A.J.Cronin A.K.Ramanujan Amartya Sen Andrea Maria Schenkel Anton Chekhov Arthur Hailey Bill Bryson Deborah Eisenberg Elizabeth Kostova Gay Neck Geoff Dyer George Orwell Harper Lee Henning Mankell Ian McEwan Jared Diamond Jilly Cooper Jonathan Livingstone Seagull Joseph Heller Kenneth Anderson Kiran Desai Maugham Michael McCarthy O.Henry Orhan Pamuk P.G.Wodehouse PB.ஸ்ரீனிவாஸ் R.K.Narayan Richard Bach Ronald Wilks Stephen King Swami Tejomayananda Upamanyu Chatterjee William Sydney porter dhan gopal mukerji mark tully okakura kakuzo saggi steven weinberg vikram seth ஃபெயின்மன் அ. முத்துலிங்கம் அ.கா.பெருமாள் அகிலன் அசோகமித்திரன் அனார் அறிஞர் அண்ணா அறுசுவை அரசு நடராஜன் அழகியசிங்கர் ஆ. சிதம்பரகுற்றாலம் ஆதவன் ஆர்.கே.நாராயண் ஆர்.ஷண்முகசுந்தரம் ஆஸ்கார் ஒயில்டு இடாலோ கால்வினோ இந்திரா பார்த்தசாரதி இந்துமதி இரா. நாறும்பூநாதன் இரா.நடராசன் இரா.முருகன் இரா.முருகவேள் இலக்கிய வீதி இனியவன் இலவச கொத்தனார் உமா சம்பத் என்.சொக்கன் என்.ராமதுரை எம் கோபாலகிருஷ்ணன் எம். வி. வெங்கட்ராம் எர்னெஸ்ட் ஹெமிங்வே எஸ். ராமகிருஷ்ணன் எஸ்.சந்திரமௌலி ஏ.கே.ராமானுஜன் ஏ.கோபண்ணா ஒல்கா பெரோவ்ஸ்கயா க.நா.சு கண்மணி குணசேகரன கரிச்சான் குஞ்சு கலாப்ரியா காப்கா காலபைரவன் கி. ராஜநாராயணன் குமரி எஸ்.நீலகண்டன் குல்தீப் நய்யார் கே நெக் கோபிநாத் கோபுலு சந்திரசேகர சர்மா சமஸ் சல்மான் ரஷ்டி சா. கந்தசாமி சா.பாலுசாமி சாருநிவேதிதா சாலீம் அலி சி.சரவணகார்த்திகேயன் சி.சு.செல்லப்பா சிபி.கே.சாலமன் சு. வேணுகோபால் சுகுமாரன் சுஜாதா சுந்தர ராமசாமி சுனில் ஜோகி சுப்புடு சுவாமி விவேகானந்தர் செல்லம்மா பாரதி செள.ராஜன் சே. இரகுராமன் சோம.வள்ளியப்பன் ஜனனி ரமேஷ் ஜான் பான்வில் ஜி.நாகராஜன் ஜிம் கார்பெட் ஜெயகாந்தன் ஜெயமோகன் ஜே. ஹெச். வில்லியம்ஸ் ஜோதிநரசிம்மன் டாக்டர். சு.முத்து செல்லக்குமார் டாக்டர். பி.எம்.ஹெக்டே டாக்டர்.எல்.மகாதேவன் தமிழ் மகன் தரம்பால் தி. ஜானகிராமன் தி.ஜானகிராமன் தியடோர் பாஸ்கர் து.கணேசன் ந.பிச்சமூர்த்தி நகுலன் நடிகர் சிவகுமார் நமீதா தேவிதயாள் நா.முத்துக்குமார் நாகம்மாள் நாகூர் ரூமி நாஞ்சில் நாடன் ப. சிங்காரம் பல்லவி அய்யர் பழ.அதியமான் பழ.கருப்பையா பவன் வர்மா பவா செல்லதுரை பஷீர் பா.ராகவன் பாம்பே ஜெயஸ்ரீ பாரதியார் பாலகுமாரன் பாலச்சந்திரன் சுள்ளிக்காடு பாலு மகேந்திரா பாவண்ணன் பி.எச்.டேனியல் பி.எம்.சுந்தரம் பி.ஏ.கிருஷ்ணன் பி.வி.ராமஸ்வாமி பிரமிள் பெஞ்சமின் ப்ளாக் பெருமாள் முருகன் பொ.கருணாகரமூர்த்தி மகாகவி பாரதியார் மதன் மனுஷ்யபுத்திரன் மருதன் மலர்மன்னன் மா.கிருஷ்ணன் மார்க்வெஸ் மாஸ்தி மில்லி போலக் முகில் முஹமது யூனுஸ் யதுகிரி அம்மாள் யுவன் சந்திரசேகர் ரகோத்தமன் ரமணி சந்திரன் ரா.கி.ரங்கராஜன் ராஜாஜி லலிதாராம் லா.ச.ரா லிவிங்ஸ்மைல் வித்யா லூசியன் ஸ்ட்ரைக் லெமூர் வ.ரா வண்ணதாசன் வா.மு கோமு வாலி விட்டல் ராவ் வின்சென்ட் ஷீன் விளதீமிர் பகமோலவ் வீயெஸ்வி வுடி ஆலன் வெரியர் எல்வின் வேதவல்லி வைக்கம் முகமது பஷீர் வைணவச் சுடராழி ஆ. எதிராஜன் வைரமுத்து ஷோபா சக்தி ஹென்னிங் மான்கெல்
Showing posts with label சிறுகதைத் தொகுப்பு. Show all posts
Showing posts with label சிறுகதைத் தொகுப்பு. Show all posts

4 Feb 2020

எஸ்தர் - வண்ணநிலவன்


புதுமைப்பித்தனுக்குப் பிறகு சிறுகதையில் கணிசமான அளவு பங்களிப்புச் செய்திருப்பவர் வண்ணநிலவன் என்பதைத் தமிழ் இலக்கிய உலகம் நன்கு அறியும்: விக்ரமாதித்தியன் - திண்ணை நவம்பர் 28, 1999.



நாம் சோகமயமான பாடல்களை கேட்பது, சோகமயமாக திரைப்படங்களைத் தேடிப் பார்ப்பது, சோகம் ததும்பும் கதைகளை வாசிப்பது. இவற்றின் பின்னே உள்ள உளவியல்தான் என்ன?


கூகுள் ஆண்டவரைக் கேட்டால் அவர் பலவகை விசித்திர ஆய்வு முடிவுகளை எடுத்து நம் முன் தந்தாலும் - நான் இப்படி நினைக்கிறேன். வாழ்க்கையில் நாம் எப்போதும் ஒரு துயரின் பிடியில் அகப்பட்டுக் கொண்டு தவிப்பதாகவே மனம் நினைக்கிறது. துயரம் என்பது எனக்கானது மட்டுமல்ல; மற்றவர்களுக்கும் இது உள்ளது என்று நம் மனதை நம்ப வைக்க இத்தகைய சோகச் சித்திரங்களில் நாம் ஆழ்கிறோம் என்று நான் நினைக்கிறேன்.


தனது "பின்நகர்ந்த கால"த்தில் எஸ்தர் சிறுகதை உருவான கதையைக் குறிப்பிடுகிறார் வண்ணநிலவன். ஒருமுறை நெல்லை சென்றுவிட்டுத் திரும்புகையில் வழியில் ராமநாதபுரம் மாவட்ட மக்கள் பலர் வண்டி வண்டியாக பஞ்சம் பிழைக்க ஊர்விட்டு வெளியேறுவதைக் காண்கிறார் வண்ணநிலவன். அந்த நிகழ்வு அவர் மனதை அடுத்த சில நாட்களுக்கு நீங்காத சோகமாய் நின்றாட்ட, அதன் வேகத்தில் அவர் எழுதியதுதான் எஸ்தர்.

எழுத்து எல்லோருக்கும் வாய்த்துவிடுவதில்லை என்று க்ளிஷேவாகத்தான் இதைச் சொல்ல வேண்டியிருக்கிறது. எல்லாமுமே எழுத்துதான் எனினும், நமக்கு இப்படியெல்லாம் வாய்க்குமா என்று ஏங்கும் எழுத்து சிலருடையது.

லா.ச.ரா.'வின் அபிதா ஒரு அழகு என்றால், 'கனகாம்பர'த்தில் சாரதாவின் சாதுர்யம் சொல்லும் கு.ப.ரா. வேறோரழகு.  சாலம்மாளாகவே நம்மைக் கொண்டு சென்று நிறுத்திவிடும் அழகிய பெரியவனின் 'வனம்மாள்' ஒரு வகை என்றால், கி.ரா'வின் கோமதி (அது ஆண் கோமதிதான் என்றாலும்), இன்றைய தமிழ் நடையில் சொல்ல வேண்டும் என்றால், வேறே லெவல்.

வண்ணநிலவனின் எஸ்தர் இவற்றுள் அப்படி ஒரு தனிச்சுவை.

மழை பொய்த்து, வயல் ஒழிந்து, கால்நடைகள் அழிந்து, ஊர் மொத்தமும் காலியான போதினில்; தாங்களும் ஊரைவிட்டுச் செல்வோம் என முடிவெடுக்கும் ஒரு குடும்பத்தின் கதைதான் -  நிறைந்த சோகம் நிறைந்த கதைதான் எஸ்தர். எனினும் - பசியை, பஞ்சத்தைப் பெரும் தரித்திர விவரணைகள் வழியே பிழியப் பிழியச் சொல்லாமல்; கதையின் வழி நம் அருகினில் ஒருவர் அமர்ந்து நிதானமாய்க் கதைப்பதாய் நமக்கு அதன் வீரியத்தை விளங்கச் செய்வதுவும் ஒரு பெரும் எழுத்துக் கலைதான் இல்லையா?

சுமார் மூன்றாயிரம் வார்த்தைகள் கொண்ட எஸ்தர் சிறுகதையில் மிஞ்சிப் போனால் ஒரு ஐம்பது வார்த்தைகள்தான் மனிதர்கள் கொள்ளும் சம்பாஷணைகள். மற்றவை மொத்தமும் கதை வழியும், கதை மாந்தர் வழியும் வண்ணநிலவன் நம்மிடம் நடத்தும் சம்பாஷனைதான். இப்படி ஒரு நடையில் வெளிவந்த கதையை இதன்முன் வாசித்த நினைவில்லை.

இருந்த ஒரேயொரு வத்திப்பெட்டியின் மிச்சக் குச்சிகளில் ஒன்றை பீடி பற்ற வைக்க உபயோகித்துவிட்டு தலைதாழ்ந்து தட்டில் வைக்கப்பட்ட யாருக்கும் போதாத உணவையும் மறுக்கும் டேவிட்டைப் பார்த்து இதைச் சொல்கிறாள் எஸ்தர் சித்தி:

ஏய் சாப்பிடுடே. ஒங் கோவமெல்லாம் எனக்குத் தெரியும்

இருளுக்கு எத்தனையோ விவரணைகளை வாசித்திருக்கிறோம். இருள் தரும் மருட்சியைப் பலவாறு பலர் எழுத வாசித்திருக்கிறோம். மழை பொய்த்து, பஞ்சம் சூழ்ந்து, மக்கள் எல்லாம் ஊரைவிட்டு வெளியேற; படிப்படியாக அந்த ஊரில் இரவின் இருட்தன்மை பெருகுவதை; அவர்களுக்கான அந்த கிராம வாழ்க்கையின் இறுதி எல்லையைத் அவர்கள் அடைந்துவிட்டனர் என்பதை அந்த இருள் விவரணையின் வழியாகவே சொல்கிறார் வண்ணநிலவன். 

