A.J.Cronin A.K.Ramanujan Amartya Sen Andrea Maria Schenkel Anton Chekhov Arthur Hailey Bill Bryson Deborah Eisenberg dhan gopal mukerji Elizabeth Kostova Gay Neck Geoff Dyer George Orwell Harper Lee Henning Mankell Ian McEwan Jared Diamond Jilly Cooper Jonathan Livingstone Seagull Joseph Heller Kenneth Anderson Kiran Desai mark tully Maugham Michael McCarthy O.Henry okakura kakuzo Orhan Pamuk P.G.Wodehouse PB.ஸ்ரீனிவாஸ் R.K.Narayan Richard Bach Ronald Wilks saggi Stephen King steven weinberg Swami Tejomayananda Upamanyu Chatterjee vikram seth William Sydney porter அ. முத்துலிங்கம் அ.கா.பெருமாள் அகிலன் அசோகமித்திரன் அழகியசிங்கர் அறிஞர் அண்ணா அறுசுவை அரசு நடராஜன் அனார் ஆ. சிதம்பரகுற்றாலம் ஆதவன் ஆர்.கே.நாராயண் ஆர்.ஷண்முகசுந்தரம் ஆஸ்கார் ஒயில்டு இடாலோ கால்வினோ இந்திரா பார்த்தசாரதி இந்துமதி இரா. நாறும்பூநாதன் இரா.நடராசன் இரா.முருகவேள் இரா.முருகன் இலக்கிய வீதி இனியவன் இலவச கொத்தனார் உமா சம்பத் எம் கோபாலகிருஷ்ணன் எம். வி. வெங்கட்ராம் எர்னெஸ்ட் ஹெமிங்வே என்.சொக்கன் என்.ராமதுரை எஸ். ராமகிருஷ்ணன் எஸ்.சந்திரமௌலி ஏ.கே.ராமானுஜன் ஏ.கோபண்ணா ஒல்கா பெரோவ்ஸ்கயா ஃபெயின்மன் க.நா.சு கண்மணி குணசேகரன கரிச்சான் குஞ்சு கலாப்ரியா காப்கா காலபைரவன் கி. ராஜநாராயணன் குமரி எஸ்.நீலகண்டன் குல்தீப் நய்யார் கே நெக் கோபிநாத் கோபுலு சந்திரசேகர சர்மா சமஸ் சல்மான் ரஷ்டி சா. கந்தசாமி சா.பாலுசாமி சாருநிவேதிதா சாலீம் அலி சி.சரவணகார்த்திகேயன் சி.சு.செல்லப்பா சிபி.கே.சாலமன் சு. வேணுகோபால் சுகுமாரன் சுந்தர ராமசாமி சுப்புடு சுவாமி விவேகானந்தர் சுனில் ஜோகி சுஜாதா செல்லம்மா பாரதி செள.ராஜன் சே. இரகுராமன் சோம.வள்ளியப்பன் டாக்டர். சு.முத்து செல்லக்குமார் டாக்டர். பி.எம்.ஹெக்டே டாக்டர்.எல்.மகாதேவன் தமிழ் மகன் தரம்பால் தி. ஜானகிராமன் தி.ஜானகிராமன் தியடோர் பாஸ்கர் து.கணேசன் ந.பிச்சமூர்த்தி நகுலன் நடிகர் சிவகுமார் நமீதா தேவிதயாள் நா.முத்துக்குமார் நாகம்மாள் நாகூர் ரூமி நாஞ்சில் நாடன் ப. சிங்காரம் பல்லவி அய்யர் பவன் வர்மா பவா செல்லதுரை பழ.அதியமான் பழ.கருப்பையா பஷீர் பா.ராகவன் பாம்பே ஜெயஸ்ரீ பாரதியார் பாலகுமாரன் பாலச்சந்திரன் சுள்ளிக்காடு பாலு மகேந்திரா பாவண்ணன் பி.எச்.டேனியல் பி.எம்.சுந்தரம் பி.ஏ.கிருஷ்ணன் பி.வி.ராமஸ்வாமி பிரமிள் பெஞ்சமின் ப்ளாக் பெருமாள் முருகன் பொ.கருணாகரமூர்த்தி மகாகவி பாரதியார் மதன் மருதன் மலர்மன்னன் மனுஷ்யபுத்திரன் மா.கிருஷ்ணன் மார்க்வெஸ் மாஸ்தி மில்லி போலக் முகில் முஹமது யூனுஸ் யதுகிரி அம்மாள் யுவன் சந்திரசேகர் ரகோத்தமன் ரமணி சந்திரன் ரா.கி.ரங்கராஜன் ராஜாஜி லலிதாராம் லா.ச.ரா லிவிங்ஸ்மைல் வித்யா லூசியன் ஸ்ட்ரைக் லெமூர் வ.ரா வண்ணதாசன் வா.மு கோமு வாலி விட்டல் ராவ் விளதீமிர் பகமோலவ் வின்சென்ட் ஷீன் வீயெஸ்வி வுடி ஆலன் வெரியர் எல்வின் வேதவல்லி வைக்கம் முகமது பஷீர் வைணவச் சுடராழி ஆ. எதிராஜன் வைரமுத்து ஜனனி ரமேஷ் ஜான் பான்வில் ஜி.நாகராஜன் ஜிம் கார்பெட் ஜெயகாந்தன் ஜெயமோகன் ஜே. ஹெச். வில்லியம்ஸ் ஜோதிநரசிம்மன் ஷோபா சக்தி ஹென்னிங் மான்கெல்

31 Jan 2013

Henning Mankell - Faceless Killers

எடை கூடிக் கிழப் பருவம் எய்தியது போன்ற சோர்வுடையவர், சர்க்கரை வியாதியும் உண்டு, சிதறிய குடும்பத்தின் முற்காலத்து குடும்பத் தலைவர், அறியாத ஒரு கணத்தில் பனை முறிந்தது போல காரணமற்று உறவு முறிந்த மகளின் நினைவில் வாழ்பவர், தனது இருப்பை மறந்து நினைவுச் சிதறிய தந்தையை வாரம் ஒரு முறை சந்திப்பவர், அலுவலகத்திலும் பெயரற்றவர், அலுவலக காரியங்களுக்காக வேண்டி தவம் இருந்து பணத்தைப் பெறுபவர், வாங்கும் சம்பளம் போதாவிட்டாலும் எஞ்சும் பணத்தில் குடிப்பவர், விவாகாரத்தானது மட்டுமல்லாது புது பெண் உறவுகளையும் பேணத் தெரியாதவர் - இதைப் படிக்கும்போதே நமக்கு கெட்ட ஆவி - அதான் கொட்டாவி வருகிறதே! இப்படி ஒரு பாத்திரத்தை நாவல் முழுவதும் வைத்திருந்தால் எத்தனை எரிச்சலாக இருக்கும்? அதுவே ஒரு துப்பறியும் இன்ஸ்பெக்டராக அவர் இருந்தால் புத்தகத்தை வாங்குவோமா என்ன?

வெல்கம் டு இன்ஸ்பெக்டர் வலாண்டர் சீரிஸ்!

இவர் பெயர் தாங்கிய புத்தகங்களை ஐரோப்பிய கடைகளில் பார்த்திருக்கிறேனே தவிர படிக்கும் எண்ணம் சுத்தமாக இருந்ததில்லை. குற்றப் புனைவு நூல்களைப் படிப்பதில் பெரிய ஒவ்வாமை இருந்தது. கல்லூரி நாட்களில் படித்த அலிஸ்டர் மேக்லின், மைக்கேல் கிரைடன் போன்றவர்களின் சாகசக் கதைகள் படிக்கும் ஆர்வம் இருந்தாலும், குற்றப் புனைவு படிப்பதில் ரொம்பவும் தயக்கம் இருந்தது. ஷெர்லாக் ஹோம்ஸ் கதைகள் பலதைப் படித்திருக்கிறேன். அதில் ஷெர்லாக் ஒரு புத்திசாலி, குற்றங்களைக் கண்டுபிடிப்பதில் அவருக்கு இருக்கும் attention to detail வேறு யாருக்கும் இல்லை எனும்படியான சாகச நாயகன் பிம்பத்தை ஒரு எல்லைக்கு மேல் ரசிக்க முடியவில்லை. குற்றங்கள் மிக மெத்தனமாகக் கையாளப்படுவதை தினசரி செய்திகளில் படிக்கிறோம். மிகக் கைதேர்ந்த இன்ஸ்பெக்டர்/உளவாளிக்குக் கூட எல்லாமே கை மேல் கிடைத்துவிடுவதில்லை. சாகச மனநிலையில் படிக்கும்போது இருக்கும் சுவாரஸ்யம், படித்தபின் காணாமல் போய்விடுகிறது. இதெல்லாவற்றுக்கும் மேலாக, ஜேம்ஸ் பாண்ட் கதைகளில் வருவது கற்பனையிலும் சாத்தியமாகாத ஒன்று. கணக்கில்லா சாத்தியங்களில் பணமும், அதிகாரமும், நாடு விட்டு நாடு செல்லும் அனுமதியும், எக்கணமும் கைக்குக் கிடைக்கும் ஆயுதங்களும், அணுவைப் பிளந்து ஏழ் கடலைப் புகுத்தி அதில் காதலியுடன் உல்லாசப் படகில் செல்லும் வசதிகளும் எல்லா இன்ஸ்பெக்டர்/உளவாளிகளுக்குக் கிடைத்துவிடுவதில்லை.

அப்படி ராசியில்லாத ஒரு யதார்த்தமான இன்ஸ்பெக்டர் நம் வலாண்டர்.
 
 


30 Jan 2013

பொடுபொடுத்த மழைத்தூத்தல் - தொகுப்பு: அனார்

வண்டறுத்த சோலையிலே
மரமழுது போறதுபோல்
நின்டழுவன் மச்சான்
உங்கெ நினைவுவாற நேரமெல்லாம்

இஸ்ஸத் ரீஹானா எம்.அஸீம் என்கிற “அனார்”. இலங்கையைச் சேர்ந்த முக்கியமான இளம் தலைமுறைப் பெண் கவிஞர்களுள் ஒருவராகக் கருதப்படுபவர். கிழக்கு இலைங்கையின் சாய்ந்த மருது என்னும் ஊரைச் சேர்ந்த அனார் தொகுத்து ”க்ரியா” வெளியீடாக வெளிவந்திருக்கும் கிழக்கிலங்கை நாட்டார் காதல் பாடல்களே “பொடுபொடுத்த மழைத்தூத்தல்” என்னும் இந்தப் புத்தகம்.


