங் மான்கெல்

25 Oct 2019

ஜி. கார்ல் மார்க்ஸ்சின் ‘வருவதற்கு முன்பிருந்த வெயில்’, மற்றும் ‘ராக்கெட் தாதா’




ஜி. கார்ல் மார்க்ஸ் நான் ரசிக்கும் முகநூல் பதிவர்களில் ஒருவர். எந்த விஷயமானாலும், அழகாகவும் தெளிவாகவும், பக்கச் சார்பின்றியும் பேசக் கூடியவர். என்ன, அப்பப்ப கெட்ட வார்த்தைகள் சில ஏதாவது எழுதிவிடுவார். அதை மட்டும் கொஞ்சம் சகித்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. அது இப்போது கொஞ்சம் ட்ரெண்ட் ஆகிவிட்டதால் அவரும் பயன்படுத்துகிறார் என்று நினைக்கிறேன். அவரது கதைகள் சிலவற்றை சில இதழ்களில் படித்திருக்கிறேன். ஆனால், அவர் பெயரோடு பொருத்திப் பார்த்த  நினைவில்லை. அவரது இரண்டு நூல்களின் வெளியீட்டு விழா ஒன்றின் காணொளி காட்சியில்தான் அந்தக் கதைகள் அவர் எழுதியது என்று தெரிய வந்தது. அந்த நிகழ்ச்சியில் பல கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்களும் அவற்றை அளித்த விதமும் எனக்குப் பிடித்திருந்தது. அதன் பின்னரே அவரது இரு சிறுகதை தொகுதிகளான ‘வருவதற்கு முன்பிருந்த வெயில்’, மற்றும், ‘ராக்கெட் தாதா’, இரண்டையும் படிக்க வேண்டும் என எடுத்து படித்து முடித்தேன். ஒருவரைப் பற்றிய அபிப்ராயம் ஏற்பட்ட பின்னர் அவரது முதல் படைப்புகளை வாசிப்பது, ஒரு வகையில் தவறான ஒன்றும்கூட. ஆனால், வாசித்து முடிந்தபின் அந்த முடிவில் தவறில்லை என்று தெரிந்தது. ஏனென்றால், கட்டுரைகள் எழுதும் கார்ல் மார்க்ஸும், இந்தக் கதைகளை எழுதியுள்ள கார்ல் மார்க்ஸும் வேறு வேறு ஆசாமிகள் என்பதை இந்தக் கதைத் தொகுதிகள் காட்டுகின்றன.

13 Oct 2019

தெய்வங்கள் பேய்கள் தேவர்கள்- ஜெயமோகன்


தமிழில் நல்ல பேய்க்கதைகள் மிகக்குறைவே. பி.டி. சாமியின் கதைகள் எல்லாம் ரொம்ப அமெச்சூரிஷ் ஆக இருப்பதாகவே உணர்ந்திருக்கிறேன். பேய்க்கதைகள்/ அமானுஷ்யமான கதைகள் என்றளவில், நல்ல படைப்புகள் என்று சொன்னால், ஜாவர் சீதாராமனின், ‘உடல் பொருள் ஆனந்தி’, ராஜேந்திரகுமாரின், ‘இறந்தவன் பேசுகிறேன்,’ மற்றும், ‘இன்னமும் இருக்கிறேன்,’ இரண்டும் நல்ல படைப்புகள். இவை  ஆங்கில ஆக்கங்களின் தழுவலாக இருக்கலாம். சுஜாதாவின் ‘கொலையுதிர்காலம்’, மற்றும், ‘கரையெல்லாம் செண்பகப்பூ’ இரண்டுமே அவுட்ரைட் பேய்க்கதைகள் இல்லை என்றாலும், அமானுஷ்யமான சூழலை எழுத்தில் பிரமாதமாகக் கொண்டு வந்திருப்பார். 'ஆ' எனும் தொடரும் நினைவுக்கு வருகிறது. இவை போக,குமுதத்தில் கிருஷ்ணகுமார் (அநேகமாக எஸ்.ஏ.பி. அண்ணாமலை) எழுதிய ‘கோஸ்ட்’ எனும் தொடரில் சில கதைகள் மிக நன்றாக அமைந்தன. என் நினைவில் இவைதான் உள்ளன. தீவிர இலக்கிய பரப்பில் என்றால், புதுமைப்பித்தனின் 'காஞ்சனை' ஒரு மறக்க முடியாத படைப்பு.




2 Oct 2019

Memoirs Of A Woman Of Pleasure: Fanny Hill by John Cleland: காமம் செப்பி கண்டதை மொழிந்த - வரைவின் மகளிரின் வரையா ஓவியம்





'மெம்வார்ஸ் ஆஃப் அ உமன் ஆஃப் ப்ளஷர்' (Memoirs Of A Woman Of Pleasure, 1749),  ஜான் க்ளீலேண்ட் எழுதி, இங்கிலாந்தில் சுமார் 250 வருடங்களுக்கு முன்பு வெளிவந்த  நாவல். பலவிதத்தில் தொடர்ந்து தடை செய்யப்பட இந்த  நாவல், முழுதும் ஃபானி ஹில் ( Fanny Hill) எனும் சிறுமி - தன்னுடைய மடந்தைப் பருவத்தில் -  தான் பாலியல் உலகில் தள்ளப்பட்டு அலைக்கழிந்ததும், அனுபவித்ததும் உட்பட்ட எல்லாவற்றையுமே இரண்டு  கடிதங்களின் மூலமாக எழுதுவதாக, தன்மை ஒருமையில் எழுதப்பட்ட 'நான்' வகை நாவல்.

நாவல் முழுக்க பாலுறவு வேட்கைகளின் வெக்கைதான்.  ஜான் எழுதுகிறார் என்பதே தெரியாமல் ஃபானி  - அவளே எழுதுகிறாள் என்று தோன்றுகிறது.  நாவல்படி அதுதான்.  இது எந்த அளவுக்கு பாலியல் சார்ந்த எழுத்து என்றால் ஃபானி என்கிற பெயரே பெண் பாலுறுப்பு என்பதற்கு ஜாடைமாடையான ஆங்கிலக் கொச்சைச் சொல் என்று சொல்வோரும் உண்டு.  1700-களில்  தடை செய்யப்பட்டதில் வியப்பேதும் இல்லை.

பாலியல் படங்களை/ கதைகளை வாசிக்கத் தயங்குபவர்களுக்கு அல்லது சமூக உன்னத மதிப்பீடு சார்ந்து அவற்றின்பால் முகச்சுளிப்பு கொள்பவர்களுக்கு இந்த நாவல் (இக் கட்டுரையும்கூட ) எதையும் அளிக்க இயலாது. இருளில் கையிலிருந்து நழுவித் தப்பிய கருப்புப் பூனை போல நாவல் தனது பாதையில் சென்று கொண்டே இருக்கும்.

