A.J.Cronin A.K.Ramanujan Amartya Sen Andrea Maria Schenkel Anton Chekhov Arthur Hailey Bill Bryson Deborah Eisenberg Elizabeth Kostova Gay Neck Geoff Dyer George Orwell Harper Lee Henning Mankell Ian McEwan Jared Diamond Jilly Cooper Jonathan Livingstone Seagull Joseph Heller Kenneth Anderson Kiran Desai Maugham Michael McCarthy O.Henry Orhan Pamuk P.G.Wodehouse PB.ஸ்ரீனிவாஸ் R.K.Narayan Richard Bach Ronald Wilks Stephen King Swami Tejomayananda Upamanyu Chatterjee William Sydney porter dhan gopal mukerji mark tully okakura kakuzo saggi steven weinberg vikram seth ஃபெயின்மன் அ. முத்துலிங்கம் அ.கா.பெருமாள் அகிலன் அசோகமித்திரன் அனார் அறிஞர் அண்ணா அறுசுவை அரசு நடராஜன் அழகியசிங்கர் ஆ. சிதம்பரகுற்றாலம் ஆதவன் ஆர்.கே.நாராயண் ஆர்.ஷண்முகசுந்தரம் ஆஸ்கார் ஒயில்டு இடாலோ கால்வினோ இந்திரா பார்த்தசாரதி இந்துமதி இரா. நாறும்பூநாதன் இரா.நடராசன் இரா.முருகன் இரா.முருகவேள் இலக்கிய வீதி இனியவன் இலவச கொத்தனார் உமா சம்பத் என்.சொக்கன் என்.ராமதுரை எம் கோபாலகிருஷ்ணன் எம். வி. வெங்கட்ராம் எர்னெஸ்ட் ஹெமிங்வே எஸ். ராமகிருஷ்ணன் எஸ்.சந்திரமௌலி ஏ.கே.ராமானுஜன் ஏ.கோபண்ணா ஒல்கா பெரோவ்ஸ்கயா க.நா.சு கண்மணி குணசேகரன கரிச்சான் குஞ்சு கலாப்ரியா காப்கா காலபைரவன் கி. ராஜநாராயணன் குமரி எஸ்.நீலகண்டன் குல்தீப் நய்யார் கே நெக் கோபிநாத் கோபுலு சந்திரசேகர சர்மா சமஸ் சல்மான் ரஷ்டி சா. கந்தசாமி சா.பாலுசாமி சாருநிவேதிதா சாலீம் அலி சி.சரவணகார்த்திகேயன் சி.சு.செல்லப்பா சிபி.கே.சாலமன் சு. வேணுகோபால் சுகுமாரன் சுஜாதா சுந்தர ராமசாமி சுனில் ஜோகி சுப்புடு சுவாமி விவேகானந்தர் செல்லம்மா பாரதி செள.ராஜன் சே. இரகுராமன் சோம.வள்ளியப்பன் ஜனனி ரமேஷ் ஜான் பான்வில் ஜி.நாகராஜன் ஜிம் கார்பெட் ஜெயகாந்தன் ஜெயமோகன் ஜே. ஹெச். வில்லியம்ஸ் ஜோதிநரசிம்மன் டாக்டர். சு.முத்து செல்லக்குமார் டாக்டர். பி.எம்.ஹெக்டே டாக்டர்.எல்.மகாதேவன் தமிழ் மகன் தரம்பால் தி. ஜானகிராமன் தி.ஜானகிராமன் தியடோர் பாஸ்கர் து.கணேசன் ந.பிச்சமூர்த்தி நகுலன் நடிகர் சிவகுமார் நமீதா தேவிதயாள் நா.முத்துக்குமார் நாகம்மாள் நாகூர் ரூமி நாஞ்சில் நாடன் ப. சிங்காரம் பல்லவி அய்யர் பழ.அதியமான் பழ.கருப்பையா பவன் வர்மா பவா செல்லதுரை பஷீர் பா.ராகவன் பாம்பே ஜெயஸ்ரீ பாரதியார் பாலகுமாரன் பாலச்சந்திரன் சுள்ளிக்காடு பாலு மகேந்திரா பாவண்ணன் பி.எச்.டேனியல் பி.எம்.சுந்தரம் பி.ஏ.கிருஷ்ணன் பி.வி.ராமஸ்வாமி பிரமிள் பெஞ்சமின் ப்ளாக் பெருமாள் முருகன் பொ.கருணாகரமூர்த்தி மகாகவி பாரதியார் மதன் மனுஷ்யபுத்திரன் மருதன் மலர்மன்னன் மா.கிருஷ்ணன் மார்க்வெஸ் மாஸ்தி மில்லி போலக் முகில் முஹமது யூனுஸ் யதுகிரி அம்மாள் யுவன் சந்திரசேகர் ரகோத்தமன் ரமணி சந்திரன் ரா.கி.ரங்கராஜன் ராஜாஜி லலிதாராம் லா.ச.ரா லிவிங்ஸ்மைல் வித்யா லூசியன் ஸ்ட்ரைக் லெமூர் வ.ரா வண்ணதாசன் வா.மு கோமு வாலி விட்டல் ராவ் வின்சென்ட் ஷீன் விளதீமிர் பகமோலவ் வீயெஸ்வி வுடி ஆலன் வெரியர் எல்வின் வேதவல்லி வைக்கம் முகமது பஷீர் வைணவச் சுடராழி ஆ. எதிராஜன் வைரமுத்து ஷோபா சக்தி ஹென்னிங் மான்கெல்
Showing posts with label கிரி ராமசுப்ரமணியன். Show all posts
Showing posts with label கிரி ராமசுப்ரமணியன். Show all posts

9 Jun 2013

ஆன்மிக ஸ்வீட் ஸ்டால் - பிரபு சங்கர்


ஆம்னிபஸ் வரலாறில் மிக முக்கியமான வாரம் இது; குறிப்பாக எனக்கு. கர்மசிரத்தையாக கடிவாளம் கட்டினாற்போல் புத்தகங்களைப் பரிந்துரை செய்து கொண்டிருந்த நாங்கள், இந்த வாரத்தில் குழந்தைகளுக்குக் கதை சொல்லும் விதம், அந்த அனுபவங்கள், அதற்கு உதவிய புத்தகங்கள் குறித்துப் பேசிக் கொண்டிருக்கிறோம்.

"டிவி பாத்துக்கிட்டே குழந்தைகள் தூங்கி விழுகிற நாட்டில் இப்படியும் ஒரு அம்மா" என்று தியானா எழுதிய பதிவைப் பற்றி குறிப்பிட்டார் நண்பர். எங்கள் வீட்டுச் சுட்டி சிலநேரங்களில் இப்படித்தான் இருக்கிறான் என்பதால், “பளார், பளார்” ஓசைகள் அவர் சொன்னதைப் படித்ததும் பின்னணியில் எனக்குக் கேட்டது.

லேனா தமிழ்வாணனிடம் அவர் எழுதிய “ஒரு பக்கக் கட்டுரைகள்” குறித்து ஒருவர் கேட்டாராம், ஒரு பக்கக் கட்டுரைகள் எழுதி அறிவுரையா சொல்லித் தள்ளறீங்களே, யாராவது ஒருத்தராவது இதனால கொஞ்சமாவது மாறியிருக்காங்களா?”, 

லேனா கூலாக  “கண்டிப்பா, நான் நிறைய மாறியிருக்கேனே”, என்றாராம்.

இதை இங்கே நான் குறிப்பிடும் காரணம், எங்கள் வீட்டுச் சுட்டி இப்போதுதான் நாங்கள் சொல்வதைக் கேட்டுப் புரிந்து கொள்ளும் கட்டத்திற்கு வந்திருக்கிறான். ஆகவே, இனி கதை சொல்லிகளாக நானும் என் மனைவியும் மாறும் அவசியத்தை நிறையவே உணர்த்துகிறது இந்த வாரத்து ”பெற்றோர் - குழந்தைகள்” பதிவுகள். ஆக, இந்த சிறப்பு வாரம் யாருக்கு உதவியதோ இல்லையோ, எனக்கு நிறையவே உதவியிருக்கிறது. அதற்காக, இந்த சிறப்பு வாரக் கொண்டாட்டத்தின் ஒருங்கிணைப்பாளர் எங்கள் ஆம்னிபஸ் சங்கத்து சிங்கம் அண்ணன் நடராஜனுக்கு நன்றிக்கு உரியவன் ஆகிறேன்.

இந்த வாரத்துப் பதிவுகள் வாயிலாக குழந்தைகளுக்குக் கதை சொல்லும் முறை சார்ந்த சூட்சுமங்களை நான் நிறையவே கற்றுக் கொண்டேன் எனலாம். கூடவே, புத்தகப் பரிந்துரைகளும் கிடைத்தன. நம் குழந்தைகளை எப்படிப் புத்தகப் பித்தர்களாக உருவாக்குவது என்பது குறித்துப் பேசிய என்.சொக்கனின் பதிவு இந்த வாரத்தின் இன்னொரு ஹைலைட்.

என் பிள்ளைப் பருவத்தில் எனக்கு தாத்தா, பாட்டி கதை சொல்லியதில்லை. அம்மா, அப்பா கதை சொல்லிய நினைவில்லை. பாட்டி வீட்டிலும் சரி, எங்கள் வீட்டிலும் சரி எப்போதும் வீடெங்கும் புத்தகங்கள் நிறைந்து கிடக்கும். எல்லா வயதினருக்கும் புத்தகங்கள் உண்டு. வாண்டுமாமாவும் இருப்பார், ராஜேந்திரகுமாரும் இருப்பார். பூந்தளிரும் இருக்கும், புஷ்பா தங்கதுரை நாவலும் இருக்கும். 

மூணாப்பு படிக்கும்போதே ராணிகாமிக்ஸ், கோகுலம், பூந்தளிர், அம்புலிமாமா, பாலமித்ரா என்று எல்லா புத்தகங்களும் நமக்குக் கிடைத்துவிடும். எனவே நினைவு தெரிந்து கதை கேட்டு வளர்ந்ததை விட கதை படித்தே வளர்ந்தோம் எனலாம் (என்னே பெருமை என்னே பெருமை. ஓகே ஓகே).

மூன்று வயது அகில் இப்போது எது யானை எது பூனை என்று கண்டறியும் புத்தகங்களைத்தான் கிழித்துக் கொண்டிருக்கிறான்.  மேலே நான் சொன்னவைகளுள் கோகுலம் தவிர்த்து மீதமிருக்கும் புத்தகங்கள் இப்பவும் வருகின்றனவா எனத் தெரியவில்லை. எனவே, எனிவே... அந்தப் புத்தகங்களைத் தேட இன்னும் குறைந்தது நான்கு வருடங்களேனும் இருக்கிறது என்பதால் இப்போதைக்கு நாம் படித்து அவனுக்குச் சொல்லத்தக்க புத்தகம் ஏதும் தேடுவோம் என்று தேடியதில் ‘கிழக்கில்’ அகப்பட்டது ‘ஆன்மிக ஸ்வீட் ஸ்டால்’ எனும் இந்தப் புத்தகம். 

இரண்டு பக்கத்துக்கு ஒரு கதை என்று நூற்று நாற்பத்து சொச்ச பக்கங்களில் சுமார் எழுபது கதைகள். குமுதம் பக்தி ஸ்பெஷல் இதழில் ரெகுலராக எழுதும் பிரபு சங்கர் கைவண்ணத்தில் தொகுக்கப்பட்டவை இக்கதைகள். ஒவ்வொரு கதை முடிவிலும் ஒரு நீதி. உம்: “இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடத்தில் தேடாதே, ஏற்றுக் கொண்ட கடமையை செவ்வனே செய்”. 

நாம் நம் வயதுக்கு இந்தப் புத்தகத்தைப் படித்தால், “வாட் எ சில்லி புக் மேன்” என்றுகூட தோன்றலாம். எனினும் நிதானமாகப் படித்தால் இதிலுள்ள கதைகள் பெரும்பாலும் குழந்தைகளுக்கு அழகான நீதி சொல்லும் கதைகள். 

நாம் காலப்போக்கில் மறந்து போன நீதிக் கதைகள் இதில் நிறைய. சில கதைகள் பெரிய குழந்தைகளுக்குப் பொருந்தும். இடையிடையே குட்டிச் சுட்டிகளுக்கும் சொல்லவல்ல கதைகள் உண்டு. சாய்ஸ் ஈஸ் யுவர்ஸ்.

இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான வீடுகளில் பொருள் தேடும் ஓட்டத்தில் பெற்றோர் இருவரும் இரு திசைகளில் ஓடிக்கொண்டிருக்க நம் குழந்தைகளுக்கு நீதிக்கதைகளைச் சொல்ல இங்கே யாரும் இல்லை. அதனால் தொலைக்காட்சி குழந்தைகளுக்கு இங்கே முக்கிய கம்பானியன் ஆகிப்போகிறது.

கீழே நான் கொடுத்திருக்கும் இரண்டு திரைப்படம் சார்ந்த கதைகளுக்கும் அடிப்படை நாம் எல்லோரும் பெரும்பாலும் அறிந்த நீதிக்கதைகளே.  

முதல் கதை:

நண்பரின் வீட்டிற்குப் போயிருந்தேன். ஏதோவொரு நகைச்சுவை தொலைக்காட்சியில் வடிவேலு தோன்றினார்.

வடிவேலு டீக்கடை ஒன்றில் செய்தித்தாள் வாசித்துக் கொண்டிருப்பார். அவரிடம் அடுத்தவர் “உனக்கு ஜார்ஜ் புஷ் தெரியுமா, பில் கேட்ஸ் தெரியுமா, பின்லேடன் தெரியுமா என்று உலகப் பிரபலங்கள் குறித்து கேட்பார். இவர் தெரியாது, தெரியாது, தெரியாது என்று சொல்ல; எதையும் தெரியாத முட்டாளா இருக்கியே என்று அடுத்தவர் வடிவேலுவைக் கிண்டலடிப்பார்.

“உனக்கு முனுசாமியைத் தெரியுமா?”

“தெரியாது. யார் அந்த முனுசாமி?”

வடிவேலு வாயைத் திறக்குமுன் நண்பரின் ஐந்து வயது அக்கா மகன், “அவன்தாண்டா உன் பொண்டாட்டியை வெச்சுட்டு இருக்கான்”, என்றான்.

வீடே விழுந்து விழுந்து சிரித்தது, நானும்தான்.

கதை இரண்டு:

”ரன்” திரைப்படத்தில் சிறுநகரம் ஒன்றில் தன் அப்பாவை எல்லா விதத்திலும் அவமானம் செய்துவிட்டு, பிழைப்பு தேடி சென்னைக்கு வருகிறார் விவேக். இந்தப் பெருநகரம் அவரை எல்லா விதத்திலும் வஞ்சிக்கிறது; அவரை கோவணத்தோடு சாலையோரத்திற்குத் தள்ளுகிறது. அவர் சந்திக்கும் ஒவ்வொரு ஏமாற்றமும் சிரிப்புத் தோரணம் கட்டப்பட்டு, நகைச்சுவையாகக் காட்டப்படுகிறது. கவனிக்கத்தக்க பன்ச் டயலாகுகள் அங்கங்கே (உம்.: காக்காக் கறி துன்னா காக்கா மாதிரி கொரல் வராம உன்னீகிர்ஸ்னன் போலவா வரும்?). 

