A.J.Cronin A.K.Ramanujan Amartya Sen Andrea Maria Schenkel Anton Chekhov Arthur Hailey Bill Bryson Deborah Eisenberg Elizabeth Kostova Gay Neck Geoff Dyer George Orwell Harper Lee Henning Mankell Ian McEwan Jared Diamond Jilly Cooper Jonathan Livingstone Seagull Joseph Heller Kenneth Anderson Kiran Desai Maugham Michael McCarthy O.Henry Orhan Pamuk P.G.Wodehouse PB.ஸ்ரீனிவாஸ் R.K.Narayan Richard Bach Ronald Wilks Stephen King Swami Tejomayananda Upamanyu Chatterjee William Sydney porter dhan gopal mukerji mark tully okakura kakuzo saggi steven weinberg vikram seth ஃபெயின்மன் அ. முத்துலிங்கம் அ.கா.பெருமாள் அகிலன் அசோகமித்திரன் அனார் அறிஞர் அண்ணா அறுசுவை அரசு நடராஜன் அழகியசிங்கர் ஆ. சிதம்பரகுற்றாலம் ஆதவன் ஆர்.கே.நாராயண் ஆர்.ஷண்முகசுந்தரம் ஆஸ்கார் ஒயில்டு இடாலோ கால்வினோ இந்திரா பார்த்தசாரதி இந்துமதி இரா. நாறும்பூநாதன் இரா.நடராசன் இரா.முருகன் இரா.முருகவேள் இலக்கிய வீதி இனியவன் இலவச கொத்தனார் உமா சம்பத் என்.சொக்கன் என்.ராமதுரை எம் கோபாலகிருஷ்ணன் எம். வி. வெங்கட்ராம் எர்னெஸ்ட் ஹெமிங்வே எஸ். ராமகிருஷ்ணன் எஸ்.சந்திரமௌலி ஏ.கே.ராமானுஜன் ஏ.கோபண்ணா ஒல்கா பெரோவ்ஸ்கயா க.நா.சு கண்மணி குணசேகரன கரிச்சான் குஞ்சு கலாப்ரியா காப்கா காலபைரவன் கி. ராஜநாராயணன் குமரி எஸ்.நீலகண்டன் குல்தீப் நய்யார் கே நெக் கோபிநாத் கோபுலு சந்திரசேகர சர்மா சமஸ் சல்மான் ரஷ்டி சா. கந்தசாமி சா.பாலுசாமி சாருநிவேதிதா சாலீம் அலி சி.சரவணகார்த்திகேயன் சி.சு.செல்லப்பா சிபி.கே.சாலமன் சு. வேணுகோபால் சுகுமாரன் சுஜாதா சுந்தர ராமசாமி சுனில் ஜோகி சுப்புடு சுவாமி விவேகானந்தர் செல்லம்மா பாரதி செள.ராஜன் சே. இரகுராமன் சோம.வள்ளியப்பன் ஜனனி ரமேஷ் ஜான் பான்வில் ஜி.நாகராஜன் ஜிம் கார்பெட் ஜெயகாந்தன் ஜெயமோகன் ஜே. ஹெச். வில்லியம்ஸ் ஜோதிநரசிம்மன் டாக்டர். சு.முத்து செல்லக்குமார் டாக்டர். பி.எம்.ஹெக்டே டாக்டர்.எல்.மகாதேவன் தமிழ் மகன் தரம்பால் தி. ஜானகிராமன் தி.ஜானகிராமன் தியடோர் பாஸ்கர் து.கணேசன் ந.பிச்சமூர்த்தி நகுலன் நடிகர் சிவகுமார் நமீதா தேவிதயாள் நா.முத்துக்குமார் நாகம்மாள் நாகூர் ரூமி நாஞ்சில் நாடன் ப. சிங்காரம் பல்லவி அய்யர் பழ.அதியமான் பழ.கருப்பையா பவன் வர்மா பவா செல்லதுரை பஷீர் பா.ராகவன் பாம்பே ஜெயஸ்ரீ பாரதியார் பாலகுமாரன் பாலச்சந்திரன் சுள்ளிக்காடு பாலு மகேந்திரா பாவண்ணன் பி.எச்.டேனியல் பி.எம்.சுந்தரம் பி.ஏ.கிருஷ்ணன் பி.வி.ராமஸ்வாமி பிரமிள் பெஞ்சமின் ப்ளாக் பெருமாள் முருகன் பொ.கருணாகரமூர்த்தி மகாகவி பாரதியார் மதன் மனுஷ்யபுத்திரன் மருதன் மலர்மன்னன் மா.கிருஷ்ணன் மார்க்வெஸ் மாஸ்தி மில்லி போலக் முகில் முஹமது யூனுஸ் யதுகிரி அம்மாள் யுவன் சந்திரசேகர் ரகோத்தமன் ரமணி சந்திரன் ரா.கி.ரங்கராஜன் ராஜாஜி லலிதாராம் லா.ச.ரா லிவிங்ஸ்மைல் வித்யா லூசியன் ஸ்ட்ரைக் லெமூர் வ.ரா வண்ணதாசன் வா.மு கோமு வாலி விட்டல் ராவ் வின்சென்ட் ஷீன் விளதீமிர் பகமோலவ் வீயெஸ்வி வுடி ஆலன் வெரியர் எல்வின் வேதவல்லி வைக்கம் முகமது பஷீர் வைணவச் சுடராழி ஆ. எதிராஜன் வைரமுத்து ஷோபா சக்தி ஹென்னிங் மான்கெல்
Showing posts with label கடலூர் சீனு. Show all posts
Showing posts with label கடலூர் சீனு. Show all posts

