A.J.Cronin A.K.Ramanujan Amartya Sen Andrea Maria Schenkel Anton Chekhov Arthur Hailey Bill Bryson Deborah Eisenberg Elizabeth Kostova Gay Neck Geoff Dyer George Orwell Harper Lee Henning Mankell Ian McEwan Jared Diamond Jilly Cooper Jonathan Livingstone Seagull Joseph Heller Kenneth Anderson Kiran Desai Maugham Michael McCarthy O.Henry Orhan Pamuk P.G.Wodehouse PB.ஸ்ரீனிவாஸ் R.K.Narayan Richard Bach Ronald Wilks Stephen King Swami Tejomayananda Upamanyu Chatterjee William Sydney porter dhan gopal mukerji mark tully okakura kakuzo saggi steven weinberg vikram seth ஃபெயின்மன் அ. முத்துலிங்கம் அ.கா.பெருமாள் அகிலன் அசோகமித்திரன் அனார் அறிஞர் அண்ணா அறுசுவை அரசு நடராஜன் அழகியசிங்கர் ஆ. சிதம்பரகுற்றாலம் ஆதவன் ஆர்.கே.நாராயண் ஆர்.ஷண்முகசுந்தரம் ஆஸ்கார் ஒயில்டு இடாலோ கால்வினோ இந்திரா பார்த்தசாரதி இந்துமதி இரா. நாறும்பூநாதன் இரா.நடராசன் இரா.முருகன் இரா.முருகவேள் இலக்கிய வீதி இனியவன் இலவச கொத்தனார் உமா சம்பத் என்.சொக்கன் என்.ராமதுரை எம் கோபாலகிருஷ்ணன் எம். வி. வெங்கட்ராம் எர்னெஸ்ட் ஹெமிங்வே எஸ். ராமகிருஷ்ணன் எஸ்.சந்திரமௌலி ஏ.கே.ராமானுஜன் ஏ.கோபண்ணா ஒல்கா பெரோவ்ஸ்கயா க.நா.சு கண்மணி குணசேகரன கரிச்சான் குஞ்சு கலாப்ரியா காப்கா காலபைரவன் கி. ராஜநாராயணன் குமரி எஸ்.நீலகண்டன் குல்தீப் நய்யார் கே நெக் கோபிநாத் கோபுலு சந்திரசேகர சர்மா சமஸ் சல்மான் ரஷ்டி சா. கந்தசாமி சா.பாலுசாமி சாருநிவேதிதா சாலீம் அலி சி.சரவணகார்த்திகேயன் சி.சு.செல்லப்பா சிபி.கே.சாலமன் சு. வேணுகோபால் சுகுமாரன் சுஜாதா சுந்தர ராமசாமி சுனில் ஜோகி சுப்புடு சுவாமி விவேகானந்தர் செல்லம்மா பாரதி செள.ராஜன் சே. இரகுராமன் சோம.வள்ளியப்பன் ஜனனி ரமேஷ் ஜான் பான்வில் ஜி.நாகராஜன் ஜிம் கார்பெட் ஜெயகாந்தன் ஜெயமோகன் ஜே. ஹெச். வில்லியம்ஸ் ஜோதிநரசிம்மன் டாக்டர். சு.முத்து செல்லக்குமார் டாக்டர். பி.எம்.ஹெக்டே டாக்டர்.எல்.மகாதேவன் தமிழ் மகன் தரம்பால் தி. ஜானகிராமன் தி.ஜானகிராமன் தியடோர் பாஸ்கர் து.கணேசன் ந.பிச்சமூர்த்தி நகுலன் நடிகர் சிவகுமார் நமீதா தேவிதயாள் நா.முத்துக்குமார் நாகம்மாள் நாகூர் ரூமி நாஞ்சில் நாடன் ப. சிங்காரம் பல்லவி அய்யர் பழ.அதியமான் பழ.கருப்பையா பவன் வர்மா பவா செல்லதுரை பஷீர் பா.ராகவன் பாம்பே ஜெயஸ்ரீ பாரதியார் பாலகுமாரன் பாலச்சந்திரன் சுள்ளிக்காடு பாலு மகேந்திரா பாவண்ணன் பி.எச்.டேனியல் பி.எம்.சுந்தரம் பி.ஏ.கிருஷ்ணன் பி.வி.ராமஸ்வாமி பிரமிள் பெஞ்சமின் ப்ளாக் பெருமாள் முருகன் பொ.கருணாகரமூர்த்தி மகாகவி பாரதியார் மதன் மனுஷ்யபுத்திரன் மருதன் மலர்மன்னன் மா.கிருஷ்ணன் மார்க்வெஸ் மாஸ்தி மில்லி போலக் முகில் முஹமது யூனுஸ் யதுகிரி அம்மாள் யுவன் சந்திரசேகர் ரகோத்தமன் ரமணி சந்திரன் ரா.கி.ரங்கராஜன் ராஜாஜி லலிதாராம் லா.ச.ரா லிவிங்ஸ்மைல் வித்யா லூசியன் ஸ்ட்ரைக் லெமூர் வ.ரா வண்ணதாசன் வா.மு கோமு வாலி விட்டல் ராவ் வின்சென்ட் ஷீன் விளதீமிர் பகமோலவ் வீயெஸ்வி வுடி ஆலன் வெரியர் எல்வின் வேதவல்லி வைக்கம் முகமது பஷீர் வைணவச் சுடராழி ஆ. எதிராஜன் வைரமுத்து ஷோபா சக்தி ஹென்னிங் மான்கெல்
Showing posts with label கிருஷ்ணகுமார் ஆதவன். Show all posts
Showing posts with label கிருஷ்ணகுமார் ஆதவன். Show all posts