கடைசியில் தன்னிடம் மிஞ்சும் கோவணத்துடன் சாலையோர சாமியார் அவதாரம் எடுக்கிறார் விவேக். "அப்பா பேச்சைக் கேளு; அம்மாதான் எல்லாம்" என்று அருளுரை வழங்கிக் கொண்டு பக்தகோடிகள் மீது விபூதி வீசுகிறார் என அவரது கதை நிறைகிறது.

இந்த இரண்டு காமெடிக் காட்சிகளிலுமே நம் குழந்தைகள் நீதியை விட்டுவிட்டு பன்ச் டயலாகுகளை மட்டும் நினைவில் வைத்திருப்பதுதான் இன்றைய உச்சபட்சக் கொடூரம்.

சரி, அது ஒரு பக்கம் கிடக்கட்டும். அந்த இரண்டு காமெடி சீக்வென்ஸ்களுக்கும் உரிய ஒரிஜினல் நீதிக்கதையை உங்களால் கண்டறிய முடிந்ததா? 

ஆன்மிக ஸ்வீட் ஸ்டால் | பிரபு சங்கர் | கிழக்கு | 144 பக்கங்கள் | விலை ரூ.60/- 

31 May 2013

வாழ்விலே ஒரு முறை - ஜெயமோகன்

’இந்நூலைத் தொடுபவன் என்னைத் தொடுகிறான்’ என்றார் ஓர் எழுத்தாளர் . இச்சிறு நூலைப் பற்றி அதைச் சொல்லத் துணிவேன் - முன்னுரையில் ஜெயமோகன்
நனவிடைதோய்தல் என்ற வார்த்தையை சில மாதங்களுக்கு முன்புதான் கேள்வியுற்றேன். Nostolgia என்பார்கள் ஆங்கிலத்தில். பழைய நினைவுகளை அல்லது அனுபவங்களை அசைபோடுதல். சினிமாவில் கொசுவத்தி சுழற்றுவார்கள். தூர்தர்ஷனில் மலரும் நினைவுகள் என்று சொல்லுவார்கள். பொதுஜன உதாரணம் என்றால் சுஜாதாவின் ”ஸ்ரீரங்கத்துத் தேவதைகள்” ஒரு நல்ல உதாரணமாகச் சொல்லலாம்.

நனவிடைதோய்தல் எழுதுதல் தனிக்கலை. அது எல்லோருக்கும் நன்றாக வாய்த்துவிடுவதில்லை. இது எல்லோருக்கும் சாத்தியம்தான். எழுத்து சாத்தியப்படுபவனுக்கு மட்டும் தனிரூட்டிலா வாழ்க்கை நடக்கிறது? தத்தமது தோழமை வட்டத்தில் விழிவிரியப் பகிருவதுடன் நிறைந்து போகின்றது இங்கே பலரது நனவிடைதோய்தல்கள். எழுத வாய்த்தவன் வார்த்தைகளில் அதைக் கொஞ்சம் தன் சரக்கையும் சேர்த்துவிட்டுத் தோய்த்துவிட முடிகிறது.



19 May 2013

கவிழ்ந்த காணிக்கை - பாலகுமாரன்


சினிமாவாக எடுத்தால் கௌரவம் படத்தின் பழிவாங்கும் படலம் இல்லாத இரண்டாம் பாதிதான் ‘கவிழ்ந்த காணிக்கை’. அப்பாவிடம் சவால் விட்டு ஜெயிக்கும் சின்னஞ்சிறு பிள்ளைக் கதைதான் என்றாலும் சிவாஜி போல கண்கள் சிவக்க, கன்னக்கதுப்புகள் அதிர சவால் விடும் அப்பாவெல்லாம் இல்லை ஆதிச்சப் பெருந்தச்சன். சுருள்முடியைச் சுற்றிக் கொண்டு கண்களால் சவால் விடும் இன்னொரு சிவாஜியும் இல்லை மகனான சோமதேவன்.  தஞ்சை பெரிய கோயில் கட்டுமானம் நிகழும் ராஜராஜசோழனின் வரலாற்றுக் காலகட்டத்தில் நடக்கிறது கதை. 

தஞ்சைப் பகுதியானது பாறைகளின் பிரதேசமன்று. தமிழகத்தின் பிற பகுதிகளிலிருந்து பாறைகள் தருவிக்கப்பட்டு உலகின் தன்னிகரற்ற அந்தப் ”பெரிய” கோயில் கட்டப்பட்டது என்பது ஒரு ஆச்சர்யமான வரலாறு.

விழுப்புரம் மாவட்டத்தில் புதுவைக்கு அருகே ‘திருவக்கரை’ என்னும் சிவத்தலம் உண்டு. வக்ரகாளியம்மன் திருக்கோயில் இந்தத் தலத்தின் பெருஞ்சிறப்பு. நம்மூர் பக்தி சிகாமணிகள் பெரும்பாலானவர்கள் இந்த ஊரில் நிச்சயம் கால் பதித்திருப்பார்கள். நானும் சமீபத்தில் இங்கே சென்று வந்தேன். நம் ஆன்மிக அன்பர்கள் பெரும்பாலானோர் அறியாத மற்றுமோர் சிறப்பு இந்த ஊருக்கு உண்டு. ”திருவக்கரையில் கிடைக்கும் பாறைகள் போல் உலகில் வேறெங்கும் கிடைக்காது”, என்பதுதான் அது. 

திருவக்கரை ஆதிச்சப் பெருந்தச்சனைத் தேடி ராஜராஜன் வருகிறான். பெரிய கோயில் லிங்கமும், நந்தியும் திருவக்கரையில் வடிக்கப்பட வேண்டும் என்பது அவன் வேண்டுகோள். பெருந்தச்சன் அதை ஏற்கிறார். நந்தீஸ்வரரின் வருகைக்குப் பிறகே லிங்கம் எந்தக் கோயிலுக்குள்ளும் புகவேண்டும் என்பது விதி.  சம்பிரதாய தோஷமாக முதலில் பெருவுடையார் தஞ்சை புகுகிறார். 

அடுத்ததாக பெரிய நந்தியின்  பிரயாணத்தின் போது நிகழும் சவாலும் ஆதிச்சப் பெருந்தச்சனின் தலைகுனிவும், நந்தீஸ்வரரின் பயண mission failiure'மே மிச்சக் கதை.

பாலகுமாரனின் எழுத்து லாவகத்தைத் தனியே குறிப்பிடும் அவசியம் இல்லை. கதைக்குள்ளே நம்மை அநாயசமாக அழைத்துச் சென்றுவிடுகிறார். தஞ்சைக் கோயிலோடு நெருங்கிய தொடர்புடைய திருவக்கரை பற்றி பாலகுமாரன் எழுதியிருக்கிறார். திருவக்கரை வரலாறை வேறு யாரும் எங்கும் எழுதியிருக்கிறார்களா எனத் தெரியவில்லை (லலிதாராமிடம் கேட்கலாம்?).


கார்ட்டூனிஸ்ட் மதன் விகடனின் இணை ஆசிரியர் பதவியைத் துறந்த காலகட்டத்தில் என்று நினைவு.... அப்போது “விண் நாயகன்” என்றொரு மாதமிருமுறை இதழ் வெளிவரத் தொடங்கியது. ஒன்றிரண்டு வருடங்கள் வந்தபின் நின்றுபோன இதழ் அது. தொடங்கிய புதிதில் மதன், சுஜாதா, பாலகுமாரன் என்று ஃப்ரண்ட்லைன் பிரபலங்கள் எழுத்துகள் மிளிர்ந்த இதழ் அது. 

காதல் பற்றிய தொடரை மதன் எழுதினார்; கடவுள் பற்றி சுஜாதா எழுத; இந்த வரலாற்று நிகழ்வை ஒட்டிய இந்தக் குறுந்தொடரை பாலகுமாரன் எழுதினார்.  அப்போது அந்த மூன்று தொடர்களையும் அந்த காலகட்டத்தினையொட்டிய ஆர்வக்கோளாறுடன் கத்தரித்து எடுத்து வைத்து, நம் வாழ்க்கையின் எல்லா கட்டங்களிலும் தொடரும் சோம்பேறித்தனத்தினையொட்டி இன்றுவரை பைண்ட் பண்ணாமல் வைத்திருக்கிறேன்.

சொக்கனின் ‘மென்கலைகள்’ புத்தகத்தின் “நூறு போதும்” படித்துவிட்டுப் பரணைக் குடாய்ந்து கொண்டிருந்த போது இந்த கத்தரிப்புகள் கண்ணில் ஆப்ட.... கடவுளையும், காணிக்கையையும் மறுவாசிப்பு செய்ய நேர்ந்தது.

திருவக்கரை சென்று வந்தபின் நான் எழுதிய பதிவில் இந்தத் தகவலைப் பகிர்ந்திருந்தேன்; இந்தப் புகைப்படத்துடன்...

கோயிலின் பின்னணியில் இந்த மலை தென்பட்டது. உடைந்த கற்குவியல்களாலான ஒரு மலை. அதென்ன என்று விசாரித்தபோதுதான் தெரிந்தது அது பக்கத்தில் கல்குவாரிகளில் உடைபடும் பெரிய கற்களிலிருந்து சிதறும் சிறிய (தேவையற்ற) கற்களின் குவியல் என்று. கர்மசிரத்தையாக அது ஒரு மலையாக உருவாகி நிற்கிறது.

”கவிழ்ந்த காணிக்கை” அப்போது வாசித்தபோது மனதில் பதியாத ‘திருவக்கரை’ இப்போது பழகிவிட்ட தலமாகி நிற்கிறது. இப்போது மறு வாசிப்பு செய்தபின், “அடடா! அந்த ஊரில் ஏதேனும் ஒரு பாறைக் கொல்லைக்கு விசிட் அடிக்காமல் வந்துவிட்டோமே” என்று நினைத்துக் கொண்டேன்.

’கவிழ்ந்த காணிக்கை” - பெருநாவலாக வந்திருக்க வேண்டியதை எழுத்துச் சித்தர் குறுநாவலாக வடித்திருக்கிறார் என்றே சொல்ல வேண்டும். முழு நாவலுக்கான அத்தனை ஸ்கோப்பும் உள்ளதொரு கதைக்களம். விண் நாயகனுக்காய் இந்தக் கருவைத் தாரை வார்க்கத் தலைப்பட்டதால் ”நான்கு அல்லது ஆறு வாரம் வெளிவர்றாப்ல சார், ஒரு குறுநாவல்?”, என்ற வேண்டுகோளுக்கு இந்தக் குறுநாவலை அவசரமாக எழுதித் தந்தாரோ அல்லது வேறு எழுத்துப் பணிகளுக்கிடையே எழுத நேர்ந்ததால் இந்தக் கதையை சுருக்கமாக முடித்துக் கொண்டாரோ, நாம் அறியோம்.

’பொன்னியின் செல்வனு’க்கு கொஞ்சம் எக்ஸ்ட்ரா ஸ்கோப் தந்திருக்கலாம், தஞ்சை பெரிய கோயில் புகழை கொஞ்சம் எக்ஸ்ட்ராவாக பாடியிருக்கலாம், பெருவுடையார் பிரதிஷ்டையைச் சுற்றிய நிகழ்வுகளை அத்தனைச் சுருக்கமாய்ச் சொல்லியிருக்க வேண்டாம் என எனக்கே படிக்கையில் தோன்றும் போது, எழுதும்போது அல்லது எழுதி முடித்தபின் எழுத்துச் சித்தருக்குத் தோன்றாமல் போயிருக்குமா என்ன?

ஓகே... தஞ்சை வரை பயணப்படாத அந்த ‘கவிழ்ந்த காணிக்கை’யான நந்தீஸ்வரர் விழுப்புரம் மாவட்டத்தில் திருவக்கரையிலிருந்து புதுவை செல்லும் வழியில் திருவக்கரை எல்லையில் இன்னமும் கவிழ்ந்த கோலத்தில் காட்சி தருகிறாராம். அந்தப்புறம் செல்பவர்கள் மறக்காமல் தரிசனம் செய்வீராக.

இந்தக் குறுநாவலானது பாலகுமாரனின் ஏதோவொரு புத்தகத் தொகுப்பில் வெளிவந்துள்ளது. அந்தத் தகவல் தெரிந்த பாலகுமார ரசிக அன்பர்கள் அந்தத் தகவலை இங்கே பின்னூட்டமாய்க் குறிப்பிட்டால் இந்தப் பதிவைப் படிக்கும் பிற பாலகுமார கண்மணிகள் பயன் பெறுவார்கள். 

அப்படி எங்கும் இந்தக் குறுநாவலின் வடிவம் கிடைக்காத பட்சத்தில்.... ....இந்தக் குறுநாவலின் தட்டச்சு வடிவம் வேண்டுவோர் எனக்கு மின்னஞ்சல் அனுப்பினால் ( rsgiri @ gmail ) அவர்களுக்கு மின்னஞ்சலில் குறுநாவலை அனுப்பி வைக்கிறேன் (என் பதில் அஞ்சலின் வேகம் என் சோம்பேறித்தனத்தின் வீரியத்தின் அளவைப் பொறுத்தது என்பதை மனதில் கொள்ளவும்). 

கவிழ்ந்த காணிக்கை | பாலகுமாரன் | குறுநாவல் | வரலாறு


30 Apr 2013

தென்னை வளர்ப்பு - முனைவர் அரு.சோலையப்பன்


நன்றி ஒருவர்க்குச் செய்தக்கால் அந்நன்றி 
என்று தருங்கோல் என வேண்டா 
நின்று தளரா வளர்தெங்கு தாளுண்ட நீரைத் 
தலையாலே தான்தருத லால்
-ஔவையார்


இப்போதைய எங்கள் வீட்டின் பக்கத்து மனையில் வளர்ந்திருந்த ஆறு தென்னை மரங்கள் சென்ற மாதம் வேரோடு சாய்க்கப்பட்டன. புதிதாக அங்கே வீடு முளைக்கிறது. தென்னையின் இன்மை எங்கள் வீட்டிற்குக் கூடுதலாக வெளிச்சத்தையும், வெப்பத்தையும் கொண்டு சேர்த்திருக்கிறது. எங்கள் வீட்டு பால்கனியும், சுவர்களும் சித்திரை வெயிலை கனஜோராக வாங்கிக் கொள்கின்றன. 

பக்கத்து வீட்டில் ஐம்பது பேருக்கு கனஜோராய் விருந்து தயாராகிக் கொண்டிருந்தது.

காரணம்? கடைசியில் சொல்கிறேனே!

2010’ல் எங்கள் அபார்ட்மெண்ட் கட்டத் துவங்கியபோது அக்கம்பக்கத்தினரைக் கொஞ்சம் கடுப்பேற்றி விட்டுத்தான் கட்டிட வேலைகளை ஆரம்பித்தோம். தனி வீடுகள் மட்டுமே நிறைந்த பகுதியான இங்கே முதல் அபார்ட்மெண்ட் எங்களுடையது. அபார்ட்மெண்ட் கல்ச்சர் என்பது தங்கள் பகுதியில் புகுவதை அவர்கள் விரும்பவில்லையோ என்னவோ? நாங்கள் கட்டத் துவங்கிய பின் கடந்த இரண்டு வருடகாலத்தில் மேலும் ஒருடசன் அபார்ட்மெண்ட்டுகள் எங்கள் பகுதியில் முளைத்துவிட்டது தனி விஷயம். 

