A.J.Cronin A.K.Ramanujan Amartya Sen Andrea Maria Schenkel Anton Chekhov Arthur Hailey Bill Bryson Deborah Eisenberg Elizabeth Kostova Gay Neck Geoff Dyer George Orwell Harper Lee Henning Mankell Ian McEwan Jared Diamond Jilly Cooper Jonathan Livingstone Seagull Joseph Heller Kenneth Anderson Kiran Desai Maugham Michael McCarthy O.Henry Orhan Pamuk P.G.Wodehouse PB.ஸ்ரீனிவாஸ் R.K.Narayan Richard Bach Ronald Wilks Stephen King Swami Tejomayananda Upamanyu Chatterjee William Sydney porter dhan gopal mukerji mark tully okakura kakuzo saggi steven weinberg vikram seth ஃபெயின்மன் அ. முத்துலிங்கம் அ.கா.பெருமாள் அகிலன் அசோகமித்திரன் அனார் அறிஞர் அண்ணா அறுசுவை அரசு நடராஜன் அழகியசிங்கர் ஆ. சிதம்பரகுற்றாலம் ஆதவன் ஆர்.கே.நாராயண் ஆர்.ஷண்முகசுந்தரம் ஆஸ்கார் ஒயில்டு இடாலோ கால்வினோ இந்திரா பார்த்தசாரதி இந்துமதி இரா. நாறும்பூநாதன் இரா.நடராசன் இரா.முருகன் இரா.முருகவேள் இலக்கிய வீதி இனியவன் இலவச கொத்தனார் உமா சம்பத் என்.சொக்கன் என்.ராமதுரை எம் கோபாலகிருஷ்ணன் எம். வி. வெங்கட்ராம் எர்னெஸ்ட் ஹெமிங்வே எஸ். ராமகிருஷ்ணன் எஸ்.சந்திரமௌலி ஏ.கே.ராமானுஜன் ஏ.கோபண்ணா ஒல்கா பெரோவ்ஸ்கயா க.நா.சு கண்மணி குணசேகரன கரிச்சான் குஞ்சு கலாப்ரியா காப்கா காலபைரவன் கி. ராஜநாராயணன் குமரி எஸ்.நீலகண்டன் குல்தீப் நய்யார் கே நெக் கோபிநாத் கோபுலு சந்திரசேகர சர்மா சமஸ் சல்மான் ரஷ்டி சா. கந்தசாமி சா.பாலுசாமி சாருநிவேதிதா சாலீம் அலி சி.சரவணகார்த்திகேயன் சி.சு.செல்லப்பா சிபி.கே.சாலமன் சு. வேணுகோபால் சுகுமாரன் சுஜாதா சுந்தர ராமசாமி சுனில் ஜோகி சுப்புடு சுவாமி விவேகானந்தர் செல்லம்மா பாரதி செள.ராஜன் சே. இரகுராமன் சோம.வள்ளியப்பன் ஜனனி ரமேஷ் ஜான் பான்வில் ஜி.நாகராஜன் ஜிம் கார்பெட் ஜெயகாந்தன் ஜெயமோகன் ஜே. ஹெச். வில்லியம்ஸ் ஜோதிநரசிம்மன் டாக்டர். சு.முத்து செல்லக்குமார் டாக்டர். பி.எம்.ஹெக்டே டாக்டர்.எல்.மகாதேவன் தமிழ் மகன் தரம்பால் தி. ஜானகிராமன் தி.ஜானகிராமன் தியடோர் பாஸ்கர் து.கணேசன் ந.பிச்சமூர்த்தி நகுலன் நடிகர் சிவகுமார் நமீதா தேவிதயாள் நா.முத்துக்குமார் நாகம்மாள் நாகூர் ரூமி நாஞ்சில் நாடன் ப. சிங்காரம் பல்லவி அய்யர் பழ.அதியமான் பழ.கருப்பையா பவன் வர்மா பவா செல்லதுரை பஷீர் பா.ராகவன் பாம்பே ஜெயஸ்ரீ பாரதியார் பாலகுமாரன் பாலச்சந்திரன் சுள்ளிக்காடு பாலு மகேந்திரா பாவண்ணன் பி.எச்.டேனியல் பி.எம்.சுந்தரம் பி.ஏ.கிருஷ்ணன் பி.வி.ராமஸ்வாமி பிரமிள் பெஞ்சமின் ப்ளாக் பெருமாள் முருகன் பொ.கருணாகரமூர்த்தி மகாகவி பாரதியார் மதன் மனுஷ்யபுத்திரன் மருதன் மலர்மன்னன் மா.கிருஷ்ணன் மார்க்வெஸ் மாஸ்தி மில்லி போலக் முகில் முஹமது யூனுஸ் யதுகிரி அம்மாள் யுவன் சந்திரசேகர் ரகோத்தமன் ரமணி சந்திரன் ரா.கி.ரங்கராஜன் ராஜாஜி லலிதாராம் லா.ச.ரா லிவிங்ஸ்மைல் வித்யா லூசியன் ஸ்ட்ரைக் லெமூர் வ.ரா வண்ணதாசன் வா.மு கோமு வாலி விட்டல் ராவ் வின்சென்ட் ஷீன் விளதீமிர் பகமோலவ் வீயெஸ்வி வுடி ஆலன் வெரியர் எல்வின் வேதவல்லி வைக்கம் முகமது பஷீர் வைணவச் சுடராழி ஆ. எதிராஜன் வைரமுத்து ஷோபா சக்தி ஹென்னிங் மான்கெல்
Showing posts with label மொழிபெயர்ப்பு. Show all posts
Showing posts with label மொழிபெயர்ப்பு. Show all posts

17 Jun 2013

வெண்ணிற இரவுகள் – ஃபியோதர் தஸ்தாயேவ்ஸ்கி


ரஷ்ய இலக்கியங்களைப் படிக்கவேண்டுமென்று ஒரு ஆசை சில நாட்களாகவே இருந்து கொண்டேதான் இருக்கிறது. பொதுவாகவே எல்லோரும் சொல்லிச் சிலாகிக்கும் ஒரு பெயர் தஸ்தயேவ்ஸ்கி. அதில் அப்படி என்னதான் இருக்குமென அறியும் ஆர்வம் எந்தக்கணம் உட்புகுந்ததெனத் தெரியவில்லை. முழுக்க முழுக்க லேபிளை மட்டுமே வைத்து வாங்கிய சரக்கு இது. ஒரு குறு நாவல்தான் எனினும் இப்புத்தகம் தந்த தாக்கம், ஒரு உணர்வு சமீபத்தில் நான் வாசித்திருந்தவற்றில் எதிலும் கிடைத்திருக்கவில்லை.

நிறைய நண்பர்கள் வேண்டும், பெண்கள் நம்மிடம் சரி சமமாக, தோழமையுடன் பேச வேண்டும். இதெல்லாம் பொதுவாகவே இளைஞர்களுக்கு இருக்கும் ஆசைகள், விருப்பங்கள். ஆனால் நாம் காணும் அனைவருமே ஒருபோல இருப்பதில்லை. நாமும் எல்லோரிடமும் ஒரேபோல் நடிப்பதுமில்லை. எல்லோரிடமும் இருக்கும் அவரவர் சுயம் வெளிப்படும் தருணங்களில் உடனிருப்பவர் எவ்வாறு பதில்வினையாற்றுகிறார் என்பதில்தான் நட்பு காதல் போன்ற மற்று உறவுகளும். மனம் முழுக்க அன்பும், தம்மை வெளிப்படுத்திக் கொள்ளத் தெரியாத ஒரு சுபாவமும் கொண்டவருக்கு இப்படியாக உறவுகள் அமைவது மிகச் சிரமமே.