4 Oct 2013

மாவீரன் செண்பகராமன் - யோகா பாலச்சந்திரன்


இந்திய விடுதலைக்காக அகிம்சைக்கு எதிரான முறையில் இயங்கியவர்கள் மிகச் சிலரே. இந்திய விடுதலைப் போராட்ட வரலாறு காந்திய அகிம்சைப் போராட்ட வரலாறாக இருக்கிறது. அப்படியில்லாமல் ஆயுதம் ஏந்திப் போராடிய சிறுபான்மை போராளி ஒருவரின் சுருக்கமான வரலாறு இந்த நூல். சுருக்கம் என்றால் பொடிச்சுருக்கம். முன்னுரை, சில விளம்பரப் படங்கள் கழிய மொத்தமே 34 பக்கங்கள் மட்டுமே. வேகமாக வாசிப்பவர்கள் பதினைந்து நிமிடங்களில் வாசித்து கீழே வைத்துவிடலாம்.

இலங்கை சிந்தாமணி இதழில் 1967ல் வெளிவந்த கட்டுரைத் தொடரை நூல் வடிவில் கொண்டு வர முயற்சித்திருக்கிறார்கள். வரலாற்றையும் அதில் வாழ்ந்த ஒருவரையும் மறந்துவிடக்கூடாது என்பதன் அடிப்படையில் இந்த நூலை எழுதியிருப்பதாக நினைக்கிறேன். இல்லை செண்பகராமனைப் பற்றி நாமறிந்த தரவுகளின் ஆழம் அவ்வளவுதானா தெரியவில்லை. அதாவது சொல்வதற்கு அதிகமாக எதுவும் இல்லை என்ற நிலை இருக்கிறதா என்ற கேள்வி பிறக்கிறது.