“தென்னை மரத்தை விட ஒசரமா வீடு கட்டறேன் பேர்வழின்னு நம்ம வீட்டு தென்னைமரத்துத் தலையையெல்லாம் நறுக்குவாங்க”, பின்பக்க பக்கவாட்டுத் தனிவீடர்கள் எங்களை எதிர்த்ததற்கான தனிக்காரணம் இல்லாமல் இல்லை. அவர்கள் எதிர்பார்ப்பைப் பொய்யாக்காமல் எங்கள் முதல்/இரண்டாம் மாடிகளைப் பதம் பார்த்த தென்னந்தலைகளை நறுக்கத் தலைப்பட்டது.

சாலையோர இளநீர்க் கடைகளில் ஸ்ட்ராவை ‘சுர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்’ என உறிந்தவாறே, “என்னண்ணே! பொள்ளாச்சியா? பாண்டியா?” என்ற கேள்வி கேட்கும் எல்லாந்தெரிந்த ஏகாம்பரம் நாம்.

 “தென்னையப் பெத்தா இளநீரு! பிள்ளையப் பெத்தா கண்ணீரு” என்று அர்த்தம் புரியாத ஒரு வயதில் சிறுதிருட்டு செய்து மாட்டிக் கொண்ட ஒரு பிள்ளையைப் பெற்ற தகப்பன் ஒருத்தருக்குச் சமாதானம் சொன்னதோடு சரி. மற்றபடி, தென்னையின் மகத்துவம் நமக்குப் பெரிசாய் ஒன்றும் தெரியாது. இத்தனைக்கும் மாதவரத்தில் வசித்தபோது ஓங்கி வளர்ந்த அரைடஜன் தென்னை மரங்கள் கொண்ட ஒரு வீட்டில் ஒரு ஐந்து வருடம் குடியிருந்ததும் உண்டு. 

பக்கத்து வீட்டில் தென்னை மரங்களை வெட்டிய அசுபயோக அசுப மாதத்தில் நம் புத்தகக் கூடையில் வழக்கம்போல் தூங்கிக்கிடந்த ”தென்னை வளர்ப்பு” குறித்த இந்தப் புத்தகம் கண்ணில் பட்டது.

முனைவர் அரு.சோலையப்பன் இயற்கை விவசாயத் துறையில் வல்லுனர். விவசாயம் குறித்து நிறைய புத்தகங்கள் படைத்துள்ளார்.  இவரது “விவசாயக் களஞ்சியம்” எனும் நூல் 1984’ஆம் வருடத்தின் ”தமிழ் வளர்ச்சிக்கான சிறந்த நூல்களுக்கான பரிசு” பெற்றது. இவர் செங்கை நகரில் வசிப்பவர். ’கரிம விவசாயக் கட்டமைப்பு” நிறுவனத்தின் தலைவர். இயற்கை விவசாயம் குறித்த மாதாந்திரக் கூட்டங்களை செங்கல்பட்டு நகரைச் சுற்றியுள்ள கிராமங்களில் மாதந்தோறும் நடத்தி வருகிறார்.

என்னைப் போன்ற சாமானியனுக்குத் தெரிந்த தென்னை வளர்ப்பு என்பது சந்தையில் சென்று தென்னை நாற்று ஒன்றை வாங்கி வந்து, குழி தோண்டி, அதிலே அதைப் புதைத்து, எருவிட்டு, நீர்விட்டு, வளர்த்து, அவ்வப்போது பூச்சிக்கொல்லிகளை உபயோகித்து, மரம் வளர்ந்ததும் தேங்காய்களைப் பறித்துக் கொள்வது.  

வீட்டிற்கு வேடிக்கையாய் வளர்த்துக் கொள்ளும் தென்னைக்கு இது சரிதான். வீட்டுக்கு நிழலாச்சு, சட்னிக்கு தேங்காயுமாச்சு, வீட்டுல தேங்காய் முளைக்கல்லியா, கடையில வாங்கிக்கிட்டாப் போச்சு என்று சமாதானமடையும் கோஷ்டி நாம்.

“தென்னை வளர்ப்பு” என்ற இந்தப் புத்தகம் தென்னை வளர்ப்பினை ஒரு விவசாய நோக்குடன் செய்பவர்களுக்கு முக்கிய வழிகாட்டி. சரி, அது எதுக்கு சென்னை போன்ற நகரத்தில் வசிக்கும் நமக்கெல்லாம் தேவை?

தென்னை வளர்ப்பை யார் வேண்டுமானாலும் ஒரு வணிக நோக்கில் தொடங்கலாம் என்பதுதான் பதில். என்ன, அதன் பலன் கிடைக்க வருடங்கள் பலவாகும். எனினும் ஒரு நீண்டகால வைப்புநிதி போல இதனை முயற்சி செய்யலாம் என்றே தோன்றுகிறது. வைப்பு நிதி போல போட்டுவிட்டு மறந்துவிடுதல் அல்ல. ஆரம்பத்தில் நல்ல உழைப்பும் தேவை.

நம் நாட்டில் தென்னிந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும், மகாராஷ்டிரத்திலும் தென்னை வளர்க்கின்றோம் நாம். இருந்தும் தென்னைப் பொருட்களைப் பொருத்தவரையில் நம் தேவைக்கு வெளிநாடுகளிலிருந்தும் இறக்குமதி செய்யும் நிலைமையே இன்னமும் இருக்கின்றதாம். ஆக, தென்னை வளர்ப்பினில் தேவையற்ற பண்டத்தினை நாம் உற்பத்தி செய்யப்போவதில்லை.

சரி, புத்தகத்திலிருந்து சில சுவாரசிய பத்திகள்:

தென்னையின் ஒரு இலை என்பது அதன் ஒற்றை ஓலை அல்ல. ஓலையுடன் சேர்ந்த ஒட்டுமொத்த மட்டையுமேதான்.
பன்னாடை என்ற சொல் தென்னையிலிருந்தே வந்திருக்கிறது. மட்டையையும் தென்னையின் தண்டினையும் இணைக்கும் “கோணித் துணி நெசவு செய்தாற்போல்” தோற்றத்தில் இருக்கும் பகுதியே பன்னாடை. ஆனால், இந்தச் சொல்லை ஏன் திட்டுவதற்குப் பயன்படுத்துகிறோம்? <உபயம்: பிரகாஷ்ராஜ் - கல்கி திரைப்படம் >
செந்தில் கவுண்டமணியிடம், “அண்ணே! இது என்ன?”, “தேங்கா”, “இதுக்கு முன்ன?” “அங்ங்ங்ங்ங்”, என்பார் கவுண்டமணி. அந்த நகைச்சுவையின் லாஜிக்கே தப்பு என்பது நம் எல்லோருக்கும் புரியும். தேங்காய்க்கு முன் இளநீர் என்பது சிம்பிளான பதில் இல்லையா?
தேங்காய் என்பது காய் அல்ல பழமாம். இளநீரே தென்னையின் காய். தேங்காய் என்று நாம் அழைப்பதை தென்னம்பழம் என்றே அழைக்க வேண்டுமாம். என்ன, பழத்தை நாம் தின்பதில்லை அதன் கொட்டையைத் தின்கிறோம்.
பொதுவாக தென்னைக்குக் கிளைகள் கிடையாது எனினும், சிலவகை அபூர்வத் தென்னை வகைகளில் கிளை உண்டாம்.
தென்னையில் நெட்டை, குட்டை என்று இருவகைகள் உண்டு. நெட்டை அறுபது அடிவரை வளரும். குட்டை இருபது அடிக்கு மேல் போவதில்லை. நெட்டை மரம் நட்ட பன்னிரண்டாம் வருடம்தான் காய்க்கத் துவங்கும். குட்டை நான்காம் வருடமே காய்க்கத் துவங்கிவிடும். குட்டையின் வாழ்க்கை முப்பது வருடகாலம். நெட்டை நூறுவருடங்கள் வாழும். நெட்டைக்கே விவசாயிகளிடையே மவுசு அதிகம். காரணம், நெட்டையின் தேங்காய்களும் கொப்பரைகளுமே தரத்தில் உயர்ந்தவை.
 
பன்னாடை

புத்தகத்தில் விதைக்காய் தேர்வு குறித்த பக்கங்களை தென்னை வளர்க்க விரும்புபவர்கள் எல்லோரும் அவசியம் வாசிக்க வேண்டும்:

தென்னை உற்பத்தியின் வெற்றிக்கான முக்கிய பங்கு அதன் விதைக்காய் தேர்வில்தான் இருக்கிறது.
நன்றாக முற்றிய தேங்காயை நெற்று என்பார்கள். இந்த நெற்றுகள்தான் நல்ல விதைகள் ஆக முடியும்.
அதிக வயதாகாத மரங்களிலிருந்து நெற்றுக்காய்கள் தேர்ந்தெடுக்கக்கூடாது.
நெற்று மரத்திலேயே முற்றுதல் நலம். ஆனால், முற்றிய நெற்று தானாக தரையில் வீழ்ந்ததாக இருக்கக்கூடாது.

“நாற்றங்கால்” - இந்த வார்த்தை நினைவிருக்கிறதா? வீடும் வயலும், வயலும் வாழ்வும் போன்ற ரேடியோ, டிவி நிகழ்ச்சிகளைக் கேட்ட, பார்த்தவர்களுக்கு இந்த வார்த்தை பரிச்சயமாயிருக்கலாம். நெற்றிலிருந்து செடியை முளைவிடச் செய்யும் வேலை இது எனலாம். இந்த ப்ராஸசுக்குப் பிறகே கன்று நடுதல்.

நாற்றங்கால் பொதுவாக முழுநேர விவசாயிகளுக்கும் தென்னங்கன்று விற்கும் நோக்குடன் இருப்பவர்களுக்காக. வீட்டில் தென்னை வளர்ப்பவர்கள் யாரும் இதை முயற்சிப்பார்கள் எனத் தோன்றவில்லை. சொல்வதற்கில்லை, தென்னைக்குப் பெயர் போன கேரள நாட்டில் இதுவும் நடக்கலாம்.


இதுவரை நான் சொன்னது புத்தகத்தின் முதற்பாதிதான். தென்னங்கன்றுகளை நடுதல் அடுத்த வேலை. நட்டதைப் பராமரித்தல், உரமிடுதல், நீர்பாய்ச்சி வளர்த்தல், பூச்சித் தாக்குதல்களிலிருந்து காத்தல், அறுவடை என புத்தகத்தின் மறுபாதி. அவற்றைச் சுருக்கமாக வாசிப்பதைவிட, தென்னை வளர்க்க விரும்புபவர்கள் அருணோதயம் பதிப்பகத்தில் இந்தப் புத்தகத்தை வாங்கி அவசியம் அந்த மறுபாதியை வாசித்துப் பயன்பெறுவீர்.

உச்சிமுதல் பாதம் வரை பயன்தரும் மரம் என வாழைமரத்தைக் கூறுவார்கள். தென்னையின் பயன்களைப் படித்தால் தென்னை என்பது பயன் விஷயத்தில் வாழைக்குப் பெரியப்பா எனத் தெரிகிறது. ஓலை, பதநீர், கள், இளநீர், தேங்காய், கொப்பரை, பன்னாடை, நார், மட்டை (இன்னமும் இன்னமும்) என தென்னையில் எல்லாமுமே பயன் தருவன. 

வேறு மரக்கன்றுகளுக்கு இல்லாத பெருமை தென்னைக்கு உண்டு. தென்னங்கன்றினை தென்னம்பிள்ளை என்று அழைக்கிறோம். காரணம் தென்னை என்பது நம் பாரம்பரியத்தில் ஒரு குடும்ப அங்கமாகக் கருதப்படுகிறது. 

பிள்ளைக்கு நிகரான தென்னையை அகற்ற நேர்ந்ததால்தான், அதற்குப் பரிகாரமாக ஐம்பது பேருக்குப் போஜனம் பரிமாறினர் எங்கள் பக்கத்து வீட்டில்.

தென்னை வளர்ப்பு - முனைவர் அரு.சோலையப்பன். பக்கங்கள்: 104, விலை ரூ. 25/- (2005 பதிப்பு), அருணோதயம் பதிப்பகம் ராயப்பேட்டை, சென்னை-14 (Ph:  044- 28132791)

23 Apr 2013

தாம்பத்யம் ஒரு சங்கீதம் - ஸ்வாமி தேஜோமயானந்தா

நன்றி: ஃபேஸ்புக்கில் இதைப் பகிர்ந்த நண்பருக்கு...

அமெரிக்காவில் ஜூலை 2009’ல் சின்மயா மிஷனின் ஏற்பாட்டில் நடைபெற்ற Marriage - a melody எனும் செமினாரின் நிகழ்வுகள் மற்றும் அந்த செமினாரில் கலந்து கொண்டவர்களுடனான உரையாடல்களின் தொகுப்பினை சின்மயா மிஷன் இந்தப் புத்தகமாகக் கொண்டு வந்திருக்கிறது.

இந்த செமினாரில் கலந்து கொண்டவர்கள் கல்யாணம் ஆன புதிதில் இருந்தவர்கள் அல்லது கல்யாணம் பண்ணிக் கொள்ள இருந்தவர்கள் என்று அறிகிறேன். இந்நேரம் தங்கள் நான்கு வருட திருமண வாழ்க்கையை நிறைவு செய்த அந்தத் தம்பதியினர் மேரேஜ் எனும் மெலடியை ரசித்து ருசித்துப் பரவச நிலையை அடைந்திருப்பார்கள் என நம்புகிறேன்.

13 Apr 2013

பிரிவோம் சந்திப்போம் - சுஜாதா

சில புத்தகங்களுக்கு ஆம்னிபஸ்சில் விமர்சன அறிமுகம் எழுதாமல் ஆம்னிபஸ்சை நாங்கள் ஆரம்பித்த நோக்கம் நிறைவேறாது என நினைத்துக் கொள்வேன். பெரும் இலக்கியங்களெல்லாம் இல்லை அவை. என்னைப் போன்ற ஒரு சராசரி வாசகனை நெருக்கமாகத் தொட்ட சில புத்தகங்கள். தொட்டால் தொடரும், கரையெல்லாம் செண்பகப்பூ, சிலநேரங்களில் சில மனிதர்கள் மற்றும் இன்னபிற. பொன்னியின் செல்வனையும் அடிக்கடி நினைப்பதுண்டு. May be, பொன்னியின் செல்வனுக்கு ஆம்னிபஸ் ஒரு வாரம் முழுக்க ஒதுக்கவேண்டியிருக்கலாம். பார்ப்போம்.

சரி, இன்றைய புத்தகத்திற்கு வருவோம். கிட்டத்தட்ட ஒரு வீம்புக்குத்தான் இந்தப் புத்தகத்தை மறுவாசிப்பிற்குக் கையில் எடுத்தேன். பலவருடங்களுக்கு முன் படித்தது.

வீம்பு? அதைப் பின்பு பார்ப்போம்.



2 Apr 2013

குற்றியலுலகம் - பா.ராகவன்

”நிஜமான வாசகன் புத்தகம் வாங்கித்தான் படிக்கிறான். டவுன்லோட் வாசகர்கள் ஹார்ட் டிஸ்கை மட்டுமே நிரப்பிக் கொள்கிறார்கள்”
சென்ற புத்தகவிழாவில் நண்பர் அப்புவின் புத்தகத்தைப் பொறுக்கப் போனவன் மதி நிலையத்தில் “குற்றியலுலகம்” புத்தகத்தைப் புரட்டினதும் கண்ணில் பட்ட முதல் ட்வீட் இது. 