இந்தக் கதையில் தஸ்தாயேவ்ஸ்க்கியின் நாயகன் இதுபோலொருவன் தான். பீட்டர்ஸ்பர்க் நகரில் எட்டு ஆண்டுகளாக வசித்தும் ஒருவரைக் கூட நண்பராக பெற்றிடாத ஒருவன். தன்னைத்தான் சோகத்திலோ அன்று கண்ட எதோ ஒரு காட்சியின் மகிழ்ச்சியிலோ ஆழ்த்திக்கொண்டு தனக்கு யாரும் நண்பர்களாய் இல்லததினால் அங்கிருக்கும் தெருக்களில் நடமாடும் ஒவ்வொருவரையும் கவனித்தவாறே, அந்த இயற்கையில் தன்னை கரைத்துக் கொண்டு நடமாடுகிறான். எல்லோரும் அவரவர் கிராமத்துக் குடிலுக்குச் செல்வது இவனுக்கு மிகுந்த வருத்தத்தை தருகிறது. எல்லோரும் தன்னைப் பிரிவதாக எண்ணிக் கொள்கிறான். “என்னுடன் வா” என்றழைக்க யாருமில்லாத தனிமை இவனை மேலும் நோகடிக்கிறது.

இது போலான ஒரு இரவு நேர நடை பயணத்தில் இளம் பெண்ணொருத்தியைக் காண்கிறான். அவள் அழுதவாறு இருக்கிறான். ஆறுதல் சொல்லலாமா என்றெண்ணியவன் குறைந்தபட்சம் அவள் ஏன் அழுகிறாள் என்றாவது கேட்கலாமென நெருங்கிச்சென்று தயக்கத்தினால் தன் முடிவைக் கை விடுகிறான். அவள் அழுதவாறே நடந்து செல்கிறாள். ஒரு முரடனொருவன் அவளைத்தொடர்ந்து செல்ல இவன் அவளை காப்பாற்றுகிறான். முதல்முறையாக ஒரு பெண்ணிடம் பேசும் வாய்ப்பையும் பெறுகிறான். அவன் தன்னை அறிமுகப்படுத்திக் கொள்கிறான். அவள் அழுத காரணத்தைக் கேட்கிறான். ஆறுதல் கூறுகிறான். தான் அவளுடன் பேசியதில் மகிழ்ச்சி என்றும், இதுவரையிலும் பெண்களிடம் பேசிப் பழகியதில்லை என்றும் கூறுகிறான். அவளுக்குப் பிடித்தமானவனாக இருக்க விரும்புவதாகவும் கூறுகிறான். நாளையும் அதே இடத்தில் அவளுக்காக காத்திருப்பதாக சொல்கிறான். தன்னைக் காதலிக்ககூடாது என்னும் நிபந்தனைக்கு ஒப்புக்கொண்டால் அவளும் அடுத்தநாள் அங்கு வருவதாக் உறுதியளிக்கிறாள். இப்படியாக முதல் நாள் இரவு முடிகிறது.

அடுத்த நாள் அவள் வருகிறாள். அவள் வருகையில் மகிழ்வுற்றவன் தன்னைப்பற்றி அவளிடம் கூறுகிறான். ஒரு நல்ல நண்பர்களைக்கூட பெற்றிடாதவன் என்றும் தன் வாழ்க்கை நிலையைப்பற்றியும் தனிமையின் கொடுமையில் வாழ்வதாகவும் கூறுகிறான். அவள் தன்னை நாஸ்தென்கா என அறிமுகப்படுத்திக் கொள்கிறாள். தனக்கு ஆதரவென்று ஒரு பாட்டி மட்டும்தான் என்றும், கண் தெரியாத பாட்டி, நாஸ்தென்கா பெரியவளானதும் தன் ஆடையை அவள் ஆடையோடு ஊக்கு குத்திக்கொண்டு எங்கும் போக விடமாட்டாள் என்றும் புத்தகங்கள் படிக்க கூட அனுமதிப்பதில்லை என்றும் கூறுகிறாள். அந்த சமயத்தில் தங்கள் வீட்டு மாடியில் குடியிருந்த ஒருவரைத் தான் நேசித்ததாகவும், ஒரு வருடத்திற்குப்பின் வந்து தன்னை அழைத்துப் போவதாய் சொல்லியிருக்கிறார் என்றும் அவருக்காக காத்திருப்பதாகவும் சொல்கிறாள். அவர் இன்னும் வராததை எண்ணி வருந்துகிறாள். அவருக்கு ஒரு கடிதம் எழுதித்தந்தால் அவரிடம் கொண்டு சேர்ப்பதாகச் சொல்கிறான் இவன். அவளுக்குப் பிடித்தமானவனாக, ஒரு நண்பனாக இரண்டாம் இரவும் முடிகிறது. பகலிலும் கூட அடர்ந்த தனிமை இருளில் வசித்திருப்பவனுக்கு தன் வாழ்வில் ஒரு பெண்ணின் வருகை, இரவில் அவளின் சந்திப்பு அவனது இரவுகளை உறக்கமற்றதாக்குகிறது. வெறும் இரவுகள் அவனுக்கான வெண்ணிற இரவுகளாகிறது.

மூன்றாம் இரவும் இருவரும் சந்திக்கின்றனர். அவருக்காக காத்திருக்கின்றனர் இருவரும். அவர் அன்றும் வரவில்லை. இருவருக்குமிடையேயான புரிதல் இன்னும் அதிகரித்திருக்கிறது. ஒரு கட்டத்தில் அவள் கூறுகிறாள் “என்மீது நீங்கள் காதல் கொண்டுவிடாமல் இருப்பதால்தான் நான் உங்களை மிக நேசிக்கிறேன்”. அவளறியாமலே அவளுக்கு அவன் மீது ஒரு பற்றுதல் வந்து விடுகிறது. தானும் அவ்வாறு உணர்வதாய்க்கூறி இருவரும் நாளை சந்திப்பதாய்க் கூறி பிரிகின்றனர்.

நான்காம் இரவும் வருகிறது. இத்தனைக்குப்பிறகு அவளின் விம்மல்கள் கண்டு அவன் நொடிந்து போகிறான். அவளைக் காதலிப்பதாக உரைக்கிறான். பல குழப்பங்கள் அவளை சூழ்கின்றன. இருந்தும் ஒரு தீர்க்கமான முடிவெடுக்கிறாள். அந்த சமயத்தில் அவளின் காதலன் வந்து நாஸ்தென்காவை அழைத்துச்செல்கிறான்.

இருவிதமான முடிவுகளே சாத்தியம் எனும்போது, அவை தெரிந்திருந்தும் அந்த நான்காம் இரவின் பக்கங்களைப்படிக்கும்போது ஏதோ ஒரு கோழிக்குஞ்சினை கையில் வைத்திருப்பதான ஒரு பரபரப்பு உணர்வு. இறுக்கிப்பிடித்தால் இறந்துவிடுமோ என்றொரு மனநிலை. அவள் காதலனோடுதான் சேர்கிறாள் என்றபோதும், இவன் மீண்டும் தனிமைப்படுத்தப்பட்டதை எண்ணும் தருணங்களில் என்னையறியாமல் கலங்கி விட்டேன். இதை வைத்து எத்துனையோ சினிமா பார்த்திருப்போம். இருந்தும் கூட எழுத்தில் அந்த வலியை உணரச்செய்தது மிக அருமை. அதுவும் அவள் காதலன் முன்பாக இவனை வந்து இறுக்க அணைத்துக்கொள்வாள் நாஸ்தென்கா. அப்போது வந்த உணர்வை எழுத்தில் சொல்வது மிகக்கடினம். உணரப்பட வேண்டியதது.