12 Jun 2015

கடற்துளி- தெளிவத்தை ஜோசப்பின் 'குடை நிழல்'


தீவிர இலக்கியம் எனும் கலை வடிவுக்குள் நுழைவதற்கு பல வாசல்கள். பால்யம் தொட்டு சிறுவர் இலக்கியம் துவங்கி, தொடர் வாசிப்பினூடே   தீவிர இலக்கியத்துக்குள் நுழைவது ஒரு வாசல்.

இயக்கங்களின் வகுப்புகள் வழியே இலக்கியத்தில் பலர் நுழைந்தது ஒரு காலம். 

நேரடியாக பொழுதுபோக்கு வாசிப்பில் துவங்கி சுஜாதா, பாலகுமாரன் சுட்டுதலின் வழியே தீவிர இலக்கியத்தின் அறிமுகத்தை  தொண்ணூறுகளில் பலர் அடைந்தனர்.

கணினி வந்தபிறகு வாசிப்பிலும், புத்தக அச்சாக்கங்களிலும் சீரிய மாற்றங்கள் நிகழ்ந்தன. இரண்டாயிரத்துக்குப் பிறகு இணைய வாசிப்பின் வழியே தீவிர இலக்கியத்துக்குள் நுழையும் புதிய வாசல் திறக்கிறது.

இந்த புதிய தலைமுறை வாசகர்கள் இலங்கை எழுத்தாளர்கள் என  முதன்மையாக அறிவது மூவரை. முதலாவதாக, அ. முத்துலிங்கம்.    சரளமான எழுத்தாலும், நுட்பத்தாலும், கனிந்த நகைச்சுவையாலும்  தனித்த இடம் வகிப்பவர். ஆனால் இவரது படைப்புலகில் இலங்கையின் போர்ச் சூழல், போரில் சிதையும் குடும்பம், புலம்பெயர் வாழ்வின் துயரம், இவற்றை நேரடியாகப் பேசும் இடம் மிகக் குறைவே.

ஷோபா சக்தியின் படைப்புலகில் இலங்கையின் வரலாற்று ஒழுக்கில் முக்கிய பங்காற்றிய வன்முறை இயக்கங்களின், அதற்குள் இயங்கும் அதிகார ஆட்டங்களின், அபத்த முகங்களை காண முடியும்.

எஸ்பொ. அவரது எழுத்துக்களால், அரசியல் செயல்பாடுகளால் ஈழத்து ஜெயகாந்தன் என்றே இங்கு வகுக்கப்பட்டிருக்கிறார்.

செழுமையான ஆளுமைகள் இன்னும் பலர் இருப்பினும், தமிழக வாசகர்கள் அதிகமும் அறியாத தெளிவத்தை ஜோசப் விஷ்ணுபுரம் இலக்கிய விருது விழா வாயிலாக இங்கு கவனம் பெற்றார்.