தலையைப் வலப்பக்கவாட்டில் சாய்த்து வலக்கண்ணை மூடி வான் நோக்கியவாறே என் அலமாரியில் ரொப்பி வைத்திருக்கும் படிக்காத பல புத்தகங்களை நினைத்துப் பார்த்துக் கொண்டேன். ”ஹார்ட் டிஸ்கை என்னா பாரா சார், நான் அலமாரியையும் ரொப்பி வெச்சிருக்கேனே!”. இந்த பாவத்தை எதைச் செஞ்சு சரிகட்ட என்ற யோசனையில்.... ஒரே வழிதான் இருக்கு. இந்த புத்தகத்தையும் வாங்கி அலமாரில அடுக்கிடுவோம் என்று அந்த சின்னஞ்சிறு புத்தகத்தையும் அள்ளிக் கொண்டென்.

நானறிந்த வரையில் தாங்கள் போட்ட ட்வீட்டுகளின் தொகுப்பைப் புத்தகமாக வெளியிட்டவர்கள் மூவர். முதலில் பேயோன் 1000 வெளியிட்டார் பேயோன். அடுத்தது பா.ராகவனின் இந்தப் புத்தகம், மூன்றாவதாக நம் அன்பர் வேதாளம் ஈ’புத்தகமாக வெளியிட்ட இனியவை 140. பாராவும் பேயோனும் ஒருத்தரே என்ற ஊரறிந்த ரகசியம் நிஜம் என்றால் இப்படிப் புத்தகங்களை வெளியிட்டவர்கள் இருவர் எனலாம் :)

இந்தப் புத்தகங்களுக்கான வாசகர் வட்டம் எப்படியிருக்கும், அதை எப்படி அனுமானித்து தைரியமாக இவ்வகைப் புத்தகங்களை வெளியிடுகிறார்கள் என்பது எனக்கு ஆச்சர்யமே. ட்விட்டரைத் தெரியாதவர்களுக்கு புதுவகையிலான ‘கண்டெண்ட்’ கொண்ட இந்த வகைப் புத்தகம் எவ்வகையில் சுவாரசியம் ஏற்படுத்தும் என்பது முதற்கேள்வி. ட்விட்டர் நன்கு பரிச்சயம் உள்ளவர் ஒருத்தர் தான் முன்னமே படித்த ட்வீட்ட்டைப் புத்தக வடிவில் வாங்கிப் படிப்பாரா என்பது அடுத்த கேள்வி. பாரா போல பிரபல எழுத்தாளர் என்றால், “அட, நம்ம ரைட்டர் எதோ புச்சா ஏதிருக்காருபா”, என்று சிலப்பலர் வாங்கலாம். எனவே, எனிவே.... இப்படிப்பட்ட ஒரு புத்தகம் வெளியிட்டமைக்கே மனதார பாராட்டிக் கொண்டு புத்தகத்தைப் புரட்டினால், அடடா! அடடா! நோட் பண்ணுங்கய்யா நோட் பண்ணுங்கய்யா என்று நிறைய ட்வீட்கள். சரியாத்தேன் புத்தகத்தை வாங்கியிருக்கோம்.


எழுத்து என்பது கை பழகிய நுட்பம் எனினும் ட்விட்டரில் நூற்று நாற்பதில் தான் சொல்ல வந்ததை ‘நச்’ என்று சொல்வது பெரிய சவால்தான் என்று பாரா முன்னுரையில் குறிப்பிடுகிறார். சொக்கனும் இதை அடிக்கடி சொல்லக் கேட்டிருக்கிறேன்.

சமீபத்தில் எங்கோ இதைப் படித்தேன்: ஒரு பிரபல ஆங்கில எழுத்தாளரிடம் கேட்டார்களாம் - “நீங்கள் எழுதுவது எல்லாமுமே எப்படி சுவாரசியம் நிறைந்ததாக இருக்கிறது?”, என்று. “படிக்கையில் ஆயாசம் ஏற்படுத்தும் அனைத்தையும் வெட்டிவிட்டே ஒரு பதிவை / புத்தகத்தை நான் வெளியிடுகிறேன்”, என்றாராம் அவர். படிக்க ரொம்பவும் சாதாரணமாகத் தெரிந்தாலும் அந்த எழுத்தாளர் சொன்னது எழுதுபவர்களுக்கு மிகப் பெரிய விஷயம்.

”நாப்பது வார்த்தை மொதல்ல எழுதுங்க. அதுலருந்து பிடிவாதமா பன்னண்டு வார்த்தையை எடுத்துடுங்க. உங்க மெயில் எவ்ளோ க்ரிஸ்ப்பா இருக்குன்னு அப்போதான் புரியும்”, என்று இதையேதான் அலுவலக நண்பர் குமரகுருவும் அலுவலக மடல்களை வரையும்போது சொல்லுவார்.

”இங்கே இணையத்தில் நான் காணும் பல சீரியஸான இலக்கிய விவாதங்கள் எல்லாம் ஆதித்யா சேனலில் வெளியிடப்படுவதற்கான அத்தனைத் தகுதிகளையும் முழுமையாகப் பெற்றுள்ளவையாகத் தெரிகின்றன”

இப்படி எழுதினால் 165 character என்று தலையில் தட்டுகிறது ட்விட்டர். ”இங்கே”,  “அத்தனை”, “முழுமையாக” ஆகிய வார்த்தைகளை நீக்கினாலும் 140’ல் அடங்கிவிட மாட்டேன் என்கிறது. 

பல இணைய இலக்கிய விவாதங்கள் ஆதித்யா சேனலில் வெளியிடத் தகுதி வாய்ந்தவையாக உள்ளன
என்று அதை உருமாற்றினால் 120’;லேயே அடங்கிவிடுகிறது. அதைத்தான் தன் ட்வீட்கள் நெடுக செய்திருக்கிறார் பாரா. தேவையற்ற வார்த்தைகளை வெட்டினால் கச்சிதமாகச் சொல்ல வந்தது மாத்திரம் எப்படி அழகாக வந்து விழுகிறது பாருங்கள். 

பாராவின் ட்வீட்கள் பெரும்பாலும் ஏதேனும் ஒரு விதத்தில் நம் ஒவ்வொருவரையும் தொடுகிறது; ஏதேனும் ரசனை சார்ந்தோ அல்லது ஒரு வலியைப் பகிர்வதன் வாயிலாகவோ. உதாரணமாக வெவ்வேறு மனப்பகிர்வுகள் இரண்டினை இந்தப் புத்தகத்தில் அடுத்தடுத்து காணமுடிகிறது:

ஆழ யோசித்தால் புற்றுநோய் மட்டுமே கடவுளையும் விஞ்ஞானத்தையும் சேர்த்து தோற்கடித்துக் கொண்டிருக்கிறது என்று தோன்றுகிறது
இட்லி உப்புமாவின் ருசி ஏன் இட்லியிலோ உப்புமாவிலோ இருப்பதில்லை?

அங்கங்கே நிறைய பொறுத்துக் கொள்ளத்தக்க மொக்கைகளும் உண்டு. சில ட்வீட்கள் ஜென் வகைபோல, நமக்குப் புரிவதில்லை. குறையொன்றுமில்லை பாட்டின் பேரில் என்ன கோபமோ பாராவுக்கு, இசை தவிர்த்து அதில் ஏதுமில்லை என்கிறார் (நான் தப்பாய்ப் படித்தேனோ?). எம்.எஸ்’சும், ராஜாஜியும் பாடலில் தெரியவில்லை என்கிறாரா? நமக்குப் புரியலை.

மற்றபடி சினிமா, இலக்கிய, அரசியல், கிரிக்கெட் என்று ஆல்-ரவுண்ட் ட்வீட்கள் புத்தகம் முழுதும் உண்டு. பீச் ஸ்டேஷனில் கையிலெடுத்தால் தாம்பரம் வருமுன் இரண்டுமுறைகள் வாசித்துவிடத்தக்க வகையில் புத்தகத்தின் சைஸும், சுவாரஸ்யமும்.


குற்றியலுலகம் | பா.ராகவன் | மதி நிலையம் | 80 பக்கங்கள் | ரூ.40/- 
இணையம் மூலம் புத்தகத்தை வாங்க: கிழக்கு


14 Mar 2013

ஹர ஹர சங்கர... - ஜெயகாந்தன்

நான் பாட்டில் எங்கேயாவது கிராமத்தில் ஏகாந்தமாக இருந்துகொண்டு, பூஜையைப் பண்ணிக்கொண்டு, தியானம் செய்துகொண்டு நிம்மதியாக இருக்கலாம். மடம் நடப்பதற்கு இப்போது நீங்கள் பட்டணத்தில் தருகிற மாதிரி இவ்வளவு பணம் வேண்டுமென்பதே இல்லை. மடங்களுக்குப் பணபலம், ஆள்பலம் எல்லாமே குறைச்சலாக இருக்க வேண்டும் என்பதுதான் என் அபிப்பிராயம். பரிவாரம், சிப்பந்திப் பட்டாளங்கள் நிறைய வேண்டியதில்லை. மடத்தில் அதிபதியாக இருக்கப்பட்டவரின் யோக்கியதை தான் அதற்குப் பணம், பலம் எல்லாம்.
- ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்

2004’ஆம் வருடம் தீபாவளி விடுமுறை நிறைந்து பட்சணங்கள் நிறைய தின்று முடித்த அலுப்பில் அலுவலகம் நுழைகிறேன்.

“என்னய்யா கிரி! கவனிச்சியா? உங்காள அரஸ்ட் பண்ணிட்டாங்க போல?”, என்று வரவேற்றார் வேலு சார்.

“எங்காளா? யார் சார் அவரு?”

“அதான்யா காஞ்சி பெரியவரு”


8 Mar 2013

கஜல் (பாடப்பாடப் பரவசம்) – அபுல் கலாம் ஆசாத்



சென்னையில் சில வருடங்களுக்கு முன் இசை நிகழ்ச்சி ஒன்று நிறைவடைந்து வெளியில் வரும்போது தந்த பேட்டி ஒன்றில் எஸ்.வி.சேகர் இப்படிக் குறிப்பிட்டார்:
“இனிமே நாம ராத்திரி வீட்டுக்குப் போகும் போது கையில மல்லிப்பூ சரத்தை சுத்திக்கிட்டுப் போனாலோ, இல்லை நம்ம கார்ல மல்லிப்பூ உதிர்ந்து கிடந்தாலோ வீட்டு அம்மணி கிட்ட பயப்பட வேணாம்”. அப்போதுதான் சுடச்சுட பிரபல பாடகர் ஹரிஹரன் பாடி முடித்த கஜல் கச்சேரி ஒன்றை ரசித்துவிட்டு வெளியே வந்திருந்தார் சேகர்.

“ஹரிஹரன் கச்சேரிக்குப் போயிட்டு வந்தேன்’னு சொல்லிக்கலாம்”, என்றார் சேகர். கஜலின் போதைக்கு மேலும் போதையூட்ட அந்த கஜல் அரங்குக்கு வந்தவர்கள் கையில் மல்லிகைப்பூச் சரம் தரப்பட்டதாம். என்னே ஒரு ரசனை!

கையில் சுற்றின மல்லிகைச் சரம் போலத்தான் கஜல் பாடல்கள். கையில் சுற்றின சரத்தின் வாசம் நம்மைக் கிறங்கடிக்கும். சரத்தை அவிழ்த்த பின்னாலும் அதன் வாசம் காற்றில் நம்மைச் சுற்றிவரும்; நம் கையோடு சிலப்பல மணிநேரங்கள் அதன் வாசம் கலந்திருக்கும்.

கஜல் பாடல்களைக் கேட்கும்போதும் அப்படித்தான். கேட்கையில் மல்லிகையின் வாசமாய் மனத்தில் நிறைந்து நம்மைக் கிறங்க வைக்கும் கஜல்கள், நிறைந்தபின்னும் நம்மை விட்டு அகலாமல் மனத்தை அழுத்திக் கொண்டிருக்க வல்லன.

ஜக்ஜித் சிங், குலாம் அலி, மெஹ்தி ஹசன், அனூப் ஜோட்லா, பங்கஜ் உதாஸ் என்று கஜல் வானில் உஸ்தாத்’கள் பலர் இருந்தாலும் நமக்கு நன்கு பரிச்சயமான ஹரிஹரனின் கஜல்கள்தான் எனக்கு ஃபேவரிட். எனக்குக் கொஞ்சமே கொஞ்சமேனும் புரியும் வகையில் அவை சுலபமாக இருப்பது காரணமாயிருக்கலாம். கொஞ்சம் மேலே போனால் அஹ்மத் & முஹ்மத் ஹசன் பாடல்கள் சில நம் ஃபேவரிட் லிஸ்டில் உண்டு.

மல்லிகைச் சரத்திற்கு வருவோம்.

லபோ பர்ழ் ஹே ரப்ஸா குலாபி குலாபி
நிகாஹோங் கே ஜூம்பிஷ் ஷராபி ஷராபி
துமாரே ஏ ச்செஹரா க்கித்தாபி கித்தாபி…
துமே ப்யாரு கர்னே கோ ஜீ ச்சா ஹதா ஹை

…இப்படி காதலியின் இதழ், பார்வை, முக வனப்பு பற்றி ’அஷோக் கோஸ்லா’ பாடும் கீத் கேட்கும்போது ஆகட்டும்,…

பஹுத்(து) ஹஸீன்(னு) ராத்(து) ஹே
தேரா ஹஸீன்(னு) ஸாத்(து) ஹே
நஷே மே குச் நஷா மிலா
ஷராப் லா ஷராப் தே…

இப்படி “அழகிய இரவில் அதியுன்னத அழகாய்த் தோன்றும் காதலியை மயக்கம் சூழ் இரவில் (அல்லது மது சூழ் நேரத்தில்) மேலும் மயக்கம் (போதை) சேர்க்க வாராய்”, என்று ஹரிஹரன் அழைக்கும் கஜல் ஆகட்டும்…..

ஆப் ஹமாரே சாத் நஹீ
சலியே கோயீ பாத் நஹீ
ஆப் கிஸீ கே ஹோ ஜாயே
ஆப் கே பஸ் கீ பாத் நஹீ

என்ற, “எங்கிருந்தாலும் வாழ்க” ரக “போனால் போகட்டும் போடா” ரக புலம்பல்கள் ஆகட்டும்….

…இவையெல்லாமும், இவை போன்ற பல கஜல்களும் எனக்கு மயக்கும் மல்லிகைச் சரங்கள்.

ஹிந்திக்காரர்களுடன் புழங்க நேரிடுகையிலோ அல்லது கஜல் பாடலொன்றைக் கேட்கையில் அர்த்தம் புரியாமல் தவிக்கையிலோ ஹிந்தி மொழியைக் சரிவர கற்காமல் விட்டதற்காக வருந்துவதுண்டு. எனினும், கஜல் சரிவர புரிதல் ஹிந்தி அறிந்தவர்களுக்கே சிரமமான காரியம். காரணம் கஜல் பாரசீக மொழி வழியாக உருதுவிற்கு வந்து இறங்கிய வடிவம் என்பதுவே. எனவே, ஹிந்தியில் கஜல்கள் வடிக்கப்பட்டாலும் அவற்றில் உருதுத் தூவல்கள் அவசியம் ஆகிறது.