நாஸ்தென்கா, எங்கோ பீட்டர்ஸ்பெர்க் நகரில் உன்னையே எண்ணி வாழ்ந்த ஒருவனின் ஆன்மாவாக என்னை இப்போது கருதுகிறேன். உன்னை நான் ஒருபோதும் காதலித்து விடக்கூடாது என்று சொல்லி எந்தன் ஏமாற்றத்தை தடுத்ததிலாகட்டும், பெண்கள் குறித்த எனது தாழ்வு மனப்பான்மையை உடைத்தெறிந்து என்னை ஓர் ஆணாக உணரச்செய்ததிலாகட்டும், எந்தன் தனிமைப் பிணியைப் போக்கி என்றும் மறவா இனிய நினைவுகளைக் கொடுத்ததிலாகட்டும், எந்தன் காதலை உணர்ந்து இறுக அணைத்த அணைப்பிலாகட்டும், எனது அருமை நாஸ்தென்கா இன்றும் இப்போதும் ஒவ்வொரு கணமும் என் நினைவுகளில் நீ நிழலாடுகிறாய், உன்னை அதிகமதிகம் நேசித்துக்கொண்டேதான் இருக்கிறேன்.

குறுநாவல் | ஃபியோதர் தஸ்தாயேவ்ஸ்கி | மொழிபெயர்ப்பு | ரா. கிருஷ்ணையா | நியூ செஞ்சுரி வெளியீடு | பக்கங்கள் 94 | விலை ரூ. 70

இணையத்தில் வாங்க: டிஸ்கவரி

11 Feb 2013

மதிலுகள் – வைக்கம் முகமது பஷீர் – சுகுமாரன்



மலையாள இலக்கியங்களின் ஒரு முக்கிய அங்கமாகவும், மொழிபெயர்க்கப்பட்ட இலக்கியங்களில் மிக முக்கியமானவருமாக இருக்கும் வைக்கம் முகமது பஷீரின் ஒரு குறுநாவல்தான் மதிலுகள். அவர் வைக்க ஆசைப்பட்ட பெயர்பெண்ணின் மணம்’. ஒரு மிகப்பெரும் பரிசை விட சிறிய புன்னகை நம்மை நெகிழ்த்திவிடுவதில்லையா? அதுபோலத்தான் இந்தப் புத்தகமும். மிகச்சிறியது எனினும் ஏற்படுத்தும் தாக்கமும் பாதிப்பும் அதிகம். நானே பூங்காவனமும் பூவும்இது நாவலில் இடம்பெற்றிருக்கும் ஒரு வரி, இதுதான் பஷீர். அவர், அவர் சார்ந்த நிகழ்வுகளின் கோர்வை அவ்வளவுதான். அதிலொரு சம்பவம் இந்த மதிலுகள்.

ஒரு போராட்டத்தில் பஷீர் சிறைசெல்ல நேர்கிறது. அங்கு அவர் காணும் வார்டர்களின் அட்டூழியங்கள் பணத்தினால் கைதிகளுக்குக் கிடைக்கும் சௌகர்யங்கள் போன்றவற்றை விவரிக்கிறார். அங்கு யாரும் தன்னளவுக்கு ஈடில்லை என்று நினைக்கிறார். தனக்கான ஒரு ரோஜாத் தோட்டத்தை அங்கு உருவாக்கி, அவைகளுடனும் அங்கிருக்கும் மரங்களுடனும் உறவாடித் திரிகிறார். புரட்சி, போராட்டம் என்றெல்லாம் கடந்து வந்த பாதையை யோசித்துப் பார்க்கையில் ஒரு பெரும் மகிழ்ச்சியொன்றை இழந்ததன் சுவடுகள் அவரை ரணமாக்குகின்றன.

பெண், தான் கடந்துவந்த பாதையில் குறுக்கிடாத ஒரு இன்பமாக அவர் கருதுகிறார். ஒரு பெண்ணின் மணத்துக்காகவும் ஸ்பரிசத்துக்காகவும் ஏங்குகிறார். தினம் தினம் பேருந்திலோ வேறெங்காவதோ பெண்களைப்பார்த்து விட்டு அவர்களைத் தொலைத்துத் தவிப்பதல்ல இந்தத் தவிப்பு. அதுவரை பெண்ணின் மணம் காணாத ஒரு தவிப்பு. பெண்கள் சிறைக்கும் ஆண்கள் சிறைக்கும் இடையே இருந்த ஒரு ஓட்டை அடைக்கப் பட்டிருக்கும் சுவடைக் கண்டு வருந்துகிறார். அப்போது மதிலுக்கு அப்புறத்திலிருந்து ஒரு குரல் கேட்கிறது. மதிலே சாட்சியாக இருவரும் காதலிக்கிறார்கள். முகம்பார்க்காத காதல். ஒரு நேசம். கதையின் நுட்பமான பகுதியே, அந்த இடைப்பட மதிலின் பூச்சலில் பஷீர் அந்தப் பெண்ணின் மணத்தை உணருகிறார். அது, அவர் வளர்க்கும் ரோஜாக்கூட்டங்களின் மணத்தை விட அவருக்கு மகிழச்சி தரக்கூடியதாக இருக்கிறது.

அவள் பெயர் நாராயணி, அவளுக்கு ஒரு ரோஜாச்செடியைப் பரிசளிக்கிறார். அது மதிலுக்கு அப்பால் நன்றாக வளர்கிறது இவர்களின் காதலைப்போல. தன்னை விரும்புகிறவன் தன்னைத்தான் விரும்புகிறானா இல்லை தன் நிலையில் யார் இருந்தாலும் விரும்புவானா என்றறிய விரும்புகிறாள். தானொரு அழகியில்லை, தானொரு அதிர்ஷ்டமற்றவள் என்றெல்லாம் கூறுகிறாள். எல்லாப் பெண்களையும்போல தன்னை விரும்புபவனை இழக்க விரும்பாத ஒரு மனம். இறுதியில் இருவரும் சிறைக்குள் ஓரிடத்தில் சந்திக்க முடிவெடுக்கிறார்கள்.

வேதனையின் துளிகளால் நாவல் முடியும்போது ஒரு துன்பத்தின் நிழலை மனதில் பரப்பி விடுகிறது. விரும்பிய ஒரு பொருள் கிடைக்காமல் போகும்போது ஏற்படும் துக்கத்தை பிரதிபலிக்கிறது இந்த நாவல். மொழிபெயர்ப்பு அவ்வளவு உவப்பாக இல்லையென்றாலும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தவல்லதாக இருக்கிறது கதை. இதை ஒரு சினிமாகவும் அடூர் கோபாலகிருஷ்ணன் எடுத்திருக்கிறார். வெறும் 52 பக்க ஒரு குறுநாவல் ஒரு வெற்றிச் சித்திரமாக ஆனதில் அடூருக்கு இருந்த சோதனைகள் என்னென்ன என்பதை அவர் ஒர் பேட்டியில் சொல்லியிருக்கிறார். அது பின்னிணைப்பாக கொடுக்கப்பட்டிருக்கிறது. அவர் பெரும் சவாலாகக் கருதியது பஷீரை திரையில் பிரதிபலிக்கத்தான். அந்த திரைக்காவியம் யூ-ட்யூபில் கூட காணக் கிடைக்கிறது.

குறுநாவல் | மொழிபெயர்ப்பு | காலச்சுவடு | பக்கங்கள் 70 | விலை ரூ. 50
இணையத்தில் வாங்க: உடுமலை

6 Feb 2013

விலங்குப் பண்ணை - தமிழில்: பி.வி.ராமஸ்வாமி

என் அம்மா வளர்ந்த கிராமத்திற்கு விடுமுறைக்குப் போனால் அங்கே படிக்கக் கிடைக்கும் விகட, குமுத, சாவி, இதயம் பேசுகிறது’களுக்கு இடையே வித்தியாசமானதாகத் தனியே இருப்பது “சோவியத் யூனியன்” என்ற பத்திரிக்கையே. இந்தியா டுடே புத்தக அமைப்பில் கொஞ்சம் முரட்டுத்தனமாக “என்னைப் படிக்காதேயேன்”, என்று சின்னஞ்சிறுவனான என்னை மிரட்டும் நிறம்போன நிறத்தில் இருக்கும் புத்தகம். அதை யார் அங்கே வாங்கினார்கள், எதற்காக வாங்கினார்கள், யார் வாசித்தார்கள் என்பதெல்லாம் இன்றும் எனக்குக் கேள்விக்குறியே.