16 Jun 2013

ரஸவாதி - பௌலோ கொய்லோ

சிறப்பு  பதிவர் - கிருஷ்ணகுமார் ஆதவன்

ஆடு மேய்க்கும் இடையனான சிறுவன் சந்தியாகு, புதையலிருக்கும் பிரமிடுகளை நோக்கி மேற்கொள்ளும் பயணம் நாவலின் கதைக் கரு. இடையிடையில் அவன் சந்திக்கும் மனிதர்கள், நிலப்பரப்புகள், சம்பவங்கள் ஒவ்வொன்றும் அவனது பார்வையை விரிவுபடுத்துவதாக இருக்கின்றன. பயண முடிவில் சடுதியில் நேர்ந்துவிடும் ஒரு சிறிய திருப்பத்தின் மூலம் நாவல் மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது.

பௌலோ கொய்லோவின் சிறந்த நாவல்களில் ஒன்று இது. உலக  அளவில் அதிகம் விற்பனையான நாவல்களில் ஒன்றும்கூட. பொன்.சின்னத்தம்பி முருகேசன் அவர்களின் மொழிபெயர்ப்பில் காலச்சுவடு பதிப்பகத்தார் இதை தமிழில் வெளியிட்டுள்ளனர். ரஸவாதி - அடிப்படையில் ஒரு தத்துவார்த்தமான நாவலாக இருந்தாலும் மீயதார்த்த பாணியில் எழுதப்பட்டிருக்கும் கதையைக் கொண்டுள்ளது. கதையின் மையத்தில் உள்ள தத்துவம் படிம அமைவிலான சுட்டலாய் ஆங்காங்கே பேசப்படுகிறது.

28 May 2013

மீதி வெள்ளித்திரையில் - தியடோர் பாஸ்கரன்

சிறப்பு பதிவர் -கிருஷ்ணகுமார் ஆதவன்

சினிமா எவ்வாறு சமூகத்தில் புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறது? மக்களுக்கும் சினிமாவுக்குமான உறவுமுறை என்ன? மேலும், ஒரு திரைப்படம் எப்படி பார்க்கப்பட வேண்டும்? - இது போன்ற அடிப்படை கேள்விகளை எழுப்புவதுடன் தமிழ் சினிமாவின் பல்வேறு பரிமாணங்களையும் அலசும் கட்டுரைகளைக் கொண்ட நூல் இது.

இந்த நூல் வழியே தியடோர் பாஸ்கரன் தன்னுடைய தனித்த பார்வையின் மூலம் சில முக்கிய விழுமியங்களை வாசகனுக்கு உருவாக்கித் தருகிறார். திரைப்பட வரலாறு, சினிமா அழகியல், ஆளுமைகள், திரைப்படங்கள் ஆகிய நான்கு தலைப்புகளின்கீழ் அவர் எழுதியிருக்கும் கட்டுரைகள் முக்கியமானவை.

ஏன் முக்கியமானவை? 


24 Mar 2013

மோட்டார் சைக்கிள் டைரி - மருதன்

சிறப்பு  பதிவர் : கிருஷ்ணகுமார் ஆதவன்


அமெரிக்கா - வட அமெரிக்கா, தென் அமெரிக்கா என இரண்டாகப் பிளந்துள்ளது. யு.எஸ் என்று நாம் காலரைத் தூக்குவது வட அமெரிக்காவைத்தான். தென் அமெரிக்காவை அல்ல. அது உடலுறுப்பில் பாதத்தைப் போல, அதிலும் சகதியில் சிக்குண்ட பகுதி. அங்கு பல நாடுகள் - அர்ஜெண்டினா, சிலி, பெரு என்று. கிட்டத்தட்ட அறுபது ஆண்டுகள் முன்பிருந்த சூழலில் அதன் மொத்த நாடுகளும் மக்களும், அவற்றின் அரசின், அதிகாரத்தின், அரசியலின் தலைவர்களின் குடுமியும் முழுக்க முழுக்க யு.எஸ்-ஸின் கைகளில் இருந்தது (இன்றும் கொஞ்சம் இருக்கிறது, இடையில் பிடி நழுவிவிட்டது).

