இந்த நூற்றாண்டுச் சிறுகதைகள் -1,3 தொகுப்புகளைத் தொடர்ந்து , இந்த வாரம் அதன் நான்காம் தொகுப்பின் விமர்சனம். சில கதைகள் படித்து முடித்தவுடன் புரிவதில்லை, சில கதைகள் உதட்டோரம் குறுநகையை வரவழைக்கின்றன, சில கதைகள யோசிக்க வைக்கின்றன, சில கதைகள் எளிமையாக இருக்கின்றன, சிலது கடுமையான வார்த்தைப் பிரயோகத்துடன் படிக்கிற மக்களை தெறித்து ஓடச் செய்கின்றன. சில கதைகள் பழக்கப்பட்ட விஷயங்களுக்குப் புதிய தரிசனம் கொடுக்கின்றன, சில கதைகளின் முடிவை வாசகர்களே தீர்மானித்துக் கொள்ளட்டும் என்று விட்டுவிடுகிறார்கள். இந்தப் புத்தகத்தில் மேலே சொன்ன மாதிரி பலவகைக் கதைகள்.
A.J.Cronin
A.K.Ramanujan
Amartya Sen
Andrea Maria Schenkel
Anton Chekhov
Arthur Hailey
Bill Bryson
Deborah Eisenberg
Elizabeth Kostova
Gay Neck
Geoff Dyer
George Orwell
Harper Lee
Henning Mankell
Ian McEwan
Jared Diamond
Jilly Cooper
Jonathan Livingstone Seagull
Joseph Heller
Kenneth Anderson
Kiran Desai
Maugham
Michael McCarthy
O.Henry
Orhan Pamuk
P.G.Wodehouse
PB.ஸ்ரீனிவாஸ்
R.K.Narayan
Richard Bach
Ronald Wilks
Stephen King
Swami Tejomayananda
Upamanyu Chatterjee
William Sydney porter
dhan gopal mukerji
mark tully
okakura kakuzo
saggi
steven weinberg
vikram seth
ஃபெயின்மன்
அ. முத்துலிங்கம்
அ.கா.பெருமாள்
அகிலன்
அசோகமித்திரன்
அனார்
அறிஞர் அண்ணா
அறுசுவை அரசு நடராஜன்
அழகியசிங்கர்
ஆ. சிதம்பரகுற்றாலம்
ஆதவன்
ஆர்.கே.நாராயண்
ஆர்.ஷண்முகசுந்தரம்
ஆஸ்கார் ஒயில்டு
இடாலோ கால்வினோ
இந்திரா பார்த்தசாரதி
இந்துமதி
இரா. நாறும்பூநாதன்
இரா.நடராசன்
இரா.முருகன்
இரா.முருகவேள்
இலக்கிய வீதி இனியவன்
இலவச கொத்தனார்
உமா சம்பத்
என்.சொக்கன்
என்.ராமதுரை
எம் கோபாலகிருஷ்ணன்
எம். வி. வெங்கட்ராம்
எர்னெஸ்ட் ஹெமிங்வே
எஸ். ராமகிருஷ்ணன்
எஸ்.சந்திரமௌலி
ஏ.கே.ராமானுஜன்
ஏ.கோபண்ணா
ஒல்கா பெரோவ்ஸ்கயா
க.நா.சு
கண்மணி குணசேகரன
கரிச்சான் குஞ்சு
கலாப்ரியா
காப்கா
காலபைரவன்
கி. ராஜநாராயணன்
குமரி எஸ்.நீலகண்டன்
குல்தீப் நய்யார்
கே நெக்
கோபிநாத்
கோபுலு
சந்திரசேகர சர்மா
சமஸ்
சல்மான் ரஷ்டி
சா. கந்தசாமி
சா.பாலுசாமி
சாருநிவேதிதா
சாலீம் அலி
சி.சரவணகார்த்திகேயன்
சி.சு.செல்லப்பா
சிபி.கே.சாலமன்
சு. வேணுகோபால்
சுகுமாரன்
சுஜாதா
சுந்தர ராமசாமி
சுனில் ஜோகி
சுப்புடு
சுவாமி விவேகானந்தர்
செல்லம்மா பாரதி
செள.ராஜன்
சே. இரகுராமன்
சோம.வள்ளியப்பன்
ஜனனி ரமேஷ்
ஜான் பான்வில்
ஜி.நாகராஜன்
ஜிம் கார்பெட்
ஜெயகாந்தன்
ஜெயமோகன்
ஜே. ஹெச். வில்லியம்ஸ்