வெளிச்சமே இல்லாத ஊரிலும் மனிதர்கள் இருக்கிறார்கள் என்ற சிறு விஷயம் கூட அந்த இருட்டை மனதினை விட்டு விரட்டப் போதும் இல்லையா?

எஸ்தர் சித்தி இப்படிச் சொல்கிறாள்.

இந்த மாதிரி மையிருட்டு இருக்கவே கூடாது, இது ஏன் இம்புட்டு இருட்டாப் போகுதுன்னே தெரியல இது கெடுதிக்குத்தான்

கதையின் நிறைவுக்கு முந்தைய இரவில் எஸ்தர் சித்தி சொல்வதுவும்; டேவிட் எதிர்க்கேள்வியாகக் கேட்பதுவும் இவை:
 நீங்க ரெண்டு பேரும் ஒங்க வீடுகளுக்குப் போயி இரிங்க. புள்ளயளயுங் கூட்டிக்கிட்டுப் போங்க நீங்க ரெண்டு பேரும் எங்கூட வாங்க, மதுரையில போய் கொத்த வேல பாப்போம், மழை பெய்யந்தன்னியும் எங்ஙனயாவது காலத்தே ஓட்ட வேண்டியது தானே? ஈசாக்கும் வரட்டும் பாட்டி இருக்காளா?”

அவ்வளவுதான் கதையில் வரும் மொத்த வசனங்களும்.

பஞ்சம், பட்டினி பேசும் எஸ்தர் சிறுகதை சில மேலான்மைப் பாடங்களை நமக்கு எடுக்கிறது என்றால் நீங்கள் நம்பித்தான் ஆக வேண்டும். சென்ற வார மத்தியில் ஒருநாள் அலுவலகப் பணி சார்ந்த  ஒரு அகச்சிக்கலில் தவித்துக் கொண்டிருந்த எனக்கு எஸ்தர் வாசித்த பின் ஒரு தீர்வு கிடைத்தது நிஜமோ நிஜம். அதன் தொடர்ச்சியாகத்தான் இந்த மதிப்புரையை இங்கே எழுதிக் கொண்டிருக்கிறேன்.

ரொம்பவும் பேச ஒன்றுமில்லை. எஸ்தர் வாசியுங்கள். 

வண்ணநிலவனின் கடல்புரத்தில் என் மனதுக்கு அத்தனை நெருக்கமான புதினம் இல்லைதான். ஏனோ, இதைக் கொண்டாடும் மற்றோரைப் போல என் மனம் கடல்புரத்தில் புதினத்தைக் கொண்டாடவில்லை. ஆனால், எஸ்தர்..... வாசிப்பினில் நல்-அனுபவம். முந்நூற்றறுபது டிகிரியில் நிறைய பாடம் எடுக்கிறது. நன்றி வண்ணநிலவன் சார்.

எஸ்தர் - அமேசானில் வாங்க / வாசிக்க:  இணைப்பு

எஸ்தர் (வண்ணநிலவனின் முதல் சிறுகதைத் தொகுப்பு) வாங்க: நற்றிணை

1 Jun 2018

துலங்கிவரும் உயிர்க்கோலம் - அனோஜன் பாலகிருஷ்ணன் எழுதிய சதைகள் சிறுகதைத் தொகுப்பு


அனோஜன் பாலகிருஷ்ணன் பற்றி பதாகையில் சுனில் கிருஷ்ணன் எழுதிய விமர்சனம் மற்றும் எடுத்த பேட்டி மூலமாக முதல் முறை அறிந்தேன். அதற்கு முன்னரே ஜெயமோகன் தளத்தில் அவரது படைப்புகளைப் பற்றிய குறிப்புகள் படித்திருந்தாலும் சுனில் கிருஷ்ணன் எழுதிய அறிமுகம் வழியாகத்தான் அனோஜனின் கதைகள் பற்றி ஒரு முழுமையான சித்திரம் கிடைத்தது. புதுக்குரல்கள் எனும் தொடரின் வழியாகத் தெரிந்த அவரது கதையுலகம் கதைகளைப் படிப்பதன் வழி பெரியதாகத் தொடங்கியது. “சதைகள்” அவரது முதல் தொகுப்பு. பதாகை பேட்டியில் அவரது ரெண்டாவது தொகுப்பான “பச்சை நரம்பு” சிறுகதையின் வாசலைத் தட்டுவதற்கானத் தனிப்பட்ட குரலை உடையது எனக் குறிப்பிட்டார். 


சதைகள் தொகுப்பில் பெரும்பாலானக் கதைகள் ஒரேமாதிரியானக் கட்டமைப்பில் அடங்காதவை. ஒரு அறிமுக எழுத்தாளரின் கரடுமுரடான முயற்சிகள் என்றே அதைச் சொல்லலாம். அனோஜனும் அப்படித்தான் அதைப் பற்றி தனது பேட்டியில் குறிப்பிட்டிருந்தார். என் வாசிப்பில் மிக முதிர்ந்த வகை இலக்கிய எழுத்தைப் போலச் செய்வதை விட இப்படிப்பட்ட தொடக்க எழுத்தில் கலாபூர்வமான கீற்றுகள் ஜோலிக்கும். எவ்விதமான பூடகமும், இலக்கிய வகைமைக்குள் அடக்கவேண்டிய கட்டாயமும் அல்லாது எழுதப்பட்ட ஒரு தொகுப்பாக இதைப் பார்க்கிறேன்.இதுவே இந்தத் தொகுப்பின் மிகப்பெரிய பலம்.

தொகுப்பின் முதல் கதையான வேறையாக்கள் கதை ஒரு பையனின் முறிந்த காதலைப் பற்றிய விவரணையாகச் சம்பிரதாயமாகத் தொடங்குகிறது. நேரடியாகச் சொல்லிக்கொள்ளாவிட்டாலும் ஒருவருக்குள்ளும் கிடந்த காதலை ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் இருவரும் வீட்டில் சொல்ல நேர்கிறது. இருவேறு ஜாதி ஆட்களாக இருப்பதால் சந்திப்பதும் கூடத் தடையாகப்போகும்போது காதலைப் பரிமாறிக்கொள்ளாமலேயே இருவரும் பிரிந்துவிடுகிறார்கள். சொந்தத்துக்குள் செய்துகொள்ளும் திருமணத்தில் பிறக்கும் குழந்தைக்கு உடல் ஊனத்திற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் எனும் முடிவை நோக்கிக் கதையை நகர்த்தியிருந்தாலும் கடைசி வரி இதை மேம்பட்ட கதையாக மாற்றியிருக்கிறது. என் பிள்ளை ஊனமாகப் பிறந்துவிட்டது எனும் வரி அதுவரை இல்லாத ஒரு நெருக்கத்தை நமக்கு அவர்களோடு உருவாக்கிவிடுகிறது. எவ்விதமான ஆட்களையும் ஆட்டிப்படைக்கும் மானுட கரிசனத்தைத் தொட்டுக்காட்டும் வரி. வேறையாக்களாக எப்படி ஆவர்?

தலைப்புக் கதையான சதைகள் மிகவும் சம்பிரதாயமான கதைக் கருவைக் கொண்டது. மனதின் சாயலுக்கேற்ப ஒவ்வொரு சமயத்தில் வெவ்வேறு வித உணர்வுகளை எழும்பும். அதுவே, பெண்களைத் தமக்கையாகவும், தாயாகவும், மனைவியாகவும் நம் மனதைப் பலவிதப் பிளவுகளாக ஆக்கிக்கொண்டு சமூகத்தில் இயங்கச் செய்கிறது. நிர்தாட்சிண்யமாக நாம் அப்பிரிவுகளை ஏற்றுக்கொண்டு, சமூகம் அங்கீகரித்த கோட்டுக்குள் மனதைக் கட்டுப்படுத்தி வைத்திருக்கிறோம். ஏதோ ஒரு குலவிதிக்குக் கட்டுப்படும் அமைப்பின்படி நடப்பவர்கள் ஆகிறோம். சதைகள் நாயகன் நம்மைப் போல சராசரியானவன். வேலை விஷயமாக கொழும்புக்குப் பயணம் செய்பவன் அங்கு ஒரு விபச்சாரியிடம் செல்கிறான். அவனது காம ஆசைக்குக் கட்டுப்படும் பெண்களைத் தேடுவதில் அவனுக்கு எந்த மனத்தடையும் இல்லை. எல்லாரும் செய்வதை தானும் செய்தால் என்ன? அதுவும் அவன் குடும்பத்துக்கு இது தெரியப்போகிறதா எனும் இலேசான கேள்விகளைக் கேட்டுக்கொண்டு மனதைச் சமாதானப்படுத்திக்கொள்கிறான். ஒரு வேளை இந்த வேலைக்கு வரப்போவதற்கு முன்பே அவனது திட்டமாக இது இருக்கலாம். விபச்சாரி  மார்பில் “மாமிசத்தின் மீது பாயும் புலி போல” பாய்கிறான். அவனது வேட்கை தீர்ந்தபின் அறைக்குத் திரும்புகிறான். அதுவரை பெண் உடலினால் எழுச்சி அடைந்தவன் பிற பெண்களைப் பார்த்து சலிப்படைகிறான். பர்ஸை அங்கேயே விட்டு வந்தவன் மீண்டும் அவளது அறைக்குச் செல்லும்போது அவளது முலைக்காம்பில் ஒரு குழந்தை பால் குடித்துக்கொண்டிருக்கும் காட்சியைப் பார்த்து திடுக்கிட்டுப்போகிறான். மீண்டும் அறைக்குத் திரும்புபவனின் மனம் சதைகளின் மீதான அசூயையை அடைகிறது. கைவிடப்பட்ட மூதாட்டிகள், பிச்சை எடுப்பவர்கள், தொய்வடைந்த சதைகள் கொண்டவர்கள் என அவனது பார்வை நிஜத்தின் மீது படிகிறது. ஆனால் இதுவும் மாயை தான். பின்னர் வீடு திரும்பும் பயணத்தில் கச்சிதமான உடலைக் கொண்ட பிற சிங்களப் பெண்களைப் பார்த்து மனக்கிளர்ச்சி அடைகிறான். ஆனால் இம்முறை அவனே இந்த மன ஊசலாட்டத்தை வெறுக்கிறான். சதை என்பது வெறும் திரட்சியின் தொகையல்ல. அது எங்கோ மனதின் ஆழத்தோடு தொடர்பு கொண்டிருக்கிறது. கூர்நோக்கியைக் கொண்டு பார்க்கும்போது சதையில் திளைக்கும் வெண்புழுக்கள் அருவருப்பூட்டுபவை. வீட்டுக்குத் திரும்பியபோது அவனது ரெண்டு வயது மகன் முலைப்பால் குடிப்பதைப் பார்க்கிறான். அலைபாயும் சிறுவனின் கண்களை அவன் காண மறுக்கிறான். குற்ற உணர்ச்சியினால் அல்ல என்பது மட்டும் நிச்சயம்.