கஜல்களுக்கான அர்த்தம் தேடி நம்மூரில் ஹிந்தி அறிந்தவர்களை அணுகினால், “பாஸ், இது நியாயமா? நமக்குத் தெரிஞ்சதே அரைகுறை. டென்னிஸ் பால் கிரிக்கெட்டருக்கு கிரிக்கெட் பால்’ல பவுன்ஸர் போட்றீங்களே” என்பார்கள். ”உங்களுக்குத்தான் ஹிந்தி தெரியுமே பாஸ்”, என்றால், “அட தெரியாததை தெரிஞ்சாப் போல சமாளிக்கிறோம் பாஸ்”, என்பார்கள்.

சரி போகட்டும் என வடக்கத்திய நண்பர்கள் யாரையேனும் கேட்கப் போனால், விஸ்வரூபம் படத்தில் தீபக்கைப் பார்த்து ஃபாரூக் சிரிக்கும் சிரிப்பைச் சிரிப்பார்கள். அதற்கு அர்த்தம் மிக எளிது. நான் கொண்டு போன கஜல் பாடலை துப்பாக்கியால் பின்னே சுட்டுப் பொசுக்கி அதன் அர்த்தத்தைக் கொல்லப் போகிறார்கள் என்பதுவே அது. 

இப்படியாக கஜல்களைப் புரிந்து கொள்வது எப்படி என்று நாம் பாயைப் பிராண்டிக் கொண்டிருந்தபோது கண்ணில் அகப்பட்டதுதான் “கஜல்” பற்றிய அபுல் கலாம் ஆசாத் எழுதிய இந்தப் புத்தகம். என்னைப் போன்ற அரைகுறை கஜல் ரசிகர்களுக்கு என்றே கிழக்கு பதிப்பக வெளியீடாக இந்தப் புத்தகம் வந்துள்ளதாகத் தோன்றுகிறது. இதன் ஆசிரியர் அபுல் கலாம் ஆசாத் சவுதியில் வசிப்பவர்.

தென்னிந்தியா தாண்டினால் வீணை சித்தார் ஆகி, ஜலதரங்கம் சந்தூராக உருமாறி, மாண்டலின் சரோடாக மாறி கர்நாடக இசை ஹிந்துஸ்தானியாக மாறிவிடும். இதுதான் எனக்குத் தெரிந்தவரையில் சாஸ்திரிய இசை என்பது. ஆக, தென்னிந்தியா தாண்டினதும் சினிமா இசை தவிர்த்து எதைக் கேட்டாலும் அது ஹிந்துஸ்தானி என்று நினைத்திருந்தவனுக்கு முதலில் கஜல் அறிமுகமாயிற்று. சரி, ஹிந்துஸ்தானி தவிர்த்த மற்றவை எல்லாம் கஜல் வடிவங்களா? பின்னர் கீத் என்று ஏதோ சொல்கிறார்கள். அந்த வடிவத்திற்கும் கஜல்களுக்கும் லேசாகத்தான் எனக்கு வித்தியாசம் தெரிந்தது. எனினும் அவை சரிவர பிடிபடவில்லை. 

இந்தப் புத்தகத்தில் கஜல், கீத், ருபை, நக்ம், ஷாய்ரி என்று ஒவ்வொரு வடிவம் பற்றியும் தெளிவாகவும் சுருக்கமாகவும் குறிப்பிடுகிறார் ஆசிரியர். 

கீத் என்பது “பாடல்”,. ”நக்ம்”  என்பது நாம் குறிப்பிடும் விருத்தத்திற்கு நிகர். ஷாய்ரி என்பது இலக்கணம் ஏதுமற்ற புதுக்கவிதை. ருபை என்பது நான்கு அடிகளால் அமைந்த பாடல். இவை குறித்து மேலும் நீங்கள் புத்தகத்தில் படித்து அறிந்து கொள்தலே நலம்.

நக்ம் என்ற சொல்லில் இருந்தே நக்மா என்ற பெயர் வந்ததாம். விருத்தம் போன்ற ஓர் அழகி என்பதே அர்த்தம். ”ஹிஹ்ஹீ! கரீட்டுதாம்பா”, என்ற உங்கள் மனக்குரல் எனக்குக் கேட்கிறது பாருங்கள்.

புத்தகத்தில் மொத்தம் இருபத்தி ஐந்து அத்தியாயங்கள். முதலில் கஜல் பற்றிய அடிப்படை அறிமுகம். அதன் வரலாறு, இந்தியாவில் அதன் வருகை பற்றிய தகவல்கள், தென்னிந்தியாவிற்கு கஜல் என்ற வடிவம் பயணப்பட்ட சேதி, பின்னர் அதன் கட்டமைப்பு பற்றிய நுட்பத் தகவல்கள் என்று சுருக்கமாக முன்னுரையாக வரும் முதல் இரண்டு முன்னுரை (அல்லது) முன்-அத்தியாயங்களில் விவரித்துவிட்டு முதல் அத்தியாயத்தில் டாப் கியர் எடுக்கிறது புத்தகம்.

இருபத்தி ஐந்து கஜல்களைத் (சில கீத்’கள்) தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார் ஆசிரியர். அபுல் கலாம் ஆசாத் தமிழிலும் வலுவான ஞானம் கொண்டதால் அந்த உருதுப் பாடல்களை சந்தம் சிதையாமல் மொழி பெயர்த்துத் தந்திருக்கிறார். இந்த பிரபலப் பாடல்களைத் தேடிப் பிடித்து இந்தப் புத்தகத்தின் துணைக்கொண்டு கேட்கவும் அவற்றின் அர்த்தத்தை உள்வாங்கவும் நாம் தயாராகலாம். அதன்மூலம் மேலும் பல நல்ல கஜல்களைக் கண்டடைய இந்தப் புத்தகம் நமக்கு ஒரு திறப்பாகவும் அமையலாம். 

இந்தப் புத்தகத்தை வாசிக்காமல் அந்தப் பாடல்களையும் அவற்றின் மொழிபெயர்ப்பையும் சிலாகித்தல் சிரமம் என்பதால் அந்த மொழிபெயர்ப்புகளை நீங்கள் புத்தகத்திலேயே பார்த்துக் கொள்ளல் நலம் என்று இங்கே அவற்றைக் கொண்டு வாராது தவிர்க்கிறேன்.

மொழி ஞானத்தினையும் தாண்டி ஒரு நல்ல கஜலின் அர்த்தத்தை நாம் உள்வாங்க அது உருவான பின்னணி, அதன் காலகட்டம் மட்டுமல்லாது அந்த கஜல் உருவான மண்ணின் கலாசாரத்தையும் அறிவது அவசியம் என்று குறிப்பிடும் ஆசிரியர் அதற்கு உதாரணமாகத் தமிழ்ப் பாடல் ஒன்றினைக் குறிப்பிடுகிறார்

“மன்மத அம்புகள் தைத்த இடங்களில் சந்தனமாய் உனைப் பூசுகிறேன்”,

இந்த வரிகளை உள்வாங்க மன்மதனையும், சந்தனம் பூசும் சம்பிரதாயத்தையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டியது அவசியம். இது கஜல் குறித்த ஆரம்ப அறிமுகத்தில் ஆசிரியர் முன் வைக்கும் ஒப்பீடு.

ஒரு மிகத் தேர்ந்த வாசகனால்தான் ஒரு நல்ல நூலாசிரியன் ஆக இயலும் என்பதை மறுபடியும் அபுல் கலாம் ஆசாத் மூலம் தெரிந்து கொண்டேன். இந்தப் புத்தகத்தில் ”காற்று வாங்கப் போனேன் ஒரு கவிதை வாங்கி வந்தேன்”, என்று வாலியையும் அழைக்கிறார், “அவர்கள் என்னை அடிக்கவில்லை; அவளுக்குப் பிடித்தவளாய் என்னைச் செதுக்குகிறார்கள்”, என்று கவிக்கோ கவிதையையும் குறிப்பிடுகிறார். இப்படிப் புத்தகம் நெடுக நமக்குப் புரியும் ஒப்பீடுகள் வாயிலாக ஒரு கஜல் உருவாகும் சூழலை, அதன் அர்த்தத்தை விளக்கியிருப்பதே புத்தகத்தின் தனிச் சிறப்பு எனலாம்.

கஜல்களில் நிறைய உபயோகிக்கப்படும் ஷராப், ஷராபி என்னும் சொற்கள் (மது, போதை) குறித்து நான் இதுவரை கொண்டிருந்த அர்த்தத்தை அப்படியே போட்டு உடைத்துவிட்டார் அபுல் கலாம் ஆசாத். அவை ஒரு மது மயக்க மன்னனின் குழறல் என்று நான் நினைத்திருக்க, அது ஒரு குறியீட்டுச் சொல்லே என்கிறார் ஆசிரியர்.

அதற்கான உதாரணம்:

ஆண்: அன்னத்தைத் தொட்ட கைகளினால் மதுக் கிண்ணத்தை இனி நான் தொடமாட்டேன்
பெண்: கன்னத்திலிருக்கும் கிண்ணத்தை எடுத்து மதுவருந்தாமல் விடமாட்டேன்.

இங்கே பெண் குறிப்பிடும் மதுவானது ‘country liquor” அல்லது “jhonny walker” வகையறா அல்ல. 

மேலும் கவிமணி’யின் “வெயிற்கேற்ற நிழலுண்டு” பாடலின் “ கலசம் நிறைய மதுவுண்டு”, என்பது சாராயத்தையா குறிக்கிறது என்ற ஆசிரியரின் கேள்வி அதி அற்புதமானது. 

பின்னர் வரும் அத்தியாயத்தில் ஆசிரியரே மதுவை முதலில் மதுவல்ல என்றேன், அதை நானே தற்காலிகமாக வாபஸ் பெற்றுக் கொள்கிறேன் என்று உண்மையிலேயே மதுவையும் போதையையும் குறிப்பிடும், ”யே கமே ஸிந்தகி முஜ்கோ தே மஷ்வாரா”, எனும் பாடலில் பங்கஜ் உதாஸ் அவள் இல்லத்திற்கும் மதுச்சாலைக்கும் இடையில் நின்று திண்டாடும் நிலை பாடும் பாடலைப் பற்றிப் பேசுகிறார். ஆக, மது என்பது குறியீட்டுச் சொல்லா அல்லது மதுவே தானா என்பதை அந்தந்தப் பாடலின் தன்மையை வைத்து உணரவேண்டும் என்று புரிகிறது.

இப்படி தத்துவம், உளறல், உவமை, காதல், வர்ணிப்பு, மது மயக்கம் என்று கஜலின் முக்கிய வடிவங்கள் எல்லாவற்றுக்கும், கஜலின் முக்கியப் பாடகர்களின் பிரபலப் பாடல்கள் சிலவற்றின் துணைக் கொண்டு மொழிபெயர்ப்பு தந்திருக்கிறார் அபுல் கலாம் ஆசாத். கஜல் பாடல்களை இயற்றிய முக்கிய கவிஞர்களின் சுருக்கமான வரலாறும் பிற்சேர்க்கையாகத் தரப்பட்டுள்ளது.

கஜல் பாடல்களை ரசிப்பதில் ஆரம்பக் கட்டத்தில் இருப்பவர்களுக்கு நல்ல அறிமுக நூல். 

கஜல் (பாடப்பாடப் பரவசம்) – அபுல் கலாம் ஆசாத் – 112 பக்கங்கள், விலை ரூ. 45/- (2005 பதிப்பு) – இணையம் மூல்ம் புத்தகம் வாங்க: கிழக்கு

26 Feb 2013

மயங்குகிறாள் ஒரு மாது - ரமணி சந்திரன்

ரமணி சந்திரனை தொடர்ந்து புறக்கணிக்கும் ஆம்னிபஸ் தளத்தை நாங்களும் புறக்கணிப்போம் என்று மிரட்டல் விடுத்த ரமணி சந்திரன் கொலைப்படை மாதருக்காய் இந்தமுறை ரமணி சந்திரன் நாவலுக்கு விமர்சனம்.

சுமார் ஐந்து வருடங்களுக்கு முன் மயிலை சாய்பாபா கோயிலுக்குக் குடும்பத்துடன் போயிருந்தேன். கோயிலின் தியான மண்டபத்தில் நன்கு பரிச்சயமான முகமாக ஒரு அம்மணி அமர்ந்திருந்தார்.

அம்மாவிடம் கேட்டேன், “அவங்களை எங்கயோ பார்த்தாப்போல இருக்குல்ல?”

“டேய், ரமணி சந்திரன்’டா அவங்க. பிரபல நாவலாசிரியர்”




12 Feb 2013

நேற்று வாழ்ந்தவர்கள் - பாவண்ணன்

விழுப்புரத்திற்கும் பாண்டிச்சேரிக்கும் இடையில் வளவனூர் என்ற கிராமத்தில் பிறந்து வளர்ந்தவர் பாவண்ணன். இந்த ஊரானது என் அம்மா வளர்ந்த ஊர் என்பதால் அவர் கதைகளை வாசித்து, அங்கங்கே அவரைப் பற்றியும் வாசித்ததை விட அவரைப் பற்றி சிறுவயது முதல் என் உறவினர்கள் வாயிலாக நிறைய கேள்விப்பட்டதுண்டு. 


வளவனூர் கிராமம் என்றால் திரைப்படங்களில் காட்டும் வயல்வெளிகள், தோப்பு துறவுகள் சூழ்ந்த பசுஞ்சூழலும் இல்லை, வானம்பார்த்த கள்ளிக்காடுமில்லை. பரபரப்பான விழுப்புரம் - பாண்டிச்சேரி நெடுஞ்சாலையில் சத்திரம் பஸ் ஸ்டாப் விட்டு இறங்கினால் தென்னந்தோப்பு அதைக் கடந்தால் வரும் ஒரு யூகலிப்டஸ் தோப்பிற்கு முன்னதாக என் தாத்தா வீடு. வீட்டின் முன்னால் நூறு மீட்டர் தூரத்தில் சினிமாத்தனமான ஒரு அழகான ரயில் நிலையம். காலை-மாலை வேளைகளில் மட்டும் ஊரெங்கும் புகை மணம் பரப்பி கடந்து செல்லும் பாசஞ்சர் வண்டிகள், அவ்வப்போது தடதடத்துச் செல்லும் கூட்ஸ் வண்டிகள், ரயில் பாதையைக் கடந்தால் எப்பவும் காய்ந்து கிடக்கும் அந்த ஊரின் எப்போதோ நீர்நிறைந்திருந்ததாக எல்லோரும் சொல்லும் ஓர் ஏரி. கொஞ்சம் சின்ன டவுன் என்று சொல்லத்தக்க பெரிய கிராமம்.

வீட்டிலிருந்து சிவன் கோயில் போகும் வழியில் மணமணக்கவும் சுடச்சுடவும் கமர்கட் செய்து விற்கும் வீடு சென்று கடலை மிட்டாய்களும், கமர்கட்டுகளும் வாங்கும் போது எதிர்சாரியில் இருக்கும் ஒரு வீட்டைக் காட்டி மாமா சொல்லுவார், “இதுதான் பாவண்ணன் வீடு. உங்க பெரிய மாமாவோட க்ளாஸ்மேட்டுடா. பெரிய ரைட்டர் இப்போ”. அவர்கள் வீட்டில் தைத்த துணியொன்றை வாங்கி வர ஒருமுறை படியேறிச் சென்ற நினைவும் மங்கலாக உண்டு.