ஜோதிநரசிம்மன்
டாக்டர். சு.முத்து செல்லக்குமார்
டாக்டர். பி.எம்.ஹெக்டே
டாக்டர்.எல்.மகாதேவன்
தமிழ் மகன்
தரம்பால்
தி. ஜானகிராமன்
தி.ஜானகிராமன்
தியடோர் பாஸ்கர்
து.கணேசன்
ந.பிச்சமூர்த்தி
நகுலன்
நடிகர் சிவகுமார்
நமீதா தேவிதயாள்
நா.முத்துக்குமார்
நாகம்மாள்
நாகூர் ரூமி
நாஞ்சில் நாடன்
ப. சிங்காரம்
பல்லவி அய்யர்
பழ.அதியமான்
பழ.கருப்பையா
பவன் வர்மா
பவா செல்லதுரை
பஷீர்
பா.ராகவன்
பாம்பே ஜெயஸ்ரீ
பாரதியார்
பாலகுமாரன்
பாலச்சந்திரன் சுள்ளிக்காடு
பாலு மகேந்திரா
பாவண்ணன்
பி.எச்.டேனியல்
பி.எம்.சுந்தரம்
பி.ஏ.கிருஷ்ணன்
பி.வி.ராமஸ்வாமி
பிரமிள்
பெஞ்சமின் ப்ளாக்
பெருமாள் முருகன்
பொ.கருணாகரமூர்த்தி
மகாகவி பாரதியார்
மதன்
மனுஷ்யபுத்திரன்
மருதன்
மலர்மன்னன்
மா.கிருஷ்ணன்
மார்க்வெஸ்
மாஸ்தி
மில்லி போலக்
முகில்
முஹமது யூனுஸ்
யதுகிரி அம்மாள்
யுவன் சந்திரசேகர்
ரகோத்தமன்
ரமணி சந்திரன்
ரா.கி.ரங்கராஜன்
ராஜாஜி
லலிதாராம்
லா.ச.ரா
லிவிங்ஸ்மைல் வித்யா
லூசியன் ஸ்ட்ரைக்
லெமூர்
வ.ரா
வண்ணதாசன்
வா.மு கோமு
வாலி
விட்டல் ராவ்
வின்சென்ட் ஷீன்
விளதீமிர் பகமோலவ்
வீயெஸ்வி
வுடி ஆலன்
வெரியர் எல்வின்
வேதவல்லி
வைக்கம் முகமது பஷீர்
வைணவச் சுடராழி ஆ. எதிராஜன்
வைரமுத்து
ஷோபா சக்தி
ஹென்னிங் மான்கெல்
Showing posts with label விட்டல் ராவ். Show all posts
Showing posts with label விட்டல் ராவ். Show all posts
22 Sept 2012
25 Aug 2012
இந்த நூற்றாண்டுச் சிறுகதைகள் -3
Posted by
Balaji
பெயர் : இந்த நூற்றாண்டு சிறுகதைகள்-3
பதிப்பகம் : கலைஞன் பதிப்பகம்,
10, கண்ணதாசன் சாலை,
தி.நகர், சென்னை-17
உள்ளடக்கம் : சிறுகதைகள்
தொகுத்தவர் : விட்டல் ராவ்
இரண்டு வாரம் முன்பு எழுதிய "இந்த நூற்றாண்டுச் சிறுகதைகள்-1" புத்தக பார்வையைத் தொடர்ந்து இந்த வாரம் "இந்த நூற்றாண்டுச் சிறுகதைகள்-3" புத்தகத்தைப் பார்க்கலாம்.
புகழ் பெற்ற எழுத்தாளர்கள், அவ்வளவாக பெயர் தெரியாத எழுத்தாளர்கள் என்று சென்ற நூற்றாண்டில் வெளிவந்த கதைகளில் குறிப்பிட்ட ஒரு எண்ணிக்கையளவு கதைகளைத் தேர்ந்தெடுத்திருக்கிறார் விட்டல் ராவ். இத்தனை கதைகளைத் தேர்ந்தெடுக்க எத்தனைக் கதைகளைப் படித்திருக்க வேண்டும் இவர்?
இந்தத் தொகுப்பில் என் மனதில் தாக்கம் ஏற்படுத்திய ஆறு சிறுகதைகள் இவை:
புகழ் பெற்ற எழுத்தாளர்கள், அவ்வளவாக பெயர் தெரியாத எழுத்தாளர்கள் என்று சென்ற நூற்றாண்டில் வெளிவந்த கதைகளில் குறிப்பிட்ட ஒரு எண்ணிக்கையளவு கதைகளைத் தேர்ந்தெடுத்திருக்கிறார் விட்டல் ராவ். இத்தனை கதைகளைத் தேர்ந்தெடுக்க எத்தனைக் கதைகளைப் படித்திருக்க வேண்டும் இவர்?