இக்கதையுடன் அனோஜனின் அடுத்த தொகுப்பில் வெளியான பச்சை நரம்பு கதையைச் சேர்த்து படிக்க முடியும். மனதின் பலவிதமான போலச்செய்யும் மாறுவேஷங்களை ஆண் பெண் தேக உறவின் பிணைப்பு வழியாகக் காட்டுகிறார். சதை திரட்சி என்பது ஒருவிதத்தில் மனதில் வெறி கொண்டு நிற்கும் காமத்தின் புற உருவம். பசித்தவனுக்குச் சோறு போல இது மனதின் தேவையைப்பூர்த்தி செய்யும். அதனால் மனதின் வேகத்தை உடலுக்குக் கொடுக்கிறது. மனம் பலவித சமாதானங்களின் வழி அந்த வேட்கையைத் தணித்துக்கொள்ளப்பார்க்கிறது. சதைகளின் நாயகன் அடுத்த பயணத்தின் போதும் இதே வரிசையில் நிகழ்வுகளை எவ்விதமான குற்ற உணர்ச்சிக்கும் ஆட்படாமல் செய்துவிடுவான் என்பது எந்த சந்தேகமும் இல்லை. மனிதன் என்றென்றும் ஆட்கொள்ளும் வலை இது. அதனாலேயே அன்றைய புதுமைப்பித்தன் முதல் இன்றைக்கு அனோஜன் வரை எல்லாரும் ஒருமுறையேனும் எழுதித்தீர்க்கும் கருப்பொருளாக இது அமைந்துவிடுகிறது.

ஃபேஸ்புக் காதலி - எளிமையானக் கதையாக இது இருந்தாலும் ஆண் பெண் உறவுகளுக்குப் பின்னால் இருக்கும் உரிமை கோரல், பொறாமை மற்றும் ஆசை பற்றிய நல்லதொரு சித்திரம் அமைந்திருக்கிறது. திருமணமான தம்பதிகள் தங்களது திருமணமாகாத நண்பர்களைச் சந்திக்க நேரும் சங்கடங்கள் பல. ஓரிரு வருட திருமண வாழ்விலேயே பல காலங்கள் கடந்து எங்கோ வந்துவிட்ட உணர்வும், சுதந்திரம் மீதான ஏக்கமும் நிறைந்திருக்கும். இதில் பழைய காதலியோட சாட் செய்யத் தொடங்கும் கணவன் மீது பொறாமை கொள்ளும் மனைவியைப் பார்க்கும் அதே வேளையில், அவனது இயல்பான சந்தோஷங்களையும் குறும்புகளையும் விட்டுத்தர இயலா மனைவி இயல்பாக ஒரு செல்லக் கோபத்துடன் தான் உடைத்த மடிக்கணினியைச் சீர் செய்து கொடுப்பதும் மிகவும் நுட்பமான இடம். தங்களுக்குள் இருக்கும் உறவு சாகக்கூடாது என்பதற்காகவும், ஏதோ பறிபோனதாகக் கிடந்த கணவனின் உணர்வுகளை மீட்கவும் அவள் ஒரு எல்லைக் கோட்டைத் தாண்டி அவனை அனுமதிக்க சம்மதிக்கிறாள். நாளை இதுவே கூட அவர்களது உறவுக்குப் பாதகமாக அமையலாம். ஆண் பெண் உறவில் இருக்கும் சிறு சிறு ஊடல்கள் வெயிலில் உணரும் நிழலின் அருமை போல கூடலின் அருமையைக் காட்டிவிடும். இதற்காக பெண் தனது சுதந்திரக்கயிறை சிறிது தளர்த்திக்கொள்ள தயாராவாள் - அவனது குதூகலத்துக்காக அல்ல அது, அவர்களிடையே இருந்த உறவின் உயிர்ப்பை கையகப்படுத்தும் அவளது சுயநலத்தின் காரணமாக. இது ஒரு ரிஸ்கியான பயணம் என்றாலும் கூட பெண் மனம் அந்த ஆழத்தைத் தொட்டுப்பார்க்கத் தயங்குவதில்லை. அனோஜன் இதை மிக சுலபமாகக் கையாண்டுள்ளார்.

அண்ணா - சிறுகதை இந்தத் தொகுப்பில் யுத்த காலத்தை நினைவூட்டும் சம்பவங்களை பின்னணியாகக் கொண்டு எழுதப்பட்ட கதை. தனது விமர்சனத்தில் சுனில் கிருஷ்ணன் குறிப்பிட்டது போல இலங்கை யுத்தத்தை மையக் கருப்பொருளாகக் கொண்டு எழுதும் பெரும்பாலான இலங்கை எழுத்தாளர்களில் அனோஜன் தனித்து இருக்கிறார். இதற்குப்பல காரணங்கள் இருக்கலாம். அவரது வயதும், வளர்ப்பும், ஊரில் பார்த்த சம்பவங்களும் யுத்தத்திலிருந்து விலகலான மனோபாவத்தை அவருக்குத் தந்திருக்கலாம். இந்தக் கதை அப்படிப்பட்ட யூகங்களைத் தகர்க்கிறது. யுத்த காலத்திலேயே நேரடியாக இயங்கி, கேள்விப்படும் கதைகள், பார்த்த சம்பவங்கள் குறித்து எழுதுவது ஒரு வகை. எல்லாம் முடிந்த பிறகு நிதானமாக யோசித்து யுத்தத்தினால் ஏற்பட்ட சமூக பாதிப்புகளைக் குறித்து எழுதுவது ரெண்டாவது வகை. அனோஜன் இதில் ரெண்டாம் வகையிலான கதையை இதில் எழுதியிருக்கிறார். அண்ணனின் வரவை நோக்கிக் காத்திருக்கும் பெண். தனியாக வெள்ளவத்தையில் வேலை செய்கிறார். கார் ஓட்டுகிறார். கணினி வேலையில் இருக்கிறார். தனது அப்பார்ட்மெண்டிலும் தனியாகத் தங்கியிருக்கிறார். இப்படிப்பட்ட ஒரு சித்திரமே கூட பின் யுத்த காலத்திய உணர்வை கனமாக நமக்குக் கடத்திவிடுகிறது. அவள் ஹாஸ்டலில் தங்கியிருக்கும் பெண் அல்ல. அவள் தன்னையே தனிமைப்படுத்திக்கொண்டவள். ஏனோ அவளுக்குத் தன்னைச் சுற்றியிருக்கும் உலகத்தைப் பற்றிய விலகல் இருக்கிறது. அதற்கான காரணங்களை ஒரு பூ இதழைப் பிரிப்பது போல கதாசிரியர் கையாண்டிருக்கிறார். வெளிநாட்டுப் பெண்ணைத் திருமணம் செய்துகொண்டு திரும்ப வரும் அண்ணனை வரவேற்கத் தயாராகிறாள். ஐரினுடன் அவள் நடத்தும் உரையாடல் கதையின் மையத்தை நோக்கி நகர்த்துகிறது. தனியாக வாழும் அப்பா ஏன் விலகி இருக்கிறார் எனும் காரணங்கள் அம்மாவின் சாவில் எழுந்த குற்ற உணர்ச்சிக்கு இட்டுச் செல்கிறது. தன்னால் அம்மா இறக்க நேர்ந்தது எனும் குற்ற உணர்வு. அப்பாவுக்குத் தன்மீது உருவான கோபம் என பல அடுக்குகளில் யுத்தத்தின் கோரம் ஓரிரு பத்திகளில் சொல்லப்பட்டுவிடுகிறது. எல்லாவற்றையும் சேர்க்கும் கேள்வி ள்வி- அவள் ஏன் தன் குற்ற உணர்வை பிறர் மீதான கோபமாக மாற்றிக்கொள்ளவில்லை? நம் அன்றாட உலகிலேயே இது சாத்தியமாகும்போது யுத்தத்தில் எதிரிகளை நாமே கற்பனையிலோ, நனவிலோ உருவாக்கிக்கொள்வது சுலபம் தான். இலங்கை யுத்தம் இதை போராளிகளின் மீதான கோபமாக தங்கள் இயலாமைகளை மாற்ற விடவில்லை. ஏனென்றால் அம்மாவைக் கொன்றது பிற அண்ணாமார்கள் தான் என அவள் சொல்லும் இடம் யுத்தத்தினால் பாதிக்கப்படுபவர்கள் முழுமையான எதிரிகளைச் சுலபமாக உருவாக்கிச் சாடிவிட முடியாது எனும் உண்மையை சட்டெனக் காட்டிவிடுகிறது.

ஜூட் - காதலின் மலர்தல் மற்றும் உதிர்தல் பற்றிய கதை. வேறையாக்கள் கதையைப் போல் மற்றொரு கதை. பலருக்கும் இந்த கதை பிடிக்கும்படியான கூறுமுறை இதில் உள்ளது. ஆனால் வேறையாக்கள் கதையில் இருக்கும் மானுட கரிசனம் இதில் இல்லை என்பது என் வாசிப்பு.

சிவப்புமழை ஒரு விஞ்ஞானக் கதை. 2049ஆம் ஆண்டு நடக்கும் கதை என்றாலும் சம்பவங்களும் அறிவியலும் இன்றைக்கு நாம் அறிந்த உலகைச் சுற்றி இருப்பதால் எதிர்கால சமூகத்தைப் பற்றிக் கூறுவதாக நமக்குக் கடத்தப்படுவதில்லை. அவ்வகையில் இது மேலும் அதிக கற்பனையையும் மொழி மூலம் உருவாக்கும் சித்திரங்களையும் கைக்கொள்ள வேண்டிய நிலையில் எளிமையான சிறு கதையாக நின்றுவிட்டது.

அனோஜனின் கதைகளில் சிங்களவர்களும் தமிழர்களும் மிகச் சகஜமாக வலம் வருகிறார்கள். நல்லவர்களாகவோ கெட்டவர்களாகவோ அல்ல. மனிதர்களாக. சந்தர்ப்பச் சூழ்நிலை அவர்களை வெவ்வேறு தரமான வாழ்க்கையை வாழ வைத்திருக்கிறது என்றாலும் அவர்களது குழப்பங்களும் மனச்சஞ்சலங்களும் பெருவாரியாக வித்தியாசப்படவில்லை. மனிதர்களாக அவர்களது உணர்வுகளைப் படம் பிடித்திருப்பதில் அனோஜன் வெற்றி பெற்றுள்ளார். சம்பவங்களைக் கதையாக்குவதில் அவருக்கு ஒரு பாணி தெரிகிறது. ரெண்டாவது தொகுப்பான பச்சை நரம்பில் கதைகள் ஒரு கட்டுக்கோப்பான மொழியில் அமைந்திருந்தாலும், முதல் தொகுப்பான சதைகளில் கலைத்தன்மை அதிகம் கூடியுள்ளது. கதைக்கருப்பொருளின் பெறுமதியால் இயல்பாக உருவகங்களும் படிமங்களும் இவரது எழுத்தில் உருவாகிவிடுகிறது. வேறெந்த தன் முனைப்பும் இல்லாது இப்படி உருவாவதை அவர் இலக்கிய நயத்துக்காகக் கைவிடக்கூடாது. எந்த ஒரு பாணிக்குள்ளும் சிக்கிக்கொள்ளாமல், புதுப் புது களங்களில் இயல்பான கற்பனையையும், ஸ்பார்க்கையும் அவர் கைவிடாமல் தொடர்ந்து எழுதுவார் என நம்புகிறேன்.


தலைப்பு - சதைகள்
சிறுகதைத் தொகுப்பு
வெளியீடு - புதியசொல், யாழ்ப்பாணம்
puthiyasol@gmail.com
கிடைக்குமிடம் - கிண்டில் அமேசான்.

1 Jun 2013

ஏற்கனவே - யுவன் சந்திரசேகர்


                          சிறப்புப் பதிவர் - R.கோபி

மொத்தம் பதினைந்து கதைகள். ஒன்று கூட சம்பிரதாயமான கதை இல்லை. சில கதைகள் ஆசிரியரின் அந்த நேரத்து மன ஓட்டத்தின் பதிவுகள் போல இருக்கின்றன.