இவரது சிறுகதைகள், கட்டுரைகள் ஆகியவற்றுக்கு ஈடாக இவர் கன்னடத்திலிருந்து மொழிபெயர்த்த பதினைந்துக்கும் மேலான நூல்கள் பேசப்படுகின்றன. மொழிபெயர்ப்பிற்காக அகாதமி விருதும் பெற்றவர். கவிதைகளையும், நாட்டுப்புறப் பாடல்களையும் ஒரு மொழியினின்று மொழிபெயர்க்கும் அளவிற்கு மொழித்தேர்ச்சி பெறுதல் என்பது அசாதாரண காரியம் என்றே தோன்றுகிறது.


காவ்யா வெளியீடாக 1992’ஆம் வருடம் தொகுக்கப்பட்ட பாவண்ணனின் “நேற்று வாழ்ந்தவர்கள்” சிறுகதைத் தொகுப்பு வழக்கம்போல சமீபத்தில் ஒரு பழைய பேப்பர் கடையில் கிடைத்தது. இப்போது இந்தப் புத்தகம் சந்தையில் கிடைக்கிறதா எனத் தெரியவில்லை. இணையத்தில் தேடியபோது நிறைய நூலகங்களின் கேட்டலாகில் தட்டுப்படுகிறது.

இந்தச் சிறுகதைத் தொகுப்பை ஏனோ அதன் வரிசையில் வாசிக்காமல் என் மனம் போன போக்கில் முன்னும் பின்னும் புரட்டிப் புரட்டித்தான் படித்தேன். ஒவ்வொரு கதையும் இறுதியில் ஒரு மனசைத் தைக்கும் துன்பத்துடனே பெரும்பாலும் நிறைகிறது. கதை மாந்தர்கள் யாரும் ஃபேண்டஸி ஆசாமிகள் அல்லர். பெரும்பாலும் கீழ்த்தட்டு மக்களின் முகத்தில் அறையும் அவலமே கதை.

பாவண்ணன் எழுதுவது போல் நேரடியாகக் கதை சொல்லும் ஒருத்தரை நான் இதுவரை வாசித்ததில்லை என்றே சொல்வேன். கதைக்கென இவர் ரொம்பவெல்லாம் கற்பனைக் குதிரையை ஓட்டிப் பிரயத்தனப்படவில்லை. இவரது கதைககளன்கள் பெரும்பாலும் நம் சக மனிதர்களின் அன்றாட வாழ்க்கையே. 

பெரிதாக ஜெர்க் அடித்து, ஆஹா ஓஹோ என்று சிலாகிக்கத்தக்க சொற்களை உபயோகித்து, பெரும் வர்ணனைகளைக் கொண்டு கதையை அலங்கரிக்கும் வேலையே இல்லை. சற்றும் பாசாங்கற்ற ஒருநடை தொகுப்பில் உள்ள அத்தனைக் கதைகளிலும். கதாசிரியனை எங்குமே முன்னிறுத்தாத கதைகள். படிக்கப் படிக்க ஆச்சர்யமாக இருக்கிறது.

“வேஷம்” கதையில் அச்சேயாகாமல் வெளியாகும் ஒரு புத்தகக் கதைவழி இந்த தேசத்தின் சரித்திரத்தைப் போகிற போக்கில் சொல்லும் லாவகத்தில் துவங்குகிறது சிறுகதைத் தொகுப்பு. 

இல்லாமையின் உச்சத்தில் வாய்க்கு ருசியாக உண்ண வக்கில்லாமற் போகும் மாசக்காரியான ஆந்தாயி கதை அவள் பிள்ளைகள் பிசையும் மீன்குழம்புச் சோறோடு சேர்த்து நம் மனசையும் பிசைவது. ”கல்” உடைக்கும் மீனாவின் கதை முடிவு நம் முகத்தில் அறைந்தால், கல் விட்டெறியும் குப்புசாமியின் “தர்மம்” நம்மை நகைக்க வைக்கிறது.

”மரணம்” கதைநாயகன் குப்புசாமியுடன் பாராட்டும் நட்பு நம்மில் ஒவ்வொருவரும் வாழும் காலகட்டத்தில் யாரோ ஒருவருடன் பாராட்டிய ஒரு நட்பை நினைவுறுத்தும். எத்தனை நெருங்கிய நண்பனானாலும் அவனையும், “வீட்டுக்கெல்லாம் வராத”, என்று சொல்ல முடிவது என்னவொரு அவலம்? சமூகத்தின் ஏற்றத்தாழ்வை கதையின் போக்கில் தொட்டுச் செல்கிறார் பாவண்ணன். போதனை, புரட்சி போன்ற சமாசாரங்களெல்லாம் இல்லாமல் நெருடாமல் உள்ளதை உள்ளபடி பகர்கிறார். இக்கதையின் இறுதிப் பத்தி இல்லாமலேயே கூட கதை நிறைந்திருக்கலாம் எனத் தோன்றுகிறது.

”நேற்று வாழ்ந்தவர்கள்” கதை பற்றி நிறைய பேசலாம். குதிரை வண்டி ஓட்டுபவனான பார்த்தசாரதியின் ஆசிர்வதிக்கப்பட்ட வாழ்க்கை  அவனது அன்பான மாமனின் மகளை மணக்கும்போது மேலும் ஆசிர்வாதம் நிறைந்ததாய்த் தோன்றுகிறது. திருமணத்திற்குப் பிறகு சீர்செய்ய முடியாத படிக்கு அவன் வாழ்க்கை சின்னாபின்னமாவதும், அதைச் சீர்செய்யக் கையாலாகாத திடீர்த் தருணமொன்றில் அவன் பூணும் திரும்பி வரவியலாத துறவறமுமே கதை.  இந்தத் தொகுப்பின் சில கதைகள் எங்கள் கிராமத்தைச் சுற்றியே வருவதால் அக்கம்பக்கத்து கிராமங்களின் பெயர்களைக் கதைகளில் வாசிக்கையில் மனசு ரொம்பவும் சந்தோஷப்பட்டது.

என் தாத்தாவின் முதலாளியும் நண்பருமான ரெட்டியாரும் கூட பார்த்தசாரதியின் கதையில் வருகிறார். அவர் மகள்களைக் கோலியனூர் கோயிலுக்குத் தன் குதிரை வண்டியில் பார்த்தசாரதி அழைத்துச் செல்வதாகச் செல்கிறது கதை.

விடுமுறை நாள் ஒன்றின் மாலைப் பொழுதொன்றில் குடும்பத்துடன் ரெட்டியார் வீட்டிற்கு மரியாதை நிமித்தம் நாங்களெல்லாம் சென்றிருந்தோம். பாண்டிச்சேரி நெடுஞ்சாலையில் பெரிய தோட்டத்தினிடையே ஒரு வசதியான மாளிகை வீடு. காபி, பலகார உபசரிப்புகள் எல்லாம் முடிந்து நாங்கள் விடை பெற்ற போது வாயிலில் நின்றிருந்த குதிரை வண்டியில் ஏற்றி எங்களை வீட்டிற்கு அனுப்பி வைத்தார் ரெட்டியார்.

அன்று எங்களுக்கு வண்டியோட்டியது பார்த்தசாரதியாகத்தான் இருந்திருக்க வேண்டும் என்று நினைத்துக் கொள்கிறேன்.

நேற்று வாழ்ந்தவர்கள் - பாவண்ணன்
சிறுகதைத் தொகுப்பு
காவ்யா வெளியீடு.
201 பக்கங்கள் / விலை.ரூ.26/- (1994 பதிப்பு)

30 Jan 2013

பொடுபொடுத்த மழைத்தூத்தல் - தொகுப்பு: அனார்

வண்டறுத்த சோலையிலே
மரமழுது போறதுபோல்
நின்டழுவன் மச்சான்
உங்கெ நினைவுவாற நேரமெல்லாம்

இஸ்ஸத் ரீஹானா எம்.அஸீம் என்கிற “அனார்”. இலங்கையைச் சேர்ந்த முக்கியமான இளம் தலைமுறைப் பெண் கவிஞர்களுள் ஒருவராகக் கருதப்படுபவர். கிழக்கு இலைங்கையின் சாய்ந்த மருது என்னும் ஊரைச் சேர்ந்த அனார் தொகுத்து ”க்ரியா” வெளியீடாக வெளிவந்திருக்கும் கிழக்கிலங்கை நாட்டார் காதல் பாடல்களே “பொடுபொடுத்த மழைத்தூத்தல்” என்னும் இந்தப் புத்தகம்.


நாட்டார் பாடல்கள் அல்லது கிராமியப் பாடல்கள் என்பவை நாட்டுப்புற மக்கள் தங்கள் வேலை நேரங்களின் இடையே வேலைப்பளு தெரியாமல் இருப்பதற்காகப் பாடுபவை. இவை எழுதிவைத்துப் பாடிய பாடல்கள் அல்ல. இவற்றைப் பாடியவர்கள் ஏட்டுக்கல்வி அறிந்தவர்களாக இருந்திருப்பார்களா என்பதுவும் சந்தேகமே. ஆக, வாய் வழியே பாடி, செவி வழியே கேட்டு, சந்ததிகள் வழியே பயணப்பட்டு இவை காலங்காலமாய் வாழ்ந்து கொண்டு இருப்பவை.  கைப்பேசியிலேயே வானொலி நிகழ்ச்சிகளைக் கேட்கும் வசதி, பணியாளர் அறைகளில் தொலைக்காட்சி பார்க்கும் வசதி என்று வளர்ந்துவிட்ட இன்றைய சூழலில் இந்தவகைப் பாடல்கள் இன்னமும் பரவலாகப் புழக்கத்தில் உள்ளனவா என்பதுவும், அடுத்த அடுத்த தலைமுறைகளுக்கு இவை வாய்வழிச் செவிவழி கொண்டு செல்லப்படுமா என்பதுவும் கேள்விக்குறியே. 

காலங்காலமாக நம் கிராமங்களில் வாழ்ந்து வரும் இப்பாடல்கள் நம்மவர்களின் நாகரிக வளர்ச்சியில் மூச்சடைத்து அழிந்திடாமல் இருக்க அவ்வப்போது சிலர் இவற்றை ஆவணப்படுத்துகிறார்கள்.

சிலப்பதிகாரம் போன்ற பெரும் காவியங்கள் கூட அடிப்படையில் நாட்டார் பாடல்களை ஆதாரமாகக் கொண்டு படைக்கப்பட்டவையே என்ற கருத்தும் உண்டு. 

வீரபாண்டிய கட்டபொம்மன் வரலாறு நம்மிடையே பிரபலமானது நடிகர் சிவாஜிகணேசன் நடித்த படத்தின் மூலம் என்பது நாம் நன்கு அறிந்த விஷயம்தான். ஆனால் அதற்கு முன்னால் கிராமங்களில் கட்டபொம்மனின் வழிவந்த கிராமத்துக் கிழவிகள் அவன் வரலாறை நாட்டார் பாடல் தொனியில் பாடிக் கொண்டிருக்க அதைக் கேட்ட மபொசி அவற்றை ஆவணப்படுத்தி வெளிக் கொணர்ந்ததே கட்டபொம்மன் கதை வெளிவந்ததன் முதல்படி. மபொசி கட்டபொம்மன் வரலாறை வெளிக் கொணர்ந்திரா விடில் பத்தொடு பதினொன்றான சிற்றரசர்களுள் ஒருவனாக அவன் மறக்கப்பட்டிருப்பானோ என்னவோ.

(எட்டையாபுர வழி வந்தவர்கள் கட்டபொம்மனைக் கொள்ளையனாகப் பார்ப்பவர்கள். அவர்களுக்கு இந்த விஷயத்தில் மபொசி மீதும், சிவாஜிகணேசன் மீதும் தனிக் கோபம் இருப்பது தனிக்கதை)

இப்படி ஒரு சிற்றரசனின் வரலாறே காலப்போக்கில் மறந்து தொலைக்கக் கூடியது எனில், யார் ஆதிகாலத்தில் உருவாக்கினார்கள் என்றே தெரியாத இதர நாட்டார் பாடல்கள்  எம்மாத்திரம்? ஆக, இத்தகைய பாடல்களைத் தொகுத்துப் புத்தக வடிவில் கொண்டு வருபவர்கள் ஒருவகையில் ஒரு வட்டாரத்தின் ஒரு காலகட்டத்தின் வரலாறைப் பதிவு செய்கிறார்கள். 

வரலாறு? காலகட்டம்?

ஆம், பேரிலக்கியங்கள் மட்டுமல்ல சின்னச்சின்ன நாட்டார் பாடல்களும் அவை பாடப்பட்ட காலகட்டத்தின் மக்களின் வாழ்வியலை போகிற போக்கில் சொல்லிச் செல்பவைதானே.

நாட்டார் பாடல்களானவை நடவுக்கும், ஏருக்கும், உழவுக்கும், படகு வலிக்கவும், வண்டி ஓட்டும் வேளையிலும் பாடப்படுவது என்று வேலை நேரத்திற்கானது என்று மட்டுமே அல்லாமல்  தாலாட்டில் தொடங்கி ஒப்பாரி வரை வாழ்வின் அனைத்து காலகட்டங்களுக்கும் பாடப்பட்டவை. கும்மிப்பாட்டு, நெற்குத்திப்பாட்டு, ஏற்றப்பாட்டு என்று இவற்றில் பல கிளைவகைகள் இருக்கின்றன.

கிழக்கிலைங்க நாட்டார் பாடல்களில் அனார் தேர்ந்தெடுத்துத் தொகுத்திருப்பவை காதல் சுவையை மட்டுமே. 
கத்தி எடுத்துக்
கதிர் அரியும் வேளையிலே
கள்ள எண்ணம் வந்து
என்ட கையறுத்துப் போட்டுதடி 
இப்படி தோராயமாக ஒவ்வொன்றும் நான்கு அடிகள் கொண்ட பாடல்கள். 160 பாடல்களை அனார் தொகுத்திருக்கிறார். படிக்க வசதியாக அவற்றை ”அவன்” பாடுவதாக 80 பாடல்களையும், “அவள்” பாடுவதாக 80 பாடல்களையும் கோர்த்து ஜோடிப் பாடல்களாக ஒன்றுக்கு ஒன்று கேள்வியும் - பதிலுமாய்த் தந்திருப்பது படிக்க இனிமை.
உன்னை மணந்து
உயர்ந்த கட்டில்மேல் வைத்து
கன்னந்திருப்பிக்
கதைக்க வெகு நாட்களில்லை
என்று “அவன்” காதற்சுவை பாடினால்....
ஏறப் பழுத்த
இரு சிவப்பு மாம்பழத்தை
என்ன வந்தாலும்
எடுத்தருந்து என்கிளியே
என்று ”அவள்” காமத்துப்பால் பருகச் சொல்கிறாள்.