4 Jun 2015

அவஸ்தை - யு ஆர் அனந்த மூர்த்தி


கடந்த பயணத்தில் வாசிக்க கைக்குச் சிக்கிய ஏதோ ஒரு புத்தகத்தை எடுத்து வழமை போல் பைக்குள் பத்திரப்படுத்தினேன். நெல்லை- கடலூர் பன்னிரண்டு மணி நேர பகல் பாசெஞ்சர் பயணம். புத்தகத்தை எடுத்தேன். யு ஆர் அனந்தமூர்த்தியின் அவஸ்தை நாவல்.

இந்திய பயணத்தில் ஒரு முறை நண்பர்கள் அனைவரும் ஒவ்வொரு மாநிலமாக தாண்டத் தாண்ட அந்த நிலத்தின் எழுத்தாளர்கள் குறித்து பேசிக் கொண்டிருந்தோம். இப்போது பேசிக் கொண்டிருக்கையில் ஷிமோகா அருகில் இருந்தோம். ஜெயமோகன் அனந்த மூர்த்தி அவர்களை தொலைபேசியில் அழைத்துப் பேசினார். எனக்கு இங்கே மெல்லிய பேச்சொலி கேட்டது.  அவர் குரல் எப்படி இருக்கும் தெரியாது. ஆனால் அவர் நினைவுடன் எழுந்து வந்தான் அவஸ்தை நாவலின் கிருஷ்ணப்பா. சில வருடங்கள் முன்பு கடினமான மொழி பெயர்ப்பில் அதை வாசித்திருக்கிறேன். இப்போது வாசிப்பது காலச்சுவடு வெளியீடாக  நஞ்சுண்டன் மொழி பெயர்ப்பு.

29 Jun 2014

ஓநாய் குலச்சின்னம் - ஒரு புனைவும் சில எண்ணங்களும்


ஜாரட் டைமண்டின்  ‘துப்பாக்கிகள், கிருமிகள், மற்றும் எக்கு’ நூலில் அவர் வரலாற்று எழுச்சி வீழ்ச்சி  நிகழ்வுகளில்,  மார்க்சிய பொருள்முதல்வாத முரண் இயக்கம் எனும் கோட்பாட்டுக்கு வெளியே இருக்கும் வேறு பல காரணிகள் குறித்து தனது சிந்தனையை முன்னெடுக்கிறார். உதாரணமாக முதல் உலகப்போருக்கு முன்னான காலக்கட்டத்தில், ராணுவ நடவடிக்கைக்கு அடிப்படையான குதிரைகள் மீதான ஆளுமை கொண்டோரின் எழுச்சி தருணத்தை ஜாரெட் முன்னிலைப்படுத்துகிறார். கி மு 1674இல் எகிப்த்தில் ஹிக்ஸோ எனும் குழு, பாரோக்களுக்கு சொந்தமான குதிரைகளின் பரிபாலகர்களாக இருக்கிறார்கள். குதிரை மீதான தேர்ச்சி அக்குழுவுக்கு கைவந்தவுடன் ஒரு சிறிய படையெடுப்பு மூலம், அரசை வென்று அவ்வினக்குழு சில காலம் பாரோக்களாக ஆட்சி புரிகிறார்கள்.

ஜாரெட்டின் இந்த நூலை அடிப்படையாகக் கொண்டு, ஒரு முறை தனது உரையாடலில் ஜெயமோகன், பாலை நில மக்கள், இந்தியாவை வென்று அடக்க அடிப்படைக் காரணிகளாக அம் மக்கள், தங்கள் அன்றாட உயிர் பிழைத்தலுக்கு, பாலைநில சூழலுடன் புரிந்த சமரில் அடைந்த தகவின் பலனாய்க் கிடைத்த மூர்க்கம், மற்றும் சோர்வே அற்ற உறுதி குலையாத அரேபியக் குதிரைகள் மீது, அதன் திறன்கள் மீது,  அவர்கள் அடைந்திருந்த தேர்ச்சியை முன்வைத்தார். தொடர்ந்து மேய்ச்சல் சமூகமாக இருந்து, முகமதிய அரசர்களின் குதிரைகளுக்கு பரிபாலகர்களாக மாறி, அதன் பலனாக கைவரப்பெற்ற குதிரைகள் மீதான ஆளுமைத்திறனை அடிப்படையாகக் கொண்டு, உயர்ந்து வந்த நாயக்க மன்னர்களின், அடித்தளத்தை இதே சிந்தனை வரிசை கொண்டு விளக்கினார். இந்தப் பாலைநில ஆற்றலுக்கு, நிகராக எழுந்துவந்த சத்ரபதி சிவாஜி, மற்றும் நாயக்க வம்சம் இரண்டின் ஆற்றலுக்கான அடித்தளமும் இதேதான் என்று தொடர்ந்தார்.