‘சம்பிரதாயமான, வெளிப்படையான இருப்பின் சட்டகத்தைக் கனவினாலும், பிரக்ஞையாலும் தொடர்ந்து கலைத்துக் கொண்டிருப்பவை யுவன் சந்திரசேகரின் கதைகள். கதையின் ஆதார அழகியலையும் சுவாரசியத்தையும் விரித்தபடியே அதன் வழக்கமான வழிமுறைகளைக் கலைத்து மாற்றியமைக்கும் யுவன் சந்திரசேகரின் இரண்டாவது சிறுகதைத் தொகுப்பு இது.’
-    பின்னட்டையில் வருவது

22 May 2013

கோணல்கள் - ம.இராஜாராம், சா.கந்தசாமி, நா.கிருஷ்ணமூர்த்தி, ராமகிருஷ்ணன்

'குருஷேத்திரம்’ தொகுப்பைத் தொடர்ந்து இன்னொரு சிறுகதைத் தொகுப்பு சென்னையில் நான்கு இளம் எழுத்தாளர்களால் வெளியிடப்பட்டது. ‘கோணல்கள்’ என்ற தலைப்பில் வெளிவந்த இந்த நூலில் இந்த நான்கு எழுத்தாளர்களும் தலா மூன்று கதைகள் சேர்த்திருந்தார்கள். ‘குருஷேத்திரம்’ அடைந்த இலக்கிய அந்தஸ்தை ‘கோணல்கள்’ பெறாது போயினும் பெருவாரிப் பிரசுர உலகில் இடம் அளிக்கப்படாத தரமுள்ள எழுத்தாளர்கள் கூட்டு முயற்சியில் நூல் வெளிக்கொணருவதற்கு இது நல்லதொரு தொடக்கமாயிற்று; அத்துடன் ஆண்-பெண் பாலியற் சஞ்சலங்களை இலக்கியக் கருப்பொருளாக எழுதும் போக்குக்கு முன்னோடியாகவும் அமைந்தது. - அசோகமித்ரன் (முன்னுரை - புதிய தமிழ்ச் சிறுகதைகள்)
அட்டைப் படம்: ஓவியர் கிருஷ்ணமூர்த்தி


பொதுவாக எனக்குச் சிறுகதைகளின் மீது அவ்வளவு விருப்பம் கிடையாது. நாவல்களைக் காட்டிலும் சிறுகதைகள் தெளிவாக இருப்பதாக எனக்குத் தோன்றுவதில்லை. இல்லையில்லை, அதற்கு நீ இன்னுமும் சிரத்தையாகயும் ஆழமாகவும் சிறுகதைகளை நோக்க வேண்டும் என்று நீங்கள் சொல்லலாம். ஆனால், இன்றைய நிலையில் நாவல்களே எனது விருப்பம். அதற்கான காரணங்களாக சிலவற்றை என்னால் சொல்லமுடியும். நாவல்களில் ஒரு எழுத்தாளரை என்னால் மிக அருகில் நெருங்க முடிகிறது. மாறாக சிறுகதைகள், எழுத்தாளர்கள் நடத்தும் வித்தைகளாகத் தெரிகின்றன. அவை எனக்குப் புரிவதில்லை என்பதும் ஒரு காரணம். புரிவதில்லை என்று சொல்லும் அதே நேரத்தில், இன்னது-இன்னதுதான் என்று முழுமையாகச் சொல்லிவிடும் சிறுகதைகளும் பிடிப்பதில்லை. நண்பர் ஒருவர், அவருடைய நண்பர் ஒருவர் எழுதியச் சிறுகதையை அனுப்பி, ‘இதைப் படித்துவிட்டுச் சொல்லு’ என்றார். 'இந்தக் கதைல வர்றவன் கடைசில செத்துட்டானா?’ என்று பதிலனுப்பினேன். கண்டிப்பாக நண்பர் என்னைச் சபித்திருப்பார். அதே நண்பர், “சிறுகதைகள் எல்லாவற்றையும் சொல்லிவிடாமல், கதை முடிந்த பின்பும் வாசகனிடம் எதையாவது விட்டுச் செல்ல வேண்டும். கதையை அவன் படித்த பின்பும் அதன் சொச்சம் வாசகனின் எண்ணத்தில் இருக்க வேண்டும்” என்றார். நண்பர் சொல்வது புரியாமலில்லை. ஆனால், சில சமயம் இந்தச் சிறுகதைகள் அடையாளச் சிக்கல்களை ஏற்படுத்திவிடுவதும் உண்டு. கதையே அப்படித்தானா இல்லையென்றால் நான் தான் pervert ஆகச் சிந்திக்கிறேனா? 

12 Feb 2013

நேற்று வாழ்ந்தவர்கள் - பாவண்ணன்

விழுப்புரத்திற்கும் பாண்டிச்சேரிக்கும் இடையில் வளவனூர் என்ற கிராமத்தில் பிறந்து வளர்ந்தவர் பாவண்ணன். இந்த ஊரானது என் அம்மா வளர்ந்த ஊர் என்பதால் அவர் கதைகளை வாசித்து, அங்கங்கே அவரைப் பற்றியும் வாசித்ததை விட அவரைப் பற்றி சிறுவயது முதல் என் உறவினர்கள் வாயிலாக நிறைய கேள்விப்பட்டதுண்டு. 


வளவனூர் கிராமம் என்றால் திரைப்படங்களில் காட்டும் வயல்வெளிகள், தோப்பு துறவுகள் சூழ்ந்த பசுஞ்சூழலும் இல்லை, வானம்பார்த்த கள்ளிக்காடுமில்லை. பரபரப்பான விழுப்புரம் - பாண்டிச்சேரி நெடுஞ்சாலையில் சத்திரம் பஸ் ஸ்டாப் விட்டு இறங்கினால் தென்னந்தோப்பு அதைக் கடந்தால் வரும் ஒரு யூகலிப்டஸ் தோப்பிற்கு முன்னதாக என் தாத்தா வீடு. வீட்டின் முன்னால் நூறு மீட்டர் தூரத்தில் சினிமாத்தனமான ஒரு அழகான ரயில் நிலையம். காலை-மாலை வேளைகளில் மட்டும் ஊரெங்கும் புகை மணம் பரப்பி கடந்து செல்லும் பாசஞ்சர் வண்டிகள், அவ்வப்போது தடதடத்துச் செல்லும் கூட்ஸ் வண்டிகள், ரயில் பாதையைக் கடந்தால் எப்பவும் காய்ந்து கிடக்கும் அந்த ஊரின் எப்போதோ நீர்நிறைந்திருந்ததாக எல்லோரும் சொல்லும் ஓர் ஏரி. கொஞ்சம் சின்ன டவுன் என்று சொல்லத்தக்க பெரிய கிராமம்.

வீட்டிலிருந்து சிவன் கோயில் போகும் வழியில் மணமணக்கவும் சுடச்சுடவும் கமர்கட் செய்து விற்கும் வீடு சென்று கடலை மிட்டாய்களும், கமர்கட்டுகளும் வாங்கும் போது எதிர்சாரியில் இருக்கும் ஒரு வீட்டைக் காட்டி மாமா சொல்லுவார், “இதுதான் பாவண்ணன் வீடு. உங்க பெரிய மாமாவோட க்ளாஸ்மேட்டுடா. பெரிய ரைட்டர் இப்போ”. அவர்கள் வீட்டில் தைத்த துணியொன்றை வாங்கி வர ஒருமுறை படியேறிச் சென்ற நினைவும் மங்கலாக உண்டு.

இவரது சிறுகதைகள், கட்டுரைகள் ஆகியவற்றுக்கு ஈடாக இவர் கன்னடத்திலிருந்து மொழிபெயர்த்த பதினைந்துக்கும் மேலான நூல்கள் பேசப்படுகின்றன. மொழிபெயர்ப்பிற்காக அகாதமி விருதும் பெற்றவர். கவிதைகளையும், நாட்டுப்புறப் பாடல்களையும் ஒரு மொழியினின்று மொழிபெயர்க்கும் அளவிற்கு மொழித்தேர்ச்சி பெறுதல் என்பது அசாதாரண காரியம் என்றே தோன்றுகிறது.


காவ்யா வெளியீடாக 1992’ஆம் வருடம் தொகுக்கப்பட்ட பாவண்ணனின் “நேற்று வாழ்ந்தவர்கள்” சிறுகதைத் தொகுப்பு வழக்கம்போல சமீபத்தில் ஒரு பழைய பேப்பர் கடையில் கிடைத்தது. இப்போது இந்தப் புத்தகம் சந்தையில் கிடைக்கிறதா எனத் தெரியவில்லை. இணையத்தில் தேடியபோது நிறைய நூலகங்களின் கேட்டலாகில் தட்டுப்படுகிறது.

இந்தச் சிறுகதைத் தொகுப்பை ஏனோ அதன் வரிசையில் வாசிக்காமல் என் மனம் போன போக்கில் முன்னும் பின்னும் புரட்டிப் புரட்டித்தான் படித்தேன். ஒவ்வொரு கதையும் இறுதியில் ஒரு மனசைத் தைக்கும் துன்பத்துடனே பெரும்பாலும் நிறைகிறது. கதை மாந்தர்கள் யாரும் ஃபேண்டஸி ஆசாமிகள் அல்லர். பெரும்பாலும் கீழ்த்தட்டு மக்களின் முகத்தில் அறையும் அவலமே கதை.

பாவண்ணன் எழுதுவது போல் நேரடியாகக் கதை சொல்லும் ஒருத்தரை நான் இதுவரை வாசித்ததில்லை என்றே சொல்வேன். கதைக்கென இவர் ரொம்பவெல்லாம் கற்பனைக் குதிரையை ஓட்டிப் பிரயத்தனப்படவில்லை. இவரது கதைககளன்கள் பெரும்பாலும் நம் சக மனிதர்களின் அன்றாட வாழ்க்கையே. 

பெரிதாக ஜெர்க் அடித்து, ஆஹா ஓஹோ என்று சிலாகிக்கத்தக்க சொற்களை உபயோகித்து, பெரும் வர்ணனைகளைக் கொண்டு கதையை அலங்கரிக்கும் வேலையே இல்லை. சற்றும் பாசாங்கற்ற ஒருநடை தொகுப்பில் உள்ள அத்தனைக் கதைகளிலும். கதாசிரியனை எங்குமே முன்னிறுத்தாத கதைகள். படிக்கப் படிக்க ஆச்சர்யமாக இருக்கிறது.

“வேஷம்” கதையில் அச்சேயாகாமல் வெளியாகும் ஒரு புத்தகக் கதைவழி இந்த தேசத்தின் சரித்திரத்தைப் போகிற போக்கில் சொல்லும் லாவகத்தில் துவங்குகிறது சிறுகதைத் தொகுப்பு. 

இல்லாமையின் உச்சத்தில் வாய்க்கு ருசியாக உண்ண வக்கில்லாமற் போகும் மாசக்காரியான ஆந்தாயி கதை அவள் பிள்ளைகள் பிசையும் மீன்குழம்புச் சோறோடு சேர்த்து நம் மனசையும் பிசைவது. ”கல்” உடைக்கும் மீனாவின் கதை முடிவு நம் முகத்தில் அறைந்தால், கல் விட்டெறியும் குப்புசாமியின் “தர்மம்” நம்மை நகைக்க வைக்கிறது.