* * *

பாலியல், உடல் வேட்கை, பாலுறுப்புகள் குறித்து இவ்வளவு விரிவாக, நுட்பமாக, விவரணைகளுடன் எழுதப்பட்டிருந்தாலும், புத்தகம் வாசிக்கையில் சிறிதும்  மலினமாகத் தோன்றாமல் இருப்பதற்கு காரணம் மொழி நடை.  இதை மொழி பெயர்ப்பது பெரிய சவாலாக இருக்கும் என்றே தோன்றுகிறது.

இருவகைப் பாலுறுப்புகளை, அவற்றின் தன்மை, இயக்கம் குறித்து எல்லாமே ஒருவித குழூஉக்குறி போல அல்லது மாற்றுச் சொல்முறைகள் போல பதனமாக எழுதிவிடுகிறார். முகம் சுளிக்க வைக்கும் வார்த்தைகளோ விவரிப்புகளோ இல்லை. ஒரு சமயத்தில் இப்படியும் இதையெல்லாம் சொல்லிவிட முடியுமா என்று ஆச்சரியத்தில் நமக்குள் முறுவல் உடைகிறது. நாவலின் சிறப்பு என்றால் மொழியும்,  சொல்முறையும்தான். அதே சமயம் மொழி மயக்கத்தை தாண்டி தன்னுடைய வாழ்நிலையை ஃபானி சமரசமின்றி எழுதிவிடுகிறாள்.

காம இச்சை என்பது ஒரு திருட்டு விருந்தாளி போல உள்ளே நுழைந்து, உபசரிப்பவனாக மாறி பிறகு தலைவராக ஆகிவிடுகிறது என்பது கலீல் ஜிப்ரானுடைய ஒரு வரி.

* * *

தமிழில் புதுமைப்பித்தன் மொழிபெயர்த்த குப்ரிக்கின் 'பலிபீடம்', ஜி நாகராஜன் கதைக்களம், வா மு கோமு வின் 'மங்கலத்து தேவதைகள்', நளினி ஜமீலாவின் 'கதை' (கேரள நாவலின் மொழிபெயர்ப்பு ) போன்ற படைப்புகள்  நினைவில் வந்தன. ஆனால் எதுவுமே இந்த நாவலுக்கு அருகில் வைக்க போதுமானதாக இல்லை என்றே தோன்றுகிறது. அதே சமயம்  மேற்சொன்ன எல்லாமே ஒரேவிதமான கதைக்களன் என்றாலும் இதில் அதன் பரிமாணம் வேறு.

ஒரு பெண்ணுடைய சுயஅனுபவ நினைவுக்குறிப்பாக ஒரு ஆணால் எழுதப்பட்டுள்ள இந்த நாவலின் கூறுமுறையில், ஒரு பெண் இப்படியானதொரு நுகர்ச்சிப்  பார்வை கொண்டிருப்பாளா என்கிற கேள்வி எழத்தான் செய்கிறது.  ஆனால் அந்த கேள்வி படிக்கும்போது உணரமுடிவதே இல்லை என்பதே நாவலின் விசேஷம். (கவபட்டாவின் House of Sleeping Beauties படிக்கும்போதும் - அது ஒரு ஆணுடைய பார்வை என்றபோதும் -இதே கேள்வி என்னுள் எழுந்தது. )

* * *

நாவலை எழுதிய ஜான் க்ளீலேண்ட் லண்டனில் வறுமையின் கடன் காரணங்களுக்காக சிறையில் வைக்கப்பட்டார்.  (போக்கிரித்தனத்துக்காக என்போரும் உண்டு) அங்கு சிறையில் எழுதியதே இந்த நாவல்.  சிறையிலிருந்து எழுதப்பட்ட சிறந்த நாவல்கள் வரிசையில் இதை சேர்க்கிறார்கள். நாவல் வெளி வந்த உடன் இவரையும் வெளியிட்டவரையும் தூக்கி  ‘உள்ளே’ வைத்துவிட்டார்கள். நீதிமன்றத்திடம் தனது வறுமையே காரணம் என்றபோது அவருக்கு நிதி உதவி அளித்து, இனி நல்ல விஷயமாக எழுதச்சொல்லி நீதிபதி விடுவிக்கிறார் (இது கட்டுக்கதை என்போரும் உண்டு). ஆனால் அதற்குள்ளாக இந்த நாவல் அரசல் புரசலாக பிரபலம் அடைந்து விட்டது. அதன் பிறகு நாவலின் சூட்டைக் குறைத்து திருத்தி வெளியிட்டார். ஆனால் அதுவும் மோசம் என்று கண்டிக்கப்பட்டார். தடை செய்யப்பட்டது. இதனிடையே இதனுடைய அங்கீகரிக்கப்படாத பிரதிகள் சட்டத்துக்கு புறம்பாக விற்பனை ஆக தொடங்கிவிட்டன.  பிறகு ஒருவழியாக அவர் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டார்.

இவர் 12 வருடம் இந்திய பாம்பேயில் இருந்திருக்கிறார். இந்த நாவல் இரண்டு பகுதிகளாக ஓராண்டு இடைவெளியில் வந்தது. எண்பது வயது வரை வாழ்ந்த ஜான் ஏறக்குறைய தனது 39 ஆவது வயதில் இதை எழுதி இருக்கிறார்.  பிறகு இரண்டு நாவல்கள் எழுதினர். எடுபடவில்லை. பிரெஞ்சைத் தழுவி எழுதிய ‘டிக்ஷ்னரி ஆப் லவ்’ மட்டும் சுமார் என்கிறார்கள். தான் பாம்பேயில் இருந்தபோது நண்பர் ஒருவரிடம்  விலைமாதர் பற்றி எழுத, அதை ஆபாசமாக எழுதவேண்டியதில்லை என்று சவாலாக இதை எழுதியதாக பின்னால் சொல்லி இருக்கிறார். சவால்தான். வெற்றி பெற்றிருக்கிறார். முறையற்ற பால் உறவு முறை கொண்டவர் என்று பேசப்பட்ட இவர் பிரம்மச்சாரியாக லண்டலின் இறந்தார்.

ஆணின் பாலுறுப்பு குறித்து ஒரு பெண் ஆச்சரியமாகவும் பெரு விருப்போடும் எழுதியதிலிருந்தே அவர் சுயபால் ஆசாமி என்பது தெரிகிறது என்போரும் உண்டு. நாவலை படிக்கும்போது இந்த எண்ணம் எழத்தான் செய்கிறது. நாவலுக்குள்ளேயே பின் பாதியில் இரு ஆண்கள் சேர்ந்து உறவு கொள்ளுவதை ஃபானி கள்ளமாக பார்க்க நேர்வதாக ஒரு பகுதியும் வருகிறது. ஆனால் அதெல்லாம் நாவலின் செறிவுக்கோ போக்குக்கோ வெளிப்பாட்டுக்கோ எந்தவித ஊறும் செய்யவில்லை.