மற்ற பத்திரிக்கைகளில் வரும், ‘மாமா/மாமி, சாரி கொஞ்சம் ஓவர், ஆறு வித்தியாசங்கள், முன் ஜாக்கிரதை முத்தண்ணா” போல பகிரங்கமாகப் படிக்கத் தக்கவைகளோ, அல்லது சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு புரட்டத்தக்கதான நடுப்பக்க அம்பிகாவின் கழுத்திற்கு இரண்டு இன்ச் கீழே கிறக்கமாக கமல் கிஸ் அடிக்கும் படங்களோ இல்லாதவொரு புத்தகம் அது. எப்போதேனும் கண்ணில் அகப்படும் துக்ளக் பத்திரிக்கைக்கும் இந்தப் புத்தகத்திற்கும் பெரிய வித்தியாசம் தெரியாது எனக்கு. 



கம்யூனிசம், தொழிலாளி, பேதம், உழைப்பு, உழைப்பாளி, மேலைநாடு, மார்க்சியம் என்ற வார்த்தைகளெல்லாம் வார்த்தைகளாகத் தட்டுத் தடுமாறிப் படித்த பருவம். 

ஒரு காலகட்டத்தில் சோ ராமஸ்வாமியும் கூட பிடிபட ஆரம்பித்தார். ஆனால் இந்த கம்யூனிசம் மாத்திரம் பிரியமாட்டேன் என்று பிடிவாதம் பிடிக்கிறது.

அலுவலகத்தில் சப்வே கவுன்டர் கதவடைத்திருந்த ஒரு நல்லிரவுப் பொழுதில் பீட்ஸா கார்னரில் ”செட்டிநாடு சைவ பீட்ஸா” என்ற புது வகையறாவைச் சுவைத்த வண்ணம் “கம்யூனிசம்னா என்ன சார், எல்லாரும் உழைக்கணும், எல்லாருக்கும் எல்லாமும் சரிசமம், எல்லாருக்கும் சரிசம சம்பளம், சரிசம வசதிவாய்ப்புகள், நோ ஃபர்ஸ்ட் க்ளாஸ் ஏஸி கம்பார்ட்மெண்ட், எக்ஸெட்ரா எக்ஸெட்ரா.... அதானே?”, என்று ஃபிடல் காஸ்ட்ரோவின் தீவிர அபிமானி ஒருத்தரிடம் கேட்க, அவருக்கு மளுக்’கென்று கண்ணில் நீர் வந்துவிட்டது.

“என்ன சார்? செட்டிநாடு காரம் ஜாஸ்தியோ?”

“யோவ்.... ஏன்யா இப்பிடி விக்கிபீடியாவைப் படிச்சிட்டு வந்து உளர்றீங்க?”, என்றார். அவர் சட்டையில் பைப் அடித்துக் கொண்டிருந்த சே குவாரே’வும் சேர்த்து என்னை முறைப்பதாய்ப் பட்டது.

ஒரு புனிதப்போராளி ரேஞ்சுக்கு எனக்கு கம்யூனிச மூளைச்சலவை வகுப்பு எடுக்கத் தொடங்கிய நண்பரிடமிருந்து பிய்த்துக் கொண்டு வருவது உன் பாடு, என் பாடு என்றாகிப்போனது. விஷயம் கம்யூனிசம் மீதான என் எதிர்ப்பு அல்ல, அலர்ஜியும் கூட அல்ல. புரிதலின்மை என்று சொல்லிக் கொள்ளலாம். 

சென்ற வருட சென்னை புத்தகக் காட்சியில் வழக்கம் போல @f5here பிரகாஷ், “இது சூப்பர் புக் அண்ணா. இங்க்லிஷ்ல ஜார்ஜ் ஆர்வெல் எழுதினது”, என்று அச்சு வாசம் மாறாமல் அடுக்கப்பட்டிருந்த “விலங்குப் பண்ணை” புத்தகத்தைக் கையில் புரட்டியபடி சொன்னான்.


அன்பர் பிவிஆர் என்கிற பி.வி.ராமஸ்வாமி மொழிபெயர்த்த புத்தகமாச்சே . அவர் அனுப்பிய ”நம்ம மொழிபெயர்ப்பு இந்த புத்தகவிழாவில் ரிலீஸ் ஆகிறது” என்ற டெக்ஸ்ட் மெசேஜ் நினைவுக்கு வந்தது. புத்தகம் ஒரு காப்பி கையில் எடுத்துக் கொண்டேன். சொன்னால் நம்புங்கள்! விலங்குப் பண்ணை புத்தகமானது குழந்தைகளுக்கானதொரு விலங்குகளின் கதை சொல்லும் புத்தகம் என்றுதான் புத்தகத்தைக் கையில் எடுக்கும்வரை நம்பிக் கொண்டிருந்தேன்.

புத்தகத்தைக் கையிலெடுத்துப் புரட்டுமுன் பின்னட்டையை நோட்டமிட்டால் அதில், “கம்யூனிசம், ஸ்டாலின், ரஷ்யா”, என்றெல்லாம் எழுதியிருந்தது. இதென்னடாது வம்பாப் போச்சு,  நமக்கு ஆவாத சப்ஜெக்டு புஸ்தகத்தைத் தெரியாம வாங்கிட்டமோ என்று வாசிக்க ஆரம்பித்தேன்.

ஒருவேளை அந்த பின்னட்டையை வாசிக்காமல் விட்டிருந்தால்  எனக்கு இருக்கும் அரசியல் அறிவுக்கு இந்தப் புத்தகத்தை ஒரு குழந்தைகள் இலக்கியம் என்றுகூட புரிந்து கொண்டிருப்பேன். கையில் எடுத்தால் ஒரு மூச்சில் படிக்கத்தக்க மிகமிக சுவாரசியமான ப்ளாட்.

ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் ஆட்சி செய்பவன் அநியாய அரசியல்வாதியாகவும் ஆளப்படுபவன் முதுகொடிந்த அடிமையாகவும்தான் இருக்கமுடியும் என்ற ஒற்றைவரிக் கருத்துதான் அனிமல் ஃபார்ம் புத்தகத்தின் கதைக்கரு. இதற்கு முதலாளித்துவமோ, ஜனநாயகமோ அல்லது கம்யூனிசமோ விதிவிலக்கல்ல.

ஜோன்ஸ் என்னும் பண்ணை உரிமையாளரிடமிருந்து அவரது மேனார் பண்ணையை விலங்குகள் கைப்பற்றுகின்றன. மனிதர்களுக்கு உழைத்தது போதும் என்று அவை இப்போது இரண்டு புத்திசாலிப் பன்றிகள் தலைமையில் “நமக்கு நாமே” திட்டத்தின் கீழ் மகிழ்ச்சியாக உழைக்கத் துவங்குகின்றன. அந்த நம்பிக்கை, உழைப்பு, அவற்றின் திசைமாற்றம், புதிய தலைமையின் தகிடுதத்தங்கள், பன்றிகளின் குள்ளநரித்தனங்கள் என்று கதை பயணித்து வஞ்சித்தலின் உச்சகட்டத்தில் கதை நிறைகிறது.

இங்கே கதைக்களனாகக் கொள்ளப்பட்டது ரஷ்யாவின் ஸ்டாலின் காலகட்டத்துக் கம்யூனிசக் கலாட்டாக்கள். ஆனால் ஒரு புத்தகத்தின் இடத்திலும் கூட ஸ்டாலின் தர்பார் நம் கண்ணுக்குக் காட்டப் படுவதில்லை. முழுக்க முழுக்க விலங்குகளே கதைமாந்தர்கள்.