நாட்டார் பாடல்கள் அல்லது கிராமியப் பாடல்கள் என்பவை நாட்டுப்புற மக்கள் தங்கள் வேலை நேரங்களின் இடையே வேலைப்பளு தெரியாமல் இருப்பதற்காகப் பாடுபவை. இவை எழுதிவைத்துப் பாடிய பாடல்கள் அல்ல. இவற்றைப் பாடியவர்கள் ஏட்டுக்கல்வி அறிந்தவர்களாக இருந்திருப்பார்களா என்பதுவும் சந்தேகமே. ஆக, வாய் வழியே பாடி, செவி வழியே கேட்டு, சந்ததிகள் வழியே பயணப்பட்டு இவை காலங்காலமாய் வாழ்ந்து கொண்டு இருப்பவை.  கைப்பேசியிலேயே வானொலி நிகழ்ச்சிகளைக் கேட்கும் வசதி, பணியாளர் அறைகளில் தொலைக்காட்சி பார்க்கும் வசதி என்று வளர்ந்துவிட்ட இன்றைய சூழலில் இந்தவகைப் பாடல்கள் இன்னமும் பரவலாகப் புழக்கத்தில் உள்ளனவா என்பதுவும், அடுத்த அடுத்த தலைமுறைகளுக்கு இவை வாய்வழிச் செவிவழி கொண்டு செல்லப்படுமா என்பதுவும் கேள்விக்குறியே. 

காலங்காலமாக நம் கிராமங்களில் வாழ்ந்து வரும் இப்பாடல்கள் நம்மவர்களின் நாகரிக வளர்ச்சியில் மூச்சடைத்து அழிந்திடாமல் இருக்க அவ்வப்போது சிலர் இவற்றை ஆவணப்படுத்துகிறார்கள்.

சிலப்பதிகாரம் போன்ற பெரும் காவியங்கள் கூட அடிப்படையில் நாட்டார் பாடல்களை ஆதாரமாகக் கொண்டு படைக்கப்பட்டவையே என்ற கருத்தும் உண்டு. 

வீரபாண்டிய கட்டபொம்மன் வரலாறு நம்மிடையே பிரபலமானது நடிகர் சிவாஜிகணேசன் நடித்த படத்தின் மூலம் என்பது நாம் நன்கு அறிந்த விஷயம்தான். ஆனால் அதற்கு முன்னால் கிராமங்களில் கட்டபொம்மனின் வழிவந்த கிராமத்துக் கிழவிகள் அவன் வரலாறை நாட்டார் பாடல் தொனியில் பாடிக் கொண்டிருக்க அதைக் கேட்ட மபொசி அவற்றை ஆவணப்படுத்தி வெளிக் கொணர்ந்ததே கட்டபொம்மன் கதை வெளிவந்ததன் முதல்படி. மபொசி கட்டபொம்மன் வரலாறை வெளிக் கொணர்ந்திரா விடில் பத்தொடு பதினொன்றான சிற்றரசர்களுள் ஒருவனாக அவன் மறக்கப்பட்டிருப்பானோ என்னவோ.

(எட்டையாபுர வழி வந்தவர்கள் கட்டபொம்மனைக் கொள்ளையனாகப் பார்ப்பவர்கள். அவர்களுக்கு இந்த விஷயத்தில் மபொசி மீதும், சிவாஜிகணேசன் மீதும் தனிக் கோபம் இருப்பது தனிக்கதை)

இப்படி ஒரு சிற்றரசனின் வரலாறே காலப்போக்கில் மறந்து தொலைக்கக் கூடியது எனில், யார் ஆதிகாலத்தில் உருவாக்கினார்கள் என்றே தெரியாத இதர நாட்டார் பாடல்கள்  எம்மாத்திரம்? ஆக, இத்தகைய பாடல்களைத் தொகுத்துப் புத்தக வடிவில் கொண்டு வருபவர்கள் ஒருவகையில் ஒரு வட்டாரத்தின் ஒரு காலகட்டத்தின் வரலாறைப் பதிவு செய்கிறார்கள். 

வரலாறு? காலகட்டம்?

ஆம், பேரிலக்கியங்கள் மட்டுமல்ல சின்னச்சின்ன நாட்டார் பாடல்களும் அவை பாடப்பட்ட காலகட்டத்தின் மக்களின் வாழ்வியலை போகிற போக்கில் சொல்லிச் செல்பவைதானே.

நாட்டார் பாடல்களானவை நடவுக்கும், ஏருக்கும், உழவுக்கும், படகு வலிக்கவும், வண்டி ஓட்டும் வேளையிலும் பாடப்படுவது என்று வேலை நேரத்திற்கானது என்று மட்டுமே அல்லாமல்  தாலாட்டில் தொடங்கி ஒப்பாரி வரை வாழ்வின் அனைத்து காலகட்டங்களுக்கும் பாடப்பட்டவை. கும்மிப்பாட்டு, நெற்குத்திப்பாட்டு, ஏற்றப்பாட்டு என்று இவற்றில் பல கிளைவகைகள் இருக்கின்றன.

கிழக்கிலைங்க நாட்டார் பாடல்களில் அனார் தேர்ந்தெடுத்துத் தொகுத்திருப்பவை காதல் சுவையை மட்டுமே. 
கத்தி எடுத்துக்
கதிர் அரியும் வேளையிலே
கள்ள எண்ணம் வந்து
என்ட கையறுத்துப் போட்டுதடி 
இப்படி தோராயமாக ஒவ்வொன்றும் நான்கு அடிகள் கொண்ட பாடல்கள். 160 பாடல்களை அனார் தொகுத்திருக்கிறார். படிக்க வசதியாக அவற்றை ”அவன்” பாடுவதாக 80 பாடல்களையும், “அவள்” பாடுவதாக 80 பாடல்களையும் கோர்த்து ஜோடிப் பாடல்களாக ஒன்றுக்கு ஒன்று கேள்வியும் - பதிலுமாய்த் தந்திருப்பது படிக்க இனிமை.
உன்னை மணந்து
உயர்ந்த கட்டில்மேல் வைத்து
கன்னந்திருப்பிக்
கதைக்க வெகு நாட்களில்லை
என்று “அவன்” காதற்சுவை பாடினால்....
ஏறப் பழுத்த
இரு சிவப்பு மாம்பழத்தை
என்ன வந்தாலும்
எடுத்தருந்து என்கிளியே
என்று ”அவள்” காமத்துப்பால் பருகச் சொல்கிறாள்.

நாட்டார் பாடல்களின் சிறப்பு ஒன்றேயொன்றுதான்.  இவை கவிஞனின் கவித்திறமையை, உவமைத் திறனை, இலக்கண சுத்தத்தை, இலக்கிய ஆளுமையை என்று பெரிய விஷயங்களுக்குள் எல்லாம் நுழையாமல் ஒரு சாமானியனின் கணநேரச் சிந்தையை உள்ளதை உள்ளபடிக்கு மொழிபெயர்ப்பனவாக இருப்பதுதான். கவிக்கட்டமைப்பின் கவனச் சிதறலின்மை இவற்றைப் போலியற்ற கவிதையாக வாழ்வாங்கு வாழவைக்க உதவுகின்றன.

கிழக்கிலங்கை நாட்டார் பாடல்களைப் பாடினதில் முஸ்லிம் பெண்களின் பங்கு அதிகமானது என்கிறார் அனார். பிரிவு, இரங்கல், தூதுப் பாடல்கள் அவற்றில் தூக்கலாகத் தெரிபவை.

இந்தப் புத்தகத்தின் மூலம் நமக்குக் கிடைப்பவை அந்த சுவைமிக்க நாட்டார் பாடல்கள் மட்டுமல்ல; கூடவே அவை ஒவ்வொன்றிலும் கையாளப்பட்டிருக்கும் கிழக்கிலங்கைப் பிராந்தியத்தின் பிரத்தியேக வார்த்தைகள் சிலவற்றுக்கான அர்த்தங்களும் கூடவே. சுமார் பத்து டஜன் வார்த்தைகளுக்கு பொருளும் சேர்த்தே தரப்பட்டுள்ளது.

சில உதாரணங்கள்:

பொடுபொடுத்த  = துளித்துளியாய்ப் பெய்யும் மழை
ஒழுங்கை = வீதி
நுளம்பு = கொசு
பொறுதி = பொறுமை.

அள்ளினால் தங்கம்
அணைச்செடுத்தால் அமிர்த குணம்
கொஞ்சினால் இஞ்சி மணம்
கோவைசெய்தால் வேர்வை மணம்
ஆம்! வேர்வை மணத்தின் இனிமைதான் நாட்டார் பாடல்களின் இனிமையும் கூட!

பொடுபொடுத்த மழைத்தூத்தல்
கிழக்கிலங்கை நாட்டார் காதல் பாடல்கள்
க்ரியா பதிப்பகம் (creapublishers@gmail.com)
தொகுப்பு: அனார்
72 பக்கங்கள் / விலை ரூ. 150/-

அனார் இணையதளம்:  http://anarsrilanka.blogspot.com

(இணையம் மூலம் இந்தப் புத்தகம் வாங்க வசதி இருப்பதாய்த் தெரியவில்லை. இப்புத்தகம் வாங்க விழையும் வெளியூர் மக்கள் டயல் ஃபார் புக்ஸ் மூலம் முயற்சித்துப் பார்க்கலாம்)

29 Jan 2013

ஆனி ப்ரூ - அமெரிக்க கிராமங்களூடே ஒரு பயணம்

சிறப்பு  பதிவர் : அஜய்


முதலில் கொஞ்சம் சுயபுராணம். அமெரிக்காவைப் பற்றி ஓரு சிறுவனாக எனக்கிருந்த மனச்சித்திரம் நான் கண்ட திரைப்படங்களையும் வாசித்த புத்தகங்களையும் கொண்டு உருவான ஒன்று (குழந்தைகள்/ பதின்ம வயதினருக்கான கதைகள், pulp fiction). அதில் ஓரு ஒற்றைத்தன்மை இருந்தது. என் மனதில் இருந்த அமெரிக்கா செழிப்பான ஓரு மாபெரும் நிலப்பரப்பு, அதன் நகரங்களில் உலகில் உள்ள வளங்கள் அனைத்தும் திரண்டிருந்தன, அங்கிருந்த மக்கள் பெரும் பணக்காரர்களாக இருந்தனர், அவர்களின் பால்விழைவு கட்டுப்பாடற்றிருந்தது. பெரும் பணம், பொருள் ஈட்ட வேண்டும் என்பது போன்ற தீவிரமான குறிக்கோள்களுடன் வாழ்ந்த அவர்கள் பிரம்மாண்டமான நிறுவனங்களை உருவாக்கி நிர்வகித்தனர். நிறுவனங்களாக அல்லது மாஃபியா கும்பல்களாக மோதிக் கொண்டனர் (corporate/mafia wars). இவர்களைத் தவிர இன்னொரு கூட்டமும் இருந்தது. ரஷ்யாவைச் சேர்ந்த கெட்டவர்களிடமிருந்து உலகைக் காப்பாற்ற முயற்சிக்கும் கூட்டம் இது. 