நாம் ஏற்கனவே அறிந்த ஒன்றை,ஒரு புதிய சிந்தனைத் தளத்தில் நிறுத்தி, அதன் வெளிச்சத்தில் விஷயங்கள் புதிதாக துலங்குகையில் அளிக்கும் உவகையில் அன்றெல்லாம் திளைத்திருந்தேன். சில வருடங்களுக்கு முன் ஒரு திரைப்படம் கண்டேன். செர்ஜி பாத்ரோ இயக்கி, மங்கோலிய மொழியில் வெளியான, செங்கிஸ்கான் வாழ்வின் சில சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட ‘மங்கோல்’ எனும் படம் அது. அதன் தருணங்களும், கானின் எழுச்சியும், இந்த சிந்தனைத் தொடரில் பொருந்தி, மேலும் பல சிந்தனை பாதைகளுக்கு என்னை அழைத்துச் சென்றன.

பின்னர் சமீபத்தில் ஜாரெட்டின் அந்த நூல் தமிழில் வாசிக்கக் கிடைத்தது. [வெளியீடு பாரதி புத்தகாலயம்] ஜாரெட் அவரது நூலின்  பக்கங்களில், வெவ்வேறு தருணங்களில் சொல்லியவற்றை, ஒரு வரிசையில் வகுத்துக் கொண்டேன்.

முதலில் வேட்டைச்சமூகம். இங்கே வலியது எஞ்சும் எனும் வன நீதிதான் அடிப்படை. அடுத்து வேட்டையுடன் இணைந்த மேய்ச்சல் சமூகம். இங்கே இயற்கையுடன் ஒரு உடன்படிக்கை நிகழ்கிறது. தேவைக்கு மட்டுமே இயற்கை நுகர்வு, ,பேராசைக்கு அல்ல  அதுதான் இங்கு அடிப்படை. அடுத்து வேளாண் சமூகம். வேட்டை சமூகம் கொண்ட ஸ்தரமின்மை இங்கே இல்லை. தங்கி வாழும் தன்மையால் பிறப்பு விகிதம் அதிகரிக்கிறது. உணவு சேமிக்கப்படுகிறது. சமூக நிர்வாகமும், சேமிப்பு பாதுகாக்கப்பட ராணுவமும் தேவையாக, அதை உருவாக்க உபரியும், உபரியின் வழி மையமான அரசாங்கமும் உருவாகின்றன. படிநிலையில் இந்த வேளாண் மைய அமைப்பைக் காக்க, ஒரு மைய அரசு. அது முதலில் ஒடுக்குவது, அல்லது அழிப்பது வேட்டைச் சமூகமாக இருக்கிறது. இன்று மக்கள் தொகையில் முன்னணியில் இருக்கும் சீனா கிமு 7000 அளவிலேயே விவசாயம், மற்றும்  பட்டுப்புழு வளர்ப்பில் அடித்தளம்  அமைத்து விட்டது என்பதை இதனுடன் இணைத்து சிந்திக்க, சுவாரஸ்யம் கூடுகிறது.

இந்த அடிப்படை சிந்தனைகளின் இலக்கிய சாட்சியமாக, மைய அரசால் ஒடுக்கப்படும் வேட்டை சமூகம் ஒன்றின் இறுதி நாட்களை அடிப்படையாகக் கொண்டு, இயற்கைமீது மனிதன் செலுத்தும் வன்முறையால், எதிர்வரும் சுய அழிவு, இவற்றை சரடாகக் கொண்டு, ஒரு இயற்கை தரிசனத்தை முன்வைத்த அற்புதமான  புனைவு ஒன்று வாசிக்கக் கிடைத்தது.

