A.J.Cronin A.K.Ramanujan Amartya Sen Andrea Maria Schenkel Anton Chekhov Arthur Hailey Bill Bryson Deborah Eisenberg Elizabeth Kostova Gay Neck Geoff Dyer George Orwell Harper Lee Henning Mankell Ian McEwan Jared Diamond Jilly Cooper Jonathan Livingstone Seagull Joseph Heller Kenneth Anderson Kiran Desai Maugham Michael McCarthy O.Henry Orhan Pamuk P.G.Wodehouse PB.ஸ்ரீனிவாஸ் R.K.Narayan Richard Bach Ronald Wilks Stephen King Swami Tejomayananda Upamanyu Chatterjee William Sydney porter dhan gopal mukerji mark tully okakura kakuzo saggi steven weinberg vikram seth ஃபெயின்மன் அ. முத்துலிங்கம் அ.கா.பெருமாள் அகிலன் அசோகமித்திரன் அனார் அறிஞர் அண்ணா அறுசுவை அரசு நடராஜன் அழகியசிங்கர் ஆ. சிதம்பரகுற்றாலம் ஆதவன் ஆர்.கே.நாராயண் ஆர்.ஷண்முகசுந்தரம் ஆஸ்கார் ஒயில்டு இடாலோ கால்வினோ இந்திரா பார்த்தசாரதி இந்துமதி இரா. நாறும்பூநாதன் இரா.நடராசன் இரா.முருகன் இரா.முருகவேள் இலக்கிய வீதி இனியவன் இலவச கொத்தனார் உமா சம்பத் என்.சொக்கன் என்.ராமதுரை எம் கோபாலகிருஷ்ணன் எம். வி. வெங்கட்ராம் எர்னெஸ்ட் ஹெமிங்வே எஸ். ராமகிருஷ்ணன் எஸ்.சந்திரமௌலி ஏ.கே.ராமானுஜன் ஏ.கோபண்ணா ஒல்கா பெரோவ்ஸ்கயா க.நா.சு கண்மணி குணசேகரன கரிச்சான் குஞ்சு கலாப்ரியா காப்கா காலபைரவன் கி. ராஜநாராயணன் குமரி எஸ்.நீலகண்டன் குல்தீப் நய்யார் கே நெக் கோபிநாத் கோபுலு சந்திரசேகர சர்மா சமஸ் சல்மான் ரஷ்டி சா. கந்தசாமி சா.பாலுசாமி சாருநிவேதிதா சாலீம் அலி சி.சரவணகார்த்திகேயன் சி.சு.செல்லப்பா சிபி.கே.சாலமன் சு. வேணுகோபால் சுகுமாரன் சுஜாதா சுந்தர ராமசாமி சுனில் ஜோகி சுப்புடு சுவாமி விவேகானந்தர் செல்லம்மா பாரதி செள.ராஜன் சே. இரகுராமன் சோம.வள்ளியப்பன் ஜனனி ரமேஷ் ஜான் பான்வில் ஜி.நாகராஜன் ஜிம் கார்பெட் ஜெயகாந்தன் ஜெயமோகன் ஜே. ஹெச். வில்லியம்ஸ் ஜோதிநரசிம்மன் டாக்டர். சு.முத்து செல்லக்குமார் டாக்டர். பி.எம்.ஹெக்டே டாக்டர்.எல்.மகாதேவன் தமிழ் மகன் தரம்பால் தி. ஜானகிராமன் தி.ஜானகிராமன் தியடோர் பாஸ்கர் து.கணேசன் ந.பிச்சமூர்த்தி நகுலன் நடிகர் சிவகுமார் நமீதா தேவிதயாள் நா.முத்துக்குமார் நாகம்மாள் நாகூர் ரூமி நாஞ்சில் நாடன் ப. சிங்காரம் பல்லவி அய்யர் பழ.அதியமான் பழ.கருப்பையா பவன் வர்மா பவா செல்லதுரை பஷீர் பா.ராகவன் பாம்பே ஜெயஸ்ரீ பாரதியார் பாலகுமாரன் பாலச்சந்திரன் சுள்ளிக்காடு பாலு மகேந்திரா பாவண்ணன் பி.எச்.டேனியல் பி.எம்.சுந்தரம் பி.ஏ.கிருஷ்ணன் பி.வி.ராமஸ்வாமி பிரமிள் பெஞ்சமின் ப்ளாக் பெருமாள் முருகன் பொ.கருணாகரமூர்த்தி மகாகவி பாரதியார் மதன் மனுஷ்யபுத்திரன் மருதன் மலர்மன்னன் மா.கிருஷ்ணன் மார்க்வெஸ் மாஸ்தி மில்லி போலக் முகில் முஹமது யூனுஸ் யதுகிரி அம்மாள் யுவன் சந்திரசேகர் ரகோத்தமன் ரமணி சந்திரன் ரா.கி.ரங்கராஜன் ராஜாஜி லலிதாராம் லா.ச.ரா லிவிங்ஸ்மைல் வித்யா லூசியன் ஸ்ட்ரைக் லெமூர் வ.ரா வண்ணதாசன் வா.மு கோமு வாலி விட்டல் ராவ் வின்சென்ட் ஷீன் விளதீமிர் பகமோலவ் வீயெஸ்வி வுடி ஆலன் வெரியர் எல்வின் வேதவல்லி வைக்கம் முகமது பஷீர் வைணவச் சுடராழி ஆ. எதிராஜன் வைரமுத்து ஷோபா சக்தி ஹென்னிங் மான்கெல்
Showing posts with label நாஞ்சில் நாடன். Show all posts
Showing posts with label நாஞ்சில் நாடன். Show all posts

