பதிவர் - கடலூர் சீனு
தமிழில் இப்போது காந்தியை அறிந்து கொள்ளச் செறிவான பல நூல்கள் வந்து கொண்டிருக்கின்றன . தவறவிடக்கூடாத நூல்களென லூயி ஃபிஷெர் எழுதிய 'நான் கண்ட காந்தி' [தமிழில் தி.ஜ.ரா., சித்தக்கடல் பதிப்பகம்], 'காந்தியின் இறுதி 200 நாட்கள்' [பாரதி புத்தகாலயம்] ஆகியவற்றை குறிப்பிடலாம். முந்திய நூல் காந்தி எனும் பேராற்றலின் வாழ்வை நமக்கு அண்மையாக்கும். பிந்தையது சமூக வாழ்வெனும் அறிய இயலா பெரும்புதிர்முன் தனது ஆத்மீக நம்பிக்கைகள் சிதறி, சரிவின் இருட்குகைக்குள் சென்று மறையும் மகாத்மாவைப் பின்தொடரும்.
காந்தி குறித்து தமிழில் இனி எத்தனை நூல்கள் வந்தாலும் அவற்றுடன் தவறாமல் இணைத்து வாசிக்கப்பட வேண்டிய நூல் தி.செ.சௌ. ராஜன் எழுதிய 'தமிழ்நாட்டில் காந்தி''. 1934, பிப்ரவரி 23 முதல் மார்ச் 22 வரை தமிழ்நாட்டில் ஒருமாத காலம் சுற்றுப்பயணம் செய்து 120 மேடைகள் வழியே தீண்டாமை ஒழிப்பு பிரச்சாரத்தில் ஈடுபட்டு, அதனுடன் ஹரிஜன சேவா நிதி, பிஹார் நிலநடுக்க நிதி சேகரித்தார் காந்தி. காந்தியின் மேடை உரைகளுக்கு மொழிபெயர்ப்பாளராக செயல்பட்டு அவருடன் பயணித்த ராஜன், காந்தியின் தமிழக பயணத்தைப் பற்றி எழுதிய குறிப்புகள் அடங்கியதே இந்நூல்.