நெப்போலியன், ஸ்நோபால், ஸ்க்வீலர், பாக்ஸர் என்று பன்றிகளும், நாய்களும், குதிரைகளும் வளையவரும் கதையாகவே இருக்கிறது அனிமல் ஃபார்ம். நையாண்டி விதம் (satire) என்பார்களே அந்த ஸ்டைல் கதை. உள்ளதை நேரடியாகச் சொல்லாமல் அனிமல் ஃபார்ம் மூலமாகக் கோடி காட்டியிருக்கிறார் அனிமல் ஃபார்மின் நிஜ வடிவத்தின் ஆசிரியர் ஜார்ஜ் ஆர்வெல்.

பொதுவாக மொழிபெயர்ப்புப் புத்தகங்களை ரசித்து வாசிப்பவனில்லை நான். ஒரு படைப்பினை அதன் உண்மையுருவில் நாம் உள்வாங்க மொழிபெயர்ப்பு பொதுவாகத் தடையாக இருக்கும் என்பது என் கருத்து. ஆனால், இந்தப் புத்தகத்தைப் பொருத்தவரையில் பிவிஆர் நம்மை ஒரு நேரடித் தமிழ்ப் புத்தகம் வாசிக்கும் அனுபவத்திற்கே கொண்டு செல்கிறார் என்பதை நாம் நிச்சயம் குறிப்பிடவேண்டும். அறுபது ஆண்டுகளுக்கு முந்தைய ஆங்கில நாவலை, அதிலும் குறிப்பாக ’ஸ்பெகுலேடிவ் ஃபிக்‌ஷன்” வகை ஒன்றை மொழிபெயர்ப்பதென்பது அத்தனை எளிமையன்று.

அதுசரி, கடைசியில் இந்தப் புத்தகம் வாசித்தாவது கம்யூனிசம் நமக்கு விளங்கியதா என்று கேட்டீர்களா யாரேனும்?

நோ கமெண்ட்ஸ் ப்ளீஸ் :)

விலங்குப் பண்ணை -ஜார்ஜ் ஆர்வெல்
தமிழில்: பி.வி.ராமஸ்வாமி
கிழக்கு பதிப்பகம்
144 பக்கங்கள் / விலை. ரூ.85/-
இணையம் மூலம் வாங்க: கிழக்கு

28 Jan 2013

எரியும் பனிக்காடு – பி.எச்.டேனியல் – இரா. முருகவேள்



சினிமாவோ புத்தகமோ நம்மை பெரிதும் பாதிக்கும் விஷயங்கள் பெரும்பாலும் துன்பச் சரித்திரங்களாகவே அமைந்து விடுகின்றன. ஒரு மகிழ்ச்சியாக முடிவுறும் (Happy Ending) ஒரு நாவலை விட ஒரு துயரத்தின் காவியம் நம் மனதில் ஏற்படுத்தும் பாதிப்பு நீண்ட நாட்கள் நிலைத்திருக்கும். இன்று களைப்பின்போதும், நேரம்போகாத சமயங்களிலும் அமர்ந்து தேநீர் குடித்துக் கொண்டிருக்கும் நமக்கு வால்பாறைத் தேயிலைத் தோட்டங்கள் உருவான வரலாறோ அதில் கொல்லப்பட்ட மக்களைப்பற்றியோ தெரிந்திருக்க வாய்ப்பில்லை. மனிதாபிமானத்தின் சுவடுகள் முற்றிலும் அழிக்கப்பட்டு வேட்டையாடப்பட்ட ஒரு இனத்தின் ரத்த சரித்திரம் விரிகிறது கண் முன்னே இந்த புத்தகத்தின் வாயிலாக.

திருநெல்வெலி மயிலோடை கிராமத்தில் வசித்து வரும் கூலி கருப்பன், அவன் மனைவி வள்ளி. உள்ளூரில் அதிகம் வேலை இல்லாத காரணத்தினால் வறுமையில் உழன்று கொண்டிருக்கும் கருப்பனையும் வள்ளியையும் தேயிலைத்தோட்ட கங்காணியான சங்கரபாண்டியன், தேயிலைத் தோட்டங்களில் வசதியாக வாழலாம், நிறைய சம்பாதிக்கலாம் விரைவில் வாழ்வில் நல்ல நிலைக்கு வந்து விடலாம் என்று ஆசை வார்த்தை கூறி நாற்பது ரூபாய் முன்பணமும் கொடுத்து அழைத்துச் செல்கிறான். கருப்பன்வள்ளி போல பலரும் சங்கரபாண்டியை நம்பி தேயிலைத்தோட்டத்திற்கு வர சம்மதிக்கின்றனர். அவர்கள் அனைவரையும் சங்கரபாண்டி தன் சொந்தச் செலவில் தோட்டத்திற்கு அழைத்துச் செல்கிறான்.

அங்கு சென்றதும் இவர்கள் காணும் காட்சி மிக வித்தியாசமானதாக இருக்கிறது. சுகாதாரமற்ற அறைகள். அதுவும்பாடிஎன்று சொல்லப்படும் ஒரு குடிசை இரண்டு குடும்பங்களுக்குப் பகிர்ந்தளிக்கப் படுகிறது. புதிதாய் சேர்ந்த கருப்பனும் வள்ளியும் முத்தையா குடும்பத்தினருடன் ஒரே குடிசையில் குடியமர்த்தப் படுகிறார்கள். அதுவரையிலும் இனிமையாய் பேசிய கங்காணிகள் தோட்டத்தில் தங்களைக் கொடுமைப் படுத்துவதைக் கண்டு அஞ்சுகின்றனர். இவ்வாறு தங்கள் தேயிலைத் தோட்ட வேலையைத் தொடங்கிய இவர்கள் கரை சேர்ந்தார்களா அங்கு இவர்கள் அனுபவித்த கொடுமைகள் என்ன என்பதுதான் இந்த நாவல்.

நிறைய சம்பாதிக்கப் போகிறீர்கள் என்று நம்பிக்கை செலுத்த முன்பணத்தை வாரி வழங்குவதிலாகட்டும், குடுகுடுப்பைக்காரனை ஏற்பாடு செய்து நல்லது நடக்கும் என்று கூலிகளை நம்ப வைப்பதிலாகட்டும், ஏமாற்றியே கூலிகளை வேலைக்கு அழைத்துச் செல்கின்றனர் கங்காணிகள். ஒவ்வொரு கூலியும் வேலை செய்வதில் ஒரு பங்கு கங்காணிக்கு சம்பளமாக கொடுக்கப்படும். அதனால்தான் இத்தனை ஏமாற்று வேலைகளும். பிறகு வேலை பிடிக்காமல் கூலிகள் திரும்பிச் செல்ல விரும்பினால் கொடுத்த முன்பணத்தை திரும்பச் செலுத்தவேண்டும். ஒரு வருடம் கணவன் மனைவி இருவரும் வேலை செய்தாலும்கூட அந்தக் கடனை அடைக்கமுடியாது. இப்படியாக அவர்கள் வேலை செய்யவேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாக்கப்படுகிறார்கள்.