28 Mar 2013

எட்டுத் திக்கும் மதயானை - நாஞ்சில் நாடன்




இந்திய தொன்மத்தில், இந்த உலகை எட்டு யானைகள் திசைக்கு ஒன்றாக சுமந்து கொண்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது. ஐராவதம், புண்டரீகம், வாமனம், குமுதம், அஞ்சனம், புட்பதந்தம், சார்வபௌமம், சுப்பிரதீகம் இவை தான் அந்த எட்டு யானைகள். இவற்றுக்கு மதம் பிடித்தால்? இவை சுமந்து கொண்டிருக்கும் பூமிக்கு என்னவாகும்? 

இந்தக் நாவலை வாசிக்க வேண்டுமென்று தூண்டியது அதன் பெயர் தான். ஆனால், நாஞ்சிலாரின் மற்ற படைப்புகள் போல (அதாவது தலைகீழ் விகிதங்கள், மற்ற சிறுகதைகள் போல) இது என்னைக் கவரவில்லை. ஒருவேளை, பரபரப்பாக ஆரம்பிக்கும் கதை, அதன் முடிவை அடையும் போது அங்கே இங்கே சுற்றிவிட்டு வருவதாலோ என்னவோ. தனித்தனியாக எடுத்துப் பார்க்கும் போது நிறைய அருமையான விஷயங்களை சொல்லிச் சென்றிருக்கிறார். சமூகத்தின் மீதான விமர்சனங்கள் வரும் இடங்கள் - விகடனில் அவரெழுதிய தீதும் நன்றும்-ஐ நினைவுபடுத்துகின்றன.

ஒரு பொய்யான குற்றச்சாட்டு; அதற்கு ஒரு விபரீத தண்டனை. இங்கே அடிபட்டவன் இரண்டு விஷயங்களைத் தேர்ந்தெடுக்கலாம். பொறுமையாக இருந்து தான் நிரபராதி என்று நிரூபிக்கலாம். அல்லது தன்னை தண்டித்தவர்களுக்கு பாடம் புகட்ட புறப்படலாம். இவற்றில், இரண்டாவதைத் தேர்ந்தெடுத்து ஒவ்வொரு குற்றமாக செய்து கொண்டு, அவற்றிலிருந்து தப்பிக்க ஓடிக் கொண்டேயிருக்கும் ஒருவனுடைய கதை தான் ‘எட்டுத் திக்கும் மதயானை’. கடைசியில் பகை முளைத்த இடத்திலேயே அன்பும் பூக்கிறது. நாஞ்சிலாரின் தலைகீழ் விகிதங்களாகட்டும் எட்டுத் திக்கும் மதயானையாகட்டும், கதை முடிவுகளை இவ்வளவு விளக்கமாகச் சொல்லியிருக்க வேண்டாம் என்று தோன்றவைக்கிறது. அவற்றை குறிப்பால் மட்டுமே கூட உணர்த்தியிருக்க முடியும்.