இந்த அமெரிக்கா வெள்ளையர் கருப்பர் என்று இரண்டு குழுக்களாகப் பிளவுபட்டிருந்தது. நிலத்தின் பூர்வகுடிகளும் சிவப்பிந்தியர்கள் என்று அழைக்கப்பட்டவர்களும் கொடுமையானவர்களாக இருந்தனர், அல்லது வெள்ளையர்களின் உதவியாளர்களாக. அவர்களுடைய தனித்தன்மை என்று எதுவும் இல்லை, stereotyping தான் எங்கும். நம் தமிழ் நாட்டு 'ராணி காமிக்ஸ்' காட்டிய செவ்விந்தியர்களும் இப்படிதான் இருந்தார்கள்.  அங்கு குடியேறியிருந்த ஹிஸ்பானிக்குகளும் ஏனைய வேற்று இனத்தவர்களும் எதிர்கொண்ட பல்வேறு பிரச்சினைகளைப் பற்றி எனக்கு பெரிதாக எதுவும் தெரிந்திருக்கவில்லை. (உதாரணமாக 'காட்பாதர்' (mario puzo) நாவலின் முக்கிய பாத்திரம் இத்தாலிய குடியேறி என்றாலும், கதையின் களன் வேறொன்றாக இருப்பதால் அதிலும் இது பேசப்படவில்லை) நான் வாசித்த புத்தகங்களின் கதைமாந்தர் எதிர்கொண்ட பிரச்சினைகள் என் வாழ்க்கை பிரச்சினைகளிலிருந்து வெகு தொலைவில் இருந்தன. என் மனதில் இருந்த சித்திரம் யதார்த்தத்தைவிட்டு வெகுவாக விலகிய ஓரு திரிக்கப்பட்ட பிம்பம். இதெல்லாம் இன்று திரும்பிப் பார்க்கும்போதுதான் தெரிகிறது, அந்த நாட்களில் இப்படியெல்லாம் இருக்கும் என்ற எண்ணமே எனக்கு இருக்கவில்லை. இன்றும் கணிசமான பேர் அமெரிக்காவை ஒரு சொர்க்க பூமியாகத்தான் பார்க்கிறார்கள், 2005இல் காட்ரினா (katrina) புயலால் அமெரிக்கா பாதிக்கப்பட்டபோது அங்குள்ள சீர்கேடுகள், ஊழல்கள், ஏற்றத் தாழ்வுகள் மற்றும் அரசு நிர்வாக செயலின்மை வெளிச்சத்துக்கு வந்தபோது அதை நம்ப முடியாமல் தவித்தவர்களை நான் அறிவேன்.

அந்த சிறு வயதில் கிடைத்திருந்த புத்தகங்களைப் பற்றி இப்போது யோசித்துப் பார்க்கும்போது கிராமங்களைப் பற்றிய விவரணைகளோ கிராமங்களில் வாழ்ந்தவர்கள் பற்றிய பதிவுகளோ, அவர்களும் சமகாலத்தில்தான் வாழ்கின்றனர் என்ற உணர்வோ அவற்றில் வெளிப்பட்டிருக்கவில்லை என்றுதான் தோன்றுகிறது. அமெரிக்காவில் நகரங்கள் மட்டும்தான் இருந்தன என்பதுபோல் ஓரு உணர்வு, கிராமங்கள் என்ன, சிற்றூர்களும்கூட தொடப்படவில்லை. தொண்ணூறுகளின் ஆரம்பம் வரையில் (pre-liberalization era) சிறுவர்களாக இருந்தவர்களுக்கு அமெரிக்கா பற்றிய ஒரு பொது எண்ணம் இப்படிதான் இருந்திருக்கும் என்று நினைக்கிறேன். ஆனால் அப்போதும் கிராமங்களைப் பேசும் நாவல்கள் எழுதப்பட்டுக் கொண்டுதான் இருந்திருக்க வேண்டும், எனக்கு அவை எதுவும் தெரிய வரவில்லை. பின்னர்  இன்னும் பல எழுத்தாளர்களை வாசிக்கத் துவங்கிய பின்னர்தான் மெல்ல மெல்ல வேறொரு சித்திரம் உருவானது.

உதாரணத்துக்கு ரேமண்ட் கார்வார் அமெரிக்காவின் மத்திய மற்றும் தாழ்நிலை நடுத்தர வர்க்கத்தினரின் நகர, சிறு நகர வாழ்க்கையைப் பற்றிய ஓரு புரிதலைக் கொடுத்தார். அப்டைக், புறநகர் மற்றும் சிற்றூர்களில் வாழ்ந்த அமெரிக்கர்களின் இல்லற உறவைப் பற்றிய ஓரு புரிதலைத் தந்தார். அமெரிக்க பூர்வ குடிகளை பற்றி, அவர்கள் வாழ்கை முறை, தொன்மங்கள் பற்றி   N. Scott Momaday, Sherman Alexie போன்ற பலர் எழுதுகிறார்கள். ஹிஸ்பானியர்களின் குடியேற்ற வாழ்கை பற்றி (hispanic immigrant experience), ஜூனோ டியாஸ் (Junot Diaz) எழுதுகிறார். இவற்றைப் போன்ற படைப்புக்கள்தான் அமெரிக்காவின் பன்முகத்தன்மையை காட்டுகின்றன.

அந்த வகையில் ஆனி ப்ரூவின் எழுத்தில்தான் கிராமப்புற அமெரிக்க வாழ்க்கையைப் பற்றிய அறிமுகம் எனக்கு கிடைத்தது.  அதன் ராஞ்ச்கள், அவற்றை நிர்வாகிக்கும் கவ்பாய்கள், அதன் பாலைவனங்கள், பிரெய்ரிகளை நாம் அவரது நாவல்களில்தான் அறிகிறோம். எனக்குக் கிடைத்த அவரது முதல் நாவலே வாசித்து முடித்ததும் என்னை அவரது எழுத்தை நேசிக்கும் வாசகனாக்கிக் கொண்டது.



28 Jan 2013

எரியும் பனிக்காடு – பி.எச்.டேனியல் – இரா. முருகவேள்



சினிமாவோ புத்தகமோ நம்மை பெரிதும் பாதிக்கும் விஷயங்கள் பெரும்பாலும் துன்பச் சரித்திரங்களாகவே அமைந்து விடுகின்றன. ஒரு மகிழ்ச்சியாக முடிவுறும் (Happy Ending) ஒரு நாவலை விட ஒரு துயரத்தின் காவியம் நம் மனதில் ஏற்படுத்தும் பாதிப்பு நீண்ட நாட்கள் நிலைத்திருக்கும். இன்று களைப்பின்போதும், நேரம்போகாத சமயங்களிலும் அமர்ந்து தேநீர் குடித்துக் கொண்டிருக்கும் நமக்கு வால்பாறைத் தேயிலைத் தோட்டங்கள் உருவான வரலாறோ அதில் கொல்லப்பட்ட மக்களைப்பற்றியோ தெரிந்திருக்க வாய்ப்பில்லை. மனிதாபிமானத்தின் சுவடுகள் முற்றிலும் அழிக்கப்பட்டு வேட்டையாடப்பட்ட ஒரு இனத்தின் ரத்த சரித்திரம் விரிகிறது கண் முன்னே இந்த புத்தகத்தின் வாயிலாக.

திருநெல்வெலி மயிலோடை கிராமத்தில் வசித்து வரும் கூலி கருப்பன், அவன் மனைவி வள்ளி. உள்ளூரில் அதிகம் வேலை இல்லாத காரணத்தினால் வறுமையில் உழன்று கொண்டிருக்கும் கருப்பனையும் வள்ளியையும் தேயிலைத்தோட்ட கங்காணியான சங்கரபாண்டியன், தேயிலைத் தோட்டங்களில் வசதியாக வாழலாம், நிறைய சம்பாதிக்கலாம் விரைவில் வாழ்வில் நல்ல நிலைக்கு வந்து விடலாம் என்று ஆசை வார்த்தை கூறி நாற்பது ரூபாய் முன்பணமும் கொடுத்து அழைத்துச் செல்கிறான். கருப்பன்வள்ளி போல பலரும் சங்கரபாண்டியை நம்பி தேயிலைத்தோட்டத்திற்கு வர சம்மதிக்கின்றனர். அவர்கள் அனைவரையும் சங்கரபாண்டி தன் சொந்தச் செலவில் தோட்டத்திற்கு அழைத்துச் செல்கிறான்.

அங்கு சென்றதும் இவர்கள் காணும் காட்சி மிக வித்தியாசமானதாக இருக்கிறது. சுகாதாரமற்ற அறைகள். அதுவும்பாடிஎன்று சொல்லப்படும் ஒரு குடிசை இரண்டு குடும்பங்களுக்குப் பகிர்ந்தளிக்கப் படுகிறது. புதிதாய் சேர்ந்த கருப்பனும் வள்ளியும் முத்தையா குடும்பத்தினருடன் ஒரே குடிசையில் குடியமர்த்தப் படுகிறார்கள். அதுவரையிலும் இனிமையாய் பேசிய கங்காணிகள் தோட்டத்தில் தங்களைக் கொடுமைப் படுத்துவதைக் கண்டு அஞ்சுகின்றனர். இவ்வாறு தங்கள் தேயிலைத் தோட்ட வேலையைத் தொடங்கிய இவர்கள் கரை சேர்ந்தார்களா அங்கு இவர்கள் அனுபவித்த கொடுமைகள் என்ன என்பதுதான் இந்த நாவல்.

நிறைய சம்பாதிக்கப் போகிறீர்கள் என்று நம்பிக்கை செலுத்த முன்பணத்தை வாரி வழங்குவதிலாகட்டும், குடுகுடுப்பைக்காரனை ஏற்பாடு செய்து நல்லது நடக்கும் என்று கூலிகளை நம்ப வைப்பதிலாகட்டும், ஏமாற்றியே கூலிகளை வேலைக்கு அழைத்துச் செல்கின்றனர் கங்காணிகள். ஒவ்வொரு கூலியும் வேலை செய்வதில் ஒரு பங்கு கங்காணிக்கு சம்பளமாக கொடுக்கப்படும். அதனால்தான் இத்தனை ஏமாற்று வேலைகளும். பிறகு வேலை பிடிக்காமல் கூலிகள் திரும்பிச் செல்ல விரும்பினால் கொடுத்த முன்பணத்தை திரும்பச் செலுத்தவேண்டும். ஒரு வருடம் கணவன் மனைவி இருவரும் வேலை செய்தாலும்கூட அந்தக் கடனை அடைக்கமுடியாது. இப்படியாக அவர்கள் வேலை செய்யவேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாக்கப்படுகிறார்கள்.