* * *

நாவலின் களமும் காலமும்

1740-களின் காலப்பின்னணி கொண்ட இந்த நாவலில் பெண்  போகப்பொருளாகவேதான் இருக்கிறாள். பெண் என்பவள் உடல் மட்டுமே.  சற்று ஆவேசமாக சொல்லப்போனால் வெறும் புழை மட்டுமே.  வசதி படைத்த ஆணுக்கு பெண் கிடைக்கிறாள். தற்காலிகமாகவோ, உடனிருந்து சிலகாலம் வாழவோ.  தெருவில் பெண் நடந்து போகும்போது அவள் கவனிக்கப்படுவதும் தொடரப்படுவதும், தான்  அப்படி தான் கவனிக்கப்படுகிறோமா என்கிற  அவளது விழியோர பார்வைகளும், அன்றைக்கும் அப்படியேதான் இருந்திருக்கிறது.

பாலுறவு சார்ந்த பதங்களை, காட்சிகளை, உணர்வுகளை, வேட்கைகளை எல்லாம் ஒரு பெண் எவ்வித தயக்கமோ சங்கடமோ இல்லாமல் எழுதுவதில் பெரிய சிக்கலொன்றும் இல்லை என இன்று நாம் காணும் நிலையை, 1700களில் பெண்ணின் சுய அனுபவம் குறித்த நினைவுக்குறிப்பு  நாவலாக க்ளீலேண்ட் என்ற ஆண் எழுதி இருப்பதை கவனிக்கவேண்டும். ஒரு பெண் அப்படி தன்னை தான் விரும்பியவண்ணம் வெளிப்படுத்திக் கொள்ளுவது அவளது முழுச் சுதந்திரம் என்று அந்த ஆண் எழுத்தாளர் முழுமையாக நம்பியிருந்தால் ஒழிய இப்படி ஒரு நாவல் பிறந்திருக்கும் சாத்தியம் உண்டா என்று நாம் கேள்வி எழுப்பிக்கொள்ளலாம். அதனாலோ என்னவோ கொச்சைத்தனம் இதில் இல்லை.

இந்த நாவலில் முழுக்க முழுக்க திமிறித் தளும்பும் காமம் ஊறிய உடல்கள்தான் களம். வாழ்க்கை குறித்து சொல்லப்படும் விபரங்கள் கூட அந்த உடலின் மீதே வரையப்படுகின்றன. இந்த நாவலே ஒரு பெண் உடலின் மீது மைக்ரோ எழுத்துக்களால் எழுதப்பட்டதாக உருவகிக்கலாம்.  உடலை தவிர்த்து விட்டு படித்துவிட முடியாது.  அவ்வளவும் உடல் மற்றும் பாலுணர்ச்சிகள். ஆனால் மலினமில்லாத எழுத்து. ஆணுடைய உடலை பெண் பார்ப்பதும் ரசிப்பதுமாகவும், பெண்ணுடலை பெண் ரசிப்பதாகவும் விரவும் நாவலில் அன்றைய சமூக வாழ்வின் கூறுகளை நாம் அடையாளம் காணலாம்.

அதை சமூகமும் பெண்ணுலகும் ஏற்றுக்கொண்டே நகர்கிறது. நாவலில்  ஃபானி- யிடம் எங்கேயும் குற்ற உணர்வோ பெரிய புகார்களோ இல்லை. பாலியல் தொழிலை ஒரு அங்கீகரிக்கப்பட்ட கௌரவமான (அந்த காலத்து அளவீடுகளில்) தளத்தில் வைத்து செயல்படும் நிலையில்தான்  இந்த நாவல் நகர்கிறது. பெண்ணை அனுமதி கேட்டோ, விழைவைச் சொல்லியோதான் ஆண் அணுகுகிறான்.  பாலியல் விடுதியின் தலைவிகள் (பெரும்பாலும் பெண்களே அதை நடத்தும் தலைவிகளாக இருக்கிறார்கள்) தொழிலுக்காக பெண்களை கவர்ந்து வந்தாலும் அவர்களது நலன் குறித்து பரிவுள்ளவர்களாகவே இருக்கின்றனர்.  இத்தகைய தொழில்முறை காமத்தில் உழலும் பெண்களுக்கு உரிய விளையாட்டுத்தனத்தில் அவர்கள் ஆபத்தான விளிம்புகளுக்கு சென்றுவிடாமல் எச்சரித்து ஒரு தாய்ப்பூனை போல கவ்வி கொண்டுவந்து விடுகிறார்கள்.

ஒரு வசதி படைத்தவனுடைய ஆசை நாயகியாக அவனுடனே இருப்பது முதல், வணிக வளாகம் என்ற இடத்தில் சப்தமில்லாமல் ரகசிய விடுதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்களுக்கு 'பணிவிடை'  செய்வது வரை பலவும் நிகழ்கிறது.  ஆனால் முகமறியா ஆண்களுக்கு உடன்செல்லும் காமத்திபுரா வகை இதில் இல்லை. அதுவேறு உலகம்.  இதனாலேயே என்னவோ இந்த நாவலில் புகார்களோ, பரிதாபங்களோ, கதறல்களோ இல்லை. சொல்லப்போனால் ஃபானி மிகவும் வியப்புடனும், ஆசையுடனும் வேட்கையுடன்தான் அத்தனை கூடலிலும் வெளிப்படுகிறாள்.  சலிப்பு என்பது ஏற்படுவதோ, சுய பச்சாதாபமோ, வெறுப்போ எதுவும் இருப்பதில்லை. நதிக்குள்  மீன்குஞ்சு     போலவே நீந்துகிறாள்.