10 Mar 2013

நாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை - நாஞ்சில் நாடன்

நாஞ்சில் நாடன் முன்னுரையில் எழுதுவது இது :
"பனை உயரம் மண்ணுக்குக் கீழே இருந்து முளைத்த நான், பிறப்பால் நாஞ்சில் நாட்டு வெள்ளாளன். வெள்ளாளன் எனும் சொல் எந்தக் காலத்திலும் எனக்கோர் கவசமோ குண்டலங்களோ அல்ல. மாறாக வாகாக அடிவாங்கும் ஒரு மர்மஸ்தானம். ஆனாலும் அதிகமாக அறிந்த, பெரும்பாலும் எனது படைப்புகளில் கையாண்ட சமூகம் இது.

"எனவே நாஞ்சில் நாட்டு வெள்ளாளருக்கு எதிரான படைப்புகளைச் செய்பவன் என்றும் அவர்தம் காலாவதியான பெருமைகளைத் தாங்கிப் பிடிப்பவன் என்றும் இரண்டு முரண்பட்ட குற்றச்சாட்டுகள் என் மீது உண்டு. சற்றுத் தீவிரமான கண்ணோட்டத்தில் வெள்ளாளத் துரோகி என்றும் வெள்ளாள சாதி வெறியன் என்றும்கூட முகம் கூடியதுண்டு. ஆனால் மேற்சொன்ன இரண்டும் இல்லை நான். யாருடைய சாயத்தையும் பூசி, அடைப்பத்தையும் தாங்கி நடப்பவனும் இல்லை. பெர்ட்டோல்ட் பிரெக்ட் சொல்வதைப்போல், "நீங்கள் தேடுவது யாராக  இருந்தாலும் அது நானில்லை..."
"சம்பந்தமில்லாத மூன்றாவது ஆளாக விலகி நின்று இந்தக் கட்டுரையை எழுத முற்பட்டிருக்கிறேன்,"" என்று நாஞ்சில் நாடன் கூறிக் கொண்டாலும், ஒரு நாஞ்சில் நாட்டு வெள்ளாளராகவே இதை எழுதியிருக்கிறார். தலைக்கட்டு வரி கட்டும் கடமை தன் குடும்பத்தினருக்கு இருப்பது குறித்து இப்படி எழுதுகிறார் :
"ஓலைக்கூரை வீடு என்றாலும், ஈசானமூலையில் இருந்ததால், எனது தாத்தா, அந்த ஊரின் முதல் வரி. இப்போது கூரைவீடு என்பது ஓட்டுவீடாக மாறியுள்ள நிலையில், வீட்டுக்கு மூத்த ஆண்பிள்ளையாகிய நான், க. சுப்பிரமணியம் முதல் வரி. இது சாதியில் ஒரு இடம் முன்பதிவு செய்து கொண்ட ஏற்பாடு என்று எனது வாசகர்களுக்குத் தோன்றும். எனது மண்ணும் மக்களும் என் இலக்கிய வாழ்வின் பிரிக்க முடியாத அங்கமாகிப் போன நிலையில் எனது கடைசிப்பயணம் நான் பிறந்த வீரநாராயணமங்கலத்தின் பாறையாற்றின் மேலக் கரையில் இருக்கும் சுடுகாட்டை நோக்கி அமைய வேண்டும் என்பதற்கான முன்பதிவுதான் அது, என்னைப் பொறுத்தவரையில்"