அந்தப் பிடியை விடுவித்து அவற்றை ஒருமித்த லத்தீன் அமெரிக்காவாக உருவாக்கிவிட முனைந்த ஒரு இளைஞன் செயல்படுத்திய பல்லாயிரம் மைல் தொலைவு மோட்டார் சைக்கிள் பயணம் குறித்த தகவல்களை மருதன் எழுதிய 'மோட்டார் சைக்கிள் டைரி' விவரிக்கிறது.

 


13 Mar 2013

இனி வரும் உலகம் - பெரியார்

சிறப்பு  பதிவர் : கிருஷ்ணகுமார் ஆதவன்

1944-ம் ஆண்டு பெரியார் எழுதிய நூல் இது. வரும் காலங்களில் சமூகத்திலும், விஞ்ஞானத்திலும் எப்படிப்பட்ட மாற்றங்களெல்லாம் ஏற்படும், மக்களின் வாழ்வு நிலை எப்படி இருக்கும் என்பதைப் பற்றியெல்லாம் யூகித்து சொல்லியிருக்கிறார். இந்த சின்ன புத்தகத்தை வாசித்து முடித்தவுடன் ஆச்சரியமும், வருத்தமும் ஒருசேர மிஞ்சியது.  செல்போனும், ஃபேஸ்புக்கும், ஸ்கைப்புமாக இன்று தொழில்நுட்பத்தில் கண்டறிந்து உபயோகிப்பவைகளை அவர் 40 வருடங்களுக்கு முன்னரே சொல்லிவிட்டார் என்ற பெருமையோடு ஐந்து நிமிடங்களில் புத்தகத்தில் நுழைந்து வெளியேறலாம்.



புத்தகத்திலிருந்து:
  • கம்பியில்லாத் தந்தி சாதனம் ஒவ்வொருவர் சட்டைப் பையிலும் இருக்கும் - செல்போன்
  • உருவத்தைத் தந்தியில் அனுப்பும்படியான சாதனம் எங்கும் மலிந்து, ஆளுக்காள் உருவம் காட்டிப் பேசிக்கொள்ளத்தக்க சவுகரியம் ஏற்படும் - ஃபேஸ்புக், ஸ்கைப்
  • இன்று இருக்கும் சாட்டிலைட் வழிக் கல்விமுறை - ஓர் இடத்தில் இருந்துகொண்டே பல இடங்களில் உள்ள மக்களுக்குக் கல்வி கற்றுக் கொடுக்கச் சாத்தியப்படும்
  • மருத்துவத்தில் இன்று இருக்கும் டெஸ்ட் டியூபின் மூலம் குழந்தை பெறுதலை- பிள்ளைப்பேறுக்கு ஆண் பெண் சேர்க்கை என்பதுகூட நீக்கப்படலாம். நல்ல திரேகத்துடனும், புதிய நுட்பமும், அழகும், திடகாத்திரமும் உள்ள பிரஜைகள் ஏற்படும்படியாக பொலிகாளைகள் போல் தெரிந்தெடுத்து மணிபோன்ற பொலி மக்கள் வளர்க்கப்பட்டு, அவர்களது
  • வீரியத்தை இன்ஜெகஷன் மூலம் பெண்கள் கருப்பைகளுக்குள் செலுத்தி நல்ல குழந்தைகளைப் பிறக்கச் செய்யப்படும். ஆண் பெண் சேர்க்கைக்கும்,குழந்தை பெறுவதற்கும் சம்பந்தமில்லாமல் செய்யப்பட்டுவிடும்.
  • பேட்டரி கார் - பெட்ரோலுக்குப் பதில் மின்சார சக்தியே உபயோகப்படுத்தலாம்.
  • அதிசயப்பொருளும், அற்புதக் காட்சிகளும், அவற்றின் அனுபவங்களும் மக்கள் எல்லோரும் ஒன்று போலவே அனுபவிப்பார்கள் - தீம் பார்க்


Related Posts Plugin for WordPress, Blogger...