ஜியாங் ரோங் எழுதிய, [ஆங்கிலம் வழி தமிழில்] சி.மோகன் அவர்களின் சரளமான மொழிபெயர்ப்பில், ‘’ஓநாய் குலச்சின்னம்’’ எனும் நாவல் அது.


6 Jun 2014

இனி நான் உறங்கட்டும் - பி.கே.பாலகிருஷ்ணன்


வாசிப்பின் துவக்கம். கற்பனையில் உழல, பகல் கனவில் திளைக்க வாசித்துத் தள்ளினேன். வாசிப்பது கற்பனையில் திளைக்க மட்டுமல்ல, அதை கருவியாகக் கொண்டு இந்த வாழ்வையும் அறிய வேண்டும் எனும் பிரக்ஞையை தனது ‘சுய தரிசனம்’ சிறுகதை வழியே ஜெயகாந்தன் எனக்குள் உருவாக்கினார். இந்த போதத்துடன் நான் வாசித்த முதல் கதை. ஜெயமோகனின் ‘விரித்த கரங்களில்’. அடுத்த கதை அதே ஆசிரியரின் ‘விஷ்ணுபுரம்’. மூன்றாவது கதை, பி.கே.பாலக்ருஷ்ணன் மலையாளத்தில் எழுதி, ஆ.மாதவன் தமிழில் மொழிபெயர்த்த ‘இனி நான் உறங்கட்டும்’ என்ற தலைப்பிட்ட மகாபாரதக் கதை. கர்ணனின் கதை.

---                      

மகாபாரதம் மானுடத்தின் காவியம். தோன்றிய நாள் முதல் இன்று ஜெயமோகன் வரை மீண்டும் மீண்டும் அது மறுஉருவாக்கம் செய்யப்படுவதன் காரணம், மகாபாரதம் அன்றும், இன்றும், இனியும் விகசிக்கப்போகும் மனிதனின் அனைத்து மனோ தத்துவங்களையும், உன்னதங்களையும் பரிசீலிக்கிறது என்பதே. குல,குடும்ப, தனிமனித அறங்களை, எக்காலகட்டமாகிலும் அக்காலகட்டத்து வாழ்வை உரைகல்லாகக் கொண்டு எழும் பேரறம் ஒன்றை நோக்கிய காலாதீதத் தேடல் அதில் உறைகிறது என்பதே.

27 Apr 2014

சிச்சுப்புறா - அல்கா (தமிழில் - சுகானா)

பதிவர்: கடலூர் சீனு


 சமீபத்தில்  ஒரு  காட்சி  கண்டேன். 2 வயது  அழகான  பெண்குழந்தை. நல்ல சுறுசுறுப்பு, உற்சாகம். கைக்கெட்டும்  உயரத்தில்  இருந்த  எதையும் தாவிப்பற்றி  இழுத்து  கீழே  போட்டு, ஏந்தி  ஆராய்ந்து, தூக்கி எறிந்து, மழலை மொழிந்து, களத்தையே துவம்சம்  செய்துகொண்டிருந்தது. சமையல்  நேரம். அம்மாவால்  அவளை சமாளிக்க  இயலவில்லை. எடுத்தார்  மொபைலை, இயக்கினார்  ஒளிப்பாடல்  துணுக்கு  ஒன்றினை, குழந்தை  ஆவலுடன் வாங்கி, காட்சியில்  விழிகள்  விரிய, உறைந்து  அமர்ந்தது. ரிபீட் மோடில் அப்பாடல் திரும்ப திரும்ப  ஒலிக்க,  சமையல்  முடியும்  வரை,  ''ஜிங்கின மணியில்'' உறைந்து  ஸ்தம்பித்துக்  கிடந்தது குழந்தை.

வேறொரு  இல்லம்,  பாலகன் ஒருவன், சோபா  மீது  ஏறி, சோட்டா  பீம் மாற்றச்  சொல்லி, தொலைகாட்சி  பார்த்துக்கொண்டிருந்த  தந்தையை, பீம் போலவே  எகிறி எகிறி  உதைத்துக்  கொண்டிருந்தான்.