2 Feb 2013

தலைகீழ் விகிதங்கள் – நாஞ்சில் நாடன்

ஒரு படைப்பை அணுகும் போது, அது ஒரு புத்தகமாகவோ திரைப்படமாகவோ இருக்கலாம், வாசகன் தன்னை கொஞ்சம் தள்ளி வைத்துக் கொள்வது நல்லது. ஒரு படைப்பு, ஒருவருடைய வாழ்க்கைக்கு நெருக்கமாக இருக்கும் போது, அந்த நபருக்கு அந்த படைப்பு படிக்கும் போதோ பார்க்கும் போதோ ஏற்படும் உணர்வுகளைக் கொண்டு அவர் அப்படைப்பு உயர்ந்தது சொல்லிவிடுவது எப்போதும் நடப்பதுதான், ஆனால் அவரது கணிப்பு சரியாக இருக்க வேண்டுமென்பதில்லை. உதாரணத்திற்கு, ஒரு திரைப்படம் உங்களுக்குப் புரிய/பிடிக்க நீங்கள் இளம்பிராயத்தில் காதலித்திருந்தால் மட்டுமே சாத்தியம் என்றால், எங்கே போய் முட்டிக் கொள்வது? காதல் அனுபவம் உள்ளவர் அப்படத்தை பார்க்கும் போது, அவருடைய பழைய நினைவுகள் மேலெழுந்து அவருக்கு மகிழ்ச்சியைத் தரக்கூடும். ஆனால், அந்த நினைவுகள் செய்யும் காரியத்தை, அந்த படைப்பு செய்வதாக புரிந்து கொண்டுவிட்டால்? இதுவரை படித்ததை மறந்துவிட்டு மேலே படியுங்கள்.

21 Sept 2012

மிதவை - நாஞ்சில் நாடன்



மலக்குவியலை மொய்க்கும் ஈக்களை போன்று பெருநகர வீதிகளில் எப்படியும் பிழைத்திடலாம் எனும் நம்பிக்கையை மட்டுமே சுமந்துக்கொண்டு மனிதர்கள் நகரங்களை  ஒவ்வொரு நாளும்  மொய்த்துக்கொண்டே இருக்கின்றார்கள். இதழ் விரித்துக் காத்திருக்கும் பலவண்ண உயிருண்ணும் பூச்செடியைப் போல் நகரம் மனிதர்களை தன்னகத்தே ஈர்த்துக் கொண்டே இருக்கிறது. 


நாஞ்சில் நாடனின் மிதவை, அறுபதுகளின் பிற்பாதி மற்றும் எழுபதுகளின் தொடக்கத்தில் வாழும் தமிழக கிராமப்புற  பட்டதாரி இளைஞனின் வாழ்க்கையைப் பேசுகிறது. கிராமத்து வேலைகளுக்குச் செல்ல தயங்குமளவிற்கு கல்வியும் அது சார்ந்த மிதப்பும், அரசாங்க வேலையை அடைவதில் நிலவிய போட்டியும் இணைந்து பலரை வேலையின்றி அலைகழித்த காலம் அது. இன்றைய தகவல் தொழில்நுட்ப யுகத்தையும் மனதில் கொண்டு  நம் தந்தை காலகட்டத்தில் இருந்த வாழ்வியல் போராட்டங்களை அணுகினால் அது பிழையான சித்திரத்தை அளிக்கக்கூடும். உலகமயமாக்கலும் தாராளமயமாக்கலும் நிச்சயம் அதன் அத்தனை சாதக பாதகங்களை கடந்து இன்று பல குடும்பங்களின் நிதிநிலைமையை உயர்த்தி மேலெழ வித்திட்டிருக்கிறது என்றே தோன்றுகிறது.


8 Aug 2012

சூடிய பூ சூடற்க - நாஞ்சில் நாடன்

சிறப்புப் பதிவர்: எம்.ஜி.ரவிக்குமார்

புரட்டிப் புரட்டிப் படிப்பதெல்லாம் புத்தகங்கள் அல்ல படித்ததும் எது நம்மைப் புரட்டிப் புரட்டி எடுக்கிறதோ அதுவே சிறந்த புத்தகம் என்று நம்புபவன் நான் அப்படி சமீபத்தில் வாசித்த புத்தகங்களில் என்னை மிகவும் கவர்ந்த புத்தகம் இது இதற்குப் பரிசு வழங்கி சாகித்ய அகாதமி தன்னைப் பெருமைப்படுத்திக் கொண்டது