நாட்டார் பாடல்களின் சிறப்பு ஒன்றேயொன்றுதான்.  இவை கவிஞனின் கவித்திறமையை, உவமைத் திறனை, இலக்கண சுத்தத்தை, இலக்கிய ஆளுமையை என்று பெரிய விஷயங்களுக்குள் எல்லாம் நுழையாமல் ஒரு சாமானியனின் கணநேரச் சிந்தையை உள்ளதை உள்ளபடிக்கு மொழிபெயர்ப்பனவாக இருப்பதுதான். கவிக்கட்டமைப்பின் கவனச் சிதறலின்மை இவற்றைப் போலியற்ற கவிதையாக வாழ்வாங்கு வாழவைக்க உதவுகின்றன.

கிழக்கிலங்கை நாட்டார் பாடல்களைப் பாடினதில் முஸ்லிம் பெண்களின் பங்கு அதிகமானது என்கிறார் அனார். பிரிவு, இரங்கல், தூதுப் பாடல்கள் அவற்றில் தூக்கலாகத் தெரிபவை.

இந்தப் புத்தகத்தின் மூலம் நமக்குக் கிடைப்பவை அந்த சுவைமிக்க நாட்டார் பாடல்கள் மட்டுமல்ல; கூடவே அவை ஒவ்வொன்றிலும் கையாளப்பட்டிருக்கும் கிழக்கிலங்கைப் பிராந்தியத்தின் பிரத்தியேக வார்த்தைகள் சிலவற்றுக்கான அர்த்தங்களும் கூடவே. சுமார் பத்து டஜன் வார்த்தைகளுக்கு பொருளும் சேர்த்தே தரப்பட்டுள்ளது.

சில உதாரணங்கள்:

பொடுபொடுத்த  = துளித்துளியாய்ப் பெய்யும் மழை
ஒழுங்கை = வீதி
நுளம்பு = கொசு
பொறுதி = பொறுமை.

அள்ளினால் தங்கம்
அணைச்செடுத்தால் அமிர்த குணம்
கொஞ்சினால் இஞ்சி மணம்
கோவைசெய்தால் வேர்வை மணம்
ஆம்! வேர்வை மணத்தின் இனிமைதான் நாட்டார் பாடல்களின் இனிமையும் கூட!

பொடுபொடுத்த மழைத்தூத்தல்
கிழக்கிலங்கை நாட்டார் காதல் பாடல்கள்
க்ரியா பதிப்பகம் (creapublishers@gmail.com)
தொகுப்பு: அனார்
72 பக்கங்கள் / விலை ரூ. 150/-

அனார் இணையதளம்:  http://anarsrilanka.blogspot.com

(இணையம் மூலம் இந்தப் புத்தகம் வாங்க வசதி இருப்பதாய்த் தெரியவில்லை. இப்புத்தகம் வாங்க விழையும் வெளியூர் மக்கள் டயல் ஃபார் புக்ஸ் மூலம் முயற்சித்துப் பார்க்கலாம்)

22 Jan 2013

கண்பேசும் வார்த்தைகள் - நா.முத்துக்குமார்


ஒருமுறைதான் பெண் பார்ப்பதினால்
வருகிற வலி அவள் அறிவதில்லை;
கனவினிலும் தினம் நினைவினிலும்
கரைகிற ஆண்மனம் புரிவதில்லை
அதற்கு முந்தின தினம்தான் ஒரு கல்யாணக் கச்சேரியில் அந்தப் பாடலைப் பாடியிருந்தான் அவன். பாடின மறுநாள் காலையில் இப்படி அவள் வாசலில் வந்து நிற்பாள் என்றோ பார்த்த மாத்திரத்தில் தடாரென அவள் மேல் வீழ்வான் என்றோ கனவிலும் நினைக்கவில்லை அவன்.

கண்டதும் காதலில் அவனுக்குத் தன் இருபத்தி சொச்ச வயதுவரை நம்பிக்கை இருந்ததில்லை. அவளைப் பார்த்த நொடியினில் அந்த நம்பிக்கையின்மை எங்கோ காணாமல் பொடித்துப் போனது. 
“உலகத்தில் எத்தனைப் பெண்ணுள்ளது
மனம் ஒருத்தியை மட்டும் கொண்டாடுது
ஒருமுறை வாழ்ந்திடத் திண்டாடுது
அது உயிர்வரை பாய்ந்து பந்தாடுது”

8 Jan 2013

எம்.எஸ். - வாழ்வே சங்கீதம்: வீயெஸ்வி

முதலில் இரண்டு கேள்விகள்: 

1) எம்.எஸ்.சுப்புலட்சுமி பாடிய குறையொன்றுமில்லை பாடலை இயற்றியவர் யார்? “ராஜாஜி?” யூ ஆர் ரைட். ஆனால் கேள்வி அது இல்லை. தமிழ் தெரிந்த ஒவ்வொருவரும் நன்றாகவே அறிந்து வைத்திருக்கும் அந்தப் பாடலுக்கு மெட்டு அமைத்தவர் யார்?

2) எம்.எஸ். என்றே பிரபலமாக அழைக்கப்படும் எம்.எஸ். சுப்புலட்சுமியின் பெயரில் இருக்கு “எம்.எஸ்” என்பதன் விரிவாக்கம் என்ன?

பதில்களைக் கடைசியில் பார்க்கலாம்.

எம்.எஸ். என்ற மாபெரும் ஆளுமையின் இசைப் பயணம் ப்ளஸ் அவரது வாழ்க்கைப் பயணம் இரண்டையும் பேசும் ஒரு சுருக்கமான, சுவாரசியமான புத்தகம் வீயெஸ்வி எழுதியுள்ள “எம்.எஸ். வாழ்வே சங்கீதம்”. எம்.எஸ்’சின் அதி தீவிர அபிமானிகளை டார்கெட்டாக வைத்து வெளி வந்திருக்கும் புத்தகம். அழகான கதை நடையில் சம்பவங்கள் கோர்க்கப்பட்டதொரு 141 பக்கப் புத்தகம்.



1 Jan 2013

ஆடிஸம் – டாக்டர். சு.முத்து செல்லக்குமார்


ஆடிஸம் (Autism) குழந்தைகளிடையே தோன்றும் ஒருவகை மனவளர்ச்சிக் குறைபாடு. இது தீவிர மனநலக் குறைபாடு அல்ல. இந்தவகைக் குழந்தைகள் தம் வயதையொத்த பிற குழந்தைகளுடன் ஒப்பிடுகையில் சற்றே “கற்றல்’ விஷயத்தில் பின் தங்கியிருப்பார்கள்.

சத்குரு ஜக்கி வாசுதேவ் ஆனந்த விகடனில் ”ஆயிரம் ஜன்னல்கள்” தொடர் எழுதியபோது ‘கடவுளின் குழந்தைகள்: என்றொரு அத்தியாயம் எழுதினார். அவர் அந்த அத்தியாயத்தில் குறிப்பிட்டது தீவிர மனவளர்ச்சிக் குறைவு கொண்ட குழந்தைகள் குறித்து. ஒருவரை ஒருவரோடு ஒப்பிடுதல் என்பதே ஒரு கிரிமினல் குற்றம் என்பதான தொனியில் இருந்தது அந்த அத்தியாயம். யாரோ இன்னொருவருடன் ஒப்பிட்டு ஒரு குழந்தையை சிறப்புக் குழந்தை, கடவுளின் குழந்தை என்று ப்ராண்ட் செய்யும் நீங்கள், உங்களை விட அறிவில் சிறந்தவரோடு உங்களை ஒப்பிட்டு நீங்களும் மனநலக் குறைபாடு உள்ளவர், ஊனமுற்றவர் என்று ஒப்புக் கொள்வீர்களா என்பது ஜக்கியின் கேள்வி.


26 Dec 2012

உலோகம் - ஜெயமோகன்

ஜெயமோகனின் உலோகம் அவரது இணையதளத்தில் தொடராக வந்தபோது நான் ஏனோ வாசிக்கவில்லை. புத்தகமாக வந்தபின்னும் முதலில் வாங்கவில்லைதான். 

“இலங்கைத் தமிழருக்காய்க் குரல் கொடுக்கிறேன் என்பவர்களுக்கு, எது நடந்தால் என்ன என்று இருப்பவர்க்கு, குரல் கொடுக்க மாட்டேன் என்பவர்களுக்கு, தமிழர் நலனுக்காய் உழைக்கிறோம் நாங்கள் என்று மார்தட்டுவோருக்கு என்று யாரை எடுத்துக் கொண்டாலும் இலங்கையின் உண்மை நிலவரம் இங்கிருக்கும் யாருக்கும் நிச்சயமாகத் தெரியாது என்பது என் துணிபு” என்றார் அலுவலக நண்பர்.

”இப்போ என்ன திடீர்ன்னு இதைச் சொல்றீங்க?”, என்றவனிடம், “உலோகம் வாசிச்சேன்”, என்றார்.

“ஓ”

’உலோகம்’ வாசித்தால் உமக்கு அந்த இலங்கை அரசியல் பத்தி ஏதும் தெரியாவிட்டாலும் அகதிகள் பத்தி ஒரு அவுட்லைன் கிடைக்கும் பாருங்க”, என்றார்.

“வாசிக்கறேனுங்க”, என்றேன்.

"அவங்க லைஃப் பத்தி தெரிஞ்சிட்டா, நம்ம பி.பீ.ஓ. லைஃப் பத்தி அதன் பிறகு நிச்சயம் குறை சொல்லமாட்டீங்க. வாழ்வாங்கு வாழறோமய்யா  நாமெல்லாம்."

"மேனேஜரிசம் பேசறீங்களோ?"

“ஜெமோ வாசகர்தானே நீங்க? இன்னும் வாசிக்கலைன்றீங்க?

“வாசிக்கலாமுங்க. புக்கு எங்க போயிடப் போவுது” 


பின்னொரு நாளில் ஒரு 'கான்ஃபரன்ஸ் கால்' வேளையில் நம் நண்பருக்கும், மறுமுனையில் மேற்கு தேசமொன்றில் வசித்த புலம்பெயர்ந்த ஒருத்தருக்கும் நிகழ்ந்த முடிவுறா ஒரு விவாதம் என்னை உடனடியாக உலோகம் வாங்கச் செய்தது.

“உங்களுக்கு என்ன தெரியும்னு அந்த நாவலைக் கொண்டாடறீங்க”

“எதுவுமே தெரியாததாலதான் கொண்டாடறேன்னு வெச்சுக்கோங்களேன்”

“எதுவும் தெரிஞ்சா நிச்சயம் கொண்டாடமாட்டீங்க”

“சொல்லுங்க பாஸ். தெரிஞ்சிக்கறேன்”

“இல்லை. உங்க மாதிரி ஆசாமிக்கு புரிய வைக்கறது அத்தனை எளிமையில்லை”

“பிறகு எதுக்கு உங்களுக்கு என்ன தெரியுமுன்னு கேக்கறீங்க”

“இல்லை. நாம நிறுத்திக்குவோம். லெட்ஸ் கோ பேக் டு தி பிஸினஸ். டெல் மீ டிசம்பர் நம்பர்ஸ். லெட்ஸ் கோ த்ரூ”

நான் சிரித்துக் கொண்டேன்.

உலோகம்.....!

அயல்தேசத்து நண்பர் சொன்னதுபோல, ’உலோகம்’ நிஜத்தின் பிம்பம் துளியும் இல்லாது முழுக்க முழுக்க புனைவாகவே கூட இருக்கலாம்.  எனினும் நம் நண்பர் சொன்னதுபோல் அகதி ஒருத்தனின் வாழ்வின் அவுட்லைனையேனும் குறைந்தபட்சம் நமக்குத் தருகிறது. தீவிரமான, அழுத்தந்திருத்தமான ஒரு அவுட்லைன்.

எனக்குத் தெரிந்த த்ரில்லர் நாவல்கள் வேறுவிதமானவை. புலரும் நல்காலைப் பொழுதின் புள்ளினங்களின் சங்கீதத்துடனான இனிமை போல சந்தோஷமாகக் கதை தொடங்கும். இரண்டொரு அத்தியாயங்களுக்குள் ஒரு கொலை அரங்கேறும். டிடெக்டிவ் ஏஜென்ஸி நடத்துபவர் கதாநாயகராக கதையுள் நுழைவார். அவர் காதலியோ அல்லது மனைவியோ அவருடன் எப்போதும் உதவி டிடெக்டிவாக வளைய வருவார். கதைமாந்தர் மூவர், நால்வர் மீது சந்தேக நிழல் இருக்கும். ஒவ்வொரு சந்தேக முடிச்சாக நம் கதாநாயகர் அவிழ்க்க இறுதி அத்தியாயத்தில் கொலையாளி அடையாளம் காணப்படுவார்.

உலோகம் அந்த வகையிலான பத்தோடொன்றான த்ரில்லர் அன்று. துப்பாக்கியில் பொருத்தப்பட்ட குண்டு போன்று தனக்குத் தரப்பட்ட ஒரு குறிக்கோளுடன் இந்தியா வந்து இறங்குபவன் சார்லஸ் என்கிற சாந்தன்.  தன்னை இயக்கும் கை எந்தக் கை என்பதை அறியாத குண்டு அவன் என்பதுதான் ஒட்டுமொத்தக் கதையின் த்ரில்லையும் நம்மிடம் தக்க வைக்கும் காரணி.

சார்லஸ் செய்யும் கொலையில் துவங்குகிறது கதை. பொன்னம்பலத்தார் என்னும் பிரபல மனிதரைக் கொல்கிறான் சார்லஸ். கதை பின்னோக்கிச் செல்கிறது. ”கிளம்பு” என்றொரு ஒற்றை வார்த்தை ஆணை கிடைக்க அகதிகளோடு அகதியாக இந்தியா வந்திறங்குகிறான் சார்லஸ். அவனது பயணங்களும், சந்திக்கும் மனிதர்களும், ஒவ்வொரு கட்டமாக நகர்ந்து அவன் தனக்குத் தரப்பட்ட குறிக்கோளை நோக்கித் தன்னையறியாமலேயே பயணிப்பதுவும் இறுதி நிகழ்வாக பொன்னம்பலத்தாரைக் கொல்வதுமாகக் கதை நிறைகிறது. 

தமிழ் இயக்கங்களாலேயே கொல்லப்பட்ட தமிழர்களின் எண்ணிக்கை குறைந்தபட்சம் பத்தாயிரத்தைத் தொடும் என்று சில ஆண்டுகளுக்கு முன்னர் இலங்கை வடகிழக்குப் பிராந்தியத்தின் முன்னாள் முதலமைச்சர் தெரிவித்தார். போராட்ட இயக்கங்களைப் பொருத்தவரையில் தம்மைப் பற்றி சரிவர அறியாத எதிரியைவிட தம்மைப் பற்றி நன்கு அறிந்த துரோகி மிகவும் ஆபத்தானவன். அதனால்தான் துரோகிகளாகத்  தாங்கள் அடையாளம் கண்டுகொள்பவர்களைக்  களையெடுப்பதில் இயக்கங்கள் பெருமுனைப்பு காண்பிக்கின்றன.

இயக்கத்தால் அப்படிப்பட்ட துரோகியாக அடையாளம் காணப்பட்டவரான பொன்னம்பலத்தாரை மற்றொரு துரோகத்தின் துணையைக் கொண்டே முடிப்பதுதான் ஒட்டுமொத்தக் கதையும்.