மற்றொரு  சமயம், வேறொரு  மாணவன், பன்னிரண்டாம்  வகுப்பு, அவனது மேன்மைகள்  குறித்து  அவனது  பெற்றோர்களுக்கு  சொல்லிமுடிய  இன்னும் ஒரு ஆயுள்  தேவை.  அவனது  பொழுது  கொல்லி, கணிப்பொறி விளையாட்டு.  முகத்தில்  வெறி  தாண்டவமாட, ஒரு  அரைப் பைத்தியம் போல  மாய உலகின்  எதிரிகளை, சுட்டுத்தள்ளி  புள்ளிகளை அள்ளிக்கொண்டிருந்தான்.

எதிர்காலத்தில்  இலக்கிய வாசிப்பு  எனும்  பண்பாட்டு நிகழ்வு  அஸ்தமிக்கும் எனில்  அதன்  வேர்  இங்குதான்  பதிந்துள்ளது. வாசிப்பு  என்பது  உங்களது சுயம்  போல, உங்களுடன்  அணுக்கமாக  இருந்து, உங்களுடன் வளரவேண்டிய  ஒன்று.  ஒரு  கால்  நூற்றாண்டுக்கு  முன், எந்தக் குழந்தையும்  தன்னை  வாசிப்புடன்  இணைத்துக்  கொள்ள  அனைத்து சாதகமான  சூழலும்  தமிழகத்தில்  நிலவியது.

23 Feb 2014

அசீஸ் பே சம்பவம் - அய்ஃபர் டுன்ஷ்

சிறப்பு பதிவு- கடலூர் சீனு 

கொண்ட கலைக்கும், அதன் கலைஞர்களுக்குமான உறவை, அதன் முரண் இயக்கங்களை  கருப்பொருளாக கொண்ட கதைகள் என்றுமே முக்கிய எழுத்தாளர்களின்  அகம் குவியும் களம்.


தமிழில் உடனடியாக  நினைவில் எழுவது இரு துருவங்களின் பிரதிநிதியாக, அசோகமித்திரனின் புலிக் கலைஞன் மற்றும் ஜெயமோகனின் லங்கா தகனம். இன்றைய உலக இலக்கிய வரிசையில்  இக் கருப்பொருளுடன், மனித அக விசித்திரங்களின், புரிந்துகொள்ள இயலா மர்ம இயல்புகளின், கலை வெளிப்பாடாக வெளிவந்திருக்கும், சித்தரிப்பின் செறிவும், உணர்சிகரத்தின் ஆழமும் கூடிய துருக்கிதேச குறுநாவல் 'அஸீஸ் பே சம்பவம் '.

4 Jan 2014

காந்தியின் நிழல் - எ.கே செட்டியாரின் அண்ணலின் அடிச்சுவடில்


பதிவர் - கடலூர் சீனு 

சமீபத்தில் திரைக்கலை விஞ்ஞானம் வளர்ந்த வரலாறு குறித்த சில  பதிவுகள் படித்துக் கொண்டிருந்தேன். மேற்கு உலகம் முழுக்க சலனப் படம் உருவாக்கிப் பார்க்கும் உத்வேகம் அலைஅலையாக எழுந்து பரவி, தொடர்ச்சியாகப் பல விஞ்ஞானிகளால் அந்த உத்வேகம் செப்பனிடப்பட்டு, கிட்டத்தட்ட மௌனப்படங்கள்வரை விஞ்ஞானம் வளர்ந்து விடுகிறது.
இந்தத் தருணத்தில்  விஞ்ஞானத்திற்கும் கலைக்கும் கலப்புப் பிள்ளையாக விளைந்த திரைப்படம் வணிகமே என வணிகர்களாலும், கலையே என்று கலைஞர்களாலும் அலைக்கழிக்கப்பட, இந்த இரண்டையும் சமன் செய்யும் ஆளுமையாக உருவெடுத்தார் சார்லி சாப்ளின். சாப்ளின் ஒரு தொழில்நுட்பமாக திரைப்பட அறிவியலின்  பலம் பலவீனங்களை அறிந்தவர். அவரது காலத்தில் 18 துண்டுகள் வழிதான் ஒரு ஷாட் படம் பிடிக்க இயலும். விளைவு, திரையில் காட்சிகள் வேகத் த்வனியில் அசையும். இந்த பலவீனத்தையே தனக்கான பலமாகப் பயன்படுத்தி, அற்புதமான நகைச்சுவைக் காட்சிகளை உருவாக்கியவர் சாப்ளின்.  கலை தன் வெளிப்பாட்டு ஊடகத்தின் பலவீனங்களைத் தனது படைப்புத் திறனால் தாண்டுவது ஒரு தீர்வென்றால், அறிவும் தனது அத்தனை சாத்தியங்கள் வழியாகவும் இந்த பலவீனத்தை தாண்ட முயல்கிறது.