நாஞ்சில் நாடன் - இவரின் கட்டைவிரல் நையாண்டியாலும்,ஆள்காட்டிவிரல் நக்கலாலும் செய்யப்பட்டிருக்கிறது அதுவே இவரின் கதைகள் முழுவதிலும் நெய்யப்பட்டிருக்கிறது இந்தத் தொகுப்பில் மொத்தம் 15 கதைகள் ஒவ்வொன்றும் வெவ்வேறு களங்களைக் கொண்டது மனிதத்தின் மாண்பைப் பேசுவது, நம் மனதில் தென்றலையும் புயலையும் ஒருசேர வீசுவது இந்தக் கதைகள் உயிர்மை,யுகமாயினி போன்ற சிற்றிதழ்களிலும், விகடன், தினமணி போன்ற பிரபல ஏடுகளிலும் வெளி வந்தவை

இவர் கதைக்குக் கொடுக்கும் தலைப்பு மழையில் நனையும் குழந்தைக்கு தாய் போர்த்திவிடும் சேலைத் தலைப்பை ஒத்தது வளைகள் எலிகளுக்கானவை, செம்பொருள் அங்கதம், பரிசில் வாழ்க்கை என்பன சில உதாரணங்கள்

ஒவ்வொரு கதைகளிலும் அந்தக் கதை நடைபெறும் இடம்,சூழல்,வரும் மனிதர்கள்,அவர்களின் வாழ்க்கை என பல்வேறு பரிமாணங்களை 70mmல் வாசகனுக்குக் காட்டுகிறார் டீட்டைலிங் என்பார்களே ஆங்கிலத்தில் அதைப் போல

அதனாலேயே நாமும் அதனூடே ஒன்றிப் போய் விட முடிகிறது உத்தரத்துப் பல்லியாய். ஒரு கதையைப் படித்து முடித்ததும் உடனே அடுத்த கதைக்குத் தாவ விடுவதில்லை அது ஏற்படுத்திய தாக்கம். சூயிங் கம்மைப் போல அது நம்மை மென்று கொண்டே இருக்கிறது.

நா.நாடனின் இன்னுமொரு சிறப்பு அவர் எப்பொழுதும் கைகொள்ளும் நாஞ்சில் நாட்டு மண்ணின் சொற்கள். கதை முழுதும் தோட்டத்தில் விரவியிருக்கும் புல்லைப் போல நாஞ்சில் மண்ணின் சொல்லே பரவிக் கிடக்கின்றன. தூய தமிழில் நாம் சொல்லும் டவலை "துவர்த்து" என்றே குறிப்பிடுகிறார். அனக்கம், அவயா
ன், சட்டுவம், சம்சயம் இப்படி பல சொற்கள் துருவ நட்சத்திரங்களாய் மின்னுகின்றன!

சூடிய பூ சூடற்க - தலைப்புக்கதை ஒரு அரசாங்க அலுவலகத்தின் சுதந்திர தினக் கொண்டாட்டத்தை விவரிக்கிறார் ஒரு பியூனின் பார்வையில், கூடவே சிகப்பு நாடாவின் அவலத்தையும். என் நண்பனின் தந்தை அரசு அலுவலர். அவர் அலுவலகத்தில் நடக்கும் சுதந்திர தினக் கொண்டாட்டத்தை அருகிலிருந்து பார்த்தவனாதலால் இந்தக் கதையுடன் என்னால் எளிதில் ஒன்ற முடிந்தது. அதிகாரிக்குப் போட மாலை வாங்கப் போன அந்தப் பியூன் மாலையை என்ன செய்கிறான் என்பதை படித்து முடித்ததும் என் புறங்கைகள் கண்களை ஒரு முறை நீவி விட்டுக் கொண்டன.

தன்ராம்சிங் கதையில் கூர்க்காகளின் வாழ்வியல் முறையை அப்படியே படம் பிடித்துக் காட்டிவிடுகிறார். விளைவு நீங்கள் மறுபடி எப்போது எங்கே ஒரு கூர்க்காவைக் கண்டாலும் உங்களின் மனதில் அவரைப் பற்றி உயர்வான எண்ணம் மட்டுமே வரும். அலுவலக நேரம் முடிந்து எல்லோரும் போன பின் விழிக்கும் அவர்களின் உலகத்தில் தான் எத்தனை சுவாரஸ்யங்கள், வலிகள், வேதனைகள். கூர்க்காகள் கடிதம் எழுதி அதை உரியவரிடம் கொண்டு சேர்ப்பிக்கும் முறை இப்போது வந்திருக்கும் 2G 3G நெட்வொர்க்குக்கெல்லாம் முன்னோடி.