* * *

நாவல்

தனது கணவன் சார்ல்ஸ் மற்றும் குழந்தைகளுடன் இருக்கும் ஃபானி என்ற பெண்,  'மேடம்' என்று விளித்து யாருக்கோ எழுதும் இரண்டு நீண்ட கடிதங்கள்தான் நாவல்.  தனது 14  வயதில் பெற்றோர்களை அம்மை நோயில் இழந்து நிற்கும் சிறுமி ஃபானி. தெரிந்த பெண்மணியுடன்  லண்டனுக்கு செல்கிறாள். வீட்டு வேலைக்காக என்று செல்பவள் பாலியல் தொழிலுக்குள்  தள்ளப்படுகிறாள். அங்கே வளர் சிறுமியான அவள் மூத்த இணைகள் இருவர் இணைவதை பார்த்துவிடுகிறாள்.  அதை சக தோழியிடம் சொல்லும்போது உனக்கு இதில் விருப்பம் இருக்கிறது அல்லவா. சமயம் வரும்போது வேறு ஒன்றை காட்டுகிறேன் என்று சொல்லி இளம்பருவத்து இணைகள் இருவர் இணைவதை மறைந்திருந்து உடனிருந்து காட்டுகிறாள்.  அந்த பெண் அதே விடுதியில் உள்ள தோழிதான். தனியறைக்கு பின்னால் உள்ள மூடிய இருள் சந்தின் கதவு துவாரம் வழியாக அவள் முதன்முறையாக இரு  உடல்கள் இணைவதை பார்க்கிறாள். அந்த செயலுக்கு அவர்கள் தயாராவதை செயலுருவதை பார்க்கிறாள்.. இத்தனை நோவு மிகுந்த ஒரு நிலையில் இருந்து மீண்ட   பிறகும் அந்த பெண் சுகமாக  எப்படி அவனோடு இருக்கிறாள் என்று வியப்பு அவளுக்கு ஏற்படுகிறது. இந்த காட்சி முழுதும் சாவி துவாரத்தில் பார்க்கும் கண்ணின் காமிரத்தன்மையோடு மாறாத பார்வைக் கோணத்தில் சொல்லப்படுகிறது.  அவர்களது இயக்கம் மற்றும் கலவி நிலைகளுக்கு ஏற்ப  அவளும் அவனும் மாறி மாறி தெரிகிறார்கள்.  ஆண் குறி அவளுக்கு அப்போது வியப்பைத்தவிர வேறொன்றையும் ஏற்படுத்தவில்லை. இப்படி பார்த்துக்கொண்டே இருக்கையில் உடனிருக்கும்  வயதில் மூத்த சக தோழியின் கைகள் இவள் மீது மெல்ல ஊறத் தொடங்குகிறது.  அது முறையல்ல என்று தெரிந்தாலும் அதை மீறி, அப்போதுதான் தனது பருவத்தின் மொழியை உணரத்தொடங்குகிறாள். அன்றிரவு  அந்த பெண் இவளை தனது இச்சைக்கு உட்படுத்துகிறாள். வெறுக்கவும் முடியாத மறுக்கவும் முடியாத ஒரு நிலையில் ஃபானி அங்கிருக்கிறாள். ஆனால் அவளுக்கு அதன் மேல் சொல்லமுடியாத ஒரு ஈர்ப்பு உருவாகிறது.  தனது கிராமத்தில் இதையெல்லாம் அவள் நினைத்துக்கூட பார்க்க முடியாது. அந்த குற்ற உணர்வு அவளுக்கு லேசாக தோன்றினாலும் அவளது உடல் மனதை நகர்த்திவிட்டு பேசத்துவங்குகிறது. நாவல் முழுக்க வெவ்வேறு பருவங்களில் வெவ்வேறு ஆண்களுடன் வெவ்வேறு வகையாக அவளது பெண்ணுடல் களிப்புடன் உரையாடிக்கொண்டே இருக்கிறது.

ஒரு நாள் அங்கு வரும் சார்ல்ஸ் எனும் இளைஞனிடம் பரிச்சயம் உண்டாகி - தொடர்ந்து  - அவன் அவள் தப்பித்து செல்வதற்கு உதவுகிறான்.  அவள் தனது முதல் உறவை அவனிடம் பெறுகிறாள். தருகிறாள்.  அவனிடம் காதல் அரும்புகிறது. ஆனால் எதிர்பாராத விதமாக அவன் தொலைதூரம் பயணப்பட்டு விட நிர்கதியில் நிற்கும் இவளுக்கு Mr.H என்ற ஒரு வசதி படைத்த நல்ல மனிதன் கிடைக்கிறான். அவன் ஏற்படுத்திக்கொடுத்த வீட்டில் இவள் அவனுக்கு ஆசைநாயகியாக வாழ்கிறாள். அவனோடான காம லீலைகள் விலாவரியாக சொல்லப்படுகிறது.  எப்பொழுதும் கூடலுக்கு தயாரான இயந்திரமாகவே அவள் இருக்கிறாள்.  ஒரு நாள் அவன் வேலைக்காரியுடன் வலுக்கட்டாயமாக உறவு கொள்ளுவதை கதவுத்திறப்பின் இடைவெளி வழியாக ஃபானி காண்கிறாள். அவளை வற்புறுத்துவது முதல் புணர்ந்து முடித்து வெளியே வரும்வரை அனைத்தையும் அவள் வேடிக்கையை பார்ப்பது ‘அப்படியே’  எழுதப்படுகிறது. வசீகர மொழி இல்லாமல் ஒரு வித இயக்கமாக அது சொல்லப்படுகிறது. அவன் வெளியே வரும்போது இவள் அடுத்த ஹாலில் இருக்கிறாள். அவன் ஒன்றுமே நடக்காதது போல நடந்து கொள்கிறான். அவள் அப்போது சொல்வது அருமையான ஒன்று – “ இத்தனை நடப்பதையும்  நான் சலனம் இல்லாமல் பார்த்துக்கொண்டிருக்க முடிந்தது ஏனென்றால் இதுவரை அவனிடம் எனக்கு இருப்பது காதல் இல்லை. வெறும் உடலியக்கம் மட்டுமே.  இல்லாவிட்டால் உள்ளே சென்று கலாட்டா செய்திருக்க கூடியவள் நான் என்கிறாள்.  பெண்,  மனம் ஒப்பாதபோது உடல்ரீதியாக தன் மீது நிகழ்த்தப்படும் கேளிக்கைகளை ,  பொருட்படுத்துவது இல்லை.

ஆனால் இப்போது அவளுக்கு ஒரு வன்மம் உருவாகிறது.  பழி தீர்க்க.  Mr H- சிடமிருந்து  அவ்வப்போது இவளுக்கு கடிதம் கொண்டுவரும் ஒரு அப்பாவியான பணியாள் ஒருவனை இவள் தனது அழகின் மூலம் வயப்படுத்துகிறாள். அவன் மனதில் இச்சையூட்டி அவனோடு பலமுறை ரகசிய  உறவு கொள்கிறாள்.  யதேச்சை போல துவங்கி கொஞ்சம் கொஞ்சமாக அவனுடைய மனதை உசுப்பி எதிர்பாராமல் உணர்ச்சி வேகத்தில் கொண்டுவிடும் உறவு போல தான் நடிப்பதை கச்சிதமாக ஃபானி எழுதுகிறாள்.  ஆனால் அவள் காமத்தை சுகிக்கிறாள். அவளை பொறுத்தவரை ஒரே போதையூட்டும் திரவத்தை வெவ்வேறு கொள்கலனில் வெவ்வேறு வடிவில் அனுபவிக்கிறாள். ஒரு நாள் இவர்கள் சேர்ந்து இருப்பதை Mr.H பார்த்து விடுகிறான். ஃபானி வெளியேற்றப்படுகிறாள்..  அதில் அவளுக்கு வருத்தமொன்றும் இருப்பதில்லை. அந்த இளைஞன் தண்டிக்கப்படுகிறான்.