19 Jul 2013

தமிழ்நாட்டில் காந்தி - தி.செ.சௌ.ராஜன்

  
பதிவர் - கடலூர் சீனு 


தமிழில் இப்போது காந்தியை அறிந்து கொள்ளச் செறிவான பல நூல்கள் வந்து கொண்டிருக்கின்றன . தவறவிடக்கூடாத  நூல்களென லூயி ஃபிஷெர்  எழுதிய 'நான் கண்ட காந்தி'  [தமிழில் தி.ஜ.ரா., சித்தக்கடல் பதிப்பகம்],  'காந்தியின் இறுதி 200 நாட்கள்' [பாரதி புத்தகாலயம்] ஆகியவற்றை குறிப்பிடலாம். முந்திய நூல் காந்தி எனும் பேராற்றலின் வாழ்வை நமக்கு அண்மையாக்கும்.  பிந்தையது சமூக வாழ்வெனும் அறிய இயலா பெரும்புதிர்முன் தனது ஆத்மீக நம்பிக்கைகள் சிதறி, சரிவின் இருட்குகைக்குள் சென்று மறையும் மகாத்மாவைப் பின்தொடரும்.

காந்தி குறித்து தமிழில் இனி எத்தனை நூல்கள் வந்தாலும் அவற்றுடன் தவறாமல் இணைத்து வாசிக்கப்பட வேண்டிய நூல் தி.செ.சௌ. ராஜன் எழுதிய 'தமிழ்நாட்டில் காந்தி''. 1934, பிப்ரவரி 23 முதல் மார்ச் 22 வரை தமிழ்நாட்டில் ஒருமாத காலம் சுற்றுப்பயணம் செய்து 120 மேடைகள் வழியே தீண்டாமை ஒழிப்பு பிரச்சாரத்தில் ஈடுபட்டு, அதனுடன் ஹரிஜன சேவா நிதி, பிஹார் நிலநடுக்க நிதி சேகரித்தார் காந்தி. காந்தியின் மேடை உரைகளுக்கு மொழிபெயர்ப்பாளராக செயல்பட்டு அவருடன் பயணித்த ராஜன், காந்தியின் தமிழக பயணத்தைப் பற்றி எழுதிய குறிப்புகள் அடங்கியதே இந்நூல்.                                                                                                                                                                                                                                                   
தமிழ்நாட்டில் காந்தி
1934ஆம் ஆண்டில் ஹரிஜன இயகத்திற்காக மகாத்மா காந்தி மேற்கொண்ட தமிழக சுற்றுப்பயண நிகழ்வுகளின் தொகுப்பு இந்நூல்.
பதினெட்டு நாட்களில் இரண்டாயிரம் மைல் பயணம்...
112இடங்களில் காந்தியைக் காணக் குவிந்த இரண்டு கோடி தமிழர்கள். சென்ற இடங்களில் எல்லாம் வரவேற்பும் பணமுடிப்பும் அன்பும் ஆரவாரமும்... இவற்றை பதிவு செய்துள்ளது தி.சே.சௌ.ராஜன் காந்தியின் தமிழகச் சொற்பொழிவுகளை உடனிருந்து மொழிபெயர்த்தவர்.
தி.சே.சௌ.ராஜன், சந்தியா பதிப்பகம்                                            

Related Posts Plugin for WordPress, Blogger...