அவ்வளவாகச் சிறு விடுப்புகள் கூட எடுக்காது ஈராண்டுகள் தொடர்ந்து பணி புரிந்து பின் மொத்தமாய் ஒரு மாதம் விடுப்புக்கு தாய் மண்ணுக்குப் போகிறவர்கள் அவர்கள். அதிலும் பாதி நாள் பயணத்தில் கழியும். எல்லாம் இருந்தும் நம்மை எங்கே எப்போது பார்த்தாலும் எப்படி இவர்களால் நமஸ்தே சாப் சொல்ல முடிகிறது?

செம்பொருள் அங்கதம் - ஈகோ நிரம்பிய மேலாளர்,அவரின் கீழ் பணியாற்றும் பிரதிநிதி, ஒரு பயணத்தின் போது அவர்களுக்கிடையே நடைபெறும் ஒரு சிறு சம்பவமே கதை. அதை இவர் சொல்லிய, விவரித்த விதம் படித்தால் மட்டுமே உணரக் கூடியது. கதையின் முடிவு நான் கொஞ்சமும் எதிர்பார்த்திராத ஒன்று. அதுவே என்னைப் படித்து முடித்ததும் தூங்கவிடாமல் செய்தது. ஏனெனில் இது போன்ற மேலாளர்களை நாமும் கடந்து வந்திருக்கிறோம். எப்போதும் சாயம் பூசிய முகங்களையேக் கண்டு வரும் போது திடீரென்று நிஜத்தைச் சந்தித்தால் ஏற்படும் மூச்சுத் திணறல் அது.

இந்தப் புத்தகம் நாம் அனைவரும் கட்டாயம் படிக்க வேண்டிய ஒன்று. இப் புத்தகத்தின் எழுத்துக்கள் அலமாரியில் உறங்கினாலும் எண்ணங்கள் நமக்குள்ளே ஓடிக் கொண்டே இருக்கும்.

சூடிய பூ சூடற்க - நாஞ்சில் நாடன்
பதிப்பகம் - தமிழினி
விலை - ரூ100
இணையத்தில் வாங்க: உடுமலை

பரிசில் வாழ்க்கை - நாஞ்சில் நாடன்


கதை சொல்லும் விதங்கள் பலவகை உண்டு. வார்த்தை ஜாலம் காட்டி வசீகரம் செய்யலாம், பிழியப் பிழிய செண்டிமெண்டால் அடிக்கலாம், சொல்லும் எல்லாவற்றையும் வித்தியாசக் கோணத்தில் புனைந்து “ஆகா” போட வைக்கலாம், பத்திக்கு பத்தி துணுக்குகளைத் திணித்து கதை நெடூக கிச்சுக் கிச்சு மூட்டலாம், இன்னமும் கூட பலவகைகள் உண்டு.

இந்த ’பழகிய’ வகைகள் எவற்றிலும் அகப்படாத எழுத்து ஒரு சிலருக்கே அமையும். நாஞ்சில் நாடனின் பாணியின் தனித்தன்மை அப்படி அமைந்த ஒன்று. இவரின் பெரும்பாலான சிறுகதைகள் முடிவதற்கு சற்று முன்னரே தொடங்குகின்றன. அதுவரை வசவசவென்று.... ஆம் வசவசவென்று விவரணைகள்தாம். உங்களுடன் காலம் காலமாகப் பழகிய ஒருத்தர் போல் பேசிக் கொண்டே இருக்கிறார். எங்கே கதை நிறைகிறதோ அதன் தாக்கம் உங்களுக்கு முழுதுமாய்க் கிடைக்க வேண்டி அந்த உலகை தன் பேச்சினூடே நமக்கு நிர்மாணித்துத் தருகிறார். உங்கள் கை பிடித்து கடைசி பத்தி வரை பத்திரமாக அழைத்துச் செல்கிறார். 



கதாபாத்திரங்களின் குணாதிசயங்களை நாஞ்சிலார் அளவிற்கு துல்லியமாக நம் கண்முன் நிறுத்தும் எழுத்தாளர்களையும் கைவிட்டு எண்ணிவிடலாம்.