”மரணம்” கதைநாயகன் குப்புசாமியுடன் பாராட்டும் நட்பு நம்மில் ஒவ்வொருவரும் வாழும் காலகட்டத்தில் யாரோ ஒருவருடன் பாராட்டிய ஒரு நட்பை நினைவுறுத்தும். எத்தனை நெருங்கிய நண்பனானாலும் அவனையும், “வீட்டுக்கெல்லாம் வராத”, என்று சொல்ல முடிவது என்னவொரு அவலம்? சமூகத்தின் ஏற்றத்தாழ்வை கதையின் போக்கில் தொட்டுச் செல்கிறார் பாவண்ணன். போதனை, புரட்சி போன்ற சமாசாரங்களெல்லாம் இல்லாமல் நெருடாமல் உள்ளதை உள்ளபடி பகர்கிறார். இக்கதையின் இறுதிப் பத்தி இல்லாமலேயே கூட கதை நிறைந்திருக்கலாம் எனத் தோன்றுகிறது.

”நேற்று வாழ்ந்தவர்கள்” கதை பற்றி நிறைய பேசலாம். குதிரை வண்டி ஓட்டுபவனான பார்த்தசாரதியின் ஆசிர்வதிக்கப்பட்ட வாழ்க்கை  அவனது அன்பான மாமனின் மகளை மணக்கும்போது மேலும் ஆசிர்வாதம் நிறைந்ததாய்த் தோன்றுகிறது. திருமணத்திற்குப் பிறகு சீர்செய்ய முடியாத படிக்கு அவன் வாழ்க்கை சின்னாபின்னமாவதும், அதைச் சீர்செய்யக் கையாலாகாத திடீர்த் தருணமொன்றில் அவன் பூணும் திரும்பி வரவியலாத துறவறமுமே கதை.  இந்தத் தொகுப்பின் சில கதைகள் எங்கள் கிராமத்தைச் சுற்றியே வருவதால் அக்கம்பக்கத்து கிராமங்களின் பெயர்களைக் கதைகளில் வாசிக்கையில் மனசு ரொம்பவும் சந்தோஷப்பட்டது.

என் தாத்தாவின் முதலாளியும் நண்பருமான ரெட்டியாரும் கூட பார்த்தசாரதியின் கதையில் வருகிறார். அவர் மகள்களைக் கோலியனூர் கோயிலுக்குத் தன் குதிரை வண்டியில் பார்த்தசாரதி அழைத்துச் செல்வதாகச் செல்கிறது கதை.

விடுமுறை நாள் ஒன்றின் மாலைப் பொழுதொன்றில் குடும்பத்துடன் ரெட்டியார் வீட்டிற்கு மரியாதை நிமித்தம் நாங்களெல்லாம் சென்றிருந்தோம். பாண்டிச்சேரி நெடுஞ்சாலையில் பெரிய தோட்டத்தினிடையே ஒரு வசதியான மாளிகை வீடு. காபி, பலகார உபசரிப்புகள் எல்லாம் முடிந்து நாங்கள் விடை பெற்ற போது வாயிலில் நின்றிருந்த குதிரை வண்டியில் ஏற்றி எங்களை வீட்டிற்கு அனுப்பி வைத்தார் ரெட்டியார்.

அன்று எங்களுக்கு வண்டியோட்டியது பார்த்தசாரதியாகத்தான் இருந்திருக்க வேண்டும் என்று நினைத்துக் கொள்கிறேன்.

நேற்று வாழ்ந்தவர்கள் - பாவண்ணன்
சிறுகதைத் தொகுப்பு
காவ்யா வெளியீடு.
201 பக்கங்கள் / விலை.ரூ.26/- (1994 பதிப்பு)

5 Jan 2013

சிறுகதை எழுதுவது எப்படி - சுஜாதா

சிறப்புப் பதிவர்: மாதவ சோமன்

”சிறுகதை எழுதுவது எப்படி?” - இந்தத் தலைப்பைப் பார்த்ததும் உங்களில் எத்துணை பேர் “சிறுகதை எழுதுவது எப்படி” என்பதைத் தெரிந்து கொள்ள இங்கே ஏதேனும் கிடைக்கும் என்று இதை வாசித்துக் கொண்டிருக்கிறீர்களோ நானறியேன்.  அப்படி யாரேனும் தடம்தவறி இதை வாசித்துக் கொண்டிருந்தால் முதலிலேயே அவர்களிடம் மன்னிப்புக் கேட்டு விடுகிறேன்.

நானும் ஒரு காலத்தில் யாரேனும் எழுதும் ஏதேனும் குறிப்புகளைக் கொண்டு சிறுகதை எழுதிவிட முடியும் என்று நினைத்திருந்தவன்தான். ஸ்டெய்ட்டா ஹீரோ என்கிற கனவெல்லாம் இல்லை நமக்கு. முதலில் சிறுகதை, பிறகு குறுநாவல், அதற்கு அப்புறம் நாவல், பின்னர் மெகாசீரியலுக்கு வசனம், வாய்ப்பு அமைந்தால் சினிமாவுக்கு வசனம், கூடவே கதையும், அதிஷ்டம் கதைவைத் தட்ட டைரக்‌ஷன், பிறகு டைரக்டர் கம் ஹீரோ வேடம், அரசியல் நுழைவு, எம்.எல்.ஏ., அமைச்சர், முதலமைச்சர் இப்படிப் படிப்படியாக வளர்ச்சி காணவேண்டும் என்ற கனவில் இருந்தவன் நான். அப்படிப்பட்ட கனவுகாண வல்ல வயதில் நம் கையில் சுஜாதா எழுதிய இந்தப் புத்தகம் அகப்பட்டது.



26 Nov 2012

ஒரு துளி துயரம் – சு.வேணுகோபால்



“பெரும்பாலான இலக்கியங்கள் வாசகனுக்கு மனச் சிதைவையே தருகின்றன”
-    நடராசன் கணேசன்

நிம்மதி என்கிற விஷயம் ஒவ்வொருவருக்கும் மாறுபடுகிறது. அதுபோலத்தான் மகிழ்ச்சியும் துக்கமும் இன்னபிற உணர்வுகளும். ஆனால் எல்லா உணர்வுகளும் நிம்மதியோடு தொடர்புடையவையாகத்தான் இருக்கிறது. மகிழ்ச்சி என்ற உணர்வே மனதின் நிம்மதியின் வெளிப்பாடுதான். போலவே, நிம்மதியற்றுக் கிடக்கும் இதயம் துக்கத்தில் அல்லாடுகிறது. ஒவ்வொருவரும் இதுதான் தங்களுக்கு மகிழ்ச்சி என அவர்களாகவே முடிவு செய்து வைத்திருக்கின்றனர். பெரும்பாலும் நிரந்தரமான ஒன்றை அடைவது இவர்களுக்கு மகிழ்ச்சி தரவல்லதாகிறது. ஒரு பொருளின், ஒருவரின் நிரந்தரப் பிரிவு சோகத்தைக் கொடுக்கிறது. இவை தாண்டியும் சந்தோஷப்படவும் துக்கப்படவும் பல காரணங்கள் இருக்கத்தான் செய்கின்றன ஒவ்வொருவருக்கும்.

நாகரிக மாற்றத்தினால் வேகம் என்பது குரல்வளையை நெரித்துக் கொண்டிருக்கும் நகர வாழ்க்கையை வாழ்பவர்களுக்கு எல்லா உணர்வுகளும் ஏறக்குறைய ஒன்றுதான், காரணம் நேரமின்மை. ஆனால் கிராமத்தில் வாழும் மக்கள் அப்படி அல்ல. மாடு கன்றை ஈன்றால் மகிழ்ச்சி. கிராமமே கொண்டாடும். ஆனால், வீட்டில் வளர்க்கும் நாய் இறந்து போனால் ஒருவரும் சாப்பிடாமல் அழுது கொண்டிருப்பார்கள். இப்படியாக கிராம மக்களின் உணர்வுகளைப் பார்த்தவர், உணர்வுகளினிடையே வாழ்ந்தவர், அந்த உணர்வுகளை உள்வாங்கிக் கொண்டவர் அதை சரியாக பிரயோகித்திருப்பதே இந்தப் புத்தகம். பெரும்பாலும் விளிம்பு நிலை மக்களின் சோகம் பற்றி பேசுகிறது இப்புத்தகம்.

வெகு இயல்பான கதைகள். பெரும்பாலும் அப்படி ஒரு நிலையை நாம் கடந்து வந்திருக்கக் கூடும் அல்லது பார்த்திருக்கக் கூடும். இருந்தாலும் இவர் கதை சொல்லும்போது அந்த சோகம் நம்மையும் ஆட்கொள்கிறது. உயிர்ச்சுனை என்ற கதை அப்படியான ஒன்றுதான். கிராமத்தில் விவசாயம் செய்யும் மக்களுக்கு நீர் ஆதாரம் மிக அவசியமானது. வறட்சியான காலத்தில் மிதமிஞ்சிய உறிஞ்சுதலின் காரணம் கிணறுகள் வற்றி விட போர் போட்டுக் கொள்ளலாம் என முடிவெடுக்கிறார் ஒரு பெரியவர். அவருக்கு இரு மகள்கள். மூத்தவள், பள்ளி ஆசிரியை. அவளுக்கு திருமணமாகி நிதின் என்றொரு மகன். இளையவளுக்கு திருமண செய்ய வேண்டித்தான் போர் போட முடிவெடுக்கிறார் பெரியவர். மூத்தவளிடம் காசு வாங்கி போர் போடுகிறார். காசும் வீணாகி, தண்ணீரும் வராமல் வீட்டிற்கு பெருங்கஷ்டம் ஏற்படுகிறது. அந்த சோகம் நம்மையும் தாக்குகிறது.

இந்தக் கதையில் முக்கியமான அம்சமே பேரன் நிதினை முக்கியமான பாத்திரமாக சித்தரிப்பது தான். குழந்தைகள் கஷ்டப்படுவது யாருக்கும் பிடிக்காத ஒரு விஷயம். கதையின் இறுதியில் காரணம் தெரியாமல் நிதின் அழும்போது வாசிப்பவனின் மனநிலை நிதினோடு ஒன்றி விடுகிறது. இயலாமை வந்து மனம் முழுவதும் அப்பிக் கொள்கிறது. பாத்திரங்கள், கரு, சொல்லப்பட்ட விதம் இவையனைத்துமே வாசகனை வீழ்த்தி விடுகிறது.

வலி, பிரிவு, இயலாமை, ஆற்றாமை, தனிமை, மரணம் என சோகத்தின் காரணிகள் அதிகமிங்கே. இக்காரணிகள் ஒவ்வொன்றையும் ஒரு சிறுகதையாக்கி இருக்கிறார். கிராமத்தின் பின்னணியில் கதையைச் சுற்றி வரும் புனைவு கதைகளின் தாக்கத்தை ஆழமாக்குகிறது. கதாபாத்திரங்களின் ஆக்கம் உண்மைத் தன்மையை அதிகர்க்கிறது. இறுதியில் ஒருதுளி துயரம் எனுமொரு கதை மனித உறவுகளைக் கொண்டாடி வாழ்வின் மீதான நம்பிக்கையை அதிகப்படுத்துகிறது. திருமண ஆசையற்று இருக்கும் ஒரு கால் ஊனமான பெண். அவளை நேசித்து ஒருவன் மணக்கிறான். திருமணத்தில் வரும் மொய் பணத்தை நண்பன் ஒருவன் அபகரிக்கிறான். அவனுக்கு கொடுக்க வேண்டிய பணம் தான் என்றாலும், திருமணத்திற்காக பலரிடம் கைமாற்றலாக வாங்கிய பணத்தை திருப்பிக் கொடுக்க இயலாத படியால் அவன் தற்கொலை செய்து கொள்கிறான். கணவனை இழந்தவள் அவன் நண்பனிடத்தே சென்று வாதிடுகிறாள். அவனோ இன்னும் பாக்கி இருபதாயிரம் எனக் கூறி பேச்சை முடிக்கிறான். கணவனை இழந்தவள், அவன் இறப்புக்கு காரணமான நண்பனுக்கு மீதியைத் தந்திருக்கத் தேவை இல்லைதான். இருந்தாலும் சில மாதங்களுக்குப் பிறகு கணவனுக்கு அவப்பெயர் கூடாதென மீதியைத் தந்து வெளியேறுவதாய் கதை முடிகிறது.