வெளியேறிய அவள் ஒரு வீடு பார்த்து சமாளிக்கையில் திருமதி கோல் எனும் பெண்மணியை சந்திக்கிறாள்.  அவளுடைய பாலியல் விடுதிக்குள் நுழைகிறாள். அங்கே இவளது பிரத்யேக அழகு உடனிருக்கும் பிற பெண்களை கூட கவருகிறது.  இவள் விடுதியின் பெரிய  ஈர்ப்பு என்பதை திருமதி.கோல் உணர்ந்து கொள்கிறாள்.

அந்த விடுதியின் செயல்பாடு விசித்திரமானது.  பெண்களைக் காண தேர்ந்தெடுக்கப்பட்ட  வசதிபடைத்த ஆண்கள் வந்து இருப்பார்கள்.  ஒரு இரவு சாப்பாடு விருந்து போல ஒரு கூடத்தில் அனைவரும் கூடுவார்கள். பெண்கள் தம்மை காமத்தை தூண்டும் விதமான தம் உச்சபட்ச அழகோடு அலங்கரித்துக்கொண்டு வந்திருப்பார்கள்.   நிர்வாண நிலையில் ஒவ்வொரு பெண்ணும் தனக்குரிய ஆணுடன் நடனமும் இறுதியில் புணர்ச்சியும் கொள்ளவேண்டும்.  அதனை பிறர் கண்டு அதன் நளினம் மற்றும் அழகு குறித்து பாராட்டுவார்கள்.  சாதாரணமாக துவங்கும் நடனம் ஆணை கவர வேண்டிய நிர்பந்தம் இருக்கும் போது அந்தப்  பெண் நளினமாகவும் சாகசமாகவும் நடந்து கொள்ளவேண்டிய நிலை.  அதே சமயம் பாலுறவைத்த தூண்டி உறவும் கொண்டு விடவேண்டும்.  பிற இணைகள் கலவி கொள்ளுவதயும்  இவள் பார்க்கிறாள். பிறகு இவளே அரங்கின் மையத்துக்கு தள்ளப்படுகிறாள்.  நோபர்ட் என்பவன் இவளுக்கு கிடைக்கிறான்.  இவள் அரங்கின் மொத்த கவனத்தையும் பெறுகிறாள்.

விடுதியில் இவள் மட்டுமல்ல எமிலி உள்ளிட்ட வேறு மூன்று பெண்களின் நிலைமை மற்றும் காம செயல்பாடுகளும் பேசப்படுகின்றன.  இதில் - திருமதி கோல் – ஃபானி-யிடம், தான் இன்னும் தொடப்பட்டிருக்காத பெண் என்பதாக நடந்து கொள்ளவேண்டும் என்றும் அதுதான் அவளுக்கு நல்ல தொகையையும் நீடித்த உறவையும் பெற்று தரும் என்று அறிவுறுத்துகிறாள்.  பலமுறை உறவில் திளைத்த ஃபானிதான் ஆணின் ஸ்பரிசம் அறியாத கன்னிமை சிதறாதவள் என்பதைப்போன்று இப்போது நடந்து கொள்ளவேண்டும்.  தனது போலி வெட்கம் மற்றும் அச்சங்களை அவன் நம்பிவிட்டானா என்பதையும் அவனை கவனித்தபடியே நடிக்கிறாள். ஆச்சரியமூட்டும் வகையில் எழுதப்பட்டிருக்கும் பகுதிகள் இவை.

தன் குடும்பத்துக்கு தெரிந்த ஒருவரை பார்ப்பதற்காக வர, அவர் இறந்து போக வேறு வழி இல்லாமல் இங்கே வந்து விட்டதாகவும் அச்சமுறுவதாகவும் சொல்கிறாள். அவளது அச்சம் அவனுக்கு போதையூட்டுகிறது. இதுதான் திருமதி கோல் எதிர்பார்த்தது. தொடும்போதே நாணமும் பயமும் கொள்ளும் அவளை நோபர்ட் முதல் முறையாக சுகிக்கும் நேர்த்தியை நடித்து முடிக்கிறாள். எதிர்பாராமையின் அச்சத்தில் துவங்கி பிறகு அவனது ஆண்மையின் கரங்களால் தான் கரைந்து வழிவிடுவது போல உடலியக்கங்கள் செயற்படுவதை எழுதுகிறாள். அவன் களைத்து உறங்கும்போது மெதுவாக கட்டிலின் தலைப்பக்கமாக இருக்கும் ரகசிய இழுப்பரை ஒன்றிலிருக்கும் சிவப்பு நிற திரவம் தோய்ந்த பஞ்சை எடுத்துக்கொள்கிறாள். அவன் விழிக்கும்போது தான் மிகவும் அவதிப்படுவதாக சொல்கிறாள். அவன் ரத்தம் தோய்ந்த அவளது தொடைகளைக் கண்டு திருப்தியும் மகிழ்ச்சியும் கொள்கிறான்.  அவளை தனது இதயத்தில் முழுதாக நிரப்பிக்கொள்கிறான். தொடர்ந்த வாடிக்கையாளனாக அவனுடன் காலம் கழிகிறது.

இதற்கு இடையே ஒரு நாள் லேசாக தொந்தி பெருத்த ஒருவனுடன் உறவு கொள்ள நேர்கிறது.  அவனையும் ஒரு ஆணாக கண்டு ரசிக்கிறாள். ஆனால் அவனது காமத்தின் தேர்வு வேறு விதமாக இருக்கிறது.  அவன்  தன்னை நிர்வாணமாக்கி கைகளை கட்டி குப்புற படுக்க வைத்து மிலாறுகளான குச்சியால் புட்டத்தில் தன்னை அடித்து துன்புறுத்துமாறு வேண்டுகிறான். மாசோகிஸ்ட் வகையான உறவை அவள் புதிதாக காண்கிறாள். அவனது சதைகள் துடிக்க அவனை அடிக்கிறாள்.  பிறகு அவன் அவளிடம் தானும் அப்படி அடிப்பதாகவும், ஆனால் அவள் போதும் என சொல்லும்போது நிறுத்தி விடுவதாகவும் சலுகையாக சொல்கிறான். ஆனால் அவள் வலியை பொறுத்துக்கொண்டு மேலும் மேலும் அடியுற விரும்புவதை அவன் ஆச்சரியமாக காண்கிறான்.  (மாசோ எழுதிய காதல் தேவதை நாவல் நினைவுக்கு வந்தது ). பிறகு அடிபட்ட வீக்கத்தோடு உட்காரமுடியாத வலிகளோடு பிணைகிறார்கள். கணப்புக்கு அருகில் இருந்தபடி முற்றிலும் வழக்கத்துக்கு மாறான முறையில்/ ‘நிலை’யில் அவளோடு உறவு கொள்கிறான். இது அவள் முற்றிலும் அறியாத ஒன்று.