தேயிலைத் தோட்டங்களில் நிலவிய மனிதாபிமானமற்ற சூழலை, அதன் வலியை வாசகன் உணரும் வகையிலான விவரணைகள் புத்தகம் நெடுக. சுத்தமற்ற குடிநீர், அழுக்கான மற்றும் கடும்குளிரை சமாளிக்க ஏதுவாக அமைந்திராத குடிசைகள், போதிய மருத்துவ வசதியின்மை, ஒரு வார்டுபாய் மருத்துவராக மருத்துவம் பார்க்கும் மோசமான நிலை மற்றும் மலேரியா போன்ற விஷக் காய்ச்சல்களால் உடன் வந்தவர்கள் பாதிப் பேரை பலிகொடுக்கும் மோசமான மருத்துவ சூழல், உடனிருப்பவருக்கு உடல்நிலை சரியில்லாத போதும் வேலை செய்ய வேண்டிய கட்டாயம், பெண்களானால் பாலியல் தொந்தரவுகள், தப்பியோடினால் காட்டு மிருகங்களால் வேட்டையாடப்படும் நிலை என்று அவர்கள் அனுபவித்த கொடுமைகளை தொடர்ந்து வாசிக்க இயலாதவாறு பக்கங்கள் புரளும்தோறும் மனம் கனத்துக் கொண்டெ போகிறது.

இந்தச் சூழலில் மருத்துவர் ஆப்ரஹாம் அங்கு வந்து சேர்கிறார். பின்னட்டையில் கொடுக்கப்பட்டிருக்கும் தகவலின்படி ஆப்ரஹாமின் பாத்திரத்தின் பேரில் இந்த நாவலின் ஆசிரியர்தான் அங்கு மருத்துவராக வருகிறார். மருத்துவ வசதிகளை அதிகப்படுத்தியும் கூடுமானவரையிலும் அங்கிருக்கும் கூலிகளுக்கு உதவியாக இருக்கிறார்.

இன்று நம் மன அழுத்தத்தைப் போக்கும் முக்கிய காரணியாக இருக்கும், நாம் பொழுதுபோக்கிற்கு குடிக்கும் தேநீரை சிவப்புத்தேநீர்  என்று சொன்னால் அது மிகையாகாது. முகம் தெரியாத பலரின் வியர்வையும் ரத்தமும் சிந்தி உருவாக்கப்பட்டதே இந்தத் தேயிலைக்காடுகள். உண்மையில் இன்று அந்தத் தேயிலைக் காடுகள் சுமந்து நிற்பதென்னவோ மறைக்கப்பட்ட ஒரு தலைமுறையின் துயரத்தின் வாழ்வியலைத்தான். நாமறியாத வரலாற்றினை அறிந்துகொள்ளும் பொருட்டேனும் இப்புத்தகத்தின் வாசிப்பு இன்றியமையாததாகிறதென இதை உங்களுக்கு சிபாரிசு செய்கிறேன்.

நாவல் | மொழிபெயர்ப்பு | விலை ரூ. 150 | இணையத்தில் வாங்க டிஸ்கவரி

27 Jan 2013

மதராசபட்டினம் to சென்னை


மதராசபட்டினம் to சென்னை
ஆசிரியர்: பார்த்திபன்
பக்கங்கள்: 224
விலை: ரூ.100

தமிழக அரசியல்வாதிகள் பலரும் செல்ல விரும்பும் இடமான புனித ஜார்ஜ் கோட்டைக்கு ஏகப்பட்ட முறை சென்றிருக்கிறேன். அப்பா அங்கே வேலை பார்த்து வந்தார். கோட்டைக்குள் இருக்கும் ஒரு தேவாலயம், அருங்காட்சியகத்துக்குக் கூட கூட்டிப் போயிருக்கிறார். இதெல்லாம் பழங்கால (ஆங்கிலேய) கட்டிடங்கள்னு அவர் விளக்கிய நினைவுகள் மங்கலாக இருந்தது. அந்த மங்கலெல்லாம் இந்த புத்தகம் படித்தபிறகு செம ‘பளிச்’. சாந்தோம் தேவாலயம் முதல் சேப்பாக்கம், உயர்நீதிமன்ற வளாகம், பின்னர் ராயபுரம் வரை எண்ணற்ற முறைகள் சென்றுவந்தாலும், இந்த இடங்களின் அருமை பெருமைகளை துண்டுதுண்டாய் அங்கங்கே படித்து வந்தாலும், ஒரே தொகுப்பாய் இங்கே படித்ததில் மிக மகிழ்ச்சியாகவும், பெருமையாகவும், மெட்ராஸின் வரலாற்றுச் சிறப்புகளை அறிந்து கொண்டதில் ஒரு 'மெட்ராஸ்காரனாக’ சிறிது கர்வமாகக்கூட இருந்தது.

26 Jan 2013

ஜெயமோகன் குறுநாவல்கள்

ஜெயமோகன் குறுநாவல்கள்
முழுத்தொகுப்பு


ஜெயமோகன் எழுதியவற்றில், இவர்தான் ஜெயமோகன் என்று தெரியாதபோது, அதாவது நான் பள்ளி செல்லும் வயதில், “பனி மனிதன்” நாவலை மட்டும் அது சிறுவர் மணி - தினமணியில் தொடர்கதையாக வந்தபோது வாசித்திருக்கிறேன். அதற்கு அப்புறம் பெரிதாக, ஜெயமோகன் எழுதியதை நான் வாசித்ததில்லை, ஒரு சில ஆண்டுகளுக்கு முன், “விசும்பு” என்ற அறிவியல் புனைவு கதை தொகுதியை, நண்பர் :-) ஒருவர் பரிந்துரையின் பேரில் வாசித்தேன். அதில் சில கதைகளுடன் என்னால் உடன்பட முடியவில்லை, அதைப் பற்றி இங்கு பேசப்போவது இல்லை. இந்த வாரம், ஜெயமோகன் எழுதிய குறுநாவல்கள் பற்றி.பதினொரு குறுநாவல்கள் கொண்ட இந்தத் தொகுப்பை வாசிக்கும்போதும், வாசித்து முடித்த பின்னும் எனக்கு ஏற்பட்ட எண்ணங்களை இங்கு பதிவு செய்கிறேன்.

25 Jan 2013

முகடுகளும் சரிவுகளும் - எம். கோபாலகிருஷ்ணனின் 'முனிமேடு' சிறுகதை தொகுப்பில் காமத்தைப் பேசும் கதைகள்.

இம்மாதம் எம் கோபாலகிருஷ்ணனின் 'மணல் கடிகை' இரண்டாம் பதிப்பு கண்டிருக்கிறது. தொழிலமைப்பு, பொருளாதாரம் மற்றும் சமூக விழுமியங்களின்மீது தாராளமயமாக்கம் ஏற்படுத்திய தாக்கத்தை ஆவணப்படுத்தும் முக்கியமான நாவல். லைசன்ஸ் ராஜ் அமைப்பை விமரிசிக்கும் 'காகித மலர்கள்' இந்திய நிர்வாக அமைப்பின் உள்ளிருந்து எழுதப்பட்ட நாவல், இது சிறு தொழில் அமைப்புகளின் உள்ளிருந்து எழுதப்பட்டது. அதிகாரம் எங்கிருக்கிறதோ அங்கிருந்து அதன் விரிவான தாக்கத்தைப் பேசும் இந்த இரு நாவல்களும் சுதந்திர இந்தியாவின் இரு பெரும் கட்டங்களைப் பேசும் நாவல்கள். தில்லியையும் திருப்பூரையும் களமாகக் கொண்ட இவ்விரண்டும் இன்னும் பல பதிப்புகளைப் பெறும் தகுதி கொண்டவை.

எம் கோபாலகிருஷ்ணனின் 'முனிமேடு' 2007ஆம் ஆண்டின் இறுதியில் பதிப்பிக்கப்பட்ட சிறுகதை தொகுப்பு. மொத்தம் பதினான்கு கதைகள். 2003 முதல் 2007 வரையான நான்காண்டுகளில் பல்வேறு பத்திரிகைகளில் எழுதப்பட்ட இவை இங்கு காலவரிசையில் தொகுக்கப்படவில்லை. எப்படிப்பட்ட ஒழுங்கை உணர்த்துவதற்கான வரிசையில் கதைகள் தொகுக்கப்பட்டிருக்கின்றன என்ற கேள்வி சுவாரசியமாக இருந்தாலும் எனக்கு அதற்கு விடை தெரியவில்லை. முதல் எட்டு கதைகளில் 'இரவு', 'முனிமேடு', 'நிழல்பொழுதினிலே', 'உயிர்ப்பற்று', 'சொற்பொருள் பின்வரும்', 'கஜாரிகா' என்ற ஏழிலும் காமம் பிரதானமாக இருக்கிறது.

தொகுப்பைப் படித்துவிட்டு என் அப்பா, "இவருடைய எல்லா கதைகளிலும் காமம்தான் இருக்கிறது," என்று சொன்னார். "கோபாலின் மணற்கடிகை நாவலில் அத்தனை மனிதர்களையும் ஆட்டிப் படைக்கும் சக்தி இந்தக் காமம்தான்," என்று தொகுப்பின் அணிந்துரையில் குறிப்பிடுகிறார் கவிஞர் தேவதேவன். "வாழ்வின் மீதான வேட்கையின் குறியீடாகவே கோபாலின் படைப்புகளில் இந்தக் காமம் வருகிறது," என்ற விளக்கமும் தருகிறார் அவர்.

எந்த ஒரு படைப்பையும் அதன் மைய திரியாக நான் நினைப்பதைக் கொண்டே அணுகுவது என் வழக்கம். சிறுகதைத் தொகுப்புகளுக்கு இது சரிப்படாதுதான் - எல்லா கதைகளுக்கும் ஒரே மையம் இருக்க முடியாது. ஆனால், எது இலக்கியம் என்பதைத் தீர்மானிக்க உதவும் மூன்று கருத்துகளை  முன்னொரு பதிவில் முன்வைத்திருந்தேன். அதில் மூன்றாவது கண்டிஷன் இது : "மூன்றாவதாக, ஒரு குறிப்பிட்ட பார்வையை, ஒரு எழுத்தாளனின் ஆளுமை சார்ந்த ஒருமைப்பாட்டை, அவனது அனைத்து படைப்புகளின் வழியாகவும் உணர்த்தும் எழுத்து இலக்கியமாக எடுத்துக் கொள்ளப்படுகிறது," என்று எழுதியிருந்தேன்.