தேயிலைத் தோட்டங்களில் நிலவிய மனிதாபிமானமற்ற சூழலை, அதன் வலியை வாசகன் உணரும் வகையிலான விவரணைகள் புத்தகம் நெடுக. சுத்தமற்ற குடிநீர், அழுக்கான மற்றும் கடும்குளிரை சமாளிக்க ஏதுவாக அமைந்திராத குடிசைகள், போதிய மருத்துவ வசதியின்மை, ஒரு வார்டுபாய் மருத்துவராக மருத்துவம் பார்க்கும் மோசமான நிலை மற்றும் மலேரியா போன்ற விஷக் காய்ச்சல்களால் உடன் வந்தவர்கள் பாதிப் பேரை பலிகொடுக்கும் மோசமான மருத்துவ சூழல், உடனிருப்பவருக்கு உடல்நிலை சரியில்லாத போதும் வேலை செய்ய வேண்டிய கட்டாயம், பெண்களானால் பாலியல் தொந்தரவுகள், தப்பியோடினால் காட்டு மிருகங்களால் வேட்டையாடப்படும் நிலை என்று அவர்கள் அனுபவித்த கொடுமைகளை தொடர்ந்து வாசிக்க இயலாதவாறு பக்கங்கள் புரளும்தோறும் மனம் கனத்துக் கொண்டெ போகிறது.

இந்தச் சூழலில் மருத்துவர் ஆப்ரஹாம் அங்கு வந்து சேர்கிறார். பின்னட்டையில் கொடுக்கப்பட்டிருக்கும் தகவலின்படி ஆப்ரஹாமின் பாத்திரத்தின் பேரில் இந்த நாவலின் ஆசிரியர்தான் அங்கு மருத்துவராக வருகிறார். மருத்துவ வசதிகளை அதிகப்படுத்தியும் கூடுமானவரையிலும் அங்கிருக்கும் கூலிகளுக்கு உதவியாக இருக்கிறார்.

இன்று நம் மன அழுத்தத்தைப் போக்கும் முக்கிய காரணியாக இருக்கும், நாம் பொழுதுபோக்கிற்கு குடிக்கும் தேநீரை சிவப்புத்தேநீர்  என்று சொன்னால் அது மிகையாகாது. முகம் தெரியாத பலரின் வியர்வையும் ரத்தமும் சிந்தி உருவாக்கப்பட்டதே இந்தத் தேயிலைக்காடுகள். உண்மையில் இன்று அந்தத் தேயிலைக் காடுகள் சுமந்து நிற்பதென்னவோ மறைக்கப்பட்ட ஒரு தலைமுறையின் துயரத்தின் வாழ்வியலைத்தான். நாமறியாத வரலாற்றினை அறிந்துகொள்ளும் பொருட்டேனும் இப்புத்தகத்தின் வாசிப்பு இன்றியமையாததாகிறதென இதை உங்களுக்கு சிபாரிசு செய்கிறேன்.

நாவல் | மொழிபெயர்ப்பு | விலை ரூ. 150 | இணையத்தில் வாங்க டிஸ்கவரி

14 Jan 2013

சிதம்பர நினைவுகள் - பாலச்சந்திரன் சுள்ளிக்காடு

என்னதான் பொழுதுபோக்கிற்கு புத்தகம் வாசிக்க ஆரம்பித்தாலும் ஒரு கட்டத்தில் வாசிப்பு நம்மை முழுவதுமாக ஆட்கொள்கிறது, அடிமையாக்கி விடுகிறது. வாசிக்கும் பழக்கமுள்ள எல்லோர் வாழ்விலும் அவர்களின் வாழ்வை மாற்றிய, மனதை விட்டகலாத, மனதிற்கு வெகு நெருக்கமாக உணரும் ஒரு புத்தகம் இருக்கும். நம் வாழ்வில் நடந்த சம்பவங்களையொத்த சம்பவங்களைக் கொண்ட நாவல்கள் பெரும்பாலும் இந்த வகையறாவில் வந்து சேர்ந்துவிடும். அப்படி எனக்கொரு அதியற்புத உணர்வைக் கொடுத்த புத்தகம்தான் சிதம்பர நினைவுகள்.

கேரளத்தின் யுவாக்களுக்கு காதலும், கம்யூனிசமும் ரத்தத்திலேயே ஊறிப்போன விஷயம். இப்படியாக கல்லூரி காலத்தில் கவிதைகளும், கொள்கையும் கொண்டு நடந்து வீட்டிலிருந்து வெளியேறி பின்னர் உலகறியும் ஒரு சிறந்த மலையாளக் கவிஞனான பாலச்சந்திரன் சுள்ளிக்காடின் வாழ்க்கை தான் இந்த புத்தகம். 21 சம்பவங்களின் தொகுப்பு, கேவி ஷைலஜா மொழி பெயர்ப்பில் மொழிபெயர்ப்பின் சுவடே இல்லாமல் மனதைக் கிளரும் புத்தகம்.

இந்த வைராக்கியம் தான் எத்தனை பொல்லாதது? ஒரு வாழ்க்கைப் போராட்டத்தில் வைராக்கியமும் கூடச் சேரும்போது சென்று சேருமிடம் ஒரு புதிய உலகம்; அடையப்படும் வெற்றி மிகப் பெரியது; எனினும் பாதை சீரானதாக இருப்பதில்லை, நெருஞ்சிமுள் பாதையாகவே அமைந்துவிடுகிறது பெரும்பாலும். வாழ்வில் வென்றவர்கள் புத்தகம் எழுதினால் அவர்கள் எழுத்தில் இருக்கும் உண்மைநிலை/நிர்வாணம் நம்மை அடித்துப் போட்டுவிடுகிறது. சிதம்பரம் கோவிலுக்கு ஈசனைக் காணச் செல்பவர் அங்கு வயது முதிர்ந்த ஒரு தம்பதியினரைக் காண்கிறார். யாசித்து வாழ்பவர்களாக இருப்பார்களென்று உதவப் போய் அவர்களின் கதையைக் கேட்கிறார். பிள்ளைகள் நல்ல நிலையிலிருந்தும் அவர்களை இம்சிக்காது பென்ஷன் பணம் வாங்கி கோவிலில் இறைவனை இறைஞ்சி வாழும் குடும்பம் அவர்கள். முதுமையின் நிலை கண்டு மனதளவில் சித்தார்த்தனாகிப் போன பாலன் பின்னொரு நாளில் யோசித்துப் பார்க்கிறார் இருவரில் யார் முதலில் இறந்திருப்பார்களென்று.

பின்னொரு நாள், தன் பெயரின் அழைப்புக் கேட்டு பெண்ணொருவரை சந்திக்கிறார். அந்தப் பெண்ணின் முகம் பாதி தீயில் வெந்திருக்கிறது. அடையாளம் கண்டுணர முடியாத நிலையில் அந்தப் பெண்ணே தான் இவரின் கல்லூரி ஜூனியர் என்றும், முன்பொருநாள் பாலனை தன் பின்னால் பல நாட்கள், பேச முயன்றும் முடியாமல் அலையவிட்ட சாஹினா தானென்றும், படகைக் கவிழ்த்து விடுவேன் என்று மிரட்டி முத்தம் வாங்கிய சம்பவத்தையும் நினைவூட்டுகிறாள். ஒட்டுமொத்த கல்லூரியும் `சுற்றிக் கறங்கி` பின்னால் நடந்த ஒரு பேரழகியின் முகம் பாலனின் நினைவலைகளில் வந்து செல்கிறது. அவளுடன் வீட்டிற்கு செல்கிறார். அவளின் கதையைக் கேட்கிறார். கணவனால் ஏமாற்றப்பட்டு சிறுவேலைகள் செய்து இரு குழந்தைகளை வளர்த்துக் கொண்டிருக்கும் அவளுக்கு தான் எந்த ஒரு உதவியும் செய்ய இயலாத நிலையில் பாதி வெந்திருக்கும் அந்த கன்னத்தில் அழுத்தி முத்தமிட்டுச் செல்கிறார். அதுமட்டும் போதுமாயிருக்கிறது சாஹினாவுக்கு.