இந்தத் தொகுப்பில் என் மனதில் தாக்கம் ஏற்படுத்திய ஆறு சிறுகதைகள் இவை:
பிரயாணம்- அசோகமித்திரன் .:வயது முதிர்ந்து நோயினால் அவதிப்படும் தன்னுடைய குருவுடன் மலைப் பிரதேசம் வழியாக வரும் சீடன், இரவில் அவருடைய சாவை எதிர் கொள்கிறான். அதைத் தொடர்ந்து அவரது உடலை ஓநாய்களிடமிருந்து அவன் எப்படி காப்பாற்றுகிறான் என்பதே கதை. சீடனின் பார்வையில் இருந்து மொத்த கதையும் சொல்லப்படுகிறது, கடைசி பத்தி வரை மிக சாதாரணமாக செல்லும் கதை, திடுக்கிட செய்யும் முடிவு, ஓ.ஹென்றிதனமான கதை, மிக சிறந்த ஹாரர் கதைன்னு சொல்லாம்.
ஜன்னல் - சுஜாதா : மனித மனம் எவ்வளவு விசித்திரமானது ஒரு சமயம் வாழ்க்கையில் பிடிப்பு ஏற்படுகிறது, இன்னொரு சமயம் அதை வெறுக்கவும் செய்கிறது. ஒரே வேலையை ஒன்பது வருடங்களாக தினமும் 8 மணி நேரம் செய்யும் சீனிவாசனின் கதை இது. ஒரு நாள் தற்கொலை செய்துக் கொள்ளும் எண்ணம் அதிகமாக வரவே மருத்துவரை சந்திக்கிறான்.இயந்திரத்தனமான வாழ்க்கை மனித மனதில் ஏற்படுத்தும் மாற்றங்கள், அவற்றை மனிதன் எப்படி எதிர்கொள்கிறான் - இது விவாதிக்கப்பட வேண்டிய விஷயம்.
யானையின் சாவு - சார்வாகன் : குழந்தைகளோடு பழக ஆரம்பிக்கும்போது கஷ்டமாக இருக்கும், நாம் அதனுடைய அலைவரிசையை அடையும்போது நாமும் குழந்தையாவே மாறிவிடுகிறோம், ஆனால் குழந்தை வளர்ந்து விடும்போது நாம் குழந்தையாவே இருந்து விடுகிறோம். கோயிலில் நிஜ யானையைப் பார்த்துவிட்டு அதை வாங்க வேண்டும் என அடம் பிடிக்கும் குழந்தை.பொம்மை யானை வாங்கித் தந்தவுடன் அதனுடன் ஐக்கியமாகி விடுகிறது, குழந்தையின் தந்தையான ரங்கநாதனும் பொம்மை யானையை நிஜ யானையாக பாவித்து விளையாடுகிறான், ஒரு நாள் குழந்தை மற்றும் யானையோடு புதிய ஆட்டம் ஆடலாம் என்று அவன் வரும்போது , குழந்தை யானையை வெறுத்து பொம்மை கார்க்கு தாவி விடுகிறது.
11 Aug 2012
இந்த நூற்றாண்டு சிறுகதைகள்-1
Posted by
Balaji
பெயர் : இந்த நூற்றாண்டு சிறுகதைகள்-1
பதிப்பகம் : கலைஞன் பதிப்பகம்,
10, கண்ணதாசன் சாலை,
தி.நகர், சென்னை-17
உள்ளடக்கம் : சிறுகதைகள்
தொகுத்தவர் : விட்டல் ராவ்
இந்த வாரம் படித்தது "இந்த நூற்றாண்டு சிறுகதைகள்-1" கலைஞன் பதிப்பகம். அரசு பொது நூலகத்தில் இருந்து எடுத்ததினால், முன் பக்கங்கள் இரண்டு மூன்று இல்லை அதனால் யாரு இந்த 31 சிறுகதையும் தொகுத்தார்கள் என தெரியவில்லை, சில நாட்கள் கழித்து நூலகம் சென்ற போது "இந்த நூற்றாண்டு சிறுகதைகள்-2" கிடைத்தது, அதில் இருந்து தொகுத்தவர் யார் என அறிய முடிந்தது.
முதலில் படித்த கதை புதுமைப்பித்தனின் "பிரம்ம ராக்ஷஸ்" முதல் பகுதி ஒரு மாதிரி வெறுமையாக ஆரம்பித்து பிரம்ம ராக்ஷஸ் உடைய கதையைச் சொல்கிறது, இரண்டாவது பகுதி நடப்பு உலகில் சிறு வயது முதல் மரணத்தைக் கண்டு அஞ்சாத ஒருவன், தன் மனைவியின் மரணத்தைக் கண்டு அஞ்சுவதைச் சொல்கிறது, அவன் தன்னுடைய ஒரே குழந்தையைத் தூக்கிக் கொண்டு பிரயாணப்படுகிறான். வழியில் பிரம்ம ராக்ஷஸ் குகையை எதிர்கொள்கிறான். இதில் இருந்து கதை ஒரு psychological thriller, அறிவியல் புனைவு நோக்கி சென்று ஒரு அபாரமான முடிவை அடைகிறது. தமிழில் வந்த முதல் ஹாரர் (horror) சிறுகதை என்று சொல்லலாம்.