புத்தகம் நெடுக சோகம்தான் என்றாலும், அதை ஒவ்வொருவரும் எப்படி ஏற்றுக் கொள்கிறார்கள் என்பதையும் அம்மாதிரியான மக்களின் வாழ்வியலையும் உணர்த்துகிறது. 

சிறுகதைத் தொகுப்பு | சு.வேணுகோபால் | ரூ. 60 | தமிழினி பதிப்பகம்
இணையத்தில் வாங்க : கிழக்கு


24 Sept 2012

மகாராஜாவின் ரயில்வண்டி – அ.முத்துலிங்கம்



என் நண்பர்களிடம் அவர்களைக் கவர்ந்த புத்தகங்களைக் கேட்டு அதை வாங்கிப் படிப்பேன். இது என்னிடம் உள்ள ஒரு பழக்கம், கேட்டவர்கள் அனைவரும் அ.முத்துலிங்கம் பற்றி சொல்லாமல் இருந்ததில்லை.”முத்துலிங்கம் கதைகள் படிச்சிருக்கியா?” நிச்சயம் இந்த கேள்வி வந்து விழும். அப்படித்தான் அறிமுகமானார் அ.முத்துலிங்கம். சில கதைகளிலேயே தெரிந்து போனது அவர் ஒரு நல்ல கதைசொல்லி. நமக்குத் தெரிந்த பல விஷயங்களை நாமறியாத வகையில் சொல்லி ஆச்சர்யமூட்டுபவர். காதலும், எள்ளலும், நகைச்சுவையும் எப்போதும் குறைந்திடாமல் வாசகனுக்குத் திருப்தியைத் தரும் சின்ன சின்னக் கதைகள்தாம். சில வேளைகளில் “ச்ச, இவ்ளோ சீக்கிரம் முடிஞ்சிடுச்சே” என்று கூட ஏமாற்றம் தர வல்ல கதைகள்.

அன்றாடம் நம் பணி நெரிசலில், இயந்திரத்தனமாக ஏதேதோ செய்து கொண்டிருக்கையில் திடிரென ஏதோ ஒரு காட்சியோ ஒரு செய்கையோ நம்மை, நம் மனதை அப்படியே Freeze செய்து விடும். பல நாட்களுக்கு முன்போ, பல வருடங்களுக்கு முன்போ நிகந்த ஏதோ ஒன்றையோ, யாரோ ஒருவரையோ நினைவுபடுத்தி மகிழ்விக்கவோ, நோகடிக்காமலோ அது போகாது. இவ்வுலகில் மிகப் பெரிய வரம் நினைவுகள், மிகப்பெரிய சாபமும் கூட. நினைவோடைகளை மனதில் தாக்கம் ஏற்படும் படி இவர் சொல்லும் கதைகள் இதில் ஏராளம்.

மகாராஜாவின் ரயில்வண்டி கதையில் நாயகன் அன்னியர் ஒருவர் வீட்டில் தங்குகிறார். அவர்களில் வீட்டில் இருக்கும் பெண்ணை இவருக்கு மிக பிடித்துப் போகிறது. மெல்லிய கிதார் இசையில் அவளுடன் சேர்ந்து இனிப்பு பிஸ்கட் சாப்பிடுகிறார். அவள் வீட்டில் வளரும் பூனைக் குட்டிகளை இவருக்கு காண்பிக்கிறாள். அந்த நாள் இனிமையாகக் கழிகிறது. பல வருடங்கள் கழித்தும் கூட, கிதார் இசையைக் கேட்டாலோ, இனிப்பு பிஸ்கட் சாப்பிட்டாலோ இல்லை நிம்மதியான உறக்கத்திலோ இவர் அவை நினைக்காமல் இருந்ததில்லை என கதை முடிகிறது. இப்படியான ஒரு பெண் எல்லோருடைய வாழ்விலும் இருக்கத்தானே செய்கிறாள்?

மற்றொரு கதையில், நல்ல லாபத்திலிருந்து இப்போது நட்டத்தில் ஓடும் ஒரு கம்பெனி ஊழியர்களுக்கு கம்பெனியின் நிலை குறித்து எடுத்துச் சொல்ல இவரை அழைத்திருக்கின்றனர். இருபத்தொன்பதாவது மாடியில் இவரது அறை. கம்பெனி நிலவரங்களை ஆராய்ந்து கொண்டும், தான் பேசவேண்டியவற்றை எழுதிக்கொண்டும் இயற்கையை ரசித்துக் கொண்டிருக்கிறார். வானத்தில் மிதப்பதாகவும், பறவைகளோடு சேர்ந்து தானும் பறப்பதாகவும் உணர்கிறார். அப்போது வேகமாய் வந்த ஒரு பறவை அறைச் சாளரத்தை வெற்றுவெளி என்று நினைத்து மோதிச் சாகிறது. இவர் அந்த பறவையைக் கையிலெடுத்து அதன் மரணத்தை உணருகிறார். அடுத்தநாள் மீட்டிங்கில் இந்தப் பறவையைப் பற்றி மட்டுமே பேசுகிறார். இறுதியில் ஊழியர்களுக்கு வேறேதும் சொல்லத் தேவைப்படாமல் போகிறது. அவ்வளவு நேர்த்தியாக கம்பெனி நிலவரத்தையும் அந்த பறவையையும் இணைத்துப் பேசுகிறார். இது தொடக்கம் சிறுகதை. இது போலத்தான் வாழ்க்கையில் ஏதேதோ சம்பவங்கள் நமக்குப் பல படிப்பினைகளை தந்து செல்கிறது.

படிப்பினையையும், மெத்தப் படித்தவர்களையும் பகடி செய்யும் எதிரி கதை மிகச் சிறந்தது எனச்சொல்லலாம். ம்வாங்கி என்பவர் அந்த ஊரிலேயே மெத்தப் படித்த ஆசாமி, படிப்பிற்கேற்ற வேலை ஒன்றும் கிடைக்காததால் இவர் அறிவில் கோழிப்பண்ணை வைக்கலாம் என்று முடிவு செய்து அந்த தொழில் துவங்குகிறார். கோழிகள் அப்படியே இருக்க, முட்டைகள் மட்டும் தினசரி களவு போகின்றது. நாளடைவில் அது ஒரு பாம்பின் செய்கை என கண்டு கொள்கிறார். தனக்கு ஒரு எதிரி வாய்த்ததையும், அதை வெற்றிகொள்ளப் போகும் வழிமுறைகளையும் சிந்திக்கிறார். ஒரு கட்டத்தில் இவர் என்ன செய்தாலும் அந்த பாம்பு இவரை ஏமாற்றி முட்டையை அபகரித்து விடுகிறது. இவர் தந்திரமாக அந்த பாம்பை கொன்று விடுகிறார். அதன் பின்னரே எதிரியை தான் நேருக்கு நேர் சந்திருக்க வேண்டும், அது முட்டையை அபகரிக்காமல் செய்திருக்க வேண்டும். தந்திரமாகக் கொன்றது தன் தவறு என உணருகிறார். இதுபோலத்தான் சில சமயங்களில் நம் வெற்றியை மட்டுமே உத்தேசித்து நாம் செய்யும் பல காரியங்களும் பின்னர் நமக்கு மனக் கஷ்டத்தை ஏற்படுத்தும். 

நாமறிந்த விஷயங்களையே நமக்குத் தெரியான புதிய பரிமாணத்தில் நமக்கு எடுத்துச் சொல்கின்றன கதைகள். இதே போல பல சிறந்த கதைகளை உள்ளடக்கி ஒரு நல்ல வாசித்தனுபவத்தை தரவல்ல ஒரு நல்ல சிறுகதைத் தொகுப்பு இப்புத்தகம்.

அ. முத்துலிங்கம் | சிறுகதைத் தொகுப்பு | காலச்சுவடு | பக்கங்கள் 173 | விலை ரூ.125

இணையத்தில் வாங்க: கிழக்கு

10 Sept 2012

பல்லக்குத் தூக்கிகள் - சுந்தர ராமசாமி


ஓரிரு மாதங்கள் சமூக வலைதளங்களில் கிறுக்கி விட்டு திடீரென இரண்டு நாட்கள் சேர்ந்தாற்போல் இணையமில்லாமலோ, எழுதாமலோ இருக்க முடிவதில்லை. இப்படி ஓரிரு சின்ன விஷயங்களுக்கு நம்மை அடிமையாக்கிக் கொண்டு அவற்றிலிருந்து வெளிவர முடியாமல் தவிப்பது இயல்பே. அதுவும் இவையெல்லாம் பொழுது போக்காக இருக்கும்போதே இவ்வளவு தவிப்பு எனில், எழுத்தே உயிராய் இருக்கும்போது அதைப் பிரிவதென்பது எவ்வளவு துன்பம், கொடுமை? அதுவும் ஆண்டுக் கணக்கில் பிரிவதென்றால்?. இப்படி நீண்ட பிரிவுக்குப் பின்னர் மீண்டும் எழுத நேர்ந்தால் அதன் வீரியம் எப்படி இருக்கும்? அப்படித்தான் இருக்கிறது இந்த புத்தகம், சுந்தர ராமசாமி ஏழு ஆண்டுகால இடைவெளிக்குப் பிறகு எழுதிய ஐந்து சிறுகதைகளின் தொகுப்பு.

'ஓய்ந்தேன் என்று மகிழாதே' என்று தன் கவிதையில் அறிவித்த சுந்தர ராமசாமி என்னும் கலைஞன், ஏழு ஆண்டுக்கால இடைவெளிக்குப் பிறகு புதிய அடையாளத்துடனும் வீச்சுடனும் வெளிப்பட்டதன் தடயங்கள் இந்தக் கதைகளில் அழுத்தமாகப் பதிந்திருக்கின்றன. பழக்கம் தரும் ஆசுவாசத்தைக் கால் விலங்காகக் கருதி உதறிவிட்டுப் பாதுகாப்பற்ற பாதைகளில் பயணம் செய்யும் துணிச்சல் தமிழ்ச் சூழலில் அரிது. அத்தகைய பயணத்தைக் கலை உலகில் நிகழ்த்திய மிகச் சிலரில் ஒருவரான ஒருவரான சுந்தர ராமசாமி இந்தக் கதைகளில் முற்றிலும் புதிய உலகத்தையும் கலை நோக்கையும் வெளிப்படுத்துகிறார்.- புத்தகம் பற்றி நூலகம்.காம் 

முன்னுரையிலிருந்து ஒரு வரி:
ஒருவன் தன்னைத் தன் பலவீனங்களோடு ஏற்றுக் கொள்ளும்போது அதுவே பலமாகி விடுகிறது.மேற்கூறிய வரிகளை பிரதிபலிக்கின்றன கதைகள் ஐந்துமே. தன்னைத் தானே உணர்ந்த எழுத்து. அதில் முதல் சிறுகதை அழைப்புமிகவும் முக்கியமானது. இக்கதையைப் பற்றி சுருங்கச் சொல்ல ஒரு பழமொழியைக் குறிப்பிட வேண்டியிருக்கிறது, “சாது மிரண்டால் காடு கொள்ளாது!”. ஏழு வருடங்கள் தன்னுள் எழுந்த கற்பனைகள் அனைத்தையும் வெளிக்காட்டாமல் மறைத்து ஒதுக்கி, அழுத்தம் தாளாமல் ஓர் சமயம் வெடித்துச் சிதறினால் உள்ள தீவிரம் வார்த்தைகளில். கதைகளிலும்.