கோபாலகிருஷ்ணனின் இந்தக் கதைகளில் வரும் காமம் நமக்கு கிளர்ச்சியளிப்பதில்லை - பட்டினத்தார், தாயுமானவர் என்று தொடர்ந்த ஆன்மிக மரபில் காமத்தை ஒரு வீழ்ச்சியாகப் பேசும் களைத்த குரல் இது. எதையும் எழுதிப் பார்க்கலாம் என்று இல்லாமல் தன் உணர்வுகளை நேர்மையாக வெளிப்படுத்திக் கொள்வது நவீனத்துவ இலக்கியத்தில் ஒரு போக்காக இருந்து வருகிறது. காமத்தை ஒரு களியாட்டமாகக் கருதும் இந்த காலத்தில் இப்படிப்பட்ட ஒரு குரல் இருக்கிறதென்றால் அது ஒரு பெரிய ஆச்சரியம்தான். சமகால போக்கைவிட்டு விலகி இருப்பதால் இது ஒரு தனிக்குரலாக இருக்கிறது, மரபார்ந்த ஒரு முக்கியமான பார்வையை நவீன இலக்கியத்தில் பிரதிநிதிப்படுத்துகிறது. இதை அலட்சியப்படுத்தினால் ஆம்னிபஸ் பதிவர்களை சரித்திரம் மன்னிக்காது. சமகால தமிழில் இல்லாத ஒன்றைத் தருவதாக எதுவும் முனிமேடு தொகுப்பில் இருக்கிறது என்றால் அது களியாக இல்லாத களைத்த காமம்தான். ஆகவே, அது நம் பேசுபொருளாகிறது.

24 Jan 2013

Amsterdam - Ian McEwan

விருது வாங்கிய புத்தகங்கள் விற்பனையில் அடித்துப்பிடித்து சாதனை படைப்பது வழக்கம் தான். கடந்த புத்தக விழாவில் நாஞ்சில் நாடனின் `சூடிய பூ சூடற்க` சிறுகதை தொகுப்பு (அவருடைய ஆகச்சிறந்தது இல்லையென்றாலும்) விற்பனையில் அப்படிப்பட்ட சாதனையை படைத்தது. மற்ற மொழி புத்தகங்களின் விற்பனையைப் பார்க்கும்போது தமிழ் புனைவு புத்தக விற்பனை என்பதை சாதனை என்றெல்லாம் பெருமையாகப் பேசி விட முடியாது. ஏதோ, பத்து வருடங்களில் ஆயிரம் காப்பி போவதற்கு பதிலாக ஒரு வருடத்தில் மூவாயிரம் விற்றால் சாதனை தான். அப்படி விருது வாங்கிய பிறகு பிரபலமாகும் எழுத்துகளை நசுக்குவதற்கு `விமர்சகர்கள்` தயாராக இருப்பார்கள்.தமிழ் இலக்கிய சூழலுக்குள் வரும் வாசகனுக்கும், சிற்றிதழ் எழுத்தாளர்களுக்கும் கற்றுக்கொடுக்கப்படும் முதல் பாடம் - விருது வாங்கிவிட்டாலே, இலக்கிய தரம் குறைந்தது. ஒன்று எழுத்தாளர் சோடை போயிருக்க வேண்டும், அல்லது விருது வழங்கும் அமைப்பின் பிறப்பும் வளர்ச்சியும் சந்தேகத்துக்கிடமாக்கப்படும்.
 
எந்த மொழிச் சூழலும் இப்படிப்பட்ட சண்டைக்கு விலக்கல்ல. வெயிலும் மழையும் கூடி வந்த அப்படிப்பட்ட சுபநாளில் இயன் மக்வென் எனக்கு அறிமுகமானார். வாசகர்கள் தங்களுக்குப் பிடித்த எழுத்துகளைப் பற்றி விவாதிக்கும் இடமான குட்ரீட்ஸ் எனக்குப் பிடித்ததொரு இணையத்தளம். புத்தக மதிப்புரை என பெரிய எழுத்தாளரைக் கொண்டு எழுதப்படாமல், நம்மைப் போல சராசரி வாசகர்கள் சொல்லும் கருத்துகளைத் தொகுக்கும் தளம். பொதுவாக இங்கு அளிக்கப்படும் மதிப்பெண்கள் சோடை போவதில்லை.
 
 
 

23 Jan 2013

தந்திர பூமி -இந்திரா பார்த்தசாரதி

தந்திர பூமி
இந்திரா பார்த்தசாரதி
நாவல்
Photo courtesy/To Buy: Amazon
இந்திரா பார்த்தசாரதி நாவல்களில் நான் படிக்கும் மூன்றாவது நாவல் இது. ஐந்தாறு வருடங்கள் முன்பு ‘குருதிப்புனல்’ வாசித்திருக்கிறேன். இன்னொரு நாவல் பெயர் மறந்து விட்டது, கம்யுனிசம் அந்த நாவலின் கதாபாத்திரங்கள் மூலம் நிறைய விவாதிக்கப்படும். அவ்வளவுதான் ஞாபகம் இருக்கிறது. அங்கங்கே சில தீபாவளி மலர்கள், சிறப்பு மலர்களில் அவர் சிறுகதைகள் வாசித்து இருக்கிறேன். தீவிரமான வாசிப்பு ஆர்வம் வந்தபின் நான் வாசிக்கும் நாவல் இது.

தந்திர பூமி பற்றி சொல்ல வேண்டும் என்றால், இந்தக்  கதை படிக்கும்போது ஆதவனின் “காகித மலர்கள்” நாவல் ஞாபகம் வருவதைத் தவிர்க்க முடியவில்லை. இரண்டு நாவல்களுக்கும் சில ஒற்றுமைகள் உண்டு, ஆனால் நிறைய வித்தியாசமும் உண்டு. கதை நடைபெறும் இடம் டில்லி. இரு நாவல்களிலும் உயர் நடுத்தர மக்களின் வாழ்க்கை பிரச்சினைகள் அலசப்பட்டிருக்கும். ஆதவனின் நாவலில் மனிதனின் மனசாட்சிக்கு அதிக முக்கியத்துவம் தரப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு மனிதனும் தான் பழகும் ஒவ்வொருத்தர் மனதிலும் உருவாக்கும் பிம்பமும், அதன் கசப்பும் அதிகம் இருக்கும். இந்த நாவலிலும் கதைநாயகன் தான் யார் என்பதை அறிந்து கொள்கிறான். ஆனால் நிறைய இடங்களில் ஆசிரியர் வாசகனின் எண்ண ஓட்டத்திற்கு விஷயங்களை விட்டு விடுக்கிறார். இது இந்திரா பார்த்தசாரதியின் பலம்.

22 Jan 2013

கண்பேசும் வார்த்தைகள் - நா.முத்துக்குமார்


ஒருமுறைதான் பெண் பார்ப்பதினால்
வருகிற வலி அவள் அறிவதில்லை;
கனவினிலும் தினம் நினைவினிலும்
கரைகிற ஆண்மனம் புரிவதில்லை
அதற்கு முந்தின தினம்தான் ஒரு கல்யாணக் கச்சேரியில் அந்தப் பாடலைப் பாடியிருந்தான் அவன். பாடின மறுநாள் காலையில் இப்படி அவள் வாசலில் வந்து நிற்பாள் என்றோ பார்த்த மாத்திரத்தில் தடாரென அவள் மேல் வீழ்வான் என்றோ கனவிலும் நினைக்கவில்லை அவன்.

கண்டதும் காதலில் அவனுக்குத் தன் இருபத்தி சொச்ச வயதுவரை நம்பிக்கை இருந்ததில்லை. அவளைப் பார்த்த நொடியினில் அந்த நம்பிக்கையின்மை எங்கோ காணாமல் பொடித்துப் போனது. 
“உலகத்தில் எத்தனைப் பெண்ணுள்ளது
மனம் ஒருத்தியை மட்டும் கொண்டாடுது
ஒருமுறை வாழ்ந்திடத் திண்டாடுது
அது உயிர்வரை பாய்ந்து பந்தாடுது”

21 Jan 2013

மைசூர் மகாராஜா by முகில்


மைசூர் மகாராஜா
ஆசிரியர் : முகில்
பக்கங்கள்: 191
விலை: ரூ.100

ஒரு ராஜா - பக்கத்து நாட்டோட சண்டை - அவருக்கு வாரிசு இல்லை - தத்தெடுக்கிறார் - அடுத்த ராஜா - இன்னொரு சண்டை - NO வாரிசு - மறுபடி தத்து - அடுத்தவர் - மறுபடி சண்டை. பத்து இல்லே, இருபது இல்லே, 400 வருடங்களுக்கும் மேலே இதே கதை தொடர்ந்து நடந்தா - படிப்பதற்கு பொறுமை இருக்குமா? இதில் இன்னொரு twist. பல ராஜாக்களுக்கு ஒரே மாதிரியான பெயர். இதனால் மேலும் குழப்பங்கள். ஆனாலும், இந்த 191 பக்கப் புத்தகத்தை ஒரே மூச்சில் படித்து முடித்தேன். என்ன காரணமா இருக்கும்?


முதல் காரணம் - வரலாறு. ராஜா ராணிக்கள் கதை படிக்கவே படு சுவாரசியமா இருக்கும். (பொன்னியின் செல்வன் effectஆ இருக்குமோ!!) அந்தக் காலத்து தொழில்நுட்பங்களை வைத்துக் கொண்டு அவர்கள் கட்டிய கோயில்கள், அணைகள், அவர்களது வீரம், விளையாட்டு ஆகியவற்றைப் படிக்கையில் ஆச்சரியமாக இருக்கும். இதற்கும் மேல் 400 ஆண்டு கால மைசூர் வரலாறு என்றால் அதில் பல பிரபலங்கள் வருவார்கள் என்று தெரியும். அவர்கள் யார் யார்னு பார்க்கலாமா?


20 Jan 2013

ரகசிய வரலாறு - டானா டார்ட்

சிறப்பு பதிவர் : அஜய்

முதலிலேயே கொஞ்சம் உஷார்படுத்தி விடுகிறேன். டானா டார்ட்டின் முதல் நாவலான "ரகசிய வரலாறு" (The Secret History) மர்மக் கதையோ த்ரில்லரோ அல்ல. நாவலின் பெயரையும் பின்னட்டை 'டயோனிசியச் சடங்குகள்' ('Dionysian rites') என்று ஏதோ பேசுவதையும் பார்த்தால் அப்படி ஒரு எண்ணம் வரலாம். வேண்டாம், கலைத்து விடுங்கள்.