பிறகு ஒரு முறை தங்கும் அறையில் இருந்து இரு ஆண்கள் உறவு கொள்வதை பார்க்க நேரிட்டு  அடிபட்ட உணர்வில் மயங்கி விழுகிறாள். இதனிடையே எமிலியும் இவளும் தத்தம் ஆண்களுடன் ஒரு நீச்சல் குளத்தில் உடைகளற்று இறங்கி களிப்புறுவதையும், எமிலி ஜோடி நடந்து கொள்ளும் முறை கண்டு சீண்டி இவர்கள் கிளர்ச்சி கொள்வதும் சொல்லப்படுகிறது.

தவிர நாவலின் போக்கில் ஒரு சமயத்தில்  ஃபானி உடன் சேர்ந்து கொண்டு  எமிலியின் காமச் சீண்டல் குறித்த சம்பவம் ஒன்று நிகழ்கிறது. வீதியில் வழக்கமாக பூங்கொத்து விற்கும் பையன் ஒருவன் - (சற்றே மன நலம் பிறழ்ந்தவன் போல காணப்படுகிறான்) நேர்த்தியற்ற உடையும் முடியுமாக இருப்பவனை சீண்ட நினைத்து (அவனுக்கு ‘ டிக்’ என்று குறும்பான செல்லப் பெயர் வைக்கிறார்கள் ) அவன் வீட்டிற்கு வந்து பூங்கொத்து விற்க வரும்போது பாலியல் ரீதியாக அவனை சீண்டி உடைகளை களைந்து விளையாட்டாக சீண்டுகிறார்கள். எமிலி அவனை சபலமுற வைக்கிறாள். அப்போது அவனிடம் தெரியும் உடலியல்  மாற்றத்தை இவர்கள் கவனிக்கும் சமயம், அவன் எமிலியோடு மிருகத்தின் தீவிரமாக உறவு கொள்கிறான். சற்றும் எதிர்பார்க்காத அவனது காமத்தை எமிலி ஒரு நிலையில் உடன்பட்டு சுகிக்கத் துவங்கி விடுகிறாள். மன நலம் இல்லாதவனும் காமத்தூண்டல் பெறும்போது மனதை விலக்கிய வெறும் உடல் சீண்டப்பட்டு விடுகிறது. காமம் என்பது உடலா மனமா எனும்படியான குழப்பத்தை தெறிக்கும் இடமாக இது இருக்கிறது.

நோபர்ட்டும் விலகிப் போன பின்பு வயதான ஒருவனை கண்டு அவனோடு இணைகிறாள். அவர் இவளுக்கு தனது சொத்துக்களை உயில் எழுதி வைக்கிறார். எட்டு மாதத்தில் தீவிர குளிர் நோயால் இறந்துவிட,  சொத்துக்களுடன் இவள் தனது ஊரை நோக்கி ஒரு உதவியாள் பெண்மணியுடன் திரும்புகிறாள். ஓரிடத்தில் தங்க நேரும்போது குதிரையில் இரண்டு பேர் அந்த விடுதிக்கு வந்து  இறங்குகினார்கள். ஆச்சரிய படும் படியாக அது சார்ல்ஸ். நாவலின் முடிவை நோக்கி செல்லும் நாடகத்தன்மை கொண்டுவிடும் பகுதிகள் இவை. ஒருவரை ஒருவர் அடையாளம் கண்டு கொண்டுவிடுகிறார்கள். விடுதியின் பெண்மணி அவர்களை தம்பதிகளாக நினைத்து ஒரே அறையை தருகிறாள். ஐந்தாண்டுகள் கழித்து எதிர்பாராத விதமாக தனது காதலன் தோன்றி அதுவும் தனியறையில் இருக்கையில் ஒருவரை ஒருவர் உடல் வழியாக உணர்ந்து கொள்கிறார்கள்.

இதுவரை அவளது உடல் உணர்ந்த காமத்திற்கும் இப்போது காதலனிடம் உணரும் காமத்திற்கும் இருக்கும் வித்யாசத்தை அவள் உணருகிறாள். சொல்கிறாள்.  அதை கிளர்ந்த மனதோடு அனுபவிக்கிறாள்.  தன்னை தனது கடந்த காலத்தோடும், அதன் அடையாளங்களாகிப்போன குழந்தைகளுடனும் ஏற்றுக்கொண்ட சார்ல்சுடன் அவர்கள் பயணம் தொடருகிறது. ஊரை நோக்கி.

* * *

ஃபானி உட்பட பெண்கள் எவரும் காமத்தை சுவைக்க தயங்குவதே இல்லை. விளையாட்டாக அதனுடன் பரிச்சயப்பட்டு பிறகு அது தம் மேல் விளையாடுவதை அனுமதித்து பரவசம் கொள்கிறார்கள்.  உதைபட்டாலும் அதற்காகவே பிறந்ததை போல துள்ளும் கால்பந்தைப் போன்ற காமத்தின் அலைக்கழிப்பில் தங்களை ஒப்புவித்துக் கொண்டுவிடுகிறார்கள்.  கற்பு அச்சம் என்று ஒடுங்கி பெண்கள் இருந்த காலகட்டத்தில் இப்படி ஒரு நாவல் எத்தகைய கலகத்தை உண்டு பண்ணி இருக்கும் என்பதை ஊகிக்க முடிகிறது.

கிருத்திகாவின் வாஸவேச்வரம் நாவலில் உபன்யாஸர் இந்திரன் பற்றி சொல்லும் கதை இருக்கும். அதில் அனைவருமே காமத்தின் வாசனை பற்றி தவிப்பதும் பெண்களில் காம நுகர்ச்சியும் நாவலின் ஒரு பகுதியாக   பூடகமாக சொல்லப்பட்டிருக்கும். ஆனால்  இங்கே  ஃபானி நாவலில் முழுக்க உடலியல்  சார்ந்த காமம் ததும்புகிறது. அவற்றை அவள் கலவியின் பிசுக்குகளோடு எழுதுகிறாள். காமம் என்பது அர்த்தம் என்றால்,  உடல் என்பது சொல்லாகிறது. அதுசார்ந்த மயக்கமும் முயக்கமும் மொழியாகிறது.  அந்த மொழியின் மொழிதான் இந்த நாவல் முழுதும்.