போதைசிறுகதை, நம் அனைவரிடமும் இருக்கும் நாம் பெருமைப்படும் ஏதோ ஓர் விஷயத்தின் வலுவை சமூகத்தோடு இணைத்துப் பார்க்கிறது. அதன் பொருட்டு நாம் இழக்கும் மனிதாபிமானத்தைச் சுட்டுகிறது. பல்லக்குத் தூக்கிகள்கதை அனைவரிடமும் இருக்கும் நீங்காப் பழக்கத்தைக் கிண்டலடிக்கிறது. ”நல்லது நடக்குதோ இல்லையோ செய்துதான் வைப்போமே” என்ற மனநிலையைச் சுட்டுகிறது. நம்மை நாமே நம்பாத நிலை அல்லது அதீதத்தின் மேல் கொண்ட நம்பிக்கையின் பிரதிபலிப்பு எனவும் இக்கதையைக் கூறலாம். நாம் தூக்கிச் சுமக்கும் வீண் சுமைகளே பல்லக்குகள் என பல்லிளிக்கிறது நம்மை நோக்கி.

தாழ்வு மனப்பான்மையின் தீவிரத்தைச் சுட்டும் வாசனைசிறுகதை. தாழ்வு மனப்பான்மை கொண்டவர்களுக்கே உரிய சந்தேகம், உச்சகட்டமாய் தானொன்றும் இளைத்தவனில்லை என்று வரும் வீரம் போன்றவற்றை சுட்டும் கதை. ஊனமுற்றவர்களுக்கு இயல்பாகவே தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்தும் சமூகத்தைக் கிழிக்கிறது கதை. சமூகத்துக்கான செய்தி ஒன்றுமில்லை என்றாலும் அதற்கான காரணம் சமூகமாகவே இருக்கின்றது.

துன்பங்கள், பிரச்சினைகள், உயர்வுகளின் சன்னிதானத்தில் நிர்வாணமாக நிற்கின்ற ஒரு மனதை சுந்தர ராமசாமியின் எழுத்தில் நான் காண்கிறேன். -       நா, ஜெயராமன்

சுந்தர ராமசாமி | சிறுகதை தொகுப்பு | காலச்சுவடு | பக்கங்கள் 69 | ரூ. 50
ஆன்லைனில் பெற: நூலகம்
.
.
.

2 Sept 2012

புதிய தமிழ்ச் சிறுகதைகள் - தொகுப்பாசிரியர்: அசோகமித்திரன்

1980ல் வெளிவந்த இந்தத் தொகுப்பு, அதற்கு முந்தைய இருபதாண்டு காலத்தில் வெளியான சிறுகதைகளில் சிறந்த பதினாறு கதைகளைக் கொண்டது.  இவை அனைத்தும் தமிழில் எழுதப்பட்டவை என்பதையும், ஒரு குறிப்பட்ட இருபதாண்டுகளில் வெளியானவை என்பதையும் தவிர்த்து இவற்றின் ஊடாக ஒரு பொதுச்சரடு இருப்பதாகத் தெரியவில்லை. பதினாறும் வெவ்வேறு விஷயங்களைப் பற்றித்தான் பேசுகின்றன. இந்தத் தொகுப்பில் இருக்கும் கதைகளும் அவற்றுக்கான சுட்டிகளும் கடைசியில் இருக்கின்றன. சமூகக் கடமையை உத்தேசித்து நான் கொஞ்சம் நீட்டிமுழக்கப் போகிறேன்.

இத்தொகுப்பிற்கு அசோகமித்திரன் எழுதியிருக்கும் முன்னுரை, தமிழ் சிறுகதைகளின்/இலக்கியத்தின் நாற்பதாண்டுகாலப் போக்கை விவரிக்கிறது. பக்கம் பக்கமாக எழுதித்தள்ளப்பட்ட ஆராய்ச்சி இல்லைதான்; ஆனால் அதன் ஆழமும் தீர்க்கமும் அதிகம். பரபரப்புக்காக எழுதப்படும் எழுத்து, அந்த பரபரப்போடே அமுங்கிப் போய்விடும் என்று சொல்லும் அசோகமித்திரன், “பரபரப்பை மட்டும் முக்கியமாகக் கொள்ளாமல் பரிணாமத்தின் ஒவ்வொரு காலத்திய சூட்சுமங்களைக் கலையுணர்வோடு வடித்துத் தருபவை என்று எனக்கு உறுதியாகத் தோன்றும் கதைகளில் சிலவற்றை இத்தொகுப்பின் அமைப்புக் கட்டுத்திட்டங்களுக்கு இணங்கத் தேர்ந்தெடுத்திருக்கிறேன்” என்கிறார். அவர் சொல்வது எத்தனை உண்மையென்பது இத்தொகுப்பில் இருக்கும் எஸ்தர் போன்ற சிறுகதைகள் முப்பத்தியிரண்டு ஆண்டுகளுக்கு பின்பும்கூட முக்கியத்துவமும் நவீனத்தன்மையும் குறையாமல் இருப்பதைக் கொண்டு நாம் உறுதிப்படுத்திக்கொள்ளலாம்.

வெகுஜன இதழ்கள் தமிழ் இலக்கியத்தின் வளர்ச்சிக்குக் காரணமாக இருந்தபோதிலும் அவை திரும்பத் திரும்ப ஒரே மாதிரியான எளிமைப்படுத்தப்பட்ட கருத்துகளையே வெளியிட்டு தங்கள் வியாபார நோக்கத்தால் இலக்கியம் மேலும் வளர அவர்கள் முட்டுக்கட்டையாகிவிட்டார்கள் என்ற வாதத்தை வைக்கிறார். இதன் தொடர்ச்சியாகவே தீவிர இலக்கியம், பத்திரிகை எழுத்து என்று தனித்தனியாக பிரித்துப் பார்க்க வேண்டிய அவசியம் எழுந்ததையும் விவரிக்கிறார். “…அறுபதுகளின் தொடக்கத்திலிருந்து தமிழ் வாசகர்-எழுத்தாளர் மத்தியில் இப்பாகுபாடு பற்றிய சிந்தனை பரவலாகத் தோன்ற ஆரம்பித்தது. இதன் விளைவு சிறு பத்திரிகைகளின் தோற்றம்.” வெகுகாலம்வரை பிரபலமடையும் எழுத்தே நல்ல எழுத்தாக அறியப்பட்டதாகச் சொல்கிறார் அசோகமித்திரன். இன்றைக்கு பலரைச் சென்றடைந்த எழுத்துக்கள் சிறப்பானதாக இருக்க முடியாது என்ற அளவிற்கு வந்துவிட்டது. அவை மேலோட்டமானவை; வாசகர்களைக் கிளர்ச்சியுறச் செய்து கவர்பவை என்ற எண்ணம் வலுத்துவிட்டது.

ஆனால் அன்றைய சிறுபத்திரிகைகளின் அசராத முயற்சியினால்தான் இன்றைக்கு தமிழ்ச் சிறுகதை தன்னுடைய தனித்தன்மையை தக்கவைத்துக் கொண்டிருக்கிறது என்று சொல்லலாம். சிறுபத்திரிகைகள் பற்றி வெவ்வேறு பத்திகளில் அசோகமித்திரன் குறிப்பிடுகிறார் : -

அறுபதுக்கு முற்பட்ட சிறு பத்திரிகைகளுக்கும் இந்த இருபதாண்டுச் சிறுபத்திரிகைகளுக்குமிடையே உள்ள முக்கிய வேறுபாடு, முந்தைய பத்திரிகைகளும் அவற்றின் ஆசிரியர்களும் பெருவாரி விற்பனையுள்ள பத்திரிகைளும் அவை ஆதரிக்கும் எழுத்தும் போரிட்டு அகற்றக்கூடியதொன்று, அகற்ற வேண்டியதொன்று எனச் செயல்பட்டார்கள். இன்றைய சிறுபத்திரிகைகள்,  பெருவாரி விற்பனைப் பத்திரிகைகளை இந்த காலகட்டத்தின் ஒரு தவிர்க்க முடியாத அம்சமாக ஏற்றிருப்பதையும், அவற்றை ஒரு பொருட்டாகக் கருதாமல் தம்மட்டில் தீவிர இலக்கியப் பணிகளில் ஈடுபடுவதை ஓர் எதிர்வினையாகக் கொள்ளாமல் சுயமாகச் செய்யவேண்டிய பணியாக நினைப்பதையும் காண முடிகிறது.”

உண்மையில் ஒரு வாசகனால், எந்த முன்முடிவும் இல்லாமல் நல்ல எழுத்தை மற்ற எழுத்துக்களிலிருந்து அடையாளம் காண முடியும். அதைப் பொதுவில் அவன் நேர்மையாக ஒத்துக்கொள்கிறானோ இல்லையோ தனிப்பட்ட முறையில் அவன் அதை அனுபவித்துக் கொண்டுதான் இருப்பான். சிறந்த எழுத்துக்கான வாதம் வாசகனிடமிருந்தே தொடங்க வேண்டும் என்று சொல்வதில் ஒரு நியாயமிருக்கிறது.. ஏனென்றால், அவன் விமர்சகர்களைப் போல தன்னுடைய கருத்துக்களை ஆராய்ந்து ஒரு முடிவுக்கு வந்துவிடுவதில்லை, அவனது வாசிப்பைக் கோட்பாடுகள் கட்டுப்படுத்துவதில்லை. அவனுடைய வாசிப்பானுபவம் முன்முடிவுகளால் தடைப்பட்டுவிட்ட ஒன்றல்ல. எழுத்தாளர்களே கறாரான விமர்சகர்களாகவும் இருப்பதால், இது ஏதோ இலக்கியச் சண்டையாகவே பார்க்கப்படுகிறது; சில சமயங்களில் சிறுபிள்ளைத்தனமாகவும் கூட. 

எல்லாருடைய எழுத்துக்களையும் அலசி ஆராய்ந்து எழுதும் ஒருவருக்கு அதில் என்ன ஆதாயம் என்ற கேள்வி வந்துவிடுகிறது. எழுத்தாளர்களால் செய்யப்படும் விமர்சனங்களும் அலசல்களும் வாசகனிடம் ஒரு கேள்வியைத் தொடங்கி வைக்கின்றன. அவன் தன்னளவில் அந்தக் கேள்விக்கான பதிலைக் கண்டு பிடித்துவிடுவான். அந்த பதில்தான் அவனுடைய வாசிப்பின் அடுத்த கட்டத்தை தீர்மானிக்கிறது; அவன் விமர்சகர்களிடமிருந்து கேள்விகளை மட்டுமே எடுத்துக் கொள்கிறான்; முடிவுகளை அல்ல. அவனுக்குத் தன்னுடைய முடிவை ஊர் முழுக்க அறிவிக்க வேண்டிய தேவையில்லை. இதைப் பலர் தப்பாகப் புரிந்து கொண்டு பொதுவாசகன் கண்ணைக் கட்டிக் கொண்டு பயணப்படுவதாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அவன் தன்னுடைய ஒவ்வொரு வாசிப்பையும் பிரக்ஞையோடே தொடர்கிறான்.