ஆமாம், இந்த நாவலின் துவக்கத்திலும் ஒரு கொலை நடக்கிறது, ஆனால் கொலைகாரர்கள் யார் என்பது நமக்கு அப்போதே தெரிந்துவிடுகிறது. நாவல் அதற்கு பின் பின்னோக்கிச் சென்று கொலைக்குக் காரணமான நிகழ்வுகளைப் பேசிய பின்னர், அந்தக் கொலைக்குப் பின்னான நிகழ்வுகளையும் கொலையில் சம்பந்தப்பட்டவர்களின் வாழ்க்கை எப்படி மாறுகிறது என்பதையும் விவரிக்கிறது. அதனால் இந்த நாவலை 'coming of age' நாவல் என்று கூறலாம். மர்மக் கதைக்கு ஆசைப்பட்டு இதை வாசிக்கத் துவங்கினால் ஏமாந்து விடுவீர்கள்.

இந்த நாவலின் நிகழ்வுகள் ஒரு உயர்தரக் கல்லூரியில் நடைபெறுகின்றன. முக்கிய பாத்திரங்களில் ஒருவனான ரிச்சர்ட் கல்வி ஊக்கத் தொகை உதவியுடன் கல்லூரியில் இணைந்திருக்கிறான். சிறிய கிராமத்திலிருந்து வரும்  மத்திய வர்க்கத்தைச் சேர்ந்த அவனால் அங்கு ஒன்ற முடிவதில்லை, தன் குடும்பப் பின்னணி குறித்து பொய் சொல்லி/அதை மறைத்து  மற்றவர்களுக்கு சமமாகச் சேர்ந்து கொள்ள முயற்சி செய்கிறான். அந்தக் கல்லூரியில் ஜூலியன் மாரோ என்ற ஒரு பேராசிரியர் இருக்கிறார், ரொம்பவும் பூடகமான நபர்.  பண்டைய கிரேக்க மொழி பயிற்றுவிக்கும் அவர் தன் வகுப்பில் அதிக மாணவர்களை சேர்ப்பதும் இல்லை.  அந்த வகுப்பில் ஒரு ஐந்து மாணவர்கள் (நான்கு ஆண்   ஒரு பெண்)  எப்போதும் ஒரு குழுவாக இருக்கிறார்கள், தங்கள் குழு தவிர்த்து மற்றவர்களுடன் அவர்கள் அதிகம் பழகுவதில்லை.   ஐந்து மாணவர்களின்பாலும் அவன் ஈர்க்கப்படுகிறான், இதில் பண்டைய கிரேக்கத்தின் மீதுள்ள ஆர்வத்தைவிட  அந்த மாணவர் குழுவிடம் நட்பாக வேண்டும் என்பதுதான் அவனுடைய முக்கிய குறிக்கோளாக இருக்கிறது, ஒரு முறை அவர்களுக்கு உதவி அதில் வெற்றியும் பெறுகிறான். பின்னர் அவர்கள் வழிகாட்டுதல்படி,  மாரோவிடம் மீண்டும் பேசி வகுப்பில் சேர அனுமதி பெறுகிறான், அதைத் தொடர்ந்து ஐவர் குழுவில் இணைந்து அறுவனாகிறான். 

19 Jan 2013

அசோகமித்திரன் கதைகள்- 2

அசோகமித்திரன் கதைகள்-2
அருந்ததி நிலையம்
சிறுகதைகள்
 
 
 
 
 
அசோகமித்திரன் எழுதிய ஒன்றிரண்டு சிறுகதைகளை அவ்வப்போது படித்திருந்தாலும், அவர் எழுதிய சிறுகதை தொகுப்போ, நாவலோ இதுவரை படித்ததில்லை. ஏனோ சென்ற வாரம் திடீரென அசோகமித்திரன் எழுத்தை வாசிக்க வேண்டும் என்றொரு உந்துதல். 

அடுத்த என்ன படிக்கலாம் என்று கொஞ்சம் தீவிரமாக யோசித்தபோது அசோகமித்திரனும் இந்திரா பார்த்தசாரதியும்தான் என் நினைவுக்கு வந்தார்கள். இந்த வாரம் நூலகம் சென்றபோது அதைச் செயல்படுத்தி விட்டேன். நான் தேடிய, எனக்கு பரிந்துரைக்கப்பட்ட புத்தகங்கள் எதுவும் கிடைக்கவில்லை. ஆனால் அசோகமித்திரன் எழுதிய குறுநாவல் தொகுப்பு ஒன்றும், சிறுகதை தொகுப்பு ஒன்றும் கிடைத்தன. அருந்ததி நிலையம் வெளியிட்டுள்ள இந்தப் பதிப்பில் 1982 முதல் அ.மி. எழுதிய சிறுகதைகள் வரிசைக்கிரமமாகத் தொகுக்கப்பட்டுள்ளன, எனக்குக் கிடைத்தது இரண்டாம் தொகுதி. இதில் மொத்தம் 36 சிறுகதைகள் உள்ளன. 

அ.மி கதை சொல்லும் பாணி நேரடியானது. தேவையில்லாத வார்த்தைகள் இல்லை, கத்தரிக்கப்பட்ட வாக்கியங்கள். முக்கியமாக உரையாடல்களால் கதை சொல்லப்படுவதால், ஒரு விதமான வேகத்தை பெரும்பாலான கதைகளில் உணரமுடிகிறது. 
 
 

18 Jan 2013

தாமரை பூத்த தடாகம் - தியடோர் பாஸ்கர்

தமிழ்நாட்டில் உயிரோட்டமான சுற்றுச்சூழல் இயக்கம் உருவாக என்ன செய்ய வேண்டும்? எனும் கேள்வியுடன் தொடங்குகிறது தியடோர் பாஸ்கர் எழுதிய தாமரை பூத்த தடாகம் கட்டுரை தொகுப்பு. சூழியல் சார்ந்த புத்தகங்கள் எப்போதும் எனக்கு உவப்பானவை. எப்படி சிறு குழந்தைகளுக்கு நார்னியாவின் உலகமும், ஹாரி பாட்டர் சூழலும் கனவுச் சித்திரத்தை அளிக்கின்றதோ, அதைப் போல நமது சூழலைப் பற்றிய உயிர்ப்பான உலகத்தை சூழியல் புத்தகங்கள் அளிக்கின்றன. முன்னர் பறவையியல் பற்றி மா.கிருஷ்ணனின் புத்தகத்தில் குறிப்பிட்டிருந்ததைப் போல, சாதாரணத் தகவல்களைக் கூட ஊடகங்களில் காண்பதற்கில்லை. ஆந்தை போல முழிக்காதே, கழுகுப் பார்வை, நாய் வேஷம் போட்டா குலைக்கனும் என அன்றாடம் நாம் பேசும் விஷயங்கள் கூட உண்மை நிலவரங்களையும், சூழியல் சார்ந்த கவலைகளையும் தொகுப்பதில்லை. அதனாலேயே எத்தனை படித்திருந்தாலும், சூழியலைப் பொருத்தவரை நாம் அடிமுட்டாளாக இருக்கின்றோம்.

ஜெயமோகன் எழுதிய `யானை டாக்டர்` கதை தமிழில் சூழியல் சார்ந்து வெளியான ஒரு அற்புதமான புனைவுக் கதை. தொடர்ந்து கவனப்படுத்தல் மூலம் யானைகள் பற்றிய விழிப்புணர்வை அளிக்கும் கட்டுரைகளை அவரது தளத்தில் காணலாம். இயற்கைச் சூழலும், மிருகங்களும் நமக்கு எவ்வளவு தூரம் அன்னியப்பட்டுவிட்டன என்பதை யானை டாக்டர் கிருஷ்ணமூர்த்தி அக்கதையில் மீண்டும் மீண்டும் கூறுகிறார். மிருகங்களிடமிருந்தும், வனத்திடமிருந்தும் நாம் எத்தனை நுண்மையான விஷயங்களைக் கற்றுக்கொண்டிருக்கிறோம்? ஆனாலும், அவற்றின் பாதுகாப்பு குறித்த கேள்வி வரும்போது, கடனைத் திருப்பிக் கேட்க வருவது போல பதிலளிக்க கவனமாகத் தவறுகிறோம்.

17 Jan 2013

கவனிக்கப்படாத சிகரங்கள் - ப. சிங்காரம் நாவல்கள்

 சிறப்பு பதிவர் : கண்ணன்

ப.சிங்காரம் இன்று தமிழின் பலதரப்பட்ட முன்னணி எழுத்தாளர்களாலும் விமர்சகர்களாலும் பெருமளவில் கொண்டாடப்படுகிற மிகச்சில எழுத்தாளர்களில் ஒருவர். ஆனாலும் ஒரு மிகக்குறுகிய இலக்கிய வட்டத்திற்கு வெளியில் பெயர் தெரியப்படாத பலப்பல எழுத்தாளர்களில் இவரும் ஒருவர். மிகுந்த எதிர்பார்ப்போடுதான் அவரது 'புயலிலே ஒரு தோணி' நாவலை படிக்கத் தொடங்கினேன். பின்னர் 'கடலுக்கு அப்பால்' நாவலையும் படித்தேன். இந்தப் படைப்புகளை அறியுமுன் சிங்காரத்தைப் பற்றிய சித்திரம் அவசியமாகவே உள்ளது. ந.முருகேசபாண்டியன் எழுதியுள்ள அறிமுகக் கட்டுரைகளிலிருந்து அத்தகைய ஒரு சித்திரம் கிடைக்கிறது.

ப.சிங்காரம் 1920ல் பிறந்தவர். 1938ல் இந்தோனேஷியாவின் மைடான் நகரில் ஒரு வட்டிக்கடையில் வேலை செய்வதற்காகச் சென்றார். உலகப்போர் நடந்த ஆண்டுகளை, ஜப்பானியர்களும், இந்திய தேசிய ராணுவமும் தாக்கம் செலுத்திய வரலாற்றுத் தருணங்களை, வெகு அருகிலிருந்து கண்டார். மனைவியையும் குழந்தையும் பிரசவத்தின்போது இழந்தார். 1946ல் இந்தியா திரும்பினார். தினத்தந்தியில் செய்திப்பிரிவில் வேலைக்குச் சேர்ந்தார். 1950ல் 'கடலுக்கு அப்பால்' நாவலை எழுதினார். எஞ்சிய வாழ்வின் பெரும்பகுதியை YMCA விடுதியில் தனியே கழித்தார்.

