சிறப்புப் பதிவர்: ஷாந்தி
Image courtesy http://images.word-power.co.uk/
Short Cuts ரேமண்ட் கார்வரின் தேர்ந்தெடுக்கப்பட்ட 9 சிறுகதைகளின் தொகுப்பு. அமெரிக்க இலக்கியத்தில் கார்வரின் சிறுகதைகள் சமகால சிறுகதைகளுள் சிறந்த படைப்புகளாய் திகழ்கின்றன. அனேகமாய் இவர் கதைகளை படித்தவுடன் கார்வருக்கு நாம் வாசகர்களாகி விடுகிறோம். எத்தகைய தருணங்களையும் இவர் விவரிப்பு சுவாரஸ்யமாய் காட்டிவிடுகிறது. இவரின் விவரிப்புகளில் கதையின் கனம் அத்தனை கச்சிதமாய் வெளிப்பட்டு படித்து முடித்த பின்னும் அந்த சம்பவங்கள், கதாபாத்திரங்கள் நம்முள் அதிர்வலைகளை உண்டாக்குகின்றன.