வெளவால் -ஆனை சூ குஞ்சிதபாதம் கதையின் கரு: அடுத்தவன் பணம் கீழே கிடந்தால்கூட எடுக்கக் கூடாது, எடுத்தால் நோய் நொடி வரும், அவ்ளோதான். ஆனால் அந்தத் திருட்டுப் பணத்திற்குக் காட்டப்படும் குறியீடு வெளவால், வெளவால் பொதுவாக வீட்டில் வசிக்காது, இருட்டிலே உலாவும், மனிதனைக் கண்டால் தூரப் போய்விடும், இந்தக் கதையில் அதற்கு மாறாக சொல்லப்படுகிறது, கதையின் நாயகன் அந்தப் பணத்தை எடுத்த இடத்திலேயே போட்ட பின்பு அவன் மனைவிக்கு உடம்பு சரியாகிறது.
புவனாவும் வியாழக் கிரகமும் - ஆர். சூடாமணி பணக்கார நபரான எஸ். டி ராஜசேகர் பேருந்து நிறுத்தத்தில் ரொம்ப நேரமாகக் காத்திருக்கும் மகாலிங்கத்தைத் தன் காரில் ஏற்றிச் செல்கிறார், அந்த சமயத்தில் மகாலிங்கம் தன் பெண்ணுக்கு வரன் தேடிக் கொண்டிருக்கிறார். 15 வருடம் கழித்து இருவரும் சந்திக்கின்றனர். பெண்ணின் பார்வையில் சொல்லப்படும் கதை. திருமணம் ஆகாத ஒரு பெண்ணின், தந்தையின் கதை. இதற்கு மேல் சொன்னால் சஸ்பென்ஸ் போய் விடும்.
பாயசம்: தி. ஜானகிராமன் : சாமநாது என்ற சாதாரண மனிதனின் பார்வையில் இருந்து சொல்லப்படுகிற கதை இது.அவருடைய கோபங்களும், பொறாமையும், குற்ற உணர்ச்சியும் தன்னுடைய சொந்த அண்ணா மகன்(சுப்பராயன்) பேரில் வெளிப்படும்போது சின்ன அதிர்வு ஏற்படுகிறது, இருவருடைய வாழ்வும் இரு துருவங்கள் போல் பிரிந்து இருந்தாலும், சுப்பராயனுக்கு சித்தப்பாவின் மேல் மதிப்பும் மரியாதையும் அதிகம். சாமநாதுவின் பொறாமையும் , குற்ற உணர்ச்சியும் எல்லை மீறும்போது என்ன நடக்கிறது என்பதே கதை.

பிள்ளையார்
கோவிலில் ஒரு பிணம் - கி .அ. சச்சிதானந்தம் யாராவது ஒரு விஷயம்
சொன்னால், அதை எவ்வளவு தூரம் நம்பலாம்? அது உண்மையா பொய்யா என்று ஆராய
வேண்டாம்? இந்தக் கதையில் வரும் கிராமத்தில் உள்ள பிள்ளையார் கோவிலில்
பிணம் ஒன்று விழுந்து கிடப்பதாகச் செய்தி வருகிறது, பிணத்தை முதலில்
பார்த்தவன் காய்ச்சலில் விழுந்து கிடக்கிறான். பிணத்தைப் பார்க்க
ஒவ்வொருவரும் பயந்து கொண்டு பிணம் யாருடையதாக இருக்கும் என கதை
கட்டுகிறார்கள், காவல்துறையும்/மணியக்காரரும் வரும்போது பிணம்தான் அங்கே
இருக்கிறதா?
அப்பாவின்
பள்ளிக்கூடம்- ந. முத்துசாமி முக்கால்வாசி பேர் பள்ளிக்கூடம் போகும்போது
அழுதிருப்போம், "வாத்தியார் அடிச்சுட்டாரு.." என்று அழுவோம், ஆனால்
இந்தக் கதையில் வரும் பையனின் தந்தை அந்தப் பள்ளியில் ஆசிரியராக இருந்தவர்,
அந்தப் பள்ளியில் படிக்கும் மகன் தந்தையின் மரணத்தை அதே பள்ளியிலேயே
சந்திக்கிறான், அதனால் அந்த சிறுவனின் மனம் எவ்வளவு உளைச்சல் அடைகிறது என
சொல்லும் கதை.
Subscribe to:
Posts (Atom)