'கடலுக்கு அப்பால்' நாவலைப் பிரசுரிக்கப் பல காலம் போராடினார். ஆனந்த விகடன் போட்டியில் நிராகரிக்கப்பட்டது. ஆயினும் கலைமகள் போட்டியில் முதல் பரிசு பெற்றது. எழுதி 9 ஆண்டுகளுக்குப் பின் பிரசுரமானது. குறிப்பிடும்படியான வரவேற்பைப் பெற்றதாகத் தெரியவில்லை.

'புயலிலே ஒரு தோணி' நாவலை 1962ல் எழுதினார். மீண்டும் ஒரு நீண்ட போராட்டத்திற்குப் பிறகு, 1972ல் பதிப்பித்தார். பதிப்பித்த காலத்தில், அடைப்புக்குறிகளின் பயன்பாடு பற்றி மட்டும் ஏதோ விமர்சனம் வந்திருக்கிறது. இவ்விரு நாவல்களுக்குப் பின்னும் அவர் ஏதேனும் எழுதியிருக்கக்கூடும். தினத்தந்தி நாளிதழின் செய்திகளாய் அவற்றை நாம் படித்திருக்கலாம்.

77 வயதில் தனிமையின் துணையில் இறந்தார்.



ரைட் ஆர் நைக் - மூன்று புத்தகங்கள்

சிறப்புப் பதிவர்: வானதி நடனம்

கடந்த வாரங்களில் தான் படித்த மூன்று புத்தகங்கள் பற்றி சிறுகுறிப்பு வரைந்துள்ளார் நம் ட்விட்டர் நண்பர் வானதி.


1. ரஜினியின் பஞ்ச் தந்திரம்
தலைவனுக்காக (அதாவது என் தலைவனுக்காக) தலைவனின் படம் போட்ட புத்தகம். ரஜினியின் குறிப்பிட்ட சில பஞ்ச் வசனங்கள் அலுவலகம் மற்றும் வீடு (personal & Management) இரண்டு இடங்களிலும் எப்படிப் பொருந்திப் போகின்றன என்பதைப் பேசுகிறது இப்புத்தகம். மக்களைக் கவர்வதுபோல் தலைப்பு வைத்தால் மட்டும் போதாது.. இன்னும் நிறைய உழைத்திருக்கலாம் எழுதும் முன். டைம்லைன் ஃபிக்ஸ் பண்ணியாச்சே என்று வேறு வழியில்லாமல் போகிறபோக்கில் எழுத்தப்பட்டிருக்குமோ என்ற உணர்வு முதல் சில பக்கங்களிலேயே வந்துவிடுகிறது. பக்கங்களில் பாதி ரஜினியின் படங்கள்; கலர் ப்ரிண்டிங் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் ;) . அனைவருக்கும் தெரிந்த அவரின் பஞ்ச் வசனங்கள் தான் படிப்பவரைக் கவர்கின்றன, அட்டைப்படத்தில் சொல்லியிருப்பதைப் போல் “மேனேஜ்மெண்ட் யுக்திகள்” அல்ல.


லேண்ட்மார்க்கில் இப்புத்தகம் “மோஸ்ட் செல்லிங்” பிரிவில் இருந்ததற்கு(இருப்பதற்கு?) ஒரே காரணம் வழக்கம் போல் ”ரஜினி” என்ற பெயரில் இருக்கும் வசீகரமே. இதே புத்தகம் ஆங்கிலத்திலும் வந்திருக்கிறது. 

2. Nike - The Vision Behind The Victory - Tracy Carbasho

Nike நிறுவனத்தின் வெற்றிக்கதை. 1960களில் Blue Ribbon Sports என்ற பெயரில் கம்பெனி துவங்கப்பட்டது முதல் நைக்கின் தற்போதைய தயாரிப்புகள், விளம்பரத் தூதுவர்கள், நைக் நிறுவனம் வாங்கிய அவார்ட்ஸ், இடம் பெற்ற லிஸ்ட்ஸ் என சின்னச் சின்ன தகவல்களால் நிறைந்திருக்கிறது இந்த 150 பக்க புத்தகம்.


காரில் இஞ்சின் மவுண்ட் செய்யும் போது இஞ்சின் அடிபடாமல் இருக்க உதவும் மெட்டீரியலை ஸ்போர்ட்ஸ் ஷீ ஒன்றில் பயன்படுத்திய நைக் மக்களின் நுட்பம், தாங்கள் தயாரிக்கும் ஷீ முதல் அவற்றை பேக் செய்யும் அட்டைப்பெட்டிகள் வரை அனைத்து பொருட்களிலும் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு வராத வகையில் சுழற்சி முறையில் மூலப்பொருட்களைப் பயன்படுத்துவது, டைகர் வுட்ஸ், செரீனா வில்லியம்ஸ் போன்ற தங்களின் விளம்பரத் தூதுவர்களுக்கு சொந்த வாழ்க்கையில் பிரச்னை வந்த போது அதை அரசியலாக்காமல், அவர்களின் காண்ட்ராக்ட்டை கேன்சல் செய்யாமல் அவர்களுக்கு பக்கபலமாக நின்றது இவற்றைப் பற்றியெல்லாம் விரிவாக எழுதியிருக்கிறார் ஆசிரியர். 

நைக் என்றவுடன் நினைவுக்கு வருவது “Just Do it", மற்றும் மைக்கேல் ஜோர்டன். இதில் மைக்கேல் ஜோர்டன் மற்றும் அவரின் பெயரில் வந்த ஏர் ஜோர்டன் ஷூக்களுக்காக தனி சாப்டரே ஒதுக்கப்பட்டுள்ளது. 

பாசிட்டிவ் விஷயங்களை விரிவாக அலசிய ஆசிரியர், நைக்கின் நெகட்டிவ் பக்கங்களாக ஆரம்பத்தில் இருந்த “குழந்தைத் தொழிலாளர்கள் பிரச்னை” பற்றி சில வரிகள் மட்டுமே எழுதியிருக்கிறார். விளம்பரத் தூதுவர்கள் முதல், நைக் வெளியிட்ட சில அறிக்கைகள் வரை அவர்கள் பேசியதை/எழுதியதை அப்படியே பாடப்புத்தக ஞாபகத்தில் இதிலும் ரெஃபரன்ஸுக்காகக் கொடுத்திருப்பது தான் கொஞ்சம் போரடிக்கும் விஷயம். நைக் என்ற கம்பெனியைப் பற்றி சுவாரஸ்ய தகவல்கள் தெரிந்துகொள்ள படிக்கலாம். By The Way, Nike என்ற வார்த்தைக்கு அர்த்தம் Greek Goddess Of Victory. 

3. Great Leaders Grow - Ken Blanchard & Mark Miller

மற்றுமொரு லீடர்ஷிப் புத்தகம். இந்தமுறை பெரிய லெவெலில் இல்லாமல், எல்.கே.ஜி லெவலில். கல்லூரி முடித்து அடுத்து என்ன என்ற குழப்பத்திலிருக்கும் ஒருவர், வேலைக்குச் சேர்வதும், அங்கு அவர் கற்றுக்கொள்ளும் லீடர்ஷிப் அ,ஆ,இ,ஈ பாடமே இப்புத்தகம். வெறும் கருத்துகளாக கொட்டிக்குவிக்காமல், சொல்லவந்ததை ஒரு கதை போல் சொல்லியிருக்கிறார்கள் ஆசிரியர்கள் இருவரும். டிஷ்யூ பேப்பர் நோட்ஸ், எளிமையான கருத்துகள், முசுடு மேனேஜர், தலைக்கு மேல் வெள்ளம் போன ப்ராஜெக்ட்டுகள், வேலை போய்விடுமோ என்ற பயத்தில் பதில் சொல்ல மறுக்கும் சீனியர்கள் என நடைமுறை உதாரணங்கள். ஓரிரு நாட்களில் படித்து முடித்துவிடலாம். என்ன, சொல்லப்பட்ட  கருத்துகளை நடைமுறைப்படுத்துவதற்கு தான் சில பல வருடங்களாகும்.


Must read என்றெல்லாம் சொல்லி பயமுறுத்த மாட்டேன். படித்தால் you will GROW. படிக்கும் போது தெரியும் இந்த GROW வுக்கான அர்த்தம்.

Happy Reading. 


_________________


ரஜினியின் பஞ்ச் தந்திரம் - பி.சி.பாலசுப்ரமணியன், ராஜா கிருஷ்ணமூர்த்தி
கிழக்கு பதிப்பகம்
பக்கங்கள்: 140 விலை: 80
ஆன்லைனில் வாங்க : டிஸ்கவரிபுக்பேலஸ் - http://discoverybookpalace.com

“Nike – The Vision behind the Victory”
Jaico Publishing House
Pages: 204, Price: Rs. 195.00
To buy Online: flipkart.com

“Great Leaders Grow” – by Ken Blanchard & Mark Miller
Collins Business
Pages: 144, Price: 120.00
To Buy Online: flipkart.com

16 Jan 2013

ஒரு சிட்டுக்குருவியின் வீழ்ச்சி – சாலிம் அலி

குறிப்பு: சாலிம் அலி என்று இந்த புத்தகத்தில் போட்டிருக்கிறார்கள். இந்தியப் பறவைகள் புத்தகத்தில் சலீம் அலி என்று இருக்கிறது. சாலீம் அலி என்று கூட எழுதுகிறார்கள். எது சரி என்று தெரியவில்லை. அதனால் இந்த புத்தகத்தில் இருப்பது போல் சாலிம் அலி என்றே நானும் எழுதுகிறேன். சரியான உச்சரிப்பு என்ன என்பது தெரிந்தவர்கள் தெரியப்படுத்தவும்.


15 Jan 2013

அழிவற்றது - அசோகமித்திரன்

சிறப்புப் பதிவர்: தோட்டா ஜெகன்

199 முறை புத்தகங்களை சுமந்து வாசகர்களின் வாசல் வரை வந்து விட்டு சென்ற ஆம்னிபஸ்ஸின் பொங்கல் சிறப்பு பேருந்தில் எனக்கும் ஒரு டிக்கெட்டை கையிலே திணித்து பஸ் ஏற்றி டாட்டா காட்டி அனுப்பிவைத்த அண்ணன் கிரி அவர்களுக்கு நன்றிகளுடன் தொடங்குகிறேன்.