ஒரு தங்கும் விடுதியில், சார்ல்ஸ் எதிர்பாராமல் திரும்ப கிடைக்கும் இரவன்று அவனோடு உறவு கொள்ளும் ஃபானி மிகுந்த மன நிறைவு கொண்டவளாக இருக்கிறாள். ஒரு முதலிரவாகவே மயங்குகிறாள்.  ஏனென்றால் அவள் கண்டடைவது ஒரு ஆணை அல்ல.  வயதானவரின் விதைவை மனைவியாக தனது பத்தொன்பது வயதில் எல்லாம் முடிந்து போயிற்று  என்று நினைக்கும்போது, ஆச்சரியமாக கிடைத்த நம்பகரமான புது வாழ்க்கையை.

தனது இன்னல்கள் அனைத்தையும் கேட்டுக்கொண்டு இது நாள்வரை பிறர் மூல நேர்ந்த குழந்தைகளையும் ஏற்று அதற்கும் தந்தையாக இருக்க சம்மதிக்கும் சார்ல்ஸ், அவளது புது வாழ்வு. எந்த கன்னிமை கொண்டவளும் முதலிரவு படுக்கையில் தரமுடியாத நாணத்தை  குற்றமற்ற அவனது அப்பாவித்தனத்துக்கு முன் கொண்டேன். அவனுக்கு நான் தகுதியற்றவள் என்ற எண்ணமே எப்போதைக்கும் வராத அளவுக்கு அவனை நான் காதலிக்கிறேன் என்கிறாள் ஃபானி.

காமத்தை எதேச்சையான சிறு பொறியாக பார்த்து அதனை தகிக்கும் தீக்கொழுந்தாக்கி அதையும் அதன் வியாபகத்தில் பார்த்து விடுகிறாள்.  தண்மையான நெருப்புக்குள்  சுகமாக எரிகிறாள். எரிக்கிறாள்.
இது ஒரு புறம் இருக்க காமம் என்பதை சரியானவரிடம் இனம்  கண்டு சரியாக பிரயோகித்து அதற்கு தகுதியான ஆளிடம் தந்து தொழில் முறையில் பணமாக்கும் முதிய விடுதிப் பெண்களின் சாகசமும் நேர்த்தியும் ஆச்சரியமூட்டுவன. பழம் வாங்க கடைக்கு செல்லும் ஃபானி யை உடன் தொடரும் ஒருவன் அவளை விடுதியில் வந்து பார்க்கும்போது விடுதியின் உரிமையாளர் திருமதி கோல் அவனை நடத்தும் விதம், அவனுக்கு மறுப்பை சொல்லி அதே சமயம் ஒரு சபலத்தை ஏற்படுத்தும் நைச்சியம், விரைவில் அவனுக்கு விழுந்து விடாதே - அவன் நல்லவனா என்று விசாரிக்க வேண்டும் என்று இவளிடம் சொல்லி - அவர்களது தொழில் நேர்த்தி இப்படி பல இடங்களில் சொல்லப்படுகிறது.

ஃபானி அழகானவள். வசீகரமானவள். அவளுடைய கிராமத்து உடற்கட்டு ஒரு பெரும் சொத்து. அவளுக்கு வாடிக்கையாளர்கள்  பணத்தை ஏகமாக தரும் போதும் திருமதி கோல் அன்போடு அதை அவளுக்கே தருகிறாள். இது உனக்கானது என்கிறாள். உறிஞ்சிப் பிழைக்கும் தன்மை இதில் எங்கேயும் இல்லை. ஆரம்பத்தில் வரும் ஒரு விடுதி பெண்மணி சற்று  கறாராக இருக்கிறாள். ஆனால் வஞ்சங்கள் இல்லை.

குப்ரிக்கின் பலிபீடத்தில் பாலியல் தொழிலாளிகளின் கஷ்டம் சொல்லப்பட்டிருக்கும். ஜி நாகராஜன் அவர்களது வலிகளை அந்த சமூகத்தின் சூழலை படம் பிடித்திருப்பார். பாலியல் பெண்ணோடு குடும்பம் நடத்த விரும்பும் கந்தன் மனநிலை இங்கே பெண் ஃபானி க்கு இருக்கிறது ஓரளவு. ஆனால் கனிவில் அல்லது  விருப்பத்தில் அது நிகழ்வதாக இல்லை. விளையாட்டாகவே நடக்கிறது. அல்லது அடிமையிடம் நடந்து கொள்ளும் குரூரம் இருக்கிறது.  விடியற்காலையில் அசதியாக உறக்கத்தில் இருக்கும் போது, அவன் உள்ளே நுழைந்த சப்தம் கேட்டு முழுதாக விழிப்பதற்குள், அவளது உடைகள் மேல்நோக்கி  விலக்கப்படுகின்றன. களையப்படுவது கூட இல்லை.

 'மங்கலத்து தேவதை'யில் வறிய நிலை நிலவும் குடும்ப சூழலில் தொடர்ந்து அங்கே   பாலியல் உறவுகள் நடந்து கொண்டே இருக்கும். நளினி ஜமீலாவில் அவள் தான் விரும்பியே தனது நபர்களை தேர்ந்தெடுத்து அவர்களோடு இருப்பாள். அங்கே அவளுக்கு குடும்ப சூழல்தான் இந்த தொழிலுக்கு வந்ததற்கு காரணமாக இருக்கும் அவளுக்கு சுய பச்சாதாபமோ இரக்கம் ஏங்கி நிற்கும் மனமோ இல்லை. குறைந்த உழைப்பில் நிறைய வருமானம் என்கின்ற மனநிலையே அவளுக்கு இருக்கும் (நமது இலக்கிய உலகம் அதை சோக ரசமாக அல்லது அநியாயத்தில் பிடிபட்டு தவிக்கும் பெண்ணாக அறிமுகப் படுத்த முனைந்ததாக நினைவு ). ஆனால் மிகவும் தட்டையான மொழியில் எழுதப்பட்டது சுய சரிதப் புதினம் அது. ஒரு இரவுக்குப் பிறகு வாடிக்கையாளரை அனுப்பிவிட்டு  சற்றே தனிமையில் இருந்துவிட்டு வெளியே வந்து குளிரில் படுத்துக்க கிடைக்கும் சாலையோர சிறுவர்களுக்கு டீ  வாங்கி தரும் பிரபஞ்சமினி சிறுகதை - வாடிக்கையாளராக செல்லும் ஒருவன் அவள் முன்னாள் துணை நடிகை என்பதை அடையாளம் கண்டு நெகிழும் ஜெயமோகனின் சிறுகதை - பாலியல் தொழிலாளியான அவள் வாடிக்கையாளரின் நோயுற்ற உடலும் சகிக்க முடியாத ஆணுறுப்பு பிரதேசமும் கண்டு அவனை தள்ளி விட தலை மோதி அவன் இறந்து போகும் சம்பவத்தை வைத்து ஷங்கர் ராம சுப்பிரமணியன் எழுதிய கட்டுரையும் - இந்த பாலியல் பிரதேசத்து சில படைப்புகள். ஆனாலும் எனக்குத் தெரிந்தவரை  நாவல் என்ற வகையில் விரிவு கொண்ட தமிழ் நாவல்களில் காணக்கிடைக்காத ஒரு பிரதேசம் ஃபானி ஹில் நாவலில் இருப்பதாக கருதுகிறேன்.