சிறுகதையுலகில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை ஏற்படுத்தியவை என்று இரண்டு வெளியிடுகளை அசோகமித்திரன் குறிப்பிடுகிறார். முதலாவது, 1967ல் நகுலன் தொகுத்து வெளியிட்ட குருஷேத்திரம் என்ற நூல். இதில் பல எழுத்தாளர்களுடைய கட்டுரைகள், கவிதைகள், சிறுகதைகள், ஒரு குறுநாவல், ஒரு நாடகம் என்று நானூறு பக்கங்களுக்குமேல் இருந்ததாம். அடுத்தது, நான்கு எழுத்தாளர்கள் சேர்ந்து வெளியிட்ட ‘கோணல்கள்’ தொகுப்பு. இதில் பன்னிரெண்டு சிறுகதைகள். அந்த நால்வர், ராமகிருஷ்ணன்,  சா.கந்தசாமி, ந.கிருஷ்ணமூர்த்தி மற்றும் மா.ராஜாராம்.

இறுதியாக அசோகமித்திரன் சொல்கிறார்,

முன்னரே குறிப்பிட்டபடி இத்தொகுப்பு ஒரு காலகட்டத்தில் தமிழ்ச் சிறுகதை இயங்கிய தளத்தை, அதன் உயர்ந்த நிலையில், பிரதிபலிக்கச் செய்யும் முயற்சி. இதுவே எக்காலத்துக்குமான தமிழ்ச்சிறுகதைத் தொகுப்பாகாது. ஆனால் அப்படி ஒரு தொகுப்பு தயாரிக்கப்படுமாயின் அதில் இத்தொகுப்பின் பல கதைகள் இடம் பெறுவது உறுதி.”

இந்தச் சிறுகதைகள் மட்டுமல்ல, அதன் ஆசிரியர்களும் இன்றைக்கும் சிறந்தவர்களாகத்தான் அறியப்படுகிறார்கள். இந்தக் கதைகள் இன்னமும் புதியதாகவே இருக்கின்றன. அந்நாளைய மனிதர்களுடைய யதார்த்தமும் கனவுகளும் இன்றைக்கு மாறியிருந்தாலும், இன்றைய யதார்த்ததுக்கும் கனவுகளுக்குமான இடைவெளி அன்றைய யதார்த்தத்துக்கும் கனவுகளுக்குமான இடைவெளியின் அளவிலோ அல்லது அதைவிட அதிகமாகவோ தானே இருக்கிறது.

தொகுப்பில் உள்ளவை

  1. மருமகள் வாக்கு - கிருஷ்ணன் நம்பி
  2. மிலேச்சன் - அம்பை
  3. நிழல்கள் - ஆதவன்
  4. எஸ்தர் - வண்ணநிலவன்
  5. உத்தியோக ரேகை - சார்வாகன்
  6. தொலைவு - இந்திரா பார்த்தசாரதி
  7. சண்டையும் சமாதானமும் - நீல. பத்மநாபன்
  8. நாயனம் - ஆ.மாதவன்
  9. நகரம் - சுஜாதா
  10. ஒரு வருடம் சென்றது - சா.கந்தசாமி
  11. ஒரு ‘இந்நாட்டு மன்னர்’ - நாஞ்சில் நாடன்
  12. தனுமை - வண்ணதாசன்
  13. நாற்காலி - கி. ராஜநாராயணன்
  14. அந்நியர்கள் - ஆர். சூடாமணி
  15. பகல் உறவுகள் - ஜெயந்தன்
  16. காலமும் ஐந்து குழந்தைகளும் - அசோகமித்திரன்
(நன்றி: அழியாச்சுடர்கள், தொகுப்புகள், நாஞ்சில்நாடன்.காம் )

புதிய தமிழ்ச் சிறுகதைகள் | தொகுப்பாசிரியர்: அசோகமித்திரன் | நேஷனல் புக் டிரஸ்ட், இந்தியா 182 பக்கங்கள் | விலை ரூ.80

பின்குறிப்பு:
மேலே குறிப்பிட்டிருக்கும் கோணல்கள் சிறுகதைத் தொகுப்பு இங்கே கிடைக்கும். விலை ரூ. 40

8 Aug 2012

சூடிய பூ சூடற்க - நாஞ்சில் நாடன்

சிறப்புப் பதிவர்: எம்.ஜி.ரவிக்குமார்

புரட்டிப் புரட்டிப் படிப்பதெல்லாம் புத்தகங்கள் அல்ல படித்ததும் எது நம்மைப் புரட்டிப் புரட்டி எடுக்கிறதோ அதுவே சிறந்த புத்தகம் என்று நம்புபவன் நான் அப்படி சமீபத்தில் வாசித்த புத்தகங்களில் என்னை மிகவும் கவர்ந்த புத்தகம் இது இதற்குப் பரிசு வழங்கி சாகித்ய அகாதமி தன்னைப் பெருமைப்படுத்திக் கொண்டது

நாஞ்சில் நாடன் - இவரின் கட்டைவிரல் நையாண்டியாலும்,ஆள்காட்டிவிரல் நக்கலாலும் செய்யப்பட்டிருக்கிறது அதுவே இவரின் கதைகள் முழுவதிலும் நெய்யப்பட்டிருக்கிறது இந்தத் தொகுப்பில் மொத்தம் 15 கதைகள் ஒவ்வொன்றும் வெவ்வேறு களங்களைக் கொண்டது மனிதத்தின் மாண்பைப் பேசுவது, நம் மனதில் தென்றலையும் புயலையும் ஒருசேர வீசுவது இந்தக் கதைகள் உயிர்மை,யுகமாயினி போன்ற சிற்றிதழ்களிலும், விகடன், தினமணி போன்ற பிரபல ஏடுகளிலும் வெளி வந்தவை

இவர் கதைக்குக் கொடுக்கும் தலைப்பு மழையில் நனையும் குழந்தைக்கு தாய் போர்த்திவிடும் சேலைத் தலைப்பை ஒத்தது வளைகள் எலிகளுக்கானவை, செம்பொருள் அங்கதம், பரிசில் வாழ்க்கை என்பன சில உதாரணங்கள்

ஒவ்வொரு கதைகளிலும் அந்தக் கதை நடைபெறும் இடம்,சூழல்,வரும் மனிதர்கள்,அவர்களின் வாழ்க்கை என பல்வேறு பரிமாணங்களை 70mmல் வாசகனுக்குக் காட்டுகிறார் டீட்டைலிங் என்பார்களே ஆங்கிலத்தில் அதைப் போல

அதனாலேயே நாமும் அதனூடே ஒன்றிப் போய் விட முடிகிறது உத்தரத்துப் பல்லியாய். ஒரு கதையைப் படித்து முடித்ததும் உடனே அடுத்த கதைக்குத் தாவ விடுவதில்லை அது ஏற்படுத்திய தாக்கம். சூயிங் கம்மைப் போல அது நம்மை மென்று கொண்டே இருக்கிறது.

நா.நாடனின் இன்னுமொரு சிறப்பு அவர் எப்பொழுதும் கைகொள்ளும் நாஞ்சில் நாட்டு மண்ணின் சொற்கள். கதை முழுதும் தோட்டத்தில் விரவியிருக்கும் புல்லைப் போல நாஞ்சில் மண்ணின் சொல்லே பரவிக் கிடக்கின்றன. தூய தமிழில் நாம் சொல்லும் டவலை "துவர்த்து" என்றே குறிப்பிடுகிறார். அனக்கம், அவயா
ன், சட்டுவம், சம்சயம் இப்படி பல சொற்கள் துருவ நட்சத்திரங்களாய் மின்னுகின்றன!

சூடிய பூ சூடற்க - தலைப்புக்கதை ஒரு அரசாங்க அலுவலகத்தின் சுதந்திர தினக் கொண்டாட்டத்தை விவரிக்கிறார் ஒரு பியூனின் பார்வையில், கூடவே சிகப்பு நாடாவின் அவலத்தையும். என் நண்பனின் தந்தை அரசு அலுவலர். அவர் அலுவலகத்தில் நடக்கும் சுதந்திர தினக் கொண்டாட்டத்தை அருகிலிருந்து பார்த்தவனாதலால் இந்தக் கதையுடன் என்னால் எளிதில் ஒன்ற முடிந்தது. அதிகாரிக்குப் போட மாலை வாங்கப் போன அந்தப் பியூன் மாலையை என்ன செய்கிறான் என்பதை படித்து முடித்ததும் என் புறங்கைகள் கண்களை ஒரு முறை நீவி விட்டுக் கொண்டன.

தன்ராம்சிங் கதையில் கூர்க்காகளின் வாழ்வியல் முறையை அப்படியே படம் பிடித்துக் காட்டிவிடுகிறார். விளைவு நீங்கள் மறுபடி எப்போது எங்கே ஒரு கூர்க்காவைக் கண்டாலும் உங்களின் மனதில் அவரைப் பற்றி உயர்வான எண்ணம் மட்டுமே வரும். அலுவலக நேரம் முடிந்து எல்லோரும் போன பின் விழிக்கும் அவர்களின் உலகத்தில் தான் எத்தனை சுவாரஸ்யங்கள், வலிகள், வேதனைகள். கூர்க்காகள் கடிதம் எழுதி அதை உரியவரிடம் கொண்டு சேர்ப்பிக்கும் முறை இப்போது வந்திருக்கும் 2G 3G நெட்வொர்க்குக்கெல்லாம் முன்னோடி.

அவ்வளவாகச் சிறு விடுப்புகள் கூட எடுக்காது ஈராண்டுகள் தொடர்ந்து பணி புரிந்து பின் மொத்தமாய் ஒரு மாதம் விடுப்புக்கு தாய் மண்ணுக்குப் போகிறவர்கள் அவர்கள். அதிலும் பாதி நாள் பயணத்தில் கழியும். எல்லாம் இருந்தும் நம்மை எங்கே எப்போது பார்த்தாலும் எப்படி இவர்களால் நமஸ்தே சாப் சொல்ல முடிகிறது?

செம்பொருள் அங்கதம் - ஈகோ நிரம்பிய மேலாளர்,அவரின் கீழ் பணியாற்றும் பிரதிநிதி, ஒரு பயணத்தின் போது அவர்களுக்கிடையே நடைபெறும் ஒரு சிறு சம்பவமே கதை. அதை இவர் சொல்லிய, விவரித்த விதம் படித்தால் மட்டுமே உணரக் கூடியது. கதையின் முடிவு நான் கொஞ்சமும் எதிர்பார்த்திராத ஒன்று. அதுவே என்னைப் படித்து முடித்ததும் தூங்கவிடாமல் செய்தது. ஏனெனில் இது போன்ற மேலாளர்களை நாமும் கடந்து வந்திருக்கிறோம். எப்போதும் சாயம் பூசிய முகங்களையேக் கண்டு வரும் போது திடீரென்று நிஜத்தைச் சந்தித்தால் ஏற்படும் மூச்சுத் திணறல் அது.

இந்தப் புத்தகம் நாம் அனைவரும் கட்டாயம் படிக்க வேண்டிய ஒன்று. இப் புத்தகத்தின் எழுத்துக்கள் அலமாரியில் உறங்கினாலும் எண்ணங்கள் நமக்குள்ளே ஓடிக் கொண்டே இருக்கும்.

சூடிய பூ சூடற்க - நாஞ்சில் நாடன்
பதிப்பகம் - தமிழினி
விலை - ரூ100
இணையத்தில் வாங்க: உடுமலை

Related Posts Plugin for WordPress, Blogger...