இப்படியாக இவர் வாழ்வில் கடந்துவந்த சம்பவங்கள், வறுமை, வைராக்கியம், லட்சியம், காதல்,காமம் இவைகளின் கோர்வை. ஆறுமாதங்கள் விடுதிப் பணம் கட்டாததால் வெளியேற்றப்படுகிறார். அந்த சமயத்தில் சந்திக்கும் நண்பனொருவனும் அவருடன் இருக்குமொரு புண்ணிய ஆத்மாவும் இவர் சோகத்தை கரைக்க மது ஊற்றுகிறார்கள். ஆல்கஹால் உள்ளிருக்கும் இயலாமையைத் தூண்டிவிட அந்த கணமே அழுதுவிடுகிறார் பாலன். இதை கண்டு அதிர்ந்து உடனிருக்கும் அந்த நபர் பாலனுக்கான ஒரு வருட விடுதித் தொகையை முழுவதுமாக கட்டி விடுகிறார். பின்னொரு நாளில் அவரின் சடலம் கண்டபோது அவர் சொன்ன வாக்கியமொன்று நினைவுக்கு வருகிறது பாலனுக்கு.

இதையெல்லாம் விட என்னை உருக்கிய நிகழ்வொன்று இதில் பதியப் பட்டிருக்கிறது. ஓணத்திருநாள். கேரளதேசமே விழாக்கோலம் பூண்டிருக்கிறது. ஓணம் காரணமாக விடுதி பூட்டப்பட்டு நண்பர்கள் யாரும் உடனில்லாத் தனிமை பீடிக்க கையில் நயாபைசா இல்லாமல் வெளியேறுகிறார். பசி காதை அடைக்கிறது, வீராப்பு வீட்டிற்கு செல்லும் பாதையை மறைக்கிறது. ஒருநாள் முழுவதும் தண்ணீரை மட்டுமே குடித்து சமாளித்தவர் கால் போன போக்கில் போக ஒரு வீட்டின் வாசற்கதவில் சாய்ந்து நிற்கிறார். குழந்தைகள் பிச்சைக்காரனென சொல்லிவிட திருவோணத்தன்று அந்த வீட்டின் வாசலில் அமர்ந்து யாசித்து உண்கிறார். அந்த சமயத்தில் அங்கே வரும் ஒரு யுவதி இவரை அவளின் கல்லூரியில் கவிதை வாசிக்க வந்திருந்த கவிஞர் என அடையாளம் காண்கிறாள். எழுந்தோடி விடலாமென்று தோன்றியும் பசி தடுக்க உணவருந்தி நன்றி சொல்லி பயணப் படுகிறார். அப்போது நான் பாலனாக மாறியிருந்தேன் ஒரு துளிக் கண்ணீரோடு.

இதேபோல புத்தகத்திலிருக்கும் சம்பவங்கள் அத்துணையையும் எழுதிவிடத் தோன்றுகிறது. அவ்விதம் என்னுள் கலந்த ஒரு புத்தகமிது. எத்தனையோ நாட்களாகியும் இன்னும் இதன் தாக்கம் மனதை விட்டகலவில்லை. நிச்சயம் இந்த புத்தகம் உங்களுக்கு ஒரு நல்ல வாசிப்பனுபவம் தரும் என நம்புகிறேன்.

மொழிபெயர்ப்பு / கே.வி ஷைலஜா / வாழ்வியல்சார் கட்டுரைகள் / வம்சி / விலை ரூ. 100 / இணையம் மூலம் வாங்க: உடுமலை

30 Nov 2012

அகிலனின் 'தாகம்'

அகிலனின் கதைகளைப் படிப்பது மிகவும் கொடுமையான அனுபவம் என்று அண்மையில் ஒரு நண்பர் சொன்னார். 'நீங்கள் அகிலனின் மொழிபெயர்ப்புகளை வாசிக்க வேண்டும், அவை மிக அருமையானவை,' என்று அவருக்கு பதிலளித்தார் மற்றொரு நண்பர். அகிலன், மாப்பஸான் கதைகள் மற்றும் ஆஸ்கார் ஒயில்டை மொழிபெயர்த்திருக்கிறார் என்பது எனக்கு ஒரு நம்ப முடியாத செய்தியாக இருந்தது. விக்டோரிய காலத்து ஒழுக்க விழுமியங்களுக்கு எதிரான கலகக்காரனாக இருந்த ஒயில்டு, அவரது தற்பாலின விழைவால் எழுந்த பிரச்சினைகளுக்காக மிகக் கடுமையாக தண்டிக்கப்பட்டார். மத்தாப்பாகத் தெறிக்கும் ஒயில்டின் மொழி மற்றொரு காரணம் - அவரது எழுத்தில் மேற்கோள்களாக கையாளத்தக்கவற்றைத் தேர்ந்தெடுத்துப் பதிப்பித்த முன்னூறு பக்கங்களுக்கும் மேற்பட்ட புத்தகத்தை வாசித்திருக்கிறேன், ஒயில்டின் எழுத்தில் ஒவ்வொரு பத்தியிலும் ஒரு மேற்கோளைக் காணலாம். "சினிக் என்பவன் யார்? எல்லாவற்றின் விலையையும் அறிந்தவன், எதன் மதிப்பையும் அறியாதவன்" என்ற ஒரு மேற்கோளே காலத்துக்கும் போதும். அகிலனின்  இழுத்துப் போர்த்திய, கனமான  நடையை, "நாமெல்லாரும் சாக்கடையில்தான் கிடக்கிறோம், ஆனால் நம்மில் சிலர்தான் நட்சத்திரங்களைப் பார்க்கிறோம்" என்று சொன்னவரோடு இணைத்தே பார்க்க முடியவில்லை.

ஆஸ்கார் ஒயில்டின் சலோமி என்ற நாடகத்தை அகிலன் தாகம் என்ற குறுநாவலாக மொழிபெயர்த்திருக்கிறார், அதைவிட, தழுவி எழுதியிருக்கிறார் என்று சொல்லலாம். ஒரு நாடகத்தை குறுநாவலாக மொழிபெயர்க்க முடியாது என்பது மட்டுமல்ல, அகிலன் நிறைய சுதந்திரம் எடுத்துக்கொண்டுதான் இந்த வேலையைச் செய்திருக்கிறார். அகிலனுக்கும் ஒயில்டுக்கும் என்ன ஒற்றுமை, இந்தக் கதையை ஏன் அவர் மொழிபெயர்க்க எடுத்துக்கொண்டார் என்பது ஆச்சரியமாக இருக்கிறது. அகிலனின் 'கற்பான' தழுவல் ஒயில்டின் வரம்பு மீறிய தழுவலைச் சுத்திகரிப்பதாக இருக்கிறது.


1 Nov 2012

யானைக்கூட்டம்

யானைகளைப் பற்றி நிறைய விஷயம் இருக்கும் என்று நினைத்துக்கொண்டு வை. ஷண்முகசுந்தரம் மொழிபெயர்த்த ஜே. ஹெச். வில்லியம்ஸ் எழுதிய "யானைக்கூட்டம்" என்ற புத்தகத்தைப் படித்தேன். நிறைய விஷயங்கள் இருந்தன, ஆனால் எதுவும் மகிழ்ச்சியளிப்பவையாக இல்லை. பர்மாவின் காடுகளில் யானைகள் போர்க்காலத்திலும் அமைதிக் காலத்திலும் மரம் வெட்டவும் பாலங்கள் கட்டவும் பயன்படுத்தப்பட்டதை ஆவணப்படுத்தும் குறிப்புகள். சில சமயம் கொடூரமாக இருக்கின்றன..