ஒரு வகையில் வசதியான பிரமுகர்களுக்கான  அந்தரங்க நாயகியாக இருந்த தஞ்சை கும்பகோணம் பிரதேசத்து தேவதாசிகளைப் போன்ற அடுக்கில் உள்ள பெண் இவள்.  இசை மற்றும் நாட்டியம் என்பதை கடவுளுக்கு காணிக்கை என்று உண்டாகிய சமூகம் மெல்ல மெல்ல சிதைந்து வைப்பாட்டிகளாக கீழிறங்கி விட்டாலும் அவர்கள் வேசைகள் அல்லர். மோகமுள் யமுனாக்கள் உண்டு. ஒரு வகையில் ஜப்பானிய  பிற்காலத்து கெயிஷாக்கள் கூட கலையின் மூலம் பாலியலுக்கு தொடர்ப்பூட்டுபவர்கள். ஆனால் இந்த நாவலில் பாலியலுக்கு விழைவுக்கு நேரடியாக குதிப்பவர்கள்தான். அதில் தள்ளப்பட்டாலும் அங்கே நீந்தி விளையாடுவதை கேளிக்கை தொழிலாக கொண்டுவிட்டவர்கள்.  சற்றேனும் அன்புக்காக எதிர்பார்க்கும் அவர்கள் கருணைக்காக கையேந்தி நிற்பதே இல்லை.  அதே  சமயத்தில் அவர்கள் வசதியான காமுகர்களை எளிதாக பிச்சைக்காரர்களாக்கி விடுகின்றனர்.  இதில் ஈடுபடுவதில் பாதி நிர்பந்தமும் பாதி விருப்பமும் இணைந்தே உள்ளது என்று எழுதுகிறார்.

* * *



சில மொழிப்பயன்பாடுகள் எளிமையாகவும் பொருத்தமாகவும் அமைந்திருக்கின்றன. ஒன்றிரண்டைச் சொல்லவேண்டுமென்றால் -

"எனது நரம்புகளிலெல்லாம் திரவ நெருப்பை ஓடச்செய்து விட,  மூச்சுத் திணறும் அளவுக்கு உணர்ச்சி, வேகம் கொண்டு விட்டது"

"பேரின்பத்தின் பெரும்துயரில் செத்துவிட்டது போல இருந்தாள்"

"இரண்டாம் முறையின் போது தாங்கமுடியாத அளவுக்கு பித்தேறியிருந்த நான் அவளை இறுக்கத்தழுவி கவ்விக் பற்றிக்கொண்டுவிட்டேன், என்னை ஆசுவாசப்படுத்தி மீட்டெடுக்கும் விசை அவளிடம்தா'ன் இருப்பதைப் போல"

'ஆனால் அவன் மறுமுறையும் நோகும்படி இயங்கியபோது, ஒரு முனகல் கூட இல்லாமல் தீவிரமான வலியைப்  பொறுத்துக்கொண்டேன்,  தீவிரமான காதலால் "

'அவனை கொடியின் நுனிச்சுருள் போல வளைத்துப் பற்றியிருந்தேன்"

'அபரிமிதமான வலியினூடே   அபரிமிதமான சந்தோஷத்தை அடைந்திருந்தேன்'

'நமது நல்லொழுக்கங்களை தீயொழுக்கங்களும் பெருமளவு நமது சூழ்நிலையை பொறுத்து அமைந்துவிடுகின்றன'


சில ஆங்கிலப் பிரயோகங்கள் அந்த மொழிக்கே உரித்தான அழகுகளைக் கொண்டிருக்கின்றன-.

- riot of Joys, itching fires, என்கிறார் ஒரு இடத்தில்.
- உணர்ச்சி  மேலிட கண்ணீர் துளி உகுப்பதை,  bedewing my hands with his tears.
- ஸ்பரிசத்தில் வேதனையை,  incendiary touch.
- தன் உடலை தனது விரல்வழி அறிகையில், I deflower myself, என எழுதுகிறார்.
- that instance, there is no dress like an undress, என்று ஒரு வரி. இதை மொழிபெயர்க்கும்போது அதன் அர்த்தம் நமக்கு புரியும். ஆனால் அதில் உள்ள அந்தரங்க ஓசைநயம் விடுபட்டு போய்விடும். இப்படியான பல மெய்ப்பாடுகளின் மொழி வெளிப்பாடுகள் இதில் உண்டு.

இந்த நாவலில் ஆங்கில மொழி ஒரு இனிய சலுகையாக அல்லது சமாதானமாக தோன்றுகிறது.  ஏனென்றால் பகிர்ந்து கொள்ள சற்று அதி அந்தரங்கமான அல்லது லஜ்ஜைக்குரிய பிரயோகங்களை அந்நியப்பொது மொழியில் சொல்லிவிடும்போது அது சௌகரியமாக அமைந்துவிடுகிறது. மேலும் இதில் சில பிரயோகங்கள் அதன் தமிழ்ப்படுத்தலை மீறிய அல்லது அடங்காத வெளியில் உலவுகின்றன. அவற்றை தமிழ்படுத்தும்போது சற்று கொச்சை கலந்துவிட வாய்ப்புண்டு. உதாரணமாக  balsemic injection, intromission. Inamorata, inamorato போன்றவை மொழி மாற்றத்துக்கு உட்பட முரண்டு பிடிக்கும் எழுத்துக்கள்.  அவற்றுக்கு இணையான தமிழ்ச்சொற்கள் இருக்கலாம். அதற்காகவேயான சொற்கள் உண்டா என்று தெரியவில்லை.   இப்படியானவற்றால் இந்த நாவல் முழுவதையும் அதன் அர்த்தங்கள் தெரிந்துகொண்டபோதும் முகச்சுளிப்பின்றி படித்து கடந்துவிட முடிகிறது. 

ஒருவகையில், அலுப்பூட்டாமலும் அல்லது தயக்கம் இருந்தாலும் இந்த நாவலை வாசிக்கும்படி ஆக்குவது ‘அப்பட்ட’த்தை தவிர்த்த இந்தவித வசீகர மொழியாடலே.


Fanny Hill: Memoirs of a Woman of Pleasure, John Cleland (1709 - 1789) 
இணையத்தில் வாசிக்க- Gutenberg, LibriVox

Image Credit : Books Should be Free

Related Posts Plugin for WordPress, Blogger...