விமர்சனங்கள் மீது எனக்கு நம்பிக்கையில்லை. ஏனெனில் பல சமயங்களில் அவை படைப்பை விடுத்து படைப்பாளியின் மீது தெறிக்கப்படும் அம்பாய் முடிந்து விடுகின்றன என்பது முதல் காரணமாய் இருந்தாலும், முக்கியமான காரணம், எனக்கு(ம்) விமர்சனம் எழுத வராது. அசோகமித்திரனின் 'அழிவற்றது' என்ற சிறுகதை தொகுப்பை ஆம்னிபஸ் வாசகர்களுக்கு ஒரு நூல் அறிமுகமாகவும் அதில் இருக்கும் சிறுகதைகளின் அறிமுகமாகவும், பேப்பர்க்கார சிறுவன் தினசரியை அவசரகதியில் வீசிவிட்டுச் செல்வதைப் போல சொல்லவிழைகிறேன்.

எனது சிறு வாசிப்பின்படி என் நம்பிக்கை என்னவென்றால், தமிழ் ( நவீன ) சிறுகதை உலகை இந்திய கிரிக்கெட் அணி என எடுத்துக்கொண்டால், அதில் புதுமைப்பித்தன் தான் அணியின் பேட்டிங் கோச், மௌனி பவுலிங் கோச், அணியின் கேப்டன் சு.ரா, துணை கேப்டன் அசோகமித்திரன். தி.ஜானகிராமன், நாஞ்சில் நாடான், அ.முத்துலிங்கம் போன்ற டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களும், கு.அழகிரிசாமி, வண்ணதாசன் போன்ற மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களும், சுஜாதா என்னும் ஆல்ரவுண்டரையும் கொண்ட பலமான பேட்டிங் வரிசை.ஜெயமோகன் தான் அணியின் சச்சின்.  மாமல்லனும், எஸ்ராவும் அணிக்கு கிடைத்த இரு பெரும் சுழல் பந்து வீச்சாளர்கள். ஜெயகாந்தனும், கி.ராவும் தான் அணியின் வேகபந்து வீச்சாளர்கள்.

அணியின் துணை கேப்டன் அசோகமித்திரன் எழுத வந்து கிட்டத்தட்ட அறுபது ஆண்டுகள் ஆகின்றன. அவர் எழுத வந்த முப்பது வருடம் கழித்தே பிறந்த என்னை போன்றவர்கள் அவர் நூலை தேடிப் பிடித்து படிக்கும் தொல்லை இன்றி எங்கள் ஊரின் எல்லா புத்தககடைகளிலும் நீக்கமற நிறைந்திருக்கிறார் தலைவர். என்னளவில் அசோகமித்திரனின் எழுத்துநடை என்பது, அது  நாவல்களோ, சிறுகதையோ, கட்டுரையோ, வாக்கியங்கள் என்பது அவர் பேனாவை திறந்தவுடன் தாளில் வந்து படுத்துக்கொள்கிறது. அவர் ஒரு போதும் அதில் வார்த்தைகளை சேர்ப்பதில்லை, மாறாக தேவையற்ற வார்த்தைகளை நீக்குகிறார் அவ்வளவே. "அழிவற்றது" அவரது முழு சிறுகதைகளும் தொகுப்பாக வந்த பின்னர் எழுதியது. காலச்சுவடு பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது. தொகுப்பில் உள்ள கதைகளின் எண்ணிக்கை 17.

அவரவர் தலையெழுத்து:

விதியை மதியால் வெல்ல முடியும் என்ற நூலில் அழகும் வேடிக்கையும் கலந்து கோர்க்கப்பட்டிருக்கும் மிக சிறிய சிறுகதை இது.

பழங்கணக்கு:

இந்த தொகுப்பிலே இருக்கும் மிக சாதாரண, எளிதில் அனுமானிக்கக்கூடிய மிக சின்ன சிறுகதை.

முக்தி:

பாவத்தை கழுவ பிராயச்சித்தம் சொல்லித் தந்தவனே பாவமூட்டையைத் தூக்கிச் சுமக்க நேரிடும் கதை. துறவியே ஆனாலும் மனித தேகத்தில் சந்தேகம் துளியாவது மிச்சம் இருக்கும் என எளிதில் புரிய வைக்கும் எளிமையான கதை.

திருநீலகண்டர்:

மனித மண்டை ஓட்டையும், யாசகர்களின் திருவோட்டையும் உள்வாங்கி ஓடும் அழகிய சிறுகதை.

அப்பாவின் கோபம்:

வீம்பான அப்பாவுக்கும், வேலைக்கு போகும் சராசரி மகனுக்கும் இடையே நிகழும் ஒரு நாள் மனபோராட்டமே இந்த கதை. 

நகல்:

இந்த தொகுப்பில் உள்ள சிறந்த கதைகளில் ஒன்று. இஞ்சினியரிங், மெடிக்கல் படிக்கும் மாணவர்களின் எதிர்காலத்திற்கு ஒரு பிடிப்பு உண்டு, பாலிடெக்னிக்கும் ஆர்ட்ஸும், கம்ப்யூட்டர் டிப்ளமோவும் படிக்கும் மாணவர்கள் ஒரிஜினலின் ஜெராக்ஸ் பேப்பரைகளை  போல மற்றும் ஒரு தாள் தான் என விளிக்கும் அற்புதச் சிறுகதை. ஒன்னுக்கு தான் மதிப்பு பத்தோட பதினொன்னுக்கு அல்ல எனவும் கொள்ளலாம்.

கிணறு:

ஊழ்வினை உறுத்து வந்து ஊட்டும் அல்ல நடப்பது நடந்தே தீரும் என்ற சரத்தில் கட்டப்பட்ட வெடிகள் வெடிப்பதே இந்த கதை. இந்த சிறுகதையை படிக்கும் போது  எனக்கு கிறிஸ்டோபர் நோலனின் பிரஸ்டீஜ் படமும், சிறுவர்கள் ஒரு கண்ணாடி பேழைக்குள் 4 பால்ரஸ் குண்டுகளை அடைத்து விளையாடும் கருவியும் நியாபகத்திற்கு வந்தது, ஏனெனத் தெரியவில்லை.

ஒரு ஹீரோயின் ஒரு ஹீரோ:

திரையுலகில் வாய்ப்புக்கு காத்திருந்து ஏய்ப்புக்கு உள்ளாகும் ஒருவனை சுற்றி நடக்கும் கதை.

பிச்சிகட்டி:

காதல் திருமணம் செய்து கொண்ட தம்பதியில் கணவனும் மனைவியும் வெவ்வேறு நேரங்களில் வேலைக்கு செல்கின்றனர். ஒரு வெறுமையான இரவில் மின்சாரம் போய் விடுகிறது. அப்போது அதனைச் சரிசெய்ய வரும் மின்சார வாரிய ஊழியர்கள் பணியை கவனித்து, உதவி தன் வெறுமையை அந்த இருட்டினுள் போக்கிக்கொண்டு ஒரு இரவை கடக்கும் கதை நாயகன் பற்றிய கதை.

வீட்டுமனை:

எல்லா நடுத்தர வர்க்க மனிதனுக்கும் ஒருக்கும் அதே கனவு தான், சாவதற்குள் வீட்டு மனை வாங்குவது. அப்படி கனவுடன் வாழ்ந்து காசு சேர்க்கும் ஒருவனுக்கு இடையில் பெரும் நோய்கள் வந்து சிறிதாய் மனம் பிறழ்ந்து, மீண்டு வந்து, அதை வெறும் கனவாகவே மட்டும் மனதிலே பூட்டி வாழ பழகிக்கொள்ளும் சாமான்யனின் கதை. தொகுப்பில் நல்ல கதைகளில் இதுவும் ஒன்று.

சிக்கனம்:

சீட்டு கம்பெனியில் பணம் சேமித்து ஏமாந்து போன மனிதனை பற்றியும், அவ்வாறு ஏமாந்தாலும் அதனை திரும்ப பெற்று விடலாம் என்ற நப்பாசையில் உழலும் இன்னொரு மனிதனை பற்றியும் சுழலும் கதை. இயல்பான கதை.

சகோதரர்கள்:

சிறுவர்கள் விளையாட்டு அரசியல், வெறுமையான மன நிலை கொண்ட சகோதரனுக்கு வறுமையில் அண்டி வந்த விதவை சகோதரியின் செலவுகள் தரும் கோபம் என கலந்து கட்டி பரிமாறப்படும் கதை. தொகுப்பின் நல்ல கதைகளில் ஒன்று.

மணவாழ்க்கை:

இந்த தொகுப்பில் மிக அதிர்ச்சி தரும் சிறுகதை இது தான். ஒரு பெண்ணுக்கு புகுந்த வீட்டில் நடக்கும் கொடுமைகளும், அத்தனை கொடுமைகளுக்கு பிறகும் அந்த பெண் புகுந்த வீட்டுக்கே செல்ல விரும்பும் வித்தியாச மன நிலையையும் சொல்லும் கதை.

அழிவற்றது:

ஒற்றன் நாவலில் நிகழ்வுகள் நடக்கும் அயோவா சிட்டியில் நடந்ததாக சொல்லப்படும் கதை. இந்த தொகுப்பில் என்னை கவர்ந்த கதைகளில் மற்றும் ஒன்று. சிறு அதிர்வும் இந்த கதையில் நம் இதயத்தை மீட்டி போகும்.

முழு நேர வேலை:

கிராமத்து ஏரி ஓரம் விளைந்து படர் விட்ட ஒரு செடியை பிடுங்கி , நகரத்து சேரியில் நட்டு வைக்கும் அதிர்வுக் கதையை அழகாக சொல்லி இருக்கிறார்.

இரு முடிவுகள் உடையது:

ரயில் பயணங்களில் மயில்களை பார்த்து மனதை தொலைப்பதாய் எண்ணி பணத்தை தொலைக்கும் வழக்கமான கதை தான், ஆனால் சொல்லப்பட்ட விதம் அழகு. இன்னொரு புதுமை 12B படம் போல இதற்கும் இரு முடிவுகள் உண்டு.

அடி

ஸ்டோர் குடித்தனக்காரர்களின் வாழ்வாதார முறையையும், ஒற்றுமையையும், எளிதில் அஞ்சாத தைரியத்தையும், அப்பகுதி பள்ளிக்கூடங்களில் வேலை செய்யும் பெரும்பாலான வாத்தியார்களின் செயல்பாடுகளையும் இயல்பாய் தாங்கி ஓடும் அழகிய சிறுகதை இது.

இந்த புத்தகத்தை சிறந்த சிறுகதை தொகுப்பு என்று சொல்ல முடியாவிட்டாலும், சிறந்த சிறுகதைகளின் தொகுப்பு என நம்பிச் சொல்லலாம்.

புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:


புத்தகத்தின் விலை:
ஒரு சினிமா டிக்கெட்டின் விலையை விட குறைவு தான்


Related Posts Plugin for WordPress, Blogger...