அந்தக் கொலையும் அதற்கான காரணமும் அது அரங்கேறும் விதமும் மட்டுமே கதையாகியிருந்தால் உலோகம் ஒரு சராசரி த்ரில்லராக இருந்திருக்கும். உலோகம் சம்பவங்களின் வழியே சொல்லப்படுவதாக அல்லாமல் சார்லஸின் உள்ளம் வழியே பயணிக்கிறது. நம்மருகே அமர்ந்து சம்பவங்களைச் சொல்பவனாக சார்லசின் பார்வையில் விரிகிறது கதை. வாழ்க்கையின் சில விசித்திர கணங்களையும், பல தீவிர கணங்களையும்  சார்லஸ் வழியே ஜெயமோகன் நம்முன் வைக்கிறார். 

துப்பாக்கித் நம்மைத் துளைக்கும் தருணத்தில்  நாம் அதை உணர்வது எப்படி இருக்கும் , நடுக்கடலில் துப்பாக்கிகளின் முழக்கங்களில் இருந்து தப்பிக்கும் தருணம் தரும் போதை, சித்திரவதையின் வலி, அதை அனுபவிக்கும் ஒருவனின் அந்தக் கண நேர சிந்தனை.... இப்படிக்  கதை நெடூக ஒரு சராசரி மனிதன் சந்தித்திராத தீவிர சம்பவங்களின் கோர்வையால் கோர்க்கப்பட்டு நம்மைக் கட்டிப்போடுகிறது புத்தகம்.

இந்நாவலை வாசித்தவர்கள், நுனிப்புல் மேய்ந்தவர்கள், வாசிக்காதவர்கள் என அனைவருமே பொதுவாக இது இயக்கங்களுக்கு எதிரான நாவலாகப் பார்க்கிறார்கள்.  உன்னிப்பான வாசிப்பில் இந்திய உளவுத்துறையின் தேவை சார்ந்த விளையாட்டுகளும் அது சார்ந்த சம்பவங்களையும் கதையில் காணலாம்.

உலக அரங்கில் இலங்கை சதுரங்கப் பலகையாகி, அதன் விடுதலை இயக்கங்களும் கூட இந்தியா இயக்கிய சதுரங்கப் பொம்மைகளான தோற்றம் நாவல் வாசிக்கையில் உங்களுக்குக் கிடைத்தால் அது ஆச்சர்யமில்லை.

உலோகம் - ஜெயமோகன்
த்ரில்லர் நாவல்
பக்கங்கள் 216 / விலை ரூ. 50/-
இணையம் மூலம் வாங்க: கிழக்கு / 600024.காம்
இணையத்தில் வாசிக்க: ஜெயமோகன்.இன்

18 Dec 2012

அ’னா ஆ’வன்னா - நா.முத்துக்குமார்

ஆம்னிபஸ்சில் கவிதைகளுக்கு முக்கியத்துவம் தரப்படுவதில்லை எனும் அன்பர்களுக்கு இந்த நூல் அறிமுகத்தை சமர்ப்பிக்கிறேன்.


சாத்தி வைத்த வீட்டில்
தீபம் ஏற்றி வைக்க நீ வா வா
மீதி வைத்த கனவை
எல்லாம் பேசி தீர்க்கலாம் (வா...)

(பாடல்: காற்றைக் கொஞ்சம் - படம்: நீதானே என் பொன்வசந்தம்)

இப்படிப்பட்ட ஆழமான அர்த்தங்கள் கொண்ட ஒரு காதலனின் மனவோட்டத்தை இப்படி மிக அழகான வரிகள் கொண்டு சமைக்க நா.முத்துக்குமாரால் மட்டுமே முடியும் என்று தீவிரமாக நம்புபவன் நான். இந்த இரண்டு வரிகளிலும் நேரடிப் பொருள் இல்லை. மனசில் அசைபோட்டு ரசிக்கத்தக்க வரிகள்.

15 Dec 2012

பாரதியின் கண்ணன் பாட்டு

பாரதி பாட்டுல எதாவது ஒரு நாலுவரி சொல்லேன் என்று எதிரில் பார்ப்பவர் நால்வரைக் கேளுங்களேன் ("இல்லே நான் டமில் கூட்டி கூட்டிதான் வாசிக்கும்" என்பவராய் இல்லாது  நாலு வரியேனும் தமிழ் வாசிக்கத் தெரிந்த ஜீவன்களாய் அவர்கள் இருக்கட்டும்)

அவர்களில் மூவர் நிச்சயம் இதைப் பாடுவர்,
“பிறர்வாடப் பலசெயல்கள் செய்து நரைகூடிக் கிழப்பருவமெய்து..... நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ?..... இனி என்னை புதிய உயிராக்கி மதி தன்னை மிகத்தெளிவு செய்து என்றும் சந்தோசம் கொண்டிருக்க செய்வாய்”
அதென்னவோ என்னத்தை சாதிக்கவில்லை என்றாலும், இந்தப்பாடலைப் பாடினால் வீறுகொண்டு எழும் ஆவேசம் வருவதாய் ஒரு தோற்றம் நம்மவர்களுக்கு.


5 Dec 2012

கோபுலு - கோடுகளால் ஒரு வாழ்க்கை: எஸ்.சந்திரமௌலி


கோபுலு!

இந்தப் பெயரை கார்ட்டூன்களோடு மட்டுமே தொடர்புப்படுத்திப் பார்க்கத் தெரியும் எனக்கு. மதன் போல ஆனந்த விகடனின் முன்னாள் அரசியல் கார்ட்டூனிஸ்ட் / ஜோக் எழுத்தாளர் இவர் என்பது நான் இவர்பற்றி கொண்டிருந்த சித்திரம். எங்கள் அம்மாவழிப் பாட்டி வீட்டில் எண்பதுகளில் பார்த்த பைண்ட் செய்யப்பட வாஷிங்கடனில் திருமணம் புத்தகத்தில் வந்த ஓவியங்களில் இவர் பெயரைப் பார்த்திருக்கிறேன்.


”கோபுலு : கோடுகளால் ஒரு வாழ்க்கை” :  கிழக்கு பதிப்பகத்தின் அதிரடித் தள்ளுபடி விற்பனையின்போது வாங்கக் கிடைத்த புத்தகம். "பின்னொரு நாளில் படித்துக் கொள்ளலாம்" என்று இந்தப் புத்தகத்தை வாங்கிப் போட்டிருந்தேன். வெள்ளை நிற அட்டையில் கருப்பு வெள்ளையில் கோபுலு ஓவியம் வரைவது போன்ற நேர்த்தியான, அழகான வடிவமைப்பு கொண்ட புத்தகம். புத்தக அட்டையை வடிவமைத்தவரும் நான் புத்தகம் வாங்க முக்கியக் காரணமாக இருக்கலாம். 


சமீபத்தில் எங்கள் வீட்டிற்கு வந்தபோது என் அலமாரியில் இப்புத்தகத்தைப் பார்த்த சுனீல் கிருஷ்ணன், "இந்த புக்கைப் பத்தியெல்லாம்  எழுதுங்க கிரி. ", என்றார். புத்தகத்தை எடுத்து வாசிக்கத் துவங்கினேன். தொண்ணூறே நிமிடங்கள் எக்ஸ்பிரஸ் வேகத்தில் நம்மைப் படிக்கவைக்க வல்ல நடை.  

கோபுலு ஒரு வேடிக்கைச் சித்திர ஓவியர் / கார்ட்டூனிஸ்ட் மட்டுமல்ல தேர்ந்த  ஓவியங்கள் வரைவதிலும் வல்லவர். முன்னாள் தஞ்சை ஓவியக்கல்லூரி மாணவர், ஆனந்தவிகடனில் மாலி, தேவன், சாவி, சில்பி போன்ற பிதாமகர்களுடன் பணிபுரிந்தவர், பின்னர் சில விளம்பர நிறுவனங்களில் பணிபுரிந்தவர், கடந்த நாற்பது வருடங்களாக ஆட்வேவ் (AdWave) என்னும் விளம்பர நிறுவனம் நடத்தி  வருபவர்....

.....இந்தத் தகவல்கள் மட்டுமில்லை புத்தகம். இப்படித் தகவல்களோடு நிறைந்திருந்தால் பத்தோடு பதினொன்றான மற்றுமோர் வாழ்க்கை வரலாறுப் புத்தகாம இருந்திருக்கும் இந்தப் புத்தகம். ஆனால், வாழ்க்கையின் நெடிய பாதையைக் கடந்து வந்த ஒருவர் ஈஸிசேரில் சாவகாசமாக அமர்ந்தவாறு சொல்லும் ஒரு கதையை அவர் எதிரில் அமர்ந்து கேட்பதான பாவனையில் புத்தகத்தை வாசிக்க முடிகிறது நம்மால் எனபதுதான் புத்தகத்தின் சிறப்பு. புத்தகமும் அப்படித்தான் உருவாகியிருக்கிறது.



கோபுலுவின் வார்த்தைகளிலேயே விரிகிறது அவர் வாழ்க்கைக்கதை. அதை நேர்த்தியாகத் தொகுத்து நயம்பட தந்திருக்கிறார் சந்திரமௌலி. எண்பது வயது கடந்த ஒருவர் சொல்லச் சொல்லக் கேட்டு அதை ஒரு சுவாரசிய நடையில் புத்தக வடிவில்  கொண்டு வருதல் எளிதன்று. சந்திரமௌலி இதைத் திறம்பட செய்திருக்கிறார். 

தன் குழந்தைப் பருவத்தைப் பற்றி கூறும்போது நிஜக்குழந்தையாகவே மாறிப் போகிறார் கோபுலு. குதூகலம் கொப்பளிக்கும் அந்த முதல் நான்கு அத்தியாயங்களை வாசிக்கையில் எங்கள் கிராமத்து வாழ்க்கைக்கே என்னைக் கொண்டு சென்றுவிட்டார் கோபுலு.

சின்னஞ்சிறுவர்கள் மனதில் தேங்கிப் போயிருக்கும் சில அசட்டு நம்பிக்கைகளும் அந்த அசட்டு நம்பிக்கைகளைச் சுற்றி அவரவர் இஷ்டத்திற்கு கட்டியெழுப்பும் புதுப்புதுக் கதைகளும் எல்லோர் வாழ்க்கையிலும் சகஜம். கோபுலு குறிப்பிடும் “பீரங்கிக்குள் ஐந்துதலை நாகம்” அத்தகையது.

சென்னை போன்ற நகரங்களில் இப்போது தடையில் இருக்கும் ”பட்டம் விடுதல்” கோபுலு வளர்ந்த தஞ்சை மாநகரில் எப்படி கனஜோராக நடந்தது என்பதை சொல்ல ஒரு அத்தியாயம். தஞ்சை மன்னன் கட்டிய பெரிய கோயிலின் பிரகார ஓரங்களின் மண்டபத்தை ஒட்டிய குழிகளெல்லாம் கோபுலு & கோ மாஞ்சா தயாரிப்பதற்கு பாட்டில் ஓடு அரைக்கப் பயன்பட்டிருக்கின்றனவாம். கோயில் வளாகத்திலேயே மாஞ்சா போட்ட நூலைக் காய வைப்பார்களாம் (1920 - 30 வருடங்கள்). கேட்கவே (படிக்கவே) வேடிக்கையாக இருக்கிறது.

தீபாவளி நேரத்தில் தெருத்தெருவாகச் சென்று வெடிக்காத பட்டாசுகளைச் சேகரித்த அனுபவம் உங்களுக்கு உண்டா? அவற்றைப் பிரித்தெடுத்து அவற்றினுள்ளே இருக்கும் வெடிமருந்தைச் சேகரிக்கும் வேலையைச் செய்தது? எனக்கென்னவோ இந்தத் தலைமுறைக் குழந்தைகளுக்கு வெடிமருந்தின் நிறம் என்னவென்று தெரியுமோ என்பதே கேள்வியாக இருக்கிறது. கோபுலு தீபாவளிக்குப் பட்டாசு வாங்கிய / வெடித்த கதை இப்போது முப்பது வயதைக் கடந்த எல்லோரையும் தம் பால்ய வயதிற்கு நிச்சயம் கொண்டு செல்லும்.

இந்த பால்ய வயதின் பக்கங்களைப் பற்றி நான் விலாவரியாகப் பேசக் காரணமே, நான் முன்னமே குறிப்பிட்ட அவற்றின் குதூகலம் கொப்பளிக்கும் குழந்தைத்தன நடைதான். 

பால்ய வயதிற்குப் பின் ஓவியக் கல்லூரியில் பயின்றது, பணிநிமித்தம் மும்பை, சென்னை என்று பயணப்பட்டது. சென்னையில் விகடனில் பதினெட்டு வருடங்கள் பணிபுரிந்தது, அங்கே சந்தித்த பெரிய மனிதர்கள், அவர்களுடனான நட்பு, சில சுவாரசிய / ருசிகர அனுபவங்கள், படங்கள் வரைவதற்காக மேற்கொண்ட பயணங்கள் என்று அடுத்த ஆறு அத்தியாயங்கள் செல்கின்றன.

விகடனில் இருந்து விலகி ஒன்பது வருடங்கள் வெளியே விளம்பர நிறுவனங்களில் பணிபுரிந்த அனுபவங்களும், அடுத்தது AdWave அத்தியாயங்களும் பேசி நிறைகிறது புத்தகம்.

இத்தனை சுவாரசியங்கள் தாண்டி புத்தகத்தில் ஒரு பெரும் குறை உண்டு. கோபுலு வரைந்த ஓவியம் ஒன்றேயொன்றைத்தான் மொத்தப் புத்தகத்திலும் நமக்குத் தந்திருக்கிறார்கள். இதற்கு நியாயமான காரணங்கள் இருக்கக்கூடும், எனினும், இதை ஒரு பெரிய குறையாகவே நான் காண்கிறேன்.

காளிமார்க் பானங்களின் அந்நாளைய விற்பனைக்கு கோபுலு டிசைன் செய்து தந்த விளம்பரங்கள் பெரிதும் உதவியுள்ளன. ஒரு சாம்பிள் இங்கே.

நன்றி: http://www.neerottam.com


கோபுலு கலைமாமணி விருது பெற்றவர், ஞானபாரதி அறக்கட்டளையின் அறங்காவலர்களுள் ஒருவராகத் திகழ்ந்தவர். தில்லானா மோகனாம்பாள் திரைப்படமானது விகடனில் தொடர்கதையாக வந்தபோது அதற்கு ஓவியம் படைத்தவர் என்பவை தாண்டி, ஸ்ரீராம் சிட்ஸ் நிறுவனத்தின் லோகோ மனிதரை உருவாக்கியவர், இப்போது நாம் தினமும் பார்த்துக் கொண்டிருக்கும் சன் டிவி’க்கான லோகோவை வடிவமைத்தவரும் அவரே.

புத்தகத்தின் பின்னட்டையில் குறிப்பிடுகிறார்கள்:

”ஓவியர் கோபுலுவின் வாழ்க்கையை அவரது எழுத்திலேயே படிப்பதென்பது, ஓர் அருமையான கருப்பு-வெள்ளைத் திரைப்படத்தை நீண்ட நாள் கழித்துப் பார்க்கும் ஏகானுபவம்”

ஆம்! ஏகானுபவம்தான்!

கோபுலு - கோடுகளால் ஒரு வாழ்க்கை
எஸ். சந்திரமௌலி
வாழ்க்கை வரலாறு
112 பக்கங்கள் / விலை ரூ.60/-
இணையம் வழியே புத்தகம் வாங்க: கிழக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...