முதல் உலகப்போரில் ஒட்டகப் படையில் பணியாற்றிய வில்லியம்ஸ் போருக்குப் பின் வேறு வேலை தேடுகிறார். பர்மாவில் யானைகள் பராமரிப்பு வேலை இருக்கிறது என்று கேள்விப்பட்டதும் அவருக்கு அதில் ஆர்வம் வருகிறது - "வனத்திலே வசிப்பது... வேட்டையாடுவது... குதிரைக் குட்டிகளின் மேல் சவாரி செய்வது, தனிமையைத் தாங்கிக் கொள்வது," இதுதான் வேலை என்ற நினைப்பில், பர்மா எங்கே இருக்கிறது என்று உலகப் படத்தைப் பார்த்து உறுதிப்படுத்திக் கொண்டு வேலைக்கு விண்ணப்பிக்கிறார்.




12 Oct 2012

மகாத்மா காந்தி : ஒரு உன்னத வாழ்க்கையின் சிறு வரலாறு வின்சென்ட் ஷீன்




அண்மையில், காந்தி ஜெயந்தியை முன்னிட்டு மதுரையில் உள்ள பிரபல கல்லூரியில் சிறப்புரை ஆற்ற ஒரு சிறப்பு பேச்சாளர் அழைக்கப்பட்டிருந்தார். நவீன காலகட்டத்தில் காந்திய சிந்தனையை தமிழக சூழலில் பல தளங்களில் கொண்டு செல்லும் மிக முக்கியமான ஆளுமைகளில் ஒருவர் அவர். நானும் சென்றிருந்தேன். சிறப்பான அந்த உரை முடிந்த பின்னர் கேள்வி நேரம் தொடங்கியது. ஒரு கல்லூரி மாணவன் எழுந்து அந்த சிறப்பு பேச்சாளரிடம், “ காந்தி, தன்னுடைய பனியா இனம் வளம் பெற வேண்டும் என்பதற்காக குறுகிய நோக்கில் அனைவரையும் நூல் நூற்கச் சொன்னார் என்று அவர் மீது ஒரு குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது, அப்படிச் சொல்லும் ஒரு புத்தகத்தை நான் வாசித்திருக்கிறேன் , இதைப் பற்றி நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?” என்று கேட்டார். இந்த கேள்வி என்னை திடுக்கிட செய்தது.  நம் வரலாற்று உணர்வையும் புரிதலையும் எண்ணி நம்மை நாமே மெச்சிகொள்ளத்தான் வேண்டும். அந்த மாணவனை நான் குற்றம் சொல்ல மாட்டேன், எதிர்மறையாகவேணும் காந்தி குறித்து ஏதேனும் ஒன்றை வாசித்திருக்கிறான், அதைப் பற்றிய ஐயத்தை அவனால் எழுப்ப முடிந்தது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வரை என்னுடைய நிலைமை அதைவிட மோசம் என்றுதான் நினைத்துக் கொள்கிறேன்.



7 Sept 2012

கலங்கிய நதி - பி.ஏ.கிருஷ்ணன்


“பாராளுமன்றம் என்பது ஒரு தேசம் விளையாடும் விலை உயர்ந்த விளையாட்டு பொம்மை”. இங்கிலாந்தின் பாராளுமன்ற ஜனநாயகத்தைக் கடுமையாக விமர்சித்து காந்தி 'இந்து ஸ்வராஜ்', நூலில் எழுதிய வாசகம்தான் இது. அரசு இதயமற்ற ஒரு யந்திரம், அதன் வன்முறை பன்மடங்கு வீரியமுள்ளதாக, கட்டுப்படுத்தப்பட முடியாததாக  இருக்கும் என்றார் காந்தி. பி.ஏ.கிருஷ்ணனின் 'கலங்கிய நதி' வாசித்து முடிக்கையில் காந்தியின் தீர்க்கதரிசனமே நினைவுக்கு வந்தது.  விரக்தியில் பெருமூச்சுத் விடுவதை  தவிர வேறெதுவும் செய்வதற்கில்லை.

 

31 Aug 2012

சிக்கவீர ராஜேந்திரன் – மாஸ்தி வெங்கடேச அய்யங்கார்



‘ஒரு வரலாற்று புனைவு’ எப்படி எழுதப்பட வேண்டும் என்பதற்கு ஆகச்சிறந்த உதாரணம் என்று சிக்கவீர ராஜேந்திரனை பற்றி இணைய நண்பர் ஒருவர் ஒரு விவாதத்தின்போது குறிப்பிட்டிருந்தார். ஹேமா ஆனந்ததீர்த்தனின் மொழியாக்கத்தில் நேஷனல் புக் ட்ரஸ்ட் வெளியீடாக, மாஸ்தி வெங்கடேச அய்யங்கார் எழுதி 1947 ஆம் ஆண்டு முதற்பதிப்பு கண்ட  இந்த கன்னட  நாவல் எதேச்சையாகத்தான் என் கண்ணில் பட்டது. 508 பக்கங்கள் கொண்ட இந்த நாவலின் (1990 ஆம் ஆண்டில் வெளியான) இரண்டாவது பதிப்பின் விலை 32 ரூபாய் எனும் முதல் அதிர்ச்சியில் இருந்து மீண்டு வரவே  எனக்கு கொஞ்ச காலம் பிடித்தது.


24 Aug 2012

பால்யகால சகி- வைக்கம் முகம்மது பஷீர்



பால்ய பருவத்து காதலின் நினைவுகள் முளைவிடாத களை விதைகள். சடாரென்று உடலெங்கும் பரவி மயிர்கால்களை சிலிர்க்கச் செய்யும், எதிர்பாரா கணத்தில் தோற்றம் கொள்ளும் அந்த பால்ய கால நினைவுகள் உக்கிரமானவை. கண்களை இறுக்கிப் பூட்டி, நினைவுக் கம்பளத்தால் நம்மைப் போர்த்தும் வெம்மை மிகுந்த அந்தத் தருணங்கள் வலிமையானவை, வழிந்தோடும் தூரத்து குழலோசையைப்  போல் காற்றில் அளையும் மென் சுகந்தமாய் நம்மை சுற்றிச் சுழலும் அதன் நினைவுச் சுருள்கள். சுகந்தமும், இசையும், இன்பமும் மெல்ல இறந்து, காட்டு விலங்கின் தொலைதூர  ஓலத்தின் தொடர் எதிரொலி போல் நினைவுகளின் வலியில் மனம் மீண்டும் மீண்டும் அதிரும். முதுகுத் தண்டின் வேரில் ஒரு குளிர்ந்த சிலிர்ப்பாய் குபுக்கென்று வியர்த்து விழிக்கும் நிகழ் காலம், ஒரு குரூர கனவாக. மனம் தரிசாகும்போது அந்த விதைகளின் முனைகளில் துளிர்ந்த  பசுங்கனவுகள் இதயத்தைத் தைக்கும் கூர் அம்புகளாகி மனம் முழுவதையும் துளைக்கின்றன.


10 Aug 2012

காந்தியை அறிதல்- தரம்பால்



‘என் வாழ்க்கையே எனது செய்தி’ - காந்தியின் இந்த ஒற்றை வரி எனக்கு கொடுத்த  அலைக்கழிப்பும் தொந்தரவும் கொஞ்சநஞ்சம் அல்ல.  தலையில் களிமண் பற்றுடன் பிரிட்டிஷ் வைஸ்ராயை சந்திக்கச் செல்லும் திமிரின் குரல் அல்லவா அது!  தன் வாழ்வைப் பற்றி துல்லியமாக மதிப்பிட முடிந்த  மனிதனால் மட்டுமே இப்படியொரு அறைகூவல் விடுத்திருக்க முடியும். மனம் பாதி உணர்ந்தும் உணராத அனுபவ ரகசியங்களின் நெரிசலில் சிக்கி  மூச்சுத் திணறி,  சுயத்தை இருளுக்குள் புதைத்துக் கொள்ளும் என்போன்ற ஒருவனுக்கு இப்படியொரு  அறைகூவல் விடுக்கும் வாய்ப்பும் துணிவும்  வாழ்வில் ஒருமுறையேனும் வாய்க்குமா?

Related Posts Plugin for WordPress, Blogger...