இருதினங்கள் முன் திருச்சிக்கு கோயில் குளங்களைச் சுற்ற குடும்பத்துடன் ஒரு உலா சென்றிருந்தேன். ஒவ்வொரு கோயிலிலும் கொடிமரத்தின் முன் விழுந்து சாஷ்டாங்கமாய் நமஸ்கரிக்கும்போது “சாத்தாங்கோயில்” நம்பியார் என் மேலே ஏறியமர்ந்து என்னை எழவிடாமல் செய்கிறார். 

வழக்கமாக விழுந்தவுடன் எழுபவன் அப்படியே வீழ்ந்த நிலையில் கிடக்கிறேன். ஒரு நிமிடநேரம் தரையையே வாசனை பிடிக்கிறேன். எனக்கே அது விசித்திரமாக இருக்கிறது, எனினும் ஒவ்வொரு கோயிலிலும் அதைத் தவிர்த்துவிட முடியவில்லை. 

நாஞ்சில் நாடனின் “பரிசில் வாழ்க்கை” சிறுகதையின் நாயகர்தான் அந்த நம்பியார்.

ஒரு பூசாரியின் வாழ்க்கையை இதனினும் வீரியமாக விவரித்த கதையொன்றுமில்லை. நாஞ்சில் நாட்டு சாஸ்தா கோயில் ஒன்றின் பூசாரியான அந்த நம்பியார் சரிதச்சட்டியை உருட்டி உருட்டிக் காட்டிவிட்டு கடைசி பத்தியில் அதில் ஒரு கவளச் சோற்றை நம் கையில் சுடச்சுட வைக்கிறார் நாஞ்சிலார். 

மேலே சொன்னாற்போல் வளவளாவென ஒன்பது பக்கங்களுக்கு நம்முடன் அளவளாவுகிறார். நாட்டைச் சொல்கிறார், சாத்தாங்கோயில் (சாஸ்தா கோயில்) அமைந்த காட்டைச் சொல்கிறார், நம்பியாரின் தீராத தரித்திரத்தையும், தாங்கொணா இறையருளையும் இப்படி விவரிக்கிறார்.

பூசாரி வாழ்க்கைக்கு ஆடையிலும் கோடையிலும் சினங்கொள்ளக் கூடாது. ரௌத்திரமும் பழக இயலாது. சினம் என்பது சேர்ந்தாரைக் கொல்லி. எதற்கும் திளைத்துச் சிரிக்க வேண்டும். தொழில் தர்மம். ஊசியால் குத்தினாலும், கோடாரியால் வெட்டினாலும், வேட்டாங் கல்லால் எறிந்தாலும், ‘கல்லால் ஒருவன் அடிக்க காண்டீபம் எனும் வில்லால் ஒருவன் அடிக்க’ என்று என்.சி. வசந்த கோகிலம் பாடிய நிந்தாஸ் துதியைப் போல. மறு கன்னத்தையும் குதூகலத்துடன் காட்ட வேண்டும்.

முடிவில் ஒரு பேயறை வைக்கிறார். அப்படி நான் வாங்கிய ஒரு அறை’தான் என் கோயில் உலா நேரங்களில் என்னை எழ விடாமல் செய்தன.

ஆனந்த விகடன் தீபாவளிமலர் 2006’ல் இடம்பெற்ற இந்தச் சிறுகதை நாஞ்சிலாரின் இணையதளத்திலும் கிடைக்கிறது. சாகித்ய அகாடமி விருது பெற்ற “சூடிய பூ சூடற்க” தொகுப்பிலும் இந்தச் சிறுகதை இடம் பெற்றுள்ளது. நம் 

இந்தப் பதிவைத் தொடர்ந்து அந்தப் புத்தகத்திற்கு நண்பர் ரவிக்குமார் எழுதிய விமர்சனப் பதிவு அடுத்ததாக இந்தத் தளத்தில், விரைவில்...

சிறுகதை: பரிசில் வாழ்க்கை - நாஞ்சில் நாடன்
(சூடிய பூ சூடற்க தொகுப்பிலிருந்து)
வெளியீடு - தமிழினி
விலை: ரூ 100/- 
இணையத்தில் வாங்க: உடுமலை 


Related Posts Plugin for WordPress, Blogger...